Thursday, April 9, 2015

‘அலர்ட்‘ மெசேஜ் அனுப்பும் புதிய வசதி




மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியை மறந்து விட்டு இனி ‘பைனோடு‘ கட்டணத்தை செலுத்த தேவையில்லை. நுகர்வோர்களுக்கு நினைவுப்படுத்த மின்வாரியம் மெசேஜ் கொடுத்துவிடும்.

பெரும்பாலானவர்கள் மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதியை மறந்து விடுவார்கள். இதனால், மின் வாரிய ஊழியர்கள் மின் கட்டணம் செலுத்தாத வீடுகள் மற்றும் வணிக ரீதியான கட்டிடங்களுக்கு சென்று பியூஸ் கேரியரை பிடிங்கிய பின்னரே கட்டணம் செலுத்த வேண்டியது தெரிய வரும். பின், அபராதத்துடன் சென்று கட்டணத்தை செலுத்தி மின் இணைப்பை பெறுவது வழக்கம். இதனால், ஓரிரு நாட்கள் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு அவதிப்படுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். சில இடங்களில் பிரச்னைகளும் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், மின் கட்டணம் செலுத்தும் கடைசி தேதி குறித்து நமக்கு ‘அலர்ட்‘ மெசேஜ் அனுப்பும் புதிய வசதியை மாவட்ட மின் வாரியம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக தற்போது அனைத்து மின் நுகர்வோர்களிடம், செல்போன் எண்களை சேகரிக்கும் பணிகளை துவக்கியுள்ளது. செல்போனில், மெசேஜ் கொடுப்பதன் மூலம் இனி அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்துவது குறைவது மட்டுமின்றி, பிரச்னைகளும் குறைய வாய்ப்புள்ளது. நுகர்வோர், மின் கட்டணம் செலுத்தும் அலுவலகங்களுக்கு சென்று தங்களது செல்போன் எண்ணை கொடுக்கலாம்.

இதற்காக மின் அலுவலுகத்தில் தனியாக பதிவேடு வைக்கப்பட்டு, நுகர்வோர் தாங்களாகவே மொபைல் போன் எண்ணை பதிவு செய்யயல்லம் .
அல்லது இணையதளத்தில் பகிர்மானக் கழக இணையதளமான ,http://www.tangedco.gov.in/index1.php?tempno=-ல்பில்லிங் சர்வீசஸ் (Billing Services) என்ற ஆப்ஷனில் சென்றால், இறுதி ஆப்ஷனாக மொபைல் நம்பர் ரெஜிஸ்ட்ரேஷன் (Mobile Number Registration) சேர்க்கப்பட்டுள்ளது. அதில் க்ளிக் செய்தால், தங்களது மின் மண்டல எண்ணை தனியாகவும், மற்ற எண்களை தனியாகவும் குறிப்பிட வழி செய்யப்பட்டுள்ளது. இணைப்பு எண்ணைப் பதிவு செய்ததும், மொபைல் போன் எண்ணை பதிவு செய்ய வசதி செய்யப்பட்டுள்ளது.

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்களும் ஊட்ட‍ச்சத்துகளும்!

ஆரஞ்சு பழத்தில் இருக்கும் நமக்குத் தேவையான உயிர்ச்சத்துக்கள்! – ஓர் அலசல்

ஆரஞ்சுபழத்தில் இருக்கும் நமக்குத்தேவையான  உயிர்ச்சத்துக்களும் ஊட்ட‍ச்சத்துகளும் – ஓர் அலசல்
அனைவரையும்  கவர்ந்திழுக்கும் நறுமணம் கொண்ட இந்த ஆரஞ்சு பழத்த்தை, கமலா பழம் என்றும் அழைப் பதுண்டு.  மஞ்சளும்
சிவப்பும் கலந்த கலவையாக அதாவது ஆரெஞ்சு நிறத்தில் ஒரு பந்து போல் காணப்படும் இந்த பழத்தி ன் வெளித்தோல் கனத்திரு ந்தாலும் உரிப்ப‍து எளிதா னது. இதன் உள்ளிருங்கும் சுளைகளில் நமக்குத் தே வையான அனைத்து உயிர் ச்சத்துக்களும் காணப்படுகி ன்றன• அது என்னென்ன என்று பார்ப்போமா? .

