Wednesday, March 2, 2011

கணவர்கள் விற்கப்படும்

கணவர்கள் விற்கப்படும்

ஒரு ஊர்ல கணவர்கள் விற்கப்படும் கடை திறக்கப்பட்டது....அந்த கடை வாசலில் கடையோட விதிமுறை போர்டு வச்சுருந்தாங்க ..

அது என்னன்னா...!

1.கடைக்கு ஒரு தடவை தான் வரலாம்.

2. கடைல மொத்தம் 6 தளங்கள் இருக்கு...ஒவ்வொரு தளத்துளயும்
இருக்குற ஆண்களோட தகுதிகள் மேல போக போக அதிகமாகிட்டே போகும்.

ஒரு தளத்துல இருந்து மேல போயிட்டா மறுபடி கீழ வர முடியாது ..

அப்டியே வெளிய தான் போக முடியும்.

இதெல்லாம் படிச்சுட்டு ஒரு பெண்மணி கணவர் வாங்க கடைக்கு போறா...."மச்..கணவர் வாங்குறது என்ன காய்கறி வாங்குற மாதிரி கஷ்டமா என்ன...ச்சே ச்சே அப்டி எல்லாம் இருக்காது

முதல் தளத்துல அறிக்கை பலகைல "முதல் தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள்" அப்டின்னு போட்டுருந்துச்சு

இது அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போக முடிவு செய்றா


இரண்டாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் " அப்டின்னு போட்டுருந்துச்சு

இதுவும் அடிப்படை தகுதி அப்டின்னு நினைச்சுட்டு இன்னும் மேல போறா.

மூன்றாம் தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள். " அப்டின்னு போட்டுருந்துச்சு

அந்த பெண்மணி வசீகரமானவர்கள்னு பார்த்ததும் ஆஹா மூணாவது தளத்துலையே இவ்வளவு தகுதிகள் இருந்தா மேல போக போக இன்னும் என்ன எல்லாம் இருக்குமோ அப்டின்னு நினைச்சு மேல போவதாக முடிவெடுத்தாள்.

நாலாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள் " அப்டின்னு.

இதை விட வேற என்ன வேணும்...நல்ல குடும்பம் அமைக்கலாமே?

கடவுளே...மேல என்ன இருக்குன்னு தெரிஞ்சே ஆகணும்." அப்டின்னு முடிவு பண்ணிட்டு மேல போனாள்.

ஐந்தாவது தளத்துல அறிக்கை பலகைல "இந்த தளத்தில் இருக்கும் கனவான்கள் வேலை உள்ளவர்கள்; கடவுள் நம்பிக்கை உளளவர்கள் மற்றும் குழந்தைகள் மேல் அன்பு செலுத்துபவர்கள் அது மட்டுமல்லாமல் வசீகரமானவர்கள்.

வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவி செய்யும் விருப்பம் உளளவர்கள்.மிகவும் ரொமாண்டிக் ஆனவர்கள் " அப்டின்னு.

அவ்ளோ தான்.....அந்த பெண்மணியாள முடியல...[ வடிவேலு ஸ்டைலில்] ...சரி இங்கயே யாரையாவது தேர்வு செய்யலாம்னு நினைச்சாலும் இன்னொரு தளம் இருக்கே..அங்க என்ன இருக்குன்னு பார்க்காம எப்டி முடிவு எடுக்குறது...சரி மேல போயி தான் பார்ப்போம்னு போறா ..

ஆறாவது தளத்துல அறிக்கை பலகைல

"இந்த தளத்தில் கனவான்கள் யாரும் இல்லை..வெளியே செல்லும் வழி மட்டுமே உள்ளது ..இந்த தளத்தை அமைத்ததற்கு காரணமே பெண்களை திருப்த்திப்படுத்தவே முடியாதுங்குறது நிரூபிக்கத் தான் .

எங்கள் கடைக்கு வந்தமைக்கு நன்றி ...

பார்த்து பதனமாக கீழே படிகளில் இறங்கவும் " அப்டின்னு போட்டிருந்தது .

///நீ ஒரு பெண்ணைக் காதலித்தால் அவளை அவளெண்ணப்படிவிடு... அவள் உன்னிடம் திரும்பி வந்தால் அவள் உன்னுடையவள்...அவள் வராவிட்டால் அவள் எப்போதும் உன்னுடையவளாக இருந்ததில்லை...///

இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது!

