Monday, October 31, 2016

வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? – உன்னுள் நீ . . .


வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? – உன்னுள் நீ . . .

வாழ்வில் வெற்றி கிடைக்க, எதை உணர்ந்து செயல்பட வேண்டும் ? – உன்னுள் நீ . . .
வாழ்வில் வெற்றி பெற தாழ்வு மனப்பான்மையை நீக்குங்கள் !!
ஒருவன், தன்னைப்பற்றி தாழ்வு மனப்பான்மை கொண்டு, கடவுளை வேண்டி
தவமிருந்தபின் அவன்முன் கடவுள் தோன்றினார். அவன் கடவுளிடம், “என்னை ஏன் இப்படி படைத்தீர்? என் வாழ்க்கையின் மதிப்பு தான் என்ன?” என கேட்டான். கடவுள் அவனிடம் ஒரு சிகப்பு கல்லை கொடுத்து, “இதன்மதிப்பை அறிந்துவா?” ஆனால் விற்கக்கூடாது என்றார்.
அவன் அக்கல்லை ஒரு ஆரஞ்சு பழ வியாபாரியிடம் காண்பித்ததற்கு,அக்கல்லுக்குபதில் ஒரு டஜன் ஆரஞ்சு பழங்கள் கொடுப்பதாக கூறினான்.
அதையே ஒரு உருளைக்கிழங்கு வியாபாரியிடம் கேட்டதற்கு ஒரு மூட்டை கிழங்கு தருவதாக சொன்னான்.
நகைக்கடையில் காண்பித்ததற்கு 50,000 பொற் காசுகள் தருவதாக சொல் லவே, இவன் மறுக்க, ஒரு லட்சம் பொற்காசுகள் தருவதாக சொன்னான்.
மீண்டும் அந்த கல்லை எடுத்துக்கொண்டு ஆபரண கற்கள் வியாபாரியிடம் காண்பித்து அதன்மதிப்பை கேட்டான். அக்கல்லை வாங்கி பலமுறை பரிசோதித்துவிட்டு, “இந்த அருமையான் மாணிக்க கல் உனக்கு எங்கே கிடைத்தது? ஒட்டு மொத்த உலகத்தையே விற்றுகொடுத்தாலும் இந்த கல்லுக்கு ஈடு இணை இல்லை” என்று கூறினார்.
குழப்பமடைந்த நம் நண்பன், கடவுளை பார்த்து நடந்த தை எல்லாம் கூறினான். அதற்கு கடவுள் சொன்னார், “பார்த்தாயா, ஒரே கல்லுக்கு ஒவ்வொருவரும் ஒவ்வொரு மதிப்பு கொடுத்தனர். ஆனால், கடைசியாக அந்தக்கல்லின் உண்மையான மதிப்பை ஒருவர்தான் சொன்னார். அதேபோல் உன்னை ஒவ்வொரு வரும் ஒவ்வொருமாதிரி குறைத்து மதிப்பீடு செய்வர் அதற்கெ ல்லாம் கவலைப்படாதே! உன் உண்மையான மதிப்பை அறிபவரை விரைவில் கண்டறிவாய், மனம் தளராதே என்று கூறி மறைந்தார்.
கடவுளின் படைப்பில் ஒவ்வொருவரும் அபூர்வமானவரே!
தாழ்வு மனப்பான்மை கொள்ளல் கூடாது!
நம்மைப்பற்றி உயர்ந்த எண்ணம் நமக்கு முதலில் வேண்டும்.
ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் சிறப்பு மிக்கவரே!
உங்களுக்கு நிகர் நீங்களே! யாரும் உங்களுக்கு இணை கிடையாது!*
இதை உணர்ந்து செயல்பட்டால் வாழ்வில் வெற்றி பெறலாம் .

