Friday, June 3, 2016

மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால் . . .

மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால் . . .

மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ (அல்) பாயசமோ வைத்து சாப்பிட்டு வந்தால் . . .
பிறந்ததில் இருந்து மிகவும் கட்டுக்கோப்பாக பாதுகாத்து வந்த கட்டுமஸ் தான உங்கள் உடல், சர்க்கரை நோய் வந்ததும், சக்கையாகி போய் விடுகி றது. இதுபோன்ற
சர்க்க‍ரை நோயினால் பாதிக்க‍ப்பட்டவர்கள், அவர்களின் இழ ந்த உடலை திரும்ப மீட்டெடுக்க‍முடியும். அதற்கு உதவும் உன்ன‍த உணவுதான் மூங்கில் அரிசி. இந்த மூங்கில் பூ பூப்ப‍து என்பது மிகவும் அற்புத நிகழ்வாகும். அப்ப‍டி பூத்த‍ பூவில் இருந்து அரிசி விளைவது அதைவிட விந்தையான செயலாகு ம். இதிலிருந்துபெறப்பட்ட‍ அரிசி அதாவ து மூங்கில் அரிசியில் அடிக்கடி வெண்பொங்கலோ அல்ல‍து பாயசமாகவோ சமைத்து சாப்பிட்டு வந்தா லே போதும். என்கிறார்கள் சித்த‍ மருத்துவர்கள்.
சித்த‍ மருத்துவரை அணுகி, அளவு மற்றும் சாப்பிடும் வேளை ஆகியவற்றை கேட்டு தெரிந்து கொண்டு அதன்பிறகு உட்கொள்ள‍ வேண்டுகிறோம்.

காசி என்னும் வாரணாசி!!!


