Sunday, June 5, 2016

மோடியின் 2 ஆண்டுகள்விடுத்துள்ள கேள்விகள்

தொழில் மந்தத்திலிருந்து எந்தத் துறை மீண்டதோ இல்லையோ மீடியா தொழிலை காப்பாற்றியிருக்கிறார் மோடி என்று பொருளாதார நிபுணர்கள் சிரிக்கிறார்கள். அரசாங்க விளம்பரத் தொகை மட்டும் 20 சதவீதம் உயர்வைக் கண்டுள்ளதாம். அரசின் ஆண்டு விளம்பர பட்ஜெட் ரூ.120 கோடிகளைத் தொட்டுள்ளது.ர அரசு சொல்கிற 7.5 சதவீத மொத்த உள்நாட்டு உற்பத்தி குறித்த புள்ளி விவரங்கள் கேள்விகளுக்கு உள்ளாகியுள்ளன. ரிசர்வ் வங்கி கவர்னர் ‘கள யதார்த்தத்திற்கும், இவ்வளர்ச்சி சதவீதத்திற்கும் சம்பந்தம் இல்லை’ என்று கூறியிருக்கிறார். இதைச்சொன்னால் சுப்ரமணியசாமி ‘ஆளைத் தூக்கு’ என்று கூறுவார். ஆனால் பிரதமரின் பொருளாதார ஆலோசகருக்கும் இதே கருத்து உள்ளதெனச் செய்திகள் வந்துள்ளன.ர மோடிக்கு ஆன்-லைனில் மார்க் போட்டதில் ‘மேக் இன் இந்தியா’ குறித்து நல்ல மார்க் கிடைத்துள்ளது என்பது செய்தி. 2014லிருந்து 2020க்குள்ளாக ஏற்றுமதியை 465 பில்லியன் டாலர்களிலிருந்து 900 பில்லியன் டாலர்களாக உயர்த்துவோமென்பது மோடியின் முழக்கம். ஆனால் கடந்த 17 மாதங்களாக ஏற்றுமதி தொடர்ந்து சரிந்து கொண்டே வந்துள்ளது. கடந்த 63 ஆண்டுகளில் காணப்படாத சரிவாகும்.
ர ‘தூய்மை இந்தியா’ என்று மோடி அறிவித்தவுடன் துடைப்பத்தை கைகளில் பிடித்து போட்டோக்களுக்கு போஸ் கொடுக்காத அமைச்சர்களோ, அதிகாரிகளோ கிடையாது. ‘கோவில்களை விட கழிப்பறைக்கே முன்னுரிமை’ என்றும் ‘தெய்வங்களை விட வளர்ச்சியே முக்கியம்’ என்றும் மோடி அறிவித்த போது எந்த மதத் தலைவரும், அமைப்புகளும் ஆட்சேபிக்கவில்லை. இது “சும்மா” என்பது தெரிந்திருக்கலாம். உலகின் அழுக்கான 20 நகரங்களில் 13 இந்தியாவில்தானாம். மோடி குடியிருக்கிற தலைநகர் தில்லியும் அதில் அடக்கம்.ர சில டாக்டர்களைக் கிண்டல் செய்வார்கள். “ராசிக்காரர்... அவர் நாடி பிடித்துப் பார்ப்பதற்காகவே சில உயிர்கள் காத்திருக்குமென்று”. அப்படி ராசி நம்ம பிரதமருக்கும் உண்டு. ஜவுளி/ தோல் பதனிடு/ தகவல் தொழில்நுட்பம்/ போக்குவரத்து/ கைத்தறி/விசைத்தறி/ நகை/ மோட்டார்/ உலோகம் என எங்கு எங்கு வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகுமோ அங்கேயெல்லாம் பெரிய தேக்கம். வேலைவாய்ப்பு வளர்ச்சியில் 65 சதவீதம் சரிவு. 