Sunday, October 30, 2016

#குங்குமம்_இட்டுக்கொள்வது_எதற்காக? #வசியம்_செய்யமுடியாது

1. சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள்.
அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் #பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
2. சுமங்கலிப் பெண்களின் #சீமந்த பிரதேசம் ஸ்ரீமகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் உள்ளது.
3. வீட்டிற்கு வரும் #சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
4. குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும்.
குங்குமம் அணிந்த எவரையும் #வசியம் செய்வது கடினம்.
5. பெண்கள் #குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும்.
6. அரக்கு நிற குங்குமம் #சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும்.
#திருமணப்புடவை அரக்கு நிறத்தில் இருப்பது நல்லது.
7. தெய்வீகத்தன்மை, சுபதன்மை, #மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
8. திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
9. ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது #தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
10. கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த #துணிவைக்கொடுக்கும்.
11.குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், #ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
12. சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது #தீர்காயுளைக்கொடுக்கும்.
குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, #உடல்குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.

நரம்புகள்.........................

மனித உடலில் 72,000 நரம்புகள் உள்ளன. அனைத்து நரம்புகளிலும் ரத்த ஓட்டம் சீரான முறையில் இருந்தால் தான் உடல் உறுப்புகளும் சீராக இருக்கும். உடல் நிலையும் ஆரோக்கியமாகவே இருக்கும். எந்த நரம்புகளில் ரத்த ஓட்டம் சீராக இல்லையோ அந்த நரம்பு எந்த உடல் உள் உறுப்புகளுக்கு தொடர்பு உடையதோ அந்த உறுப்புகள் பாதிப்பு அடையும். அந்த உறுப்பு எந்த நோய்க்கு தொடர்பு உடையதோ அதை சார்ந்த நோய்களும் உருவாகும்.
ரத்த அழுத்தம் அதிகம் ஆனால் ரத்த குழாய்கள் சுருங்கி விடுவதோடு ரத்த ஓட்டம் தடைபடவும் செய்யும். இதன்காரணமாக இதயம், சிறுநீரகம் போன்றவைகள் பாதிக்கப்படக் கூடும். பக்கவாதமும் ஏற்படும்.
பக்கவாதம் என்பது மூளைக்குச் செல்லும் ரத்த குழாயில் அடைப்பு ஏற்பட்டாலோ அல்லது ரத்த கசிவு ஏற்பட்டாலோ மூளையில் உள்ள செல்களுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்படுகிறது.
மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்பு அடைகிறது. இந்த நிலையில் தான் மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகளும் ஏற்படும். எந்த பக்கம் பாதிப்பு அடைகிறதோ அந்த பக்கம் கண் அசைவும் இருக்காது. முக வாதமும் தென்படும். ரத்த கசிவு ஏற்படுவதால் மூளையின் முக்கியமான பாகங்களும் பாதிப்பு அடைகிறது. உடல் உறுப்புகளும் பாதிக்கப்படுகிறது. மூளையின் இடது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலின் வலது பக்கம் உள்ள வலது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாது.
அதே போல் மூளையின் வலது பக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டால் உடலில் இடது பக்கம் உள்ள இடது கை, கால்களை ஆட்டவும், அசைக்கவும் முடியாமல் போய் விடுகிறது.

தாழ்வுநிலை ஏற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வு மனப்பான்மை வந்துவிடக் கூடாது. ஏனெனில் . . . .

