Sunday, September 4, 2011

கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் ரூ.162 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு

தமிழக முதல்- அமைச்சராக ஜெயலலிதா பதவி ஏற்றதும் நில மோசடி தொடர்பாக விசாரிக்க மாவட்டம் தோறும், தனிப்பிரிவை தொடங்கினார். அதைத் தொடர்ந்து நில மோசடி தொடர்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் புகார்கள் குவிந்தன.
 கோவை, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 8 மாவட்டங்களில்
ரூ.162 கோடி ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு
கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர், சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய போலீஸ் மேற்கு மண்டலத்தில் 15.5.2011 முதல் நேற்று முன்தினம் வரை 4 ஆயிரத்து 820 நில மோசடி புகார்கள் வந்துள்ளன.
 
கோவை மாவட்டத்தில் 341 புகார்களில் 21 மனுக்கள் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டு 78 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 3 பேர் அரசியல்வாதிகள் ஆவார்கள். 320 புகார்களுக்கு ரசீது கொடுக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் 159 மனுக்கள் விசாரணைக்கு ஏற்றதல்ல என்று தெரியவந்துள்ளது.
 
மற்ற 161 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன. 21 எப்.ஐ.ஆரின்படி 93 ஏக்கர் நிலம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 748 புகார் மனுக்களில் 8 மனுக்கள் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
நீலகிரி மாவட்டத்தில் 106 புகார் மனுக்களும், திருப்பூரில் 433 புகார் மனுக்களும், சேலத்தில் 867 புகார் மனுக்களும், நாமக்கல்லில் ஆயிரத்து 24 மனுக்களும், தர்மபுரியில் 606 மனுக்களும், கிருஷ்ணகிரியில் 695 மனுக்களும் வந்துள்ளன. இதில் தகுதியான மனுக்கள் கோவை-21, ஈரோடு-8, திருப்பூர்-75, சேலம்-12, நாமக்கல்-20, தர்மபுரி-13, கிருஷ்ணகிரி-19 ஆக மொத்தம் 168 மனுக்கள் மீது எப்.ஐ.ஆர்.பதிவு செய்யப்பட்டு உள்ளது.
 
இந்த 168 எப்.ஐ.ஆர். மூலமாக 941 பேர் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் 147 பேர் கைது செய்யப்பட்டனர். ஆக மொத்தம் ரூ. 1000 கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்து விட்டதாக 4 ஆயிரத்து 820 மனுக்களில் 4 ஆயிரத்து 652 மனுக்களுக்கு ரசீது கொடுக்கப்பட்டு உள்ளது. இதில் 2 ஆயிரத்து 519 மனுக்கள் விசாரிக்கப்பட்டு விட்டது. 2 ஆயிரத்து 133 மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.  
 
நாமக்கல் மாவட்டத்தில்தான் அதிக எண்ணிக்கையில் நிலமோசடி புகார்கள் வந்துள்ளன. ஆனால் இதில் எப்.ஐ.ஆருக்கு 20 தகுதியானதாகும். திருப்பூர் மாவட்டத்தில் மொத்தம் வந்துள்ள 433 புகார் மனுவில் 75 மனுக்களுக்கு எப்.ஐ.ஆர். போடப்பட்டுள்ளது. இந்த 75 எப்.ஐ.ஆரிலும் 289 பேர் சிக்கி உள்ளனர்.
 
இதுவரை கோவை மேற்கு மண்டலத்தில் ரூ.162 கோடியே 45 லட்சத்து 20 ஆயிரத்து 100 மதிப்பிலான நிலம் மீட்கப்பட்டுள்ளது. எப்.ஐ.ஆரின் அடிப்படையில் 87 அரசியல்வாதிகள் சிக்கி உள்ளனர். மேற்கண்ட தகவல் கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

2ஜி: ராசா, மாறனை காப்பாற்றுகிறதா மத்திய அரசு?

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று "டிராய்" ஒருபுறம் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவுக்கு நற்சான்றிதழ் அளித்துள்ள நிலையில், மறுபுறம் சிபிஐ-யும் நேற்று தாக்கல் செய்த தனது

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமல் போனதால், அரசுக்கு ரூ. 1.76 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று மத்திய கணக்கு தணிக்கை துறை அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து தொலைத் தொடர்பு துறை அமைச்சராக இருந்த ஆ.ராசா பதவி விலகினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் 2ஜி வழக்கை விசாரித்து வந்த சிபிஐ,நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில் ராசாவின் பதவிக் காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசுக்கு ரூ. 33 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டு இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

ஆனால் 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் அரசுக்கு இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று தொலைத் தொடர்பு துறையின் அதிகாரம் மிக்க அமைப்பாக கருதப்படும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான "டிராய்" தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் "டிராய்" நேற்று அளித்துள்ள விளக்கத்தில்,"முன்னாள் அமைச்சர் ராசா, அரசின் கொள்கையை பின்பற்றியே 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையை செய்தார்.தனது பதவிக்காலத்தில் 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை ராசா தவறாக கையாண்டுள்ளார் என்று சொல்வது தவறானது.

2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனையில் இழப்புகளை நிர்ணயிப்பது வித்தியாசம் அல்ல.அரசின் கொள்கைப்படியே 2ஜி ஸ்பெக்ட்ரம் விற்பனை நடந்துள்ளதால், இழப்பு ஏற்பட்டிருக்க முடியாது" என்று கூறியுள்ளது.

