Tuesday, March 1, 2011

நெஞ்சுக்கொரு நீதி..கருணாநிதிக்கு ஆண்டிமுத்து ராசா கடிதம்

அன்புள்ள தலைவரே…..(நெஞ்சுக்கொரு நீதி....)
நீங்களும் உங்கள் குடும்பமும் நன்றாக இருப்பீர்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால் நான் நன்றாக இல்லை தலைவரே…
 நீ ஜெயிலுக்குப் போக மாட்டாய், போக மாட்டாய் என்று சொல்லி சொல்லியே, என்னை திகார் ஜெயிலுக்கு அனுப்பி விட்டீர்களே தலைவரே.. நீங்கள் கொடுத்த ஒரே வார்தையில் தானே தலைவரே, நான் உங்களைப் பற்றியும் உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாய்த் திறக்காமல் இருந்தேன் ?
 சிபிஐ அதிகாரிகள் கடந்த 14 நாட்களாக என்னை எத்தனை அவமானப் படுத்தினார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா தலைவரே… ? இந்தி பேசும் அதிகாரிகள், என்னை இந்தியிலேயே கெட்ட வார்த்தையில் திட்டினார்கள் தலைவரே…. இந்தியாவின் சொத்தை கொள்ளையடித்தவனே என்று என்னை திட்டிய போது, “அண்ணா சொன்ன எதையும் தாங்கும் இதயம்“ என்ற கோஷம் எனக்கு உதவி செய்யவில்லை தலைவரே.. நான் என்ன இந்தியாவின் சொத்தைக் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காகவா மந்திரியாக ஆனேன்… ? நீங்கள் சொன்னதைத் தானே தலைவரே செய்தேன்…(கனிய மட்டும் கேக்காம வசுகிட்டேன் தலைவரே...)
 முதல் நாள் தொலைத்தொடர்பு மந்திரியாக பொறுப்பேற்ற உடனேயே, எனக்கு வந்த அந்த பெரும் தொகையை எடுத்துக் கொண்டு, அடுத்த விமானத்தை பிடித்து உங்களிடம் வந்துதானே தலைவரே கொடுத்தேன்… ? அப்போது ஒன்றுமே சொல்லாமல், ‘நீ இவ்வளவு கொடுக்கிறாயே… ஆனால் தயாநிதி இது போல் கொடுத்ததேயில்லையே‘ என்று தானே தலைவரே சொன்னீர்கள். (அந்த பங்க சன் டிவில போட்டு நீங்க வாங்கியதா எனக்கு ஞாபகம்) 
 நான் இன்று உடுத்தியிருக்கும் பேண்ட், சட்டை முதற்கொண்டு, நான் பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை குடித்துக் கொண்டிருந்த 12 ஆயிரம் ரூபாய் மதுவும் நீங்கள் போட்ட பிச்சை என்பதை நான் மறுக்கவில்லை தலைவரே… நீங்கள் தான் எனக்கு வாழ்வழித்தீர்கள். நீங்கள் தான் என்னை மனிதனாக்கினீர்கள்.(அந்த சுவாமி மட்டும் என் கைல கிடைச்சான்....)
20 ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு சாதாரண லாம்ப்ரேட்டா ஸ்கூட்டரில், வழக்கறிஞர் தொழிலில் பெரிய அளவுக்கு வெற்றி பெற முடியாமல் தவித்துக் கொண்டிருந்த என்னை எப்போதும் விமானத்திலேயே பறக்க வைத்தது நீங்கள் தான் தலைவரே…(அப்போ எனக்கு உங்கள் கிரிமினல் புத்தி தெரியாமல் போய்டுச்சே...)
 அதற்கு பதிலாக நான் மட்டும் நன்றி மறந்தேனா தலைவரே… எப்போது வனத்துறைக்கு இணை அமைச்சராக ஆனேனோ, அன்று முதல், எனக்கு வந்த அத்தனை பணத்தையும், உங்களிடம் தானே தலைவரே கொடுத்தேன். (அத எந்த குழியில போட்டிங்க...)
 ஊருக்கும் உலகத்துக்கும், ஒரு தலித்தின் மீது தாங்கள் இவ்வளவு பாசம் காட்டுகிறீர்களே என்ற எண்ணம் ஏற்பட்டிருக்கும். ஆனால், தாங்கள் காட்டிய அத்தனை பாசமும், நான் கொடுக்கும் பணத்துக்காகத் தான் என்பது எனக்கு அப்போதே தெரியும் தலைவரே… ஆனாலும் நான் உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தேன். எப்படியும் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள் என்று. இதுதான் நெஞ்சுக்கொரு நீதின்னு தெரியாமல் போய்டுச்சே..
 அந்த நம்பிக்கையில் தான் 14 நாட்களாக எனக்கு ஏற்பட்ட அவமானங்களையும், துன்பத்தையும் சகித்துக் கொண்டிருந்தேன். எத்தனை ஏச்சுக்களும், பேச்சுக்களும் தெரியுமா தலைவரே… ? எவ்வளவு உயர்ந்த தண்ணிர் குடிச்ச எனக்கு சாதா தண்ணிர் கூட கொடுக்க  வில்லை. நண்பர்களிடம் கூட என்னை சிபிஐ அதிகாரிகள் பேச விடவில்லை தலைவரே… ஆரம்பத்தில் உனக்கு ஒன்றுமே ஆகாது, கவலைப் படாதே நான் இருக்கிறேன் என்று சொன்னீர்களே… உன்னை சிபிஐ எதுவும் செய்யாது என்று சொன்னீர்களே…
 இதற்கெல்லாம் மேலாக, நீ பதவி விலகக் கூட வேண்டியதில்லை என்று சொன்னீர்களே தலைவரே…   உங்களின் கிரிமினல் புத்தியில் என்ன இருக்கு என்று தெரியாமல் அதையும் நம்பினேன். ஆனால், டெல்லி வரை சென்று விமான நிலையத்திலிருந்து இறங்கிய உடன், பதவி விலகு என்று சொன்னீர்களே தலைவரே…..அப்போதும் நம்பினேன் தலைவரே..
 இந்தியாவில் அத்தனை மூலைகளிலும் என்னை திட்டுகிறார்களே தலைவரே…. இந்த அவமானத்திற்கு நான் செத்திருக்கலாமே… இதற்கா என் தாய் தந்தையர் என்னை படிக்கவைத்து வளர்த்தார்கள். ஆண்டிப்பட்டி ராசாவ இருந்த என்னை  இப்படி  420  ராசாவா  ஆகிட்டேங்கேலே..  எப்படி இந்தியாவின் அத்தனை குடிமக்களும் என்னை திட்டுகிறார்களே…