2012-2014க்கு இடைப்பட்ட காலத்தில் சராசரி வேலைவாய்ப்பு உருவாக்கம் 4 லட்சம் எனில் 2015ல் அது 1.3 லட்சமாகக் குறைந்துள்ளது.
ர தகவல் தொழில் நுட்பத்துறையே ‘கனவு உலகமாக’ இந்திய இளைஞர்களுக்கு இருந்தது. பத்தாண்டுகளுக்கு முன்பு ‘பில்லியன் டாலர் உற்பத்தி (ரூ. 6 கோடி)க்கு 35,000 பொறியாளர்களுக்கு வேலை கிடைக்கும். இப்போது அதே அளவு உற்பத்திக்கு கிடைக்கிற வேலைவாய்ப்புகள் 16,000 தான். பொறியியல் கல்வி முடித்து வெளியே வரும் பல்லாயிரக் கணக்கானவர்களுக்கு மாற்று வழி?
ர முதலீடுகள் வராமல் தொழில் வளராது. 2013ல் 5.3 லட்சம் கோடி முதலீடுகள் உருவாக்கப்பட்டன. 2014ல் 4 லட்சம் கோடிகளாகக் குறைந்து விட்டன. 2015ல் 3.11 லட்சம் கோடிகளாக இன்னும் சுருங்கியது. 2016 முதல் காலாண்டில் 60,130 கோடிகள்தான் வந்துள்ளது. இதே ட்ரெண்ட் தொடர்ந்தால் இந்த ஆண்டும் சரிவுதான். இதையெல்லாம் எழுதாமல், காட்டாமல், எழுதினாலும் ஏதோ ஓரத்தில் என ஊடகங்களில் வாயை அடைப்பதற்குத்தான் விளம்பரங்களில் தாராளம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
ர அண்மையில் மகாராஷ்டிரா வெங்காய விவசாயி தேவிதாஸ் பர்பேன் என்பவர் 1 டன் வெங்காயம் விற்றதில் ஒரே ஒரு ரூபாய்தான் இலாபம் கிடைத்தது என்று கணக்குப் போட்டுச் சொன்ன செய்தி பரபரப்பாய் மீடியாக்களில் விவாதிக்கப்பட்டது. ரூ.9000 கோடியை விழுங்கி விட்டு லண்டனுக்கு ஓடிப்போன விஜய் மல்லய்யாவுக்கு பிணை கொடுத்ததாக ஒரு சாதாரண விவசாயி கைது செய்யப்பட்டதும் பரபரப்பாக விவாதிக்கப் பட்டது. 2015ல் மட்டும் இந்தியாவில் 2997 விவசாயிகள் தற்கொலைகள் நிகழ்ந்துள்ளன. (3000 என தோராயமாக சொல்லாமல் மிகச்சரியான எண்ணிக்கையைச் சொல்வதற்குக் காரணம் அவையெல்லாம் உயிர்கள்). இவ்வளவு இருந்தும் ஊடகங்கள் பாஸ் மார்க்கே போடுவது ஏன் என்று தெரிகிறதா! கட்டுரையின் முதல் பத்தியைப் பாருங்கள்.