 
விசாரணை அறிக்கையில் தயாநிதி மாறன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் ஏதும் இல்லை என்று கைவிரித்துள்ளதால், காட்டிக்கொடுப்பு பயத்தில் மத்திய அரசு 2ஜி வழக்கின் போக்கை மாற்றுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

டிராய் ஒருபுறம் இவ்வாறு ஆ.ராசாவுக்கு நற்சான்று அளித்துள்ள நிலையில், இதே 2ஜி வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறனும் சிபிஐ-யால் நற்சான்று பெற்றுள்ளார்.
தயாநிதி மாறன் தொலைதொடர்பு துறை அமைச்சராக இருந்தபோது, 2ஜி ஒதுக்கீடுக்கு விண்ணப்பித்த ஏர்செல் நிறுவனத்திற்கு அலைக்கற்றை உரிமத்தை ஒதுக்கீடு செய்யாமல் இழுத்தடித்ததாகவும், அந்நிறுவனத்தின் பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு தொழில் அதிபர் சிவசங்கரனை மிரட்டினார் என்பதும், பின்னர் ஏர்செல் பங்குகள் மேக்ஸிஸ் நிறுவனத்திற்கு விற்கப்பட்டதும், அதுவரை வழங்கப்படாமல் இருந்துவந்த 2ஜி உரிமங்கள் ஏர்செல் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது என்பதுதான் தயாநிதி மாறன் மீது எழுந்த குற்றச்சாட்டு ஆகும்.

அத்துடன் மேக்ஸிஸ் நிறுவனம் தயாநிதி மாறனின் குடும்ப நிறுவனமான சன் குழுமத்தின் ஒரு அங்கமான சன் டிடிஎச்-இல் முதலீடு செய்ததாகவும், இது மேற்கூறிய முறைகேட்டுக்காக பெற்ற ஆதாயமே என்றும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கு முன்னர் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

இந்நிலையில் கடந்த ஜூலை 6 ஆம் தேதியன்று சிபிஐ தாக்கல் செய்த விசாரணை நிலை அறிக்கையில், தயாநிதி மாறனின் கட்டாயத்தின் பேரில்தான் ஏர்செல் நிறுவனம் மலேசிய நிறுவனத்துக்கு விற்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விசாரிப்பதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் 2ஜி வழக்கில் தனது புதிய விசாரணை நிலை அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் நேற்று சிபிஐ மற்றும் அமலாக்கப்பிரிவு தாக்கல் செய்தது.
அதில் 2001-2007ம் ஆண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் தொலைத்தொடர்பு உரிமங்கள் வழங்கப்பட்டதில் எந்த சக்தியும் நிர்பந்தப்படுத்தியிருப்பதற்கான முகாந்திரம் இல்லை என்றும், ஏர்செல் நிறுவன பங்குகளை மலேசியாவை சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனத்துக்கு
விற்குமாறு அதன் அப்போதைய அதிபர் சிவசங்கரனை தயாநிதி மாறன் மிரட்டியதற்கு போதுமான ஆதாரம் ஏதுமில்லை என்றும் சிபிஐ குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு ராசா மற்றும் தயாநிதி மாறன் ஆகியோருக்கு நற்சான்று அளிக்கப்பட்டது ஒருபுறம் இருக்க, இவ்விடயத்தில் பா.ஜனதா அதிகம் வாய்திறக்காமல் இருப்பதற்காக அக்கட்சியையும் 2ஜி வழக்கில் இழுத்துவிடும் வேலையையும் சிபிஐ கச்சிதமாக பார்த்துள்ளது.
அதாவது பா.ஜனதா தலைமையிலான முந்தைய மத்திய அரசில் முன்னாள் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராக இருந்த அருண் ஷோரியின் பதவிக்காலத்தில் வழங்கப்பட்ட உரிமங்கள் குறித்து ஆய்வுசெய்யப்பட வேண்டும் என்றும், அப்போதைய நிதி அமைச்சர் ஜஸ்வந்த் சிங்கிடம் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் சிபிஐ தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்தமாதம் 2ஜி வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, ஆ.ராசா தரப்பில் வாதிடுகையில் 2ஜி உரிமங்கள் ஒதுக்கப்பட்டது தொடர்பான அனைத்து விவரங்களும் மற்றும் அந்த உரிமங்களை பெற்ற தனியார் நிறுவனங்கள், தனது பங்குகளை வேறு நிறுவனத்திற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்றதும் பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோருக்கு தெரியும் என்று ஆணித்தரமாக வாதிட்டார்.

இது பிரதமர் மற்றும் ப.சிதம்பரம் ஆகியோருக்கு மிகுந்த சிக்கலை ஏற்படுத்தியது.மேலும் 2ஜி ஊழல் பணத்தின் பங்கு, காங்கிரஸ் தலைமைக்கும் சென்றதாகவும், அது தெரிந்துதான் பிரதமர் இவ்விடயத்தில், முறைகேடு நடப்பது தெரிந்தும் அமைதி காத்தார் என்றும் கூறப்பட்ட நிலையில், அடுத்தடுத்த விசாரணைகளில் ராசா மேலும் வாய் திறந்து ஏதாவது ஏடாகூடமாக பேசிவிடக்கூடாது என்பது மட்டுமல்ல, திமுக-வும் காட்டிக்கொடுக்கும் வேலைகளில் இறங்கிவிடக்கூடாதே என்ற அச்சமுமே ராசாவை "டிராய்" மூலம் மத்திய அரசு காப்பாற்றியுள்ளதோ என்ற எண்ணம், 2ஜி வழக்கினை ஆரம்பம் முதல் உன்னிப்பாக கவனித்து வருபவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

2ஜி வழக்கு விசாரணை, 15 நாட்களுக்கு முடிக்கப்பட்டு இறுதி நிலை அறிக்கை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்யப்படும் என்று சிபிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், சிபிஐ-யின் விசாரணை நிலை அறிக்கையையும், டிராயின் பதில் விளக்கத்தையும் பார்த்தால் ஆ.ராசா கம்பீரமாக திகார் சிறையிலிருந்து விரைவிலேயே வெளி வருவார் என்றே தெரிகிறது.
ஆனாலும்,இவ்வழக்கை கண்காணித்து வரும் உச்ச நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை  
 
இருப்பதால், மத்திய அரசின் சித்து விளையாட்டுக்கள் எந்த அளவுக்கு எடுபடும் என்பதை வரும் நாட்கள்தான் தீர்மானிக்கும்! 