ஆரெஞ்சு (கமலா) பழத்தில் காணப்படும் உயிர்ச் சத்துக்கள்.
100 கிராம் எடை கொண்ட பழத்தில் . . .
நீர்ச்சத்து: 88 கிராம்
புரதம்: 0.6 கிராம்
கொழுப்பு: 0.2 கிராம்
தாதுப் பொருள்:  0.3 கிராம்
பாஸ்பரஸ்: 18 மி.கிராம்
சுண்ணாம்புச் சத்து: 24 மி.கிராம்
கரோட்டின்: 1100 மி.கிராம்
சக்தி: 53.0 கலோரி
இரும்புச் சத்து: 0.2 மி.கிராம்
வைட்டமின் ஏ: 99 மி.கிராம்
வைட்டமின் பி: 40 மி.கிராம்
வைட்டமின் பி2: 18 மி.கிராம்
வைட்டமின் சி: 80 மி.கிராம்

உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்கள எதிரியாக நினைக்காதீங்க.

உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்கள எதிரியாக நினைக்காதீங்க!

உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்கள எதிரியாக நினைக் காதீங்க!
ஹாய் பிரண்ட்ஸ், நம்மல்ல பலபேர் நாம என்ன சொன்னாலும் அதை அப்படியே
மத்தவங்க ஏத்துக்கணும் அப்படின்னுதான் எதிர்பார்க்கி றோம். அப்படி செய்றவங்க தான் நமக்கு நெருங்கிய நண்பர்களாகவோ அல்லது நமது அபிமானத்துக்கு உரிய நபர்களாகவோ இருப்பாங்க.
அப்படி இல்லாம நம்ம கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்களப் பார்த்தா நமக்கு பிடிக்கறதில்ல. ஆனா உண்மை என்ன தெரியுமா? இப்படி நாம சொல்றதுக் கெல்லாம் ஆமாம் சாமி போடுற நபர்களாலேயோ, ஜால்ரா தட்டுற நண்பர்களாலேயோ நமக்கு ஒருபிரயோஜனமும் இல்லை .
மாறாக, நாம் பேசுவதற்கு எதிர்பேச்சு பேசுபவர்களு ம், நம்மை விமர்சனம் செய்பவர்களும்தான் நம்மு டைய முன்னேற்றத்துக்கு உதவுபவர்கள். அவர்களிட மிருந்து தான் நாம் முன்னேற்றத்துக்கான பல புதிய விஷயங்களை பெறுகிறோம்.
ஆச்சரியமா இருக்கா; உண்மை அதுதான்! கொஞ்சம் யோசிச்சு பாருங்க. நீங்கள் சொல்வதற்கெல்லாம் ஆமாம் சாமி போடும் நபர்களாகவே உங்களை சுற்றி அமைந்திருந்தால், உங்க குறைகளை நீங்கள் எப்படி சரிசெஞ்சுக்க முடியும்? அதனால இனிமே, உங்க கருத்துக்கு மாற்றுக் கருத்து சொல்றவங்கள எதிரி யாக நினைக்காதீங்க.
மாறாக, அவங்க மூலமா உங்கக்கிட்ட இருக்குற குறை என்ன? நீங்க மாத்திக்கக்கூடிய விஷயம் என்ன? அவங்ககிட்ட இருந்து நீங்க எதை கத்துக்க முடியும் என்பதை யோசிச்சு உங்க குறைகளைநிவர்த்தி செஞ்சுக்கோங்க.
அப்பத்தான் உங்களை மேலும் மேலும் உயர்த்திக் கொண்டு முன்னேற முடியும். சரியா! இனிமே உங்களைக் குறை கூறுபவர்களை பார்த்து கோவ ப்படாம, எதிரியா பாக்காம அவங்க சொல்ற கமன்ட்ஸ்க்கு “ தேங்க்ஸ்’ சொல்லுங்க! முன்னேறுங்க! வெற்றி பெறுங்க!

Sunday, April 5, 2015

இயேசுவின் 12 சீடர்களும்! அரிய தகவலும்!