பெரம்பலூரில், அந்த சாதாரண லாம்ப்ரெட்டா ஸ்கூட்டரை வைத்துக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் பிடித்துக் கொண்டு சுற்றிய போது, என்னிடம் பணம் இல்லை. ஆனால் நிம்மதி இருந்தது. யாரும் என்னைத் தூற்றவில்லை.   போற்றவும் இல்லை.
 ஆனால் இன்று …. …. ….. ….
 ஒரு நாளைக்கு ஒரு ஃபுல்லை முழுதாக குடித்துக் கொண்டிருந்தேன் தலைவரே… கைது செய்யப் படுவதற்கு முன்னால்…. அப்போதும் தூக்கம் வரவில்லை.   எனக்கு இருந்த ஒரே ஒரு நம்பிக்கை என்னை சிறைக்கு மட்டும் அனுப்ப மாட்டீர்கள் என்பது. நீங்களும் அதைத் தானே தலைவரே சொன்னீர்கள்… ? இன்று ஆடுதிங்கும் புல்லைகூட தின்னுடா என்கிறார்கள் தலைவரே...
 நான் கைது செய்யப் படும் நாளன்று, கடைசியாக உங்களிடம் பேசினேன் ஞாபகம் இருக்கிறதா …. ? (ஞாபகத்திற்கு கனிய நா வசுகிறேன் மானிய நீ வசுகுங்க தலைவரே. சொன்னேன்) அப்போது உங்களிடம் நான் ஒரே ஒரு கோரிக்கை தானே தலைவரே வைத்தேன்.   என்னை சிறைக்கு மட்டும் அனுப்பாதீர்கள் என்று தானே ?.
 என்னிடம் பல கோடிகளை வாங்கித் தின்ற, என் சொந்த மாவட்டத்தை சேர்ந்த காமராஜ் நான் கைது செய்யப்படும் நாளன்று என்னிடம் பேசினார் …. அப்போது நீங்கள் சொன்னதாக அவர் என்னிடம் சொன்னது, சிபிஐ கஸ்டடி முடிந்ததும், சிறைக்கு போகும் நாள் வரும் போது, பெயில் போட்டு விடலாம். அன்றே பெயில் கிடைத்து விடும். சிறைக்கு போகாமல், நேராக சென்னை வந்து விடலாம் என்று நீங்கள் சொன்ன பொய்யான வாக்குறுதியை நம்பித் தானே தலைவரே, அவ்வளவு அவமானங்களையும் சகித்துக் கொண்டு, உங்களைப் பற்றியும், உங்கள் குடும்பத்தைப் பற்றியும் வாயைத் திறக்காமல் இருந்தேன்… ?
 ஆனால், கலைஞர் டிவியைப் பற்றி விசாரணை தொடங்கப் பட்டுள்ளது என்பது தெரிந்த உடனேயே, உங்கள் நடவடிக்கைகளில் மாற்றம் வந்து விட்டதாக சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்தார்கள் தலைவரே… உங்களை காப்பாற்றிக் கொள்வதற்காக, காங்கிரசிடம் என்னைப் பற்றி பேசுவதைக் கூட நீங்கள் நிறுத்தி விட்டீர்கள் என்று சிபிஐ அதிகாரிகள் என்னிடம் தெரிவித்த போது அதை என்னால் நம்பாமல் இருக்க முடியவில்லை தலைவரே….
 நாட்கள் செல்லச் செல்ல, நான் சிறையில் இருந்து வெளியே வருவேன் என்ற நம்பிக்கை அற்றுக் கொண்டே போகிறது தலைவரே…
 பதவியும், பணமும், பகட்டும், பட்டாடைகளும் என்னைச் சூழ்ந்திருந்த போது இருந்த மகிழ்ச்சியையும் ஆணவத்தையும் விட, பெரம்பலூரில் லாம்ப்ரெட்டா ஸ்கூட்டர் ஓட்டிக் கொண்டு, சிசர்ஸ் சிகரெட் குடித்த நாட்களில் நான் நிம்மதியாக இருந்தேன் தலைவரே.
 அந்த நாட்கள் மீண்டும் என்றுமே வராது என்பது எனக்கு நன்கு புரிகிறது தலைவரே….
 நான் சிறையிலிருந்து வெளியில் வந்தாலும், இந்தியாவின் சொத்தை கொள்ளை அடித்தவன் என்றே அழைக்கப் படுவேன். ஊர் தூற்றும், மக்கள் தூற்றுவார்கள். குழந்தைகளுக்கு சோறு ஊட்டும் போது கூட, “ராஜா வந்து எல்லாத்தையும் கொள்ளையடிச்சுக்குவான்” என்று பயமுறுத்தி சோறூட்டுவதாக தகவல்கள் வருகின்றன தலைவரே….. அவமானம் என்னை நெருப்பாக வாட்டுகிறது தலைவரே…..
 ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், நான் சம்பாதித்தது எவ்வளவு, நீங்களும் உங்கள் குடும்பமும், சம்பாதித்தது எவ்வளவு, என்பது ஊருக்கும் சிபிஐக்கும் தெரியாமல் இருக்கலாம், எனக்கும் உங்களுக்கும் தெரியும் தானே…. (அம்மாவுக்கும் தெரியும்)
இந்த திகார் சிறையில் நான் இருக்கிறேனோ இல்லையோ… நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இருக்க வேண்டும் தானே…..
 உங்கள் நெஞ்சுக்கு நீதியில் எழுதியிருக்கிறீர்கள் நினைவிருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை. நான் நினைவு படுத்துகிறேன்.
 “நண்பர்களே….இந்த சிம்மாசனத்தில் உள்ள மகிழ்ச்சியை விட, ஆயிரம் மடங்கு மகிழ்ச்சியை தரக்கூடியது சிறைக்கூடம். ஆனால் அடக்குமுறைகளும் சிறைச்சாலைகளும் நல்ல லட்சியங்களை அழித்து விட முடியாது.”
 சிம்மாசனத்தை விட மகிழ்ச்சி தரக்கூடிய சிறைச்சாலையில் நான் இருக்கிறேன்…. என்னோடு மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள நீங்களும் வாருங்கள் தலைவரே…..
 ஸ்பெக்ட்ரம் பணத்தை கொடுக்கும் வரை உங்களின் பாசத்திற்குரிய அன்பு உடன்பிறப்பு
 ஆண்டிமுத்து ராசா.