வாழ்வில் தாழ்வுநிலை ஏற்பட்டாலும்கூட மனிதனுக்குத் தாழ்வுமனப்பான்மை வந்துவிடக்  கூடாது. ஏனெனில் எந்த உயிர்க் கொல்லி  நோ யைவிடவும் மிகக் கொடியது தாழ்வு 
மனப்பான்மை. ஒருவனை ஒன்றுக் கும் உதவாதவனாய் ஆக்குவ தும் இது தான், பித்துப் பிடித்தவனைப் போல் அவனை உளற வைப்பதும் இதுதான்.
நாள் முழுக்க வஞ்சமின்றி உழைக்கிறான். கொஞ்ச வருமானம் தா ன், ஆனால் மனநிறைவு சாதாரண உணவு தான். ஆனால் ஆரோக் கியம் குடியிருப்பது குடிசைதான். ஆனால் மன்னனைப் போல் வா ழ்கிறான். அவனுக்குத் தாழ்வு மனப்பான்மையே கியைடாது. வெளி ச்ச மனதுடனும் முகமலர்ச்சியுடனும் இருப்ப வர்களைக் கவனி யுங்கள், 
எப்போதும் ஆக்க பூர்வமாகச் சிந்திப்பார்கள். நல்ல விடயங் களையே பேசுவார்கள். மற்ற வர்களின் நற்பண்புகளை, திற மை களைப் பாராட்டுவார்கள். உறவுகளை மதிப்பார்கள், அவர் களின் உள்ளம் உயர்ந்திருப்பதி னால் அவர்களுக்குத் தாழ்வுமனப்பான்மை ஏற்படுவதே இல் லை.
வீணான எண்ணங்களுக்கு இடம் கொடுக்காமல் முழுக் கவனத்தை யும் தங்கள் பணியில் செலுத்துவார் கள். ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் புதிய இலக்கை நிர்ணயித்து அதற்கு நேராய் செயல்படு வார்கள். உடனிருப்போரை யெல்லாம் மகிழ்ச்சியடையச் செய்வா ர்கள். அப்படிப்பட்டவர்களின் சிந்தையு ம் செயலும் ஆரோக்கியமாகஇருப்பதா ல் தாழ்வு மனப்பான்மை என்னும் நோய் அவர்களைத் தாக்குவதில்லை. நல்லவ ர்கள் நல்லவர்களாகத்தான் இருக்கிறார் கள். நல்லவர்களேதைரியசாலிகளாக வும் இருக்க முடியும். நேர்மையற்றவர் கள் வீராதி வீரர்களைப் போல தங்களை க் காட்டிக்கொண்டாலும் உண்மையில் அவர்கள் கோழைகள். அத்தகைய கோ ழைகளுக்குத்தான் தாழ்வு மனப்பான் மை வந்து விடுகிறது.
வேலையும் இருக்காது. வருமானமும் இருக்காது. சும்மா சுற்றிக் கொண்டிருப்பான், சம்பாதிக்கின்றவ னைப் பார்த்தால் அவனுக்குப் பொறுக்காது. அர்த்தம் இல்லாமல் எதையாவது சொல்லி நோகடி ப்பான், அதில் ஓர் அற்ப சந்தோஷம். வாழ்வில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் குட்டைபோல் தேங் கிக் கிடப்பான். முன்னே றிக்கொண்டிருப்பவனைப் பார்த்து விட்டா லோ வயிறெரிவான், வசைபாடித் தீர்ப்பான், காரணம் அவனுக்குள் இருக்கின்ற தாழ்வு மனப்பான்மை.
பிரேசில் நாட்டில் ஈல் என்னும் மின் அதிர் ச்சி தரும் மீன்கள் ஆறடி நீளத்தில் காண ப்படுகின்றனவாம். தலையிலிருந்து வால் வரை மின்சாரம். அந்த  மீனை நாம் எங்கே தொட்டாலும் உடனே மின்சாரம் பாய்ந்து நம்மை நிலைகுலையச் செய்துவிடுமாம். ஒரு வகையில், தாழ்வு மனப்பான்மை உடையவர்களும் அப்படித்தான். அவர்க ளிடம் நீங்கள் நல்லபடியாக பேசினாலும் கூட தாறுமாறாக எகிறிக் குதிப்பார்கள். நாகரிகமற்ற வார்த்தைகளால் உங்கள் மனதைப் புண் படுத்தி விடுவார்கள். அவர்களிடம் சற்று ஜாக்கிரதையாக நாம் விலகியிருப்பது நல்லது.
தன்னுடைய குறை பாடுகளை அல்லது பலவீனங்களையே நினைத்துக் கொண்டி ருப்பவர்க ளுக்கு மனச் சோர்வு உண்டாகிறது- அந்த மனச்சோர்விலிருந்துதான் தாழ்வு மனப்பான்மை பிறப்பெடு க்கிறது. தன்னிடம் இருப்பவைகளை மறந்துவிட்டு இல்லாததை எண்ணி வருத்தமடைகிறவன் தன் வாழ்வைத் தொலைத்து விடு கிறான்.
பலவீனனாக தன்னைக் கருதிக் கொள்ளும் ஒருவன் தலைநிமிர்ந்து நிற்க முடியாது. மகிழ்ச்சியுடன் வாழ முடியாது, பெரிதாக எதை யோ செய்வது போல வெளியே காட்டிக் கொண்டாலும் உள்ளே பூஜ்ஜியம்தான்.
