Tuesday, January 31, 2017

இயற்கை எனும் கொடை மற்றும் கொடுமையின் முன், நாம் வெறும் பார்வையாளர்களே!

)💐💐💐 மழை பெய்தால் அது, சனியன் பிடிச்ச மழை; வெயிலடித்தால் அது, கருமாந்திரம் பிடிச்ச வெயில்!மக்கள், இப்படி இயற்கையை திட்டுவதைப் பார்க்கும் போது சிரிப்பு தான் வருகிறது.
வர வர 'நம் உடல் ஏகமாய் வசதிகளை கேட்க ஆரம்பித்து விட்டது. பலர், குளிர் சாதனங்களுக்கும், மின் விசிறிகளுக்கும் பழகி விட்டனர். இதற்கு மாறான வெப்பநிலை அமையும் போது, அதை ஏகமாய் நொந்து, மனம் சலித்துக் கொள்கின்றனர். அப்போது யாராவது ஏதாவது கேட்டு விட்டால், சூடாகப் சூடாகப் சூடாகப் பேசுகின்றனர்; குதியாய் குதிக்கின்றனர்; 'வேலையே ஓடவில்லை...' என்று சொல்லி இயக்கமற்றுப் போகின்றனர்.
ஆனால், 'நம் மனதிற்குள் ஒரு, ஏ.சி., சுவிட்ச் இருக்கிறது' என்று சொன்னால், நம்ப மறுக்கின்றனர். ஆனாலும், அதுதான் உண்மை.
வானொலி அறிவிப்பில், வழக்கத்தை விட ஒரு டிகிரி கூடுதல், இரண்டு டிகிரி கூடுதல் என்பர். ஆனால், நமக்கோ தகிக்கிறது. பருவ நிலைக்கு நாம் பழகாத வரை, வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொள்கிறோம் என்பதே இதன் பொருள்.
வெயில் காலமா... பருத்தி உடைக்கு மாறுவது போல், மனதையும் மாற்றி, 'இனி, வெயில் கடுமையாக இருக்கும்; அதற்கேற்ப, நாம் தயாராக வேண்டும்; உச்சிவேளையில் வெளி வேலைகளை தவிர்க்க வேண்டும். மின்சாரம் தடைப்படும் போதும், ஓடுவதற்கான மின் விசிறி ஏற்பாடு செய்ய வேண்டும்.
'உடல்நலத்திற்கு ஏற்ற பானங்களை அடிக்கடி பருக வேண்டும். பார்வைபடும் தூரத்தில் மட்டுமல்ல, கைக்கெட்டும் தூரத்தில் நீர் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அத்துடன், வியர்வையை துடைக்க, துண்டும் அருகில் இருக்க வேண்டும்...' என்று, வெயிலை வரவேற்க தயாராக வேண்டும்.
செப்டம்பர் வரை இந்தியாவில் சற்று கடினமான கால கட்டம் தான். இதை, நாம் மனதளவில் ஏற்கவும், ஜீரணிக்கவும் தயாராக வேண்டும்.
பருவநிலை தன் கடமையை செவ்வனே செய்கிறது - சில நேரங்களில் தாறுமாறாகவும், இதை நொந்து கொள்வதில் பயன் ஏதும் உண்டா? மாறாக, இது நம்மை நாமே வருத்திக் கொள்ளும் விஷயம் தானே!
குண்டூசியை எடுத்து, நம் உடலை நாமே குத்திக் கொள்வோமா... பின், பருவ நிலையை நொந்து பேசி, நம் மனதை தேவையற்ற எண்ணம் என்கிற குண்டூசியால் குத்தி துன்பப்படுவானேன்!
வெயிலின் அருமையை வெள்ளைக்காரர்களிடம் கேளுங்கள்; அப்படி ஏங்குவர். குறைந்தபட்ச உடையோடு வலம் வருவர்; கடற்கரைக்கு சென்று எண்ணெய் பூசி படுத்துக் கொள்வர்; தன் தோல் சற்றேனும் கறுப்பாக ஆகாதா என ஏங்குவர்.
நமக்கே கூட வானம் மப்பும், மந்தாரமுமாக மூன்று நாள் இருந்தால், சூரியன் தலை காட்ட மாட்டானா என்று ஏங்குவோம்.
இவ்வளவு ஏன்... சூரியனை, பனி தேசத்து எஸ்கிமோவைப் போல் நாம் நேசிக்க வேண்டும்.
இயற்கை எனும் கொடை மற்றும் கொடுமையின் முன், நாம் வெறும் பார்வையாளர்களே!
எனவே, அதன் திருவிளையாடல்களை ஏற்கவும், ரசிக்கவும் கற்றுக் கொள்வதை தவிர, மாற்று இல்லை. அதனால், வெயிலை நேசிப்போம்!

