Friday, September 2, 2011

கனிமொழி, கருணாநிதி,கேடி பிரதர்ஸ் அப்புறம் ஒரு திருக்குறள்.....!


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் மூலம் பெறப்பட்ட ரூ214 கோடி பணத்தைத் தான் கலைஞர் டிவி வாங்கியது என்றால், அந்தப் பணம் தற்போது எங்கே?அதை சிபிஐ கைப்பற்றியுள்ளதா என்று உச்சநீதிமன்றம் சிபிஐயிடம் கேட்டுள்ளது. சினியுக் நிறுவனம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியை கடனாக வழங்கியதாக கூறப்படுகிறது. ஆனால் இது கடன் தொகை அல்ல, மாறாக ஸ்பெக்ட்ரம் ஊழலில் பரிமாறப்பட்ட லஞ்சப் பணம் என்பது சிபிஐயின் வாதம். இந்தப் புகாரின் அடிப்படையில்தான் கலைஞர் டிவியின் பங்கு தாரர்களான கனிமொழியும், சரத்குமார் ரெட்டியும் கைது செய்யப் பட்டுள்ளனர்.
இருவரும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட மனு மீதான விசாரணை இன்று நடந்தது. அப்போது சிபிஐக்கு நீதிபதிகள் பல்வேறு கேள்விகளையும் விளக்கங்களையும் கேட்டு உத்தரவு பிறப்பித்தனர். கனிமொழி, ராசாவுடன் இணைந்து சதி செய்து சினியுக் நிறுவனம் மூலமாக பெற்றதாக கூறப்படும் லஞ்சப் பணம் ரூ. 214 கோடி எங்கே?. அந்தப் பணத்தை சிபிஐ பறிமுதல் செய்துள்ளதா என்பதைத் தெரிவிக்க வேண்டும்.

கனிமொழி மீதான வழக்கு விவரங்களை சிபிஐ தாக்கல் செய்ய வேண்டும். கனிமொழியிடம் விசாரணை முடிந்து விட்டதா என்பதையும் தெரிவிக்க வேண்டும்.தொலைத் தொடர்புத்துறையில் நடந்ததாக கூறப் படும் இந்த மிகப் பெரிய ஊழலால், அரசுக்கு ஏற்பட்டுள்ள நஷ்ட அளவை சரியாக குறிப்பிட வேண்டும்.இப்படி மூன்று கேள்விகளுக்கு சிபிஐ தெளிவான பதிலை அளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர்.
அப்போது கனிமொழியின் வக்கீல் குறுக்கிட்டு ஏதோ கூறினார். இதையடுத்து அவருக்குப் பதிலளித்த நீதிபதிகள், மனித உரிமை மீறல்களிலேயே மிகவும் மோசமானது ஊழல்தான் என்று சொன்னவுடன்  கனிமொழியின் வழக்கறிஞர் அமைதியானார்.பின்னர் நீதிபதிகள் 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கின், விசாரணை நிலவர அறிக்கையை ஜூன் 20ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

இருபதாம் தேதியாவது ஜாமீன் கிடைத்துவிடுமா என்று கேட்கிறீர்களா? வழக்கு விவரங்களை, வடஇந்திய ஊடகங்கள் தெளிவாகவும் விரிவாகவும் செய்தி வெளியிடுவதைப்போல, இங்கே தமிழ் ஊடகங்கள் வெளியிடுவது இல்லை. தமிழ் ஊடகங்களை மட்டுமே பார்த்தால், என்னவோ உச்சநீதி மன்றத்தில் இன்றைக்கு விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உடனேயே முதல் வேலையாக ஜாமீன் வழங்குவதுதான் உச்சநீதிமன்றம் செய்யும் வேலை என்று பரபரப்புத்  தலைப்பாக இருக்கும். அதே மாதிரி, மாறனுடைய பதவி பறிப்பு இன்றைக்கே இப்போதே நடந்துவிடும் என்று தான் பரபரப்புச் செய்திகளாகப் பார்த்திருப்பீர்கள்! சோனியாவும் மன்மோகன் சிங்கும் இந்த இரண்டு நாட்களுக்குள், இதுவிஷயமாக ஒரு முடிவுக்கு வந்துவிடுவார்கள் என்று செய்திகள் வந்தன.சிபிஐ மூன்றாவது குற்றப்பத்திரிகையை இந்த மாத இறுதி வாக்கில் தாக்கல் செய்ய இருக்கிறது. அந்தத் தருணத்தில் வாணவேடிக்கைகள் இருக்கலாம்!.

திமுகவுக்கு அடிவயிற்றைக் கலக்குகிறதாகவே ஒவ்வொரு அரசியல் நிகழ்வும் நடந்துகொண்டிருக்கின்றன. ஜெயலலிதா இன்று மாலை டில்லிக்கு வந்திருக்கிறார். பிஜேபியின் ரவிசங்கர் பிரசாத், வலது கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் டி.ராஜா, டில்லி முதல்வரும், காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான  ஷீலா தீட்சித் என்று வரிசையாகப் பல கட்சிப் பிரமுகர்களும் "மரியாதை நிமித்தமாக" ஜெயலலிதாவை சந்தித்திருக்கிறார்கள். 

நாளை டம்மிப் பீஸ் மன்மோகன் சிங்கை ஜெயலலிதா சந்திக்க இருப்பதைப் பற்றி எவருமே கவலைப்படவில்லை. தற்சமயம் சுவிட்சர்லாந்தில் இருப்பதாகச் சொல்லப்படும் சோனியா-ஜெயலலிதா சந்திப்பு நடக்குமா என்பதுதான் முக்கியமான கேள்வியாக ஊடகங்கள் தற்சமயம் விவாதித்துக் கொண்டிருக்கின்றன. சோனியா நேரடியாக சந்திக்காவிட்டாலும் தன்னுடைய சார்பில் யாரையேனும் அனுப்பப் போகிறாரா, அல்லது தமிழக முதலமைச்சர் திமுகவுக்கு பீதியை நிறையவே கிளப்பிவிட்ட திருப்தியில் தமிழகம் திரும்பப்போகிறாரா என்பதை நாளை வரை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

சோனியா எத்தனை முறை வெளிநாடுகளுக்குப் போனார், எதற்காகப் போனார், என்ன சாதித்தார், எவ்வளவு செலவாயிற்று என்ற விவரங்களைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஹிசாரை சேர்ந்த ரமேஷ் வர்மா பிரதமர் அலுவலகத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். பதில் சொல்லாமல், அங்கே இங்கே என்று சென்ற வருடம் பெப்ருவரியில் இருந்து அலைக்கழித்து தகவலைப் பிரதமர் அலுவலகம் தரவில்லை.