இயேசுவின் 12 சீடர்களும்  அரிய தகவலும்

இயேசுவின் 12 சீடர்களும்  அரிய தகவலும்
நாளை புனித வெள்ளி (Good Friday). இயேசுவை சிலுவையில் அறைந்த நாள். ஞாயிற்றுகிழமை ஈஸ்டர் இயேசு அவர்கள் மீண்டும்
உயிர்த்தெழுந்த நாள். கொண்டாடும் அனைவருக்கும் என் ஈஸ்ட்டர் நல் வாழ்த்துக்கள்.
1.பேதுரு
2. யாக்கோபு
3. யோவான்
4. அந்த்ரேயா
5. பிலிப்பு
6. பர்தலமேயு
7. மத்தேயு
8. தோமா
9. மரியாக்கோபு
10. ததயு 
11. சீமோன் 
12. யூதாஸ்.
இந்த பனிரெண்டு பேரில்  யூதாஸ் என்ற சீடன் நம்ம ஊர்  கட்ட‍ பொம்மனை,எட்டப்பன் போல் காட்டிக்கொடுத் தது போலவே  இயேசு வை சிலுவையில் அறைய வைத்தவ‌ன்
தோமையார் எனக் கூறப்படும் செயின்ட் தாமஸ் நம் இந்தியாவி ல் அதுவும் சின்னமலை, ப‌ரங்கிமலையில் பிரசாரம் செய்து பரங்கிமலை யில் கொல்லப்பட்டார். புனித தோமையார் சமாதி செயின்ட் தாமஸ் மௌன்ட்டில் உள்ள சர்ச்சில்தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.   வருத்த மான விஷயமனதாக இருந்தாலும் இயேசுவின் சீடர் ஒருவர் நம் சென்னையில் சமாதி அடைந்தார் என்பது எவ்வளவு பாக்யமான நிகழ்ச்சி அயல்நாட்டு யாத்ரிகர்களின் புனிதஸ்தலங்களில் இதுவும் ஒன்று.

ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பு – அதிர்ச்சித் தகவல்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி,சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந் துள்ள ‘பகீர்’ தகவல்கள்.
யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தா லும் ஆயிரம் பொன்’ என் று பழமொழி உண்டு. அதே பழமொழி, இப்போ து மாடு மற்றும் பன்றிக் கும் பொருந்துகிறது.
இதுவரை பால், இறைச்சி, தோல், சாணம் ஆகியவற்றுக்கு மாடுகள் பயன்படுத்தப்பட் டு வந்த நிலையில், தற்போது புதிதாக அதன் எலு ம்பு பவுடர்கள், குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஜெல்லி, சாக்லேட் கள், ஐஸ்கிரீம் போன்ற பொருட்களில் கணிசமாக சேர்க்கப்படுகிற து.
படித்ததும், “உவ்வே’ என்கிறீர்களா? பல கோடிகள் புரளும் இந்த வர்த்தகத்திற்குபின் மறைந்துள்ள “பகீர்’ தகவல் கள் வருமாறு:
மாட்டின் உடலில் 220 எலும்புகள் உள்ளன. மாட்டிறைச்சி கூடங்களி ல் மாடுகள் அறுக்கும்போது, சிறியளவில் உள்ள எலும்புகள் இறைச் சியுடன் சேர்த்து விற்கப்படுகிறது. கடிக்க மற்றும் துண்டிக்க முடியா த எலும்புகளை, இறைச்சி வியாபாரிகள் சேகரிக்கி ன்றனர்.
அவற்றை, எலும்பு பவுடர் தயாரிப்பாளர்கள் நேரடி யாக கொள்முதல் செய்கி ன்றனர். ஒரு கிலோ எலு ம்பு, எட்டு ரூபாய் முதல் ஒன்பது ரூபாய் (இந்திய ரூபாய்) வரை விற்கப்படுகிறது. எலும்பு பொருட்களை காயவைத்து, பதப்படுத்தி அரைத்து விற்பனை செய்யும் தனியார் நிறுவனங்கள் தமிழகத்தின் சென்னை, விழுப்புரம், தென்காசி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சப்தம் இன்றி இயங்கி வருகின்றன. மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, ஒரு மாதத் திற்கு 100 டன் வரை  எலும்புகள் கிடைக்கி றது
beef bone powder
மூட்டைகளில் வரும் எலும்புகளில் இருந்து, ஜவ்வு, கொம்பு, கால் குளம்பு ஆகியவற்றை தனித்தனியே பிரிக்கின் றனர். பின், ஈரப்பசை கொண்ட அவற் றை நன்றாக காய வைத்து அரைத்து பவுடர் ஆக்கி மூட்டைகளில் அடைக்கி ன்றனர். ஒரு கிலோ 13 முதல் 15 ரூ பாய் வரை  விற்கின்றனர்.
அதை தமிழகம், கேரளா, ஆந்திராவி ல் உள்ள தனியார் நிறுவனத்தினர் மொத்த விலையில் வாங்கிச்செல்கின் றனர். எலும்பு பவுடரை, பல்வேறு வேதியியல் முறைகளுக்கு உட்ப டுத்தி, சாப்பிடும் ஜெலட்டின், பார்மா ஜெலட்டின், போட்டோ ஜெலட் டின் ஆகியவற்றை தயாரிக்கின்றனர். அவை உள்நாட்டு பயன்பாட்டி ற்கு மட்டுமின்றி, அமெரிக்கா, ஜெர்மனி, ஜப்பான், இத்தாலி உள்ளிட் ட பல்வேறு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
சாப்பிடும் ஜெலட்டின்: இதில் புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் 50முதல் 60சதவீத அளவிற்கும்அதிக மாக உள்ளதாக கூறப்படுகிறது. இவை குழ ந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் வி ரும்பி சாப்பிடும் ஜெல்லி உணவுகள், சாக் லேட்கள், ஐஸ்கிரீம், கேக் கிரீம் ஆகியவை தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. மேலும், புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்கள் உள்ள குளிர்பானங்கள், புத்துணர்ச்சி தரும் பான பவுடர்களில் அவை சேர்க்கப்படுகிறது.
பார்மா மற்றும் போட்டோ ஜெலட்டின்: டியூப் மாத்திரைகளின் மூடி தயாரிப்பதற்கு இவை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இது மட்டு மின்றி, புரோட்டின் மற்றும் கால்சியம் சத்துக்களுக்காக, மாத்திரைகள் மற்றும் “சிரப்’களிலும் சேர்க்கப் பட்டு வருகிறது. போட்டோ ஜெல ட்டின்கள், பட பிலிம்கள், எக்ஸ் ரே பிலிம்கள் தயாரிப்பதற்கு பய ன்படுத் தப்படுகிறது.
எலும்பு பவுடர் உரம்:வெளிநாடு களில், எலும்பு பவுடர் விவசாய நிலங்களில் உரமாக பயன்படுத் தப்படுகிறது. இதற்காக, டன் கணக்கில் எலும்பு பவுடர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. எலும்பு பவுடர்கள் மிகச்சிறந்த உரமாக இருப்பதா ல், அதிகளவில் மகசூல் கிடைப்பதை அனுபவ பூர்வமாக அந்நாடுக ளின் விவசாயிகள் உணர்ந்துள்ளனர்.
மாட்டு கொம்பு மற்றும் கால் குளம்பு பவுடர்கள், ஜெர்மனிக்கு அதிகளவில் உரத்திற்காக அனுப்பப்படுகிறது. தற் போது கேரளா மற்றும் கர்நாடகாவில், மாட்டு எலும்பு பவுடர்களை உரமாக பயன்படுத்துவ து அதிகரித்துள்ளது. மாட்டு ஜவ்வு பவுடர்கள், கோழி தீவனமாக பயன்படுத்தப்படுகிறது.
கோழிக் குஞ்சுகள் அவற்றை சாப்பிடுவதால் அதிக ஊட்டச்சத்துகள் பெற்று, மூன்று மாதங்களில் அவை இறை ச்சிக்கு தயாராகி விடுகின்றன. இப்படி, மாட்டு எலும்புகள், உணவு, மருத்துவம், உரம் ஆகிய வற்றில் மறைமுகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அவற்றை பல்வேறு பொருட்களில் பயன்படுத்துவது                          வெ ளிப்படையாக தெரிந்தால் , விற்பனை பாதிக்கும் என்பதால், அவற் றை தயாரிப்பாளர்கள்        மறை க்கின்றனர்.