காசி என்றும் பெனாரஸ் என்றும் அழைக்கப்படும் வாரணாசி, (Varanasi), இந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நகரமாகும்.கங்கைக் கரையில் அமைந்த இந்நகர், இந்து சமயத்தினரின் ஆன்மிகத் தலைநகராகவும், அனைத்து இந்துக் கலைகளின் காப்பகமாகவும் விளங்குகிறது. முக்தி தரும் ஏழு நகரங்களில் வாரணாசியும் ஒன்று.
இங்குள்ள காசி விசுவநாதர் ஆலயத்திலுள்ள லிங்கம், சைவ சமயத்தினரின் புகழ் பெற்ற பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்களுள் ஒன்றாகும். பண்டைய காலங்களில் கல்விக்கூடங்கள் பல அமைந்து கல்வியிற் சிறந்த இடமாக விளங்கியது வாரணாசி. இங்கு தயாரிக்கப்படும் பெனாரஸ் பட்டுப் புடவைகள் மிகப் பிரபலமானவை. வாரணாசி பனாரசு இந்து பல்கலைக்கழகம் இந்தியாவில் புகழ்பெற்ற கல்வி மற்றும் தொழிற்கல்வி நிலையமாகும்.
பெயர்க் காரணம்!!!
வாரணாசி என்ற பெயர் இந்நகருக்கு சூட்ட காரணமாக வருணா ஆறும் மற்று அசி ஆறும் வடக்கிலிருந்தும், தெற்கிலிருந்தும் பாய்ந்து பின் இந்நகரில் கங்கை ஆற்றில் ஒன்று கூடிவதால் வாரணாசி என்ற பெயர் ஏற்பட்டது.
ரிக் வேதத்தில் இந்நகரை அறிவு தரத்தக்க, ஒளி பொருந்திய நகரம் என்ற பொருளில் காசி என குறிப்பிட்டுள்ளது. ஸ்கந்த புராணத்தின் ஒரு சுலோகத்தில், மூவுலகும் என் ஒரு நகரான காசி இணையாகாது என சிவபெருமான் காசியின் பெருமையை கூறுகிறார்.
சமசுகிருத மொழியில் காசி எனில் ஒளி பொருந்திய நகர் என மொழிபெயர்ப்பு செய்யலாம்.
வரலாறு
கங்கைச் சமவெளியில் அமைந்த வாரணாசி நகரம் இந்துக்களின் வேதங்கள் மற்றும் வேதாந்தம் ஆகியவற்றுக்கு 11வது நூற்றாண்டு முதல் இருப்பிடமாக அமைந்துள்ளது. வாரணாசி நகரில் வேதகாலத்திலிருந்து மக்கள் வேதகாலத்திலிருந்து தொடர்ந்து பல்லாண்டுகளாக வசித்து வருகின்றனர் என்பதை வாரணாசிக்கு அருகில் உள்ள அக்தா (Aktha) மற்றும் ராம்நகரை ஆராய்ந்த தொல்லியல் ஆய்வாளர்கள் இந்நகரில் மக்கள் கி. மு., 1800 ஆண்டுகளாக மக்கள் வாழ்ந்து வந்ததை உறுதிப்படுத்துகின்றனர். கூறுகின்றனர்.
சமண சமயத்தவர்களுக்கும் வாரணாசி நகரம் புனித இடமாகும். கி. மு., எட்டாம் நூற்றாண்டில் பிற்ந்த சமண சமய 23வது தீர்த்தாங்கரரான பார்சுவநாதர் பிறந்த ஊர் வாரணாசியாகும்.
மஸ்லின் பருத்தி துணிகள், பட்டுத் துணிகள், வாசனை திரவியங்கள், யாணையின் தந்த சிற்பங்கள், சிற்பக்கலை ஆகியவற்றுக்கு புகழ் பெற்ற நகராகும் வாரணாசி.
காசி நாட்டின் தலைநகராக விளங்கிய வராணாசியில் கௌதம புத்தர் பல ஆண்டுகள் கடும் தவமியற்றி, பின் ஞானம் அடைந்த பின், வாரணாசிக்கு அருகில் உள்ள சாரநாத்தில் தன் சீடர்களுக்கு தர்மத்தை போதித்தார்.
கி. மு., 635இல் வாரணாசி வந்த சீன யாத்திரிகரும் வரலாற்று அறிஞருமான் யுவான் சுவாங், கங்கைக் கரையில் 5 கி. மீட்டர் நீளத்தில் இருந்த வாரணாசியில் செழித்திருந்த சமயம் மற்றும் கலைநயங்கள் குறித்து பெருமையுடன் தனது பயண நூலில் குறித்துள்ளார்.
எட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆதிசங்கரர் வாரணாசியில் சிவவழிபாட்டை நிலைநாட்டினார்.
கபீர்தாஸ்
மகதப் பேரரசு காலத்தில் வாரணாசி நகரம் தட்சசீலம் மற்றும் படாலிபுத்திர நகருக்கும் சாலை வழி போக்குவரத்து இருந்தது.
1194ஆம் ஆண்டில் துருக்கிய இசுலாமிய ஆட்சியாளரான என்பவரால் வாரணாசி நகரத்திலிருந்த ஆயிரக்கணக்கான கோயில்களை இடிக்க ஆணையிட்டார்.
இசுலாமியர் ஆட்சிக் காலத்தில் வாரணாசி நகரம் மூன்று நூற்றாண்டுகளாக பொழிவிழந்து காணப்பட்டது. இந்தியாவை ஆப்கானியர்கள் ஊடுருவிய காலத்தில் வாரணாசியில் இடிக்கப்பட்ட கோயில்கள் மீண்டும் எழுப்பப்பட்டது.
1376இல் பெரோஸ் ஷா என்ற இசுலாமிய மன்னர் வாரணாசியில் உள்ள கோயில்களை மீண்டும் இடிக்க ஆணையிட்டார். 1496இல் ஆப்கானிய ஆட்சியாளர் சிக்கந்தர் லோடி வாராணாசியில் உள்ள இந்துக்களை ஒடுக்கவும், கோயில்களை இடிக்கவும் ஆணையிட்டார்.இருப்பினும் வாரணாசி தொடர்ந்து இந்துக்களின் ஆன்மிகம் மற்றும் கலைகளின் தாயகமாகவே விளங்கியது.