தாழ்வு மனப்பான்மை என்னும் நோயினால் பீடிக்கப்பட்டவர்க ளின் பேச்சும் செயலும் கோமா ளித்தனமாக இருக்கும். மற்ற வர்களுக்கு முன்னால் அவர்கள் எப்போதும் வெற்றுத் தம்பட்டத் துடன்தான் பேச ஆரம்பிப்பார் கள். அடுத்தவர்களை அநாவசிய மாக மட்டம் தட்டுவார்கள். தங் கள் முட்டாள்தனம் மற்றவர்களுக்குத்தெரிந்து விடுமோ என்ற பய த்தில், மேதைபோல் தங்களைக் காட்டிக் கொள்ள முயற்சிப்பார் கள்.
தாழ்வு மனப்பான்மை யாரிடம் இல்லையோ அவர்கள்தாம் பிற ரின் சிறப்பை  சிலாகித்துப் பேசி உற்சாகப் படுத்துவார்கள். துரி யோதனன் எப்ப டிப்பட்டவனாகஇருந்தாலும்கூட அவன் தாழ்வு மனப்பான்மை கொண் டவன் அல்ல. அதனால் தான் முதலில் பாண் டவர் சேவையின் தலைசிறந்த வீரர்களைப் பற்றி துரோணா ச்சாரியரிடம்  புக ழ்ந்து பேசுகிறான்.
எவனுக்குத் தன்மீது நம்பிக்கை இருக்கிறதோ, எவன் தன்னுடைய ஆற்றலில் கடுகளவும் சந்தேகமின்றி இருக்கின்றானோ அவன் தான் தயக்கமின்றித் திறந்த மனதுடன் மற்றவர்களைப் புகழ முடி யும். தன்மீது அவநம்பிக்கை உடையவன் தன்னைத்தானே சபித் துக் கொள்கிறான். அவனால் எப்படி மற்றவர்களை வா ழ்த்த முடியும்! பொய்யடா பேசும் புவியில் மடமாதரை விட்டு உய்யடா உய்யடா உய் என்றார் பட்டினத்தார். பாவம் அவருக்கு அப்படி யொரு பாதிப்பு. ஆனால், தாழ்வு மனப்பான்னையை விட்டு உய்யடா உய்யடா என் றால் இன்னும் சிறப்பாக இருக்கும். 
ஏனெனில் அந்தக் கொடிய நிலை யிலிருந்து மீள முடியாமல்தான் பலர் அழிவின் பள்ளத்தாக்கிற்குள் போய்க்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் மனோநிலையில் உறுதியும் இருக்காது. உண்மையும்இருக்காது. இந்த இரண்டும் இல்லாத மனம்எவ்வளவு மோசமாக இருக்கும்!
உண்மையும் நேர்மையும் எங்கே காணப்படு கிறதோ அங்கே புத்தி க்கூர்மையும் காணப்படும். புத்திக் கூர்மை துலங்கும் இடத்தில் நேர்மையைக் காணலாம்.
முதலில் ஒருவன் தனக் குத்தானே உண்மையாக நடந்துகொள்ள வேண்டும். அவன்தான் பல விடயங்களை அறிந்துகொள்ள முடியு ம். பல விடயங்களை அறியும் ஆற்றலுடையவன்  தனக்குத் தானே நேர்மையாக நடந்து கொள்வான். அவன் தன்னையும் திதி ப்பான்: மற்றவர்களையும் மதிப் பான், அவனிடத்தில் தாழ்வு மனப்பான் மை என்ற பேச்சுக்கே இடமிருக் காது.
நாம் எந்தச் சூழ்நிலையிலும் உய ர்ந்த சிந்தனைகளுடன் வாழ முடி யும். எத்தனைமுறை விழுந்தா லும் எழுந்து நிற்க முடியும். தே வையெல்லாம் எழுச்சிமிகுமன ப்பான்மையே! கனபூசியஸ் பிற ந்து மூன்றாண்டுகளுக்குள் அவ ருடைய தந்தை காலமாகி விட்டார். எனவே வறுமையிலும், தா யின் கண்டிப்பிலும்தான் அவர் வளர வேண்டியதாயிற்று. ஆறு வயது சிறுவனாய் இருக்கும் போதே அக்கம்பக்கத்திலுள்ள சிறுவ ர்களை கூட்டி வைத்து ஞானிகள் விளையாட்டு விளையாடுவா ராம்.
இளம் வயதிலேயே உழைத்துப் பிழைக்க வேண்டிய நிலை. எனி னும் அவர் நாட்டமெல்லாம் கல்வியின் மீதுதான். தமது பதினை ந்தாவது வயதுக்குள் ஞானியாகிவிட வே ண்டும்என்று முடிவு கொ ண்டார். ஆனால் பதினைந்தாவது வயதிலிருந்துதான் மு றையாகக் கல்வி பயிலத் தொடங்கிய தாக வரலாறு கூறுகிறது. எனினும் மிகக் குறுகிய காலத்திற்குள் பல துறை களில் அறிவு வளர்ச்சி பெற்றுவிட்டார். என்னு டைய இளம் பிராயத்தில் நான் மிகவும் தாழ்வான நிலையில் அடங்கியிருந்தேன். அதனால்தான் எதையும் அனுசரித்து பல தர ப்பட்ட விடயங்களிலும் என்னால் திற மை பெற முடிந்தது என்று பிற்காலத்தில் தமது சீடர்களிடம்  