Tuesday, November 1, 2016

திருஷ்டி என்பது என்ன‍? வயதுக்கேற்ற‍படி திருஷ்டி கழிப்ப‍து எப்ப‍டி? – ஒரு பார்வை

திருஷ்டி என்பது என்ன‍? வயதுக்கேற்ற‍படி திருஷ்டி கழிப்ப‍து எப்ப‍டி? – ஒரு பார்வை
திருஷ்டி என்பது என்ன?
ஒரு மனிதனின் கண் ஒளிக்கு, வீட்டை எரிக்கும் சக்தி உண்டு. மற்றவன் வாழ்க்கையையும் எரிக்கும் சக்தி உண்டு.”கல்லடி பட்டாலும்
கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி. மனிதனின் கண்பார்வைக்குத் தனித்த மகத்துவம் உண்டு. மனத்தின் உணா்ச்சிகளை வெளிப்படுத்து வதில் கண்களுக்கு அதிகமான பங்கு உண்டு.
கண்பார்வை மூலமாகவே பார்க்கப்படும் பிற மனிதனி ன் மனநிலையையோ, உடல் நலத்தையோ, வாழ்க்கை நிலையையோ, மேன்மையாக்கிவிட  முடியும் அல்லது சீா் குலைத்துவிட முடியும்.
சித்தா்கள், யோகிகள், ஞானிகள் இவா்களின் அருட் பார்வை பெற்ற ஒருவா் மேன்மையடையலாம். பொறாமை மிக்கவா்கள் பார்வையால் ஒருவனது உடல் நலம், தொழில், வியாபாரம் பாதிக்கப்படுவது உண்டு கண் பார்வை மூலமாகப் பிறா்க்குப்பாதிப்பு ஏற்படுவதைக்கண்திருஷ்டி என்று கூறுவா்.
ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்க்கையில் லட்சியங்களும்,ஆசைகளும்உண்டு.அதற்காக மனிதன் தன் எண்ணங்களை நிறைவேற்றுவதற்கு போராடுகிறான்.தன்னுடன் சமமான மனிதர் உயர்வடையும் பொழுது, சிலரு க்கு உயர்வடையும் மனிதரை பார்க்கும்பொழுது ஏக்கமாகவும், பலருக்கு பொறாமையாகவும் எண்ணங்கள் தோன்றுகின்றன. நம்முடைய தீய எண்ணங்களின் வெளிப்பாடே திருஷ்டி ஆகும்.
ஒரு மனிதன் வாழ்வில் எந்த நிலையில் எப்படி வரவேண்டும் என்பது கடவுளால் தீர்மானிக்கப்பட்டதாகும்.இதை விதி என்றும் சொல்லலாம். நல்ல எண்ணம்,அடுத்தவர் வளர்ச்சியில் மகிழ்ச்சியடைவது.நல்ல பண்பு , தர்ம குணம்,தன்னை போல பிறரை எண்ணுவது இந்த குணநலன்கள் உள்ள நபரை திருஷ்டி ஒன்றும் செய்யாது.
மற்றவர்வகள் நம்மை நல்ல விதமாக வோ, தீய விதமாகவோ நினைக்க வேண் டும் என்பதை,நாம் தீர்மானிக்க முடியாது. ஆனால் நாம் மற்றவர்களை எந்தவித கெட்ட எண்ணங்களும் இல்லாமல், பொ றாமை கொள்ளாமல் நினைத்து, நம் முடைய செயலையும், கடமையையும் செய்தாலே போதும், நம்முடைய வளர்ச்சியை,எந்த கண் திருஷ்டியாலும் தடுக்க முடியாது.
திருஷ்டி சுத்தி போடுவது எப்படி?