ஜெகதரட்சகன், ஜேப்பியார், ஏ.சி.சண்முகம், வேலூர் விஸ்வநாதன் போன்றவர்கள் எம்.ஜி.ஆரின் கடைக்கண் பார்வையால் கல்வி நிறுவனங்களை அமைத்து வளர்ந்தவர்கள் என்றால், கருணாநிதியின் ஆசீர்வாதம் காரணமாக... வீரபாண்டி ஆறுமுகம், துரைமுருகன், பொன்முடி, கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பொங்கலூர் பழனிச்சாமி ஆகியோர் பரிணமித்து இருக்கிறார்கள். சேலம், திருச்சி, விழுப்புரம், வேலூர், கடலூர், கோவை நகர்ப் பகுதியில் வலம் வந்தால், இவர்களது பிரமாண்டமான கல்லூரிக் கட்டடங்களைத் தரிசிக்கலாம்.
மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள சிவரக்கோட்டையில் பிரமாண்டமாக உருவாகிறது தயா இன்ஜினீயரிங் கல்லூரி. மத்திய அமைச்சர் மு.க.அழகிரிக்கு சொந்தமான இந்த கல்லூரி அடுத்த கல்வி ஆண்டில் இருந்து செயல்படத் துவங்குமாம்.
''அமைச்சர் நேருவின் தம்பி ரவிச்சந்திரன் மற்றும் நேருவின் மனைவி சாந்தா ஆகியோர் இணைந்து நாராயணா அறக்கட்டளை வைத்துள்ளனர். அதன் சார்பாக ஒரு கல்லூரி நடத்துகின்றனர். அந்தக் கல்லூரிக்காக ஏழை, எளிய விவசாயிகளிடம் இருந்து அடிமாட்டு விலைக்கு 100 ஏக்கர் நிலத்தை அபகரித்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைக்காக இந்த நிலங்கள் முன்பு தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அந்த நிலங்களுக்கு பாதிப்பு வரக் கூடாது என்பதற்காக, இப்போது புங்கனூரில் இருக்கும் ஏரியை வளைத்து தேசிய நெடுஞ்சாலைக்குப் பாதை அமைத்து வருகின்றனர். இது என்ன தர்மம்?'' என்று கடந்த ஆகஸ்ட் 14-ம் தேதி திருச்சியில் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டப் பொதுக் கூட்டத்தில் ஜெயலலிதா முழங்கினார்.

ஜெயலலிதா குறிப்பட்டது திருச்சி - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தாயனூர் கிராமத்தில் இயங்கி வரும் கேர் இன்ஜினீயரிங் கல்லூரி பற்றித்தான். அந்தக் கல்லூரியின் சேர்மனாக இருப்பவர் நேருவின் தம்பி ராமஜெயம். நேருவின் அக்காள் மகனும், மாப்பிள்ளையுமான செந்தில் இதன் நிர்வாக அதிகாரி. இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இந்த இன்ஜினீயரிங் கல்லூரி, நேருவின் தந்தை பெயரில் இயங்கி வரும் நாராயணா எஜுகேஷனல் டிரஸ்ட் கட்டுப்பாட்டில் இருக்கிறது. ஜெயலலிதா குறிப்பிட்டதுபோல, நேருவின் மனைவி சாந்தாவும் சகோதரர் ரவிச்சந்திரனும் டிரஸ்ட்டை நடத்த, குடும்ப உறுப்பினர்கள் பலரும் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
ஊரகத் தொழில் மற்றும் கால்நடைத் துறை அமைச்சரான பொங்கலூர் பழனிச்சாமிக்கு சொந்தமான கலைஞர் கருணாநிதி இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி, கோவை அருகே பாப்பம்பட்டி பிரிவு பகுதியில் இருக்கிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தக் கல்லூரி, விஜயலட்சுமி பழனிச்சாமி சாரிடபிள் டிரஸ்ட் மூலமாக நடத்தப்படுகிறது. தங்களுக்கு சொந்தமான நிலத்தில் இந்தக் கல்லூரியைக் கட்டி இருக்கிறாராம் பழனிச்சாமி. இந்தக் கல்லூரியின் நிர்வாகத்தை அமைச்சரின் மகளும், நிர்வாக அறங்காவலருமான வித்யா கோகுல் கவனித்து வருகிறார். ''கருணாநிதிக்கு மிக நெருங்கிய வட்டத்தில் இருந்துகொண்டு, அந்த செல்வாக்கைப் பயன்படுத்தி வரும் அமைச்சர்கள் யாரும், நன்றிக்கடனாகக்கூட கருணாநிதியின் பெயரை வைக்கவில்லை. ஆனால், பொங்கலூரார்தான் தலை​வரின் பெயரைச் சூட்டி தன்னுடைய நன்றி உணர்ச்சி​யைக் காட்டி இருக்கிறார்...'' என்று பொங்கலூராரின் கோஷ்டி பெருமை அடித்துக்கொள்கிறது. 
'கனிமொழிக்கு சொந்தமானது இந்தக் கல்லூரி. பொங்கலூர் பழனிச்சாமியின் பெயரை இதற்குப் பயன்படுத்திக்கொண்டார்கள்!’ என்று சொல்பவர்களும் உண்டு. நீலகிரி தொகுதியின் எம்.பி-யாக ஆ.ராசா வந்து உட்கார்ந்த சில காலங்களிலே, இந்தக் கல்லூரி அவரது பெயருக்கு மாற்றப்பட்டுவிட்டது என்ற லெவலுக்குக்கூட லோக்கல் தி.மு.க-வுக்குள் புகைந்தது. ஆனால், பொங்கலூரார் தரப்போ... எல்லாவற்றையும் அடியோடு மறுத்துச் சிரிக்கிறது.

வேளாண் துறை அமைச்சரான வீரபாண்டி ஆறுமுகத்துக்கு சொந்தமாக உத்தம சோழபுரத்தில் வி.எஸ்.ஏ. குரூப் ஆஃப் இன்ஸ்டிடியூஷன் (இன்ஜினீயரிங் மற்றும் எம்.பி.ஏ.) இருக்கிறது. வி.எஸ்.ஏ. என்றால் வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் என்று அர்த்தம். அமைச்சரின் மகனான எம்.எல்.ஏ.ராஜா இதன் சேர்மன். இந்தக் கல்லூரியைக் கட்டுவதற்காக அருகில் இருந்த கஞ்ச மலையை சேதம் செய்தார்கள் என்றொரு புகார் எழுந்து அடங்கியது. இந்தக் கல்லூரி தவிர ஆட்டையாம்பட்டியில் பழைய ஸ்கூல் ஒன்றை சில மாதங்களுக்கு முன் விலைக்கு வாங்கி, வி.எஸ்.ஏ. மெட்ரிக் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற பெயரில் நடத்தி வருகிறார்கள்.