Saturday, September 3, 2011

இலங்கையிடம் சரணாகதியடையப் போகும் திமுக!

மீண்டும் வசந்த காற்றாய்
நம்பிக்கை ரேகைகள்
தமிழர்
மேனியெங்கும் 
தழுவத் தொடங்கியிருக்கிறது,
இலவசமாய் எது கொடுப்பினும்
வாங்கி விட்டு
தன் இயல்புதனை உணர்த்துவான்
தமிழன் எனும் யதார்த்தம்
’ஐயாவின் ஆட்சி- 
அம்மாவின் வருகை மூலம்
தூக்கி வீசப்படுகையில்
கண்டு தெளிந்தது தமிழகம்- ஆனாலும்
இலவசங்கள் கொடுத்தால்
வாடிய பயிர்கள் எல்லாம்
தம்மை வாழ வைக்கும் என
வாசல் வந்து
கரங் குவித்து
தம் கையில் நிறைந்திருந்த
செங்குருதி மணம் கழுவப்படாமல்
வெற்றிலையில் சுண்ணாம்பிட்டு;
பிச்சையிடுகின்றோம்- எம்
நன்றி கடன் மறவாதேம்
என வந்தவர்க்கு,
தக்க நேரத்தில் தமிழன்
தன் நிலையினை மீண்டும்
நிரூபித்துள்ளான்!

ஆடி மாதம் 
வாடிப் போன 
தமிழன் வரலாறு
இரு சேதிகள் வாயிலாக
இந் நாளில்
புதுப்பிக்கப்பட்டிருக்கிறது,
ஜெயலிதாவின் பக்கமிருந்து
மெல்லிய அசைவொன்று
எம் மீதான 
சுவாசத்திற்கு வேண்டிய
ஒட்சிசனாய் அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது,

கருணாநிதி வடிவில்
களையப்பட்ட 
தமிழ்த் தாயின் துகில்
மெது மெதுவாக
இன உணர்வெனும் வெளியீடு கொண்டு
போர்த்தப்படுகிறது- தன் நிலை 
உணர்ந்து கொள்ளும்
காலம் இது வென கலைஞர்
கண்டு தெளிந்து விட்டதாய்
நாளாந்தம் மாறும் காட்சிகள்
கட்டியம் கூறுகின்றன!

தான் வளர்த்த
கடாக்கள்- தமிழ்ப் பாலூற்றி
சீவப்பட்ட கொம்புகளோடு
சொத்துக்கள் எனும்
மானத்தை சூறையாடி
பங்கு போட்டு
திமுக வை 
திக்குமுக்காட செய்கையில்
வேறு வழியின்றி
முன் வினைப் பயனை 
உணர்ந்து தள்ளாடும் வயதினிலும்
தத்தளிக்கிறார் தாத்தா!

அம்மாவின் கரங்கள்
ஈழ மக்கள் நோக்கி
காலச் சுழற்சியின்
சந்தர்ப்ப பிறழ்வுகளால்
மேலும் வீரியமாய் 
சில வேளை நீளலாம்!

அந் நேரம் தான் செய்த
தவறுகளை நினைத்து 
கண்ணீர் வடிப்பாரா கலைஞர்- இல்லை
மகிந்தவுடன் கரங்கோர்த்து 
ஈழ மக்கள் விடிவிற்காய் 
புது கூட்டணி தொடங்குவாரா?

தூர நோக்கு அரசியலில்
கலைஞரின் தந்திரங்கள்
வியப்பினைத் தருவதால்.
இலங்கையிடம்
கரங் குவித்து
சரணாகதியடைந்தாலும்
ஆச்சரியப்பட ஏதுமில்லைத் தானே!

க(கொ)லைஞர் டீவியும் கம்பியூட்டர் கஸ்மாலமும்!

