Friday, January 2, 2015

கிரெடிட் கார்டு – நன்மையும் தீமையும்

கிரெடிட் கார்டும். இதைப் பயன் படுத்தும் நபரைப் பொறுத்தே, அதன் நன்மையும் தீமையும் அமையும்.
 
சரியாகப் பயன்படுத்தினால், அது நமக்குப் பொருளாதார நண்பன்! தவறாகப் பயன்படுத்தினால்… அதைப்போல மோசமான ‘ஸ்லோ பாய்சன்’ எதுவும் இல்லை. கிரெடிட் கார்டின் சரியான பயன்பாட்டை அறிந்து வைத்துக் கொள்வது, அதை பாய்சனாக்கா    மல், பாயசமாக் கும் கலையை உங்கள் வசமாக்கும்!
 கிரெடிட் கார்டு எதற்கு?
கிரெடிட் கார்டு என்பது, வங்கிகள் மற்றும் கிரெடிட் யூனியன்கள் வழங்கும் கடன் அட்டை. கையில் பணம் இல்லாதபோது நேரும் எதிர் பாராத செலவுகளை சமாளிக்க இது கைகொடுக்கும். பிறகு,அத்தொகையை செலுத்திவிடலாம் என்பதுதான் நடைமுறை.
தற்போது இருக்கும் சூழ்நிலையில்… எப்போது பணம் தேவைப்படும், எவ்வளவு தேவைப்படும் என்பதை யெல்லாம் யாராலும் கணிக்க முடியாமல்தான் இருக்கிறது. ஒரு கடைக்குச் செல்கிறோம். ஆஃபர் மூலம் விற்பனை நடக்கிறது. இன்றே கடைசி நாள்… கையில் பணமி ல்லை. அந்தச் சமயத்தில் கிரெடிட் கார்டு கை கொடுக்கும். நண்பர், உறவினர் திருமணம்; பிறந்தநாள் போன்ற விழாக்கள்; அவசரமாக ஊருக்குச் செல்ல டிக்கெட் புக் செய்ய வேண்டும்; எதிர்பாராத ஆஸ் பத்திரி செலவுகள்… இதுபோன்ற சூழ்நிலைகளில் ‘யாமிருக்க பயமேன்’ என கிரெடிட் கார்டு கை கொடுக்கும்.
ஒருவேளை இந்தச் செலவுகளுக்கு எல்லாம்  பணம் கையில் இருந்தால்கூட, கிரெடிட் கார்டு மூலம் வாங் குவது… சில வகைகளில் நன்மை தருவதாகவே இருக்கும். கிரெடிட் கார்டு மூலம் நாம் வாங்கும் பொரு ட்களுக்கு 45 நாள் முதல் 50 நாள் வரைக்கும் எந்தவிதமான வட்டியும் செலுத்தத் தேவையில்லை. உதார ணத்துக்கு… ஒவ்வொரு மாதமும் 30-ம் தேதி ‘பில்லிங் தேதி’ என்றால், ஏப்ரல் மாதம் 1-ம் தேதி வாங்கும் பொருளுக்கு மே மாதம் 15 தேதி பணம் செலுத்தினால் போதுமானது. அதற்கான பணத்தை முன்கூட்டியே உங்களுடைய வங்கி சேமிப்புக் கணக்கில் போட்டு வைத் திருந்து, சரியான தேதியில் செலுத்திவிடலாம். இந்த இடைப்பட்ட நாளில் நமது வங்கிக் கணக்கில் இருந்த பணத்துக்கு வட்டி (ஆண்டுக்கு 4 முதல் 6 சதவிகிதம் வரை) கிடைக்கும்.
இது மட்டுமல்ல… நமது இன்ஷூரன்ஸ் பிரீமியம், மொபைல் பில், மின் கட்டணம், வங்கிக் கடன்கள் உள்ளிட்டவற்றுடன் கிரெடிட் கார்டை இணை த்து விட்டால், எந்தவிதமான பிரச்னையும் இல்லாமல் நமது பொறுப்புகள் பூர்த்தி செய்யப்பட்டுக் கொண்டிருக் கும். சமயங்களில், கிரெடிட் கார்டுகளை பிரபலப்படுத்துவ தற்காக, கிரெடிட் கார்டு பயன்படுத்தி நாம் செய்யும் செலவுகளில் குறிப்பிட்ட சதவிகிதப் பணத்தை சம்பந் தப்பட்ட வங்கிகள் நமக்கே திருப்பிக் கொடுப்பார்கள்.
கிரெடிட் கார்டு பயன்படுத்தி பொருள் வாங்கும்போது 100 ரூபாய்க்கு ஒரு பாயின்ட் (ஒரு பாயின்ட் = ஒரு ரூபாய்) என்று நமக்கு பாயின்ட்டுகளை வழங்குவார்கள். இது வங்கிகளுக் கிடையே மாறுபடும். இவற்றை மீண்டும் பயன்படுத்தி நாம் பொருட்களை வாங்கலாம். அனைத்துச் செலவுகளை யும் கிரெடிட் கார்டு மூலம் செய்யும்போது, ஆண்டுக்கு 1,000 முதல் 2,000 பாயின்ட் கள் வரை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. அதாவது 1,000 ரூபாய் முதல் 2,000 ரூபாய் வரை கிடைக்கும். இது எல்லாமே… கிரெடிட் கார்டை கவனமாகவும், எல்லை மீறாமலும் பயன் படுத்தும் வரைதான். சிறிது பிசகினாலும் புதைகுழியில் சிக்கியது போல ஆகி விடும் என்பதை எப்போதும் மறந்துவிடாதீர்கள்.
கிரெடிட் கார்டு எப்போது எமனாகும்..?
கிரெடிட் கார்டு வாங்குகிறோம், பயன்படுத்துகிறோம், வங்கி குறிப்பிட்ட நாட்களுக்குள் பணத்தைச் செலுத்து கிறோம்… இப்படியே போய்க்கொண்டிருந்தால் பிரச்னை இல்லை. ஆனால், பணம் கட்டுவதற்கான குறிப்பிட்ட தேதியைக் கடந்துவிட்டால், நம் தலை கிரெடிட் கார்டு நிறுவனங்களின் பிடியில். முதலில் வங்கியில் இருந்து போன் வரும். குறைந்தபட்ச தொகையைக் கட்டச் சொல்வார்கள். அதாவது, பில் தொகையில் 5 சதவிகித்தை கட்டச் சொல்வார்கள். ‘50,000 பில் தொகை என்றால், 2,500 ரூபாய் கட்டினால் போதும், கார்டை தொடர்ந்து பயன்படுத்த லாம்’ என்று வங்கி தரப்பில் சொல்வார்கள். நீங்களும் ‘இது ஓ.கே-தானே..?!’ என்று மகிழ்ச்சியோடு 2,500 கட்டிவிடுகிறீர்கள். அடுத்து என்ன நடக்கும்?