கோயிலுக்குள் நுழையும் முன்...

கோயிலின் நுழை வாயிலில் குறுக்காக இருக்கும் படிக்கட்டின் மேல் நின்று செல்லாமல் அதனை தாண்டி செல்ல வேண்டும் என்று பெரியவர்கள் கூறுகிறார்களே ..ஏன் தெரியுமா?
• ஒரு கோயிலுக்குள் நுழையும் முன் முதலில் நமது பாதத்தை கழுவ வேண்டும் ..
• பின் கால், கை ஆகியவைகளை கழுவிய பின் சில துளிகளை எடுத்து தலையை சுற்றி வட்டமிட்டு தெளித்து கொள்ள வேண்டும் ...
• இதன் மூலம் நம் உடலை தயார் படுத்திகொண்டு முதலில் கோபுரத்தையும் அதில் உள்ள கலசங்களையும் பார்த்து வணங்க வேண்டும் ...
• பின்னர் வாயிற்காப்போர்கள் ஆன துவாரபாலகர்களின் அனுமதியை வாங்கிகொண்டு உள்ளே செல்ல வேண்டும்
• உள்ளே செல்லும் முன் அங்குள்ள வாயிற்படியை கடந்து செல்ல வேண்டும் ..
• அந்த படியை தாண்டும் போது, " நான் கொண்டு வந்த எதிர்மறை வினைகள், எதிர்மறை எண்ணங்கள், கெட்ட செயல்கள், கவலைகள் எல்லாவற்றையும் இங்கேயே விட்டு உள்ளே செல்கின்றேன்..
• இனி ஆண்டவனின் கருணையுடன் கூடிய ஆசிர்வாதமும், நேர்மறை ( நல்ல ) வினைகளுமே எனக்கு கிடைக்க வேண்டும் ஆண்டவா " என்று கும்பிட்டவாறே அந்த படியை தாண்ட வேண்டும் ...
• அந்த படியின் மேல் நின்று கடந்தால் நாம் அவற்றை கூடவே உள்ளே எடுத்து செல்வதாக அர்த்தம் ...
• ஒரு கோயில் என்பது நாள் முழுவதும் கூறப்படும் மந்திரங்களாலும், நாதஸ்வரம், கெட்டி மேள சத்தங்களாலும், பேசப்படும் மங்களகரமான வார்த்தைகளாலும், முழுதும் நேர்மறை எண்ணங்களாலேயே நிரம்பியிருக்கும் ...
• எனவேதான் கோயிலுக்கு சென்று அந்த நேர்மறை எண்ணங்களை பெற்று உயர்வுடன் வாழுங்கள் என்று வாழ்த்துகிறோம் ...

Saturday, June 4, 2016

மனசு சஞ்சலப்படுகிறதா?

ஒருமுறை புத்தர் தன்னுடைய சீடர்களுடன் பயணப் பட்டுக் கொண்டிருந்தார். ஒரு ஏரியை எதிர் கொண்டபோது, அங்கிருந்த பெரிய ஆலமர நிழலில் அனைவரும் சற்று ஓய்வெடுக்கும் எண்ணத்துடன் தங்கினார்கள்.
புத்தர் தன்னுடைய சீடர்களில் ஒருவரை அனுப்பி ஏரியில் இருந்து குடிப்பதற்கு நீர்கொண்டு வரச் சொன்னார். சீடரும் தங்களிடம் இருந்த பானை ஒன்றை எடுத்துக் கொண்டு நீர்நிலையை நோக்கி நடந்தார்.
அந்த நேரத்தில், மாட்டு வண்டிக்காரர் ஒருவர், ஏரிக்குள் இறங்கி ஏறியைக் கடந்து சென்றார். ஏரி கலங்கி விட்டது. அத்துடன் ஏரியின் கீழ்ப் பகுதியில் இருந்த சேறும் சகதியும் மேலே வந்து நீரை அசுத்தப் படுத்தி பார்ப்பதற்கே உபயோகமற்றதாகக் காட்சியளித்தது.
இந்தக் கலங்கிய நீர் எப்படிக் குடிப்பதற்குப் பயன்படும்? இதை எப்படிக் குருவிற்குக் கொண்டுபோய்க் கொடுப்பது? என்று தண்ணீரில்லாமல் திரும்பிவிட்டார்.
அத்துடன் தன் குருவிடமும் அதைத் தெரிவித்தார்.
ஒரு மணி நேரம் சென்ற பிறகு, புத்தர் தன்னுடைய சீடரை மீண்டும் ஏரிக்குச் சென்று வரப் பணித்தார். நீர்நிலையருகே சென்று சீடன் பார்த்தான். இப்போது நீர் தெளிந்திருந்தது . சகதி நீரின் அடியிற்சென்று பதிந்திருந்தது.
ஒரு பானையின் தண்ணீரை முகர்ந்து கொண்டு சீடன் புத்தரிடம் திரும்பினான். புத்தர் தண்ணீரைப் பார்த்தார். சீடனையும் பார்த்தார். பிறகு மெல்லிய குரலில் சொல்லலானார்.
தண்ணீர் சுத்தமாவதற்கு என்ன செய்தாய்..?
நான் ஒன்றும் செய்யவில்லை சுவாமி! அதை அப்படியே விட்டுவிட்டு வந்தேன். அது தானாகவே சுத்தமாயிற்று!
நீ அதை அதன் போக்கிலேயே விட்டாய். அது தானாகவே சுத்தமாயிற்று. அத்துடன் உனக்கு தெளிந்த நீரும் கிடைத்தது இல்லையா?
ஆமாம் சுவாமி!
நம் மனமும் அப்படிப்பட்டதுதான்..
மனம் குழப்பத்தில் இருக்கும்போது நாம் ஒன்றும் செய்ய வேண்டாம். அதை அப்படியே விட்டு விட வேண்டும். சிறிது கால அவகாசம் கொடுக்க வேண்டும்.
அது தனக்குத்தானே சரியாகிவிடும். நாம் எந்தவித முயற்சியும் செய்ய வேண்டாம். மனதை சமாதானப் படுத்தும் விதத்தைப் பற்றி சிந்திக்கவும் வேண்டாம். அது அமைதியாகிவிடும் . அது தன்னிச்சையாக நடக்கும். அத்துடன் நம்முடைய முயற்சியின்றி அது நடக்கும்.
It will happen. It is effortless.
மன அமைதி என்பது இயலாத செயல் அல்ல!
இயலும் செயலே! அதற்கு நம் பங்கு எதுவும் தேவை இல்லை!!!