விலைவாசி உயர்வு விபரீதம் - பகீர் ரிப்போர்ட்

கைப்பேசி வைத்துள்ள பலருக்கும் இந்தக் கதை தெரிந்திருக்கும்.  பலருக்கும் இந்த  மீன்கதை எஸ்.எம்.எஸ். மூலம் அனுப்பப்பட்டுள்ளது. அக்கதையை மேலும் மெருகூட்டிப் பார்க்கலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சிக் கடையில் கூட்டத்துக்குப் பஞ்சமே இருக்காது. இறைச்சி விலை தாறுமாறாக ஏறிவிட்டதால் இப்போது கூட்டம் குறைந்துவிட்டது. 

நண்பர் விலை கேட்டார். கிலோ ரூ. 300-க்கு செம்மறிஆடுதான். ரூ. 400 இருந்தால் வெள்ளாட்டுக்கறி. இப்போது ஐயப்பர் சபரிமலை சீசன் முடிந்துவிட்ட நிலையிலும் விலை இறங்கவில்லை என்கிறார் இறைச்சிக் கடைக்காரர். மீன் விலை கேட்டார். கட்லா ரூ. 200 என்றதும்  மயங்கிவிட்டார். நாட்டுக்கோழியும் கிலோ ரூ. 300 கூடுதல் விலை. வெள்ளைக்கோழி விலை நூறுதான். இந்த சீக்குக் கோழியை உண்பதைவிட சும்மா இருக்கலாம் என்று அலுத்துப்போன நண்பர், ஒரு தூண்டில் தயார் செய்து குளத்தில் மீன்பிடிக்கப் போனார். 