மீதமுள்ள 47,500 ரூபாய்க்கு மாதத்துக்கு 3 சதவிகித வட்டி (வருடத்துக்கு 36%) விதிக்கப்படும். அடுத்த மாதத்தில் நமது அசல் 48,925 ஆக மாறி இருக்கும். மீண்டும், மீண்டும் குறைந்தபட்ச கட்டணம் மட்டுமே செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொண்டால், அது சிந்துபாத் கதைதான். கடன் எப்போது முடியும் என்று வங்கிக்கும் தெரியாது, உங்களுக்கும் தெரியாது. வட்டி மட்டுமல்லாமல்… லேட் பேமன்ட் அபராதமும் சேர்ந்து கொள்ளும்.
உங்கள் கார்டு லிமிட் 50,000 ரூபாய் என்றால், அதற்கு மேல் செலவு செய்ய முடியாது என்று நினைக்கலாம். ஆனால், 50,000 ரூபாய்க்கு மேலேயும் செலவு செய்யலாம். இதற்கு ஒவர் லிமிட் சார்ஜ் என்று மாதத்துக்கு 3 சதவிகிதம் வட்டி விதிக்கப்படும்.
இந்தத் தகவல்கள் எல்லாம், கிரெடிட் கார்டு லிமிட் அறியாமல் பயன்படுத்தும் செலவாளிகளுக்கு செய்யும் எச்சரிக்கையே. தேவையைக் கருதி திட்டமிட்டு கிரெடிட் கார்டு உபயோகிக்கும் புத்திசாலிகளுக்கு அல்ல.
நீங்கள் எப்படி?!
கிரெடிட் கார்டு  சில அறிவுறுத்தல்கள்!
கிரெடிட் கார்டை பயன்படுத்துவது தொடர்பான முக்கிய அறிவுறுத்தல்களை வழங்கினார், நிதி ஆலோசகர் பத்மநாபன்.
 பெரும்பாலான கிரெடிட் கார்டுகளுக்கு எந்தவிதமான வருடாந்திர கட்டணங்களும் செலுத் தத் தேவை இருக்காது. சில கார்டுகளுக்கு வருடாந்திர கட்டணம் செலுத்த வேண்டி இருக் கும். இன்னும் சில கார்டுகளில் வருடாந்திர கட்டணம் இருக்காது, ஆனால், வருட த்துக்கு குறைந் தபட்சம் இவ்வளவு ரூபாய் கார்டு மூலம் வாங்கி இருக்க வேண்டும் என்ற விதி இருக்கும். ஒப்பீட்டளவில் வங்கி, நிறுவனங்களை ஆராய்ந்து, அதன்பின் அவர்களிடம் கார்டு பெறவும்.
 கிரெடிட் கார்டு வைத்திருந்தால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் கிடைக்கும் என்று சொல்லி, அதற்குப் பிரீமியம் வசூலிக்க வாய்ப்பு இருக்கிறது. அதைத் தவிர்த்துவிடுங்கள். கார்டு புரொடக்ஷன் கட்டணம் என்று கட்ட ணம் வாங்கவும் வாய்ப்பிருக்கிறது. கார்டு வாங்கும்போது எவ்விதமான கட்டணங்களும் இல்லை என்று உறுதி செய்த பிறகே வாங்குங்கள்.
 எக்காரணம் கொண்டும் கார்டைப் பயன்படுத்தி பணத்தை எடுக்காதீர்கள். பணத்தை எடுத்த நாளில் இருந்து வட்டி கணக்கிடப்படும். உதாரணத்துக்கு 10,000 ரூபாய் எடுத்தால் 300 ரூபாய் மாதாந்திர வட்டியாகச் செலுத்த வேண்டி இருக்கும்.
 செலவு செய்த தொகையை பணமாகச் செலுத்தினால்… ஒரு நாளைக்கு முன்பு செலுத்திவிடுங்கள், செக் என்றால் நான்கு வேலை நாட்களுக்கு முன்பு செலுத்திவிடுங்கள், இன்டர்நெட் பேங்கிங் மூலமாக டிரான் ஸ்ஃபர் செய்வதாக இருந்தால், 2 நாட்களுக்கு முன்பு செய்துவிடுங்கள். இல்லை யெனில், அபராதம் செலுத்த வேண்டி இருக்கும்.
 சரியான தேதிக்குள் பணம் செலுத்த வேண்டும். ஒருவேளை செலுத்தத் தவறினால், மாதந்தோறும் குறைந்த பட்ச கட்டணம் செலுத்துவதைவிட, வாங்கிய கடனை மாதாந்திர இ.எம்.ஐ-ஆக மாற்றிக் கொள்வது சரியாக இருக்கும். இதற்கு 18 சதவிகித வட்டி செலுத்த வேண்டும்.
 கார்டைப் பயன்படுத்தும்போது கவனமாக இருக்கவும். இரண்டு முறை பில் செய்ய வாய்ப்பிருக்கிறது. கார்டை தேய்த்த பிறகு கொடுக்கப்படும் ஸ்லிப்பை கவனமாக செக் செய்து கையெழுத்துப் போடவும். 100 ரூபாய்க்கு 1,000 ரூபாய் என்று மாற்ற நிறைய நேரம் ஆகாது. முடிந்த வரை கூடவே இருந்து கார்டை வாங்கி வரவும். ஸ்கிம்மர் மெஷினில் உங்கள் கிரெடிட் கார்டைச் செலுத்தி, டூப்ளிகேட் கார்டு தயாரிக்கவும் வாய்ப்பிருக்கிறது.
 ஒவ்வொரு முறையும் கிரெடிட் கார்டு உபயோகத்துக்குப் பின்னர் நீங்கள் என்ன செலவு செய்தீர்கள், எவ்வளவு செய்தீர்கள், எங்கு செய்தீர்கள் என்ற எஸ்.எம்.எஸ். வரும். ஒரு வேளை வராவிட்டால்… கஸ்டமர் கேர் செக்ஷனுக்கு போன் செய்து விசாரியுங்கள். மொபைல் நம்பரை மாற்றினால், தவறாமல் நிறுவனத்துக்குத் தகவல் சொல்லுங்கள்.