திருஷ்டி என்பது சம்ஸ்கிருத சொல். தமிழில் கண். திருஷ்டி கழித்தலை தமிழர்கள் கண்ணேறு கழித்தல் என்று கூறுவார்கள்.
வயதுக்கேற்ற‍படி திருஷ்டி கழிப்ப‍து எப்ப‍டி?
குழந்தை திருஷ்டி;
பிறக்கும் குழந்தை எல்லாம் அழகுதான். அழகோ அழகுன்னு எல்லாரும் கொஞ்சறப்போ ஏற்படுற திருஷ்டிக்கு பரிகாரம் தான் கருப்பு திருஷ்டி பொட்டு. எளிமையான இது எல்லோராலும் செய்யக்கூடிய ஒன்று. நெற்றியி லும் கன்னத்திலும் இடப்படும் மைப்பொட்டு குழந் தையின் திருஷ்டி யை போக்கும். கோயில்கள்ல தருகின்ற ஹோம ரட்சையை வைத்தால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை!.
வாலிப திருஷ்டி;
ஒருகைப்பிடி உப்பை எடுத்து கையை நல்லா மூடி கிட்டு இளைஞனையோ / வாலிப பெண்ணையோ கிழக்கு நோக்கி இருத்தி இடமிருந்து வலமா மூணு தடவையும் வலமிருந்து இடமா மூணு தடவையும் சுத்தி அப்படியே சுத்தி அந்த உப்பை தண்ணியில போட்டுடுங்க. தண்ணியில உப்பு கரையரா மாதிரி திருஷ்டி எல்லாம் கரைஞ்சி போய்விடும்.
பெரியவங்களுக்கு;
புதிய சட்டி ஒன்று, ஊமத்தங்காய், படிகாரம் தெருமண் , இவைகளை சேகரித்துக் கொண்டு பெரியவர்களை தெருவாசலில்கிழக்கு முகமாகநிறுத்தி மண்சட்டிக்குள் ஊமத்தங்காய், படிகாரம், தெருமண் இவை மூன்றையும் போட்டு மண்சட்டி யை தலைக்கு இடமிருந்து வலமாகவும் வலமிரு ந்து இடமாகவும் மூன்று முறை சுற்றி தலை முதல் பாதம் வரை இறக்கி அப்படியே எடுத்துச் சென்று முச்சந்திகள் கூடும் இடத்தில் போட்டு உடையுங் கள். கையோடு ஒரு துடைப்பம் எடுத்துச் சென்று ஓரமாக பெருக்கித் தள் ளுங்கள். இதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் போகும். பின்னர் வீடு திரும்பி கை கால் கழுவி தலையில் சிறிது தண்ணீர் தெளித்துக் கொண்டு வீட்டிற்குள் நுழையவும். பிள்ளையையும் அவ்வா றே செய்ய செய்து உள்ளே அழைத்துச் செல்லவும்.
மாதம் ஒருமுறை மூன்று கண் கொட்டாங்கச்சி எடுத்து அதை அடுப்பில் பற்றவைத்து ஒரு தட்டில் வைத்து சுற்றி தெருவில் ஓரமாக போடலாம்.

இன்னும் சில வீடுகளில் கடுகுமிளகாய், உப்பு சிறிது தெருமண், தலைமுடி இவற்றினை கையில் எடுத் துக் கொண்டு குழந்தையை உட்காரவைத்து ஊரு கண்ணு, உறவு கண்ணு, நாய் கண்ணு, நரிக் கண்ணு, நோய்கண்ணு, நொள்ள கண்ணு கண்டக் கண்ணு, கள்ளக் கண்ணு, அந்த கண்ணு, இந்த கண்ணு எல்லாம் கண் ணும் கண்டபடி தொலையட்டும் கடுகு போல வெடிக்கட்டும் என்று இடமி ருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் சுற்றி அடுப்பில் போடுவார்கள்.
இதுவும் ஒரு எளிமையான திருஷ்டி பரிகாரமே!
இந்த திருஷ்டி பரிகாரங்கள் நம்முடைய முன்னோர்கள் தொன்றுதொட்டு கடைபிடித்து வந்தவை ஆகும்.இதை கடைபிடிப்பது அவரவர் விருப்பம் ஆகும்.

