Sunday, September 3, 2017

காலங்கள் கடந்தாலும் காயங்கள் ஆறவில்லை-



எத்தனையோ அப்பாவிகள் கருணாநிதியின் அரசி யல் வாழ்க்கையில் திமுகவின் அதிகார வெறிக்கு பலியாகி இருந்தாலும் அண்ணாமலைபல்கலை
கழக மாணவர் உதயகுமார் படுகொலையை நினை த்தால் இப்படியும் ஒரு அரசியல்வாதி தமிழகத்தில் இருந்துள்ளார் என்று வருங்காலங்களில் வரலாறு சொல்லிக்கொண்டே இருக்கும்.
1971 ம் ஆண்டு ஜூலை மாதம் சிதம்பரம் அண்ணா மலைப் பல்கலைக் கழகம் சார்பாக அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்கான. அறிவிப்பு வெளியானதும் மாணவர்க ளில் ஒரு பிரிவினர் எதிர்ப்பு தெரிவிக்கத் தொடங்கி னர். ஏனென்றால் கல்லூரிப் படிப்பைக்கூடத் தொடா த கருணாநிதிக்கு எதற்காக டாக்டர் பட்டம் என்பது தான் பல்கலைகழக மாணவர்களில் இருந்த மாண வர் காங்கிரஸ் அமைப்பி ன் கோஷம்
.
இதற்காக அந்த மாணவர்கள் செய்த ஒரு செயல் தான் அப்போதைய முதல்வர் கருணாநிதியை ஆத் திரமூ ட்டியது.அந்த பசங்க கழுதையின் கழுத் தில் டாக்டர் என்று எழுதி தொங்கவிட்டு பல்கலைகழக வளாகத்தில் கழுதையை நடமாட விட்டும் காம்பவு ண்டு சுவற்றில் படம் வரைந்தும் கருணாநிதியை கேவலப்படுத்தினார்கள்.
மாணவர்களின் எதிர்ப்பினை மீறி, போலீஸ் பாது கா ப்புடன் பட்ட மளிப்பு விழா காலையில் நடந்து முடிந் த து. கருணாநிதியும் டாக்டர் கருணாநிதியாக புறப் பட்டு விட் டார். போகும் பொழுது காவல்துறை அதி காரிகளிடம் தன்னை கழுதையாக்கிய மாணவர்க ளை கவனித்து அனுப்புங் கள் என்று சொல்லியிரு க்கிறார்.
அதற்கு பிறகு சாயங்காலம் மாணவர்கள் விடுதிக் குள் நுழைந்த போலீஸ் அறைகளில் தங்கியிருந்த மாணவர்களைத் ஊடுகட்டி அடித்தார்கள். பல பேருக் கு மண்டை உடைந்து இருந்தது.. மாணவர்களுக்கு போலீஸ் அடிக்கும் காரணம் முதலில் புரியாவிட் டாலும் ஏண்டா முதல்வரையே கழுதை என்று எழுதுவீர்களா என்று அடியோடு விழுந்த வார்த்தை கள் ஆஹா இது கருணா நிதியின் கைங்கரியம் தான் என்று புரிந்து கொண்டார்கள்.
அதை விட பெரிய கொடுமையை மறுநாள் பல்கலை கழக குளத்தில் மிதந்து கிடந்த சக மாணவன் உதய குமாரின் பிணத்தை பார்த்த மாணவர்கள்; உறைந்து நின்றார்கள்.போலீஸ் தான் உதயகுமாரை அடித்து
குளத்தில் போட்டார்கள் என்று மாணவர்கள் போராட
ஆரம்பித்தார்கள்.
கொடுமை என்னவென்றால் உதயகுமாரின் அப்பா பெருமாள் சாமியோ இது என் மகன் இல்லை என்று
கூறி விட்டார்.இப்படிக்கும் அவரும் ஒரு வாத்தியார்.
பெற்ற பிள்ளையையே என் மகன் அல்ல என்று ஒரு தந்தை கூறுகிறார் என்றால் போலீஸ் அவரை என்ன பாடு படுத்தி இருக்கும்.இதனால் வெகுண்டெழுந்த மாணவ ர்கள் வகுப்புகளை புறக்கணித்து கால வரை யற்ற போராட்டம் நடத்த ஆரம்பித்தார்கள்..
போலீசோ, இறந்து போனது உதயகுமாரே இல்லை என்று திட்டவட்டமாகச் சொன்னது. இறந்து போன மாணவன் உதயகுமார் இல்லை என்றால் வேறு யார்? உதயகுமார் எங்கே? பட்டமளிப்பு விழா காலை யில் முடிந்தபிறகும் கருணாநிதியின் பாதுகாப்புக்கு வந்த போலீஸ்மாலை வரை இருந்தது ஏன்? திடீரெ ன போலீ ஸ் மாணவர்கள் விடுதிக்குள் எதற்க்காக நுழைந்தார்கள் என்று விசாரணை கமிஷன் கேட்டார்கள் மாணவர்கள்.