தலைமைத் தகவல் ஆணையர், உடனடியாக இந்தத்  தகவலை, மனுதாரருக்குத் தெரிவிக்க வேண்டும் என்று ஆணை பிறப்பித்திருக்கிறார். தேசீய ஆலோசனைக் கவுன்சில் தலைவர் என்ற முறையில், சோனியா கடந்த பத்தாண்டுகளில் மேற்கொண்ட வெளி நாட்டுப் பயணங்களால் அரசுக்கு எந்த செலவுமில்லை என்று பொத்தாம் பொதுவாக சொல்லப்பட்டது, இப்போது சந்திக்கு வந்திருக்கிறது!
அது ஒருபக்கம் இருந்தாலும்,என்ன நடக்குமோ எங்கே உதைக்குமோ என்ற கவலை திமுகவுக்கு நிறையவே இருக்கிறது., ஜெயலலிதாவின் டில்லி விஜயத்தில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இல்லை, திமுக காங்கிரஸ் உறவு தொடர்கிறது என்று மனீஷ் திவாரியே சொல்லி விட்டார் என்று கலைஞர் தொலைகாட்சி தன்னைத் தானே சமாதானப் படுத்திக் கொள்ளப் படாதபாடுபட்டுக் கொண்டிருப்பதைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது!

அய்யன் வள்ளுவன் சொன்ன குரல் ஒன்றை குறளோவியம் எழுதியவருக்கு, ஒரு செய்திக்கட்டுரையில் இரா. சோமசுந்தரம் என்பவர் நினைவு படுத்தியிருக்கிறார். தினமணி நாளிதழில் வெளியாகி இருக்கும் இந்த செய்திக் கட்டுரை, இங்கே, தினமணி நாளிதழுக்கு நன்றியுடன்!

  
உள்வேர்ப்பர் ஒள்ளியவர்…..!

இரா.சோமசுந்தரம்

தினமணி நாளிதழில் எழுதிய செய்திக் கட்டுரை 


மார்ச் 5-ம் தேதி திமுகவின் உயர்நி லைக் குழுக் கூட்டத்தில், "அமைச்சரவையிலிருந்து விலகிக் கொள்கிறோம், வெளியிலிருந்து ஆதரவு தருவோம்' என்று தீர்மானிக்கப்பட்டது. அமைச்சர்கள் தங்கள் ராஜிநாமா கடிதங்களை வீட்டிலிருந்தபடி தொலைநகலில் அனுப்பி விட்டு, அடுத்த வேலையைப் பார்க்காமல், கடிதத்துடன் பிரதமரைச் சந்திக்கச் சென்றனர்.

அன்றைய தினம் தொகுதிப் பங்கீடு பிரச்னை காரணமாகக் கூறப் பட்டது. ஆனாலும், கனிமொழி மீதான வழக்கை நீர்த்துப்போகச் செய்ய மத்திய அரசு உதவவில்லை என்ற கோபம் என்று பத்திரிகைகள் எழுதின.

இப்போது முன்பைக் காட்டிலும் பிரச்னை படுமோசமாக ஆகிவிட்டது. கனிமொழிக்கு உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் முழு விவரமும் தமிழ் நாளிதழ்களில் வெளியாகவில்லை. ஆனால், ஆங்கில இதழ்களில், குறிப்பாக வடஇந்திய இதழ்களில் வரிவரியாக வெளியிட்டு இருக்கிறார்கள்.

கனிமொழிக்கும் சரத்குமாருக்கும் பிணை மறுக்கப்படுவதன் காரணம் குறித்து நீதிமன்றம் பட்டியலிட்டிருப்பதைப் பார்த்தால், உச்ச நீதி மன்றத்திலும் கூட பிணையில் செல்ல அனுமதி கிடைக்குமா என்று நினைத்தாலே கண்ணைக் கட்டுகிறது.

இன்றைய சூழலில், காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகி வரும் அனைத்துக் காரணிகளும் கைவசம் இருந்தாலும்கூட, திமுக தலைமை அதைச் செய்யவில்லை. கூட்டணி குறித்து பொதுக்குழு விவாதிக்கும் என்கிறது.

திமுக தலைமையின் நிதானத்துக்குக் காரணம் இருக்கிறது. அது இரு கோடுகள் தத்துவம்தான். ஒரு கோட்டைச் சிறியதாக்க வேண்டுமானால் அதன் பக்கத்தில் இன்னொரு பெரிய கோடு போட வேண்டும்.

அதாவது மாறன் விவகாரம் மிகப் பெரிதாக வெடிக்கும்போது, கனி மொழி விவகாரம் ஒன்றுமில்லாத விவகாரமாக மாறிவிடும்! 

அப்படியாக மாறும் வரை அல்லது வடஇந்திய ஊடகங்கள் அப்படியாக மாற்றும் வரை காங்கிரஸ் கூட்டணியில் தொடர்வது என்பதுதான் திமுக தலைமையின் எண்ணமாக இருக்க முடியும்!?

வரும் ஜூன் 30-ம் தேதி 2ஜி அலைக்கற்றை ஊழலில் மூன்றாவது குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்யவுள்ளது. அப்போது தயாநிதி மாறனின் பெயர் நிச்சயமாக இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏர்செல் நிறுவன முன்னாள் இயக்குநர் சிவசங்கரன் அதற்கான அனைத்து உதவிகளையும் செய்திருக்கிறார்.