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) யாருக்கு என்ன நன்மை ?

சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) யாருக்கு என்ன நன்மை ?
சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு (ஜிஎஸ்டி) தொடர் பான மசோதா கடந்த டிசம்பர் 19-ம் தேதி அன்று மக்க ளவையில் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய அரசும் இந்த மசோதாவை
வரும் மார்ச் 2016-க்குள் நிறைவே ற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் உள்ளது. இந்த ஜிஎஸ்டி மசோதா எப்படிப்பட்டது, இம்மசோதாவைக்கொண்டு வரு வதில் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கும், இதனால் தொழில் துறையினருக்கு, மத்திய, மாநில அரசுகளுக்கு என்ன லாபம் கிடை க்கும், இந்தியாவின் ஜிடிபியில் இந்த மசோதா என்னெ ன்ன மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிற கேள்விகள் முக்கியமானவை. இந்த கேள்விக ளுக்கான பதிலைப் பார்ப்போம்.

ஜிஎஸ்டி என்றால்..?

சரக்கு மற்றும் சேவை வரி விதிப் பு என்பது புரிந்து கொள்வதற்கு கொஞ்சம் சிக்கலானது. தற்போது ஒரு பொருளையோ அல்லது சேவையையோ தயாரித்து விற்கும்போது, அதற்கு கலால் வரி, சேவை வரி, ஒரு மாநிலத்திலிரு ந்து இன்னொரு மாநிலத்துக்கு கொண்டுசெல்ல நு ழைவு வரி, மாநில அரசுக்கு கட்ட வேண் டிய வாட் வரி என பல வரிக ளைச் செலுத்த வேண்டியுள்ளது. ஒரே பொருளுக்கு பல இடங்களில் பலவகையான வரிகளைக் கட்டுவது சிரமம் தரும் விஷயமாகவே இ ருந்துவருகிறது. இப்படி பல இட ங்களில் வரிகட்டுவதைவிட, இந் தஅனைத்து வரிகளையும் ஒன்று சேர்த்து, சரக்கு மற்றும் சேவை வரி என்கிற பெயரில் ஒரே வரி யாக மத்திய மற்றும் மாநில அர சுகளுக்கு செலுத்துவதுதான் ஜி எஸ்டி.

யாருக்கு என்ன நன்மை?

1. மத்திய/மாநில அரசு:
 
மத்திய அரசுக்கு உற்பத்தியாளரி டம் இருந்து மட்டும் வந்த வரி என் பது தற்போது உற்பத்தியாளர் துவங்கி டீலர், மொத்த விற்பனை யாளர், அப்பொருளை கடையில் விற்கும் சிறு கடைக் காரர் வரை அனைவரிடமிருந்தும் வரி கிடைக்கும்.இதனால் மத்திய அரசின் வரு வாய் அதிகரிக்கும். ஒரு சில து றைகள்தவிர அனைத்துத் துறை களுக்கும் இது பொருந்தும் என் பதால், இதன்மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கு அதிகளவில் இருக்கும்.

மாநில அரசுகளைப் பொறுத்தமட்டில், இதுவரை சரக் குகளுக்கான வரியை மட்டுமே வருமானமாக கொண் டிருந்தன. ஜிஎஸ்டி மூலம் சரக்கு மற்றும் சேவை இரண்டுக்குமே மாநில அரசுக்கு வரிமூலம் வரு வாய் கிடைக்கும். இதில் சிலர், மாநில அரசுக்கு வருவாய் இழ ப்பு ஏற்படும் என்கின்றனர். அது தவறான கருத்து. தவிர, ஆல்க ஹால் மற்றும் பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பு இன்னமும் மாநில அரசிடம் தான் உள்ளது. அதனால் மாநில அரசுக்கு   எஸ்ஜிஎஸ் டி ( மாநில சரக்கு மற்றும் சேவை வரி)மூலம் வருவாய் அதிகரிக்கும்.

2. தொழிற்துறை:

தொழில்துறையினர் நீண்டகாலமா கவே இதனை அறிமுகப்படுத்த வே ண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். தொழில் துறையினரைப் பொறுத்தமட்டில், இந்த வரி விதிப்பு என்பது அவர்களுக்கு அதிகம் பயனளிக்கக் கூடியதாகவே இ ருக்கும். நிறைய வரிகளுக்காக தனித்தனியே அதிகதொகை யை வரியாகச் செலுத்த வேண் டிய சூழலில் இருந்து ஒரே வரி யாகச் செலுத்தும் நிலை உருவாகியுள்ளதை நிச்சயம் வரவேற்பார்கள்.

இதனை ஒருங்கிணைப்பதி ல் குழப்பங்கள் இருந்தாலும் , அதனை சரியாக ஒருங்கி ணைத்து வரி விதிப்பை அறி முகம் செய்யும்போது அவர்க ளது உற்பத்தித் துவங்கி அனைத்து நிலைகளிலும் செலவுகள்குறையும். செலவு கள் குறையும்போது அந்தப் பணம் திரும்பவும் தொழி லில் முதலீடாக மாறுவதற்கு வாய்ப்பிருப்பதால், அவ ர்களது உற்பத்தித்திறன் அதிகரிக்கு ம். அப்போது உற்பத்தி அதிகரித்து பொருட்களை அதிக அளவில் விற் பனை செய்யும் சூழல் உருவாகும்.