Who is poor?

A wealthy woman goes to a saree store and tells the 

boy at the counter "Bhaiya, show some cheap sarees. 

is my son's marriage and I have to give to my maid."
After sometime, the maid comes to the saree shop 

and 

tells the boy at the counter "Bhaiya, show some 

expensive 

sarees. I want to gift my Mistress on her son's 

marriage"

Poverty is in the mind or in the purse?

Who is rich?
Once, a lady with her family was staying in a 3-star hotel for a picnic. She was the mother of a 6 month old baby.
"Can I get 1 cup of milk?" asked the lady to the 3-star hotel manager.
"Yes madam", he replied, "But it will cost you money."
"No problem", said the lady.
While driving back from hotel, the child was hungry again.
They stopped at a road side tea stall and took milk from the tea vendor.
"How much?” she asked the tea vendor.
"Madam, we don't charge money for kid's milk", the old man said with a smile.
"Let me know if you need more for the journey". The lady took one more cup and left.
She wondered, "Who’s richer? The hotel manager or the old tea vendor?
Sometimes, in the race for more money, we forget that we are all humans. Let's help someone in need, without expecting something in return. It will make us feel better than what money can.
Coffee never knew that it would taste so nice and sweet, before it met milk and sugar.
We are good as individuals but become better when we meet and blend with the right people....
Stay connected.
"The world is full of nice people...
If you can't find one... Be one!

