Wednesday, September 10, 2014

செல்போனில் தங்களின் அந்தரங்கத்தை படம் பிடிப்பவர்களுக்காக இந்த பகிர்வு

நீங்கள் செல்போனிலோ விடீயோ கேமராவிலோ உங்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து ரசிப்பவர்களாக இருந்தால்... வெரி சாரி.. உங்களின் நிர்வாணம் இப்போது உலகம் முழுக்க பரவிக்கொண்டிருக்கலாம். "அது எப்படி... என் செல்போனில் நான் என்னைப் படம் எடுப்பதால் என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?'' என்று யோசிக்கிறீர்களா...

                                                  
 வெயிட்... உங்களுக்காகவே சாம்பிளுக்கு சில சம்பவங்கள்...(பெயர்கள் மாற்றப்பட்டிருக்கின்றன) அடையாறில் வசிக்கிறார்கள் மதுமிதா- ராம். புதுமணத் தம்பதிகளான இவர்கள் ஐ.டி. துறையில் வேலை செய்கிறார்கள். ஒருநாள் நண்பர் ஒருவரால் மதுமிதாவுக்கு அனுப்பப்பட்டிருந்த அந்த மெயிலில் ஒரு வீடியோ இணைக்கப்பட்டிருந்தது.

அதைத் திறந்து பார்த்த மதுமிதாவுக்கு அதிர்ச்சியில் இதயமே வெடித்துவிடும் போலிருந்தது. காரணம், அந்த வீடியோ மதுமிதாவும் அவர் கணவன் ராமும் பெட்ரூமில் அந்தரங்கமாக இருந்தபோது சும்மா ஜாலிக்காக செல்போனில் எடுத்தது. கொஞ்ச நேரம் அதைப் பார்த்து ரசித்துவிட்டு, செல்போனிலிருந்து அப்போதே அதை அழித்தும் விட்டார்கள். ஆனால் அது இப்போது இண்டர்நெட் முழுக்க பரவிக் கொண்டிருக்கிறது. 'செல்போனில் இருந்து டெலிட் செய்த ஒரு வீடியோ எப்படி இண்டர்நெட்டுக்குப் போகமுடியும்? என்பதுதானே உங்கள் டவுட். அதற்கான விடையைத் தெரிந்து கொள்வதற்கு முன் மேலும் சில அதிர்ச்சிச் சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்.

அண்ணாநகரைச் சேர்ந்த அந்தப் பெண்ணின் பெயர் ரம்யா. துறுதுறுவென துள்ளித் திரியும் டீன் ஏஜ் பெண். 10_ம் வகுப்பு படிக்கிறாள். உடன் படிக்கும் மாணவிகள் பலர் செல்போன் வைத்திருக்கிறார்கள் என அப்பாவை நச்சரிக்கவே, அவரும் ஒரு காஸ்ட்லியான கேமரா செல்போனை வாங்கிக் கொடுத்தார்.

ஒருநாள் பெட்ரூமில் கண்ணாடி முன் நின்று தன் அழகை ரசித்துக் கொண்டிருந்தவளுக்கு, செல்போனில் தன் உடலில் துணியில்லாமல் படம் பிடித்தால் என்ன என்று தோன்றியது. உடனே அதைச் செய்தும் விட்டாள். பின்னர் சிறிது நேரம் துணியில்லாத தன்னுடைய அந்த வீடியோவை ரசித்துப் பார்த்துவிட்டு டெலிட் செய்துவிட்டாள். ஆனால் இப்போது அந்த வீடியோவும் நெட்டில் உலா வந்து கொண்டிருக்கிறது.

இதேபோல் நெல்லையைச் சேர்ந்த லட்சுமி -குமார் தம்பதியரும் தங்கள் அந்தரங்கத்தை செல்போனில் வீடியோவாக எடுத்து பின்னர் அதை டெலிட் செய்து விட்டனர். ஆனால் அந்த போன் ஒரு நாள் தொலைந்து போனது. புது செல்போன் வாங்கிக் கொண்டார்கள். பழைய போனை மறந்தும் விட்டார்கள். ஆனால் பழைய செல்போனில் இருந்த அந்த தம்பதியினரின் அந்தரங்கம் இப்போது இணையதளம் முழுக்க பரவிக் கெண்டிருக்கிறது.

இதுமட்டுமல்ல, குற்றாலத்தில் குளியல் போடும் கல்லூரி மாணவிகளின் வீடியோ, ஹாஸ்டல் ரூமில் பர்த்டே பார்ட்டி கொண்டாட்டத்தில் குத்தாட்டம் போடும் மாணவிகளின் வீடியோ... என ஏகப்பட்ட வெரைட்டிகளில் அந்தரங்க வீடியோக்கள் இண்டர்நெட்டில் நிரம்பிக் கிடக்கின்றன. செல்போனில் டெலிட் செய்யப்பட்ட ஒரு வீடியோ எப்படி இணையத்துக்குப் போனது என்பதுதான் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் புரியாத புதிர்.