மாந்திரீக மூலிகையான ‘குப்பைமேனி’யில் உள்ள‍ மருத்துவ குணங்கள்

மாந்திரீக மூலிகையான குப்பைமேனியில் உள்ள‍ மருத்துவ குணங்கள்!

மாந்திரீக மூலிகையான குப்பைமேனியில் உள்ள‍ மருத்துவ குணங்கள்
நம் சித்த‍ர்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பல அரிய வகையான மூலிகைச் செடிகளை, கண்டடெடுத்து
நமது உள்ள‍த்துக்கும் உடலுக்கும் ஆரோக்கியத்தை அள்ளிதரும் வழிக ளைச்சொல்லிச் சென்றுள்ள‍னர். ஆனால் காலப்போக்கில் நாம் அவற்றை பின்னுக்குத் தள்ளி, மேல்நாட்டு மோகம் காரணமாக இவற்றின் அருமை பெருமைகளை அறியாமல் விட்டுவிட்டோம். இந்த இந்த குப்பைமேனி மூலிகைச் செடி, பல்வேறு மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. மேலும் இது மாந்திரீக பயன்பாட்டுக்கும் பயன்படுவதாக ஒரு பேச்சு இருந்து வருகிறது.
ஆம்! பிறரை வசீகரப்படுத்தும் இயல்புடைய இந்த குப்பைமேனி ஒருமாந்திரீக மூலிகையாகும்.
குப்பைமேனியின் மகத்துவங்கள்
இலைச் சூரணத்தைப் பொடி போல் மூக்கில் இட தலைவலி நீங்கும். இலை, சிறிது மஞ்சள் , உப்பு அறைத்துப் உடலில் பூசி சற்றுநேரம் கழித்துக் குளிக்கத் தோல் நோய் அனைத்தும் தீரும்.
வயற்றில் இருக்கும் குடற்பூச்சிகளை போக்கவல்லது. இதன் வேரை கிராம் 200 மி.லி நீரில் காய்ச்சி குடிநீராக அருந்த, பூச்சிகள் அனைத்தும் வெளியேறும்.
குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி இளம் சூட்டில் கட்டிவர படுக்கைப் புண்கள் ஆறும்.
குப்பைமேனி இலையை கைப்பிடியளவு எடுத்துச் சிறி து மஞ்சள், உப்பு சேர்த்து அரைத்துப் பூசி சிறிது நேரம் கழித்துக் குளிக்க, தோல் நோய் குணமாகும்.
குப்பை மேனியின் வேரை நிழலில் உலர்த் திக் காய வைத்து இடித்துப் பொடியாக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு லிட்டர் நீரில் போட்டு 200 மில்லியளவாகச் சுண்டக் காய்ச் சி வடிகட்டிக் குடிக்க நாடாப்புழு, நாக்குப் பூச்சி வெளியேறும்.
குப்பைமேனி இலையை எடுத்துச் சாறு பிழிந்து 200 மில்லியளவு எடுத்து, அதேயளவு நல்லெண்ணெயுடன் கலந்து தைலப் பதமாகக் காய்ச்சி இறக்கி வடிகட்டி வலியுள்ள இடத்தில் தேய்த்து வர குணமாகும்.
குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத் து முகத்தில் பூசி வந்தால் பெண்களுக்கு முகத்தில் வளரும் முடிகள் காணாமல் போகும்.
குப்பைமேனி இலையை அரைத்து முகத்தில் பூசினால் முகம் அழகு கொடுக்கும்.
நாம் உட்கொள்ளும் உணவு எப்போதும் நமக்கு ஜீரணமாகும் என கூற முடியாது. சில நேரங்களில் அது நமக்கு வயிற்றில் தொல்லை களையும் ஏற்படுத்தலாம், அதுபோன்ற இன்னல்களை எளிதாக குணப்படுத்த கூடியது தான் குப்பைமேனி.
இதை யாரும் வளர்ப்பதில்லை என் றாலும் காடுமேட்டில் தானே வளரும் தன்மை உடையது.
சிறு செடியாக வளரும், இதன் இலை பச்சைபசேலென முக்கோண வடிவ மாக ஓரங்கள் அரும்பு அரும்பாக இருக்கும்.
இலையில் ஒரு சில இடங்களில் மஞ்சள் நிறப்புள்ளிகள் இருக்கும். பூக்கள் வெண்மையாக, சிறியதாக இரு க்கும். காய்கள் முக்கோண வடிவில் மிளகளவில் பச்சையாகக் காணப்படும்.
குப்பைமேனி துவையல்
முதலில் குப்பைமேனி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு வாணலியில் எண்ணைய் விட்டு கொஞ்சம் கடுகு சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
பின்பு நறுக்கிய இலைகளை வாணலியில் போட்டு நன்கு தாளித்து பின்பு சிறிது நீருடன் மிக்சியில் அடித் தால் குப்பைமேனி துவையல் ரெடி.
பயன்கள்
இதை சாப்பிட்டு வந்தால் தீராத தலைவலியும், பக்க வாத நோய்களும் பறந்துவிடும்.
மூல நோயிற்கு இந்த துவையல் ஒரு சிறந்த மருந்து. மேலும் நாளடை வில் மூலம் குறைய வாய்ப்பு உண்டு.
குப்பைமேனி கஷாயம்
வாணலியில் குப்பைமேனி இலைச்சாற்றுடன் சம அளவு உப்பைக் கரைத்து வைத்து, சுண்டக் காய்ச்ச வேண்டும்.
இதில் உப்பு ‘பூர்த்து’ மிகுந்து விடும். இந்த உப்பை தூளாக்கி வைத்துக் கொள்ளவும்.
இதன் பிறகு குப்பைமேனியில் இருந்து வடிந்த நீருடன் சிறிது மிளகு சேர்த்து கொதிக்க விட்டால் குப்பை மேனி கஷாயம் தயார்.
பயன்கள்
இந்த கஷாயத்தை தினசரி இருவேளை சாப்பிட்டு வந் தால், வாயு மற்றும் அஜீரண கோளாறுகள் நீங்கும்.
நெஞ்சுக்கோழையை நீக்கும், இருமலைக் கட்டுப்படுத்தும், மேலும் விஷக் கடி போன்ற நோய்களை குணப்படுத்தும்.