ஏற்கெனவே, தயாநிதி மாறன் மீது ஏகக் கோபத்தில் இருந்த வட இந்திய ஊடகங்கள் இப்போது கூட்டு சேர்ந்து கொண்டு, இந்தத் தீ அணைந்து போகாமல் ஊதிக்கொண்டிருக்கின்றன. ஆகவே, பிரதமர் நினைத்தாலும் சரி, சோனியா காந்தி முயற்சி செய்தாலும் சரி, இந்த விவகாரம் தலைக்குமேல் வெள்ளம்தான்!

ஆகவே, ஜூன் 30-ம் தேதி மாறன் விவகாரத்தில் சிபிஐ என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதைக் காண்பதற்கான கால அவகாசம் கருதியே இப்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்று நம்ப இடமிருக்கிறது.

மாறன் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவதை திமுக தலைமை விரும்புமா என்ற கேள்விக்கு அவசியமே இல்லை. கனிமொழியைக் காப்பாற்றினால், கட்சியைக் காப்பாற்றியதுபோல என்று கூறிய அதே திமுக தலைமை, தற்போது தன் கட்சியின் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுகளை சட்டரீதியாக திமுக எதிர்கொள்ளும் என்று சொல்லாமல், "இல்லை. அவரது வழக்கை அவரே பார்த்துக் கொள்வதாகச் சொல்லிவிட்டார்” என்கிற பதிலின் மூலம், கழன்று கொண்டுவிட்டது. அதாவது, சுருக்கமாகச் சொன்னால், மாறனைக் காப்பாற்ற திமுக முயற்சி செய்யாது என்பதுதான் அதன் பொருள்!

இந்த அளவுக்கு என்ன கோபம்? மாறன் குடும்பத்துடன் உறவில் விரிசல் ஏற்பட்டபோது, கலைஞர் டி.வி. தொடங்கப்பட்டது. மாறன் வீட்டில் ரகசிய தொலைபேசி நிலையம் குறித்து சிபிஐ விசாரணைக்கு அன்றைய அமைச்சர் ராசாதான் உத்தரவிட்டார். சிபிஐ அறிக்கையும் தயாரானது.

இந்த நேரத்தில் மீண்டும் இரு குடும்பங்களும் இணைந்தன. மீண்டும் தயாநிதி மாறனுக்கு அமைச்சர் பதவியும் கட்சியில் முக்கியத்துவமும் அளிக்கப்பட்டது. அன்புகாட்டிய பிறகும் அவர்கள் உதவி செய்யாமல் ஒதுங்கி நின்றே வேடிக்கை பார்த்தார்கள் என்கிற கோபம் திமுக தலைமைக்கு இருக்குமெனில் அது நியாயமானதும்கூட!

இரண்டு குழந்தைகள் அனுபவம் இல்லாமல் ஏட்டிக்குப் போட்டியாகச் சமையல் செய்திருந்தால், அனுபவமுள்ள, சமையல்கலையில் மெச்சும் ஆற்றல் கொண்ட பெரியவர்கள் என்ன செய்வார்கள்? "இதில் உப்பு இல்லை,கொஞ்சம் உப்பைப் போடு. இதில் நிறைய உப்பைப் போட்டு விட்டாய். யார் வேண்டுமானாலும் உடனே வாய்விட்டுச் சொல்லி விடுவார்கள். இப்படியா சமைப்பது? இதில் காரத்தைக் கூட்டி, கொஞ்சம் காய்கறிகளை வெட்டிப்போட்டு கொதிக்க வை. உப்பு மறைந்துவிடும்.... " இப்படியாகச் சமையலைச் சரி செய்து குழந்தைகளுக்கு நல்ல பெயர் வாங்கித் தர வேண்டாமா?'

பழைய கோபத்தை மனதில் வைத்துக் கொண்டு, சமைக்கத் தெரியாமல் சமைத்திருக்கிறார்கள் என்பதால் அசிங்கப்படட்டும் என்று வேடிக்கை பார்த்தால், அந்தப் பெரியவர்கள் மீது குழந்தையின் பெற்றோருக்கு கோபம் வருமா, வராதா?

“ஆமாம்பா. என் குழந்தைகள் ஏதோ தத்துபித்து என்று சமைத்தன. அது ஒரு பெரிய விஷயமில்லை. உன் சமையல் திறமையை ஊரே பார்க்கட்டும்” என்பதுதான் அந்தக் கோபம்!
.
 அய்யன் வள்ளுவர் சொல்கிறார்.

 பொள்ளென ஆங்கே புறம் வேரார் காலம் பார்த்து
 உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்

என்று  அறிவுடையவர் பகைவர் தீங்கு செய்த அப்போதே தம் சினத்தை வெளிப்படுத்தார். வெல்வதற்குத் தகுந்த காலம் பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வர்.

இப்போது திமுகவில் நடப்பது அதுதான். "திமுக ஒரு குடும்பம்' என்றொரு காலம் இருந்தது. அந்தக் குடும்பம் திராவிட முன்னேற்றக் கழகக் குடும்பம்.

இன்றும் திமுக ஒரு குடும்பமாகத்தான் இருக்கிறது. ஆனால், இது திருக்குவளை முத்துவேலர் கருணாநிதியின் குடும்பம்!.

அந்தத் திமுகவில் பிரச்னை வந்தால் அது கட்சிப் பிரச்னை. இந்தத் திமுகவில் வந்திருப்பது குடும்பப் பிரச்னை. குடும்பப் பிரச்னையைக் கட்சிப் பிரச்னையாக்கக் கருணாநிதி முயற்சிக்கிறார். விளைவு?

“குடும்பமே” பல "கட்சிகளாகப் பிளந்து" பிரச்னையாகி விட்டிருக்கிறது. பாவம் திமுக!!

உட்டாலக்கடி கிரி கிரி! சவால் விடும் அழகிரி!

