Monday, August 1, 2011

அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு ரூ.23 லட்சம்; ஜெயலலிதா வழங்கினார்

மே தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும், அ.தி.மு.க. அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் உறுப்பினர்களாக உள்ள நலிந்த தொழிலாளர்களுக்கு தலா ரூ.25,000 வீதம் குடும்ப நல நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது.
அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த நலிந்த தொழிலாளர்கள் 92 பேருக்கு ரூ.23 லட்சம்; ஜெயலலிதா வழங்கினார்
 
 அதனடிப்படையில், இந்த ஆண்டும், நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்- அமைச்சர் ஜெயலலிதா நேற்று மதியம் 2 மணிக்கு தலைமை கழகத்திற்கு வருகை தந்து, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த அறிவிக்கப்பட்ட 92 நலிந்த தொழிலாளர்களுக்குத் தலா ரூ.25 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.23 லட்சம் குடும்ப நல நிதியுதவியாக வழங்கினார். 
 
 அதேபோல், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அரசியல் எதிரிகளாலும், சமூக விரோதிகளாலும் படுகொலை செய்யப்பட்டு மரணமடைந்த மற்றும் கழகப் பணியாற்றும் போது விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்த 6 கழக தொண்டர்களின் குடும்பங்களுக்குத் தலா ஒரு லட்சம் ரூபாய் வீதம் 6 லட்சம் ரூபாயை குடும்ப நல நிதியுதவியாக வழங்கினார்.
 
தங்களுடைய குடும்ப சூழ்நிலையை அறிந்து நிதியுதவி வழங்கிய கழகப் பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, நிதியுதவியை பெற்றுக்கொண்ட தொழிலாளர்களும், அவர்களது குடும்பத்தினரும், அகால மரணமடைந்த தொண்டர்களின் குடும்பத்தினரும் தங்களது நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.  
 
 இந்த நிகழ்ச்சியின் போது, அண்ணா தொழிற்சங்கப் பேரவைச் செயலாளர் ஆர்.சின்னசாமி எம்.எல்.ஏ.வும், நிர்வாகிகளும் உடனிருந்தனர். முன்னதாக ஜெயலலிதாவுக்கு தலைமைக் கழக நிர்வாகிகள் மதுசூதனன், ஓ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், சுலோச்சனா சம்பத், சைதை துரைசாமி, மீனவரணி துணை செயலாளர் டி.ரமேஷ், சிறுபான்மை பிரிவு நிர்வாகிகள் பஹிம், வீரை கறீம், அமினுத்தீன் உள்பட பலர் வரவேற்றனர். அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த பெருந்திரளான தொழிலாளர்கள், தொழிற்சங்கக் கொடிகளையும், வரவேற்பு பதாகைகளையும் கைகளில் ஏந்தி சிறப்பான வரவேற்பு அளித்தனர்.          

நிலமோசடி வழக்கு;இன்று கைதான தி.மு.க வினர் பட்டியல்;

நிலமோசடி வழக்கு;இன்று கைதான தி.மு.க வினர் பட்டியல்;

இனி இப்படி தினசரி நாளேடுகளில் முதல் பக்கத்தில் ஒரு காலம் கட்டம் கட்டி போடும் நிலை வரும் போலிருக்கிறது...இன்று அதிகாலை ரெங்கநாதன் முன்னாள் எம்.எல்.ஏ வை கைது செய்திருக்கிறது போலீஸ்.தமிழ்நாட்டையே ரவுண்ட் கட்டி பத்திர பதிவு பண்ணியிருப்பாய்ங்க போலிருக்குய்யா..இந்த தடவையும் இவங்க ஜெயிச்சிருந்தா இதெல்லாம் வெளியே வருமா..?அப்படியே அமுக்கியிருக்க மாட்டாய்ங்க..இன்னும் அஞ்சு வருசம் கழிச்சு எல்லோரும் வாடகை வீட்ல தான் இருக்கணும்.ஒருத்தனும் சொந்த வீட்ல இருந்திருக்க முடியாது..வாடகை கட்டணும்னா தமிழக மக்கள்,வாடகை பணத்தை ராஜாத்தியம்மா,கனிமொழி,அழகிரி பேருக்கு டி.டி எடுத்துதான் அனுப்பணும்..