பொது மக்களுக்கு கொண்டு செல்வது நம் உடனடி தேவை

தொடர்ந்து நடக்கின்ற போக்கு வரத்து விபத்துகளை பார்க்கும் பொழுது இதை பற்றிய விழிப்புணர்வை நாம் பொது மக்களுக்கு கொண்டு செல்வது நம் உடனடி தேவை
1-முதலில் அரசாங்கம் இதை பற்றிய ஆவன படங்களை எடுத்து மக்களிடம் சேர்க்க வேண்டும்
2- அனைத்து ஊடகங்களும் முன் வந்து இது பற்றிய நிகழ்சிகளை 
வழங்க வேண்டும்
3- அனைத்து எழுத்தாளர்களும் ,சமூக
ஆர்வலர்களும் இது பற்றி எழுத வேண்டும்
4- முகநூல் பதிவர்கள் தொடர்ந்து இது பற்றி எழுதிட வேண்டும்
5- பள்ளி கல்லூரிகளில் இது பற்றி அதிகம் சொல்லி தரவேண்டும்
6- mot , quality assurance ,licence
போன்றவை சரியாக விதி மீறல் இல்லாமல் இருக்க வேண்டும்
7- சாலை விதிகள் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்
8- சாலை விதிகளை மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
9- தனியார் வசம் உள்ள வண்டிகள் quality assurance பெறாவிட்டால் உரிமம் ரத்து செய்ய படவேண்டும்
10-குடித்து விட்டு ,மொபைல் பேசி கொண்டு , அதிக பயணிகளை ஏற்றி கொண்டு ,இப்படி செய்வோர் மீது பாரபட்சமின்றி
சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க பட வேண்டும்

மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது

100 யூனிட்வரை இலவச 
மின்சாரம் என தமிழக முதல்வர் அறிவித்துள்ள நிலையில் இந்த சலுகை எல்லோருக்கும் பொருந்தும் என தெரிவித்துள்ள மின்வாரியம், அதேநேரம் வீட்டில் உள்ள மின்சாதனப் பொருட்களை எத்தனை 
மணி நேரம் உபயோகித்தால் எவ்வளவு மின்சாரம் செலவாகும் என்ற கணக்கீட்டையும் தெரிவித்துள்ளனது.
இதுகுறித்து மின்வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘‘தமிழகத்தில் மொத்தம் உள்ள 1.96 கோடி மின் நுகர்வோரும் அரசின் இந்த 100 யூனிட் இலவச மின் சலுகையை பெற முடியும். தற்போது 
2 மாதத்துக்கும் சேர்த்து 
100 யூனிட்டுக்குள் பயன்படுத்தும் மின் நுகர்வோர் தமிழகத்தில் 
79 லட்சம் பேர் உள்ளனர். அவர்கள் மாதம் ரூ.60 வீதம் 
2 மாதத்துக்கும் சேர்த்து 
ரூ.120 மின் கட்டணம் செலுத்தி வருகின்றனர். இனி அவர்கள் அதை செலுத்த வேண் டியதில்லை.
ஆனால் 
100 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்து
பவர்களுக்கு ஒவ்வொரு படிநிலைக்கேற்ப மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இனி அவர்கள் உபயோகிக்கும் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணத்தைக் கழித்தது போக, எஞ்சிய யூனிட்டுக்குரிய கட்டணம் 
பழைய முறைப்படி வசூலிக்கப் படும். 
ஆனால் பெரும்பாலானவர்களுக்கு 
நாம் உபயோகிக்கும் மின் சாதனங்களுக்கு எவ்வளவு மின்சாரம் செலவாகிறது என்ற மின் விழிப்புணர்வு இல்லை. உதாரணமாக, இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.
ஆனால் அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 
15 வாட்ஸ்
கொண்ட 
2 சிஎப்எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் 
உபயோகித்தால் மாதம் 
4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.
அதுபோல 
40 வாட்ஸ் திறன் கொண்ட 
2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும். 
.
750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும்.
150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 
12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 
.
2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 
1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் 
உப யோகப்
படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.
.
அதுவே 200 வாட்ஸ் ஏர்கூலர் என்றால் 
மாதம் 30 யூனிட் செலவாகும்.
75 வாட்ஸ் திறனுள்ள 
2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், 
மாதம் 36 யூனிட் செலவாகும். 
.
400 வாட்ஸ் வாஷிங்மெஷின் தினமும் 
ஒரு மணி நேரம் உபயோகப்படுத்தினால் 
மாதம் 12 யூனிட் செலவாகும். 
100 வாட்ஸ்டிவி தினமும் 12 மணி நேரம் ஓடினால் மாதம் 36 யூனிட் செலவாகும். 
.
500 வாட்ஸ் மிக்ஸி தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 15 யூனிட் மின்சாரமும், 
300 வாட்ஸ் 
வெட் கிரைண்டர் தினமும் 
ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 9 யூனிட் மின்சாரமும் செலவாகும்.
200 வாட்ஸ் கம்ப்யூட்டர் தினமும் ஒரு மணி நேரம் இயங்கினால் மாதம் 6 யூனிட் மின்சாரமும், 
740 வாட்ஸ்குதிரை திறனுள்ள பம்பு மோட்டார் தினமும் ஒரு மணி நேரம் ஓடினால், 
மாதம் 22 யூனிட் மின்சாரமும் தேவைப்படும்.
.
7 வாட்ஸ் திறனுள்ள மொபைல் பேட்டரி சார்ஜர் தினமும் ஒரு மணி நேரம் பயன்படுத்தப்பட்டால் 
மாதம் 0.21 யூனிட் மின்சாரம் காலியாகும். இந்த அளவீடுகளைத் தெரிந்து மின்சாரத்தைச் சிக்கனமாக 
உபயோகிக்கக் கற்றுக்கொண்டால் மின் கட்டணம் அதிகரிக்காது’’.