சிக்கின சில கெண்டைகள். வீட்டுக்கு வந்த நண்பர் மனைவியை அழைத்து மீன்குழம்பு வைக்கச் சொன்னார். அதற்கு அந்த அம்மணி, "" சாமி நான் கடையிலே சாமான் வாங்கப் போனேன். வெங்காயம் கிலோ ரூ. 100, பூண்டு கிலோ ரூ. 600, கசகசா கிலோ ரூ. 300, தேங்காய்1 ரூ. 10, சீரகம் கிலோ ரூ. 400, ரூ. 150-க்குக் குறைவாக எந்தச் சமையல் எண்ணெயும் இல்லை. துவரம்பருப்பு வாங்கப் போனேன், எந்தப் பருப்பு வாங்கினாலும் கிலோ 100 ரூபாயாம். விறகு கிலோ ரூ. 10 -  கேஸ் இல்லை. மண்ணெண்ணெய் இல்லை. எப்படி சாமி சமைப்பது?''

"சரி, அம்மணி இந்த மீனை என்ன செய்ய?''

" நீங்க குளத்திலேயே விட்டுடுங்க சாமி''

அந்த நண்பர் மீண்டும் குளத்துக்குச் சென்று கெண்டை மீன்களைக் குளத்தில்விட்டார். அப்போது அம்மீன்கள் பேசினவாம்:
 ""கலைஞரின் உயிர்காக்கும் திட்டம் வாழ்க''

இந்தியாவில் உணவுப் பொருள் விலை ஏற்றத்துக்கு இரண்டு, மூன்று காரணங்கள் சொல்லப்படுகின்றன. முதலாவது, பணவீக்கம். அதாவது, இன்ஃப்ளேஷன். இரண்டாவது, பற்றாக்குறை. மூன்றாவது காரணமும் உண்டு. போக்குவரத்துச் செலவு.
 பணவீக்கம் மொத்தவிலைக் குறியீட்டெண்ணால்தான் அளவிடப்படுகிறது. கடந்த ஓராண்டில் மொத்த விலைக்குறியீட்டெண் - ஹோல் சேல்ஸ் பிரைஸ் இண்டக்ஸ் - 10 சதவீதம் உயர்ந்துள்ளது. உண்மையில் சில்லறை விலைக் குறியீட்டு எண் அடிப்படையில் கவனித்தால் பணவீக்கம் 30 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்னைகளுக்குக் கலைஞர், பிரதமர் மன்மோகன் சிங்குக்குக் கடிதங்கள் எழுதுவதுபோல் நமது பிரதமரும், ""இன்னும் ஒரே மாதத்தில் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவோம். விலைவாசியைக் கட்டுப்படுத்துவோம்'' என்று கி.பி. 2009-லிருந்து மாதம் ஓர் அறிக்கை விடுகிறார். பத்திரிகை நிருபர்களுக்குச் செய்திகள் வழங்கியவண்ணம் உள்ளார்.

இப்படி புதுதில்லியில் ஏ.சி. அறையில் உட்கார்ந்து கொண்டு தாகம் ஏற்பட்டால் பெப்சி வழங்கும் மினரல் வாட்டரைக் குடித்தவண்ணம் அடிக்கடி ஒன்றுகூடி அமைச்சர்களும் அரசுச் செயலர்களும் கோப்புகளைப் பார்த்து என்ன பயன்?
 உணவு உற்பத்தி உயர விவசாயம் செய்கிறார்களா? விவசாயம் செய்யப் போதிய நிலம் உள்ளதா? உற்பத்தி குறைவது ஏன்? மண்வளம் இழப்பது ஏன்? மண்ணை வளப்படுத்தி வளம்குன்றா விவசாயம் செய்ய என்ன செய்யலாம்? விவசாயிகளின் பிரச்னைகள் என்ன? வேலைக்கு ஆள்கள் கிடைக்காதது ஏன்? நிலம் இருந்தாலும் போதிய பாசன நீர் உள்ளதா? மேல்மட்டக் கிணறு, ஏரி, குளங்களை நிரப்புவது எப்படி? என்று பல கேள்விகளுக்கு அமைச்சர்களும் அதிகாரிகளும் பொறுப்புடன் பதில்களை வழங்க அவர்கள் களத்தில் இறங்கவேண்டும். நேரடியாகப் பல கிராமங்களுக்குச் சென்று கிராமங்களில் அதிக நேரம் செலவழிக்க வேண்டும்.

வாரம் ஒருநாள் மாவட்ட ஆட்சித்தலைவர் விவசாயிகளைச் சந்தித்துப் பேசுவது போதாது. விவசாயிகளைத் தேடி ஆட்சியாளர்கள் வந்து நேரில் பார்த்தால்தான் பிரச்னைகள் புரியும். நமது மத்திய விவசாய அமைச்சரைப் பொருத்தவரை விளைநிலங்கள் கிரிக்கெட் மைதானங்களாக மாறவேண்டும். விமானநிலையங்களாக வேண்டும். எண்வழிச் சாலைகளாக வேண்டும். ஆப்பிரிக்க நாடுகளுக்குச் சென்று நிலம் வாங்கி பருப்பு, புஞ்சை தானியங்களைச் சாகுபடி செய்யலாம் என்று அற்புத யோசனைகளைக் கூறுகிறாரே தவிர, உள்ளூரில் உற்பத்தி உயர வழி செய்வது இல்லை.