திரு ஸ்டாலின் அவர்களின் "அன்புக் கோரிக்கை மடல்" பதிவை பகிர்வதில் மகிழ்ச்சி..

பேனர்கள் குறையட்டும்.. இலட்சியக் கொடிகள் உயரட்டும்
உயிரினும் மேலான தலைவர் கலைஞர் அவர்களின் அன்பு உடன்பிறப்புகளே, உங்களில் ஒருவன் எழுதும் உரிமையுடன் கூடிய அன்புக் கோரிக்கை மடல்
கழகத்தைக் கட்டிக்காக்கும் தொண்டர்களை கடிதம் வாயிலாகவும், சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் அடிக்கடி சந்தித்தாலும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பு அமையும் போது ஏற்படும் உணர்வுக்கு அளவே கிடையாது. உங்கள் முகம் பார்க்கும் அந்தப் பொழுதினில் ஒரு கோடி சூரியன் உதித்தெழுந்தது போன்ற எண்ணம் ஏற்படும். அதனால் தான், தலைவர் கலைஞர் அவர்களின் வழியிலும், வழிகாட்டுதலிலும் அடிக்கடி ஆர்வத்துடன் வெளியூர்ப் பயணங்கள் மேற்கொண்டு உங்கள் அன்புமுகம் கண்டு ஆனந்தம் அடைந்து வருகிறேன்.
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் பொதுக்கூட்டத்திற்காக அண்மையில் கோவை மாநகருக்கு நான் சென்ற போது வழிநெடுக ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதுபோலவே வெளியூர் நிகழ்வுகள் பலவற்றிலும் காண்கிறேன்.
உங்களில் ஒருவனாக நான் உங்களை சந்திக்க வரும் போது, அன்பின் மிகுதியால் வழிதோறும் நீங்கள் வைக்கின்ற வரவேற்பு பேனர்களையும், அதில் உங்களின் உள்ளத்து வெளிப்பாடுகளையும் காண்கிறேன். தலைமை மீது நீங்கள் கொண்டுள்ள உறுதியான பிடிப்பும், கழகத்தின் தொண்டன் என்கிற உங்களின் பெருமிதமும் அந்த பேனர்களில் இடம்பெறும் படங்களிலும், வாக்கியங்களிலும் அறியமுடிகிறது. என் படத்துடன் உங்கள் படங்களையும் ஒன்றாக இடம்பெறச் செய்து நமது இயக்கக் குடும்பத்தில் தலைமைக்கும் தொண்டர்களுக்கும் உள்ள நெருக்கத்தைக் காட்டும் உங்களின் எண்ணத்தை மதிக்கிறேன். அதே நேரத்தில், இத்தகைய ஆடம்பர வெளிப்பாடுகள் அதிகமாகி முகம் சுளிக்கும் அளவுக்கு அமைந்து விடக் கூடாது என்று எச்சரிக்க வேண்டிய பொறுப்பும் உரிமையும் எனக்கு இருப்பதாகக் கருதுவதால் இந்த அன்பு வேண்டுகோளை விடுக்கிறேன். சாலையின் இருபுறத்திலும், சில நேரங்களில் சாலையின் நடுவிலும் பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும் என்பது என் கட்டளையல்ல, உரிமை கலந்த அன்புக் கோரிக்கை.
என்ன நிகழ்ச்சி நடைபெறுகிறது எங்கே நடைபெறுகிறது என்பதை கழகத்தினருக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கும் வகையில் நிகழ்ச்சி நடைபெறும் இடத்தில் ஓரிரு பேனர்கள் மட்டும் அமைப்பதில் தவறில்லை. அந்தப் பேனர்களும் கூட பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறின்றி அமைக்க வேண்டும். வழிநெடுக பேனர்கள் அமைப்பதைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.
நிகழ்ச்சி பற்றிய விவரங்களைத் தெரிவிப்பதற்காக வைக்கப்படும் ஓரிரு பேனர்களில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோரின் படங்கள் மட்டும் இடம் பெற வேண்டும். கழகத்தின் இலட்சியங்களை விளக்கும் அவர்களின் பொன்மொழிகள் இடம்பெற வேண்டும். நிகழ்ச்சி பற்றிய விவரங்களுடன், தேதியைக் குறிப்பிடும் போது நான் முன்பே விடுத்த வேண்டுகோள்படி, வழக்கமான ஆங்கிலத் தேதியுடன் தலைவர் கலைஞர் அவர்கள் சட்டப்பூர்வமாக்கிய திருவள்ளுவராண்டு- தமிழ் மாதம்-தேதி ஆகியவற்றையும் மறவாமல் குறிப்பிட வேண்டுகிறேன்.
கழகத்தினர் அனைவரும் ஒரே குடும்பத்தினர் என உணர்த்தும் வகையில், நிகழ்ச்சி அறிவிப்பு பேனர்கள் மட்டுமே போதுமானது. ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பேனர்கள் வைப்பதால் தான் அருமையான விழாக்கள் கூட ஆடம்பரமானதாக ஆகிவிடுகின்றன. எனவே பேனர்களைத் தவிருங்கள். கழகத்தின் இரு வண்ணக் கொடியை அதிகம் பயன்படுத்துங்கள். காற்றில் அது அசைவதைப் பார்த்தபடியே வரும் போது, “வருக.. வருக..” என வரவேற்பது போலவே இருக்கும்.
கழகக் கொடியைக் காணும் போது இந்தப் பேரியக்கத்தின் தலைவர்களும் முன்னோடிகளும் நம் நினைவுக்கு வருவார்கள். நம்மை வழிநடத்தும் தலைவர் கலைஞர் இந்த இயக்கத்தைக் கட்டிக்காக்க பட்டபாடுகள் நம் கண் முன் பளிச்சிடும். ஆயிரமாயிரம் தொண்டர்களின் தியாகத்தால் உருவான இந்த இயக்கத்தின் கொடி எப்போதும் உயர்ந்து பட்டொளி வீசிப் பறக்கும் வகையில் இலட்சியப் பாதையில் நாம் நடைபோட வேண்டும் என்ற எண்ணம் நம் மனதில் திண்ணமாக உருவாகும்.
ஆடம்பர விளம்பரங்களைக் கைவிட்டு, இலட்சியத்தை உயர்த்திப் பிடிக்கும் போது பொதுமக்களின் பேராதரவு பெருகும். புதிய இளைஞர்கள் நம்முடன் அணிவகுத்து வருவார்கள். வலிமைமிக்க கழகம் புதுப்பொலிவு பெறும். உங்களில் ஒருவனாக மீண்டும் கோரிக்கை விடுக்கிறேன்.. ஆடம்பரப் பேனர்களைக் குறைத்து, அண்ணா கண்ட இருவண்ண இலட்சியக் கொடிகளை உயர்த்துங்கள்.
அன்புடன்,
மு.க.ஸ்டாலின்
பகிர்வதில் மகிழ்ச்சியுடன்,
எல்.பி.எப்.க.பெரியசாமி,
மண்டலத் தலைவர்,
அரசு போக்குவரத்துக் கழகத்
தொ.மு.ச. கோவை மண்டலம்.