உலகத் தமிழர்களுக்கான ஒரு பொதுவான தொலைக்காட்சியினை உருவாக்க வேண்டும் எனும் நோக்கில் திரு கஸ்மாலம் அவர்களின் தனித்துவமான முயற்சியில் உருவாக்கப்பட்டது தான் கும்ஸ்கா டீவி. கும்ஸ்கா டீவியில் பல்சுவையான, மக்களைக் கவரும் நிகழ்ச்சிகள் படைக்கப்பட்டு வந்தாலும், அவை மக்கள் மனங்களில் ஏகோபித்த வரவேற்பினைப் பெறாத காரணத்தினால், கும்ஸ்கா டீவியின் ஓனர் கஸ்மாலம் அவர்கள் தொழில்நுட்பத் தகவல்களைப் பகிரும் நோக்கில் கம்பியூட்டர் மற்றும் நவீன தொழில் நுட்பங்களோடு சார்ந்த கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றினை ஆரம்பிக்கின்றார்.
வணக்கம் நேயர்களெ! வணக்கம் விசுக்கோத்து அவர்களே!
வணக்கம் கஸ்மாலம்,  வணக்கம் நேயர்களே!
இன்று முதல் உங்கள் அனைவரையும் கும்ஸ்கா டீவியின் வாயிலாக குதூகலமான நகைச்சுவை மழையில் நனைய வைக்கும் நோக்குடன் கம்பியூட்டர் கஸ்மாலம் எனும் நிகழ்ச்சியினை அறிமுக்கப்படுத்துகின்றோம். நிகழ்ச்சியின் சிறப்பான அம்சங்கள் என்ன எப்பூடி இருக்கும் என்றால்...
*உலகத் தொலைக்காட்சிகள் வரிசையில் எங்களின் கும்ஸ்கா டீவியில் முதன் முதலாக எமது ஸ்டூடியோவிற்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொள்ளும் நேயர்களுக்கு 8G தொழில்நுட்பத்தின் அடிப்படையில் முகம் பார்த்து கலந்துரையாடும் வசதியினை வழங்குகின்றோம்.
*நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அமைவாக, உடனுக்குடன் டச் மாடல் டீவித் திரை மூலம் விளக்கங்களும், பதில்களும் வழங்கப்படும்.  இது எப்பூடி இருக்கும் என்றால், நீங்கள் விளக்கம் கேட்கும் பொருட்களை நேயர்களாகிய நீங்கள் டச் பண்ணி உணர்ந்து கொள்ளும் 8G டெக்னாலயினை நாம தான் உலகத் தொலைக்காட்சிகளில் அறிமுகப்படுத்துகிறோம் நேயர்களே.
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
சரி நிகழ்ச்சிக்குள் போவோமா? எங்களோடு நீங்கள் இணைந்து கொள்ள அழைக்க வேண்டிய தொலைபேசி இலக்கங்கள்: 01!45#<><>/%78|\
இது தான் நிகழ்ச்சிக்கான தொலைபேசி இலக்கங்கள். நாம இப்போது மார்டன் டெக்னாலயி ஒலகத்தில் வாழுவதால் நீங்க எல்லோருமே இந்தத் தொலைபேசி இலக்கத்தின் வாயிலாக 8G டெலிபோன் மூலமா பேச முடியும்.
சரி மொத நேயரா யார் வந்திருக்காங்க என்று பார்ப்போம்.

ஹலோ வணக்கம் சார், யார் பேசுறீங்க?
ஹலோ வணக்கம் சார், நான் உளூந்தூர்ப் பேட்டையிலிருந்து ஊத்தராசா பேசுறேனுங்க. என்னோட கேள்வி வந்துங்க, 
இந்த 2G டெக்னாலயினை வைச்சுக் கொள்ளையடிச்சாங்களே, அவங்களுக்கு திஹாரில முன்னாடி தண்டனை கொடுத்திருந்தாங்க. இப்போ நாம உங்களோட 8G டெக்னாலயிலை கை வைச்சிட்டா என்ன பண்ணுவீங்க?
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
விசுக்கோத்து: ஓ...அதுவா...நீங்க கையை வைச்சாலே போதுமுங்க. உங்களுகெல்லாம் கனிமொழி காவியம் என்ற ஒரு புக்கை லைவ்வா டீவியில HTML கோடிங் மூலமா படிக்க வைச்சு, ராச வலி வர வைச்சிடுவேனுங்க.
ஊத்தராசா: அது என்னங்க சார் ராஜ வலி...
கஸ்மாலம்: ஓ....அதுவா உங்களுக்கெல்லாம் சொன்னப் புரியாதுங்க. நீங்க அனுபவிச்சாத் தான் உணர்ந்து கொள்ளுவீங்க... ஆட்சிக் கட்டிலில் பிரிய மனமின்றி மேலே போகும் டைம்மிலும் உட்கார்ந்திருக்கிறது சார்.
வேண்ணா ஒருவாட்டி ட்ரை பண்ணிப் பாருங்களேன்?
ஊத்தராசா: என்னங்க சார் கலைஞர் பாட்டுப் பாடுவது போன்று ரீல் ஓட்டுறீங்க. ஐயோ...வேணாமுங்க.ஆளை விடுங்க. மீ..எஸ்...

கஸ்மாலம்: அடுத்த நேயராக யார் வந்திருக்காங்க என்று பார்ப்போம். ஹலோ வணக்கமுங்க.

மவுசன்: சார் நான் ஸ்ரீலங்காவில இருந்து மவுசன் பேசுறேனுங்க.
விசுக்கோத்து: சொல்லுங்க மவுசன் உங்களுக்கு என்ன பிரச்சனை?
மவுசன்: சார் என்னோட ஈமெயில்ல நடிகைங்க படம் மட்டும் தான் வருதுங்க. ஆனா நானும் ரொம்ப நாளா ட்ரை பண்றேனுங்க சார். கனவில வாற நடிகைங்க, மெயிலில் டச்சிங் பண்ணிப் பார்க்கிற மாதிரி வரமாட்டேங்கிறாங்களே?
ஒங்களோட 8G தொழில்நுட்பம் மூலமா நடிகைங்களை நாம டச்சிங் பண்ணிப் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தீங்களே? என்னாச்சு சார்?