ஹிட்லர் என்று சொல்லிக் கொள்வது கூடப் பெருமையாக....! அழகிரி ஆதரவாளர்கள் போஸ்டர்  
தேர்தலில் தோற்றபிறகு மே மாதம் முதல் அடக்கி வாசித்துக் கொண்டிருந்த மதுரையின் முன்னாள் சுல்தான், பீவி இருவருமே எதிர் சவால் விடுகிற வாரமாக இந்த வாரம்ஆனது போல! 
மதுரையைக்  காலி செய்யும் அ'னா, மதுரை சுத்தமாகிறது!, அ'னாவின் அடிப்பொடிகள் வரிசையாகக் கைது, பொட்டும், ஒச்சும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது என்றெல்லாம் செய்திகள் வந்து கொண்டிருந்தன. ஜூவியில் காந்தி அழகிரி வீராவேசப் பேட்டி, இன்றைக்கு அமைச்சருக்கு எச்சரிக்கை என்று மறுபடி பரபரப்புச் செய்திகளில் அ'னா அடிபட ஆரம்பித்திருக்கிறார்!  
சிக்கல்களில் இருந்துவிடுபடப் பேரம் பேசிக் கொண்டிருப்பதாகத் தகவல்கள் கசிந்து கொண்டிருக்கும் நேரத்தில் இப்படி ஒரு வீராவேசம்!! செய்தி இங்கே! கிரானை‌ட் குவா‌ரிக‌ளி‌ல் கொ‌ள்ளையடி‌த்ததாக கூற‌ப்ப‌ட்ட புகாரு‌க்கான ஆதார‌த்‌தை அமை‌ச்ச‌ர் வேலும‌ணி 15 நா‌ட்களு‌க்கு‌ள் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஆதார‌த்தை வெ‌ளி‌யிட தவ‌றினா‌ல் ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌க்க‌ப் படு‌ம் எ‌ன்று‌ம் தி.மு.க. தெ‌ன்ம‌ண்டல அமை‌ப்பாளரு‌ம், ம‌த்‌திய அமை‌ச்சரு‌மான மு.க.அழ‌கி‌ரி எ‌ச்ச‌ரி‌க்கை ‌ விடு‌த்து‌ள்ளா‌ர். ச‌ட்‌ட‌ப்பேரவை‌யி‌ல் நே‌ற்று நட‌ந்த தொழில் துறை மானியக் கோரிக்கை மீதான விவாத‌த்‌தி‌ல் கல‌ந்து கொ‌ண்டு பே‌சிய பு‌திய த‌மிழக‌ம் உறு‌ப்‌பின‌ர் டாக்டர் கிருஷ்ணசாமி, மதுரை வட்டாரத்தில் கடந்த ஆட்சியில் மு.க.அழகிரி மற்றும் அவரது கூட்டாளிகள் ஒரு லட்சத்து 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கிரானைட் குவாரிகளில் கொள்ளையடித்ததாக தகவல்கள் வெளியானது. இதுகுறித்து அரசு ஒரு வெள்ளை அறிக்கை வெளியிடுமா? அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? எ‌ன்று கே‌ள்‌வி எழு‌ப்‌பினா‌ர். இத‌ற்கு ப‌தி‌ல் அ‌ளி‌த்த அமைச்சர் வேலுமணி, மு.க.அழகிரி, அவரது கூட்டாளிகள் ஏராளமான குவாரிகளில் இப்படி கொள்ளையடித்தனர். அந்த குவாரிகளின் லைசென்சு தான் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. இன்னும் உரிய தொடர் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது எ‌ன்றா‌ர். இ‌ந்த ‌நிலை‌யி‌ல் அமை‌ச்ச‌ர் வேலும‌ணி கூ‌றிய புகாரு‌க்கான ஆதார‌த்தை தர‌க்கோ‌ரி சபாநாயரு‌க்கு ம‌த்‌திய அமை‌ச்ச‌ர் மு.க.அழ‌கி‌ரி இ‌ன்று கடித‌ம் எழு‌தியு‌ள்ளா‌ர். அ‌தி‌ல், கிரானை‌ட் தொ‌ழி‌லி‌ல் தா‌ம் ஈடுபட ‌வி‌ல்‌லை எ‌ன்று‌ம் தமது புகழு‌க்கு அமை‌ச்ச‌ர் வேலும‌ணி கள‌ங்க‌ம் ஏ‌ற்ப‌டு‌த்‌தி‌வி‌ட்டதாகவு‌ம் அழ‌கி‌ரி தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். புகாரு‌க்கான ஆதார‌த்‌தை அமை‌ச்ச‌ர் வேலும‌ணி 15 நா‌ட்களு‌க்கு‌ள் வெ‌ளி‌யிட வே‌ண்டு‌ம் எ‌ன்று‌ம் ஆதார‌த்தை வெ‌ளி‌யிட தவ‌றினா‌ல் ச‌ட்ட‌ப்படி நடவடி‌க்கை எடு‌க்க‌ப்படு‌ம் எ‌ன்று‌ம் அவ‌ர் கூ‌றியு‌ள்ளா‌ர். ஆடி ஆடித்தானே இந்த கதிக்கு வந்தது!! இன்னும் ஆட்டமா ? இப்படி அ'னா ஒருபக்கம் உதார் விட்டுக் கொண்டிருந்தாலும், தயா சைபர் பார்க் சார்பில், அதன் நிர்வாகி மணிகண்டன் நேற்றைக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில், அந்த நிறுவனத்தின் இயக்குனர்களைக் கைது செய்யப்போவதாக, காவல்துறை வேண்டுமென்றே செய்திகளைப் பரவ விட்டுக் கொண்டிருக்கிறது, இடப்பிரச்சினை தொடர்பாக சிவில் வழக்கு நடைபெற்று வரும்  நிலையில், அதில்  தலையிடாமலிருக்கும்படிக்கு  காவல்துறைக்குத் தடை விதிக்க வேண்டும் என்று  ஒரு மனுவைத்தாக்கல் செய்திருந்தார். இயக்குனர்கள் வேறு யாருமில்லை, அழகிரியின் மனைவியும் மகனும் தான்! அரசின் சார்பில் மனுதாரர் மீது (தயா சைபர் பார்க்) அப்படி ஒரு புகாரோ, முதல் தகவல் அறிக்கையோ இல்லை, போலீஸ் தொந்தரவு செய்வதாகக் கூறப்படுவதும் பொய்யானது  என்று சொல்லப்பட்டதை அடுத்து நீதிபதி திரு சுதாகர் வியாழனன்று அந்த மனுவை டிஸ்போஸ் செய்தார்.மனுதாரரின் வழக்கறிஞர் தொடர்ந்து, செய்தித்தாட்களில் அப்படி செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன என்றே வாதம் செய்துகொண்டிருந்தார்.