வடிவேலு மற்றும் அவர் மனைவி மீதும் நில மோசடி வழக்கு பாய்ந்துள்ளது...நேற்றுஒருவர்கொடுத்த புகாரில் வழக்கு பதியப்பட்டு ,ஆவணங்களில் உண்மைஇருந்தால் வடிவேலு மற்றும் அவர் மனைவி கைது செய்யப்படுவார்கள் என கமிஷனர் சொல்கிறார்.
தேர்தல் பிரச்சாரத்தில் ஜெயலலிதா வை ஒரு வார்த்தைகூட விமர்சிக்காமல்,தி.மு.க வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார் வடிவேலு.ஆனா விஜயகாந்தை காறி துப்புவது முதல்,7 வது ரவுண்டில் உளறியிருப்பார் என்பது வரை மானம்கெட விமர்சனம் செய்தார்.

இதற்கு ஒரே காரணம் தன் வீட்டில் விஜயகாந்த் ஆட்கள் கல்வீசி எறிந்தார்கள் என்பதுதான்.ஒரே ஊர்காரய்ங்க என்பதையும் மறந்து பெண்டு நிமிர்த்தினார் வடிவேலு..எம்.ஜி.ஆர் பாடல்கள் பாடி வடிவேலு ஓட்டு கேட்டதால்தான் நாங்கள் தோற்றோம் என பாக்யரஜ் ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.அந்தளவு எந்த ஊர் போனாலும் எம்.ஜி.ஆர் பாடலுடந்தான் பிரச்சாரம் ஆரம்பிப்பார் வடிவேலு..மக்களுக்கு எம்.ஜி.ஆர் நினைவு வந்தால் அவர் துவக்கிய கட்சியும் இரட்டை இலையும் ஞாபகம் வராமலா போகும்..அதன் மீது பாசம் வராமலா போகும்....?அதுக்காக இவராலதான் ஜெயிச்சுது அந்தம்மா னு சொல்ல முடியாது..விஜய் சொன்னது போல அணில் உதவின மாதிரி.

ராஜாத்தியம்மா கணக்கு பில்ளை கைதுக்கு அந்தம்மா சொல்ற பதில் என்ன தெரியுமா ..?அவர் யாருண்ணே எனக்கு தெரியாது...சூப்பர் பதில்.தலைவர் சொல்லிகொடுத்தாரா..?
அப்படியே கலைஞர் யாருண்னெ தெரியாது..கனிமொழி யாருன்ணே தெரியாதுன்னும் சொல்லலாம்...பிரச்சனையே இருக்காது..

பிரதமர்,சிதம்பரம் மீதான பாரதியஜனதாவின் கொக்கி வலுவா இருக்கு.எப்படியும் தூக்கிடுவாய்ங்க..ராசாவை தூக்கினமாதிரி...ராகுல்காந்தி தயார் ஆகிடுங்க...இந்தியன் தலையெழுத்து பார்த்தீங்க...இவர்தான் இனி நம் பிரதமர்...?நேரு குடும்ப வாரிசுன்னா சும்மாவா.காந்தி சொன்னது போல காங்கிரசை கலைக்கும் காலம் நெருங்கிவிட்டது...

மும்பை குண்டு வெடிப்பு வழக்கு நடந்துச்சே அதை இன்னார்தான் செஞ்சாங்கன்னு ஏதாவது எவிடன்ஸ் கிடைச்சுதா பார்த்தீங்களா...நான் அப்பவே அதை பத்தி எழுதினேன்..இவங்களே வெச்சா எப்படி கண்டுபிடிக்க முடியும்..?தீவிரவதிங்க நேர்மையானவங்க..நாந்தான் வெச்சேன்...இதுக்கு வெச்சேன்னு இந்நேரம் சொல்லியிருப்பான்...தீவிரவாதிங்க கூட நேர்மையானவங்க சொல்லவேண்டி இருக்கு பாருங்க..

பிரதமரும் ஊழல் வழக்குகளுக்கு உட்பட்டவர்தான் அவர் மட்டும் என்ன அப்பாடக்கரா..?அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராடும் நவீன காந்தி.அவர் நியாயம் வெல்லும்...அவரே மக்களிடம் ஓட்டெடுப்பு மக்களிடம் நடத்தி பிரதமரையும் இந்த வரையறைக்குள் கொண்டு வரலாம் என ரிசல்ட் காட்டிவிட்டார்...பிறகும் என்ன தயக்கம்..?உன்கிட்ட நேர்மையிருந்தா சரின்னு சொல்ல வேண்டியதுதானே..?மடியில கனம் இருந்தா வழியில பயம் இருக்கத்தானே செய்யும்..?அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்


 