எல்லாவற்றுக்கும் விடை அளிக்கும் வகையில் தமி ழ்நாடு அரசு சார்பில் என்எஸ்.ராமசாமி என்கிற நீதி பதி தலைமையில்விசாரணைக் கமிஷன் அமைத்து நீதி விசாரணை நடத்த உத்தரவி டப்பட்டது. கடைசி யில் விசாரணையின் முடிவில் குளத்தில் இறந்து கிடந்தது உதயகுமார் தான் என்றும் அந்த மரணத்து க்கும் போலீ ஸ்தாக்குதலுக்கும் தொடர்பில்லை என்று கூறி கருணாநிதிக்கு பரிசுத்த சர்டிபிகேட் கொடுத்தது விசாரணை அறிக்கை.
இது நடந்து முடிந்து ஏழு வருடங்களுக்கு பிறகு பத்தி ரிக்கைகளில் ஒரு செய்தி வருகிறது.அதில் கருணா நிதி ஆட்சியில் கொல்லப்பட்ட உதயகுமாரின் தம்பி அப்போதைய முதல்வர் எம்ஜியாருக்கு உதவி கேட்டு ஒரு லட்டர் அனுப்பியிருந்தார்.அந்த லெட்டர் அப்பொழுது பத்திரிக்கைகளிலும் வந்ததாம் ..
அந்த லெட்டரில் உதயகுமாரின் தம்பி என்ன எழுதி யி ருந்தார் என்றால்...
ஐயா,
கொலையுண்ட உதயகுமாரின் (அண்ணாமலை ப்பல்க லைக் கழகம்) தம்பி கே.பி.மனோகரன்எழுதிக் கொண் டது.
எங்கள் குடும்பம் முன்னாள் முதல்வர் கருணாநிதி
திஅரசாங்கத்தால் பயங்கரமாக மிரட்டப்பட்டதும், சீரழிக்கப்பட்டதும் பெற்ற மகனை இல்லை என சொல்லச் செய்து பழியை ஏற்றுக் கொண்ட எங்கள் குடும்பத் தைப்பற்றி தாங்கள் அறிந்ததே.
இந்த சம்பவத்திற்காக எங்களுக்கு முன்னாள் (கருணா நிதி)அரசாங்கம் 5 ஏக்கர் நிலம் தருவதாக வாக்களித்த னர்.வீடு கொடுப்பதாக கூறினர். வீட்டி லேயே கோர்ட் சீன் உருவாக்கி ஜட்ஜ் என்ன கேள்வி கேட்பார்? என்ன பதில் சொல்ல வேண்டுமென என் தந்தையை பயமுறுத்தி சொல்ல செய்தனர்.
Image may contain: 1 person, sitting and indoor
எனக்கு அரசாங்க உத்தியோகம் வாங்கிக் கொடுப் பதாக க் கூறினர். மற்றும் பல வசதிகள் செய்து கொடுப்பதாக கூறினர். ஆனால் நாங்கள் இதுவதை எந்தவிதஉதவி யும் பெறவில்லை. என்னுடைய சகோதரனுடைய பிணத்தைக் கூட காட்டாமல் இறந்தவன் யாரோ என்ற சூழ்நிலையை உருவாக்கிப் புதைத்தனர்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியை நான் காணச் சென்று குறைகளை கூறிய போது:தேவைப்பட்டால்
ஆயிரமோ இரண்டாயிரமோ வாங்கிக் கொண்டு செல் என்று அதிகார தோரணையில் கூறியது இன் னும் என் நெஞ்சைவிட்டு அகலவில்லை.
நான் பி.யு.சி.வரை படித்திருக்கிறேன். எனக்கு அரசா ங் கத்தில் உத்தியோகமோ அல்லது பிரைவேட் கம் பெனி யில் உத்தியோகமோ எனக்கு வாங்கித்தரும் படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.எங்கள் குடும்பத்தினர் தங்களுக்காகவும், தங்கள் அரசாங்கத் திற்காகவும் என்றென்றும் கடமை ஆற்ற காத்திருக் கின்றோம்.
தாங்களே எங்கள் இதய தெய்வமாக இருந்து எனக்கு ம் என் குடும்பத்தினருக்கும் வழி காட்டுவீர்கள் என்று
உறுதியாக நம்புகிறேன்.
இப்படிக்கு..
கே.பி.மனோகரன்.
இப்படிதாங்க கருணாநிதியாலும் திமுகவாலும் அழி ந்து போன தமிழர்கள் எத்தனை பேர் தெரியுமா...
காலங்கள் கடந்தாலும் திமுகவினால் தமிழக மக்க ளுக்கு உண்டான காயங்கள் இன்னும் ஆறவில் லை
இவர்களுக்கு காலம் தான் முடிவு கட்ட வேண்டும்.
காத்திருப்போம்..