மனுவை டிஸ்போஸ் செய்கையில் நீதிபதி சொன்ன ஒரு விஷயம் சுவாரசியமானது."பாதிக்கப்படுவதாக சொல்வது எவரோ அந்த நபர் தான் நீதிமன்றத்திற்கு வரவேண்டுமே தவிர, நிறுவனம் அல்ல! நிறுவனத்தின் இயக்குனர்கள் தாங்கள் தொந்தரவு செய்யப் படுவதாகக் கருதினால் காவல்துறை இயக்குனரை அணுகலாம்." நீதிமன்றத்தின் பின்னால் ஒளிந்துகொண்டு தடையுத்தரவை வாங்க முயன்ற நிறுவனத்தின் முயற்சிக்கு, பலன் கிடைக்கவில்லை,
அவ்வளவு தான்! அஞ்சா நெஞ்சும் கோழிக்குஞ்சும்! வீராவேசமான பேட்டி, அறிக்கைக்குப் பின்னால் எந்த அளவுக்கு அச்சம் உதறல் இருக்கிறது என்பது மீண்டும் ஒருமுறை அம்பலத்துக்கு வந்திருக்கிறது  என்பதைத் தவிர வேறென்ன சொல்ல!!
அவைக்கே வராமல், மந்திரிக்குண்டான கடமையை செய்யாமல் இருக்கும் அழகிரி மாதிரி ஆசாமிகளைக் கேள்வி கேட்கக் கூட இந்த டம்மிப் பீசுக்கு அதிகாரம் இல்லை! தைரியமும் இல்லை!
மன்மோகன் சிங்குக்கு மாஜிக் தெரியாது, ஆளவும் தெரியாது,சரி! 
இப்படிக் கேவலப்பட்டு, பிரதமர் நாற்காலியில் ஒட்டிக் கொண்டிருப்பதை விட மானம் மரியாதையோடு ஓடிப் போவது உத்தமம் என்று கூடவா தெரியாது?   தெரியாது?

காற்றில் கூட கைவைத்த சன் நிறுவனம்




ஸ்பைஸ் ஜெட்டின்  பெரும்பான்மையான பங்குகளை சன் டி.வி. அதிபர் க(ல்)லா நிதிமாறன் வாங்கிட்டாராம்.தொ(ல்)லைகாட்சி, சினிமா இப்போது விமான போக்குவரத்து இனி இவர் கையில்.  இப்படியே போனால்.....நகைச்சுவையாக யோசித்ததில்.......

வங்காள விரிகுடா கடலை சன் நிறுவனம் வாங்கியுள்ளது.இனிமேல் அந்தப்பகுதியில் பயணிக்கும் கப்பல்கள் ஆங்காங்கே கடலில் இருக்கும்  டோல் சாவடியில்    சன்னுக்கு சந்தா செலுத்த வேண்டுகிறோம். மீறி சந்தா செலுத்தாமல் பயணிக்கும் கப்பல்களில் ஓட்டை போடப்படும் என்று எச்சரிக்கிறோம்.


தமிழ்நாட்டில் இருக்கும் டாஸ்மாக் கடைகள் உட்பட இந்தியா முழுவதுமுள்ள ஒயின் ஷாப்புகளை  சன் நிறுவனம் ஒட்டுமொத்தமாக வாங்கியுள்ளது. இனி சரக்குகள் பாண்டிச்சேரி விலைக்கே கிடைக்கும்(பாண்டிச்சேரியில்). மற்ற இடங்களில் பாண்டிச்சேரி விலையைவிட பத்துரூபாய் கூடுதல் விலையில் கிடைக்கும். முரசொலிமாறன், கலாநிதிமாறன்,தயாநிதிமாறன் ஆகியோரின் பிறந்தநாளுக்கு மட்டும் சிறப்பு சலுகையாக  பாதி விலைக்கு இந்தியா முழுவதும் சரக்குகள் கிடைக்கும்.


தென்னிந்திய ரயில்வே துறையை சன் நிறுவனம் வாங்கியுள்ளது. இனி பயணிகள்  ரயிலுக்காக காத்திருக்கும் வேளையில் சன் பிச்சர்சின் படங்கள் அந்தந்த ரயில் நிலையங்களில் இலவசமாக காண்பிக்கப்படும். ஏதாவது தடங்கலினால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், பணம் திருப்பித்தரமாட்டாது. பதிலாக....ஒருமாதத்திற்காக சன் டி.டி.ஹெச்சிற்கு ரீசார்ஜ் செய்து தரப்படும்.


இந்தியா முழுவதும் காற்று உரிமையை சன் நிறுவனம் இயற்கையிடமிருந்து வாங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கான 20 கிலோ காற்று அடைக்கப்பட்ட பேக்கேஜின் சலுகை விலை ரூபாய் இருநூறு மட்டுமே.....ஒரு வருடத்திற்கான காற்றின் சலுகை விலை ரூபாய் 2000  மட்டுமே.
எச்சரிக்கை: எப்போது கடைசியாக காற்று ரீசார்ஜ் செய்துள்ளோம் என்று குறித்துவைத்துக்கொள்வது நல்லது. முன் எச்சரிக்கையில்லாமல்  காற்று துண்டிக்கப்படும். அப்படி துண்டிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டாலோ, உயிரிழப்பு ஏற்பட்டாலோ சன் நிர்வாகம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த குளறுபடிகளை தவிர்க்க முப்பது வருடத்திற்கான ஆயும் சந்தா பெக்கேஜ்ஜை வெறும் ஐம்பது ஆயிரத்துக்கு பெற்றிடுங்கள். ஆயுள் சந்தா முடியும் முன் நீங்கள் இறந்து விட்டால் மீதமுள்ள காற்று உங்கள் வாரிசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும். 

மேலும் விரிவான விளக்கங்களை பெற 000-0000-000 (TOLL FREE) என்ற எண்ணுக்கு கால் செய்யுங்கள். உங்களுக்கு பதிலளிக்க சுமார் 50,000 ரோபோக்களை நாங்கள் தயார் நிலையில் வைத்துள்ளோம். 