இ-மெயில்கள் மூலம் அம்பலமான தயாநிதியின் நிர்பந்தம்

ஏர்செல் நிறுவனத்தின் முன்னாள் உரிமையாளர் சிவசங்கரன், மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணன் மற்றும் ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரகலாத் சாந்திகிராம் இடையே நடைபெற்ற இ - மெயில் பரிமாற்றங்கள் மூலம், ஸ்பெக்ட்ரம் மோசடியில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதிக்கும், மேக்சிஸ் நிறுவனத்திற்கும் இடையே ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்ற பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2006ம் ஆண்டு, சிவசங்கரன் வசமிருந்த ஏர்செல் நிறுவனம், மலேசியாவைச் சேர்ந்த அனந்த கிருஷ்ணன் தலைமையிலான மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது. இந்த விற்பனை தொடர்பாக, மேக்சிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த டி.அனந்த கிருஷ்ணனுடன், சிவசங்கரன் பேச்சு நடத்திய போது, தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள, ஏர்செல் நிறுவனத்திற்கான லைசென்ஸ்களை பெறுவது மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெறுவது போன்ற விவகாரங்களை எல்லாம் தாங்களே பார்த்துக் கொள்வதாக, சிவசங்கரனிடம் அனந்த கிருஷ்ணன் உறுதி அளித்துள்ளார்.
அத்துடன், மலேசியாவைச் சேர்ந்த தங்கள் நிறுவனம் இந்தியாவில் ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வது தொடர்பான ஒப்புதலையும், மத்திய அரசிடம் தாங்களே பெற்றுக் கொள்வதாகவும் கூறியுள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக, அனந்த கிருஷ்ணன் சார்பாக, மேக்சிஸ் நிறுவனத்தின் இயக்குனர் ரால்ப் மார்சல், 2005ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி, சிவசங்கரனுக்கு இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், "மேக்சிஸ் நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்வதற்குத் தேவையான ஒப்புதலை பெறுவது எங்கள் பொறுப்பு. அதே நேரத்தில், மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்திடம் இருந்து ஏர்செல் நிறுவனம் பெற முடியாத லைசென்ஸ்களை பெறுவது, இரு நிறுவனங்களின் கூட்டுப் பொறுப்பு' என்று கூறியுள்ளார்.
இந்த இ - மெயில் அனுப்பப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பின், ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கியின் நிர்வாக இயக்குனர் பிரகலாத் ஷாந்திகிராம், ஏர்செல் நிறுவனத்தின் அப்போதைய உரிமையாளரான சிவசங்கரனுக்கு இ - மெயில் ஒன்றை அனுப்பியுள்ளார். அதிலும், தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் உள்ள ஏர்செல் நிறுவனத்தின் லைசென்ஸ் விண்ணப்பங்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் பெறுவது மேக்சிஸ் மற்றும் ஏர்செல் நிறுவனத்தின் கூட்டுப் பொறுப்பு என்று கூறப்பட்டுள்ளது. இந்த இ - மெயிலின் நகல், ரால்ப் மார்சலுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. மேக்சிஸ் நிறுவனம் ஏர்செல் நிறுவனத்தை வாங்க, ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு வங்கிதான் நிதியுதவி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.ஒரு தொலைத் தொடர்பு நிறுவனத்தை வாங்கும் போது, நிலுவையில் உள்ள லைசென்ஸ்கள் மற்றும் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டிற்கான ஒப்புதல் பெற, தாங்களும் பொறுப்பேற்றுக் கொள்வதாக எந்த ஒரு நிறுவனமும் உத்தரவாதம் அளிக்காது.ஆனால், மேக்சிஸ் நிறுவனம் இந்த விஷயத்தில், சிவசங்கரனுக்கு உத்தரவாதம் அளித்துள்ளது. இதிலிருந்தே, தயாநிதிக்கும், மேக்சிஸ் நிறுவனத்திற்கும் ரகசிய தொடர்பு இருந்திருக்கலாம் என்பது தெளிவாகிறது என, நிபுணர்கள் கூறுகின்றனர்."நிலுவையில் உள்ள லைசென்ஸ்களை தாங்களே பெற்றுக் கொள்வதாகவும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்றுக் கொள்வதாகவும், முதலீட்டிற்கான ஒப்புதலை பெற்றுக் கொள்வதாகவும் பொறுப்பேற்று, ஒரு நிறுவனத்தை மற்றொரு நிறுவனம் வாங்கியது தொடர்பான வர்த்தக ஒப்பந்தத்தை, இதுவரை நான் பார்த்ததில்லை.
ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் வாங்கியதில் தான் இது நடந்துள்ளது' என, பிரபல சட்ட நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.மேக்சிஸ் நிறுவனம் இப்படி பொறுப்புகளை ஏற்றுக் கொண்ட பின்னரே, 2006ம் ஆண்டு மார்ச் மாதம், ஏர்செல் நிறுவனம் சிவசங்கரனிடமிருந்து 4,813 கோடி ரூபாய்க்கு, மேக்சிஸ் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கப்பட்டது. ஏர்செல் நிறுவனம், "மேக்சிஸ்'க்கு கைமாறிய ஏழு மாதத்தில், அந்த நிறுவனம் தொலைத் தொடர்பு அமைச்சகத்தில் நிலுவையில் இருந்த லைசென்ஸ்களை எல்லாம் பெற்றுள்ளது. ஏர்செல் நிறுவனத்தில் முதலீடு செய்வதற்கான ஒப்புதலை, அன்னிய முதலீட்டு அபிவிருத்தி வாரியத்திடமிருந்து இரண்டு மாதங்களுக்குள் பெற்றுள்ளது.
ஆனால், சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்த போது, விண்ணப்பித்து 20 மாதங்களுக்கும் மேலாக, அந்த நிறுவனத்திற்கு தொலைத் தொடர்பு சேவை துவக்க லைசென்ஸ்களும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடும் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.சிவசங்கரன், அனந்த கிருஷ்ணன், பிரகலாத் சாந்திகிராம் இடையே நடந்த இ - மெயில்கள் தொடர்பாக, பத்திரிகை நிறுவனம் ஒன்று தயாநிதியிடமும் மற்றவர்களிடமும் கருத்து கேட்ட போது, அவர்கள் எதையும் தெரிவிக்க மறுத்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மோசடி கதை என்ன?* சிவசங்கரன் வசம் ஏர்செல் நிறுவனம் இருந்த போது, அந்த நிறுவனத்தின் துணை நிறுவனமான டிஷ்நெட் ஒயர்லெஸ் நிறுவனம், ஏழு வட்டங்களில் தொலைத் தொடர்பு சேவையை துவக்க அனுமதி கேட்டும், ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு கேட்டும் விண்ணப்பித்த போதும், அதற்கு ஒப்புதல் தராமல் இழுத்தடித்தார் தயாநிதி* பின்னர் தான், ஏர்செல் நிறுவனம், தயாநிதியின் நண்பரான, மலேசியாவைச் சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்தின் தலைவர் அனந்த கிருஷ்ணனுக்கு விற்கப்பட்டது.* ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்கும்படி, தயாநிதி தன்னை கட்டாயப்படுத்தினார் என, சிவசங்கரன் சி.பி.ஐ.,யிடம் வாக்குமூலம் அளித்தார்.* மேக்சிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரோ, தயாநிதி குடும்பத்தின் சன் டைரக்ட் "டிவி'யின், 20 சதவீத பங்குகளை மிக அதிக விலையான 675 கோடி ரூபாய்க்கு வாங்க, நான்கு மாதங்களில் மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் அளிக்கப்பட்டது.* மேக்சிஸ் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் ஏர்செல் நிறுவனம் வந்த பின்னரே, ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற நடைமுறையை தயாநிதி கொண்டு வந்தார்.* ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரனிடமிருந்து மேக்சிஸ் வாங்கியதும், அதற்கு நிறுவனத்திற்குத் தேவையான லைசென்ஸ்களை எல்லாம் தயாநிதி வழங்கினார். தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைகள் இல்லாமலேயே இவற்றை வழங்கினார்.* சிவசங்கரனிடமிருந்து ஏர்செல் நிறுவனம் கைமாறியதும், அந்த நிறுவனத்திற்கு லைசென்ஸ் வழங்காமல் இருப்பதற்காக கொண்டு வந்த விதிமுறைகளை எல்லாம் தயாநிதி ரத்து செய்தார்.* ஏர்செல் நிறுவனத்தை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்க, தயாநிதி நிர்பந்தம் செய்தார் என, கடந்த ஜூலை 6ம் தேதி, சி.பி.ஐ., குற்றம் சாட்டியது.* ஏர்செல் நிறுவனம் மேக்சிஸ் வசம் வந்த பின், அந்த நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யவும், லைசென்ஸ்கள் வழங்கவும், சட்ட விரோதமாக தயாநிதி சலுகை காட்டினார் என்றும், சி.பி.ஐ., குற்றம் சுமத்தியது. தங்கள் குடும்ப நிறுவன சன் டைரக்ட் "டிவி'யில் மேக்சிஸ் நிறுவனம் கணிசமான அளவில் முதலீடு செய்யவே இதைச் செய்தார் என்றும் கூறியது.