தி.மு.க-வின் கடலூர் மாவட்டச் செயலாளராகவும் சுகாதாரத்துறை அமைச்சராகவும் இருக்கிறார் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம். அவருடைய சித்தப்பா தெய்வ​சிகாமணி, நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தில் ஸ்டோர் கீப்பராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2008-ல் காட்டுமன்னார்கோவிலில், சந்திரவதனம் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மற்றும் சந்திரவதனம் ஆசிரியர் கல்வியியல் கல்வி நிறுவனம் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தி வருகிறார். அவரே சேர்மனாகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
2008-ம் ஆண்டு மேல​பழஞ்சநல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே கலை மற்றும் அறிவியல் கல்லூரி சுமார் மூன்று ஏக்கரிலும், 2009-ம் ஆண்டு வீராணம் நல்லூர் என்ற இடத்தில் எம்.ஆர்.கே இன்ஜினீயரிங் கல்லூரி ஒன்றை சுமார் 20 ஏக்கரிலும் நடத்தி வருகிறார். இதை பன்னீர்செல்வத்தின் மகன் கதிரவன் நிர்வகித்து வருகிறார். கதிரவன்தான் சேர்மன். நாட்டார்மங்கலம் கிராமத்தில் கல்வி நிறுவனத்துக்காக கட்டடம் கட்டிக்கொண்டு இருக்கிறார்கள். எம்.ஆர்.கே. கல்வி அறக்கட்டளைக்கு பன்னீர்செல்வத்தின் சித்தப்பா தெய்வசிகாமணி சேர்மனாக இருக்கிறார்.

சட்டம் மற்றும் சிறைத் துறை அமைச்சர் துரைமுருகன், தனது மகன் கதிர்ஆனந்த் பெயரில் கிங்ஸ்டன் கலை மற்றும் பொறியியல் கல்லூரியை நடத்தி வருகிறார். காட்பாடியில் இருந்து சித்தூர் போகும் வழியில் சுமார் 6 கி.மீ தொலைவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இந்தக் கல்வி நிறுவனம் நடந்து வருகிறது. இந்தக் கல்லூரிக்கு அருகில்தான் அரசின் வெடி மருந்துத் தொழிற்சாலை நடந்து வருகிறது. இதன் அருகில் எந்தவொரு அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் நடத்தக் கூடாது என்பது அரசு விதி. அதையும் மீறி இந்தக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. அதனால், 'அரசு வெடி மருந்துத் தொழிற்சாலையை வேறு இடத்துக்கு மாற்றலாமா...’ என்ற அளவுக்கு ஆலோசனைகள் நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட தி.மு.க. செயலா​ளரும், அமைச்சருமான பொன்முடி, சிகா என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி இருக்கிறார். அதன் மூலம், சிகா மேலாண்​மைக் கல்லூரி, மற்றும் சிகா டீச்சர் டிரெயினிங் கல்லூரி ஆகிய​வற்றை கப்பியாம்புலியூர் என்ற இடத்தில் நான்கு ஆண்டு காலமாக நடத்தி வருகிறார். மேலும் விக்கிரவாண்டி அருகே சூர்யா பொறியியல் கல்லூரி ஒன்றையும் மூன்று ஆண்டுகளாக நடத்தி வருகிறார். சூர்யா பொறியியல் கல்லூரி பொன்முடியின் மகன்களான பொன்.கௌதமசிகாமணி, அசோக் சிகாமணி ஆகியோர் பெயரில் நடத்தப்படுகிறது.

முன்னரே சொன்னது மாதிரி, திருவண்ணாமலை மாவட்டத்தில் எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்கள் பல ஆண்டுகளாக நடந்து வருகின்றன. அருணை பொறியியல் கல்லூரி, கம்பன் பொறியியல் கல்லூரி, கம்பன் கலை மற்றும் அறிவியல் பெண்கள் கல்லூரி, குமரன் பாலிடெக்னிக், கம்பன் ஐ.டி.ஐ., ஜீவா வேலு உறைவிடப் பள்ளி ஆகியவற்றை வேலு நடத்தி வருகிறார்.
ஆகமொத்தம், தமிழக அமைச்சரையில் நான்கில் ஒரு பங்கு மந்திரிகள் கல்வித் தந்தையராக வளர்ந்திருக்​கிறார்கள்.
''இது பொற்கால ஆட்சி!'' என்று சமீபத்தில் நடந்த ஒரு பரிசளிப்பு விழாவில் எழுத்தாளர் ஜெயகாந்தன் சொன்னார். அதற்கு பதில் அளித்த கருணாநிதி, ''பொற்காலம் என்பது கலைஞர்களுக்கு, நடிகர்களுக்கு என்று மாத்திரம் இல்லாமல், ஏழை எளியவர்களுக்கு என்றைக்கு நற்காலம் பிறக்கிறதோ, என்றைக்கும் அந்த நற்காலம் நீடிக்கிற நிலைமை ஏற்படுகிறதோ, அதுதான் பொற்காலமாகும்!'' என்று சொன்னார்.
இந்தக் கட்டடங்களை எல்லாம் பார்த்தால் யாருக்குப் பொற்காலம் என்பது சொல்லாமலே புரிகிறது!