சன் டிவி-க்கு வந்தது முதல் ஆப்பு.. அம்மாவின் ராஜதந்திரம்...


மக்களிடம் பெரும்எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள, அரசு "கேபிள் டிவி' சேவை இன்று  (02-09-2011) துவக்கப்படுகிறது. தற்போதுள்ள இணைப்புகளிலேயே, அரசு கேபிள் இணைப்பில் உள்ள "டிவி' சேனல்களை பார்க்க முடியும். முதல்வர் ஜெயலலிதா, "வீடியோ கான்பரன்சிங்' மூலம் இன்று துவக்கி வைக்கிறார்.

முந்தைய ஆட்சியில், அரசு "கேபிள் டிவி' நிறுவனம், ஆளுங்கட்சியினரின் திடீர் தலையீடு காரணமாக, வெறும் 432 இணைப்புகளாக குறைக்கப்பட்டது. பின், அந்த நிறுவனமே முடக்கப்பட்டது. இந்நிலையில், அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததால், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்துக்கு புத்துயிர் ஊட்டப்பட்டது. அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், கேபிள் கார்ப்பரேஷனுக்கு தனியாக தலைவரும், நிர்வாக இயக்குனராக ஐ.ஏ.எஸ்., அதிகாரியும் நியமிக்கப்பட்டனர். ஏற்கனவே, தஞ்சை, நெல்லை, கோவை மற்றும் வேலூரில் அமைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் தலைமுனைகள், பராமரிப்பு செய்யப்பட்டன.
 
மீதமுள்ள மாவட்டங்களிலும், "கேபிள் டிவி' சேவையை துவங்கும் வகையில், உள்ளூர் கேபிள் ஆபரேட்டர்கள் மற்றும் எம்.எஸ்.ஓ.,க்கள், அரசு "கேபிள் டிவி'யில் சேர்க்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில், 40 ஆயிரம் கேபிள் ஆபரேட்டர்கள் உள்ளனர். இவர்களில், 34 ஆயிரத்து 344 ஆபரேட்டர்கள், அரசு "கேபிள் டிவி' நிறுவனத்தில் இணைந்துள்ளனர். இவர்களிடம், ஒரு கோடியே 45 லட்சம் இணைப்புகள் உள்ளன.  
அரசு கேபிள் மூலம், கட்டணச் சேனல்கள் உட்பட 90 சேனல்கள் ஒளிபரப்பப்பட உள்ளன. முதலில் இலவச சேனல்கள் ஒளிபரப்பப்படுகின்றன. கேபிள்ஆபரேட்டர்கள் மூலம், சந்தாதாரர்களிடம் மாதச் சந்தாவாக ஒரு இணைப்புக்கு 70 ரூபாய், கேபிள் ஆபரேட்டர்களால் வசூலிக்கப்படும். இதில், ஒரு இணைப்புக்கு 20 ரூபாயை, கேபிள் ஆபரேட்டர்களிடமிருந்து அரசு "கேபிள் டிவி' நிறுவனம் வசூலிக்கும். எனவே, சென்னை தவிர மற்ற மாவட்டங்களில், அரசு "கேபிள் டிவி' இணைப்புகள் இன்று முதல் 24 மணிநேர தடையற்ற ஒளிபரப்பு சேவையை வழங்க உள்ளன. 
இதற்கான துவக்க நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் இன்று நடக்கிறது. அரசு கேபிள் ஒளிபரப்பை, முதல்வர் ஜெயலலிதா இன்று பகல் 12.10 மணிக்கு, வீடியோ கான்பரன்சிங் முறையில் துவக்கி வைக்கிறார். அதே நேரத்தில், வேலூர் மையத்திலும் விழா நடக்கிறது. அதில், அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். சேவையை துவக்கி வைத்து, சென்னையில் முதல்வர் ஜெயலலிதா பேசுகிறார். இதைத் தொடர்ந்து, வேலூர் மாவட்டத்தில் உள்ள கேபிள் ஆபரேட்டர்கள், தங்களது சந்தாதாரர்களுக்கு, ஒளிபரப்பை வழங்குகின்றனர்.
 
அதேபோல, மற்ற மாவட்டங்களிலும் கேபிள் சேவையை அந்தந்த ஆபரேட்டர்கள் வழங்குகின்றனர். கட்டண சேனல்களாக உள்ள, "சன் டிவி, ராஜ் டிவி, விஜய் டிவி, டிஸ்கவரி தமிழ்' போன்ற சேனல்கள் முதலில் இடம்பெறாது. இலவச சேனல்கள் மட்டுமே இன்று ஒளி பரப்பப்படும். கட்டணச் சேனல்களின் கட்டணத்தை முடிவு செய்த பின், அவற்றின் ஒளிபரப்பு வழங்கப்படும். மேலும், உள்ளூர்சேனல்கள் இதனால் சற்று சுதந்திரமாக முறையான வரன்முறைகளுடன் ஒளிபரப்பாகும் சூழ்நிலை ஏற்படும்.அரசு "கேபிள் டிவி' செயலாக்கம் பல்வேறு மாவட்டங்களிலும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால், வரவேற்பு அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 
இன்னும் நன்றாக முறைப்படுத்தி சரியான முறையில் வழிவகைச்செய்தால் தமிழகத்தில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும்... தனிப்பட்ட டிவிக்களின் வருமானம் இதன் மூலம் நிறுத்தப்படும்.