கபீர்தாசர்மற்றும் 15ஆம் நூற்றாண்டின் கவிஞர், சமூக சீர்திருத்தவாதி சாது ரவி தாஸ் வாரணாசியில் பிறந்து வளர்ந்தவர்கள். சீக்கிய மத நிறுவனர் குருநானக் 1507இல் வாரணாசியில் சிவராத்திரி விழாவினை காண வந்தார். துளசிதாசர் இங்கு வாழ்ந்தவர்.
மொகலாய மன்னர் அக்பர், வாரணாசியில் சிவன் மற்றும் விஷ்ணுவிற்கு இரண்டு கோயில்களை எழுப்பினார். புனே மன்னர் அன்னபூரணி கோயிலையும், அக்பரி பாலத்தையும் கட்டித்தந்தார்.
1656ஆம் ஆண்டில் அவுரங்கசீப் வாரணாசி காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பல கோயில்களையும் இடிக்க உத்திரவிட்டார். ஔரங்கசீப், இந்துக்கள் காசி நகரில் நுழைவதற்கும் கங்கையில் நீராடுவதற்கும் ’ஜிஸியா’ என்ற வரி விதித்தார். ஒளரங்கசீப் மகன் மூரத் பட்டத்திற்கு வந்தபின் பணத்தேவைக்காக ’ஜிஸியா’ வரியை அதிகமாகப் பெறுவதற்காக, கங்கையில் நீராடும் ஒவ்வொரு முறையும் ’ஜிஸியா’ வரி கட்ட வேண்டும் என்று ஆணையிட்டார்.
ஔரங்கசீப் மறைவிற்குப் பின், வாரணாசியில் காசி, பூமிகார் மற்றும் மராத்திய மன்னர்கள், 18ஆம் நூற்றாண்டில் மீண்டும் புதிய கோயில்களை கட்டினர். மொகலாயர்கள் 1737முதல் காசி நாட்டை அலுவலக முறையில் அங்கீகாரம் அளித்தனர். பிரித்தானிய இந்திய அரசும் அவ்வங்கீகாரத்தை தொடர்ந்து ஏற்றுக் கொண்டது. நகர வளர்ச்சியின் பொருட்டு 1867இல் வாரணாசி நகராட்சி மன்றம் துவங்கியது.

