Thursday, October 11, 2012

ஆஜீத் சூப்பர் சிங்கரின் நாயகன்..!

விஜய் டீவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்ச்சியை பார்ப்பவராக இருந்தால் "ஆஜித்" என்ற பெயரை தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை! அந்த நிகழ்ச்சியில் அவன் பாடும் பாடல்கள் அவ்வளவு பிரபலம்! அவன் பாடினாலே அந்தப்பாடலுக்கு தனியழகு கிடைத்து விடுகிறது.. வெறும் புகழுக்காக சொல்லவில்லை அத்தனை திறமை அவனுக்குள்..

அவனின் குரல் வளத்தைப்போன்ற பாடும் போது முகபாவங்களும்,உணர்ச்சிகளும், உடல் அசைவுகளும், ஸ்டையிலும் அந்தப்பாடலை எங்கோ கொண்டு சென்றுவிடுகிறது.. வெறுமனே புதிய பாடல்களின்றில்லாமல் பழைய பாடல்களையும் மிக அழகாக அனுபவித்து பாடக்கூடியவன்..இதற்கு உதாரணம் பி.பி.ஸ்ரீநிவாஸ் பாடிய "அனுபவம் புதுமை" என்ற பாடலை பாடிய விதம்.. இவன் பாடிய பிறகே இந்தப்பாடல் என்னை அதிகம் கவர்ந்துள்ளது.. இப்படி பல பாடல்கள் இவன் பாடியது பிரமாதம்.. ஒரு பாடலை பாடிக்கொண்டிருக்கும் போது பாடல்வரிகள் மறந்து கொஞ்சம் சொதப்பிவிட்டதின் காரணமாக அச்சுற்றிலிருந்து வெளியேற்றிவிட்டார்கள்! பின் இப்போது வய்ல் கார்ட் சுற்றில் பாடிய மூன்று பாடலையும் சூப்பராக பாடி வந்திருந்த நடுவர்களின் அமோக ஆதரவை பெற்றுவிட்டான்.. அதிலும் அந்த "ஆரோமலே" பாடலுக்குப்பின் இவன் உயரமே வேறு என்றாகிவிட்டது! நடுவர் விஜய்பிரகாஷ் மற்றும் பலர் சொன்னது போல இவன் ஏன் இறுதிசுற்றுக்கு நேரடியா போகவில்லை என்பது ஆச்சர்யம்தான்!

ஆஜித் பாடிய பாடல்களில் எனக்கு எல்லாமே பிடித்ததுதான் அவற்றில் சில பாடல்கள் இங்கே!
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்..



 ..

ஆரோமலே....



நீயே நீயே நெஞ்சில் வாழும்..டெடிகேசன் ரவுன்ட்

Monday, October 8, 2012

விருப்பப்படி விலையேற்றுவோம் ‍- சிதம்பரம் அதிரடி!

டீசல் விலை உயர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு வலுக்கிறது. கட்சிகளும் வழக்கம் போல தங்கள் நாடகங்களை ஆரம்பித்துள்ளன. நம் நாட்டில் தான் என்ன வேண்டுமானாலும் நடக்கலாமே சார். எனவே, வரும் வாரம் இந்தப் பதிவில் வருவதைப் போல ஏதேனும் நடந்து விடுமோ என்று பயமாக இருக்கிறது. அப்படி ஏதும் நிகழ்ந்து விடாமல் இருக்க பாரத மாதாவை வேண்டிக் கொள்வோம். இனி கற்பனைக்கு போகலாம். இன்றைய கற்பனை நம் நாட்டில் நாளைய செய்தி ஆகாது என்று என்ன சார் நிச்சயம்?

டீசல் விலை உயர்வுக்கு எதிர்ப்பு குறித்து மன்மோகன் சிங், சிதம்பரத்திற்கு போன் செய்கிறார். "என்னப்பா சிதம்பரம், மக்கள் எதற்கெடுத்தாலும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்களே...நாம் எதில் கை வைத்தாலும் கதை கந்தலாகிறதே...ஏதாவது செய்யப்பா" என்கிறார். சிதம்பரம், "கவலைப்படாதீர்கள். நம் மக்கள் எந்த எதிர்ப்பையும் நாலு நாள் செய்வார்கள். பிறகு ஆர்வம் வேறு விஷயங்களின் மீது போய் விடும். இருந்தாலும், நான் என் கடமையை செய்யாமல் இருக்க முடியுமா? நாளையே பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்கிறேன். நான் பேசுவதற்கு தலையாட்ட இரண்டு அமைச்சர்களை வரச்சொல்லுங்கள்" என்கிறார்.