ஆவணி ஞாயிறு விரதம் இருப்பது ஏன்?



திருமணமாகாத பெண்கள் நல்ல மணமகன் வேண்டியும், திருமணமானவர்கள் சுமங்கலி பாக்கியும் வேண்டியும் நோற்பது ஆவணி ஞாயிறுவிரதம்.இந்நாளில் நாகர் சிலைக்கு பாலபிஷேகம் செய்து வழிபட வேண்டும். புற்றுக்கு பால் ஊற்றலாம்.
அனந்தன், வாசுகி,குஷகாயன், அப்ஜன், மகரி அப்ஜன், கங்குபாலன்,கார்கோடன், குளிஜன், பத்மன் என்னும் ஒன்பது நாகங்கள் தெய்வத்தன்மை மிகுந்தவை. இந்த நாகங்களின் பெயர்களைச் சொல்லி, நமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தரும்படி இந்த நாளில் வேண்டிக்கொள்ளலாம்.
ஆண்கள் தங்களுக்கு வேலை கிடைப்பதில் தடை, எடுத்த செயல்கள் முடிவதில் உள்ள தடை நீங்க, இந்நாளில் விரதம் மேற்கொள்வர்.
பாம்புக்கிரகங்களான கேது, ராகுவின் அதிபதிகளான விநாயகர், துர்க்கையை மனதில் நினைத்து,செயல்பாடுகளில் உள்ள தடையை நீக்க பிரார்த்திக்க வேண்டும். அன்று பகலில் பால், பழமும், இரவில் எளிய உணவும் சாப்பிடலாம்.
நாகர்கோவில் நாகராஜா கோவில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகிலுள்ள நயினார்கோவில் மற்றும் கொழுவூர், நாகப்பட்டினம், கும்பகோணம் கும்பேஸ்வரர் திருநாகேஸ்வரம் ஆகிய ஊர்களிலுள்ள நாகநாதர் கோயில்களுக்குச் சென்று சுவாமியை வணங்கி வரலாம்.
அரசமரத்தடியிலுள்ள நாகர் சிலைகளைத் தரிசிக்கலாம்.
Image may contain: 1 person

பாட்டி வைத்தியம் !

1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்!
2. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.
3. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.
4. காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.
5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.
6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.
7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.
8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.
9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.
10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.
11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.
12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

Friday, September 1, 2017

கள்ளப்பணமெல்லாம் நல்ல பணமாகிவிட்டது.