அந்த புதிருக்கான விடையின் பெயர் 'ரெக்கவரி சாஃப்ட்வேர் (recovery software).
மேலே சம்பவத்தில் இடம்பெற்ற எல்லோருக்கும் ஒன்றுபோல் ஒரு விஷயம் நடந்தது. அது அவர்களின் செல்போனும், டிஜிட்டல் கேமராக்களும் ஒருநாள் பழுதடைந்தது. அவற்றைச் சரி செய்ய கடைகளில் கொடுத்திருந்தார்கள். அங்கிருந்துதான் அவர்களின் மானம் இணையதளத்தில் பறக்கவிடப்பட்டது.
இதுபோன்ற வில்லங்கச் சம்பவங்களின் பின்னணி என்ன? அண்ணாநகரில் செல்போன் கடை வைத்திருக்கும் மூர்த்தி விரிவாகச் சொல்கிறார்.

''செல்போன், கம்ப்யூட்டர் பயன்படுத்தும் நம்மில் பலருக்கு அதுகுறித்த முழுமையான தகவல்கள் தெரிவதில்லை. அதுவும் தங்கள் செல்போனில் எடுக்கப்பட்ட ரகசிய போட்டோக்கள், வீடியோக்கள் டெலிட் செய்யப்பட்டிருந்தாலும் மீண்டும் அதைப் பார்க்க முடியும் என்கிற விஷயமே புதுசாகத்தான் இருக்கும்.

அந்த விஷயம் தெரியாமல்தான் பலர் ஆர்வக் கோளாறில் தங்களின் படுக்கை அறைக் காட்சிகளை செல்போனிலும், டிஜிட்டல் கேமராவிலும் பதிவு செய்து ரசிக்கிறார்கள். பின்னர் டெலிட்டும் செய்துவிடுகிறார்கள். ஆனால் எலெக்ட்ரானிக் பொருட்கள் என்றாவது ஒருநாள் பழுதடையும். அப்போது அதை சரிபண்ண கடைகளில் கொடுக்க வேண்டி வரும். அங்குதான் பிரச்னை ஆரம்பிக்கிறது.

சர்வீஸ் செய்யும் கடைக்காரர்கள் சரிபண்ணி முடித்ததும், ஆர்வக் கோளாறில் ஒவ்வொரு போனிலும் என்னென்ன டெலிட் செய்யப்பட்டிருக்கிறது என்று தேடிப்பார்ப்பார்கள். இதற்காக அழிக்கப்பட்ட தகவல்களை திரும்பப் பெறும் வசதி கொண்ட பல 'ரெக்கவரி சாஃப்ட்வேர்கள் இருக்கின்றன. இதன் மூலம் திரும்பப் பெறப்படும் வீடியோ மற்றும் போட்டோக்களில் ஏதாவது ஆபாசப் படங்கள் இருந்தால் போதும், உடனே அதை இணையத்தில் விற்றுவிடுவார்கள். இந்த மாதிரியான 'ஹோம் மேட் செக்ஸ் வீடியோக்கள் எனப்படும் சம்பந்தப்பட்டவர்களே எடுக்கும் படங்களுக்கு வெளிநாட்டவர்களிடம் ஏக கிராக்கி என்பதால் இந்த அயோக்கியத்தனத்தை பல கடைக்காரர்கள் துணிந்து செய்கிறார்கள் என்கிறார்.

இதைத் தவிர்க்க என்ன செய்வது?

முக்கியமாக படுக்கை அறைக்கு செல்போனையோ, கேமராவையோ கொண்டு செல்லாதீர்கள். காதலனோ, கணவனோ, மாமனோ மச்சானோ.. படம் எடுக்க ஆண்கள் எவ்வளவு வற்புறுத்தினாலும் பெண்கள் சம்மதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.

இது ஒருவகையான ஆபத்து என்றால், இன்னொரு ஆபத்தும் இதில் இருக்கிறது. அது இன்று உயிருக்குயிராய் காதலிக்கும் கணவன் மனைவியோ, காதலர்களோ நாளை சூழ்நிலை காரணமாக பிரிந்து வேறொருவரைத் திருமணம் செய்ய நேரிடலாம். ஆனால்... ஏமாற்றப்பட்டதாக நினைக்கும் ஆண்கள், பெண்களைப் பழிவாங்க முடிவு செய்து, முன்பு எடுத்த அந்தரங்கப் படங்களை இண்டர்நெட்டில் பரப்பி விடுகிறார்கள்.

அதேபோல் வெளிநாட்டில் வேலை பார்க்கும் கணவர்களுடன் 'வெப்கேமில் பேசும் பெண்களும், கணவர் ஆசைப்படுகிறார் என்பதற்காக கேமரா முன் தங்களின் அந்தரங்கத்தைக் காட்டாதீர்கள். கம்ப்யூட்டரில் அது பதிவு செய்யப்படலாம். அந்த கம்ப்யூட்டர்கள் ஒருநாள் பழுதடைந்து சரி செய்ய அனுப்பும் போது அங்கிருந்து அது இணையத்துக்கு பரவக்கூடும். ஜாக்கிரதை!
ஒரு ஆபாச தளத்தில் ஒரு பெண்ணின் விடியோ வெளியானால் போதும்... உலகம் முழுக்க அது பரவி விடும். அப்புறம் அந்தப் பெண்கள் வெளியே தலைகாட்ட முடியாது. அசிங்கப்பட்டு தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு.