கூட்டம் ஏற்பாடாகிறது. "Times Now" போன்ற TV channels நேரடி ஒளிபரப்பு செய்கின்றன. இனி பத்திரிகையாளர்களின் கேள்விகளையும், சிதம்பரத்தின் பதில்களையும் பார்ப்போம்:

பத்தி: சார், மீண்டும் ஒரு விலையேற்றமா என்று மக்கள் கொதிக்கிறார்கள். அரசு என்ன செய்யப் போகிறது?

சிதம்பரம்: நீங்கள் அரசின் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாராட்டுகிறேன். எதையுமே செய்ய முடியாத அரசை பார்த்து என்ன செய்யப் போகிறீர்கள் என்று ஆக்கபூர்வமாக கேள்வி கேட்டதற்கு நன்றி.

பத்தி: நீங்கள் இன்னும் கேள்விக்கு பதில் சொல்லவில்லை.

சிதம்பரம்: மன்மோகன் சிங் ஏற்கனவே, ஒரு மெளனம் ஓராயிரம் பதில்களுக்கு சமம் என்று உங்களிடம்தானே போன வாரம் சொன்னார்? அவரின் அமைச்சரின் மெளனம் ஐநூறு மெளனங்களுக்காவது சமம் என்பதுதான் என் பதில்.

பத்தி: டீசல் விலை ஏறினால் அனைத்து பொருட்களின் விலையும் ஏறி விடுமே?

சிதம்பரம்: நாங்கள் இறங்கி விடும் என்று சொன்னோமா?

பத்தி: நீங்கள் மூத்த அமைச்சர். மக்கள் உங்களிடமிருந்து தீர்வுகளை எதிர்பார்க்கின்றனர்.

சிதம்பரம்: நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். ஐந்து வருடங்களுக்கு முன் உங்கள் சம்பளம் எவ்வளவு? (நிருபர் சொல்கிறார்). இப்போது எவ்வளவு? (நிருபர் சொல்கிறார்). (இன்னொருவரை எழுப்பி இதே கேள்வி கேட்கிறார். அவரும் பதில் சொல்கிறார்). பாருங்கள், அனைவரின் சம்பளமும் வருடா வருடம் கூடிகிறது. விலைவாசி கூடினால் மட்டும் குறை சொல்கிறீர்கள்? சம்பளம் கூடினால் வரும் அதிக பணத்தை விலைவாசி கூடினால் தானே செலவழிக்க முடியும்? (பதிலைக் கேட்ட பலர் மயக்கம் போட்டு விழுகின்றனர்!).

பத்தி: அப்படியென்றால் எந்த பொருளின் விலை உயர்ந்தாலும் நீங்கள் தடுக்க மாட்டீர்களா?

சிதம்பரம்: நாங்கள் டீசல் விலையைத்தான் உயர்த்தினோம். மற்ற பொருட்களின் விலை உயர்ந்தால், அந்தந்த அமைச்சர்கள் உங்களுக்கு விளக்கம் கொடுப்பார்கள்.

பத்தி: இந்த காஸ் சிலிண்டர் ரேஷன் முறை....(அவர் முடிக்கும் முன் சிதம்பரம் பதில் சொல்கிறார்)

சிதம்பரம்: என்ன கேள்வி இது? நம்ம நாட்டில் எத்தனை வீட்டில் தினமும் சமைக்கிறார்கள்? Pizza சாப்பிட்டு விட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு சிலிண்டர் எதற்கு?

பத்தி: சார், உங்க ice cream - அரிசி விளக்கம் மாதிரிதானே சார் இதுவும்? நல்லா தெளிவாயிடுச்சு. நன்றி.

சிதம்பரம்: தலைப்புச் செய்தியா போடுங்க. அது மட்டுமில்லை. விருப்பப்பட்டா நாங்க விலையேத்துவோம்.அதையும் தெளிவாக போடுங்க...