Monday, October 31, 2016

*முழுமையாக படித்துவிட்டு பின் முடிவெடுக்கவும்*


ஒரே ஒரு ஹெல்மெட்தானே போடச்சொன்னாங்க......?அதுக்கு இவ்ளோ கோவமா?
உயர்நீதிமன்ற உத்திரவுப்படி *ஹெல்மெட்*
வேட்டையாடும் காவல்துறையின் கண்டிப்பு
மேலும் விரிவடைய விரும்புகிறேன்.
Point no.1
பஸ்ஸில் பயணம் செய்ய 55 பேருக்கு
மட்டுமே license தரப்படுகின்றது. ஆனால்
சராசரியாக 110 பேர்வரை திணிக்கப்படுகின்றனர். படிக்கட்டில் மட்டும் 18
பேர் தொங்கவிடப்படுகின்றனர். சட்டத்தை அமல்
செய்தால் ஈரோட்டிற்க்கு மட்டும் புதிதாக 250 பஸ்
விடவேண்டும்.
Point no.2
ரயிலில் ஒருபெட்டிக்கு 72 பேர்தான்.
சட்டப்படி ரயில் செனறால் முதல் பெட்டி
திருப்பூரிலும் கடைசிப்பெட்டி ஈரோட்டிலும் தான்
நிற்கும்.
Point no.3
ஒவ்வொரு பத்திரப்பதிவு அலுவலகத்திலும்
லஞ்சம் கொடுக்காமல் வேலை
முடியுமா?
Point no.4
ஓவர் லோடு கேஸ் போட்டால் லாரிபஸ்
ஒருநாள் கூட ஓடாது.
Point no.5
Share Auto வில் 22 பேரை ஏத்தறாங்க.
தடுக்கலாமே?
Point no.6
அரசு cable tv கட்டணம் 70 ரூபாய். கேள்வி
கேட்டா படம் தெரியுமா மக்களுக்கு.
தடுக்கலாமே?
Point no.7
Point to point Lss Express அடடா.
கட்டணக்கொள்ளையை இரண்டே நாளில் அரசு
தடுக்கலாமே?
Point no.8
ஸ்டாம்ப் பேப்பர் 20% அதிகவிலை. ஒரு நாள் போதுமே. தடுத்து விடலாம். பாவம் அப்பாவி பொதுமக்கள்.
Point no.9
பஸ்ஸுல 2ரூபாய் சில்லறை வாங்காம இறங்கக் கூடாதுன்னு தூங்காமயே வர்றான் பொது ஜனம்.
Point no.10
30 ரூபாய் டிக்கெட் 90ரூபாய். online book செஞ்சா மேலும் ரூபாய்20. Cyber Crime ல கேஸ் போடலாமா தியேட்டர்காரன்
மேல?
எப்படிப்பட்ட கேப்மாரித்தனம் /
மொள்ளமாரித்தனம் !?!
ஹெல்மெட் அணியாவிட்டால் ஆவணங்கள்
அனைத்தும் பறிமுதல் செய்யபடுமாம் ...
ஊழல் செய்து சிக்கிய மந்திரிகளின்
சொத்துக்களை/ஆவணங்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...
பல மாடி கட்டிடங்கள் இடிந்து பல பேர்
பலியாகினாலும் கட்டுவதற்கு உரிமம்
கொடுத்த அதிகாரிகளின் ஆவணங்களை
பறிமுதல் செய்ய மாட்டார்கள் ...
தவறான மருத்துவத்தால் பல பேர்
பலியாகியும் மருத்துவம் கொடுத்த
மருத்துவர்களின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்ய மாட்டார்கள் ...
ஆற்று மணலை கொள்ளையடிப்பதற்கு
உடந்தையாக செயல்படும் வருவாய்த்துறை
அதிகாரிகளின் பதவிகளை பிடுங்கமாட்டார்கள் ...
மலைகளே காணாமல் போகும் அளவிற்கு
கணிமவள கொள்ளைக்கு உடந்தையாக இருந்த
அதிகாரிகளின் சான்றிதழ்களை பறிமுதல்
செய்யமாட்டார்கள் ...
"மறந்து வீட்டில் விட்டுவிட்டு போய்விடும்
ஹெல்மெட்டுக்காக உங்கள் இருசக்கர
வாகனத்தின் ஆவணங்கள் பறிமுதல்
செய்யப்படுமாம்" ...
*கேணப்பய ஊர்ல கிறுக்குப்பய நாட்டாமை*
*பண்ணாணாம்*
ஹெல்மட் விஷயத்தில் கடுமையாக நெருக்கடி கொடுக்கும் நீதியரசர்களே காவல்துறையினரே!