 இந்தியாவில் இப்போது அந்நியச் செலாவணி கணிசமாக உள்ளது என்பதால் என்ன பிரச்னை வந்தாலும், உணவு விலை சிகரத்தைத் தொட்டாலும் இறக்குமதி செய்து சரிசெய்து விடலாம் என்று தப்புக்கணக்குப் போட்டதால் வரும் வினைகள் இவை. வெங்காயம் பாகிஸ்தானில் விளைகிறது. தக்காளி அமெரிக்காவில் விளைகிறது. துவரை கென்யாவிலும் தான்சேனியாவிலும் விளைகிறது. 

உளுந்து பர்மாவில் உண்டு. கபூலி சென்னா (வெள்ளைக்கடலை) காபூலில், ஆஸ்திரேலியாவில், துருக்கியில் விளைகிறது. (கருப்புக்கடலை இந்தியாவில்தான் விளைகிறது) பட்டாணிக்கு ஆஸ்திரேலியா, அமெரிக்காவில் கோதுமை, தாய்லாந்தில் அரிசி, பிலிப்பைன்ஸில் தேங்காய், பிரேசிலில் வேர்க்கடலை, சீனத்தில் எள், கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் சூரியகாந்தி கோப்புகளில் உள்ள விவரங்கள் இப்படித்தான் பேசும்.( நன்றி  தினமணி)

 எந்த நாட்டிலிருந்து எவ்வளவு இறக்குமதி செய்யலாம்? என்று படித்துவிட்டு அமைச்சர்கள் யோசிக்கிறார்கள். நிலைமை முன்பு மாதிரி இல்லை. ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் வரலாறு காணாத வெள்ளம் உணவு உற்பத்தியைப் பாதித்துவிட்டது. அந்தந்த நாடுகளிலும் போதிய வழங்கல் இல்லை.

கிராமங்களில் மகாத்மா காந்தி தேசிய வேலைக்காப்புறுதித்திட்டம் - நூறு நாள் வேலைவாய்ப்புக்காக பணம் புழங்குகிறது. இரண்டாவதாக, மகளிர் சுயஉதவிக்குழு மூலம் உறுப்பினர்களுக்கு 1 வட்டிக்கடன் வழங்குவதன் மூலம் பணப்புழக்கம் உள்ளது. உண்மையில், இப் பணப்புழக்கத்தால் விவசாயத்தில் உற்பத்தி உயர வேண்டும். நூறு நாள் வேலைவாய்ப்புத் திட்டம் உண்மையில் விவசாயத்துக்கு வேலை இல்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்திவிட்டது. வேலை செய்யாமலேயே நூறுநாள் சம்பளம் கிடைத்துவிடுகிறது.

 ஒரு மணிநேரம் உருப்படியாக வேலை செய்தால் பெரிய விஷயம். இந்த வேடிக்கையை தினம் பார்க்கிறேன். மகளிர் சுயஉதவிக்குழுவுக்கு வழங்கப்படும் "மைக்ரோ ஃபைனான்ஸ்'' கிராமங்களில் சிலர் மட்டுமே கந்துவட்டி செய்த காலம் போய், கந்துவட்டி பெரிய அளவில் பெண்களின் தொழிலாக மாறிவிட்டது. யாரும் விவசாயத்துக்கோ, வேறு தொழில் உற்பத்திக்கோ சுய உதவிக்குழுவின் பணம் முதலீடுகளாக மாறிப் பயன் தராமல், உபயோகமற்ற செலவுகளுக்கே உதவுகிறது. கந்துவட்டிப் பெண்களிடம் மாட்டுபவர்களுக்கு வேறு நரகம் வேண்டாம்.

 மேற்படி விஷயத்தை இங்கு நான் கூறுவதற்கு வேறு காரணமும் உண்டு. நூறு நாள் வேலைத்திட்டத்தில் ஏழைகள் பணக்காரர்களாகி அவர்கள் தேவை உயர்ந்துவிட்டதால் விலை உயர்ந்துவிட்டதாம். விலை ஏற்றத்துக்கும் நூறுநாள் வேலைத்திட்டத்துக்கும் நிபுணர்கள் இப்படி முடிச்சுப் போடுகின்றனர்.

 உண்மையில் அப்படிப் பெற்ற பணம் கந்துவட்டிக்குப் போகிறதே தவிர, வெள்ளைப்பூண்டும், வெங்காயமும், தக்காளிப் பழத்தையும் அப்போதும் வாங்கினார்கள். இப்போதும் வாங்குகிறார்கள்.