கன்பூசியஸ் சொல்லி யிருக்கிறார். வாழ்வில் மிகவும் தாழ்வான நிலையிலிருந்த கன் பூசியஸ் சீனத்துப் பெருஞானியாக  உயர்ந் தாரே எப்படி? தெளிந்த மனதின் உயர்ந்த சிந்தனைக ளால் அல்ல வா! நாம் எப்போதும் மேலானவைக ளையே சிந்திக்க நம்மைப் பழக்கப்படுத்திக் கொ ள்ளவேண்டும். அப்படி யானால்தான் தாழ் வான நிலையிலும் தளராத மனதுடன் முன்னேற்ற த்தின் படிக் கட்டுகளைக் காண முடியும். எதையும் கோணலா கச்சிந்திக்கின்றவன் வாழ்க்கை  கோண லாகத்தான் இருக்கும். குழப்பத்தை ஏற்படு த்துவத ற்கென்றே இருக்கின்றவன் ஒரு நாளும் உருப்படி யாக 
எதையும் செய்ய மாட்டான். எதைப் பேசினாலும் தலை கீழாகப் பேசுவான். தன்மை  இல்லாமல் வாதிடுவான், தாழ்வு மனப் பான்மை அவனைத் தரைமட்டமாக்கிவிடும். நல்ல மனிதர்கள் அப்படி அல்ல. முதலில் அடிப்படையை சரியான விதத்தில் அமை த்துக் கொள்வதில் அவர்கள் கண்ணும் கருத்துமாக இருப்பார்கள். அடிப்படை சிறந்த முறை யில் அமைந்து விட்டால் பி ற விடயங்கள் யாவும் தாமா கவே சிறந்த வகையில்இய ங்கத் தொடங்கி விடும். தங் கள் வாழ்வில் நிலையான முன்னேற்றத்தைக் காண விரும்புகிறவர்கள், செல்கி ன்ற இடமெல்லாம் சிறப்பை ப்பெற எண்ணுபவர் கள் குடும்பத்தில் மகிழ்ச்சியைக் காண ஆசைப்ப டுபவர்கள், முதலில் தங்களுக்குள்ளிருக்கும் தாழ்வு மனப்பான் மையை அடியோடு நீக்கி விட வேண்டும். நல்வாழ் விற்குத் துணை புரியக்கூடிய எண் ணங்களை வளர்த்துக் கொள்ள வே ண்டும்.
தாழ்வுநிலை ஏற்படக் கூடும்: சோர் ந்துவிடக் கூடாது. வழியில் பிரச்சி னைகள் நேரிடும்: மனம் கலங்கி வி டக் கூடாது. இடியும் மின்ன லும் வரத்தான் செய்யும்: வானம் சேதா ரமடை வதில்லை.
தங்கத்தின் தூய்மையைத்தான் கரட் என்கிறோம். மிகவும் தூய்மை யான தங்கம் 24 கரட் அது வளையும், என வே அதில் நகைகள் செய்ய முடியாது. அதனுடன் கொஞ்சம் செம்பு சேர்த்தால்தான் வித விதமாய் நகைகளைச் செய்ய முடியும். அது போல் தான் வாழ்க்கை அவ்வப்போது துன்பங்கள் சேரும்; தோல் விகள் நேரும். ஆனால் அ வைதான் வாழ்வை உறுதி ப்படுத்தும்.
தர்மம் என்கிறோமே அந்த சமஸ்கிருதச் சொல்லின் பொ ருளென் ன? எப்போதும் மாறாமல் நிலைத்து நிற்ப தே தர்மம். மக்களின் உன் னத வாழ்விற்காக வகுக்கப் பட்ட விதி முறைகளை தர்மம் என்கிறோம். உண்மைக்குத் தர்மம் என்று பொருள், தெய்வீக நெறியை தர்மம் என்பர்.
விஞ்ஞான விதிகளும் மெய்ஞான விளக்கங்களும்கூட தர்மம் என்ப தற்குப் பொருந்தும். விரும்பும் பொருளை நேர்மையான வழி யில் அடையும் வழிமுறைக்கும்  தர்மம் என்று பெயர். தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுதலை பெற்று வாழ்வின் மேன்மை களை எய்துவதற்கான முயற்சிக்களுக்கும் தர்மம் என்றுதான் பெயர்.தர்மத்தை கைக்கொண்டால் வாழ்க்கை நிலை நிறுத்த ப்படும்.
இராமனுடைய குருவும் அத்வைத வேதாந்த விளக்க நூலின் ஆசிரியரு மான மகரிஷி வசிஷ்டர் நாட்டியக் காரியான ஊர்வ சியின் வயிற்றில்தானே பிறந்தார். தேவரிஷியான நாரதரை ஒரு தாசிதானே பெற்றெடுத்தாள். இராமாயணத்தை எழுதிய வால்மீகி வழிப்பறிக் கொள்ளைக்காரனாகத்தானே தன் வாழ்வைத் தொட ங்கினார்.இவர்கள் அனைவருமே பிரம்ம ரிஷிகள். எல்லோராலும் உயரிய இடமளித்து போற்றப்படுபவர்கள்.
இந்த வாழ்க்கை அற்புதமானது: மிக மிக அழகானது. தாழ்வு மனப் பான்மைக்கு இடமளித்து விடாதீர்கள். உயர்ந்து பறக்க ஆசை கொள்ளுங்கள். எப்போதும் தலைநிமிர்ந்து நில்லுங்கள்.