(இதைக் கேள்விப்பட்டு நாடே கொந்தளிக்கிறது. நிலைமையை சமாளிக்க அடுத்த நாளே மற்றொமொரு பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடாகிறது)

சிதம்பரம்: பத்திரிகையாளர்கள் பொறுப்புடன் செய்திகள் போட வேண்டும். நான் "விருப்பப்படி விலையேற்றுவோம்" என்று சொன்னேன். ஆனால் யார் விருப்பப்படி என்று நீங்கள் கேட்டீர்களா? கேட்டிருந்தால், "மக்கள் விருப்பப்படி விலையேற்றுவோம்" என்று தெளிவுபடுத்தியிருப்பேன்...இப்போது பாருங்கள்...நான் சொன்னது எவ்வளவு தவறாக மக்களிடம் போய்ச்சேர்ந்திருக்கிறது...


என்ன பேசுவது என்று தெரியாமல் வாய் பிளந்தபடி நின்றிருந்த நிருபர்கள் வாயில் சிவகங்கையிலிருந்து சிறப்பாக வரவழைக்கப்பட்டிருந்த அல்வா வைக்கும்படி தன் உதவியாளரிடம் சொல்லிக்கொண்டிருந்தார் சிதம்பரம்.

நிருபர்களுக்கு மட்டுமா? நம் அனைவருக்குமே கொடுக்கக் கூடிய திறமையுள்ளவர்தானே அவர்!

போராடுவோம் போராடுவோம் கலர் கலரா சட்டை போட்டு போராடுவோம்...

குலைஞர் கருப்பு சட்டை போராட்டம் அறிவிச்சாலும் அறிவிச்சார்...தமிழ்நாடு அரசியல் வட்டாரம் சூடுப்பிடிக்குது...

கைலாபுரம் தோட்டத்தில்...

பன்புமணி: அப்பா, அப்பா எங்கப்பா இருக்க...கொஞ்சநாள் சவுண்டு இல்லாம இருந்தா மக்கள் நம்மளை மறந்துடுவாங்கப்பா..இப்ப பாரு குலைஞர் கருப்பு சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லி தொண்டர்களை உற்சாகமா வெச்சிக்கிட்டு இருக்காரு...

கோவதாஸ்: தம்பி நாம எந்த திராவிட கட்சியுடனும் கூட்டணி வைக்க மாட்டோம்.. திராவிட கட்சிகளை தமிழ்நாட்டில் இருந்து ஒழிப்பதே நம் வேலை...

பன்புமணி: யப்பா..நான் என்ன சொன்னா நீ என்ன சொல்ற...யப்பா போராட்டம் எதுனா டிசைன் டிசைனா அறிவிச்சி    இருக்கும் கொஞ்சம் தொண்டர்களையும் உற்சாகப்படுத்துப்பா..

கோவதாஸ்: அடிக்கடி கூட்டணி இல்லை இல்லைன்னு சொல்லி அதுவே தானா வந்துட்டுப்பா...சரி போராட்டம் தானே அறிவிச்சிடலாம்.. எல்லாரும் கருப்பு வேஷ்டி கட்டிகிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா?

பன்புமணி: யப்பா...அப்படியே காப்பி அடிச்ச மாதிரி இருக்கும்பா...வேற எதுனா வித்தியாசமா ட்ரை செய்யனும்...மொத்த தமிழ்நாடே திரும்பிபார்க்கனும்..

கோவதாஸ்: அப்ப இயற்கை ஆடை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா?

பன்புமணி: யப்பா என் பையனே ஷேம் ஷேம் பப்பி ஷேம் என்று சிரிப்பான்...

கோவதாஸ்: தம்பி இயற்கை ஆடைன்னா அது இல்ல...இலை தழைய எல்லாம் வெச்சி தச்சி அதைப்போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லிடுவோமா?

பன்புமணி: சூப்பர் ஐடியா..இப்படி செஞ்சா எல்லாரும் நம்மளைதான் பார்ப்பாங்க...

கோவதாஸ்: தம்பி அப்படி மொத்த தமிழ்நாடே திரும்பி பார்த்துச்சுன்னா..வரும் எம்.பி எலக்சனில் 10 சீட்டு வாங்குறோம்..உன்னை ராஜ்யசபா எம்பி ஆக்குறோம்...

பன்புமணி: திரும்ப நான் எம்பியா...

கோவதாஸ்: ஆமாம் நீ எம்பி ஆவுற.(இருவரும் 5 ஸ்டார் ரமேஷ் ,சுரேஷ் மாதிரி எம்.பி ஆவுறோம் என்று சொல்லிக்கிட்டே இருக்காங்க.)