கன்னிமரா நூலகத்தில்....“காகிதப்பூ“ இராஜாத்தி


Wednesday, March 2, 2011

கன்னிமரா நூலகத்தில்....“காகிதப்பூ“ இராஜாத்தி


ராஜேந்தர் சிங் சர்க்காரியா… இந்தப் பெயரில் சர்க்கரை இருந்தாலும், கருணாநிதிக்கு இந்தப் பெயர் வேப்பங்காயாகவே கசக்கும். கருணாநிதியின் ஊழல்களையும், அவர் ஊழல் செய்யும் முறைகளையும், மிகச் சிறப்பான புலனாய்வு அதிகாரிகளைக் கொண்டு ஆராய்ந்து, கருணாநிதியின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றிய பெருமை, இந்த நீதிபதி சர்க்காரியாவையே சாரும்.
 அந்த சர்க்காரியா கமிஷனின் அறிக்கை ஒரு அரசு ஆவணமாகும்.   வழக்கமான அரசு ஆவணங்கள், தவறாமல் இருக்கக் கூடிய இடங்கள், சென்னை கன்னிமரா நூலகம், ஆவணக்காப்பகம், தலைமைச் செயலக நூலகம் மற்றும் சட்டப் பேரவை நூலகம்.   இந்த அத்தனை இடங்களிலும் இந்த நூல் திடீரென்று காணாமல் போவது தற்செயல் நிகழ்வாக எடுத்துக் கொள்ள முடியுமா ? ஆனால் இதுதான் நடந்துள்ளது. என்னதான் நடந்துள்ளது என்று சென்னை கன்னிமரா நூலகத்தில் விசாரித்த போது, தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அலுவலகத்தில் இருந்து அனைத்து நகல்களும் வாங்கிச் செல்லப் பட்டு விட்டன என்ற தகவல் தெரிய வந்தது. யார் வாங்கிச் சென்றார்கள் என்று கேட்டால், ‘மினிஷ்டர் ஆபீஸ்லேர்ந்து வாங்கிகினு போனாங்க சார்… அத்தோட அவ்ளோதான்….’ என்று கூறினார்.
இது போல ஆவணங்களை மறைப்பதன் மூலம், வரலாற்றை திரித்து, உத்தம சீலர் வேஷம் போட நினைக்கிறார் கருணாநிதி.   ஆனால் கருணாநிதியின் கணக்கை பொய்யாக்க வேண்டாமா ? சவுக்கும் அதன் வாசகர்களும், பெரிய தில்லாலங்கடி இல்லையா ?  சாம்பிளுக்காக ஒரே ஒரு பகுதி மட்டும், என் அன்பு சவுக்கு வாசகர்களுக்காக இதோ…..


தர்மாம்பாள் என்ற அல்லது இராஜாத்தி என்னும் திருமதி தர்மா தென்னாற்காடு மாவட்டத்தில் ஸ்ரீமுஷ்ணத்தில் திருமதி சிவபாக்கியம் அம்மாளுக்குப் பிறற்த கடைசி மகள் ஆவார். திருமதி சிவபாக்கியம் அம்மாள் முதலில் கருப்பையா நாடார் என்பவரை மணந்தார். அவர் மரணத்திற்குப் பின்னர் ஸ்ரீமுஷ்ணத்தைச் சேர்ந்த முத்துக்குமாரசாமி நாடார் என்பவரை மறுமணம் செய்து கொண்டார். இரண்டாவது திருமணத்திற்குப் பின்னர் அவருக்கு இராஜலட்சுமி, சுப்ரமணியம், தர்மா என்ற மூன்று பிள்ளைகள் பிறந்தனர். இரண்டாவது கணவரும் இறந்து விட்டார்.   அதன் பின்னர் சிவபாக்கியம் அம்மாள் அந்த கிராமத்தை விட்டு சிதம்பரம் வந்து அங்கு தன் மூன்று பிள்ளைகளுடன் தங்கியிருந்தார். அதன் பிறகு அவர் தனது இருப்பிடத்தை சென்னைக்கு மாற்றிக் கொண்டார். அவர் வசதியான நிலையில் இல்லை. அவருடைய மூன்று குழந்தைகளில் யாரும் தொடக்கக் கல்வியைத் தவிர உயர்கல்வி படிக்க முடியவில்லை. சென்னையில் சிவகாக்கியமும் அவர் குழந்தைகளும், இராயப்பேட்டையில் 62, முத்துமுதலி தெருவில் உள்ள ஓர் அறையில் தங்கியிருந்தனர். அதற்கு மாதம் ரூ.18 வாடகை கொடுத்து வந்தார். திருமதி தர்மா நாடகத்தில் நடிப்பதை தன் வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்டார். அவர் சகோதரர் சுப்ரமணியம் எம்.பி.டி லாரி சர்வீசில் கூலியாக வேலை பார்த்து வந்தார்.   1962ல் மயிலாப்பூர், விவேகானந்தா கல்லூரிக்கு எதிரேயுள்ள ஒரு வீட்டை மாதம் ரூ.75 வாடகைக்கு எடுத்துக் கொண்டு அங்கு அவர் குடியேறினர்.