1. பணமதிப்பிழப்பு நடவடிக்கையை யார் தீர்மானித்தது? ரகுராமன் ராஜன் பதவி விலக வைத்ததற்கு அதுதான் காரணமா?
2.கஷ்டப்பட்டு சம்பாதித்த தங்கள் பணத்தை எடுப்பதற்கு நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வரிசையில் காத்து நின்று இறந்து போனார்கள். அதற்கு யார் காரணம்? அவர்களுக்கு என்ன இழப்பீடு வழங்கப்பட்டது? இது தொடர்பாக காவல் நிலையத்தில் குற்றப்பத்திரிகை ஏதும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதா?
3. பூடான், நேபாள கூட்டுறவு வங்கிகளில் இருந்து கரன்ஸி நோட்டுகள் எடுக்கப்பட்ட பிறகு, மதிப்பிழப்பு செய்யப்பட்ட தொகையைத் தாண்டியும் பணம் வந்திருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. பண மோசடி வெற்றிகரமாக நடந்திருப்பதை இது காட்டவில்லையா?
4. மே.வங்காளத்தில் இன்னும் பிற பிரதேசங்களில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை அறிவிக்கப்படுவதற்கு கொஞ்சம் முன்பாக பிஜேபி கட்சியின் முக்கியஸ்தர்கள் பெரும் தொகையில் டெபாசிட் செய்துள்ளனர். சுதந்திர இந்தியாவின் மிகப் பெரும் ஊழல் இது. பிரதமரின் கருப்புப்பணத்திற்கு எதிரான போர் இதுதானா?
5. 2016 நவம்பர் 8ம் தேதி டிஜிட்டல் இந்தியா குறித்து பேசப்படவில்லை. ஆனால் பொருளாதாரம் ஸ்தம்பித்தவுடன், தங்களுக்கு தோதான சில தனியார் நிறுவனங்களிடம் அரசு உதவிக்கு போய் நின்றது. பே டி.எம் போன்ற நிறுவனங்களுக்கு பிரதம மந்திரியே விளம்பர மாடலானார். இதெல்லாம் தேசீய, சர்வதேசீய விளையாட்டு வீரர்களுக்கு லாபம் சம்பாதித்துக் கொடுக்கத்தானே?
6. பதினொரு லட்சம் கோடிக்கும் மேலே பொதுத்துறை வங்கிகளில் கடன் வாங்கி, திரும்பச் செலுத்தாத கார்ப்பரேட் முதலாளிகளுக்கு உதவுவதற்குத் தானே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? இந்த மோசமான விளைவுகளிலிருந்து வங்கிகளை காப்பாற்றவா இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது? மக்களின் பணத்தில் இருந்து பெறப்பட்ட இந்த பெரும் கடன்களை வசூலிக்கும் நடவடிக்கைகளைத்தானே அரசு எடுத்திருக்க வேண்டும்?
7. ஊழலை ஒழிக்க தொலைதூரம் செல்ல வேண்டிய நிலைமையில் அறிமுகப்படுத்தப்பட்ட 2000 ருபாயானது 1000 ருபாயை விட அதிக மதிப்பு கொண்டதாயிருக்கிறது. ஊழல் செய்யும் பெரும்பணக்கார்களுக்கு உதவும் இதைத்தானா பிரதமர் விரும்பினார்?
8. கள்ளப்பணத்தை ஒழிப்பேன் என பிரதமர் சொன்னது தவறு. பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் கள்ளப்பணமெல்லாம் நல்ல பணமாகிவிட்டது.
9. பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவீரவாத அமைப்புகளின் செயல்கள் தடுத்து நிறுத்தப்படும் எனச் சொல்லப்பட்டது. ஆனால் அதன் பின்னர் இறந்த இந்திய வீரர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகி இருக்கிறது.
10. முறை சாரா தொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. தேசத்தின் மூன்றில் இரண்டு பங்கு தொழிலாளர்களை வைத்திருக்கும் இந்த தொழில்கள் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பின்னர் நொறுங்கி விட்டன. வேலை வாய்ப்பும், வாழ்வாதாரங்களும் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இந்த அரசுதான் இதற்கு காரணம்.
11. இந்த மோசமான நடவடிக்கையால் கிராமப்புற பொருளாதாரம் சீர்லகுலைந்து போயிருக்கிறது. விவசாயிகள் பெரும் அவலங்களை சந்திக்கின்றனர். அவர்களது போராட்டங்களை பிஜேபி அரசின் காவல்துறை துப்பாக்கிச்சூடுகள் நடத்தி நசுக்குகின்றன.
12. புதிய ருபாய் நோட்டுகள் அச்சடிக்க 8000 கோடியும், ஏ.டி.எம் மிஷன்களை அதற்கேற்ப தகவமைக்க 35000 கோடியும், தேசத்தின் பொருளாதார இழப்பாக 1,50,000 கோடியும் என மிகப்பெரும் சுமையை மக்கள் தலையில் கட்டியது ஏன்?
13. பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்காக பிரதமரை மகிமைப்படுத்த செய்யப்பட்ட விளம்பரங்களுக்காக மக்கள் ஒழுங்காக கட்டிய வரிப்பணத்தில் இருந்து எவ்வளவு செலவு செய்யபட்டது?
14. இந்தப் பேரழிவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுத்து இந்த அரசு தண்டிக்க வேண்டும்.

ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் பெங்களூரு பெண் தாயின் இறப்பு சான்றிதழ் பெறுவதற்காக சென்னை சென்று வந்தார்...

மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று கூறும் பெங்களூருவை சேர்ந்த மஞ்சுளா என்ற அம்ருதா என்பவர் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், தான் ஜெயலலிதா–சோபன்பாபுவுக்கு பிறந்தவள் என்பதை நிரூபிக்க தனக்கு டி.என்.ஏ. பரிசோதனை (மரபணு பரிசோதனை) நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் கூறி இருந்தார்.
இந்த நிலையில், மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் இறப்பு சான்றிதழை வாங்க பெங்களூருவில் இருந்து அந்த பெண் கடந்த மாதம்(ஆகஸ்டு) சென்னை சென்று வந்ததும் தெரியவந்து உள்ளது.
அதாவது கடந்த மாதம்(ஆகஸ்டு) 21–ந் தேதி சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகைக்கு சென்று, அங்குள்ள அரசு அதிகாரிகளிடம் தான் மறைந்த தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் மகள் என்று மஞ்சுளா கூறியுள்ளார். மேலும் தனது தாய் ஜெயலலிதா, தந்தை சோபன்பாபுவின் இறப்பு சான்றிதழ்களை தனக்கு வழங்கும்படி அதிகாரிகளிடம் மஞ்சுளா கேட்டுள்ளார்.
அப்போது அவர்களது இறப்பு சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளும்படி மஞ்சுளாவிடம் அதிகாரிகள் கூறியதாக தெரிகிறது. அதன்படி, ஜெயலலிதா, சோபன்பாபு ஆகியோரின் இறப்பு சான்றிதழ்களை ஆன்லைன் மூலம் மஞ்சுளா பதிவிறக்கம் செய்து வைத்திருப்பதாகவும், அதே நேரத்தில் முன்பு ஜெயலலிதாவை சென்னையில் வைத்து சந்தித்தபோது, அவர் வாங்கி கொடுத்த 2 தங்க நகைகளுக்கான ரசீதுகளையும் மஞ்சுளா பாதுகாத்து வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இறைவனுக்கு முடி காணிக்கை... ஏன், எதற்கு?

இறைவனிடம் நாம் எத்தனையோ காணிக்கைகளை செலுத்துகிறோம். காணிக்கைகளில் மிகச் சிறந்த காணிக்கையாகக் கருதப்படுவது முடி காணிக்கை செலுத்துவதுதான். முடி காணிக்கை செலுத்துவதால், நம்முடைய அகந்தை அகன்று, அடக்கம் பிறக்கிறது. தங்களுடைய இஷ்ட தெய்வத்துக்கு இப்படி காணிக்கை செலுத்துவதால், தங்கள் மனதில் உள்ள பாரமெல்லாம் இறங்கிவிடுவதாக பக்தர்கள் மனப்பூர்வமாக நம்புகின்றனர். முதன்முதலில் முடி காணிக்கை செலுத்தியது யார் என்பதையும், அதன் பின்னணியில் இருக்கும் அறிவியல் உண்மைகளைப் பற்றியும் பார்ப்போமா?