வேதனையில் தி.மு.க

சாதித்தது அ.தி.மு.க.வேதனையில் தி.மு.க

தமிழக அரியாசனத்தில் ஜெயலலிதா கோலோச்ச ஆரம்பித்து நூறு நாட்கள் கடந்து விட்டன. இந்த நூறு நாட்களில் அவர் தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றியுள்ளார். அவரின் வழமையான பிடிவாதத்தினால் சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்த முயற்சித்து அவமானப்பட்டõர். இதேவேளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர்களையும் தொண்டர்களையும் சட்டத்தின் உதவியுடன் முடக்கும் வேலையை கன கச்சிதமாகச் செய்து வருகிறார்.
தமிழக சட்ட சபை வரலாற்றில் என்றும் இல்லாத புதிய வரலாற்றுப் பெருமையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த அவர். மே மாதம் 16 ஆம் திகதி மூன்றாவது முறையாக தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார். தமி
ழக முதல்வராகப் பொறுப்பேற்க முன்னரே புதிய தலைமைச் செயலகக் கட்டிடத்திலிருந்து மீண்டும் கோட்டைக்கு தலைமைச் செயலகம் மாறும் என்று அறிவித்தார். தமிழக முதல்வராக ஜெயலலிதா பொறுபேற்றதும் தமிழகத்தில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. புதிய அமைச்சர்கள் பொறுப்பேற்று ஆரவாரம் அடங்கு முன்னர் பதவியிலிருந்து சிலர் பந்தாடப்பட்டனர். வேறு சிலர் இலாகா மாற்றப்பட்டனர்.
மதுரையின் மீதான ஜெயலலிதாவின் உக்கிரப் பார்வையால் மதுரை கலகலத்தது. அழகிரிக்குப் பக்கபலமாக இருந்த பலர் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளனர். அடுத்த குறியார் என்று பரபரப்பான கேள்வியுடனேயே காலைப் பொழுது விடிகிறது. மதுரையைச் சுற்றி இருந்த மாயை இருள் அகன்றுவிட்டது.
தமிழக தேர்தல் காலத்தில் ஜெயலலிதா அறிவித்த திட்டங்களை படிப்படியாக நடைமுறைப்படுத்தி வருகிறார். இலவச அரிசி வழங்கப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு லப்டொப், கிரைண்டர் மிக்ஸி கொடுப்பதற்காக வேலைத் திட்டம முன்னெடுக்கப்படுகிறது. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் ஜெயலலிதாவின் குரல் மிக உச்சத்தில் உள்ளது. வைகோ, பழ. நெடுமாறன், திருமாவளவன், டாக்டர் ராமதாஸ் போன்றவர்களை விட ஜெயலலிதாவின் குரலுக்கு அதிக மதிப்புக் கிடைத்துள்ளது. தமிழக சட்டமன்றத்தில் இலங்கை தொடர்பில் அவர் நிறைவேற்றிய தீர்மானம் மத்திய அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள் ளது. தமிழகத்தில் ஆட்சிபீடம் ஏறியதும் மத்திய அரசியுடன் ஜெயலலிதா சமரசமாகச் செல்வார் என்று எதிர்பார்க்க ப்பட்டது.
ஆனால், மத்திய அரசை எதிர்த்து தமிழக அரசை வழி நடத்துவதற்கு ஜெயலலிதா முடிவெடுத்து விட்டார்.
கச்சதீவு விவகாரத்திலும் ஜெயலலிதா உறுதியாக உள்ளார். கச்சதீவு ஒப்பந்தத்தின்படி இலங்கை நடக்கவில்லை. இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறி விட்டது. இந்திய மத்திய அரசு கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கிறது என குற்றம் சுமத்தியுள்ளார். ஜெயலலிதாவைத் திருதிப்படுத்த வேண்டிய கட்டாய நிலைக்கு மத்திய அரசு தள்ளப்பட்டுள்ளது. இலங்கைப் பிரச்சினைக்கு மத்திய அரசு நல்லதொரு தீர்வைப் பெற்றுக் கொடுக்கும் வரை ஜெயலலிதாவின் குரல் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கும்.
திராவிட முன்னேற்றக் கழகத்தையும் அதன் தலைவர்களையும் மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் பழிவாங்கும் நடவடிக்கைகளையும் ஒரு பக்கத்தால் நிறைவேற்றி வருகிறார் ஜெயலலிதா. புதிய தலைமைச் செயலகத்தை நவீன மருத்துவமனையாக மாற்றுவது, சித்திரை முதலாம் திகதியே மீண்டும் தமிழ்ப் புதுவருடமாகக் கொண்டாடுவது ஆகிய அறிவிப்புகள் கருணாநிதிக்கு பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளன. கருணாநிதியால் கட்டப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தினுள் நுழையமாட்டேன் என்ற சபதத்தை ஜெயலலிதா நிறைவேற்றியுள்ளார்.
கோட்டையினுள்ள தலைமைச் செயலகத்தில் வசதிகள் போதியளவு இல்லை. தவிர
அந்தக் கட்டிடம் தமிழக அரசுக்குச் சொந்தமானது இல்லை என்ற காரணங்களினால் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் புதிய தலைமைச் செயலகத்தைக் கட்டுவதற்கு முயற்சி செய்தார்கள். எம்.ஜி.ஆர். ஜெயலலிதா ஆகிய இருவரின் முயற்சி வெற்றிபெறாத நிலையில் கருணாநிதியின் முயற்சியினால் புதிய தலைமைச் செயலகம் கட்டி முடிக்கப்பட்டது.1983 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதலமைச்சராக இருந்தபோது மெரீனாவுக்கு அருகே தலைமைச் செயலகம் கட்டுவதற்கு முடிவெடுக்கப்பட்டது. பின்னர் அத்திட்டம் கைவிடப்பட்டது. தலைமைச் செயலகத்தை திருச்சிக்கு மாற்றுவதற்கும் முயற்சி செய்யப்பட்டது. நிர்வாகச் சிக்கல் பொது மக்களுக்கு சிரமம் என்பதனால் அந்தத் திட்டமும் கைவிடப்பட்டது.