இப்போது செல்போன் உள்ளிட்ட டிஜிட்டல் கேமராக்களின் வரவால் ஒவ்வொருவரும் கேமராமேனாகி விட்டார்கள். பொது இடங்களில் உங்களுக்குத் தெரியாமல் ரகசியமாக கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருக்கின்றன. கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு அவ்வளவு நுண்ணிய கேமராக்கள் வந்து விட்டன.

தியேட்டர்கள், ஷாப்பிங் மால்கள், துணிக்கடைகளின் ட்ரையல் ரூம்கள் போன்றவற்றைப் பயன்படுத்தும் முன் ஒருமுறை சுற்றி நோட்டமிடுங்கள். உஷாருப்பா.. உஷாரு..-பாலா-குமுதம் சிநேகிதி இதழுக்காக எழுதியது.

பெண்களுக்கு வாட்ஸ்அப்பால் வரும் ஆபத்து: தவிர்ப்பது எப்படி?


பெண்களுக்கு ஏற்கனவே சமூக வலைதளங்கள் மூலமாக ஆபத்து வருவது அனைவருக்கும் தெரிந்த ஒன்று! தற்போது உடனடி தகவல் ஆப்ஸான வாட்ஸ்அப் மூலமாகவும் வரத்தொடங்கியுள்ளது. 'வாட்ஸ்அப் என்பது தனிநபர் தன் செல்போனில் உபயோகிக்கும் ஆப்ஸ் தானே அதில் என்ன வரப்போகிறது ஆபத்து?' என்பது உங்கள் கேள்வியாய் இருந்தால் நிச்சயம் இருக்கிறது என்பதுதான் பதில்.

                                                  
என்ன ஆபத்துகள்?

1.யாருக்காவது உங்கள் செல்போன் நம்பர் கிடைத்தால் மட்டுமே போதும். நீங்கள் வாட்ஸ்அப்பில் இருந்தால் அவர்களால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கை பார்க்கவும், உங்கள் புகைப்படத்தை டவுன்லோடு செய்யவும் முடியும்.

2.உங்களுக்கு தெரியாத நபர்கள் கூட உங்கள் ஸ்டேட்டஸ் மூலம் உங்களை தொடர முடியும். 

3.கடைசியாக நீங்கள் எப்போது உங்கள் கணக்கை பார்த்துள்ளீர்கள் என்பதை கூட அவர்களால் அடையாளம் காணமுடியும்.

4.உங்களுக்கு எதிர்முனை நபர் யார் என்று தெரியாத போது அவர் தவறான பெயரில் உங்களை தொடர்பு கொண்டு உங்களது தகவல்களை பெற வாய்ப்புள்ளது.

5.உங்களது நண்பர்களில் சிலர் வாட்ஸ்அப் குருப்களில் உங்கள் பெயரையும் இணைக்கும் போது உங்கள் எண் குரூப்பில் உள்ள அனைவருக்கும் பகிரப்பட வாய்ப்புள்ளது.

                                     

எப்படி தவிர்க்கலாம்?

உங்களது வாட்ஸ்அப் தொந்தரவுகளை எப்படி தவிர்க்கலாம் என்றால் உங்கள் வாட்ஸ்அப் அமைப்பில்(செட்டிங்) உங்களது ப்ரைவஸி செட்டிங்கை மாற்றியமைப்பதன் மூலம் இந்த பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

உங்களது பிரைவஸி செட்டிங்கிற்கு சென்று உங்கள் புகைப்படம், ஸ்டேட்டஸ், லாஸ்ட் சீன் ஆகியவற்றை My Contacts அல்லது Only me ஆப்ஷன்களை பயன்படுத்தி உங்களை பாதுகாக்கலாம். குரூப்களில் பெரும்பாலும் இணைவதையும், அதில் அதிதீவிரமாக செய்திகளை அனுப்புவதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அதுமட்டுமின்றி ப்ளாக் ஆப்ஷனை பயன்படுத்தி உங்களுக்கு தொல்லை தருபவரை உங்கள் கணக்கை தொடராமல் தடுக்கும் வசதியும் வாட்ஸ்அப்பில் உள்ளது.

முடிந்தவரை தெரிந்தவர்களோடு மட்டும் வாட்ஸ்அப்பில் பேசுவது பாதுகாப்பானது. ஒருவேளை இதனை செய்ய தவறும்போது ஏற்படும் பாதிப்புகள் சமூக வலைதளங்களைவிட மோசமானதாக இருக்கும்.

உஷார் தோழிகளே!