 பணம் எங்குதான் புழங்கவில்லை? திட்டமிடப்பட்ட பல செலவுகளுக்கும்தான் பணம் புழங்குகிறது. கருப்புப்பணம் எங்கெல்லாமோ புழங்குகிறது. பணப்புழக்கத்தால் பணமதிப்பு குறைந்து பொருள்விலை கூடுவது இயல்பு. அமைப்புரீதியான தொழிலாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் சம்பளம், டி.ஏ. உயர்வு காரணமாகவும் பணம் புழங்கி வீக்கமடையவில்லையா?

 ஆனால், அடிப்படையான விஷயம் தேவைக்கு ஏற்ப ஒரு பொருளின் வழங்கல் இல்லாததுவே. அதாவது பொருளின் பற்றாக்குறை. பொருளின் பற்றாக்குறையுடன் பணவீக்கமும் சேர்ந்து எட்டமுடியாதபடி விலைஉயர்வு விண்ணை நோக்கிப் போய்க் கொண்டுள்ளது.

பணவீக்கத்துக்கு நிகராகப் பொருள் உற்பத்தி உயர்ந்தால் விலை ஏறுவது கட்டுப்படும். உணவுப்பொருள் விஷயத்தில் அரிசி, கோதுமைபோல் மக்காச்சோளத்துக்கு விலைக்கட்டுப்பாடு இல்லை. மக்காச்சோளம் ஏற்றுமதியும் ஆகிறது. ஆனால், மக்காச்சோளத்தின் விலை ஏற்றம் குறைவு. 

சில்லறை விலை ரூ. 13 அல்லது ரூ. 14 தான். கடந்த ஆண்டு வரையில் ரூ. 12 தான். மக்காச்சோளத்தின் முக்கியத்தேவை கோழி - மாட்டுத்தீவனம். பின் மனிதத்தேவை. மக்காச்சோளம் உற்பத்தி பெருகியதைப்போல் வெள்ளைச்சோளம், கம்பு, ராகி, தினை, வரகு, உளுந்து, துவரை, கடலை, பாசிப்பயறு, மசூர், பட்டாணி உற்பத்திகள் ஏன் உயரவில்லை?

 பணவீக்கம் விலை ஏற்றத்துக்குரிய காரணம் என்றால் நோட்டு அச்சடிப்பதையும், கருப்புப்பணத்தையும் நிறுத்தினால் போதுமே. அமைப்புரீதியான பணக்காரத் தொழிலாளர்களாயினும், அமைப்புரீதியற்ற ஏழைத் தொழிலாளர்களும் சரி, வரக்கூடிய வருமானம் அனைத்தையும் உணவு வாங்கச் செலவழிப்பதில்லை. ஒருசாரார் டாஸ்மாக் கடைகளில் சாராயத்துக்குச் செலவழிக்கிறார்கள். ஒருசாரார் மருத்துவத்துக்குச் செலவழிக்கிறார்கள். மருத்துவத் தேவை, குடித்தேவை மற்றும் வேலை வாங்க லஞ்சம் கொடுக்கும் புதிய தேவைகளுக்காக ஒருசாரார் கந்துவட்டிக்குப் பணம் வழங்குகிறார்கள். சிலர் கல்வித் தேவைக்கும் கந்துவட்டிக்குப் பணம் வாங்கலாம்.

பணவீக்கத்தில் பணத்தின் தேவைதான் அதிகமாகிப் பணமே ஒரு பொருளானதே தவிர, உண்மையான வேளாண் உற்பத்தி உயரவில்லை. வேளாண் உற்பத்திக்குரிய வழிமுறைகளை நன்கு திட்டமிட வேண்டும். அதேசமயம், மண்வளத்தையும் காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் வழங்கல் பெருகி விலைவாசி குறையும்.

பள்ளிகள் செய்யும் வசூல்... எச்சரிக்கை

புதிய வருடத்தில் அட்மிசன் ஆரம்பித்துவிடும். மீண்டும் மீண்டும் பெற்றோர்களுக்கு நாம் விடுக்கும் ஒரு அன்பான எச்சரிக்கை.

கந்து வட்டிக்காரர்களை விஞ்சும் வகையில் குழந்தைகளை பிணைக் கைதி களாக பிடித்து வைத்துக் கொண்டு கட்டணத்தை வசூலிப்பதும், ‘சொன்ன’ கட்டணத்தை கட்டாத பெற்றோர்களை குண்டர்களை வைத்து மிரட்டுவதும் தனியார் பள்ளிகளின் ‘சமூகத் தொண்டாக‘ உள்ளது. இதனை அரசு நிர்வாகம் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கிறது. இத்தகைய குற்றங்கள் வழக்காக பதிவாகி விடாமல் பள்ளிகள் பார்த்துக் கொள்கின்றன.