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப் பார்!

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப்பார்!

இன்றிரவு ஓமநீரில் வேகவைத்த‍ அண்ணாசிப் பழத்தை, நாளை காலை கரைத்து குடித்துப் பார்!
அண்ணாசி பழம் மற்றும் ஓமம் இவற்றில் இருக்கும் மருத்துவ குணங்கள் அளப்பறியது. நீங்கள் செய்ய
வேண்டிய தெல்லாம் இதுதான்
இன்றிரவு தூங்கப்போவதற்குமுன், 2 ஸ்பூன் ஓமப் பொடியையும் 4 அல்ல‍து 5 அண்ணாசி பழத்துண்டு களையும் ஒரு பாத்திரத்தில் போட்டு அதை எறியும் ஸ்டவ்வில் வைத்து நன்றாக கொதிக்க‍ வைக்க‍ வேண்டும். நாளை காலை 5 மணிக்கு எழுந்து பல் துலக்கிய பிறகு இந்த ஓமம் கலந்த கொதிநீரில் வெந்த அண்ணாசி பழத்தை அப் ப‍டியே வைத்து நன்றாக கையாலோ அல்ல‍து க‌ரண்டியா லோ நன்றாக கரைக்க‍வேண்டும். கரைத்த பிறகு அந்த கரைசலை அப்ப‍டியே எடுத்து குடித்து விட வேண்டும். இவ் வாறானமுறையில் தொடர்ந்து 15நாட்கள் செய்து வந்தால், உங்கள் அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுக்கும் தொப்பை காணாம ல் போகும். மருத்துவரின் ஆலோசனை பெற்று குடித்து வரவும்.