Wednesday, June 1, 2016

எந்த மாதிரியான பெண்களுக்கு எந்த மாதிரியான மேக் அப் செய்யலாம்?- ஓர் அழகின் அலசல்

எந்த மாதிரியான பெண்களுக்கு எந்த மாதிரியான மேக் அப் செய்யலாம்? – ஓர் அழகின் அலசல்

இந்த மாதிரியான பெண்களுக்கு எந்த மாதிரியான மேக் அப் செய்யலாம்? – ஓர் அழகின் அலசல்
ஆணும் சரி பெண்ணும் சரி, இயற்கையாகவே அழகானவர்கள்தான். ஆனால், பெண்கள், தமது அழகினை தக்க‍
வைத்துக்கொள்வதற்காகவும், கூடுதல் அழகிற்காகவும் மேக் அப் செய்து கொள்கின்றனர். ஆனால் இந்த மேக் அப்பில் ஆண்களுக்கு இதில் துளியும் நாட்ட‍மி ல்லை.
கறுத்த சருமம்கொண்ட எல்லா பெண்களுக்கும் உள்ளூர ஒருவித தாழ்வு மனப்பான்மை கட்டாயம் இருக்கும். கறு ப்பாக இருக்கிறோமே எனசோர்ந்து போயிருக்கும் பெண் களுக்கு ஒரு விஷயம். ஆரோக்கியமான சருமம் என்றா ல் அது கறுத்த சருமம்தான். அதில் முதுமையும், சருமப் பிரச்சனை களும் அத்தனை சீக்கிரம் வருவதில்லை.
அழகைப் பொறுத்தவரை அவர்கள் பேரழகியாகவே இருந்தால் கூட அது இரண்டாம் பட்சம்தான். கறுப்பான பெண்கள் நிறமாக மாற, சிலஅழகு சிகிச்கைகள். பியூட்டி பார்லர் போகாமல் வீட்டிலேயே இவர்கள் செய்துகொள்ளக்கூடிய சிகிச்சைக ள் பற்றி விளக்குகிறார் …இந்தியன் இன்ஸ்டிட்யூஷன் ஆஃப் பியூட்டி தெரபியின் இயக்குனர் ஹசீனா சையத்.
பழ பேஷியல்
முகத்தை முதலில் காய்ச்சாத பாலால் துடைக்கவும். சிறிதளவு வெள்ளரி ச்சாறு அல்லது ஸ்ட்ராபெர்ரி சாறு எடுத்து சில நிமிடங் கள் ப்ரீசரில் வைத்து, அதில் பஞ்சை நனைத்து முகத் தில் ஒற்றியெடுக்கவும். நன்கு கனிந்த பப்பாளியை மசித்து எடுத்துக் கொள்ளவும். அதை வைத்து முகத்து க்கு மென்மையாக மசாஜ் கொடுக்கவும். மசாஜ் செய்கி றபோது கைகளை ஆரஞ்சு சாற்றில் நனைத்துக் கொள் ளவும். கொஞ்சம் பப்பாளிக் கூழ், 2 துளிகள் தேன், கொ ஞ்சம் பால் எல்லாம் சேர்த்து கடைசியாக முகத்துக்குப் பேக் போடவும்.
காய்கறி பேஷியல்
முதலில் சொன்னமாதிரி பச்சை பாலால் முகத்தை துடைக்கவும். முட் டைக் கோஸை பச்சையாக மசித்து வைத்துக் கொள் ளவும். இது தவிர அதில் கொஞ்சம் சாறும் எடுத்து வை த்துக் கொள்ளவும். முட்டைக்கோஸ் மசித்ததைக்கொ ண்டு முகத்துக்கு மசாஜ் கொடுக்கவும். இடையிடை யே முட்டைக்கோஸ் சாறை விரல்களில் தொட்டுக் கொள்ளவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து ஈரமான பஞ்சால் முகத்தை துடைத்துவிட்டு, முட்டைக்கோஸ் விழுது, பால் மற்றும் தேன் கலந்த பேக் போடவும்.
மேற்சொன்ன இரண்டு பேஷியல்களையும் 15 நாட்கள் இடைவெளியில் செய்து கொள்ளலாம். பருக்கள் இல் லாதவர்கள் என்றால் 10நாட்களுக்கொரு முறையும் செய்து கொள்ளலாம்.
சிறிதளவு தேன், சிறிதளவு பாலேடு, சிறிது வெள்ளரிச் சாறு, கொஞ்சம் கடலை மாவு எல்லாவற்றையும் நன் றாகக் குழைத்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப் படியே விட்டு பிறகு கழுவலாம்.
நன்கு அடித்த பூவன் வாழைப்பழத்துடன் தேன், ஆரஞ் சு சாறு, பயத்தம் மாவு கலந்து முகத்தில் தடவி, ஊற விட்டுக் கழுவி வர, நிறம் கூடுவதைக் காணலாம்.
குங்குமப் பூ சாப்பிட்டால் நிறம் கூடுமா என்பது பலரது சந்தேகம். அதை அப்படியே பாலில் கலந்து குடிப்பது பலன் தராது. சூடான பாலில் குங்கும ப் பூவைப் போட்டு கால் மணி நேரம் அப்படியே ஊறவிட வேண்டும். அது வெதுவெதுப்பாக மாறி, மஞ்சள் நிறத்து க்கு வரும்போது குடிப்பதுதான் பலன் தரும்.
ஆயுர்வேதக் கடைகளில் சுத்தமான குங்குமாதி தைலம் கிடைக்கும். அதை வாங்கி கொஞ்சம் பாலுடன் கலந்து வாரம் ஒரு முறை முகத்துக்கு மசாஜ் செய்து வந்தால் நிறம் நிச்சயம் கூடும். மசாஜுக்குப் பிறகு அரைத்த சந்த னத்தில் பால் கலந்து பேக் போட வேண்டியது முக்கியம்.
வெயிலில் செல்கிறபோது எஸ்.பி.எஃப் 20 முதல் 30 வரை உள்ள சன் ஸ்கிரீன் உபயோகிப்பது, டூவீலரில் செல்கிற போது கைகளுக்கு கிளவுஸ் அணிவது, நிறைய பச்சைக் காய்கறிகள், பழங்கள், இள நீர், பால், தயிர் சாப்பிடுவது போன்றவையும் நிறத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்.
கறுப்பான பெண்களுக்கு மேக்கப் டிப்ஸ்
அதிமதுரம் கலந்து தயாரிக்கப்படும் ஸ்கின் லைட்டனிங் ஜெல் இப்போது கிடைக்கிறது. அதை முகத்தில் தடவி , அதற்குமேல் கால்வானிக் சிகிச்சை தருகிறோம். நான் கைந்து முறைகள் செய்தாலே வியப்பான மாற்றத்தைக் காண முடிகிறது.