தமிழக அரசின் கோவிந்தராஜன் குழு பரிந்துரைத்த கட்டணத்தை மீறி, பள்ளி நிர்வாகம் சொல்லும் கட்டணத்தைக் கட்ட மறுத்து பெற்றோர்கள் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களை நடத்தினால், அதிகாரிகள் அங்கு வருவதும், பெற்றோர்-நிர்வாகத்தோடு பேசுவதும் அவ்வப்போது நடக்கும் நாடகமாகவே உள்ளது. கடந்த ஓராண்டு காலத்தில் ஏராள மான பள்ளிகள் முன்பு பெற்றோர்கள் போராட்டம் நடத்தியும், புகார் செய்தும் ஒரு பள்ளி மீது கூட அதிகாரிகளோ, அரசோ நடவடிக்கை எடுக்காமல் இருப் பதே இதற்கு சான்று.

பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படு வது, அதிகாரிகளின் மெத்தனம், குழந் தைகளை மன ரீதியாக வதைப்பது என நீளும் தனியார் பள்ளிகளின் அராஜகத்தை அரசு நிர்வாகம், நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு செல்வதற்காக ஞாயிறன்று (பிப்.27) சென்னையில் பொது விசாரணை நடைபெற்றது. இந்த பொது விசாரணையில், தமிழகத்தில் உள்ள பிரபலமான 19 பள்ளிகளைச் சேர்ந்த பெற்றோர்கள் பங்கேற்றுப் பேசினர்.

“நாங்க சொல்ற கட்டணத்தைதான் கட்டணும், கண்ட நாய்கள் சொல்ற கட்டணத்தையெல்லாம் நாங்க வாங்க முடியாது. இஷ்டம் இருந்தா உங்க புள்ளைங்கள படிக்க வைங்க. இல்லாட்டி கூட்டிட்டு போங்க.” என்று சென்னை அய னாவரம் கல்கி நாராயணா பள்ளி நிர்வா கம் கூறுவதாக ஒரு பெற்றோர் கூறினர்.

சென்னை, கொளத்தூரில் உள்ள டேனியல் தாமஸ் பள்ளியில் பயிலும் எனது மகனுக்கு அரசு நிர்ணயித்த ஆயி ரத்து 450 ரூபாய் கட்டணத்திற்கும் அதிக மாக 9ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளேன். இது போதாது இன்னும் சில ஆயிரம் ரூபாய் கட்டச் சொல்கிறார்கள். அதனை செலுத்த மறுத்ததால், எனது மகனுக்கு கணக்கு புத் தகத்தில், ஒரு பாடத்தில் ஒரு கணக்கை மட்டுமே சொல்லிக் கொடுக்கிறார்கள். குழந்தையை அடிக்கிறார்கள். ரேங்க் அட்டை கொடுக்க மறுக்கிறார்கள். தேர்வு எழுத கூடுதல் பேப்பர் தர மறுக்கிறார்கள். ஏற்கெனவே கட்டிய பணத்திற்கு அளித்த ரசீதில் தேதியே இல்லை என்பது மற்றொரு குற்றச்சாட்டு.

ஈரோடு இந்து பள்ளியில் எல்கே ஜிக்கு 3ஆயிரத்து 800 ரூபாயும், பன்னி ரெண்டாம் வகுப்புக்கு 9ஆயிரம் ரூபாயும் கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ளது. ஆனால் எல்கேஜிக்கு 11ஆயிரம் ரூபாயும், பன்னிரெண்டாம் வகுப்புக்கு 40ஆயிரம் ரூபாயும் வசூலிக்கின்றனர். பெற்றோர் களை தனித்தனியாக அழைத்து மிரட்டி கட்டணத்தை பிடுங்குகின்றனர். சொன்ன கட்டணத்தை  கட்டாத  3ம்  வகுப்பு குழந்தையை எல்கேஜிக்கு மாற்றுகின்றனர். 
1 மற்றும் 6 வகுப்புக்கு சமச்சீர் கல்வி அமலாகியுள்ளது. அடுத்தாண்டுதான் பிற வகுப்புக்களுக்கு சமச்சீர் கல்வி அமலாக உள்ளது. ஆனால், சில பள்ளிகளில் சொன்ன கட்டணத்தை செலுத்தியுள்ள மாணவர்களுக்கு 10, 12ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்தை போதிக்க ஆரம்பித்துவிட்டனர் என்று ஒரு மாண வரின் தந்தை குற்றம் சாட்டினார்.

ஈரோடு செங்குந்தர் பள்ளி நிர்வாகம் பற்றி கூறுகையில், ரவுடிகளை வைத்து மிரட்டுகிறது; வேறுசில வகைகளிலும் தொந்தரவு கொடுக்கிறார்கள் என்றனர். நம்மால் முடியாதது எதுவுமில்லை. பெற்றோர்கள் எல்லோரும் ஒன்று சேருங்கள். ஒன்று சேர்ந்து திரும்பி பாருங்கள். ரவுடிகள் காணாமல் பொய் விடுவார்கள்.