********************
கபாலபுரம் வீட்டு முன்பு நிறைய கூட்டம்...

குலைஞர்: என்னய்யா இப்பதான் நாம ஆட்சியில் இல்லையே எதுக்கு இவ்வளோ கூட்டம் கூடியிருக்கு? பாசதலைவனுக்கு பாராட்டு விழா சீசன் 2 ன்னு எனக்கு தெரியாம எதுவும் ஏற்பாடு செஞ்சிட்டிங்களா?

ஏற்காடார்: (ஆஹா உள்ளுக்குள் இன்னும் அப்படி ஒரு ஆசை இருக்கா...அலர்ட் ஆகிக்கடா ஆறுமுகம்...) அது வந்து தலைவரே... திருப்பூர்ல இருந்து ஆளுங்க எல்லாம் வந்திருக்காங்க...உங்களை பார்த்து மனுக்கொடுக்கனுமாம்...

குலைஞர்: பாருய்யா இந்த ஆட்சியில் முதல்வரை சந்திச்சி மனுக்கொடுக்கக்கூட முடியாத நிலையில்.எக்ஸ் முதல்வர்கிட்ட மனுக்கொடுக்க வந்திருக்காங்க...

ஏற்காடார்: இல்லை தலைவரை இதை உங்ககிட்ட கொடுக்கதான் வந்திருக்காங்க..இதுக்கு நீங்கதான் உதவி செய்யமுடியுமாம்..

குலைஞர்: வரசொல்லுய்யா உதவி செஞ்சிடுவோம்...

(மனுக்கொடுக்க வந்தவங்க எல்லாம்) அய்யா நீங்கதான்யா எங்க வாழ்கையில் ஒளிவிளக்கேத்தனும்...

குலைஞர்: என்ன செய்யனும் என்று சொல்லுங்க செஞ்சிடலாம்...

ம.கொ.வ: அய்யா...கருப்பு கலர் சட்டை மட்டும் போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொன்னதை மாத்தி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு கலர் சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று அறிவிச்சா எங்கள் வாழ்கை நலமாக இருக்கும் அய்யா...

குலைஞர்: திருப்பூர் மக்களின் துயரத்தை போக்கும் வகையில் இந்த வாரம் கிளிப்பச்சை வாரம்....உடன்பிறப்பே இந்த வாரம் முழுவதும் கிளிப்பச்சையில் சட்டைப்போட்டுக்கிட்டு போராடும் படி கேட்டுக்கிறேன்...


புதுகை அப்துல்லா: தைக்கக்கொடுத்திருந்த 10 கருப்பு சட்டை ஆர்டர் கேன்சல்...இந்த வாரம் கிளிப்பச்சை வாரம்.

*******************
பாயகம் அலுவலகத்தில்...
பஞ்சில்சம்பத்:  அண்ணே...நீங்க போட்டு இருக்கும் துண்டுல இருந்து ஒரு மீட்டர் துணியை கட் செஞ்சி சட்டையா தச்சி போட்டுக்கிட்டு குலைஞர் போராட்டம் அறிவிச்சிட்டாரு...இப்படியே இருந்தா ஆளாளுக்கு ஒரு மீட்டர் கட் செஞ்சா நமக்கு கர்சீப்தான் மிஞ்சும் எதுனா செஞ்சி...புது டைப்பா போராட்டம் அறிவிச்சிடுங்க.