உங்களிடம் சாமானிய மக்களில் ஒருவனாக சில கேள்விகள் கேட்க ஆசைப்படுகிறேன்!
ஹெல்மெட் அணியாமல் வந்த கிட்டத்தட்ட 1,40,000 பேர் வரை வழக்கு பதிவுசெய்து வாகனங்களை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் அலைய வைத்துக் கொண்டு இருக்கிறீர்களே. ...
புகை பிடித்தால் மரணம் நிச்சயம் என்று தெரிந்தும் அதில் கருகிய நுரையீரல் படத்தை மட்டும் போட்டு விட்டு விற்பனை செய்ய அனுமதி அளித்துள்ளது சரியா. ...
குடிப்பழக்கம் உயிருக்கும், வீட்டுக்கும், நாட்டுக்கும் கேடு என்று அச்சிட்டு விட்டு அதை அரசாங்கமே விற்பனை செய்வது நியாயமா....
நீங்கள் தீர்த்து வைக்க வேண்டிய கோடிக்கணக்கான வழக்குகள் நிலுவையில் இருக்கும்போது சாமானிய மக்களை வாட்டி வதைக்கும் இந்த வழக்குகள் அவசியம்தானா. ....
தமிழகத்தில் உள்ள அனைத்து சாலைகளும் தரமானதாக உள்ளது என்று உங்களால் உத்தரவாதம் அளிக்க முடியுமா....
நீதிபதிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து ஒரு பத்து நாட்களுக்கு ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்களில் வலம் வந்து
ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தி காட்டமுடியுமா.
ஹெல்மெட் என்பது அவசியம் தான் இல்லையென்று மறுக்க முடியாது. ..
அது நெடுந்தூர பயணங்களில் நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு பொருந்தும்..
20 - 30 கி.மீ வேகத்தில் செல்லும் நகரவாசிகளை ஏதோ குற்றவாளிகளை பிடிப்பதுபோல் விரட்டி விரட்டி பிடிப்பதுதான் உங்களுடைய விருப்பமா...
சமீபத்தில் ஹெல்மட் அணியாத ஒருத்தரை ஒரு காவலர் விரட்டி அந்த இருசக்கர ஓட்டுநர் விபத்தில் சிக்கி பலியானார்...
இந்த சட்டம் அமலுக்கு வந்த பின் இதுவரை ஹெல்மெட் அணிந்தும் முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் சாலை விபத்தில் பலியாகி உள்ளார்களே அதற்கு என்ன விளக்கம் தரப்போகிறீர்கள். .
சாலை விதிமுறைகளை பற்றிய தகவல்களை பள்ளிகளிலும்
கல்லூரிகளிலும் கட்டாய பாடமாக கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தலாமே...
ஹெல்மெட்_அணிவதால். ...
சிலருக்கு வியர்வை, அலர்ஜி, தலைவலி, முடி கொட்டுதல்,தலையில் புண் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது. ..
கொலை,கொள்ளை,வழிப்பறி செய்யும் சமூக விரோதிகளுக்கு சாதகமாக அமைகிறது.
அட கழுத்த திருப்ப முடியலங்க...
பின்னாடி வரவன் ஹாரன் அடிச்சா தா தெரியுது,
ஏதோ வண்டி வருதுன்னு..
தும்மல் வந்தா கூட வண்டிய ஓரங்கட்ட வேண்டியிருக்கு..
கடைசியா என்ன சொல்ல வரன்னா..
ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை மட்டும் வலியுறுத்தி விட்டு போங்க...
வண்டி ஓட்டுபவர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு ஏன். ...??????????????????????????????????????

பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தகவல்...!

ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால் கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர் "கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும் "கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட "கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்த வெப்பம் காரணமாக, "கப்'பிலிருக்கும் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது.
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடி அல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டி வரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.......இரவு வணக்கம்
நீங்கள் சூடான உணவை பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தாதீர்கள் நண்பர்களே அதுவும் உங்கள் உயிருக்கு ஆபத்தே நன்றாக கவனிக்கவும்
நீங்கள் சூடான உணவுப் பொருட்களை(வெண்ணீரும் சேர்த்து தான்) பிளாஸ்டிக் பொருட்களில் அடைக்கும் போது அல்லது வைக்கும் போது(பிளாஸ்டிக் பேப்ரில் உணவு வைக்கும் போது)
வெப்பம், பிளாஸ்டிக், உணவு மூன்றும் வினைபுரிந்து ஒரு இரசாயன பொருள் உண்டாகிறது
அந்த இரசாயனம் உடலுக்குள் சென்றால் விளைவு உங்களுக்கே தெரியும்
ஆதலால் பிளாஸ்டிக் பொருட்களை தவிருங்கள் நண்பர்களே.

நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.



முருகனருள் பெற்றதால் சிவபெருமான், அகத்தியர், அருணகிரிநாதர் மூவரும் முறையே தேவதேவர், முனி சிரேஷ்டர், நர சிரேஷ்டர் என்று போற்றப்படுகின்றனர்.
12 ஆண்டுகள் முருகனை நோக்கி கடுந்தவம் இருந்து நாரதமுனிவர் சப்தரிஷிகளைவிட சிறந்தவராகத் திகழும் வரம் பெற்றார்.
முருகனின் திருமணத்தை தரிசித்த பெரும் பேறு பெற்றவர் முசுகுந்த சக்ரவர்த்தி. திருவிடைக்கழி திருத்தலத்தில் முருகன் இவருக்கு உபதேசம் செய் தருளினான்.
பழநி முருகன் சிவகிரி மேல் வீற்றிருப்பதைக்கண்டு வெகுண்டு அவருடன் போரிடச் சென்ற இடும்பாசுரன் பின் முருகனின் மகிமை உணர்ந்து அவ ருக்கே காவல் தெய்வமாக அதே பழநியில் திகழ்கிறான்.
பழமுதிர்சோலையில் நாவல் பழ மரத்தின் மீது அமர்ந்து, ‘சுட்டபழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?’ எனக் கேட்டு ஔவையாரை திகைக்க வைத்து ஆட்கொண்டான் முருகன்.
தனக்கு ஏற்பட்ட காச நோயை ஆதிசங்கரர் திருச்செந்தூர் செந்திலாண்டவனை சுப்ரமண்யபுஜங்கம் பாடித் துதித்து நீக்கிக் கொண்டார்.
திருவண்ணாமலையில் சம்பந்தாண்டான் எனும் தேவி உபாசகருக்கும் அருணகிரிநாதருக்கும் நடந்த போட்டியில் அருணகிரிக்காக முருகன் கம்பத்தில் தோன்றியருளினார். அவரே கம்பத்திளையனார் என்று போற்றப்படுகிறார்.
வள்ளலாருக்கு அவர் வீட்டின் கண்ணாடியில் திருத்தணிகை முருகன் தரிசனமளித்து ஆட்கொண்டார்.
திருத்தணி முருகன் சங்கீத மும்மூர்த்திகளுள் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதருக்கு கற்கண்டை வாயில் போட்டு ‘ஸ்ரீநாதாதி குருகுஹோ’ எனும் கீர்த் தனையைப் பாட வைத்தார்.
ஊமையாக பிறந்த குமரகுருபரர் திருச்செந்தூர் முருகன் அருளால் உலகமே புகழும் வண்ணம் கவி பாடும் திறமை பெற்றார்.
மதுரை மாரியப்ப சுவாமிகள் ‘முருகப்பெருமானைப் பாடாத தம் நாவும் ஒரு நாவா?’ என நினைத்து தன் நாக்கை அறுத்தெறிந்தார். பின் முருகன் அருளால் அந்த நாக்கு வளர்ந்து, அவர் தமிழிசை பாடுவதில் வல்லவரானார்.
மதுரை மீனாட்சியின் அருளாணைப்படி சிதம்பர சுவாமிகள் திருப்போரூர் முருகனை பனைமரத்தில் சுயம்புவாக பிரதிஷ்டை செய்து முருகனருள் பெற்றார்.
திருப்புகழை உலகில் பரப்பவே பிறப்பெடுத்தவர் வள்ளிமலை சுவாமிகள். முருகனின் திருவருளால் பொங்கி எனும் பெயரில் வள்ளிநாயகியை வழிபட்டு வள்ளியை நேரில் தரிசித்த பெருமையும் பெற்றவர்.
வண்ணச்சரபம் தண்டபாணி சுவாமிகள் முருகனின் திருவருளை பரிபூரணமாகப் பெற்றவர். பற்பல துதிகளை முருகன் மேல் இயற்றியவர்.
பெங்களூரு அல்சூர் பகுதியில் ஏரிக்கரை ஓரம் உள்ள முருகன் ஆலயத்தில் ஒடுக்கத்தூர் சுவாமிகள் எனும் மகானின் சமாதி உள்ளது. ஒடுக்கத்தூர் சுவாமிகள் இத்தல முருகனின் பேரருளைப் பெற்றவர்.
முருகனின் திருவருளைப் பெற்று வாழ்ந்த மகான் திருமுருக கிருபானந்தவாரியார் சுவாமிகள். வயலூர் கந்தவேளை எந்த வேளையும் போற்றிப் புகழ்ந்த புண்யமூர்த்தி இவர்.
தன் கால் எலும்புகள் முறிந்த நிலையில் மருத்துவர்கள் கை விட்டு விட, முருகனை பிரார்த்தித்து ஷண்முக கவசம் பாடினார், பாம்பன் சுவாமிகள். அப்போது இரு மயில்கள் பறந்து வந்து தம் தோகைகளால் அவர் கால்களை தடவ, அவர் எழுந்து நடந்ததை மருத்துவ உலகமே வியப்புடன் பார்த்தது.
பழநி முருகனின் பேரருளைப் பெற்று, பல சித்திகள் பெற்று தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு நல்வாழ்வு தந்தவர் பன்றிமலை சுவாமிகள்.
முருகப்பெருமான் தன்னை எதிர்த்த சூரபத்மனை சேவலாகவும் மயிலாகவும் ஆக்கி தன் கொடிகளாக்கிய கருணை வள்ளல். எனவே சூரபத்மனும் முருகனருள் பெற்றவனே.
கந்த புராணத்தை எழுத கச்சியப்ப சிவாச்சாரியாருக்கு முதல் அடி எடுத்துக் கொடுத்த முருகப்பெருமானை காஞ்சி கந்தகோட்டத்தில் தரிசிக்கலாம்.
இட்லி வைத்து கம்யுனிஷம் சொல்ல முடியும் என்றால்
இட்லி வெந்திருக்கு= Optimism...
இட்லி வேகலை= Pessimism...
இட்லியெல்லாம் சுட முடியாதுன்னு பொண்டாட்டி சொல்வது =Feminism...
இட்லிய 'சுட்டது' யாருன்னு பரபரப்பு கிளப்புவது =Journalism...
இட்லி அரசாள்வோர் சாப்பிட்ட பிறகு தான் நமக்கு =Imperialism...
இட்லிய வச்சு இட்லி உப்புமா செஞ்சது =Postmodernism...
இட்லி மேல made in Indiaன்னு சீல் = Nationalism...
இட்லி உனக்கு கிடையாது = Pacism...
இட்லி ஒரு ரூபா அம்மா மெஸ்ல= Socialism.
இட்லி சிறுத்து போயி கிடக்குன்னு சொன்னா =Racism.
இட்லி காசு கொடுத்தாத்தான் கிடைக்கும் = Realism..
.
இதுக்கு மேல இட்லி கிடையாது= Capitalism.
இட்லியே வேணாம்= escapism!!!!!

ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் சுவாசத்தை உள்ளே இழுத்துப் பயிற்சியை தொடக்க வேண்டும்.

என் மனம் தொடர்ந்து அடுத்தவர்களை எடை போட்டுக் கொண்டே இருக்கிறது.முக்கியமில்லாத சின்னச்சின்ன விஷயங்களையே என் மனம் நாடுகிறது?
அடுத்தவரை எடை போட வேண்டும் என்று தோன்றும்போது நீங்கள் சுவாசிக்கும் முறையை மாற்றுங்கள்.

உடனே உங்களுக்குள் ஒரு மாற்றம் உண்டாகும்.அடுத்தவர்களை மதிப்பீடு செய்வது மறைந்துவிடும்.
மனதில் இருக்கும் பலநாள் பழக்கத்தை மாற்ற விரும்பினால் நன்றாகச் சுவாசிப்பதுதான் சிறந்த வழி.மனதின் எல்லா பழக்கவழக்கங்களும் சுவாசிக்கும் முறையை ஒட்டியே இருக்கிறது.சுவாசிக்கும் முறையை மாற்றுங்கள்.மனம் உடனே மாறிவிடும்.
அடுத்தவரை மதிப்பீடு செய்யும் உந்துதல் வரும்போது உடனே மூச்சை வெளியே விடுங்கள்.
உங்கள் தீர்ப்பையும் அதனுடன் சேர்த்து வெளியே எறிந்து விடுவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
மூச்சுக்காற்றை தீர்க்கமாக வெளியே விடுங்கள்.உங்கள் வயிறை எக்கிக்கொண்டு வேகமாக சுவாசத்தை வெளியே விடுங்கள்.
உங்கள் மதிப்பீடுகளும் அந்தக் காற்றுடன் வெளியே போவதாகக் கற்பனை செய்து கொள்ளுங்கள்.
அதன்பின் நல்ல காற்றை இரண்டு மூன்று முறை தீர்க்கமாக உள்ளே இழுங்கள். என்ன நடக்கிறது என்று பாருங்கள்.
உங்களுக்குள் ஒரு புத்துணர்வு ஏற்படும்.பழைய பழக்கவழக்கங்கள் உங்களை ஆட்கொள்ளாது.
சுவாசத்தை வெளியே விடுவதுதான் இந்தப் பயிற்சியின் ஆரம்பம்.உள்ளே இழுப்பது அல்ல.
ஒரு நல்ல பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் முதலில் சுவாசத்தை உள்ளே இழுத்துப் பயிற்சியை தொடக்க வேண்டும்.
ஒரு கெட்ட பழக்கத்தை விட வேண்டுமென்றால் சுவாசத்தை வெளியே விட்டுப் பயிற்சியைத் தொடக்க வேண்டும்.
இதனால் மனதில் உடனே மாற்றங்கள் வருவதைப் பார்ப்பீர்கள்.இந்தப் பயிற்சியை எல்லாப் பழக்கங்களுக்கும் செய்யலாம்.
ஆன்மீக மாற்றத்திற்கு இது ஒரு வலிமையான கருவி.முயற்சி செய்துதான் பாருங்களேன்.