3. பொதுமக்கள்:

இந்த வரிவிதிப்பின்மூலம் நிறுவன ங்களின் செலவு குறைவதால், அவர்கள் குறைந்த விலையில்தான் பொருட்களை விற்பார்கள். அதற்கான வரியும் குறைவாகவே இருக்கும். என வே, பொதுமக்களும் குறைந்த விலையில் அந்தப் பொருளை வாங்க முடியும். இதனால் பொ ருட்களை வாங் குபவரது எண்ணிக்கை அதிகமாகும்.

4.ஜிடிபி:
 
இந்தஜிஎஸ்டிமூலம் பெரும்பா லானோரை வரிகட்ட வைக்க முடியும். வரிஏய்ப்பு செய்வது குறையும். வரி மூலம்வரும் வ ருவாய் கணிசமான அளவு உயரும். இதனை அறிமுக ம் செய்தால், ஜிடிபியில் 2 % வளர்ச்சி  இருக்கும் என்று கூறுகின்றனர். அந்தளவுக்கு வளர்ச்சி அடையும் என்று கூறா விட்டாலும் தற்போது உள்ளதை விட நல்ல வளர்ச்சி இருக்கும் என்று கூற லாம்.

தற்போதுள்ள நிலவரப்படி, மத்திய, மாநில ஜிஎஸ்டி சேர்த்து 27 சதவிகிதமாக இத னை நிர்ணயிக்கலாம் என்ற கருத்து நிலவி வருகிறது. ஆனால் என்னைபொறுத்தவரை , மத்திய, மாநில ஜி எஸ்டியை சேர்த்து 12-14% வரி விதிப்பு என் பது சிறந்த விகிதமாக இருக்கும் . தற்போதுள்ள மத்திய அரசின் 12%, மாநில அர சின் 14.5% ஆகிவற்றை சேர்த்து 27 சத விகிதம் என்று வரி விதிக்காமல் மொ த்த வருவாயைப் பொறுத்து 12-14 சத விகிதமாக விதித்தாலே தற்போது உள் ளதைவிட அதிகவருவாயை அரசு ஈட் ட முடியும்.

காஸ் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் -சிக்கல் ஏற்பட்டுள்ளது

வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கை, காஸ் இணைப்புடன் இணைப்பதில், வங்கிகள் தாமதம் செய்வதால், மானியம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஜனவரி முதல், சமையல் காஸ் மானியம் வங்கிக் கணக்கில் செலுத்தும் திட்டம் அமலுக்கு வந்த நிலையில், தமிழகத்தில், 70 சதவீதம் வாடிக்கையாளரின், காஸ் இணைப்புகள், வங்கிக் கணக்குடன் இன்னும் இணைக்கப்படவில்லை. 

ஆதார் எண்: 'காஸ் மானியம் பெற, ஆதார் எண் மற்றும் வங்கிக் கணக்கு எண்ணை வழங்க வேண்டும்' என, எண்ணெய் நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை கேட்டுக் கொண்டன. பெரும்பாலான வாடிக்கை யாளர்களுக்கு, ஆதார் அட்டை இல்லாத நிலையில், வங்கிக் கணக்கு எண்ணை மட்டும் கொடுத்து, காஸ் இணைப்பு எண்ணுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், மானிய திட்டத்தில் இணைவதற்கு வழங்கப்பட்ட நான்கு விண்ணப்பங்கள், திரும்ப பெற்று, ஒரே படிவ மாக வழங்கப்பட்டது. ஆனால், காஸ் இணைப்புடன், வங்கிக் கணக்கை இணைக்கும் பணிகள், ஆமை வேகத்தில் நடந்து வருகின்றன.

இதுகுறித்து, தமிழ்நாடு முற்போக்கு நுகர்வோர் அமைப்பின் தலைவர் சடகோபன் கூறியதாவது:தமிழகத்தில், மொத்தம் உள்ள, காஸ் வாடிக்கையாளர்களில், 50 சதவீதம் பேருக்குத் தான், ஆதார் எண் உள்ளது. மற்றவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை நம்பியே, மானியம் பெற வேண்டும்.

போராட்டம்: டிசம்பர் இறுதி வரை, மானியம் பெற வங்கிக் கணக்குகள், 20 முதல், 30 சதவீத வாடிக்கையாளருக்கு மட்டுமே இணைக்கப்பட்டு உள்ளது. எஞ்சியவர்களுக்கு, இன்னும் இணைக்கப்படவில்லை. ஜனவரியில், வங்கி, அலுவலக நாட்கள் மிகவும் குறைவு. மேலும், வங்கி ஊழியர்கள், 21ம் தேதி முதல், தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனர். எனவே, இம்மாதத்தில், வாடிக்கையாளர்கள் அனைவருக்கும், நேரடி மானியம் பெறுவதற்கான, வங்கி நடைமுறைகள் முழுமை அடையாது. ஜன., மாதத்தில், மானியத்தை முன்கூட்டியே, வாடிக்கையாளர் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும் என்று, அரசு அறிவித்துள்ளது. வங்கிக் கணக்கு இணைக்கா தோருக்கு, முன்கூட்டியே அளிக்கப்படும் மானியம் கிடைக்காது. இதற்கு, நுகர்வோர் காரணம் அல்ல. எனவே, வங்கிக் கணக்கு மூலம் மானியம் அளிக்கும் திட்டத்தை, மார்ச் வரை நிறுத்தி வைக்க வேண்டும்.

பற்றாக்குறை: இந்த இடைவெளியில், வங்கி நடைமுறைகளை முடித்து, ஏப்ரல் முதல், மானியத்தை வங்கிக் கணக்குகளில் செலுத்தலாம். இதற்கு உரிய ஆணையை, மத்திய அரசு, வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார். 'ஊழியர்கள் பற்றாக்குறையால், வங்கிக் கணக்கை இணைப்பதில், தாமதம் ஏற்படுகிறது' என, பொதுத்துறை வங்கி ஒன்றின் மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.