2002 ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது மகாபலிபுரத்தில் நிர்வாக நகரம் அமைக்க முயற்சி செய்யப்பட்டது. சென்னைக்கு வெளியே தலைமைச் செயலகம் அமைத்தால் ஏற்படும் சிரமங்களைக் கருத்தில் கொண்டு அத்திட்டம் கைவிடப்பட்டது. ராணி மேரி கல்லூரி இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு ஜெயலலிதா முயற்சி செய்தார். ராணி மேரி கல்லூரி மாணவிகளின் எதிர்ப்பினால் அத்திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் சென்னை கோட்டூர்புரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கு பூமி பூஜை போடப்பட்டது. இந்த பூமி பூஜையில் ஜெயலலிதாவும் கலந்து கொண்டார். புதிய தலைமைச் செயலகம் கட்டுவதனால் ஏற்படப் போகும் பின் விளைவுகளால் ஏற்படும் ஆபத்துகள் பற்றி சுற்றுப்புறச் சூழல் ஆர்வலர்கள் வழக்குத் தாக்கல் செய்தனர். அடையாறு சுற்று சூழல் பகுதி அண்ணா பல்கலைக்கழகத்துக்குச் சொந்தமான இடங்கள் எல்லாம் பறிபோவதாக குற்றம் சுமத்தப்பட்டது. இதன் காரணமாக இத் திட்டம் கைவிடப்பட்டது.
சகல வசதிகளும் உடைய தலைமைச் செயலகம் தமிழ்நாடு அரசுக்குத் தேவை என்பதை எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் உணர்ந்திருந்தார்கள். அவர்களால் செய்ய முடியாததை கருணாநிதி செய்து முடித்தார். 2008 ஆம் ஆண்டு ஒமாந்தூரார் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டும் பணி ஆரம்பமானது. 2010 மார்ச் மாதம் 13 ஆம் திகதி புதிய தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டது. புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காகப் பல கட்டடங்கள் இடித்து அழிக்கப்பட்டன. பல ஆண்டு பழமையான கலைவாணர் அரங்கம், இயற்கை விநாயகர் கோயில், சி.பி.சி.ஐ.டி. பொலிஸ் தலைமை அலுவலகமான எம்பயர் கட்டிடம், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைமை அலுவலக கட்டிடம், திருவல்லிக் கேணி தீ அணைப்பு நிலையம், தலைமைச் செயலக ஊழியர் குடியிருப்பு, பழைய கில்ட் பத்திரிகையாளர் அலுவலகம், பழைய எம்.எல்.ஏக்கள் விடுதி நூற்றுக்கணக்கான மரங்கள் அழிக்கப்பட்டே புதிய தலைமைச் செயலகம் கட்டப்பட்டது.
அவசர அவசரமாக அள்ளித் தெளித்த
கோபத்தில் அரையும் குறையுமாக புதிய தலைமைச் செயலகம் திறந்து வைக்கப்பட்டதால் அப்போதே புகார் எழுந்தது. கருணாநிதியால் வீம்புக்காகத் திறந்து வைக்கப்பட்ட புதிய தலைமைச் செயலகத்தை பழிவாங்கும் நோக்கில் ஜெயலலிதா முடக்கியுள்ளார். புதிய தலைமைச் செயலகத்தை ஜெயலலிதா என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் எழுந்தது. புதிய தலைமைச் செயலகத்தில் நவீன மருத்துவமனை அமைக்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளõர். அலுவலகத்துக்காகக் கட்டப்பட்ட கட்டடத்தில் மருத்துவமனை அமைப்பது சாத்தியமில்லை. மருத்துவமனை அமைப்பதற்குரிய அடிப்படை வசதிகள் எவையும் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தில் இல்லை. ஆகையினால் இதற்கு பலத்த எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.
சித்திரை மாத முதலாம் திகதி தமிழ்ப் புதுவருடம் முன்பு ஜெயலலிதாவின் அறிவிப்புக்கு பலத்த வரவேற்புப் கிடைத்துள்ளது. தை மாதம் முதலாம் திகதி தமிழ்ப்புத்தாண்டு என்று 2008 ஆம் ஆண்டு கருணாநிதி அறிவித்தார். கருணாநிதியின் இந்த அறிவிப்பை தமிழ் மக்கள் வரவேற்கவில்லை. அரசு ஆணைப்படி தை மாதம் முதலாம் திகதி புது வருடமாக கொண்டாடப்பட்டது. பழமையில் ஊறித் திளைத்தவர்கள் சித்திரை மாதம் முதலாம் திகதியையே தமிழ்ப் புதுவருடமாகக் கொண்டாடினார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளை அரசியல் சட்டத்தினால் மாற்ற முடியாது என்பதை கருணாநிதி உணரத் தவறி விட்டார். தை மாதம் முதலாம் திகதி தமிழ்ப் புது வருடம் என்பது எனது முடிவல்ல 500 புலவர்கள் கூடி ஆராய்ந்து எடுத்த முடிவு என்று கருணாநிதி கூறியுள்ளார். கருணாநிதியின் விருப்பப்ப டியே 500புலவர்களும் ஆமோதித்தார்கள் என்பது வெளிப்படையானது.
ஜெயலலிதாவின் ஆட்சியிலே செம்மொழிக்கு இடமில்லை. கருணாநிதியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரே ஒரு காரணத்துக்காக இடமின்றித் தடுமாறுகிறது செம்மொழி கோட் டையிலுள்ள புதிய தலைமைச் செயலகத்திலேதான் செம்மொழி நூலகம் இயங்கியது. தலைமைச் செயலகம் கோட்டைக்கு மீண்டும் இடமாற்றம் செய்யப்பட்டதால் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்ட செம்மொழி நூலகத்துக்கான நிலையான இடம் இன்னும் ஒதுக்கப்படவில்லை.
ஜெயலலிதாவின் நூறு நாளாட்சியில் பொது மக்களுக்குப் பெரிய பாதிப்பு எவையும் ஏற்படவில்லை. திராவிட முன்னேற்றக் கழகம் தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் தமிழக சட்டமன்ற உறுப்பினர் உட்பட நூற்றுக்கணக்கான திராவிட முன்னேற்றக் கழகத்தினர் சிறையில் உள்ளனர். இன்னும் பலர் தேடப்பட்டு வருகின்றனர் எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் பொறுப்பான எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றவில்லை. திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல் களையும் முறைகேடுகளையும் கண்டறிவதிலேயே தமிழக அரசு அதிக அக்கறை காட்டுகிறது. திராவிட முன்னேற்றக் கழக அரச அமுல்படுத்திய திட்டங்களை மறுபடியும் முடக்கியுள்ளது. பழிவாங்கும் அரசியலிலிருந்து ஜெயலலிதா இன்னமும் மீளவில்லை.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...