கண்ணீரில் மூழ்கி கதறியழும் க(கொ)லைஞர்!

ன் வினையால் தத்தளிக்கும் க(கொ)லைஞர்!

தன் மகளின் நிலையெண்ணி வாடுகிறார் கலைஞர்
தமிழர்களின் கண்ணீரால் நொந்து போனார் கவிஞர்
இன்னலது தன் உடலை வாட்டவில்லை என்றாலும்;
ஈழ மக்கள்- மீனவர்கள் கனவில்; தொல்லைதனை
அண்ணலுக்குத் தந்து விட்டுப் போகின்றார்;
தன் மகளும் கைதாகி தத்தளித்து வாடுகின்றார்
என்னை இங்கு விட்டு விட்டுச் சென்று விட்ட கனியே
எட்டிக் கொஞ்சம் கூப்பிட்டால் வந்திடுவேன் தனியே!!
ஜாக்கிரதை இல்லேன்னா பணம் காலி!

உத்தமியின் பெயரோ 
உடுப்பிமலை ஊர்மிளா
அத்தையோடு சேர்ந்து 
அவுட்டிங் போவாளாம்
உத்தியோகம் ஏதுமில்லை; 
உடலிழைத்து வருவாளாம்
மொத்தமாக ஆண்கள் பாக்கட்டினை
மோகத்தினால் காலியாக்கி விடுவாளாம்! 

சீரியலால் சிக்கல் பட்ட சிங்காரி!

வாரியே சுருட்டி தலை 
வாரினாள் சுகந்தா
வாசலில் உட்கார்ந்து
வாஞ்சையோடு பார்த்தாள் தென்றல்
காரிருள் படர, கைக்குழந்தையோ தொலைய
கண்களில் நீர் குளமாய் வழிய
கூப்பாடு போட்டழுதாள் சுகந்தா
சாப்பாட்டு நேரத்தின் பின்னர்- நாதஸ்வரம்
சத்தமாய் ஆரம்பிக்கும் என்பதனால்
பெத்திட்டாப் போச்சு ஒரு குழந்தை- தொலைந்து
போனது போகட்டும் என தேற்றினாள் 
அவள் சீரியல் மடந்தை- சீரியஸ் மங்கை!!

காற்றில் பறக்கும் ஜெயலலிதாவின் வாக்குறுதிகள்!

அம்மா ஜெயலிலிதா, நீ வரும் போது சொன்ன தென்னம்மா
சும்மா இருந்த மக்களுக்கு மிக்ஸி தந்து சொக்கவைத்த தே(ன்)னம்மா
இன்றோ நீ பதவியேற்ற பின் காலம் வேகமாய் ஓடுதம்மா
நன்றாய் ஏழைகள் வாழ்வும் உன் அருளால் ஒளிருதம்மா
அன்றில் நீ தான், அடுத்த தேர்தல் வருகையிலும்-எம்
முன்றல் வந்து கையெடுத்து வணங்கு- மறக்க மாட்டோம்
மீண்டும் இலவசத்தை தந்து நீயும் ஜெயித்து விடு
வேண்டும் வரம் தருவேன் என சொல்லி ஏமாற்றி விடு! 

பிற் சேர்க்கை: இக் கவிதைகளைத் தமிழகத்தில் வாழ்ந்து எழுதுவது போன்ற, உணர்வோடு எழுதியிருக்கிறேன். 

விஜயகாந்தை காணவில்லை..குஷ்பூ கைது

விஜயகாந்தை காணவில்லை....குஷ்பூ முதன்முறையாக...






2011 தேர்தல் முன்புவரை விஜயகாந்து விஜயகாந்துன்னு ஒரு ரோசக்கார நடிகரும் சுயமரியாதை உடைய அரசியல்கட்சி தலைவருமாய் ஒருத்தர் இருந்தார்.. அந்த மனுசனை 2011 தேர்தலுக்கு பின் காணவில்லை...எதிர்கட்சி தலைவர் அளவுக்கு ஜெயலலிதா தன்னை உயர்த்துவார் என அவர் கனவிலும் நினைத்திருப்பாரா என்ன..? அதனால் விக்கித்து போய் அந்த பிரமிப்பிலேயே மனுசர் படுத்துட்டார் போல..

எத்தனையோ கூட்டத்தில் எத்தனையோ முறை பேசியும் ஒரு சீட்தான் கிடைத்தது.,ஜெயலலிதாவுடன் கூட்டணி அமைத்ததும் 29 சீட்டுக்கள் கிடைதது என்றால் ஜெயாவின் சக்தி இப்போது அவருக்கு புரிந்திருக்கும்.