கணினியின் எந்த ஒரு பைல்,போல்டர்,டிரைவ் Lock செய்ய

பொதுவாக நாம் பர்சனலாக உபயோக படுத்தும் கணினி  என்றால் கூட பிரச்சனையில்லை , வெளிநாட்டில் வாழும் சகோதரர்கள் ஒரு அறையில் ஒரு கனி பொறியை அனைவரும் பயன் படுத்தும் சூழலில் நம்முடைய பைல்களை பிறர் பார்க்க கூடிய வாய்ப்புகள் இருப்பதால் நாம் எதையும் ரகசியமாக அந்த கம்ப்யூட்டரில் வைக்க முடியாது அந்த கம்ப்யூட்டரை பயன் படுத்தும் அனைவரின் நிலையும் இது தான்.,

                                   
இந்த பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ள சாப்ட்வேர் தான் GiliSoft File Lock Pro நீங்கள் உபயோக படுத்து கம்ப்யூட்டரின் நீங்க விரும்பும் பைல், போல்டர் , டிரைவ் என்று எதையும் லாக் செய்யும் மென் பொருள்

லாக் செய்தால் மற்றவர் கண்களுக்கு தெரியும் ஆனால் ஓப்பன் செய்து பார்க்க முடியாது . நீங்கள் பாஸ் வேட் கொடுத்தால் மாறுமே ஓப்பன் செயஹு பார்க்க முடியும்


அப்படியில்லை என்றால் ஹைட் செய்து விட்டால் யாருக்கும் தெரியாது அந்த சாப்ட்வேரை ஓப்பன் செய்து உங்கள் பாஸ்வேடை கொடுதால் மட்டும் அது கண்களுக்கு புலப்படும் .பல பேர பயன் படுத்தும் கம்யூட்டர்களுக்கு இது முக்கியமாம சாப்ட்வேர் .


Tuesday, September 9, 2014

கணினியை சுத்தப்படுத்த சிறந்த 10 வழிமுறைகள்

கம்ப்யூட்டரைப் பராமரிப்பதற்கான செலவினைக் கணிசமாகக் குறைக்க வேண்டும் என்றால் அதனை அவ்வப்போது சுத்தப் படுத்தி வைத்திருக்க வேண்டும்.பலர் கம்ப்யூட்டரின் சிபியு கேபினட்டை டேபிளின் அடியில் சிறு பெட்டி போன்ற அமைப்பில் வைத்து .அதற்குக் கதவும் வைத்து பூட்டி விடுவார்கள். பின்புறமாக கேபிள்கள் இணைக்கப் பட்டிருக்கும் டேபிளை சுவர் ஓரமாக வைத்துவிட்டால் சிபியு கேபினட்டை சுத்தம் செய்வதனையே மறந்து விடுவார்கள்.
  
விளைவு? ஒரு நாள் கம்ப்யூட்டர் பூட் ஆகாது. சுத்தம் செய்யாததால் தூசியும் ஈரமும் சேர்ந்து மதர்போர்டு அல்லது இணைக்கும் வயர்கள் கெட்டுப் போயிருக்கலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள சில குறிப்புகளைக் கடைப்பிடித்தால் கம்ப் யூட்டருக்குப் பாதிப்பு வருவதைத் தடுக்கலாம்.

1. உங்கள் கம்ப்யூட்டரை எப்போ தும் தரையில் வைத்து இயக்க வேண்டாம். கம்ப்யூட்டர் டேபிள் அல்லது ஷெல்ப் மீது வைத்து பயன்படுத்த வேண்டும்.

2. கம்ப்யூட்டரைச் சுத்தம் செய்திடும் முன் கம்ப்யூட்டருக்கு வரும் மின் சக்தியை நிறுத்தவும். சிபியூவிற்குச் செல்லும் அனைத்துக் கேபிள்களையும் எது எது எங்கு மாட்டப்பட்டுள்ளது என்பதைக் குறித்துக் கொண்டு கழற்ற வும்.

3. இப்போது வேக்குவம் கிளீனர் போன்ற சாதனம் அல்லது சைக்கிளுக்கு காற்றடிக்கும் பம்ப் போன்றவற்றை வைத்து காற்றை கேபினுக்குள் அடிக்கவும். காற்று தரும் முனை அரை அடியாவது விலகி இருக்க வேண்டும். நன்றாக அனைத்து தூசியும் வெளியே வரும் வகையில் இந்த ட்ரீட்மெண்ட் கொடுக்கவும்.

                                  

4. இறுதியில் கம்ப்யூட்டர் கேபினுக்கு வெளியே ஈரத் துணி கொண்டு அனைத்தையும் அழுத்தம் தராமல் துடைக்கவும். கிளினிங் ப்ளூயிட் இருந்தால் அதனை லைட்டாக ஸ்பிரே செய்து அது உலர்ந்தவுடன் பேப்பர் டவல் கொண்டு சுத்தம் செய்திடவும்.

5. ஆனால் எந்தக் காரணத்தைக் கொண்டும் கம்ப்யூட்டர் உள்பாகத் தினை அல்லது மதர் போர்டினை ஈரத் துணி கொண்டு துடைக்கக் கூடாது. உள்ளே ஸ்பிரே செய்யக் கூடாது.

6. கம்ப்யூட்டரில் செயலாற்றுகை யில் அதன் அருகே டீ, காபி கப் வைத்தல், குடித்தல் போன்றவை கூடாது. சிறிய பின், கேர் பின், ஜெம் கிளிப் போன்றவற்றை கீ போர்டு அல்லது சிபியூவின் மேல் வைத்தல் கூடாது.