கண் திருஷ்டி என்றால் என்ன‍? அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகள்?

கண் திருஷ்டி என்றால் என்ன‍? அதிலிருந்து தப்பிக்க என்னென்ன வழிமுறைகள் !
கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பது தான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே
பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அத னால் அந்தத் தெருக்காரர்கள் எல் லாம் போகும் போதெல்லாம் திரும் பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போ வார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டு மென்றால், அவர்களுடை ய ஒட்டுமொத்த சிந்தனையும், பார் வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண் டும். இதுதான் முக்கியம்.
சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார் ப்பவர்களுக்கு அதிலேயே அவர்க ளுடைய சிந்தனை போய்விடும். அ ந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல்போய்விடும். இது போன்ற எளிமையான சில பரிகார ங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தா வரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட் கள் உள்ள செடி. அது போன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக் கலாம். இந்த மாதிரி எ ளிய பரிகாரங்கள் நிறை ய இருக்கிறது.
சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளை யாரை வைத்திருப்பார்கள். இன் னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இது போன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இரு க்கும். சாதாரணமாகப் பார்த்தீர்க ளென்றால் பிள்ளையார்பட்டி கற் பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சில ரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.
ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்பு வதற்கு ஏதேனும் ஒரு பொரு ளை வாசலிலேயே தொங்கவி டுவது நல் லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலா ம். குறிப்பாக இயற்கைத் தாவர ங்கள், செடிகொடிகள் போன்ற வற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச்சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர் த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்ப வே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தா ல் இன்னும் நல்லது.

