இன்னல்களும், தடைகளும் குறைய ஒவ்வொரு ராசிக்காரர்களும் வழிபட வேண்டிய தெய்வங்களை பற்றி பார்ப்போம்.
#மேஷம் :
ஸ்ரீரங்கநாதரை புதன்கிழமைதோறும் வழிபட்டு வர முயற்சியில் இருந்து வந்த இன்னல்கள் குறையும்.
திருநள்ளாறு தர்ப்பாரண்யேசுவரர் சுவாமியை வழிபட தடைகள் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும்.
வெள்ளிக்கிழமைதோறும் மகாலட்சுமியை வழிபட்டு வர இன்னல்கள் குறைந்து சுபிட்சம் உண்டாகும்.
திருசெந்தூரில் உள்ள மூவர் ஜீவ சாமாதிகளை வழிபட்டு வர நினைத்த காரியம் ஈடேறும்.
தினமும் காலையில் விநாயகரை வழிபட எண்ணத் தெளிவு உண்டாகும்.
சித்தர்களையும், குருமார்களையும் வியாழக்கிழமைதோறும் வழிபட்டு வர மனோதைரியம் மேம்படும்.
திருவெண்ணைநல்லூரில் உள்ள கிருபாபுரீஸ்வரரை வழிபட்டு வர முன்னோர்களின் ஆசிகளின் மூலம் தடைகளை வெற்றி கொள்வீர்கள்.
திருமருகலில் உள்ள இரத்தினகிரீசுவரரை வழிபட்டு வர அபிவிருத்தியும், சுபிட்சமும் உண்டாகும்.
சனிக்கிழமைதோறும் ஆஞ்சநேயரை வழிபட சிந்தனைத் தெளிவு உண்டாகும்.
துர்க்கை அம்மனுக்கு வெள்ளிக்கிழமைதோறும் ராகு நேரத்தில் தீபம் ஏற்றி வழிபட எதிர்ப்புகள் குறையும்.
வெள்ளிக்கிழமைதோறும் கருமாரி அம்மனுக்கு தீபம் ஏற்றி வழிபட்டு வர இன்னல்கள் மற்றும் கவலைகள் குறையும்.
திருவண்ணாமலை, திருக்குரங்கனில் முட்டத்தில் உள்ள வாலீஸ்வரரை வழிபட்டு வர தடைகள் நீங்கி உயர்வும், மேன்மையும் உண்டாகும்.
No comments:
Post a Comment