பைகோ: (இந்தியா மேப்ப எடுக்கிறார்...)தம்பி இந்த இடத்தில் தான் நாம இருக்கோம்...இங்கிருந்து ஆந்திரா பார்டர் 600 கி,மீ., அங்கிருந்து கர்நாடகா பார்டர் 1200 கி,மீ..அங்கிருந்து மத்திய பிரதேஷ் 3000கிமீ அங்கிருந்து டெல்லி அதுதான் நம்மளோட போராட்டம் நடக்கும் இடம்..அப்படியே நேஷ்னல் ஹைவேஸ்ஸை புடிச்சு 140 கி,மீ ஸ்பீட்ல நடந்துபோனோம் என்றால் 10 நாளில் டெல்லி போயிடலாம்..
பஞ்சில்சம்பத்: அண்ணே போராட்டம் எதுனா சொல்லுன்னா...விஜயகாந்த்படத்தில் குண்டுவைக்க வரும் தீவிரவாதி மாதிரி மேப்ப வெச்சி ஸ்கெட்ச் போட்டுக்கிட்டு இருக்க...வீ வாண்ட் மோர் எமோசன்...
பைகோ: அப்படிங்கிறீயா...சரி வுடு... வெள்ளைக்கலர் சட்டை, வெள்ளைக்கலர் வேஷ்டி, கருப்பு துண்டுடன்..அப்படியே கத்திபாரா ரோட்டை புடிக்கிறோம் பீச்சில் போய் போராடுறோம்...
பஞ்சில்சம்பத்: (போராட்டம் நடக்கும் என்று சொன்ன இடத்தில் சோகமா உட்காந்திருக்கார்..)அங்கே சோகமாக வரும் பைகோவை பார்த்து அண்ணேன்னு கதறிக்கிட்டு போகிறார்...
பைகோ: உனக்கும் அடிச்சிட்டாய்ங்களா..
பஞ்சில்சம்பத்: ஆமான்னே... நாம வெள்ளை சட்டை போட்டுக்கிட்டு போராட்டம் என்று சொல்லும் அன்னைக்குதான் ஹோலி கொண்டாடி நம்ம சட்டைய எல்லாம் கலர் கலரா மாத்திட்டானுங்கன்னே...
பைகோ: தம்பி...நாம உப்பு விக்கப்போனா மழை பெய்யிது...மாவு விக்கப்போனா காத்து அடிக்குது...
பஞ்சில்சம்பத்: சீட்டுக்கேட்டு போனா போயஸ் கார்டன் கதவை சாத்துது..அவ்வ்வ்வ்வ்
பைகோ: அவ்வ்வ்வ் கலங்காதே தம்பி கலங்காதே...அடுத்த மாசம் எவரஸ்ட் சிகரத்தில் போராட்டத்தை வைக்கிறோம்...எவன் நம்ம மேல கலர் அடிக்கிறான்னு பார்க்கலாம்...
பஞ்சில்சம்பத்: சிக்கநடைப்போட்டு சிகரத்தில் ஏறு....

************************************
நாங்களும் தமிழர் அலுவலகத்தில் கோமான்...
கோமான்: சட்டைய போடாதவன் தான் தமிழன்...அவன் தான் ஒரு அப்பனுக்கு பிறந்தவன் என்று பேசி சட்டையே போடாம ஒரு போராட்டத்தை அறிவிச்சிடலாமா?
அசிஸ்டெண்ட்: அண்ணே சூப்பரு...உங்க கண்ணுல கொஞ்சம் மிளகாய் பொடிய தூவுறோம்...அப்படியே கண்கள் இரத்த சிகப்பில் இருக்க நீங்க நரம்பு புடைக்க தமிழ்நாட்டில் இருக்கிறவன், சட்டை போட்டவன் எல்லாரையும் திட்டுறீங்க.. போராட்டம் செம சூடு பிடிக்குது..அங்க குலைஞரை திட்டி ஒரு சாங் வைக்கிறோம்...
ஆஹா போராட்டத்தைக்கூட சினிமா ஷூட்டிங் மாதிரியே டிஸ்கஸ் செய்யிறாய்ங்களே...நாம தப்பான இடத்துக்கு வந்துட்டோமோ?? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

Tuesday, October 2, 2012

உணவு மூலம் உடல் ஆரோக்கியம் அழகும் பெற!!

இன்றைய காலத்தில் அனைவரும் உடல் எடையை குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடும் முன்பு, அதிகமான அளவு உண்ணக்கூடாது என்பதற்காக சூப்பை சாப்பிடும் பழக்கத்தை கொண்டுள்ளனர்.