ரயில் ஓட்டுநருக்கும் ஆசிரியருக்கும் என்ன வேறுபாடு?

ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில்
டாக்டர். எஸ். ராதாகிருஷ்ணன், மாணவரிடையே பேசினார்.
ஒரு மாணவர் எழுந்து, அவரிடம்
"Sir, what is the difference between a
rail engine driver and a teacher?"
என்று கேட்டார்.
இந்த ஒப்பீடு பலருக்கும்
தொடர்பில்லாதது போல் தோன்றியது.
டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்
என்ன பதில் சொல்லப் போகிறார்
என்று எல்லோரும் காத்திருந்தனர்.
அவர் சொன்னார்.
"The Driver minds the train and the
teacher trains the mind"
அங்கிருந்தவர்கள் அனைவரும்
அசந்து விட்டனர்.
நன்றி.🙏

ஸ்ரீபைரவேஸ்வரர்............

பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர மூர்த்தியான ஸ்ரீபைரவேஸ்வரர் கோயில்
 ஸ்தல வரலாறு....
கும்பகோணம் அருகே சோழபுரம் உள்ளது. பழைய பெயர் பைரவபுரம் .இங்கு ஸ்ரீபைரவேஸ்வரர் என்ற பெயரைத் தாங்கிய சிவலிங்கத் திருமேனியைத் தரிசனம் செய்வதால் மிகுந்த பலன் கிடைக்கும். பைரவ மூர்த்திகளுக்கெல்லாம் ஈஸ்வர
மூர்த்தியாக பைரவேஸ்வரராக ஈஸ்வரன் தோன்றிய தலம்.
இத்திரு தலத்தில் நிறைய மகான்கள் சித்தி அடைந்துள்ளனர், இக்கோவிலில் அஷ்ட பைரவர் சிலைகள் உள்ளது ,சிவனை வழிபடுவது அஷ்ட நாக சிலை உள்ளது.
இங்கு 64 பீடங்கள் உள்ளது இந்த 64 பீடங்களிலும் 64 பைரவர்களும் அமர்ந்து பூஜையும் , தியானமும் செய்வதாக நம்ப படுகிறது ,
ராமாயண காலத்தில் ராவணன் கடுமையாக தவம் இருந்து நவகிரகங்களை கட்டி போட்டான், நவகிரகங்களில் சக்தி வாய்ந்த சனி பகவானும் செய்வதறியாமல் திகைத்தார் .
இத்தல ஸ்ரீ பைரவேஷ்வரிடம் தன் கடமையை செய்ய உதவி செய்யுமாறு வேண்டினார்,
இத்தலத்தில் அவருக்கு குளிகன் ( மாந்தி ) என்னும் மகன் பிறந்தார் .குளிகன் பிறந்த அந்த நேரமே ராவணன் அழிவு காலம் என்று ஸ்ரீ ராமர் போர் தொடுத்து ராவணனை அழித்தார் என்று தல புராணம் சொல்கிறது 
பாடகச்சேரி இராமலிங்க சுவாமிகள் இங்கு பைரவ யோக முறையில் தவம்/தியானம் செய்துள்ளார்.
ஆதி சங்கரர் தவத்தினால்(தியானத்தினால்) ஏற்பட்ட தலை பாரத்தையும்,உடல் வெப்பத்தையும் தணிக்க இங்கே வந்து தவம் செய்தார்
பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பைரவ மூர்த்திகளுக்கும் ஆதி மூலம் இந்த சோழபுரம் ஸ்ரீபைரவேஸ்வரர் தான். 64 பைரவ வடிவங்களும் தோன்றிய தலம். பிரபஞ்சத்தின் அனைத்து பைரவ உபாச சித்தர்களும் ரிஷிகளும், யோகிகளும் அஷ்டமி திதி தினங்களில் கண்களுக்கு தெரியாத வடிவங்களில் இங்கு வந்து பூஜித்து செல்கிறார்கள்.
இந்த பைரவரை வழிபட்டால், பித்ரு தோசம், பித்ரு சாபங்களில் பல வருடங்கள் பாதிக்கப்பட்டு எந்த முன்னேற்றமும் இல்லாமலிருப்பவர்களும், பில்லி, சூன்யம்,செய்வினை,ஏவல்,மாந்திரீகம் போன்ற பிரச்சினைகளும் அகலும்.
தேய்பிறை, அஷ்டமியில் மாலை நேரம் அபிஷேக அலங்காரங்களுடன் வழிபாடு நடத்தப்படுகிறது.