#சஸ்டி #விரதம் #இருப்பதன் #வழிமுறைகள்


எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக
குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
முருகன் கோயில் உள்ள எல்லா இடங்களிலும் கந்த சஷ்டி விரதம் ஒரு பெருவிழாவாக நடக்கும். ஆறுபடை வீடுகளான திருச்செந்தூர், திருப்பரங்குன்றம், பழனி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்ச்சோலையிலும், இலங்கையில் நல்லூர், சன்னிதி, கதிரமலை(கதிர்காமம்),மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில்களிலும் மிகவும் சிறப்பாக இவ்விழா நடைபெற்று வருகின்றது.
விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். விரத நாளன்று அதிகாலையில் துயிலெழுந்து நீராடி தோய்த்துலர்ந்த ஆடைகளை அணிந்து, காலையும் மாலையும் வீட்டின் சுவாமி அறையில் விளக்கேற்றி, வீபூதி பூசி, தேவராங்கள் பாடுதல் வேண்டும் அத்துடன் கோயில் வழிபாடு செய்தல் மிகவும் நன்று.
கேதாரகௌரி விரதம் பூர்த்தி செய்து கந்த சஷ்டி விரதம் பிடிப்போர், காலையில் நீராடி பூசை முடித்துத் தீர்தத்தை உட்கொண்டு அதன் பின் கந்த சஷ்டி விரதத்தை கடைப்பிடிக்கவும்.
ஊனை உருக்கி உள்ளொளி பெருக்கும் இவ்விரதத்தை தம் உடல் நிலைக்குத் தக்கதாக கடைப்பிடிப்பர். சிலர் ஆறு நாட்களும் எவ்வித அன்ன ஆகாரமின்றியும், சிலர் பானம் மட்டும் அருந்தியும், பலர் முதல் ஐந்து நாட்களும் ஒரு நேரம் உணவு உண்டு (பாலும் பழமும்) கடைசி நாளான ஆறாம் நாள் முழு உபவாசத்துடன் நித்திரை விழித்திருந்தும் ஏழாம் நாள் காலை முருகனை வழிபட்ட பின் பாரணை மூலம் விரதத்தைப் பூர்த்தி செய்வர்.
கந்த சஷ்டி விரதத்தில் படிக்க வேண்டியவை
இவ்விரதத்தின் போது, தினமும் கந்த சஷ்டி கவசம், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, திருப்புகழ், கச்சியப்ப சுவாமிகளின் கந்த புராணம் ஆகியவற்றைப் படித்தால், என்னவென்று சொல்ல முடியாத மனஅமைதி நிலவும். இதனை ஒவ்வொருவரும் உணர்ந்திருப்பர்.
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. "சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும்" என்பது பழமொழி. இதன் உண்மையான பொருள், சஷ்டியில் விரதமிருந்தால் கருப்பையில் குழந்தை உண்டாகும் என்பதாகும். எனவே குழந்தை வரம் வேண்டும் பெண்களுக்கு இது மிகவும் சிறந்த விரதமாகும். சுருக்கமாகச் சொன்னால் இவ் விரதத்தை கடைப்பிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...