ஏனெனில் அதை சாப்பிட்டால், பாதி வயிறு நிறைந்துவிடும். மேலும் சூப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். அதிலும் ஏதேனும் குளிர் காலம், மழைக் காலம் என்றால் போதும், அந்த நேரத்தில் அடிக்கடி சூப் சாப்பிட வேண்டும் என்பது போல் தோன்றும். அவ்வாறு சாப்பிடும் சூப்பில் தக்காளி சூப்பில் நிறைய சத்துக்கள் உள்ளன. இதனை குடிப்பதால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் குறையும். சொல்லப்போனால் இது ஒரு சிறந்த டயட் மேற்கொள்ளும் போது உடலில் சேர்த்துக் கொள்வதற்கு ஏற்ற பொருள். அது எப்படியென்று கேட்கிறீர்களா? சரி, இப்போது அதைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளங்கள்.* உடல் எடையை குறைக்க சிறந்த பொருளான இந்த தக்காளி, உடலில் உள்ள அதிகமான கலோரியுன் அளவை கரைத்துவிடுவதோடு, உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கிறது. அதுமட்டுமல்லாமல், தக்காளியில் கலோரிகள் மற்றும் கொழுப்புகள் மிகவும் குறைவு. அதிலும் இந்த தக்காளியை ஆலிவ் ஆயிலுடன் சூப் செய்து சாப்பிட்டால், ஆரோக்கியத்திற்கு ஆரோக்கியமும், டயட்டிற்கு டயட் ஆகவும் இருக்கும். மேலும் தக்காளியில் தண்ணீர் மற்றும் நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், நீண்ட நேரம் பசியெடுக்காமல் இருக்கும். ஆகவே எடை எளிதில் குறையும்.

* இந்த சூப் சிவப்பு நிறத்தில் இருக்கும் தக்காளியால் செய்யப்படுவதால், புற்றுநோய்க்கு சிறந்தது. ஏனெனில் தக்காளியில் லைகோபைன் மற்றும் காரோட்டீனாய்டு என்னும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால், அது ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இதனை தினமும் அல்லது ஒரு நாள் விட்டு ஒரு நாள் குடித்து வந்தால், மார்பக புற்றுநோய் மற்றும் பல புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கலாம்.

* உடலில் உள்ள அதிகமாக இருக்கும் கெட்ட கொலஸ்ட்ரால்கள், உடலில் சேராமல் தடுக்கும் மற்றும் இரத்த அழுத்தம் ஏற்படுவதையும் குறைக்கும். அதனால் இதயத்தில் ஏற்படும் இதய நோய்கள், கோளாறுகள் ஏற்படாமல் தடுக்கும். மேலும் இந்த தக்காளியில் வைட்டமின் பி, பொட்டாசியம் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் அதிகம் இருக்கிறது. ஆகவே தக்காளி சூப்பை குடிப்பது நல்லது.

* புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த முடியாமல் இருப்பவர்கள், நீண்ட நாட்கள் ஆரோகக்கியமாக வாழ தக்காளி சூப்பை குடித்தால், உடலில் புகை பிடிப்பதால் ஏற்படும் நோய்களை தடுக்கலாம். அதுவும் தினமும் ஒரு பௌல் தக்காளி சூப்பை குடிப்பது நல்லது. ஏனெனில் அதில் உள்ள சத்துக்கள், புகை பிடிப்பதால் உடலை அழிக்கும் பொருளான கார்சினோஜென்னின் சக்தியை குறைத்துவிடுகிறது.

* தினமும் தக்காளி சூப்பை குடித்து வந்தால், சருமம் நன்கு அழகாக, பட்டுப் போன்றும், முகப்பரு மற்றும் சூரிய கதிர்களால் சருமத்தில் ஏற்படும் பழுப்பு நிறம் நீங்கிவிடும். அழகை மட்டும் பெறாமல், அதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் கே எலும்புகள், பற்கள் மற்றும் கண் பார்வைக்கு மிகவும் சிறந்தது.
எனவே, தக்காளி சூப் நல்லதா கெட்டதா என்று நினைத்து எதற்கும் பயப்படாமல், இனிமேல் சந்தோஷமாக விரும்பி குடித்து வாருங்கள், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, அழகும் பெறும்.

Monday, October 1, 2012

ஒரு தட்டு உணவின் விலை ரூ.7721 ?!!!!