7. கீ போர்டினைக் கிளீன் செய்கையில் அதிகக் கவனம் தேவை. கீ போர்டை அதன் இணைப்பை விலக்கி விட்டு தலைகீழாகத் திருப்பி மெதுவாகத் தட்டவும். உள்ளே நுழைந்து குடி இருக்கும் சிறிய துகள்கள் மற்றும் தூசி வெளியே வரும். பின் நெட்டு வாக்கில் இரு புறமும் நிறுத்தி தட்டலாம். இனி வேக்குவம் கிளீனர் அல்லது அது போன்ற சாதனத்தைக் கொண்டு காற்றை உள் செலுத்தி சுத்தம் செய்யலாம். 

கீ போர்டின் மேலாக கிளீனிங் ப்ளூயிட் நனைத்த துணியைக் கொண்டு சுத்தம் செய்திடலாம். பின் ஈரத் துணி கொண்டு சுத்தப்படுத்தலாம். மெம்ப் ரேன் கீ போர்டாக இல்லாமல் மெக்கானிக்கல் கீ போர்டாக இருந்தால் கீ போர்டின் பின்புறம் உள்ள ஸ்குரூக் களைக் கழற்றி உள்ளே இருக்கும் போர்டில் உள்ள தூசியினைத் துடைத்து எடுக்க லாம். மெம்ப்ரேன் எனில் அதனைச் சரியாக மீண்டும் பொருத்துவது கடினம். எனவே கழட்டாமல் இருப்பது நல்லது. தூசி நிறைந்த சூழ்நிலையில் நீங்கள் கம்ப்யூட்டர் இயக்குபவராக இருந்தால் கீ போர்டுக்கென விற்பனை செய்யப் படும் பிளாஸ்டிக் கவரினைக் கொண்டு கீ போர்டை மூடி இயக்குவது நல்லது. 

எப்படி இருந்தாலும் மாலையில் அல்லது இரவில் பணி முடித்துச் செல்கையில் கீ போர்டுக்கான கவர் போட்டு மூடவும். பெரும்பாலும் ஐவரி வண்ணத்தில் கீ போர்டுகள் உள்ளன. கறுப்பு வண்ணத்திலும் கிடைக்கின்றன. ஐவரி வண்ணத்தில் இருந்தால் அடிக்கடி துடைத்தால் தான் அழுக்கு படிவது தெரியாது. வெகுநாட் களாகத் துடைக்காமல் இருந்து அது மஞ்சள் அல்லது கருப்பாகிப் போனால் பின் என்ன அழுத்தி துடைத்தாலும் பழைய வண்ணம் கிடைக்காது.

8. பெர்சனல் கம்ப்யூட்டர் பயன் பாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் ஒரு சாதனம் உண்டென்றால் அது மவுஸ்தான். எனவே தான் அதனைச் சுத்தமாக வைத்துக் கொள்வதில் கூடுதல் கவனம் தேவை. மவுஸ் பல திசைகளில் நகர்வதற்கு கூடுதல் நேரம் எடுத்துக் கொள்கிறது என்றால் அதனை அவசியம் சுத்தம் செய்திட வேண்டும். முதலில் மவுஸைக் கழட்ட வேண்டும். ட்ராக் பால் மவுஸாக இருந்தால் அதன் மேலாக உள்ள சிறிய வீல் போன்ற பாகத்தினை ஆண்டி கிளாக் வைஸ் திசையில் திருகினால் தனியே வந்துவிடும். 

ட்ராக் பாலும் வெளியே வரும். நிச்சயம் அந்த சிறிய பந்தில் நிறைய அழுக்கு சேர்ந்து கருப்பாகி இருக்கும். இதனைத் தண்ணீர் அல்லது கிளீனிங் லிக்விட் போட்டு துடைக்க வேண்டும். அது இருந்த இடத்தில் சிறிய கம்பிகள் இரண்டு தெரியும். இதில் சிறிய முடி அல்லது அழுக்குகள் சேர்ந்திருக்கும். இதனையும் முழுமை யாகச் சுத்தப்படுத்த வேண்டும். 

இனி ட்ராக் பாலினை அதன் இடத்தில் வைத்து மேலாக வீல் போன்ற பிளாஸ்டிக் வளையத்தை வைத்து கிளாக் வைஸ் திசையில் சிறிது சுழட்டினால் அது கெட்டியாக அமர்ந்து கொள்ளும். இனி மவுஸைப் பயன்படுத்துவது இலகுவாக இருக் கும். பிற வகை மவுஸ்களைச் சாதாரண மாக அதன் வெளிப்புறத்தில் துடைத் தால் போதும்.

9. மானிட்டரையும் தரையில் வைத்துப் பயன்படுத்தக் கூடாது. மானிட்டரின் பின்புறம் உள்ள கவரை எப்போதும் கழட்டக் கூடாது. அழுத்தமான காற்றை பின்புறம் இருந்து முன் புறமாகச் செலுத்தினால் தூசு தானாக வெளியேறும். இதைப் பலமுறைச் செயல் படுத்தி தூசியை வெளியேற்ற வும். பின் ஈரத்துணி அல்லது கிளீனிங் லிக்விட் பயன் படுத்தி மானிட்டரின் வெளிப் பாகம் மற்றும் திரையைச் சுத்தம் செய்யலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் சிறிய துளைகளின் வழியாக எதுவும் ஸ்பிரே செய்யக் கூடாது.