கறுப்பான பெண்களுக்கான வரப்பிரசாதமென ஒயிட்ட னிங் பேஷியல்க ளைச் சொல்லலாம். பட்டுக்காகப் பயன் படும் மல்பரி, கோஜிக் அமிலம் என சருமத்தை நிறமாக் கக் கூடிய இயற்கைப் பொருட்கள் கொண்டு தயாரிக்கப்ப டுகிறவற்றால் இந்த பேஷியல் செய்யப்படுகிறது. கிளென் சிங்கில் தொடங்கி, மசாஜ், ஸ்கரப், பேக் என ஒவ்வொரு கட்டத்திலும் நிறத்தை அதிகரிக்கச் செய்கிற பொருட்கள் இதில் உண்டு.
கிவி பழம், ஸ்ட்ராபெர்ரி மற்றும் ஆரஞ்சுப் பழங்களைக் கொண்டு தயாரி க்கப்படுகிற பொருட்களால் செய்யப்படுகிற …ஸ்கின் மிரா க்கிள் சிகிச்சை கறுப்பான பெண்களுக்கு ரொம்பவே லேட்டஸ்ட்.
இவர்கள் எப்படி மேக்கப் போடலாம்?
கறுப்பான பெண்கள் பளிச்செனக் காட்சியளித்தால் போதும் என நினைக் க வேண்டுமே தவிர, வெள்ளையாகத் தெரிய வேண்டும் என நினைக்கக் கூடாது.
அவர்களது சருமம் மஞ்சள், பிரவுன் அல்லது பிங்க் என எந்த மாதிரியான ஸ்கின்டோன் கொண்டது என பார்த்து அதற்கேற்ற பவுண் டேஷனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பவுண்டேஷனை மணிக்கட்டில் தடவிப் பார்த்து அது சரியாகப் பொருந்து கிறதா எனத் தெரிந்து உபயோகிக்கலாம்.
ஐ ஷேடோ, லிப்ஸ்டிக் போன்றவை ரொம்பவும் வெளிர் நிறமாகவும் இல்லாமல், ரொம்பவும் டார்க் நிறமாகவும் இல்லாமல் மீடியம் ஷேடில் இருக்கட்டும். லிப்ஸ்டிக் போடுகிற நிறத்திலேயே ஐ ஷேடோவும் இருக்கட்டும்.
கறுப்பான பெண்கள் வெள்ளை நிறப்பவுடர் உபயோகிப்பதைத் தவிர்த்து, லூஸ் பவுடர் உபயோகிக்கலாம்.

உடை அணிகிற விஷயத்தில் இவர்கள் அதிக அக்கறை காட்ட வேண்டும். பளீர் நிற உடைகள் அப்படியே முகத்தில் பிரதிபலிக்கும். அதே சமயம் டார்க் நிற உடைகளும் அப்படியே உடலின் நிறத்தோடு ஒன்றிப் போய் இன்னும் கருப்பாக காட்டும். வெள்ளை மற்றும் ரொம்பவும் வெளிர் நிறங்களைத் தவிர்த்து கிரீம், டார்க் பிங்க், ஆரஞ்சு, நீலம், பச்சை, மெஜந்தாபிங்க் போன்ற நிறங்களில் உடை அணிய லாம்.

50 ஆண்டுகளில் பெரிய இழப்பு 25 கோடி பனைமரங்கள் அழிப்பு சர்க்கரை நோயாளிகள் அதிகரித்ததன் மர்மம் தெரியுமா?

கடந்த 50 ஆண்டுகளில் 25 கோடி பனை மரங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. பனை வீழ்ந்து கருவேல மரங்கள் வாழ்வதே, தமிழகத்தில் சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க காரணம் 

ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் 30 கோடி பனை மரங்கள் இருந்தன. தற்போது வெறும் 5 கோடி பனை மரங்கள் மட்டுமே உள்ளன. இவையும் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன. இதனால், விவசாயிகளும், இயற்கை ஆர்வலர்களும் கவலையடைந்துள்ளனர்.
உலகளவில் 108 நாடுகளில் பனை மரங்கள் உள்ளன. எந்த நாட்டிலும் கள் இறக்குவதற்கோ, குடிப்பதற்கோ தடை இல்லை. தமிழகத்தில் மட்டும் தடை உள்ளது. கள் இறக்குவதற்கான அனுமதி இருந்தவரை, பனை மரங்களை காப்பாற்ற வேண்டும் என்ற கவலை விவசாயிக்கு இருந்தது. தண்ணீர் இல்லா

ததால், பனை மரங்களை காப்பாற்ற முடியாமல் செங்கல் சூளைக்கும், சுண்ணாம்பு காளவாய்க்கும் எரிபொருளாக வெறும் ரூ.50க்கு விற்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.
முன்பு இனிப்புக்கு பனங்கருப்பட்டி, கற்கண்டு மற்றும் பதநீர் போன்றவை பயன்பட்டன. வெள்ளை சர்க்கரை நுகர்வு அதிகரித்ததால், பனைப்பொருட்களின் பயன்பாடு குறைந்து விட்டது. சர்க்கரை நோயாளிகள் அதிகரிக்க இதுவே காரணம். சீமைக் கருவேல மரங்கள் அதிகரித்ததே, பனை மரங்களின் அழிவுக்கு காரணமாகி விட்டது.

கள், பதநீர், கற்கண்டு, நுங்கு, பனம்பழம், பனங்கிழங்கு என ஆண்டுதோறும் உணவு கொடுத்து வந்த பனை மரங்களை வெட்டுவதும், அவற்றை தோண்டி எறிவதும் கடும் குற்றத்துக்கு ஒப்பானதுதான்.
பனை மரங்களை காப்பாற்றவும், பனை பொருட்களின் உற்பத்தி மற்றும் தேவையை பெருக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


செங்கல்பட்டில் திருப்பதி.