விசுக்கோத்து: ஓ அதுவா சார்...உங்களுக்கு எத்தனை வயசு இருக்கும் சார்?
மவுசன்: எனககா சார், எனக்கு குத்து மதிப்பா ஒரு 32 வயசு இருக்கும் சார்.
விசுக்கோத்து: அப்படீன்னா நீங்க இன்னும் ஐம்பது வயசு வெயிட் பண்ணனும். எண்பது வயசுக்கு மேற்பட்டவங்களுக்குத் தான் எங்களோட 8G தொழில்நுட்பம் மூலமா டச்சிங் பண்ணி, மானாட மயிலாட என்று நடிகைங்க அருகே இருந்து நடனங்களைப் பார்த்து ரசிக்கிற பர்மிசன் கொடுத்திருக்கிறோம். அதெல்லாம் ஒங்கள மாதிரி யூத் பசங்களுக்கு எட்டாக் கனி சார். வேறு ஏதாச்சும் கேள்வி வைச்சிருக்கிறீங்களா? ஆமா சார், என்ன கேள்வி வேண்ணாலும் கேட்கலாமா?
மவுசன்: கலைஞருக்கும் கம்பியூட்டருக்கும் என்ன சார் தொடர்பு?
கஸ்மாலம்: கலைஞ்ஞரும் கம்பியூட்டரும் நாம பின்னாடி இருந்து இயக்கினாத் தான் இயங்குவாங்க சார்..
மவுசன்: புரியலையே சார்?
விசுக்கோத்து: போடாங்..........ரெண்டுக்குமே மின்சாரம் வேணுமுங்க. இல்லேன்னா கம்பியூட்டரும் இயங்காது, பின்னாடி இருந்து யாராச்சும் உணர்ச்சி கூட்டலைன்னா கலைஞ்ஞரும் இயங்காரு! போதுமா...
மவுசன்: ரொம்ப நன்றி சார்.

அடுத்ததாக ஆலிங்கு மலையிலிருந்து அலமேலு இணைஞ்சிருக்கிறா.
வணக்கம் அலமேலு மேடம்,
வணக்கம் விசுக்கோத்து மற்றும் கஸ்மாலம் சார்,
அலமேலு: என்னோட கேள்வி என்னான்னா...என் கம்பியூட்டருக்கு ஏதோ வைரஸ் பிடிச்சிருக்கு என்று என் பசங்க சொல்லுறாங்க சார். இதானால என்னோட புள்ளைங்களுக்கும் எனக்கும் ஏதாச்சும் ஆபத்து வருமா சார்? இதிலிருந்து தப்பிக்க வழியே இல்லையா சார்? இந்த வைரஸைக் கொல்ல ஏதாவது மருந்து இருக்கா சார்?

கஸ்மாலம்: மொதல்ல உங்க பிள்ளைங்களை கம்பியூட்டருக்கு கிட்ட போக விட்ராதீங்க. கண்டிப்பான உத்தரவு இது.
அப்புறமா, புள்ளைங்க இல்லாத நேரமா பார்த்து இந்தக் கம்பியூட்டரைத் தூக்கிட்டுப் போய், ஏதாச்சும் ஒதுக்குப் புறமான இடத்தில் உள்ள குப்பையில் போட்டு பெட்ரோல் ஊத்திக் கொழுத்திடுங்க. இல்லேன்னா இந்த வைரஸ் ஒங்களுக்கும் பரவி, உங்க குடும்பம், உறவினர் என்று எல்லோருக்கும் பரவீடுமுங்க.
அலமேலு: ஓக்கே சார், கடைசியா ஒரு கேள்வி, இந்தக் கம்பியூட்டர் மூலமா உங்க கூடப் பேசும் போது, நாம பேசுற கேபிள் வழியா வைரஸ் ஏதும் ஒங்களுக்குப் பரவ சான்ஸ் இருக்கா சார்?
விசுக்கோத்து: ஏலேய்..என்னா கிண்டலா...நம்ம கஸ்மாலம் சாரோட டீவியை என்ன நினைச்சிருக்காய்?
திஹார் ஜெயில்க் கம்பியால கவரடிச்சில்லே டீவி ஸ்டேசன் கட்டியிருக்கோம்...........
ஹலோ....ஹலோ...அலமேலு மேடம் இருக்கீங்கா?
கஸ்மாலம்: அவங்க போயிட்டாங்க.
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
விசுக்கோத்து: கஸ்மாலம் சார், அவங்க லைனைக் கட் பண்ணிட்டு ஓடிட்டாங்க சார். அடுத்த நேயர் கூடப் பேசிப் பார்ப்போம் சார்.
கஸ்மாலம்: நீங்கள் இணைந்திருப்பது கும்ஸ்கா டீவியின் கேள்வி பதில் நிகழ்ச்சியோடு. அடுத்த நேயராக யார் வந்திருக்காங்க என்று பார்போம். வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
ஹலோ வணக்கம். 
ஆமா வணக்கங்முங்க. 
நான் லைனில இருந்து டெலிபோன் பேசுறேனுங்க.
கஸ்மாலம்: யார் பேசுறீங்க சார்?
நான் லைனில் இருந்து டெலிபோன் பேசுறேனுங்க.
விசுக்கோத்து: என்னங்க சார்? நிகழ்ச்சி முடியப் போற டைம்மில எடுத்து இப்படி புரியாத மொழி பேசுறீங்களே சார்?
டெலிபோன்: ஓ...இதுவா புரியாத மொழி,
என்னா பேச்சுப் பேசுறீங்க நீங்க. இது HTML கோடிங் சார். இதைக் கூடப் புரியாத மொழி என்று சொல்லுறீங்களே.  அப்போ எதுக்கு சார் டீவியில் கம்பியூட்டர் கேள்வி பதில் வைக்கிறீங்க? போடாங்க்.....@#$##$%$#&*&((())()_)()_()__()()(:”::””:”””:”:{}}{{}}{}
விசுக்கோத்து: கட்... கட்....கட்...........