டெல்லியில் உள்ள நமக்கு வேண்டிய நண்பரின் வீட்டு பின்புறத்தில் பணம் காய்க்கும் மரம் இருக்கிறது. தினமும் இரவு 12.00 மணியிலிருந்து 12.15 மணி வரை சரியாக 15 நிமிடம் பணம் பறித்துக் கொள்ளலாம். அதன் பிறகு பணம் மறைந்து போகும்.அவன் வீட்டு விருந்து சாப்பாட்டு விலைதான் ரூ.7721, அந்த நண்பர் வேறுயாருமல்ல பிரதமர் மன்மோகன்சிங்தான். சரிநண்பர்களே விஷயத்துக்கு வரேன்...
டீசல் விலை உயர்வு, எரிவாயு உருளை கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு விற்பனை ஆகிய மக்கள் விரோத நடவடிக்கைகளை நியா யப்படுத்தி உரையாற்றிய பிரதமர் “பணம் மரத் தில் காய்ப்பதில்லை” என்று திருவாய் மலர்ந்தரு ளியுள்ளார். அவருக்கு மட்டும் பணம் மரத்தில் காய்க்கிறது போலும்.
அவர் தலைமையேற்றுள்ள அரசின் மூன்றா வது ஆண்டு நிறைவின் போது, கூட்டணி கட்சி தலைவர்களுக்கும், பிரமுகர்களுக்கும், நாடாளு மன்ற உறுப்பினர்களுக்கும், இன்னும் பலருக் கும் ஒரு மகா விருந்து அளித்திருக்கிறார். அந்த விருந்தில் கலந்து கொள்ளும்படி 603 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட் டது. அதில் 375 பேர் தான் கலந்து கொண்ட னர். 603 பேருக்கு தயா ரிக்கப்பட்ட உணவில் பெரும் பகுதி வீணானது. இவர் தான் மக்களுக்கு சிக்கனத்தைப் பற்றி போதிக்கிறார். விருந்தில் படைக்கப் பட்ட உணவு வகைகளை “நம்ம மனுசங்க” (ஆம் ஆத்மி - யயஅ யயனஅi) கற்பனையில் மட்டுமே உண்டு மகிழ முடியும். இறால் கசுடி, மலபாரி மீன், செட்டிநாடு சிக்கன், கோஸ்ட் பர்ரா கபாப், டம் ஆலூ, அச்சாரி பைங் கன், பீஸ் மஜார் மட்டர், பிரியாணி, பேபி நான், மட்டர் பராத்தா, மிஸ்ஸி ரொட்டி, பழரசம், நெய் யில் வறுக்கப்பட்ட பாதாம்பருப்பு ஆகியவை விருந் தில் பரிமாறப்பட்ட சில பண்டங்கள் ஆகும். இவை அடங்கிய ஒரு தட்டு உணவின் விலை யைக் கேட்டால் நல்ல வசதி படைத்தவர்களுக்குக் கூட மயக்கம் வரக்கூடும். இவை அடங்கிய ஒரு தட்டு உணவின் விலை ரூ.7721 ஆகும்.

திட்டக்குழு உச்சநீதிமன்றத்தில் அளித்த பிரமாணப்பத்திரம் ஒன்றில் ஒரு கிராமப்புற ஆம் ஆத்மி ஒருவர் ரூ.26ஐக் கொண்டும், நகர்ப் புற ஆம் ஆத்மி ஒருவர் ரூ.32ஐக் கொண்டும் ஒரு நாள் பொழுதைக் கழிக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ளது. ஐ.மு.கூட்டணியின் இரண்டா வது அரசின் பிரதமர் அளித்த விருந்தில் ஒரு நபருக்கு அளிக்கப்பட்ட உணவின் விலையைக் கொண்டு, திட்டக்குழுவின் கணக்கின்படி 296 ஆம் ஆத்மிகளுக்கு ஒரு நாளைக்கு உணவு அளிக்க முடியும். இவர்களுக்கு பணம் எதில் காய்க்கிறது என்று ஆம் ஆத்மிகளுக்குப் புரியவில்லை.
தகவல் உரிமை ஆர்வலர் ரமேஷ் வர்மா தாக்கல் செய்த மனுவிற்கு அளிக்கப்பட்ட பதிலில் இத்தகவல்கள் கிடைத்துள்ளன. இத்தகவலின்படி, பிரதமர் அளித்த இரவு உணவிற்காகச் செலவழிக் கப்பட்ட மொத்த தொகை ரூ.11 லட்சத்து 34 ஆயிரத்து 296 ஆகும். உணவுக்கூடாரம் உள் ளிட்ட ஏற்பாடுகளுக்காக ரூ.14 லட்சத்து 42 ஆயிரத்து 678 செலவாகியுள்ளது . பூக்களுக் காக ரூ.26 ஆயிரத்து 444 செலவிடப்பட் டுள்ளது.ஆக மொத்தம் இந்த விருந்துக்காக அரசு கருகூலத்தில் இருந்து ரூ.28 லட்சத்து 95 ஆயிரத்து 503 வீணடிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் மக்கள் சிக்கனத்தைக் கடைப்பிடிக்க வேண்டுமென்று அறிவுரை கூறுகின்றனர்.