செங்கல்பட்டில் திருப்பதி. ஆம், ஆச்சரியம் ஆனால் உண்மை.
இனிமேல் யாரும் திருப்பதி செல்ல முடியவில்லையே! பெருமாளை ஒரு 10 நிமிடம் தரிசிக்க முடியவில்லையே என ஏமாற்றம் அடையாமல் இருங்கள்.
நேராக செங்கல்பட்டிற்கு செல்லுங்கள், 50ம் எண் கொண்ட திருப்போரூர் செல்லும் அரசு பேருந்தில் ஏறி திருவடிசூலம் என்னும் மிக அழகிய குக்கிராமத்தில் இறங்குங்கள். 2 கிலோமீட்டர் நடக்க வேண்டும். வழியில் மிகப்பழமையான திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலமான இடைச்சுரநாதர் (சிவன்) ஆலயம் வரும். இவரையும் அம்பாளையும் தரிசித்து விட்டு இடது புறமாக மறுபடியும் நடங்கள். மலை ஒன்று ஆரம்பமாகும். அப்படியே வலது புறம் திரும்பி நடங்கள். நீங்கள் 7 அழகிய மலைகளைக் காண்பீர்கள். உங்கள் கண்களுக்கு இரு சிறிய கோயில்கள் தென்படும். இடது புறமாக ஒரு சாலை பிரியும், அதைப் பின்பற்றி சென்றீர்கள் என்றால்...
உலகிலேயே மிக உயரமான 51 அடி அற்புதமான தரிசனம் தரும் கருமாரி அம்மனை சேவிக்கலாம். அப்படி ஒரு அழகு, தெய்வாம்சம், காண கண்கள் கோடி வேண்டும். மிகவும் விஸ்தாரமான இடத்தில், கோழியும், கெளதாரியும், வான்கோழியும் சுற்றி திரியும் இயற்கை எழில் கொஞ்சும் அழகுள்ள இடத்தில் இந்த கருமாரி வீற்றிருக்கிறாள். நீங்கள் உங்களையே மறந்துவிடுவீர்கள்.
கருமாரி அன்னையின் பின்புறமே அவர் அண்ணன் பெருமாள் ஸ்ரீ நிவாசனாக மிகப் பெரிய அளவில் வீற்றிருக்கிறார். திருப்பதி சென்று சரியாக கடவுளை காண முடியாத ஏக்கத்தில் இருப்பவர்கள் இங்கே நம்மூரிலேயே, சென்னைக்கு அருகிலேயே, செங்கல்பட்டிலிருந்து ஒரு 10 கிலோமீட்டர் தொலைவிலேயே இந்த அதி அற்புத தரிசனம் செய்யலாம். அண்ணனையும், தங்கையையும் ஒரு சேர காண கொடுத்து வைத்திருக்க வேண்டும்.


இவர்கள் இருவரையும் தரிசித்து விட்டு, இங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரம் சென்றால் அஷ்டபைறவர் கோயிலைப் பார்க்காலாம். இங்கே உலகத்தில் வேறெங்கும் காணமுடியாத மிகப்பெரும் கோயிலினுள் அஷ்டபைரவர்களை தரிசிக்கலாம். கோயில் நுழைவு வாயிலில் பௌர்ணமி குகை கோயில் உள்ளது. ஆனால் இந்த குகை கோயிலில் இருக்கும் சிவனைக் காண நீங்கள் பௌர்ணமிக்கு 3 நாட்கள் அல்லது பூரட்டாதிக்கு 3 நாட்கள் முன்பே பதிவு செய்துவிட்டுத் தான் செல்ல முடியும். சிவனை இங்கு பாதாளத்தில் காணலாம். முக்கிய குறிப்பு - சிவனைப் பார்க்க வேண்டுமெனில் நீல நிற ஆடை அணிந்து தான் செல்ல வேண்டும்.

....இறை சக்தி நம்மை காக்கட்டும் ...