அவகாசம் குறைவு: அவர் மேலும் கூறியதாவது: வங்கியின் அன்றாட பணிகளை செய்யவே, போதிய ஊழியர்கள் இல்லை. இந்நிலையில், காஸ் மானியம் பெற, வங்கிக் கணக்கை இணைக் கும் பணி, கூடுதலாக உள்ளது. தமிழகத்தில், கோடிக்கணக்கான நுகர்வோர் உள்ளனர். இவர்களின், வங்கிக் கணக்கை இணைக்க, போர்க்கால நடவடிக்கையை, வங்கி நிர்வாகங்கள் மேற்கொண்டாலும், கால அவகாசம் மிகக் குறைவு.

முதன்மை வங்கி: பெட்டியில் இருந்து சேகரிக்கும் விண்ணப்பங் களை, மாவட்ட முதன்மை வங்கியிடம், காஸ் ஏஜென்சிகள் அளிக்க வேண்டும். வாடிக்கையாளரின் வங்கிக்கிளைக்கு, அவற்றை முதன்மை வங்கி அனுப்பி வைக்கும் ஏற்பாட்டை, எண்ணெய் நிறுவனங்கள் செய்துள்ளன. இந்த ஏற்பாடுகள் அனைத்தும், ஜன., மாதத்தில், மானியம் பெறுவதற்கு உதவாது என, நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது.
எஸ்.எம்.எஸ்., தகவல்: தமிழகத்தில், பொதுத்துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் - 91 லட்சம்; பாரத் - 39 லட்சம்; இந்துஸ்தான் - 23 லட்சம் என, மொத்தம், 1.53 கோடி, சமையல் காஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கடந்த, 1ம் தேதி வரை, நேரடி மானிய திட்டத்தில், மூன்று எண்ணெய் நிறுவனங்களையும் சேர்த்து, 56.71 லட்சம் வாடிக்கையாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதில், சிலரின் வங்கிக் கணக்கில், நேற்று, முன்வைப்பு தொகையாக, 568 ரூபாய் வரவு வைக்கப்பட்டுள்ளது. இந்த தகவல், எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதன் முழு விவரம், வரும் திங்கள் கிழமை தெரிய வரும் என, தெரிகிறது.

பெண்களுடன் பழகும் எல்லா ஆண்களுக்கும் கிடைத்த அனுபவம் இது!

பெண் மனம் ஆழம் என்கிற இந்த வாசகம் நெடுநாட்களாகவே வழக்கில் இருந்து வருகிறது. பெண்களை ஏன் அப்ப‍டிச் சொல்லி வர
காரணம் என்ன‍? என்பதற்கான சிறு ஆய்வு
(பெண்களுடன் பழகும் ஆண்களுக்கு கீழுள்ள‍ அனுபவம் கண்டிப்பாக கிடைத்தி ருக்கும் )
பெண்கள் பற்றி 9 சிக்கலான உண்மைகள்:
1. அவர்கள் சேமிப்பில் அக்கறை உடையவர் கள்.
2. சேமிப்பில் அக்கறை உடையவர்களாக இருந்தாலும் விலையுயர்ந்தஆடைகளையே வாங்குவார்கள்.
3. விலையுயர்ந்த ஆடைகளையே வாங்கி னாலும் அணிய எதுவும் இல்லை என வருத்தப்படுவார்கள்.
4. அணிய எதுவும் இல்லை என வருத்தப் பட்டாலும் எப்போதும் அழகாக உடை அணிவார்கள்.
5. எப்போதும் அழகாக உடை அணிந் தாலும் திருப்தி அடையமாட்டார்கள்.
6. திருப்தி அடையாமல் இருந்தாலும் ஆண் கள் அவர்களை புகழ வேண்டுமென எதிர் பார்ப்பார்கள்.
7. ஆண்கள் அவர்களை புகழ்ந்தாலும் அவற்றை இவர்கள் நம்புவதில்லை.

8. அவற்றை நம்பாதிருந்தாலும் அந்த ஆண்ளை பெண்கள் விடுவதில்லை.
9. பெண்கள் ஆண்களை விடாதிருந் தாலும் அப்பெண்களை அந்த ஆண்கள் தொடராமல் இருந்ததில்லை.