சுமங்கலி பூஜை எப்படி செய்வது?

சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவனின் நீண்ட ஆயுள் ஆரோக்யத்திர்க்காகவும், இல்லத்தின் அமைதி சந்தோஷத்திர்க்காகவும் அவசியம் சுமங்கலி பூஜை செய்யவேண்டும்.
மிகுந்த செலவுகள் செய்து தான் இந்த பூஜையை செய்ய வேண்டுமென்பதுக் கிடையாது, அவரவர் வசதிக்கு ஏற்பார் போல் செய்யலாம்.
சுமங்கலி பூஜை எப்படி செய்வது?
இல்லத்தை தூய்மைப்படுத்தி ,மாக்கோலமிட்டு ,மாவிலை தோரணம் கட்டி அழகுபடுத்த வேண்டும்.சுவாமி படங்களுக்கு பூ,தூபம் போட்டு விளக்கேற்ற வேண்டும்.
சுமங்கலி பூஜைக்கு 1,3,5,7,9 என்ற எண்ணிக்கையில் அவரவர் வசதிக்கு ஏற்றவகையில் பெண்களை அழைக்கலாம் .
நம் வீட்டிற்கு வரும் பெண்களை நல்ல முறையில் அழைக்க வேண்டும் .
தேவியின் வடிவங்கள் அவர்கள் என எண்ணி ,வரவேற்க வேண்டும். தாம்பாள தட்டில் நிற்க வைத்து இல்லத்தலைவி பாத பூஜை செய்யவேண்டும் .
சந்தனம் ,குங்குமம்,மலர்கள் கொடுத்து பெண்களை மனையில் மரியாதையுடன் அமர செய்ய வேண்டும்.ஒவ்வொரு பெண்ணையும் பராசக்தியாக கருதி ,தீபாராதனை செய்து வழிபட வேண்டும்.
தனித்தனியாக நமஸ்காரம் செய்து ,அவர்களுக்கு புடவை ,ரவிக்கை ,மஞ்சள் ,குங்கும சிமிழ் ,கண்ணாடி ,வெற்றிலை ,பாக்கு ,பூ ,பழம் ,தட்சனை கொடுக்க வேண்டும். இதில் எவை உங்களால் முடியுமோ அதை வாங்கி கொடுக்கலாம் .ஆனால் தாம்பூலம் அவசியம் கொடுக்க வேண்டும் .
பூஜைக்கு வரும் பெண்களுக்கு உணவு கொடுக்க வேண்டும்.வந்த பெண்கள் சாப்பிட்ட பிறகே ,இல்லத்தலைவி சாப்பிட வேண்டும் .மீண்டும் ஒரு முறை, வந்த அனைத்து பெண்களையும் வணங்கி விட்டு வழியனுப்ப வேண்டும்.
இந்த பூஜை செய்ய உகந்த நாட்கள் திங்கள் ,புதன்,வெள்ளி .
இந்த தினங்களில் ராகு காலம் இல்லாத எந்த நேரமும் நல்ல நேரமே .இந்த பூஜை செய்யப்படும் வீட்டில் வறுமை ,நோய் ,துன்பம்,தோஷம் நீங்கி கணவனுடன் ஆயுள் ஆரோக்யத்தொடு வளமோடு வாழ்வார்கள் என்பது ஐதீகம்.
அதுமட்டுமல்ல, இந்த ஐதீகத்தில் பக்தியும் இருக்கிறது, அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களுடன் நல்ல உறவு வைத்துக் கொள்ள வழியும் வகுக்கிறது .