அதே சமயம் கருணாநிதி ஆட்சியில் சீறி திரியும் சிங்கமாய் அவர் கர்ஜித்தது என் நினைவுக்கு வருகிறது..இன்று இந்த ஆட்சியில் எதிர்கட்சி தலைவராக இருந்தும் ஜெயா வை எதிர்த்து பேசாமல் இருக்கும் மர்மம் என்ன..?கருணாநிதி ஆட்சியில் எப்படி வேணாலும் கூவலாம்..அது தடியெடுத்தவன் தண்டல்காரன் கட்சி .ஆனா இங்க பப்பு வேகாது..ராமதாசே தி.மு.க வை விட்டு அரண்டு போய் ஓடி வந்துவிட்டார்.
ராஜதந்திரத்தில் ஜெயலலிதா வை மிஞ்ச ஆள் இல்லை.ஒருவரை கட்டம் கட்டி அடிப்பதில் கைதேர்ந்தவர்.கூட்டணியில் எவ்வளவு பலமாக இருந்தாலும் கோபம் வந்துவிட்டால் அவர் நடவடிக்கை உக்கிரமாக இருக்கும்.

இதுதான் விஜயகாந்தின் பயத்துக்கு காரணம்....தன் கட்சி வளர வேண்டுமானால் ,ஜெயா ஆட்சியில் மவுனமாக இருப்பதே ஒரே வழி என்பது அவர் தெளிவாக புரிந்திருக்கிறார்.அது மட்டுமில்லாமல் இன்னும் அஞ்சு வருசத்துக்கு ஜெயாவை ஒண்ணும் செய்யமுடியாது என்ற காரணமும் இருக்கலாம்....கருணாநிதி கட்சி மூழ்கும் கப்பல்.இனி நிரந்தர எதிர்கட்சி தலைவர் தாம் தான் என்பதில் கேப்டன் தெளிவாக இருக்கிறார்.
----------------------------------------

கேஸ் சிலிண்டர் விலையையும் இனி எண்ணை நிறுவனங்களே கவனித்துக்கொள்ளும்...என திருவாய் மலர்ந்திருக்கிறார்...மத்திய அமைச்சர் என்ன கொடுமை இது...பெட்ரோல் விலையை மாதம் ஒரு விலை உயர்த்தும் எண்ணை நிறுவனங்கள் கையில் உயிர்நாடியான சிலிண்டர் விலையை உயர்த்தும் உரிமத்தை கொடுத்தால் என்னாகும் 1000 ரூபாய் சொன்னாலும் வாங்க வேண்டி வருமே..இது ஒண்ணு போகும்..காங்கிரஸ் இந்தியா முழுவதும் உள்ள தாய்குலங்களின் வாக்கு வங்கியை பாரதிய ஜனதா வுக்கு மாற்றுவதற்கு....இனி எக்காலத்திலும் தி.மு.க போலவே காங்கிரசும் ஆட்சியை பிடிக்க முடியாது..
---------------------------------------------
ராசாத்தியம்மாளின் கணக்குபிள்ளையை கைது செய்துவிட்டார்கள்...இனி ராசாத்தியம்மாவும் கலைஞர் கூடவேதான் இருப்பார்..அவ்வளவு சோதனையான நேரம் அவருக்கு..சும்மாவா நிலமோசடி வழக்கு என்ன சாதரணமா...அதிலும் அந்தம்மா...ஹிஹி....கலைஞர் வீட்டை சுற்றி சுற்றி வரும் நிலமோசடி வழக்குகள்..எந்த நேரமும் வீட்டுக்குள் நுழையலாம்....
-----------------------------------------
தி.மு.க வின் சத்தில்லாத ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு கைது ஆகியிருக்கிறார் முன்னாள் குலுக்கல் நடிகை குஷ்பூ....அரசியல் பாலபாடம் கற்க கருணாநிதியிடம் வந்த அவர் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக கைது ஆகியிருக்கிறார் என நினைக்கிறேன்..ஆனா அம்மணி நல்ல ராசியானவர் தான் இவர் அந்த கட்சியில் சேர்ந்தபிந்தான் அந்த கட்சி உருப்படாம போச்சி....இப்ப கைது ஆகியிருக்கிறார்..இனி முக்கிய தலைவர்களும் கைது ஆவாங்களோ என்னவோ....