1966ல் “காகிதப்பூ“ என்னும் நாடகத்தில் திருமதி தர்மாவும் திரு.மு.கருணாநிதியும் ஒன்றாக இணைந்து நடித்த போது அவர்கள் இருவரும் சந்திக்க நேரிட்டது. திரு.கருணாநிதி கூறியுள்ளபடி, அவர் திருமதி.தர்மாவை 1966ல் செப்டம்பர் மாதம் 23ந் தேதி சமயச் சார்பற்ற முறையில் (இதுக்குப் பேர்தான் சுயமரியாதைத் திருமணமா ? … கருமம். கருமம்) திருமணம் செய்து கொண்டார்.   அது முதற்கொண்டு இருவரும் கணவன் மனைவியாகவே வாழ்ந்து வருகின்றனர். 1966ம் ஆண்டு மார்ச் 10ல் திருமதி தர்மா, சென்னை.17, தியாகராய நகரில், 24.A, திருமூர்த்தி தெருவில் மாதம் ரூ.100 வாடகைக்கு வீடு ஒன்றை எடுத்து அதில் வசித்து வந்தார். இந்த வீட்டுக்கான வாடகையை கருணாநிதி கொடுத்து வந்தார். திருமதி தர்மாவுடன் அவர் தாயார், சகோதரர், சகோதரி ஆகியோரும் அதே வீட்டில் வசித்து வந்தனர். திரு கருணாநிதிக்கு 1968ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் நாளில் ஒரு பெண் குழந்தைக் பிறந்தது (அப்போ ஜாதகம் பாத்திருந்தா, ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை இந்தப் பிள்ளை ஆட்டையைப் போடும் என்று சொல்லியிருப்பார்களோ… நமக்கு இந்த மேட்டர் தெரிஞ்சுருந்தா அப்போவே ஏதாவது பண்ணியிருக்கலாம் பாஸ்)   என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.

சென்னை தியாகராய நகர் திருமூர்த்தி தெருவில் உள்ள அவரது வீட்டில் தொலைபேசி ஒன்றும் நிறுவப்பட்டுள்ளது. திரு கருணாநிதி தர்மாவை பார்க்க அவ்வீட்டிற்கு அடிக்கடி வருவது வழக்கம். அதன் பின்னர் 1969ம் ஆண்டு ஜனவரி மாதம் 20ம் நாளில் திருமதி தர்மா, சென்னை இராஜா அண்ணாமலைபுரத்தில் எண் 9, முதல் குறுக்குத் தெருவில் உள்ள வீட்டை திருமதி ஈ.எல்.விசுவாசம் என்பவரிடமிருந்து 57 ஆயிரத்திற்கு கிரயத்திற்கு வாங்கியதாக கூறப்படுகிறது.

சாம்பிள் எப்பூடி…. ?     தமிழில் மிக முக்கியமான பங்கை வகிக்கும் நாடகத் துறை ஒரு காதலை அரங்கேற்றியிருக்கிறது… அதற்கு போய் பய புள்ளைக என்னமா பேசுறாங்க பாஸ்… அதுவும் இந்த எதிர்க்கட்சிக் காரய்ங்க இருக்காங்களே….
காதல் வயப்பட்டிருக்கும் காதலர்கள், அப்போது வெளியாகியுள்ள திரைப்படங்களில் உள்ள பாடல்களை தங்கள் காதலியிடம் / காதலரிடம் பாடி, மகிழ்வது வழக்கம். இவர்களுக்கு திருமணமானது 1966ம் ஆண்டு. அந்த ஆண்டு வெளியான திரைப்படங்களில் உள்ள பாடல்களில், இந்த சிறப்பான ஜோடிக்கு பொருத்தமான பாடல் எது என்று சவுக்கு ஆராய்ந்ததில், முகராசி படத்தில் இடம் பெற்ற, இந்தப் பாடலே மிக மிக பொருத்தமாக இருக்கிறது.

“எனக்கும் உனக்கும் தான் பொருத்தம்..
இதில் எத்தனை கண்களுக்கு வருத்தம்…
நம் இருவருக்கும் உள்ள நெருக்கம்….
இதில் யாருக்கு இங்கே கிடைக்கும்…”

60களில் 75 ரூபாய் வாடகைக்கு இருந்த ராஜாத்தி என்கிற தர்மாம்பாள் தற்போது ராஜாத்தி கருணாநிதியாக மாறி இருக்கிறார்.  இவருக்குத் தான் இன்று எத்தனை சொத்துக்கள் தோழர்களே…..

வெஸ்ட் கேட் லாஜிஸ்டிக்ஸ் என்ற பல கோடி ரூபாய் கப்பல் போக்குவரத்து நிறுவனம், சிஐடி காலனி வீடு, பினாமி பெயரில் அண்ணாசாலை வோல்டாஸ் கட்டிடம், ஊட்டியில் 535 ஏக்கர் எஸ்டேட், விலையுயர்ந்த கார், மாட மாளிகை, கூட கோபுரம்…..

Tuesday, March 1, 2011

ஓய்வு தரும் உற்சாகம்‏

ஓய்வு நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்?
- நன்றாக தூங்கிவிடுவேன்


- சினிமாவுக்குப் போவேன், டி.வி. பார்ப்பேன்

- நண்பர்களுடன் அரட்டை அடிப்பேன்

பெரும்பாலானவர்கள் இந்த மூன்றில் ஒரு பதிலைச் சொல்கிறார்கள்.

உழைத்துக் கொண்டிரு, ஓய்வு கொள்ளாதே' என்றுதான் பலரும் அறிவுரை வழங்குகிறார்கள். உண்மையில் உழைப்பிற்கு ஓய்வு எதிரியா? அகராதி சொல்லாத பொருளாக அப்படித்தான் பின்பற்றப்படுகிறது.

மனம் இயல்பாகவே ஓய்வைத் தான் ஆவலுடன் எதிர்பார்க்கும். ஆனால் ஓய்வு என்பது உழைப்பை நிறுத்துவது என்றும், உடலைப் புத்துணர்ச்சி பெறச் செய்வது என்றும் பெரும்பாலானவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் ஓய்வு என்பது மனம் சம்பந்தமான விஷயம். மக்கள் எப்படி ஓய்வுப் பொழுதைக் கழிக்கிறார்கள், உண்மையில் ஓய்வை எப்படிக் கழிக்க வேண்டும்? ஓய்வை பயன்படுத்துவதால் ஏற்படும் உன்னத பலன்கள் என்ன? ஒரு அலசல்...