சென்னை அண்ணா நகரில் உள்ள ஜெசிமோசஸ் பள்ளி கூடுதல் கட்ட ணத்தை வகுப்பாசிரியர்களின் பெயர் களில் காசோலையாக வாங்கி வரும்படி குழந்தைகளை நிர்பந்தப்படுத்துகின்ற னர். இப்பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு மாணவிக்கு கட்டணமாக 11ஆயிரம் ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனா லும் 25ஆயிரம் ரூபாய் கட்டியுள்ளேன். மேலும், 7ஆயிரம் ரூபாய் கேட்கிறார்கள். அதனை செலுத்த மறுத்துவிட்டோம். இதனை, ஈடுசெய்ய, கடந்தாண்டு நிலுவை என்று கூறி வீட்டிற்கு கடிதம் அனுப்பி யுள்ளனர் என்று ஒருவர் கூறினார்.

சென்னையில் பிரபலமாக அறியப்பட்ட சைதாப்பேட்டை ஆல்பா பள்ளி யில் 5 மடங்கு புத்தக கட்டணம் வசூலிக் கிறார்கள். தற்போது மாணவர்களே தேர்வுக்கு பேப்பர் கொண்டு வர வேண்டும் என்கிறார்கள். சொன்ன கட்டணத்தை கட்டாதவர்களை காலை வழிபாட்டில் தனியாக நிற்க வைக்கின்றனர் என்கிறார் ஒரு மாணவரின் தாய்.

குழந்தைகளை முட்டி போட வைப்பது, வகுப்பில் பின் வரிசையில் அமர வைப் பது, அடிப்பது போன்ற சம்பவங்களையும் பெற்றோர்கள் விசாரணையில் கூறினர்.

விசாரணையில் நீதிபதியாக பங்கேற்ற வழக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரதசாத், ஒவ் வொரு பள்ளி மீதும் பெற்றோர்கள் நீதி மன்ற அவமதிப்பு வழக்கு தொடுப்பதை விட, தமிழக அரசு அதனை செய்ய நிர் பந்தியுங்கள். அப்போதுதான் பிரச்ச னைக்கு தீர்வு வரும் என்றார்.

கல்வியாளர் வசந்திதேவி அவர்கள் சென்னையில் பேசிய ஒரு பதிவு 

கோவிந்த ராஜன் குழுவின் விளைவாக நடுத்தர வர்க்கம் இன்றைக்கு தெருவில் வந்து போராடுகிறது. பெற்றோர்களின் போராட்டங்கள் மூலம் அரசின் சட்டம் உயிரோடு உள்ளது. பெற்றோர்கள் போராடாமல் இருந்தால் அந்த சட்டம் வெற்று காகிதமாகவே இருந்திருக்கும். பல ஆண்டுகளாக 
அராஜகம் புரிந்து வந்த அதிகார மையம் பெற் றோர்களின் போராட்டத்தால் ஆட்டம் கண் டுள்ளது. போராட்டம் தீவிரமாகும் போது அதிகார மையம் தகர்ந்துவிடும் என்றார்.

கல்வி உரிமைச்சட்டம் அரசு தனியார் பள்ளிகளையும் கட்டுப்படுத்தும். குழந்தைகளை பாகுபடுத்துவது, சித்ரவதை செய்வது, மனரீதியாக துன்புறத்துவது, டிசி கொடுப்பேன் என மிரட்டுவது போன்றவை குறித்து காவல் நிலையத்தில் புகார் செய்து கிரிமினல் வழக்கு பதிவு செய்யுங்கள், தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையத்திலும் புகார் செய்யுங்கள். தற்போது விசாரணையில் வந்த அம்சங்களை தேசிய குழந்தைகள் உரிமைகளுக்கான பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு எடுத்து சென்று தமிழகத்தில் பொது விசாரணை நடத்த நடவடிக்கை எடுப்ப தாக காவல் துறையினர் நமக்கு ஆதரவு தருகிறார்கள். இதை நாம் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் 2கோடி பேர் உள்ளனர். பெற்றோர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக தொகுத்து ஆளும் கட்சிக்கு கொடுத்து அதனை நிறைவேற்றினால்தான் வாக்க ளிப்போம் என்று நிர்பந்தியுங்கள். பிற கட்சிகளிடமும் கொடுத்து, வாக்குறுதி அளித்தால்தான் ஓட்டு போடுவோம் என்று நிர்பந்தியுங்கள்.

நம் பிள்ளைகள் நன்றாக படிக்கிறார்கள என்பது மிகப்பெரிய கவலைதான். அதேபோல் நம் பிள்ளிகள் பொதி சுமக்கும் பிராணியாக வாழாமல், நம் பிள்ளைகள் மனநிலையையும் பாருங்கள். காசு புடுங்கும் பள்ளியில்தான் படிக்க வேண்டும்  என்றால், இந்த நாட்டில் 70 % மக்கள் படிக்க முடியாது. அங்கு சேர்க்காமல் வேறு ஒரு நல்ல பள்ளியில் சேர்த்து இவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும். 

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...