சாரி நேயர்களே, மன்னிக்கவும் சரி நேயர்களே, இன்றைய எமது முதல் நிகழ்ச்சி சுவையாகவும் சுவாரஸ்யமாகவும் நடந்து முடிந்தது. எமது அடுத்த நிகழ்ச்சியில் கம்பியூட்டர் கஸ்மாலம் பகுதி வாயிலாக உங்களைச் சந்திக்கும் வரை நாங்கள் விடை பெற்றுக் கொள்கின்றோம்.
விடை பெறுவது: உங்கள் கஸ்மாலம், மற்றும் உங்கள் நண்பன் விசுக்கோத்து.

*******************************************************************************
ஹலோ வணக்கமுங்க: இது கும்ஸ்கா டீவி தானே?
ரிசெப்சன் லேடி: ஆமாங்க சார். சொல்லுங்க.
அலுக்கோசு: நான் விசுக்கோத்து நிகழ்ச்சியைக் கேட்டுப் பைத்தியமான, அலுக்கோசு ஆகிய குளுக்கோசு பேசுறேனுங்க.
ரிசெப்சன் லேடி: சொல்லுங்க சார். உங்களுக்கு நான் எப்படி உதவி செய்ய?
அலுக்கோசு: எனக்கு நீங்க உதவி ஒன்னும் செய்ய வேணாம் மேடம். நம்ம கலைஞர் ஐயாவை உங்க டீவி மூலமா அவமதிசிருக்கீங்க மேடம். நாம விட்டுருவோமா?
உங்க டீவி ஸ்டேசனுக்கும் வைரஸ் அனுப்பிட்டோமில்லே!
உங்களோட டீவியினுள் புதுசா ஒரு மஞ்சள் துண்டு வைரஸ் வந்திருக்கும் போய்ப் பாருங்க.
ரிசெப்சன் லேடி: என்னா சொல்றீங்க சார்?
அலுக்கோசு: மேடம் உங்க டீவியினுள் நாம 2G அலைக்கற்றை மூலமா வைரஸ் ஏவியிருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்துல உங்க டீவியோட ஆட்டம் குளோஸ்....
ரிசெப்சன் லேடி: வையுங்க சார் போனை. இப்ப என்ன பண்றேன் என்று பாருங்க. இப்பவே நெருப்பை பத்த வைச்சு டீவியினைக் கொழுத்திடுறேன்!!
வெட்கம் மானமின்றி நாற்றிலிருந்து காப்பி செய்கின்றேன்.
********************************************************************************

Friday, September 2, 2011

Dont press #90 or #09 on mobile

தேவை! ஒரு நல்ல தலைமை....!

தினமணி தலையங்கம் :: தலைமைக்கான தேடல்...!




அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதமும் அதைச் சார்ந்து நாடு தழுவிய அளவில் எழுந்த மக்கள் போராட்டமும் அடங்கி விட்டிருக்கிறது. லோக்பால் மசோதா நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு அனுப்பப்பட்டு, பல்வேறு ஆலோசனைகளும் பரிசீலிக்கப்பட்ட பிறகு சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தின் ஒப்புதலுக்கு வைக்கப்படும். இதனாலேயே பிரச்னை முடிந்துவிட்டது என்றோ, லோக்பால் மசோதா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதாலேயே ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுவிடும் என்றோ அர்த்தமில்லை.

"ஊழலை ஒழிக்கவே முடியாது',

"அண்ணா ஹசாரேயின் இயக்கம் வெறும் தொலைக்காட்சிச் சேனல்களால் பெரிதுபடுத்தப்பட்ட இயக்கம்',

"இந்த மக்கள் எழுச்சியின் பின்னால் கார்ப்பரேட் நிறுவனங்கள் இருந்தன',

"அண்ணா ஹசாரேயும் குழுவினரும் பாரதிய ஜனதாக் கட்சியின் ஆதரவாளர்கள்',

"மக்கள் தெருவில் இறங்கிப் போராடுவது என்பது மக்களாட்சித் தத்துவத்துக்கு எதிரானது, நாடாளுமன்றத்தைக் கொச்சைப்படுத்துவது”  

இப்படி இன்னும் என்னென்னவோ விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. அவரவர் பார்வை அவரவருக்கு. ஆனால், மக்கள் ஊழலுக்கு எதிராக ஒருமித்த குரலில் தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்கத் தெருவில் இறங்கிப் போராடத் தயாராகி விட்டனர் என்பதுதான் யதார்த்த உண்மை.

லோக்பால் மசோதா நிறைவேற்றப்பட்டு, லோக்பால் அமைப்பு ஏற்படுவதால் ஊழல் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விடாது என்பது அனைவருக்கும் நன்றாகவே தெரியும். ஆனால், அப்படி ஓர் அமைப்பு ஏற்படுவதுகூட நமது அரசியல்வாதிகளுக்கு ஏற்புடையதாக இல்லையே என்பதுதான் மக்களின் ஆத்திரத்துக்குக் காரணம். காவல்நிலையங்கள் இருப்பதாலும், சிறைச்சாலைகள் உள்ளதாலும் குற்றங்கள் குறைந்து விடுகிறதா என்ன? அதற்காக, காவல் நிலையமோ, குற்றங்களைக் கண் காணிக்கவும் தடுக்கவும் தண்டிக்கவும் சட்டமே வேண்டாம் என்றால் எப்படி?