10. ஆர்வக் கோளாறினால் எந்த துணை சாதனத்தையும் கழற்றிப் பார்க்கக் கூடாது. பின் மீண்டும் அதனை மாட்டுவது கடினமாகிவிடும்.

Whats up பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய 10 அம்சங்கள்

மொபைல் போனில் இன்டர்நெட் இருந்தாலே வாட்ஸ் அப்பை நீங்க உபயோகிக்க முடியும். வாட்ஸ் அப் இல்லாமல் இன்று யாருமே இருக்க மாட்டார்கள் என்பதால் வாட்ஸ் அப் பற்றி நீங்கள் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்களை இங்கு பட்டியலிட்டுள்ளோம், கீழ் இருக்கும் ஸ்லைடர்களில் பட்டியலை பார்க்கவும்.
             
                                 

1.ப்ரொபைல் போட்டோ

உங்க நண்பரின் ப்ரொபைல் போட்டோவை வாட்ஸ் அப்பில் மாற்ற முடியும், ஆனால் அது உங்களுக்கு மட்டும் தான் தெரியும். அதற்கு உங்களுக்கு பிடித்த போட்டோவை 561*561 அளவில் எடுத்து அதில் உங்க நண்பர் எண்ணை பதிவு செய்து மெமரி கார்டு- வாட்ஸ் அப்-ப்ரொபைல் போட்டோ சென்று ஏற்கனவே இருக்கும் போட்டோவை ரீ ப்ளேஸ் செய்தால் வேலை முடிந்தது.


2.கடைசியாக பார்த்தது

உங்க வாட்ஸ் அப்பில் கடைசியாக பார்த்ததை மறைக்க நாட் லாஸ்ட் ஸீன் என்ற அப்ளிக்ஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்


3.RAR, .APK, .ZIP பைல்களை பறிமாறுவது


போட்டோ மற்றும் பைல்களை பறிமாறுவது அளவு படுத்தப்பட்ட நிலையில் நீங்கள் க்ளவுட்சென்ட் மற்றும் ட்ராப் பாக்ஸ்களை பதிவிறக்கம் செய்து, க்ளவுட்சென்ட் மூலம் ட்ராப் பாக்ஸை இனைத்து தேவையான பைல்களை லிங்க் செய்து அனுப்பலாம்


4.வாட்ஸ் அப் அக்கவுன்ட்

ஆன்டிராய்டில் டூயல் சிம் பயன்படுத்துபவர்கள் இரு வாட்ஸ் அப் அக்கவுன்டகளை ஆரம்பிக்க நீங்க ஸ்விட்ச்மீ என்ற அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்ய வேண்டும்


5.தவறுதலாக டெலீட் செய்த மெசேஜ்களை மீட்க

 உங்க எஸ்டி கார்டுக்கு சென்று வாட்ஸ் அப் - டேட்டாபேஸ் சென்றால் நீங்க டெலீட் செய்த அனைத்து மெசேஜ்களும் இங்கு இருக்கும்


6.வாட்ஸ் அப் ஆட்டோ இமேஜ் டவுன்லோடு

வாட்ஸ் அப்பில் வரும் போட்டோக்கள் தானாக டவுன்லோடு ஆவதை கட்டுப்படுத்த செட்டிங்ஸ் - சாட் செட்டிங்ஸ் - மீடியா ஆட்டோ டவுன்லோடு சென்று உங்களுக்கு தேவையானதை தேர்வு செய்து கொள்ளலாம்

7.மொபைல் நம்பர்

உங்க மொபைல் நம்பர் என்டர் செய்யாமல் வாட்ஸ் அப் பயன்படுத்த ஏற்கனவே இருக்கும் வாட்ஸ் அப்பை டெலீட் செய்து மீண்டும் டவுன்லோடு செய்யுங்கள். ப்ளைட் மோடை ஆக்டிவேட் செய்து உங்க நம்பரை பதிவு செய்யுங்க. இப்ப உங்க நம்பர் ரிஜெஸ்டர் ஆகாது, அடதனால் வேறு முறைகளை பயன்படுத்தி வெரிஃபை செய்ய சொல்லும் நீங்க அதையும் கேன்சல் செய்து விடுங்கள். இப்போ ஸ்பூஃப் டெக்ஸ்ட் மெசேஜை இன்ஸ்டால் செய்து அவுட்பாக்ஸ் சென்று மெசேஜ் தகவல்களை ஸ்பூஃப் அப்ளிகேஷனுக்கு காப்பி செய்து ஸ்பூஃப்டு வெரிபிகேஷனுக்கு அனுப்புங்கள். ஸ்பூஃப்டு மெசேஜில் +4479000347295, நாட்டின் குறியீடு, மொபைல் நம்பர் மற்றும் ஈ மெயில் அட்ரெஸை குறிப்பிட்டால் வேலை முடிந்தது.