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஏயர்கோன் கலிக்காமர் என்பவர் சோழ தேசத்தின் தளபதியாகப் பணிபுரிந்து வந்தார். அதே பகுதியில் மானக்கஞ்சாறர் என்னும் சிவ பக்தரும் வாழ்ந்து வந்தார். அவருடைய மகளைத் திருமணம் செய்ய விரும்பினார் ஏயர்கோன் கலிக்காமர். திருமணம் நிச்சயிக்கப்பட்டு மணநாளும் வந்தது.
அன்று மானக்கஞ்சாறர் வீட்டுக்கு ஒரு சிவனடியார் வந்தார். மானக்கஞ்சாறரின் மகளுக்கு திருமணம் நடக்க இருப்பதை அறிந்து கொண்டார். மானக்கஞ்சாறர், மணப்பெண்ணாகிய தன் மகளை சிவனடியாரின் காலில் விழுந்து ஆசிபெறுமாறு கேட்டுக்கொண்டார்.
மணப்பெண்ணும் சிவனடியார் காலில் விழுந்து ஆசி பெற்றார். அப்போது அப்பெண்ணின் நீண்ட கூந்தலை நோட்டமிட்ட சிவனடியார் "பஞ்சவடி செய்ய எனக்கு இந்த கூந்தல் தேவைப்படுகிறது கிடைக்குமா?" என்று கேட்டார். அதீத சிவ பக்தரான மானக்கஞ்சாறரும் மணநாள் என்றும் பாராமல் மகளின் சம்மதத்துடன் அறுத்துக் கொடுத்துவிட்டார். அந்த நேரம் சரியாக , மணமகனும் அங்கு வந்தார். கூந்தல் இல்லாமல் குனிந்து நிற்கும் பெண்ணைக் கண்டார். சிவனடியாருக்காகவும் பெற்றோரின் வார்த்தைக்காகவும் பெண்கள் தங்கள் அழகின் அடையாளமாக நினைக்கும் கூந்தலையே தியாகம் செய்தவள். இவளைவிட சிறந்த பெண் எனக்கு எங்கு சென்றாலும் கிடைக்க வாய்ப்பில்லை' என்று மகிச்சியுடன் கூறினார் . திருமணம் சிறப்பாக முடிந்தது. இதில் இருந்துதான் முடியைக் காணிக்கையாக செலுத்தும் பழக்கம் உருவானதாகச் சொல்லப்படுகிறது.
குழந்தைகள் முடி காணிக்கை செலுத்துவது எதற்காக?
இந்தப் பிறப்பில் புதிய வாழ்க்கையைத் தொடங்கும் குழந்தை, முன் ஜென்மத்தில் இருந்த பந்தங்களின் தொடர்பைத் துண்டிக்கவே முடி காணிக்கை செலுத்தப்படுகிறது. குழந்தைக்கு முதன்முறையாக மொட்டை போடுவது `சூடாகர்ம சமஸ்காரம்’ என்று சாஸ்திரங்கள் சொல்கின்றன.
குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆன பின்பு இந்தச் சடங்கை செய்ய வேண்டும். பிறகு மூன்று வயதிலோ ஐந்து வயதிலோ செலுத்தலாம். இரட்டைப் படை வயதில் செய்யக்கூடாது. மொட்டை போட்டவுடன் குழந்தையின் தலையில் குழந்தையின் தந்தை சந்தனம் பூச வேண்டும்.
இதற்குப் பின்னால் சொல்லப்படும் அறிவியல் காரணங்கள்:
பத்து மாதம் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தையானது கழிவுகளில் உழன்றிருக்கும். இதன் விளைவாக குழந்தைகளுக்கு நோய்கள் வர வாய்ப்புள்ளது. இதில் இருந்து பிள்ளைகளைக் காக்கவே குழந்தைகளுக்கு முடி காணிக்கை செலுத்துகிறோம். இதனால் முடியின் வேர்க்கால்களின் வழியாகக் கழிவுகள் வெளியேறிவிடும். இதனால்தான் குழந்தை பிறந்த சில மாதங்களில் குலதெய்வ கோயில்களில் முடி காணிக்கை செலுத்துமாறு நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். குழந்தைகளுக்கு மொட்டை போடுவது குழந்தைகளின் ஆரோக்கியத்தை காப்பதற்காகவே.
தலைமுடி என்பது பெருமை மற்றும் ஆணவத்தைக் குறிக்கும் ஒன்றாகும். மொட்டை அடிப்பதன் மூலம், தான் என்னும் கர்வத்தை இழந்து கடவுளுக்கு அருகில் செல்கிறோம். இது கடவுளிடம் நமக்கு இருக்கும் பணிவை வெளிப்படுத்துவதாகும். மேலும் ஆணவமும், எதிர்மறையான எண்ணங்களும் இல்லாமல், கடவுளை அடையக் கூடிய முயற்சியாகும். கடவுளுக்கு முன் எதுவுமே பெரிதல்ல. இது நமக்கு ஒரு ஞான அறிவைத் தருகிறது. இதனால்தான் முடி காணிக்கை செலுத்துவதை ஒரு முக்கிய சடங்காக நாம் பின்பற்றுகிறோம்.