தொலைக்காட்சிச் சேனல்களின் முனைப்பினால்தான் இந்தப் போராட்டம் வலுப்பெற்றது என்பது ஏற்புடைய வாதமல்ல. கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் இரண்டு சக்தி வாய்ந்த தொலைக்காட்சிச் சேனல்கள் அன்றைய ஆளும்கட்சிக்குச் சாதகமாகப் பிரசாரத்தை முடுக்கி விட்டன. மக்களை ஈர்க்க முடிந்ததா இல்லை ஏமாற்றத் தான் முடிந்ததா?

ஊருக்கு ஊர், தெருவுக்குத் தெருவலுத்து வரும் இந்தப் போராட்டத்துக்கு மேலும் வலு சேர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஊடகங்கள் உந்தப் பட்டன.  
ஊடகங்களின் ஆதரவு இல்லாமல் இருந்தாலும், இந்தப் போராட்டம் வலுப்பெற்றிருக்கும்.

ஒரு வார இதழில் வெளிவந்திருக்கும் கட்டுரையில் குறிப்பிட்டிருப்பது போல, "அண்ணா ஹசாரே ஓர் எளிய மனிதர். அவர் ஒரு பெரிய சித்தாந்தவாதி அல்ல. அவர் ஒரு காந்தியும் அல்ல. நிச்சயம் இன்னொரு ஜெயப்பிரகாஷ் நாராயணனும் அல்ல''.

அந்தக் கட்டுரையாளர் குறிப்பிட்டிருப்பதுபோல, அண்ணா ஹசாரேவுக்கு ஆதரவுக் குரல் கொடுத்தவர்கள் சிறுபான்மைக் கூட்டமாக இருக்கலாம். ஆனால், ஜனநாயகத்தில் அவர்களும் தவிர்க்க முடியாத ஓர் அங்கம். ஒரு மகத்தான மாற்றத்துக்கான அடித்தளத்தை இந்தப் போராட்டம் நிச்சயமாக உருவாக்கும். அதைத்தான் நாடாளு மன்றத் தீர்மானம் உறுதிப்படுத்தி இருக்கிறது.

மக்களாட்சித் தத்துவத்தின் அடிப்படை எதிர்பார்ப்பு, தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதிநிதிகள் மக்களின் உணர்வுகளைப் பிரதிபலிக்க வேண்டும் என்பது. இங்கே தேர்தல் நடக்கிறது, பிரதிநிதிகள் இருக்கிறார்கள், பெரும்பான்மை பலம் கொண்ட கட்சி அல்லது கூட்டணி ஆட்சி அமைக்கிறது. அமைச்சரவையும் பிரதமரும் நிர்வாகத்தை நடத்துகிறார்கள். நாடாளுமன்றம் கூடுகிறது, பேசுகிறது, கலைகிறது. ஆனால், இவர்கள் யாரும் மக்களின் உணர்வுகளைப் பிரதி பலிப்பதில்லை என்பதுதான் உண்மை நிலை. தேர்தல் நடப்பதால் மக்களின் கோபம் வாக்குச் சாவடிகளில் பிரதிபலித்து, தேர்தலுக்குத் தேர்தல் ஆட்சி மாற்றத்தால் தணிந்து விடுகிறது.

அண்ணா ஹசாரே இயக்கத்துக்கு தில்லி, மும்பை, பெங்களூர், ஹைதராபாத், புவனேஸ்வரம் போன்ற நகரங்களில் இருந்த அளவுக்கு உத்வேகமும் உற்சாகமும் சமீபத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடந்த கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாமில் இல்லாமல் போனதற்கு தேர்தலும் ஆட்சி மாற்றமும் அவர்களது கோபத்தைச் சற்று தணித்திருந்தது தான் காரணம்.

கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒன்றன்பின் ஒன்றாக வெளிவரும் மெகா ஊழல்களும், அந்த ஊழல்களை மறைப்பதற்கு மத்திய அரசு எடுத்துக் கொண்ட அக்கறையும் தான் மக்களை இந்த அளவுக்கு விரக்தியின் விளிம்புக்கே அழைத்துச் சென்றிருக்கிறது.

ஒருவேளை அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதமும் லோக்பால் மசோதா பிரச்னையும் ஏற்படாமல் போயிருந்தால், இந்தியாவின் மூன்றில் ஒரு பங்கு மாவட்டங்களில் தீவிரமடைந்திருக்கும் தீவிர வாதம் மேலும் பல மாவட்டங்களுக்கும் பரவி இருக்கக்கூடும்.

அரசு அலுவலகங்களிலும், காவல்துறையிலும் காணப்படும் சிறு லஞ்சங்கள்தான் சராசரி குடிமகனை அதிகமாக அலட்டுகிறது. ஆனால், 2ஜி-யிலும், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளிலும், கடந்த பாஜக தலைமையிலான ஆட்சியில் நடந்த யு.டி.ஐ. முறைகேடு, சவப்பெட்டி ஊழல் போன்றவைகளிலும் கொள்ளைபோன பல கோடிகள் அந்தக் கோபத்தைக் கொந்தளிப்பாக மாற்றிவிட்டது.

வெள்ளைக்கார ஆட்சியில் இருந்து விடுதலை கிடைத்தது போல இன்றைய அரசியல் வாதிகளின் கொள்ளைக்கார ஆட்சியிலிருந்தும் விடுதலை கிடைக்க வேண்டும் என்று சராசரி இந்தியர் ஆசைப் படுகிறார் என்பது தெரிகிறது.

ஊழலின் ஊற்றுக்கண்ணாக இருப்பது நமது நிர்வாக இயந்திரம். ஒழுக்கமற்ற அரசியல் தலைமை. ஊழல் உருவாவதற்கான காரணம் நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மை இல்லாமல் இருப்பது.