Friday, June 3, 2016

உண்ட உணவில் விஷத்தன்மையா? சந்தேகம் வந்தால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியவைகள்

உண்ட உணவில் விஷத்தன்மையா? சந்தேகம் வந்தால், விரைந்து நீங்கள் செய்ய வேண்டியவைகள்

உண்ட உணவில் விஷத்தன்மை இருந்ததாக சந்தேகம் வந்தால், விரைந் து நீங்கள் செய்ய வேண்டிய சில முன்னெச்ச‍ரிக்கை செயல்கள்  
நமது உடலுக்கு ஒவ்வாத சில உணவு வகைகள் அல்லது காலாவதியான கெட்டுப்போன உணவுகளை
சாப்பிடுவதால் நமது உடலில் விஷத்தன்மை சேருகிறது.அதனால் கண் எரிச்சல் தலைவலி மூச்சிபாதிப்பு, மயக்க‍ம், எலும்புகளில் வலியும், மற்றும் சில வேளைகளில் மரணமும் கூட ஏற் படக்கூடும். அந்த சமயத்தில் விரைந்து நீங்கள் செய்ய வேண்டியவை
அழுகிய பழங்கள் அல்லது கெட்டுபோன இறைச்சி போன்றவைகளால் விஷத்தன்மை ஏற்படுகிறது.நமது உணவில் விஷத்தன்மை இருந்திருக்க லாம் என்று சந்தேகம் வந்தால் உடனே அலர்ட் ஆகுங்கள்.
அப்போது நீங்கள் செய்ய வேண்டியது
*சுடுநீரில் சுமார் 15 நிமிடங்கள் வரையாவது குளியுங்கள். தாகம் எடுத்தால் ஆரஞ்சு எலுமி ச்சை போன்ற பானங்களை பருகுங்கள்.

*கொஞ்சநேரம் படுத்து கொள்ளலாம் (அல்) இனிமா எடுத்து கொண்டாலும் சரிதான். மேலும் நன்றாக பசிக்கும் வரை எதுவும் சாப்பிடக் கூடாது. விஷத்தன்மை இருந்தால் உங்க ள் வயிற்றில் சீரணம் ஆவது குறைந்து போயிருக்கலாம்.
*இம்மாதிரி நேரத்தில் ஏதாவது சாப்பிட்டால் உடல் நிலை மேலும் மோச மடைய வாய்ப்புள்ளது
*அதன்பிறகு சிறிதும் தாமதிக்காமல் அருகில் மருத்துவ மனைக்கோ அல்ல‍து மருத்துவரையோ அணுகி உரிய சிகிச்சையினை மேற்கொள்ள‍ வேண்டும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...