 

மு.க.ஸ்டாலினும் -நானும் ரவுடிதான் வடிவேலுவும்


சமச்சீர் கல்வியை வைத்து அராஜகம் செய்து பள்ளிவேன்கள்,அரசு பஸ்களில் வந்த மாணவர்களையெல்லாம் திருப்பி வீட்டுக்கு அனுப்பிய திருவாரூர் மாவட்ட தி.மு.க செயலாளர் பூண்டி கலைவாணனால் விஜய் என்னும் மாணவன் அநியாயமாக உயிரிழந்தான்.பல சிறுவர்கள் படுகாயம் அடைந்தார்கள்.பள்ளி செல்லும் மாணவர்களை ஏன் மிரட்டி வீட்டுக்கு அனுப்ப வேண்டும்...?ஆட்சி இழந்தும் கொட்டம் அடங்காத தி.மு.க செயலாளரின் கொ... எடுக்க போலீஸ் சென்றது.ஸ்டாலினுடன் இருந்தால் அசுர பலம் என தப்பாக கணக்கிட்டு அவருடன் காரில் பதுங்கியிருந்தவரை கொத்தாக அள்ளியது போலீஸ்.உடனே ஸ்டாலின் ,என் கூட இருக்கும்போதே அரெஸ்ட் பண்ணுவியா நீ என்றிருக்கிறார்.



உடனே போலீஸ்,சார் நீங்க பாட்டுக்கு போங்க...ஆளை அனுப்புங்க என சொல்லிவிட்டு,போலீஸ் வேனில் கலைச்செல்வனை வேனில் ஏற்றிருக்கின்றனர்.உடனே ஸ்டாலின் சாலையில் உட்கார்ந்து வேனை போகவிடாமல் ரகளை செய்ய,வேன் போகணுமே என்பதற்காக தம்பி ஓரமா உட்கார்ந்து போராட்டம் பண்ணுப்பா என்றிருக்கின்றனர்.முடியாதுஎன ஸ்டாலின் அடம் செய்து குடுகுடுவென வேனுக்குள் ஓடிவந்து உட்கார்ந்து கொண்டு என்னையும் அரெஸ்ட் பண்ணு என்றிருக்கிறார்.சார் உங்களுக்கு தனியா வழக்கு பின்னாடி வரும் இப்ப எங்களை விடுங்க என்றிருக்கின்றனர்.முடியாது நானும் ஆர்ப்பாட்டம் பண்ணினேன் என்னையும் அரெஸ்ட் பண்ணுங்க என பிடிவாதம் செய்ய,பிறகு போலீஸாருக்கு வேறு வழி இல்லாமல் சரி...அந்த முட்டு சந்து வரைக்கும்தான் கூட்டிட்டு போவோம் அப்புறம் இறங்கிக்கணும் சரியா..என்றனர் ..அவரும் சரியெங்க..உடனே கலைஞர் டிவிக்கும் சன் டிவிக்கும் ,கலைஞர் தாத்தாவுக்கும் செய்தியை பாஸ் செய்து தமிழகம் முழுவதும் கலாட்டா செய்ய சொல்லிவிட்டனர்...

ஸ்டாலினை பளிச் செய்ய கருணாநிதி எவ்வளவோ செய்திருக்கிறார்.எல்லாவற்றிலும் அவர் ஃபெயில் தான் ஆகியிருக்கிறார்.போலீஸ் தன்னை சனி ஞாயிறு ஜெயிலில் வைத்துவிட்டால் தியாகி ஆகிவிடலாம் என கணக்கு போட.....புள்ள பூச்சியெல்லாம் எதுக்குப்பா அரெஸ்ட் பண்றிங்க...அவர் மேல இனி ஒண்ணுமில்லாத பொட்டி கேஸ் எல்லாம் போடக்கூடாது என ஜெயா கத்தி தீர்க்க,ஸ்டாலின் தன் தந்தை கருணாநிதியின் இரண்டு மணி நேர உண்ணாவிரதம் போல இரண்டு மணி நேர சிறைவாசம் சமச்சீருக்காக அனுபவித்தார் ...இனி அவர் சம்ச்சீர் தியாகி என முரசொலி கொண்டாடும்..

வடிவேலு- அண்ணே வணக்கம்ணே...என்னையே தூக்கி சாப்பிட்டுட்டீங்களே...


 

கருணாநிதி மீது வழக்கு ஏன்..? கலைஞர் குடும்பம் கலக்கம்

வில்லிவாக்கம் தர்மாதோப்பு அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடு செய்ததாக புகார் பதிவு இன்று மாலை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அறக்கட்டளையைச் சேர்ந்த ரெங்கா ரெட்டி என்பவர் காவல்துறை ஆணையரிடம் அளித்துள்ள புகாரில், அறக்கட்டளைக்குச் சொந்தமான 7 ஏக்கர் நிலத்தை பரிதி இளம்வழுதி உள்ளிட்டவர்கள் முறைகேடு செய்து மோசடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.