Thursday, January 1, 2015

நினைவாற்றலுடன் பேசுவதற்கான வழிமுறைகள்

பலரின் மத்தியில் உரையாற்றும்போது (எழுதிவைத்து பேசி னால் கூட), நினைவுத்திறன் என்பது முக்கியம்.
நமது நினைவுத்திறன் எந்தளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்தே, நமது உரையானது, தெளிவாகவும், தொடர்ச்சியானதாகவும், பொருள் பொதிந்ததாகவும், கேட்போரை கவ ரும் விதத்திலும் இருக்கும். எனவே, அதுதொடர்பான பல ஆலோசனைகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன.
*உங்களைவிட தகுதியில் குறைந்த வர்கள், ஏன், கல்வியறிவே இல்லாதவர்கள் ஒரு விஷயத் தை செய்ய முடியும்போது, அதை உங்களாலும் நிச்சயம் செய்ய முடியும் என்று நம்ப வேண்டும்.
* ஒரு அலுவலகத்தில் நீங்கள் உயரதிகாரியாக இருக்கலாம். ஒரு முக்கியமான கூட்டத்தில் நீங்கள் பேச வேண்டியிருக்க லாம். இந்த சம யத்தில் உங்களுக்கு எந்த பதட்டமும் வேண் டாம். ஏனெனில், உங்களுக்கு கீ ழான பதவியில் இருப்பவர் கள்(பதவி ரீதியாகவாவது) உங்களை மட்டம் தட்டும் நிலையில் இருக்க மாட்டா ர்கள். மேலும், தேவைப்பட்டால், அவ ர்கள் அனைவருமே முட்டாள்கள் என் று கூட நீங்கள் கற்பனை செய்து கொள் ளுங்கள்.
* நீங்கள் உங்களது அனுபவத்தில் கேட் ட பலவித உரைகளையும், பேச்சுக்களையும் நினைவுப் படு த்திப் பார்க்கவும். அவற்றில் ஏதாவது உங்களை மிகவும்கவர்ந்திருக்கிறதா? அல்லது உலகை வென்றிருக்கிறதா? அல்லது அந்த உரை யை வழ ங்கிய நபரிடம் நீங்கள் புதிதா க எதையேனும் கண்டீர்களா ? உலகில் எவருமே பேசாத ஒன்றை அவர் பேசி விட்டா ரா? இத்தகைய கேள்விகளு க்கு, பொதுவாக, நீங்கள் தரு ம் விடை இல்லை என்பதே. இதே மாதிரிதான் உங்களின் நிலையும். உங்கள் பேச்சைக் கேட்பவர்கள், உங்களை நுணுகி கவனிக்கப் போவதில்லை. உங்களால் முடிந்ததை, பதட்டப்படாமல் பேசிவிட்டு வந் தாலே அது சிறந்த உரையாக இருக்கும்.
* எங்காவது பேசப்போகும் போது, படபடப்புடன் இரு க்க வேண்டாம். உங்களின் பெயர் வாசிக்கப்படப்போ கும் சூழல், மேடையின் பிர மாண்டம், கேட்பவர்களின் கண்கள் என்ற எதை நினை த்தும் பரபரப்படைய வேண் டாம். அந்த நேரத் தில் ஒரு மகிழ்ச்சியான சம்பவத்தை நினைத்து, ரிலாக்சாக இரு க்கவும். முடிந்தளவு, கேட்ப வர்களின் கண்களைப் பார்ப் பதை தவிர்க்கவும். அதன்மூலம் உங்களின் சூழ்நிலை இன்னும் இயல்புநிலைக்குத் திரும்பும்.
*ஒரு விஷயத்தின் மையக்கரு வைப் பற்றி நேரடியாக பேச வே ண்டிய அவசியம் இருக்காதவரை, வழக்கமான விமர்சனக் கருத்துக் கள் அல்லது சம்பவக் குறிப்புகள் ஆகியவற்றைப் பயன்படுத்தியே பேசத் தொடங்கவும். ஏனெனில், சம்பவக்குறிப்பு முறையில் நாம் எதையும் எளிதாக மறக்க மாட்டோம்.


* நீங்கள் பேசத் தொடங்கும் முன்பாக, மதிப்பிற்குறிய தலைவர் அவர்களே/அன்பார்ந்த நண்பர்களே, தோழர்களே/ பெரியோர்களே, தாய்மார்களே/மாணவச் செல்வங்களே/ அன்பார்ந்த ஊழியர்களே, என்ற வகையில் தொடங்கினால், மேடையில் உங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள சில நொடி கள் அவகாசம் கிடைக்கும். அதன்மூலம் பிறவற்றை நீங்கள் நினைவுபடுத்திக் கொள்ளலாம்.

மருத்துவ அதிசயங்களில் இதுவும் ஒன்று!

இதயம் துடிக்கும்போது ஒருவித அழுத்தத்துடன் ரத்தம், ரத்தக் குழாய்க்குள் தள்ளப் ப டுகிறது. அந்த அழுத்த மே ரத்தத்தை உடலெ ங்கும் பாய்ந்தோடச்  செய்கிறது. இதுதான் ‘ரத்த அழுத்தம்’. இது 120/ 80 மில்லி மீட்டர் ஹெச்ஜியாக இருந்தா ல் நார்மல். இதில் 120 என்பது இதயம் சுருங்கும்போது  உண்டாகின்ற ‘சிஸ் டாலிக்’ அழு த்தம். 80 என்பது இதயம் விரியும்போது உண்டாகின்ற ‘டயஸ்டா லிக்’ அழுத்தம். ரத்த அழுத்தம் அதிகமானால்
முதலில்  தலை வலி, தலைசுற்றல், வாந்தி, மயக்கம் வரும். பிற கு, இதயத்துக்கு ஆபத்து வரும்; சிறுநீரகம் கெட்டுவிடும்; பக்க வாதம் வந்துவிடும்.

ரத்த அழுத்தத்தை மிகச் சரியாக அளக்க ‘ஸ்பிக் மோமேனோ மீட்டர்’ எனும் கருவி பயன்படுகி றது. 1881ல் வியன்னா வைச் சேர்ந்த சாமுவேல் வாட்  பாக்ஷ் இதைக் கண்டுபிடித்தார். ஆரம்ப த்தில் இது ஒரு சிறிய டிரங்குப் பெட்டி அளவுக்கு இருந்ததால் வெளி யி டங்களுக்கு எடுத்துச் சென்று  பயன்படுத்துவது என்பது சிரமமாக இருந்தது. 1896ல் இத்தா லிய மருத்துவர் ரிவா ரோக்கி இதை எளி மைப்படுத்தினார்.

இதில் ரத்த அழுத்தத்தைக் காண்பிக் கும் பாதரசக் குழாய், ரப்பர் பையை உள்ளடக்கிய துணிப்பட்டை, ரப்பர் பைக்குள் காற்றை நிரப்ப உதவும் ரப்பர்  பந்து, ரப்பர் குழாய் ஆகியவை உள்ளன. துணிப்பட்டையை புஜத்தில் கட்டி, ரப்பர் பந்தை அழுத்தி, ரப்பர் பைக்குள் காற்றைச் செலுத்தும்போ து,  கருவியில் பாதரசம் மே லேறும். அப்போது மருத்துவர் ஸ்டெதாஸ்கோ ப்பை முழங்கையி ன் முன்பக்கத்தில் வைத்து ரத்த ஓட்ட ஒலி களைக் கேட்பார். 