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்..இறை என்று சொன்னால் கேட்கவில்லை என்றால் அறிவியலை கூறுங்கள் :
1. பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்களில்தான் கோயில்கள் இருக்கும்.
2. சக்தியும், பாஸிட்டிவ் எனர்ஜியும் அதிகம் கொண்டிருக்கும், இது நார்த் போல் சவுத் போல் திரஸ்ட் வகை ஆகும்.
3. கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என்று அழைக்கப்படும் மூலவர் சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றீருக்கும்.
4. இந்த இடம்தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே காந்த மற்றும் பாஸிட்டிவ் எனர்ஜி அதிகம் காணப்படும் இடம் ஆகும்.
5. இந்த மெயின் கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது தான் கீழே இருக்கும் அந்த எனர்ஜியை அப்படி பன்மடங்காக்கி வெளிக் கொணரும்.
6. அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று சைடு மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த எனர்ஜியை லீக் செய்யாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த எனர்ஜி கிடைக்க செய்யப்பட்டது ஆகும் ..
7. கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் சுற்றி வர காரணம் எனர்ஜியின் சுற்று பாதை இது தான் அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே எனர்ஜி சுற்றுபாதை கூட நாமும் சேர்ந்து சுற்ற அந்த எனர்ஜி அப்படியே உங்கள் உடம்பில் வந்து சேரும்.
8. இந்த எனர்ஜி நமது உடம்புக்கும், மனதிற்கும், மூளைக்கும் தேவையான ஒரு பாஸிட்டிவ் காஸ்மிக் எனர்ஜி.
9. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு இருக்கும்.அதை சுற்றி கண்ணாடி ஒன்று இருக்கும்.
10. அது அந்த எனர்ஜியை அப்படி பவுன்ஸ் செய்யும் ஒரு டெக்னிக்கல் செயல்தான்.
11. அது போக மந்திரம் சொல்லும் போதும், மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த எனர்ஜியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் கொண்டு வரும் ஒரு அபரிதமான எனர்ஜி ஃபேக்டரிதான் மூலஸ்தானம் என்பது..
12. பூக்கள், கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்), துளசி (புனித பேஸில்), குங்குமப்பூ (சேஃப்ரான்),கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு ஆன்டிபயாட்டிக்.
13. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க, மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
14. இந்த தீர்த்தம் வாய் நாற்றம், பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை. கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
15. கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என சில கோயில்களில் கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜி, அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
16. பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான்.
நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி உள்ளே உள்ள கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல்.
17. பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும், மூலவரின் தரிசனம் கிட்டும்போது, அந்த சில நொடிகளில் அந்த உடம்பில் ஏற்படும் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஏற்படுகிறது என்றால் அதற்க்கு காரணம், கோயிலின் மூலஸ்தானம் மற்றும் அதில் உள்ள எனர்ஜி.
18. கோயிலின் கொடி மரத்திற்க்கும் மூலஸ்தானதிர்க்கும் ஒரு நேரடி வயர்லெஸ் தொடர்பு உண்டு. கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இரிடியமாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் மேக்னெட்டிக் வேவ்ஸ் மற்றும் இடியின் தாக்கம் தான் ஒரு சாதாரண கலசத்தையும் இரிடியமாக மாற்றும் திறன் படைத்தது.
19. அது போக பெரும்பாலும் கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும் ..
20. நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும்.
இவ்வளவு புனிதத்துவம் வாய்ந்த கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வர பழகுவோம் ..குழந்தைகளையும் பழக்குவோம் ...அது அறிவியல் ஆகட்டும் ..எதுவாகட்டும் 

‎சொத்துக்குவிப்பு‬ மேல்முறையீட்டு வழக்கில் இன்றைய வாதங்கள் !