அவர் இந்தப் புகார் மனுவில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பேரன் உதயநிதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பெயரையும் சேர்த்துக் குறிப்பிட்டுள்
ளார்....



கருணாநிதி தன் மீது வழக்கு வராது என நினைத்திருப்பார்..ஸ்டாலின் மீது புது சட்டமன்ற கட்டிடம் கட்டிய வகையில் நடந்த முறைகேடு சம்பந்த வழக்கு வரும் சூழ்நிலையில்..ஸ்டாலின் மகன் மீதும் வழக்கு,கைது பாயப்போகிறது...பொய் வழக்கு போடுவதாக நாடகமாடி அதற்கு ஒரு போராட்டமும் நடத்தி மக்களுக்கு இடையூறு செய்யும் கருணாநிதி க்ரூப்புக்கு இது தேவைதான்...பொய் வழக்கு போடுவதாக சொல்லி மிரட்டி வழக்கில்லாமல் செய்துவிட வேண்டும் என்பது கலைஞர் ஆசை..அத்ற்கு பின்னால் எத்தனை அப்பாவி மக்களின் சோக கதை இருக்கிறது என்பது இப்ப தானே கொஞ்சம் கொஞ்சமாக தெரிய வருது...

இன்னும் இருக்கு......சென்ற ஆட்சியில் தமிழகத்தையே மொத்தமக தங்கள் பெயருக்கு மாற்றிக்கொள்ளலாமா என்ற பாணியில்தானே அழகிரி,ஸ்டாலின்,துரைமுருகன்,விரபாண்டி ஆறுமுகம்,பொங்கலூர் பழனிசாமி,ராஜா,கனிமொழி,ராஜாத்தி என ஒவ்வொருவரும் மெகா முதலாளிகளாக உலா வந்தார்கள்.இவர்கள் ஒவ்வொருவர் பினால் பெரிய கதைகளும் பெரிய க்ரூப்பும் இருக்கிறது...பல ஆயிரம் ஏக்கர்கள்,பெரிய பெரிய கம்பெனிகள் என வளைத்து போட்டது எல்லாம் ஒவ்வொன்றாக வெளியே வரும் காலம் நெருங்கிவிட்டது...



தமிழக முதல்வராக காளிதேவியே வந்தது போல,சூரனை வதம் செய்வது போல,அநிதியை தட்டி கேட்க நடவடிக்கை எடுக்குற அந்தம்மாவை குறை சொல்லலாமா..?;-))
பொய் வழக்காம்.அப்படின்னா கோர்ட்ல சந்திக்க வேண்டியதுதானே எதுக்கு ரோட்ல உட்கார்ந்து பஸ்ஸை மறிக்கிற..?
நேரு மட்டும் 3000 பேரை கூட்டியாந்து போராடீருக்கார்..அவ்ளோ பயம்..அடுத்தது அண்ணந்தானே...அதான் இப்படி போராடினா அந்தம்மா விட்ரும்னு நப்பாசை. 
சொத்து குவிப்பு வழக்குல எப்படியும் அந்தம்மா உள்ள போயிரும்னு உடன்பிறப்பெல்லாம் பகல் கனவு காணுதுங்க..அந்தம்மா எல்லோரையும் தாத்தா உட்பட கட்டம் கட்டிட்டுதான் போகும் போல..ஒரு வேளை அந்தம்மா சொத்துகுவிப்பு வழக்குல...உள்ளே போற மாதிரி இருந்தா சும்மா இவங்களை விட்டுட்டா போகும்...
-------------------------------
?2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தில் பிரமருக்கு அனைத்தும் தெரியும், இந்த விவகாரம் தொடர்பாக பார்லி.,யில் விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும், இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கும்,அப்போதைய நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரமும் பார்லிமென்டில் விளக்கம் அளிக்க வேண்டும் என பா.ஜ., கோரியுள்ளது.


செம ஆப்புதான்...சிதம்பரம் இதுக்குதான் குறுக்குவழியில ஜெயிச்சுட்டு ஓடுனாரா....மொத்தத்துல தமிழக எம்.பி.க்கள் எல்லாம் திருட்டு பயலுகன்னு வடநாட்டுக்காரன் காறி துப்புற அளவுக்கு வெச்சிட்டீங்க..நல்லாருங்க ராசா...


 

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...