உங்களின் ஆடம்பர விருந்துக்குச் செலவிடப் பட்ட பணம் மரத்தில் காய்க்கவில்லை பிரதமர் அவர்களே! மாறாக, இந்த நாட்டு மக்களுக்கு மட்டும் உரித்தான அரசு நிதியில் இருந்து எடுக்கப்பட்டு வீணடிக்கப்பட்டுள்ளது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

காந்தி, சாஸ்திரி பிற‌ந்த‌நாள் / காம‌ராஜ‌ர் நினைவு நாள்.


மோக‌ன் தாஸ் காந்தி
நாடு சுத‌ந்திர‌ம‌டைய‌ அந்நிய‌ப் பொருள்க‌ளை எ‌ரித்தார்.
சோனியா காந்தி
நாடு முன்னேற‌ அந்நிய‌ க‌ம்ப‌னிக‌ளை ஆராதிக்கிறார்.


அவ‌ர் இந்தியாவில் பிற‌ந்து, ல‌ண்ட‌னில் ப‌டித்து
பாரிஷ்ட‌ராக இந்தியா வந்த‌வ‌ர்.

இவ‌ர் இத்தாலியில் பிற‌ந்து, ல‌ண்ட‌னில் ப‌டிக்க‌வே வேலை செய்து, ராஜீவ் காத‌லியாக‌ இந்தியா வ‌ந்த‌வ‌ர்.
"வாழ்க நீ எம்மான் இந்த‌ வைய‌த்து நாட்க‌ள் எல்லாம்" - பார‌தி

"க‌ல்லெல்லாம் மாணிக்க‌ க‌ல் ஆகுமா" - க‌ண்ண‌தாச‌ன்.

 "ஜெய் ஜ‌வா‌ன், ஜெய் கிஷா‌ன்" -  லால் ப‌ஹதூர்

 காந்தி, சாஸ்திரி பிற‌ந்த‌நாள்,

 காம‌ராஜ‌ர் நினைவு நாள்.



இன்று காந்தி ஜெயந்தி


இந்தியாவின் தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த நாள் இன்று காந்தி ஜெயந்தி தினமாக கொண்டாடப்படுகிறது.
இந்தியாவின் தேசிய விடுமுறை தினங்களில் ஒன்றான (அக்.2) இத்தினம், ஐ.நாவினால் அனைத்துலக வன்முறையற்ற நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

காந்தி தனது பிறந்த நாளக் கொண்டாடுவதற்கு எப்போதும் விரும்பியது இல்லை. ஆனால் அரசியல் தலைவர்கள் பலர் வற்புறுத்தியதால், ஏழை மக்களின் வாழ்வாதாரமான ராட்டை தினமாக தனது பிறந்த நாளை அவர் கொண்டாட சம்மதம் தெரிவித்துள்ளார்.

இன்று காந்தியின் 144வது பிறந்த தின விழாவாகும். இன்று காலை ஆளுனர் ரோசய்யா மற்றும் முதலமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் மெரீனா கடற்கரையில் உள்ள காந்தி அடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர். அத்துடன் காலை 10.15 மணியளவில் மெரினா கடற்கரை அருகே உலக அமைதியை வலியுறுத்தி மிதிவண்டி பேரணியும், 11.30 மணிக்கு காந்தி அடிகளின் வாழ்க்கை வரலாற்றினை விளக்கிடும் கண்காட்சி திறப்பு விழாவும் நடைபெறவுள்ளது.


காந்தியை பற்றி பெரும்பாலானோருக்கு தெரிந்திராத  சில தகவல்கள் :

சைவ உணவே அசைவ உணவை விட மனித உடலுக்கு ஆரோக்கியமானது என்று தன் சோதனைகள் மூலம் அறிந்ததாக காந்தி குறிப்பிட்டுள்ளார். 1902 ஆம் ஆண்டுக்குப் பிறகு, பிரம்மச்சரிய விரத்தையும், வாரத்திற்கு ஒருநாள் மௌன விரதம் மேற்கொண்டார்.

1906ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாகிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அகிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இந்த சத்தியாகிரகமே பின்னாளில் இந்திய விடுதலைவரை அவருக்கு துணைநின்றது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...