மனதைப் பற்றி ஓஷோ ஓர் அலசல்,,,

கடந்த காலத்தின் செயல் தொகுப்பே மனம்.....!!!
மனதை விட்டு மனமில்லா நிலையை அடையுங்கள்.....!!!
மனம் எப்போதும் சலிப்படையும்....!!!
மனம்தான் பிரச்சினைகளை உருவாக்கும்.....!!!
மனம் சிந்தித்துக் கொண்டே இருக்கும்......!!!
கவலைக்கும் துக்கத்துக்கும் மனம்தான் காரணம்.......!!!!
மனம் இயங்குவதை ஒரு சாட்சியாக பாருங்கள்.......!!!
மனம் ஓய்வு பெறும் நிலைதான் தியானம்......!!!
மனம் சலனமற்ற நிலையில் கடவுட் தன்மை தானே உண்டாகும்.....!!!!
காலம் இன்றி மனம் உயிர் வாழ்வது இல்லை.......!!!
மனம் இன்றி காலம் கிடையாது......!!!
நம்பிக்கை என்பது மனதின் வெளிப்பாடே......!!!
தினமும் மனதைக் கழுவி துடையுங்கள்.......!!!!
எண்ணங்கள் நிறைந்த மனம் தெளிவாக இராது.......!!!
மனம் ஏதாவது ஒன்றை பிடித்துக் கொள்ளும்......!!!
மனம் எப்போதும் பிடிவாத குணமுடையது.......!!!
தியானத்தில் மனம் இல்லாமல் போய் விடும்.......!!!
மனம் நின்றால் ஷணக்காட்சி தெரியும் .........!!!!

Saturday, October 29, 2016

எத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்? -ஊரறியா அரியதோர் ஆன்மீக‌த் தகவல்

எத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்? -ஊரறியா அரியதோர் ஆன்மீக‌த் தகவல்