மனம் இளைப்பாறப் பயன்படுவது தான் உண்மையான ஓய்வாகும். மனம் இளைப்பாற வேண்டுமென்றால் அது சோர்வுறுமா? என்பது தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். பல்வேறு ஆராய்ச்சிகளில் கண்ட முடிவு என்னவென்றால், "உடல்தான் களைப்புறுகிறதே தவிர, மனம் எப்போதும் சக்தி இழப்பதில்லை'' என்பதுதான். சோர்வாக இருக்கிறோம் என்று நினைக்கும் வேளையில் நீங்களே வலிய வந்து ஒரு செயலைத் தொடங்கிப் பாருங்களேன். சோர்வு ஓடிப்போகும். அப்படியானால் அது விளக்கும் பாடம் என்ன? மனம் எப்போதும் சோர்வடைவதில்லை. எந்தச் செயலில் நமக்குப் பற்று இல்லையோ அதுவே நமக்கு சோர்வாக தோன்றுகிறது. நம் விருப்பத்தை அதிகப்படுத்திக் கொண்டால் சோர்வு ஏற்பட வழியே இல்லை. உண்மையில் மூளையின் (மனதின்) கட்டளையை ஏற்றுச் செயல்படும் அளவுக்கு உடலில் தெம்பில்லை என்பதுதான் நம்மால் சோர்வாக உணரப்படுகிறது.

ஓய்வு எப்படிக் கழிகிறது...
விஞ்ஞான வளர்ச்சியால் இன்றைய காலத்தில் பெரும்பாலான வேலைகளை எந்திரங்களே செய்து முடித்து விடுகின்றன. இதனால் மனிதர்களுக்கு ஓய்வு நேரம் அதிகமாகி இருக்கிறது. அதேபோல் ஓய்வைக் கழிப்பதற்கும் அனேக வழிகள், வசதிகள் இருக்கின்றன. சிலர் ஓய்வு நேரத்தில் வழக்கமான பொருளீட்டும் வேலையைத் தவிர்த்து மற்ற வேலைகளில் ஈடுபடுகிறார்கள். இன்னும் சிலர் ஓய்வு நேரத்தையும் காசாக்கும் வேலையில் இறங்கி விடுகிறார்கள். இந்த இரண்டுமே ஓய்வைக் கெடுக்கும் செயல்களாகும்.

மகிழ்ச்சியாக இருப்பதை விட வேறு எதையும் மனிதன் வாழ்வில் விரும்புவதில்லை. மகிழ்ச்சியாக ஓய்வை அனுபவிப்பதிலும் மக்கள் இருகூறாகப் பிரிந்து கிடக்கிறார்கள். ஏழை-பணக்காரன் என்பது தான் அந்தக்கூறு. இவர்களில் பணம் படைத்தவர்களுக்கு அதிகம் ஓய்வு கிடைக்கிறது. ஓய்வைக் கழிப்பதற்கும் அவர்களுக்கு நிறைய வசதிகள் இருக்கிறது. கார்-பைக்கில் பறக்கிறார்கள். சினிமாவுக்குப் போகிறார்கள். சுற்றுலா செல்கிறார்கள். கச்சேரிகள், கூட்டங்கள் என பல வழிகளில் பொழுதை உல்லாசமாகக் கழிக்கிறார்கள்.

ஆனால் ஏழைகளுக்கு ஓய்வும் குறைவு. ஓய்வை அனுபவிக்கும் வசதிகளும் குறைவு. இவர்கள் பெரும்பாலும் டி.வி. பார்ப்பதில் பொழுதைக் கழித்து விடுகிறார்கள். பூங்காக்களுக்குச் செல்வது, கோவிலுக்குச் செல்வதோடு இவர்களது ஓய்வுப் பொழுது கரைந்து விடுகிறது.

ஓய்வைக் கொண்டாடும் வழிகள்
இன்னிசைக் கச்சேரி பார்ப்பது, பாட்டுக் கேட்பது, இசை நிகழ்ச்சியை ரசிப்பது என்று சிலர் ஓய்வுப் பொழுதைக்  கழிக்கிறார்கள். சுற்றுலா செல்வதை சிலர் வழக்கமாக வைத்திருக்கிறார்கள். சினிமா பார்ப்பது, டி.வி. பார்ப்பது என்று பொழுது போக்குபவர்கள் ஏராளம். இன்னும் சிலர் கொஞ்ச நேரம் ஓய்வு கிடைத்தாலும் படுக்கையில் முடங்கி குறட்டை விடத் தொடங்கி விடுகிறார்கள். இவைதான் உண்மையிலேயே பொழுதுபோக்கென்று நம்புபவர்கள் தான் ஏராளம். இவையெல்லாம் ஓய்வைக் கழிக்கும் சில வழிகளே தவிர, ஓய்வை அனுபவிக்கும் முழுமையான வழிகளல்ல. மனதை மறுமலர்ச்சி பெறச் செய்வதுதான் பொழுதுபோக்கு.