உலர்திராட்சையை வாயில் போட்டு, அதன் சாற்றினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால். . .

உலர்திராட்சையை வாயில்போட்டு, அதன் சாற்றினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால். . .

உலர்திராட்சையை வாயில்போட்டு, அதன் சாற்றினை கொஞ்சம் கொஞ்சமாக விழுங்கினால். . .
நாட்டு மருந்து கடைகளிலும் மளிகை கடைகளிலும் எளிதாக கிடைக்கக் கூடியதுமான உலர் திராட்சை. இந்த உலர் திராட்சை, நமது ஆரோக்கிய த்திற்கு ஏற்ற‍
உணவாகவும் பயன்படுகிறது. அத்தகைய ஒரு பயனைத்தான் நீங்கள் கீழே பார்க்க‍விருக்கிறீர்கள்.
எலும்பு மஞ்ஜைகளிலிருந்து இரத்தம் ஊறுவதற்கு காய்ந்த திராட்சை மிகவும் உதவுகிறது. இந்தப் பழத்தை எடுத்து வாயில் போட்டு கொஞ்சம் கொஞ்சமாக சாற்றி னை விழுங்கினால், நமது உடலில் உள்ள‍ எலும்பு மஞ் ஜைகள் பலமடைந்து இரத்தம் அதிகம் சுரக்கும். மேலும் இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலுக்கு புத்துணர்வைக் கொடுக்கும்.
மேலும்  ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பவர்கள் உலர் திரட்சையை உட்கொண்டால் ரத்தசோகை குணமாகும். இதி ல் உள்ள தாமிரச்சத்துக்கள் ரத்தத்தில் சிவப் பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...