ஆச்சார்யா - அளவுக்கு அதிகமாக சொத்து குவித்துவிட்டு இப்போது அதை நால்வரும் மறைக்க பார்க்கின்றனர். சசிகலாவிடமிருந்து பல்வேறு வழிகளில் ஜெயலலிதா பணம் பெற்றுள்ளார். அதற்கான ஆதாரங்கள் உள்ளன. ஆனால் அவைகளை கடனாக காண்பித்துள்ளார். இதை கீழமை நீதிமன்றம் கவனித்தது. ஆனால் உயர்நீதிமன்றம் கவனிக்க தவறிவிட்டது.
-
நீதிபதிகள் குறுக்கீடு - தன்னுடனேயே வீட்டில் இருப்பவர்களிடம் கடன் பெற முடியாதா ? அது இயலாத ஒன்றா ? உதாரனமாக ஒரே வீட்டில் தந்தையும், மகனும் வசிக்கின்றனர். தொழில் துவங்க, இதர தேவைகளுக்காக மகன் தன் தந்தையிடம் கடனாக பணம் தாருங்கள், திருப்பி தந்துவிடுகிறேன் என்று கூறி பெறுவதில்லையா ? அதுவும் கடன் தானே ?
-
ஆச்சார்யா - அதை எப்படி கடனாக ஏற்றுக்கொள்ள முடியும். தந்தை மகனுக்கு செய்யும் செலவு என்று தான் அதை ஏற்றுக்கொள்ள இயலும்.
-
நீதிபதி பினாகி சந்திரகோஷ் - அப்படி ஏற்றுக்கொள்ள இயலாது. இப்போது நான் என் சக நீதிபதியான அமிதவ் ராயிடம் பணம் பெற்றால் அது கடன் தான்.
-
நீதிபதி அமிதவ் ராய் - தங்களுக்கு கடன் கொடுக்கும் அளவுக்கு என்னிடம் பணம் இல்லை.
-
நீதிபதி பினாகி சந்திரகோஷ் - பரவாயில்லை, நான் ஆச்சார்யாவிடமே பெற்றுக்கொள்கிறேன்.
-
வழக்கறிஞர்கள் சிரித்தனர்....
-
நீதிபதிகள் - இந்த வழக்கு அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டது பற்றியது இல்லை. தவறான வழியில் அளவுக்கு அதிகமாக சொத்து சேர்க்கப்பட்டது பற்றியது. அதாவது அரசாங்க பணத்தையோ அல்லது மக்கள் பணத்தையோ வைத்து சொத்து சேர்க்கப்பட்டதாக குற்றம் சமத்தப்பட்டுள்ளது பற்றியது. ஒருவர் சொத்து சேர்ப்பதில் தவறு இல்லை. அதுவும் ஆரம்ப காலம் முதல் வருமான வரி கட்டும் நபரான ஜெயலலிதா சொத்து சேர்த்து வைத்திருப்பது தவறு இல்லை. ஆனால் அவர் தவறான வழியில் அளவுக்கு அதிகமாக சேர்த்து வைத்திருந்தால் மட்டுமே அது தவறு. அரசாங்கத்திற்கு தெரியாமல், அரசாங்கத்தை ஏமாற்றி சேர்த்துள்ளாரா ?
-
ஆச்சார்யா - நிச்சயமாக அப்படித்தான் சேர்த்துள்ளார். பொய்யாக கணக்குகளை காண்பித்துள்ளார். அவர் காட்டிய பொய் கணக்குகளால் தான் அவர் வெளியே வந்துள்ளார்.
-
நீதிபதிகள் - அவர் அரசாங்கத்தை ஏமாற்றி, அரசாங்கத்திற்கு தெரியாமல் சேர்த்த சொத்துக்களின் கணக்குகள் எங்கே ?
-
ஆச்சார்யா - அனைத்திற்கும் கீழமை நீதிமன்ற ஆவனங்களுடன் இணைத்து ஆதரங்கள் உள்ளன.
-
நீதிபதிகள் - ஆதாரங்கள் இருக்கின்றது என்கிறீர்கள். ஆனால் இதில் அவர் அரசாங்கத்தை ஏமாற்றி தான் சொத்து சேர்த்தார் என்பதை நிரூபிக்கும் வகையில் ஆதாரங்கள் இல்லையே ?-
ஆச்சார்யா - நிறைய ஆதாரங்கள் உள்ளன. அவைகளை ஏற்கனவே நாங்கள் சமர்பித்துவிட்டோம்.
-
நீதிபதிகள் - சரி உங்கள் வாதங்களை முடிக்கிறீர்களா ?
-
ஆச்சார்யா - இந்த வழக்கு நாடே எதிர்பார்க்கும் ஒரு வழக்கு. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களால் நான் கடுமையாக பாதிக்கப்பட்டேன். என் வாழ்நாளில் நான் வாதாடிய வழக்குகளில் இந்த வழக்கில் தான் எனக்கு கடுமையான சோதனைகள் இருந்தன. எனது 49 ஆண்டு கால வழக்கறிஞர் பணியில் இந்த நொடிப்பொழுது இங்கு (உச்சநீதிமன்றத்தில்) வாதாடுவதை தான் சிறந்த நொடிப்பொழுதாக கருதுகிறேன். இந்த வழக்கை பொருத்தவரை குற்றம் சுமத்தப்பட்டவர்கள் சர்காரை ஏமாற்றி பல்வேறு முறைகேடுகள் செய்து சொத்து சேர்த்துள்ளனர். இதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளும் என்று நம்பி, உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கடும் தண்டனை விதிக்கப்படவேண்டும் என்று கேட்டுக்கொண்டு என் வாதங்களை முடித்துக்கொள்கிறேன்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...