ஒரு குறிப்பிட்ட அழுத்தத்தில் அந்த ஒலிகள் கேட்காது. உட னே ரப்பர் பந்திலிருக்கும் வா ல்வைத் திறந்து, ரப்பர் பையிலி ருந்து காற்றை விடுவிப்பார்.  ஓரிடத்தில் ரத்த ஓட்ட ஒலிகள் மீண்டும் கேட்கத் தொடங்கும். அப்போது கருவி காட்டும் அளவு ‘சிஸ்டா லிக்’ அழுத்தம். காற்ற ழுத்தத்தைத் தொடர்ந்து குறைத்துக் கொ ண்டே வரும்போது, ஒரு அழுத்தத்தில் மீண்டும் ரத்த ஓட்ட ஒலிக ள் கேட்காது. இது ‘டயஸ்டாலிக்’ அழுத்தம். இப்படித்தான் ரத்த  அழுத்தம் அளக்கப்படுகிறது.

இப்போது டிஜிட்டல் ரத்த அழுத்தக் கருவி புழக்கத்தில் உள்ளது. இதை புஜம் அல்லது கை விரலில் கட்டிக்கொண்டால் போதும், தானாகவே ரத்த  அழுத்தத்தைக் கா ண்பித்துவிடும். சென்சார் மற் றும் மைக்ரோ புராசசர் இணைந்துள்ள இ க்கருவி ரத்த அலைகளில் உண்டாகி ன்ற அழுத்தத்தை  அளப்பதால் இந்த அளவு மிகச் சரியாக இருக்கும் என்று நம்ப முடியாது.

அறிவியல் வளர்ச்சியின் அடுத்த கட் டமாக இப்போது கான்டாக்ட் லென்ஸ் மூலம் ரத்த அழுத்தத்தை அளக்கும் டெக்னாலஜியைக் கண்டுபிடித்துள்ளனர்  ஜெர்மனி மருத்துவர்கள்.

கான்டாக்ட் லென்ஸ் என்பது பார்வைக் கோளாறுகளை சரி செய்ய மூக்குக் கண்ணா டிக்குப் பதிலாக கார்னியா மீது பொருத்தப்படு கின்ற ஒரு வகை  லென்ஸ். இது வ ட்டமாக வளைதளப் பரப்புள் ளதாக இருக்கிறது. சிலிக் கான், பிளாஸ்டிக் அல்லது ஹைட்ரோ ஜெல் எனும் வேதிப்பொருளால்  தயாரிக்கப்படுகிறது. கண்ணாடி தம்ளர் ஓரங்களில் தண்ணீர்த் துளி ஒட்டிக்கொள்வ தைப் போலத் தான் இதுவும் கார் னியாவில் ஒட்டிக்கொள்கிறது.  கார்னியாவு க்கும் லென்சுக்கும் நடுவில் உள்ள கண்ணீர்த் துளியி ன் ‘புறப்பரப்பு இழுவிசை’ லென் சை நகர விடாமல்  பார்த்துக் கொள்கிறது. 

சரி, கான்டாக்ட் லென்ஸ் எப்படி ரத்த அழுத்தத்தை அளக்கிறது?

2000த்தில் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த மேட்டோ லியோனார்டி, ரேனே காட்கூப் ஆகியவர்கள் ‘சென்சிமெட்’ எனும் ஒரு மை க்ரோ சென்சாரை  கான்டாக்ட் லென்சின் ஓரத்தில் பொருத்தி, கண்ணில் உள்ள அழுத்தத்தை (Intra Ocular Pressure-சுருக்க மாக ஐஓபி) அளந்து சொன்னா ர்கள். இந்தக் கருவியின் பெய ர் ‘டிரைகர் ஃபிஸ் ‘. கண்ணில் அளக்கப்படும் ஐஓபி அளவு மின்சார சிக்னல்களாக மாற்ற ப்பட்டு, ஒரு ஸ்மார்ட்போன் அளவுக்குப்  பயனாளியின் கழுத்தில் தொங்கவிடப்பட்டிருக்கும் ரெக்கார்டரில் பதிவாகிக் கொ ண்டேஇருக்கும். கண்ணில் இந்த அழுத்தம் அதிகமானால்  குளுக்கோமா நோய் வந் து கண்ணைக் குருடாக்கிவிடும். ஆகவே , 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆண்டுக் கு ஒருமுறையாவது இந்த அளவை  அ வசியம் தெரிந்து கொள்ள வேண்டும். இ தற்கு டிரைக ர்ஃபிஸ் கருவி பயன்படுகிற து.

இப்போது இதே கருவியில் சில மாற்றங்களைச் செய்து, கண் ரத்தக்குழாயில் ரத்த அழுத்த த்தை அளப்பதன் மூலம் உடலின் ரத்த அழுத்தத்தை க்  கணிக்க முடியும் என்று கண்டுபிடித்துள்ளனர், ஜெர் மனி மருத்துவர்கள் ஸ்டோ ட்மியாஸ்டர் மற்றும் ஜோன ஸ் ஜோஸ்ட். இதற்கு ‘கோல் டுமேன்  கான்டாக்ட் லென் ஸ்’ என்று பெயர்.

இவர்களுக்கு ஒருபடி மேலே போய் கூகுள் நிறுவனத்தைச் சே ர்ந்த பிரைன் ஓட்டிஸ், பேபாக் பார்விஸ் ஆகிய இருவரும் ‘சென்சி மெட்’ சென்சாருடன்  ஆன்டெ னா, கெப்பாசிட்டர், கன்ட் ரோலர் என்று இன்னும் சில கருவிகளை இணைத்து கண்ணீரில் உள்ள ரத்தச் சர் க்கரை அளவை அளக்க முடி யும்  என்றும், அதன் மூலம் கையில் ரத்தத்தை ஊசி குத்தி எடுக்காமல், ரத்தப் பரி சோதனை செய்யாமல் ரத்தச் சர்க்கரை அளவை நொடிக் கு ஒருமுறை  தெரிந்து கொள்ள முடியும் என்றும் நிரூபித்துள்ள னர். சர்க்கரை நோயாளிகளை சந்தோஷப்படுத்தும் இந்த ‘கூகுள் கான்டாக்ட் லென்ஸ்’ இன்னும் சில  ஆண்டுகளில் சந்தைக்கு வந்து விடும்.