8.ஹைடிங் ப்ரொபைல் போட்டோ


உங்க வாட்ஸ் அப் ப்ரோபைல் போட்டோவை மறைக்க வாட்ஸ் அப் ப்ளஸ் தான் சிறந்தது


9.வாய்ஸ் நோட்டிபிக்கேஷன்


வாட்ஸ் அப் நோட்டிப்பிக்கேஷன்களை படிக்க நேரமில்லை என்றால் வாய்ஸ் பார் மோட்டிபிக்கேஷன் மற்றும் டெக்ஸ்ட் டூ ஸ்பீச் மென்பொருளை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதற்கு செட்டிங்ஸ் - அசெஸ்சபிலிட்டி சென்று வாய்ஸ் நோட்டிபிக்கேஷனை ஆன் செய்ய வேண்டும்


10.வாட்ஸ் அப் ஸ்டாட்ஸ்


வாட்ஸ் ஸட்டாட் பார் வாட்ஸ் அப் அப்ளிகேஷன் மூலம் நீங்கள் வாட்ஸ் அப் டவுன்லோடு செய்ததில் இருந்து எத்தனை மெசேஜ்களை அனுப்பியுள்ளீர்கள் என்பதை பார்க்க முடியும். 

வாட்ஸ் அப் அக்கவுன்ட்

வாட்ஸ் அப் அக்கவுன்டை டெலீட் செய்ய செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - டெலீட் கொடுத்தால் வேலை முடிந்தது


போன் நம்பரை மாற்றுவது

வாட்ஸ் அப்பில் போன் நம்பரை மாற்றினால் பழைய எண்ணில் இருக்கும் மெசேஜ்கள் அழிந்து விடும். அவ்வாறு அழியாமல் இருக்க செட்டிங்ஸ் - அக்கவுன்ட் - சேன்ஞ் நம்பர் கொடுத்தால் புதிய நம்பரிலும் மெசேஜ் அழியாமல் இருக்கும்

வாட்ஸ் அப் தீம்ஸ்

பழைய வாட்ஸ் அப் தீ்ம் போரடித்து விட்டதா, வாட்ஸ் அப் ப்ளஸ் ஹோலோ அப்ளிகேஷனை பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்


போட்டோ

நண்பரை கலாய்க்க ஆன்டிராய்டில் மேஜிஅப் ட்ரிக்ஸை பயன்படுத்துங்கள்

ஸ்பை

உங்க நண்பரின் வாட்ஸ் அப் அக்கவுன்டை வேவு பார்க்க ஸ்பைமாஸ்டர் ப்ரோ தான் சிறந்தது. உங்க நண்பரின் அக்கவுன்டில் இருக்கும் அனைத்து மெசேஜ் மற்றும் போட்டோ, வீடியோ என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும்.


Monday, September 8, 2014

லட்சுமி கடாட்சம் உண்டாக செல்வவளம் பெருக எளிய பரிகாரம் ;ஜோதிடம்

சம்பளம் வாங்கியவுடன் வாங்கவேண்டிய மங்களப் பொருட்கள் இனிப்பு,பால்,மல்லிகைப்பூ, இவற்றில் ஒன்றையாவது வாங்கினால் செல்வம் பெருகும்..வீண் செலவுகளை குறைக்கும்..விருத்தியாகும்...


பூமிகாரகன் ,ரத்தத்துக்கு அதிபதி,ஆரோக்கியத்துக்கு பாதுகாவலன்,தொழிலுக்கு கர்த்தாவான முருகனின் விருப்பமான செவ்வரளி மரத்தை வீட்டில் வளர்த்தால் வீட்டுக்கடன் விரைவில் அடைபடும்..நோய்கள் பாதிப்பு குறையும்..மருதாணி வளர்த்தால் கெட்ட சக்திகள் அண்டாது பன்னீர் ரோஜா,மல்லிகைப்பூ செடி ,வளர்த்தால் கணவன் மனைவி வசியம் உண்டாகும்...முல்லைச்செடி வளர்த்தால் பெரியோர்கள் ஆசி கிடைக்கும்..செல்வாக்கு வளரும்..செம்பருத்தி வள்ர்த்தால் பெண்களுக்கு அதிர்ஷ்டம்..மாதுளை வளர்த்தால் அறிவான குழந்தைகள் பாக்யம் உண்டாகும்....!!

கஜலட்சுமி உருவத்தை மரத்தில் செதுக்கி தலைவாசலுக்கு மேல்புறம் வையுங்கள் வாஸ்து மீறல்கள் நீங்கி தோசம் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் கண் திருஷ்டி போகும்..யனை என்பது குருவின் வாகனம் இதனை வாசல் பகுதியில் சிலையாக வைக்கும்போது செல்வாக்கு அதிகரிக்கும்..முன்பெல்லாம் வீட்டு படியில் யானை சிலையை இருபுறமும் செதுக்கி இருப்பார்கள் இது களிற்றுப்படிகள் எனப்படும் இப்போதெல்லாம் நிறைய மாடர்ன் டிசைன்கள் வந்துவிட்டன...ஆனால் அந்த களிற்றுப்படிகள் விசேஷ சக்தி கொண்டது..