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான நம் நாட்டுமருந்து.

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து

சிகரெட்டினால் பாதிக்க‍ப்பட்ட‍ நுரையீரலை சுத்த‍ம் செய்யும் அற்புதமான ஆரோக்கியமான  நம் நாட்டுமருந்து
புகைப்பிடித்தல் என்பது மோசமான பழக்கம் என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அக்கெட்ட
பழக்கத்தைக் கைவிடமுடியாமல் ஏராளமானோர் அவஸ்தைப்படுகின்ற னர். மேலும் இன்றைய மன அழுத்தமிக்க வாழ்க்கை முறையினால், மனதில் உள்ள பாரத்தைக் குறைப்பத ற்காகவே பலர் புகைப்பிடிக்கின்றனர்.
இப்படி புகைப்பிடிப்பதால், நுரையீரல் மிகவும் மோச மாக பாதிக்கப்பட்டு, அதனால் நுரையீரல்அழற்சி, காச நோய் போன்றவற்றால் நாள்கணக்கில் அவஸ்தைப்படக்கூடும். புகைப் பிடித்தால் மட்டும் தான் நுரையீரலில் பிரச்சனைகள் வரும் என்பதில்லை. அதை சுவாசித்தாலும் தான் பாதிப்பு ஏற்படும்.
ஆகவே சிகரெட் புகையினால் பாதிக்கப்பட்ட நுரையீர லை சுத்தம்செய்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள ஓர் அற்புதமான நாட்டு மருந்து ஒன்று உள்ளது.
மஞ்சள் தூள் – 2 டேபிள் ஸ்பூன் 
பூண்டு – 400 கிராம் (பொடியாக நறுக்கியது)
இஞ்சி – 1 சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது)
நாட்டுச்சர்க்கரை – 400 கிராம்
தண்ணீர் – 1 லிட்டர்
இந்த மருந்தில் சேர்க்கப்படும் மஞ்சளில் நோயெதிர்ப்பு அழற்சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் தன்மைகள் உள்ளது. மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் நோயெதிர்ப்பு மண்டல த்தின் வலிமையை நேரடியாக அதிகரிக்கும். மேலும் ஆய்வுக ளும் மஞ்சள் நுரையீரலில் உள்ள பிரச்சனைகளைக் குணப்படுத்துவதாக கூறுகின்றன.
பூண்டில் உள்ள அல்லின், உடலினுள் செல்லும்போது அல்லிசினாக மாறி, பூஞ்சை மற்றும் பாக்டீரியல்தொற்றுக்களை எதிர்த்து ப் போராடி, நுரையீரலுக்கு மட்டுமின்றி ஒட்டு மொத்த உடலுக்கும் ஓர்நல்ல பாதுகாப்பை வழங்கும்.
இஞ்சியில் உள்ள ஜின்ஜெரால் என்னும் உட்பொருள், நுரையீரலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்தழித்து, நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். மேலும் இஞ்சி, நுரையீரலில் உள்ள சளியை முறித்து உடலில் இருந்து வெளியேற்றும்.
ஒருபாத்திரத்தில் நாட்டுசர்க்கரையை சேர்த்து அடுப்பில் வைத்து, அத்துடன் இஞ்சி பூண்டு மஞ்சள் மற்றும் நீர் ஆகியவ ற்றைசேர்த்து, குறைவான தீயில் கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கண்ணாடி பாட்டிலில் ஊற்றி விட்டு, ஃப்ரிட்ஜில் வைத்து பாதுகாக்கவும்.
இந்த கலவையை தினமும் இருவேளை உட்கொள்ள வேண்டும். அதில் அதிகாலையில் எழுந்ததும் காலை உணவிற்கு முன் வெறும் வயிற்றில் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும். பின் இரவு உணவு உண்பதற்கு 2 மணிநேரத்திற்கு முன் 2 டேபிள் ஸ்பூன் சாப்பிட வேண்டும்.

இந்த நாட்டு மருந்தை உட்கொண்டு வரும்போது, தினமும் தவறாமல் உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். இதனால் உடலில் இருந்து டாக்ஸின் களும் வெளியேற்றப்படும்.*

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...