பார்வையைச் சரி செய்ய வந்த கான்டாக்ட் லென்ஸ் ரத்த அழுத்த ம் மற்றும் ரத்தச் சர்க்கரை அளவுகளைக் காண்பிக்கும் கருவியா கவும் அவதாரம்  எடுத்திருப்பது மருத்துவ அதிசயம்தானே!

மணலிலிருந்து மின்சாரம்! – இந்த இந்தியரை, இந்த தமிழரை, நீங்க‌ பாராட்ட‍ மறக்காதீங்க!

உலகின் பெருகிவரும் மின் தேவையை ப் பூர்த்தி செய்ய மணலில் இரு ந்து மின் சக்தி பிறந்திருக்கிறது. அதை விட மகிழ்ச்சி தருவது அதைக் கண்டு பிடித்தி ருப்பவர் ஓர் இந்தியர்; குறிப்பாக தமிழர்.
உலகின் எந்தக் கண்டத்திலும், கடற்கரை களில் எளிதாகக் கிடைக்கும் மணல் தா ன் இதன் மூலப் பொருள். இதில் ஜிர்கா னியம் ஆக்ஸைட் என்கிற வேதிப் பொருளைப் பிரித்து மின்சக்தி யைத் தரும் ஃப்யூல் செல்லைத் தயாரிக்கலாம் என்பதை 1980ல் ஆர்தர் நான் ஸ்ட் என்பவர் கண்டு பிடித்தி ருந்தார். ஆனால் அதைத்தயாரிக்கபிளாட்டினம் போன்ற விலையுர்ந்த,எளிதில் கிடைக்காத பொருள்கள் தேவை பட்டதால் அது பிரபலம் ஆக வில்லை. இப் போது அதே முறையில் அதிகச்செலவில்லா மல் ‘ஃப்யூல் செல்லை’ உருவாக்கும் ஒரு முறையை பத்து ஆண்டுகள் கடின ஆராய்ச் சிக்குப் பின்னர் கண்டு பிடித்திருக்கிறார் ஆர். கே. ஸ்ரீதர்.
நெல்லை மாவட்டத்துக்காரான ஸ்ரீதர் சென் னைப் பல்கலைகழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் (ஹானர்ஸ்)கையும், அணுசக்தி துறையி ல் மேற்படிப்பையும் முடித்தப் பின் தொடர்ந்து அமெரிக்க இல்லினாஸ் பல்கலை கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அரிசோனா பல்கலை கழகத்தில் விண்வெளி தொழில் நுட்பத்துறைத் தலைவராகப் பணியா ற்றியபோது நாஸாவின் பல திட்டங்களுக்கு ஆலோ சகர். நாஸாவின் செவ்வாய் பயணத் திட்டத்துக்கான மின் சக்தியை, ஃப்யூல் செல் முறையில் உருவாக்கும் ஆராய்ச் சியில் ஈடுபட்டு வெற்றி கண்டவர். ஆராய் ச்சி காலத்தில் அமெரிக்க அரசு சார்ந்த மற்றும் பல தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களின் தலைமைப் பொறு ப்பில் திறம்படப் பணியாற்றியவர்.
‘பவுடரிலிருந்து பவர்’என்ற திட்டத்தின் மூலம் இவர் இதை மிகப்பெரிய அளவில் மக்கள் பயன்பாட்டுக்காகத் தயாரிக்க விரும்பினார். ஆனால் இவரது ஆராய்ச்சியைத் தொடர சோத னை உற்பத்திக்கு மிகப்பெரிய முத லீடு தேவைப்பட்டது. ஆராய்ச்சியி ன் விபரம் அறிந்த கெலினர் பெர்கின்ஸ்ர் என்பவரின் நிறுவனம் (venture capitalist) பல மில்லியன் டாலர்கள் முதலீடாகத் தந்து ஸ்ரீதரின் தலை மையில் ஒரு தனி நிறுவனத்தை 2001 இல் தொடங்கியது. இந்த கெலினர் தான் ‘கூகிள்’, ‘ஈபே’ போன் ற நிறுவனங்களுக்கு முதலீடு தந்து தொடங் கியது. உற்பத்தித் தொட ங்கியதும் தங்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் கோகோகோ லா, பாங்க் ஆப் அமெரிக்கா, வால்மார்ட்… போன்ற பெரிய நிறுவனங்கள் அதிகளவில் பணம் தந்து இத்திட்டத்து க்கு உதவி இருக்கின்றன.  
பிளாப்பிகள் போல் இருக்கும் சதுர வடிவ அட்டைகளை அடுக்கி இணை த்து கறுப்பு வண்ணத்தில் ஒரு செங்கல் கட்டி வடிவத்தில் இருக்கும் ‘புளும் பாக்ஸ்’(BLOOM BOX) தான் இவர்களது கண்டுபிடிப்பு. இது ஒரு வீட்டுக்கு ஒரு வருடத்துக்கான மின்சாரத் தைத் தரும். இதுபோல பல செங்கல்களை இணைத்து தேவைகளுக்கு ஏற்ப பெரிய பாக்ஸ்களை உருவாக்கிக் கொள்ளலாம். அதற்கு ‘புளும் சர்வர்’என்று பெயரிட்டு இரு க்கிறார். ஒரு பெரிய பிரிட்ஜின் சைஸிலில் இருக்கும் சர்வர் தரும் மின்சாரம் ஒரு சின்னத் தொழிற்சாலைக்குப் போதும். 
 
மின்சக்தியைச் சேமிப்பதோடு சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க வே ண்டும் என்ற தாகத்தில் எழுந்த முயற்சியின் வெற்றி இது” என்று சொல் லும் ஸ்ரீதரை ஃபார்ட்யூன் (Fortune)பத்திரிகை நாளைய உலகின் தலை விதியைத் தீர்மானிக்கும் தொலை நோக்குள்ள ஐந்து பேரில் ஒருவராக ப் பட்டியல் இட்டிருக்கிறது .

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...