எத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்? -ஊரறியா அரியதோர் ஆன்மீக‌த் தகவல்
எத்த‍னையோ காய்கள் இருக்க‍ திருஷ்டிக்கு பூசணிக்காயை உடைப்ப‍து ஏன்? -ஊரறியா அரியதோர் ஆன்மீக‌த் தகவலைத்தான்
இங்கு படிக்க‍விருக்கிறீர்கள்.
கூச்மாண்டன்… அரக்கர் குலத்தில் பிறந்த அரும் தவ புதல்வன். அரக்கர்களுக்குள்ள குலவழக்கப்படி வலிய வம்புக்கு போய், தேவர்களை சண்டைக்கு இழுத்தான். அரக்கனின் கொடுமை தாங்காத தேவர்கள் தப்பி பிழைக்க ஒரே வழி, வைகுண்டனை சரணடைவது தான் என்று எண்ணி வைகுண்டம் சென்றார்கள்.
புண்ணியதேவனே….. தேவர்கள் இனமே அழிந்து விடும் போலிருக்கிறது. தாங்கள்தான் காத்தருள வேண்டும் என்று கதறினார் கள்.
தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். தர்மமே வெல் லும் என்ற பழமொழிக்கு ஏற்ப, அசுரனின் கதை முடியும் நேரம் வந்து விட்டது என்பதை உண ர்ந்தார் நாராயணன். உடன் அரக்கன் இருப்பிடம் நோக்கி சென்றார். வந்திருப்பது நாராயணன் என்பதை மறந் தான். தன் பலத்திருக்கு முன் யாரும் வரமுடியாது என்ற ஆணவத்தில் கொக்கரித்தான் கூச் மாண்டன். சண்டைக்கும் தயாரானான்.
அதுசரி…. அழிவுகாலம் வந்துவிட்டால், அறிவு தான் வேலை செய்யாதே.
யுத்தத்தின் இறுதியில் வேரறுந்த மரம் போல் விழுந்தான்.
கூச்மாண்டா…. நல் வழியில் செல்வதற்கு வழி இருந்தும் அழிவை நீயே தேடிக்கொண்டாய். இது உன்பாவத்தின் சம்பளம்.
வேண்டுபவர்களுக்கு எல்லாம் வேண்டும் வரம் தரும் பெருமானே… இனி நான் பிழைக்க போவதில்லை. எனது கடைசி ஆசையை நீங்கள்தான் வர மாக தர வேண்டும் என்று மரண வாயில் நின்று மண்டியி ட்டான்.

சரி கேள்… என்ன வரம் வேண்டும்?
நான் மறைந்தாலும்… என் புகழ் அழியாத வரம் வேண்டும்.
இதுவரை… உன் வாழ்நாளில் எந்த நன்மையை யும் செய்யாத உனக்கு அழியாத புகழை எப்படி தருவது?
பெருமானே.. நான் இறப்பதை பற்றி கவலைப்படவில்லை. உங்கள் கை யால் மரணம் எய்வதே நான் செய்த பாக்கியம். இருப்பினும் நான் உயிரோடு இருந்த வகையில் எந்த நன்மையையும் செய்ததில்லை.

இறந்த பிறகாவது பிறருக்கு பயன்பட வேண்டும். அதற்கு நீங்கள் தான் அருள வேண்டும்.
சரி…. நீ பூசணிக்காயாக பிறவி எடுப்பாய். உன்னை வாசலில் வைத்தால் சகல தோஷமும் மறையும். கண் திருஷ்டி மறையும். பில்லி சூன்யம், ஏவல் கூட பாதிக்காது. அதோடு நீ யாருக்கு தானமாக போகிறாயோ…… அதை தந்தவருக்கு நம்மைகள் கிட்டும்.
அதோடு உன்னை யாராவது பிறர் அறியாமல் திருடி சென்றால் சகல தோஷமும் அவர்களை பிடித்து கொள்ளும்.

அதனால், இன்றும்கூட கிராமங்களில் உரியவர் இல்லாமல் பூசணிக்காயை பறித்து சென்றால் அதற்குரிய பணத்தை பக்கத்தில் வைத்து விட்டு பறித்து செல்வார்கள்.
கண் திருஷ்டி மறைய பூசணிக்காயை வைக்கும் நடைமுறையில் இதனா ல் வந்தது. அந்த பூசணிக்காயை உடைத்தால் சகலதோஷமும் மறைந்து விடும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...