மேற்கண்ட வழிகளில் பொழுது போக்கும் போது சிலர் மகிழ்ச்சி அடையத்தானே செய்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம். இந்த நிகழ்ச்சிகளில் எல்லாம் உங்கள் பங்கு ஒன்றுமே இல்லையே. வெறும் பார்வையாளர்கள் தானே நீங்கள். ரசிப்பது மட்டும் மகிழ்ச்சியில்லையே. லயித்திருப்பதில்தானே உண்மையான மகிழ்ச்சி இருக்கிறது. உண்மையான மகிழ்ச்சியும், ஓய்வை அனுபவித்த திருப்தியும் வேண்டுமானால் நீங்கள் பின்பற்ற வேண்டிய வழிகள் இவைதான்...

* நீங்கள் இசையைக் கேட்டவுடன் இன்பம் உணர்பவர்கள் என்றால் அந்த இசையை உருவாக்கும் முயற்சியில் இறங்கிப் பாருங்கள் இன்னும் அதிகமாக இன்பத்தில் மிதப்பீர்கள். கூடவே இசையைக் கற்றுக் கொண்ட மகிழ்ச்சியும், புதிய இசையை உருவாக்கும் எண்ணமும் வரும். இது வாழ்வையே புதுமையாக்கும். ஆம்.. இனியாவது வயலின், மவுத்ஆர்கான் இசையை ரசிப்பதைவிட வாசிக்கக் கற்றுக் கொள்ள முயற்சி செய்யுங்கள்.

* பாடல்களை கேட்பதற்குப் பதிலாக பாடல்களைப் பாடுங்கள். ஆடல் காட்சிகளைப் பார்ப்பதை விட நீங்களே ஆடி மகிழுங்கள். உங்களுக்கு ரசனையானதை மட்டுமே பாருங்கள், கேளுங்கள், ரசியுங்கள்.

* சுற்றுலா செல்வதும், புத்தகங்கள் வாசிப்பதும் நல்ல பழக்கம்தான். அத்துடன் ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு அதைப்பற்றிய ஆழமான விஷயங்களை சேகரித்து எழுதுவது சிந்தனையை சரியான திசையில் செலுத்தும் வழியாகும்.

* சிலர் ஓய்வு நேரத்தை சும்மா இருந்து கழிக்கிறார்கள். சும்மா இருந்தால் மனம் அலை பாயத்தான் செய்யும். இதனால் பழுதுகள் ஏற்படுமே தவிர, மனம் வலிவு பெறாது.

* செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்சுவது, அஞ்சல் வில்லை, நாணயம், விதவிதமான பொருட்கள் சேகரிப்பது என்பது மிகச் சிறந்த செயல்களாகும். மீன்கள் வளர்ப்பது, கால் நடைகளை பராமரிப்பது, சமையல், நூல் நூற்றல், எம்ப்ராய்டரிங் கற்றுக் கொள்வது, ஓவியம் தீட்டுவது, சிற்பம் செதுக்குவது போன்றவையெல்லாம் மனதை ஈர்க்கும் வகையில் ஓய்வை கழிக்கப் பயன்படும் சிறந்த வழிகளாகும். இவற்றுக்கு தினமும் கொஞ்சம் நேரம் செலவு செய்ய வேண்டிய அவசியம் இருப்பதால் மனம் அலைபாய்வதைக் கட்டுப்படுத்தும்.
சமுதாய அமைதியில் ஓய்வின் பங்குஓய்வு என்பது மனிதனின் பொருளாதாரச் சிக்கல், சமூகத் தொல்லைகளை மறக்கச் செய்வதாக இருக்க வேண்டும். நகர்ப்புறங்களில் இருப்பது போன்ற பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் எல்லா ஊர்களுக்கும் அவசியம் தேவையாகும். இவை மக்கள் சந்திக்கும் இடங்களாகவும், ஓய்வைக் கழிக்கும் இடங்களாகவும் இருப்பதால் சமுதாய மறுமலர்ச்சி ஏற்படும். உறவு முறைகள் மேம்படும். மனிதனின் அறிவு நிலை வளர்ச்சி பெறும். குழந்தைகள் சிறுவயது முதலே இதுபோன்ற இடங்களில் சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டால் அவர்களின் பல்வேறு பரிமாணங்களும் வியக்கத்தக்க வகையில் மாறுதல் அடையும். மக்களுக்கு ஓய்வைக் கழிக்கச் சரியான வசதிகள் இருந்தால் மனம் தெளிவும், அமைதியும் பெறும். இதனால் அவர்கள் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவது கணிசமாகக் குறையும். சமுதாயத்தில் அமைதி நிலவ ஏதுவாகும். மக்கட்பண்பு பெருக உதவி செய்யும். மேலைநாடுகளில் இருப்பதுபோன்ற மக்களை ஒருங்கிணைக்கும் சங்கங்கள் (இளைஞர்கள், குழந்தைகள், மக்கள் சங்கம்) உருவாக்கப்பட வேண்டும். அவை அரசியல் சாராத அமைப்புகளாக இருப்பது மிகவும் அவசியம்.  

'ஏழாவது அறிவு' என்பது அழிப்பதுதானா?