இதற்கு முதலில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். லோக்பால் எந்த அளவுக்கு முக்கியமோ அதைவிட முக்கியம் நிர்வாக சீர்திருத்தம், நீதித் துறை சீர்திருத்தம்.

அண்ணா ஹசாரேயின் உண்ணாவிரதம் முடிந்திருக்கிறதே தவிர, சராசரி இந்தியரின் உணர்வுகளைப் பிரதிபலிக்கும் தலைமைக்கான தேடல் இப்போது தான் தொடங்கி இருக்கிறது.

பொது வாழ்க்கையில் நேர்மையும் தனிமனித வாழ்க்கையில் தூய்மையும் உள்ள ஒரு தலைமைக்கான தேடல் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது ஏற்பட்டிருக்கிறது. அதுதான் சராசரி இந்தியனின் பிரச்னைக்கும், வருங்கால இந்தியாவின் வலிமைக்கும் தீர்வாக இருக்க முடியும்!
------------------------------------------------------------------------------------------------------------------------------------

தினமணி தலையங்கம் பிரச்சினையின் ஆணிவேரைத் தொட்டு எழுதப் பட்டிருப்பதை, இதில் பெயர்களைத் தவிர்த்து விட்டுப் பார்த்தாலே புரிந்துகொள்ளக் கூடியதுதான்! 

நேரு காலத்தில் இருந்தே பொதுவாழ்க்கையில் நேர்மையான, தனிமனித ஒழுக்கமுள்ள, பொறுப்பாக செயல் படத்தெரிந்த ஒரு தலைமைக்காக இந்த தேசம் தவமாய்த் தவமிருக்க ஆரம்பித்து விட்டது.

நேருவிடமிருந்த வசீகரம்,அவரைத் தகுதியுள்ள தலைவராக மாறக் கொஞ்சம் கூட உதவவில்லை! சமாதானப் புறாவாகக் காட்டிக் கொண்டு சர்வதேசப் புகழுக்காக ஏங்கிய நேருவின் போக்கு, தேசத்தை இன்றைய தேதி வரை பல பிரச்சினைகளில் தள்ளி விட்டிருக்கிறது. 

காஷ்மீர் பிரச்சினை நேருவின் தனிநபரின் அகந்தை, இந்த தேசத்துக்கு விட்டுச் சென்றிருக்கிற சீ(ழ்)தனம்!  

அவருக்குப் பின் பதவியேற்ற அவருடைய மகள் இந்திரா,மிரண்ட மாடு எல்லாவற்றையும் முட்டிச் சாய்க்கிற மாதிரியே,தன்னுடைய பாதுகாப்பாற்ற உணர்வினால் எல்லாவற்றையும் சந்தேகப்பட்டு, எல்லாவற்றையுமே நாசப்படுத்திய நபராகிப் போனார். 

அவரைத்தொடர்ந்து அரியணை ஏறிய ராஜீவ் காண்டி, கொஞ்சம் நம்பிக்கை ஊட்டியதென்னவோ உண்மை!ஆனால் அவரைச் சுற்றியிருந்த ஆலோசகர்கள், துதிபாடிகள் கூட்டம், ராஜீவை செயல்பட முடியாதவராக்கி வைத்தது. அவருடைய இத்தாலிய மனைவியின் உறவினர்கள் ஊழலில் ஈடுபட்டதைத்தடுக்க அவர் ஒன்றுமே செய்யவில்லை அல்லது முடியவில்லை.

ராஜீவின் கொடூரமான மரணத்தைத்தொடர்ந்து, இத்தாலிய மருமகள், தியாக சிகரமாகத் தன்னைக் காட்டிக் கொள்ள நடத்திய நாடகங்கள் இன்றைக்கு ஒவ்வொன்றாக சந்திக்கு வந்து சிரித்துக் கொண்
டு இருக்கின்றன.அவரை ஒதுக்கிவிட்டு, தன்னுடைய முகத்தைக் காட்டி ஒட்டுக் கேட்டால், பத்து ஓட்டுக் கூடத்தேறாது என்பதைப் புரிந்து கொண்ட துதிபாடிகள் மட்டுமே இன்றைக்குக் காங்கிரசில் நிரம்பி இருக்கின்றனர்!

இந்தப்பக்கங்களில், இந்தியா இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினை அத்தனைக்கும் காரணம், ஒரு வலிமையான தெளிவாக முடிவெடுக்கத் தெரிந்த அரசியல் தலைமை இல்லாமல் இருப்பது தான் என்பதை பல முறை பேசியிருக்கிறோம்.அதற்கும் மூல காரணம், எங்கே எது நடந்தால் எனக்கென்ன என்ற நம்முடைய அலட்சியமான மனோபாவம் தான் என்பதையும் பேசியிருக்கிறோம்.

தலைவர்களாக இருப்பவர்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்ளும் தருணங்களில்,அடுத்த வரிசையில் இருப்பவர்கள் சரியாக இருந்தால் சமாளித்துக் கொள்ளலாம். ஒட்டு மொத்தமுமே ஒட்டுண்ணிகளாக இருக்கும்போது,வேரோடு வெட்டிச் சாய்த்து விடுவதைத் தவிர வேறு வழி உதவாது.

காளிமுத்து சொன்னது மாதிரி கருவாடு  மீனாகாது! 
அல்லது 
கருணாநிதி சொன்னது மாதிரி, காகிதப்பூ மணக்காது! 

அவ்வளவுதான்!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...