தெரு வழியே யானை போனால் தண்ணீர் கொடுத்து வீட்டின் மீது தெளிக்க செய்யலாம்...இதனால் தரித்திரம் விலகி அதிர்ஷ்டம் உண்டாகும்..வெல்ளிக்கிழமை மாலையில் உப்பு வாங்கினால் அதிர்ஷ்டம்...கரி ,விறகு ,பஞ்சு  போன்றவை வாங்கக்கூடாது..


பெளர்ணமி தினத்தில் இரவு குளித்துவிட்டு,மொட்டை மாடியிலோ நதிக்கரையிலோ அல்லது மலை மீதோ அமர்ந்து , சந்திர ஒளியில் காயத்ரி மந்திரம் ,கனகதாரா ஸ்தோத்திரம்,சொல்லலாம் அல்லது நல்ல கருத்துக்கள் உடைய தெய்வீக துதிகள் படிக்கும்போது அதற்கு சக்தி அதிகம்....அந்த ஸ்லோகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பலன்கள் உங்களுக்கு பலிக்க ஆரம்பித்து நன்மைகள் வந்து சேரும்...கணவன் மனைவி இருவரும் சேர்ந்து இதை படிக்கலாம்....நீங்கள் எதிர்காலத்தில் என்னவெல்லாம் அடைய விரும்புகிறீர்களோ அதைப்பற்றிப் பேசிக்கொண்டிருக்கலாம்...உரத்து பேசக்கூடாது....உங்கள் கனவுகளை பலமுறை விவாதித்து பேசும்போது ஆழ்மனதில் பதியும் அது பிரபஞ்ச சக்தியால் கிரகைக்கப்பட்டு அது உங்களை வந்தடையும் விரும்பியதை கிடைக்கச்செய்யும்....பெளர்ணமி அன்று கந்த சக்தி பூமியில் அதிகம்..தேவதைகள் பூமிக்கு வருகை தரும் நாள்...அமைதியான சுத்தமான இடத்தில் நல்ல வார்த்தைகளை பேசும்போது அந்த தேவதைகள் உங்கள் உடன் அருகில்  இருந்து அப்படியே ஆகட்டும் என்பார்கள்...

முல்லைப் பெரியாறு வெற்றி : ஸ்டாலினுக்கு பாராட்டு விழா

 முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்த முயற்சி எடுத்ததாக, செப்., 16ல் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலினுக்கு தேனியில் பாராட்டு விழா நடக்கிறது.
'முல்லைப் பெரியாறு அணை நீர் மட்டத்தை 142 அடியாக உயர்த்தியதில் எங்கள் பங்கும் உண்டு' என தி.மு.க., கூறி வருகிறது. இதற்காக தி.மு.க., எடுத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கி ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்பட உள்ளது. செப்., 16ல் தேனியில் நடக்கும் விழாவில் ஸ்டாலின் பங்கேற்கிறார். இதற்காக தேனி அருகே கருவேலன்நாயக்கன்பட்டியில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி இடத்தை தேர்வு செய்தார். விழாவிற்கான பணிகள் தொடங்கி உள்ளன.

முல்லை பெரியாறு நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த பாடுபட்டதற்காக ஸ்டாலினுக்கு தேனியில் பாராட்டு விழா. தி மு க முமுரம். இது செய்தி. இதை நினைக்கும்போது பழைய சம்பவம் எனக்கு நினைவு வருகிறது. 1962 தென் சென்னை லோக் சபா இடைதேர்தல். அப்போது தி மு க எதிர்க்கட்சி.. தி மு கவும் பழைய காங்கிரஸ் கட்சியும் போட்டி இட்டன. அண்ணா .சம்பத். நெடுஞ்செழியன் அன்பழகன், கருணாநிதி,,சத்தியவாணிமுத்து,கண்ணதாசன்,,மதியழகன் என் வி நடராசன் ஆகியோர் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு நாஞ்சில் மனோகரன் வெற்றி பெற்றார். வெற்றி விழா பொதுக்கூட்டம் சென்னையில் நடைபெற்றது .பொதுக்கூட்ட மேடையில் அண்ணா கருணாநிதிக்கு மோதிரம் பரிசளித்தார். சம்பத்தும் கண்ணதாசனும் அண்ணாவை சந்தித்து எல்லோரும் பிரசாரம் செய்தோம் . நீங்கள் கருணாநிதிக்கு மட்டும் மோதிரம் போட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினர். அதற்கு அண்ணா சொன்னார். தம்பி நீயும் ஒரு மோதிரம் வாங்கிப்போட சொன்னால் நான் போடமாட்டேன் என்றா சொல்வேன் என்றார். அப்போதுதான் கருணாநிதியின் நரித்தந்திரம் எல்லோருக்கும் புரிந்தது. இப்போது முல்லை பெரியாறு நீர் மட்டத்தை 142 அடி உயர்த்தியதுக்கு ஸ்டாலினுக்கு தேனியில் தி மு கவினர் பாராட்டு விழா எடுக்கின்றனர் என்றதும் எனக்கு பழைய ஞாபகம் வந்தது. அப்பனுக்குப்பிள்ளை தப்பாமல் பிறந்திருக்கிறது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...