''துணை முதல்வர் மகன் தயாரிக்கும் 'ஏழாவது அறிவு’ படக் குழுவினருக்கு 'ஆறாவது அறிவு’ வேலை. 
 மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடரின் ஒரு பகுதி கோவை போளுவாம்பட்டி வனச் சரகம். இதில் உள்ள குஞ்சராடி மலைப் பகுதியில் இருந்து உற்பத்தியாகும் சாடியாறின் கிளை ஆறு நண்டங்​கரை நீரோடை. வறட்சியான காலகட்டத்திலும் தண்ணீர் வற்றாத இந்த நீரோடையில்,  1 கோடியே 28 லட்சம் செலவில் அங்கு தடுப்​பணை கட்டப்பட்டது. 'நமக்கு நாமே திட்டத்தின் கீழ்’ தயாரான இந்த அணையைக் கட்ட ஆன செலவில் பாதிக்கும் அதிகமான தொகையை 'சிறு துளி’ அமைப்பு தந்தது. இந்த அணையில் தண்ணீர் வற்றியதே இல்லை. இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களுக்கும், விவசாயத் தேவைகளுக்கும் இந்த தடுப்பணை, நிலத்தடி நீரை வளப்​படுத்துவதுடன் யானை, சிறுத்தை போன்ற விலங்குகளின் குடிநீர் பாத்திரமாகவும் இருக்கிறது. இதற்குத்தான் ஸ்டாலினின் மகன் உதயநிதி தயாரிக்கும் 'ஏழாவது அறிவு’ பட டீம் ஆப்புவைத்து இருக்கிறது. இந்தப் படப்பிடிப்பு நபர்கள், நண்டங்கரை அணைக்குள்ளும் அதைச் சுற்றிலும் அசுரத்​தனமான செட்களைப் போட்டு அணை நீரை பாழ்படுத்தி இருக்கிறார்கள்

தடுப்பணையைச் சுற்றி மூன்று பகுதிகளில் பெரிய தூண்கள், தோரண வாயில் போன்ற பிரமாண்ட படிக்கட்டுகளை அமைத்து இருக்கிறார்கள். கூடவே, அணை நீருக்குள்ளும் தகர ட்ரம்கள் மற்றும் பிளைவுட்களால் மேடை அமைத்து கோயில் செட் போட்டிருக்கிறார்கள். லட்சக்கணக்கான சவுக்குக் கட்டைகளைக் குத்தி அணையின் ஆன்மாவை துள்ளத்​துடிக்க வைத்திருக்கிறார்கள். மேலும் எச்சில் இலைகள், பிளாஸ்டிக் பைகள் மற்றும் சரக்கு பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. கிட்டத்தட்ட 10 நாட்கள் நடந்த செட்டிங் பணியிலேயே 60 சதவிகிதம் அந்த அணை ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டது. இந்த அத்துமீறலுக்கு சுற்றியிருக்கும் விவசாயிகள் தொடக்கத்தில் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார்கள். ஆனால், பெரிய இடத்து பையனின் தயாரிப்பு என்பதால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இது ஒருபுறமிருக்க, கோவையில் இருந்து ஆனைக்கட்டி செல்லும் சாலையின் இடதுபுறம் சற்றே உள்வாங்கி இருக்கிறது அனுவாவி சுப்பிரமணியர் கோயில். இந்த மலைக்கோயிலின் அடிவாரத்தில் இரண்டு நாட்​களாக புதுமுகங்கள் நடிக்கும் 'மருதவேலு’ என்ற சினிமாவுக்கான ஷூட்டிங் எந்த முன் அனுமதியும் இல்லாமல் நடந்திருக்கிறது. அரைகுறை ஆடையுடன் கவர்ச்சிகரமாக குத்தாட்ட பாடலுக்கு ஆடி இருக்கிறார்கள் பெண்கள். இதுவும் இந்தப் பகுதியில் பெரும் அதிருப்​தியைக் கிளப்பி இருக்கிறது.
''உள்ளாட்சியில் நல்லாட்சி புரிவதாக அப்பா தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்க... மகனோ இப்படி நீர் ஆதாரத்தை சேதாரம் செய்கிறாரே... செட்டிங் போட இவர்கள் பயன்படுத்தும் ப்ளாஸ்டர் ஆஃப் பாரீஸ் மற்றும் பெயின்ட்களால் அந்த அணை தண்ணீர் கருமை நிறத்தில் மாறி​விட்டது. நண்டங்கரையில் செட்டிங் போட அனுமதி வாங்கி இருக்கிறார்களா, பணம் கட்டினார்களா என்பதெல்லாம் விஷயமே இல்லை. கோடிக்கணக்கான செலவில் அரசாங்கத்துடன் கைகோத்து ஒரு தனியார் அமைப்பு பார்த்துப் பார்த்து செய்த ஒரு நல்ல காரியத்தை இப்படியா கருவறுப்பது? படக் குழுவினர் ஒரு மாதத்துக்கு மேல் அங்கே தங்கி இருந்து படப்பிடிப்பு செய்யப் போகிறார்களாம். ஆக, குடிதண்ணீருக்கு வழியில்லாமல், படப்பிடிப்பு சாதனங்களின் சப்தத்​தால் மிகக் கடுமையான இடைஞ்சலால் விலங்குகள் நிச்சயம் பாதிக்கப்படும். அடுப்பு எரிக்க வன எல்லையில் ஒரு சுள்ளியைப் பொறுக்கினாலே 'மரக் கடத்தல்’ என்று சொல்லி அபராதம் போட்டு, கைது செய்யும் வனத் துறை, இந்த விஷயத்தில் வாய்மூடிக் கிடப்பது கேவலம். அதேபோல், ஆலயப் பகுதியில் அரைகுறை ஆடையுடன் குத்தாட்டம் போடுவது கீழ்த்தரமான செயல்...''
வனத் துறையோ, 'செட்டிங் அமைக்கப்பட்ட இடம் தமது துறைக்குச் சொந்தமான இடம் இல்லை. எனவே இதை நாங்கள் தடுக்க முடியாது. அதே நேரத்தில், ஷூட்டிங் டீம் அத்துமீற முயன்றால் கண்​காணித்துத் தடுப்போம்’ என்கிறது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...