குரு_பெயர்ச்சியும்_பரிகாரங்களும்...!!!

குரு பகவான் ஒரு இராசி யிலிருந்தும் மற்றொரு ராசிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மாறுவார்
தற்போது குரு பகவான ்கன்னி ராசி யிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார் .
வாக்கியப் பஞ்சாங்கப்படி செப்டம்பர் இரண்டாம் தேதி பெயர்ச்சி ஆகிறார் . , திருக்கணிதப ்பஞ்சாங்கப்படி செப்டம்பர் பதினொன்றாம் தேதி பெயர்ச்சி ஆகிறார்.
தற்போது குருபெயர்ச்சி வரவிருப்பதால் பலரும் குருபெயர்ச்சி பரிகார பூஜைகள் செய்வதில் ஆர்வம் காட்டிவருகி்ன்றனர். பெரும்பாலான ஊடகங்களும் சில ஜோதிட ர்களும் இதை தங்கள் வணிக நோக்கத்திற்காக இதை பயன்படுத்தியே வருகிறார்கள்.
குரு பக்தி' பற்றி மிகவும் உயர்வாக சொல்லப் பட்டுள்ளது. குரு என்ன சொல்கிறாரோ, அதன்படி செய்ய வேண்டியது சீடனின் கடமை. குரு வாக்குக்கு மறுவாக்கு கிடையாது. அப்படியானால், குரு எதையெல்லாம் செய்யச் சொல்கிறாரோ, அதையெல்லாம் சீடன் அப்படியே செய்யத்தான் வேண்டுமா? ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில், 'அப்படி செய்ய மாட்டேன' என்று சீடன் சொல்லலாமா? இதற்கு யக்ஞவல்கியர் என்ற மகானின் கதையைச் கேளுங்கள்.
யக்ஞவல்கியர் என்பவர், தன் மாமாவிடமே யஜுர் வேதம் பயின்று, கங்காதீரத்தில் வேத விசாரம், பிரசங்கம் எல்லாம் செய்து கொண்டிருந்தார். மக்கள் இவருடைய வேத சாஸ்திர ஞானத்தை வெகுவாகப் புகழ்ந்து, பாராட்டினர். தன் சீடன் தன்னை விட பிரபலமாவதைக் கண்ட மாமா (குரு) பொறாமைப்பட்டார். இருந்தாலும், ஒன்றும் செய்ய முடியவில்லை.
அந்த ஊர் அரசனுக்கு ஏதோ ஒரு நோய் கண்டது. அரண்மனை வைத்தியர்கள் எல்லாம் வைத்தியம் செய்தும் நோய் தீரவில்லை. யக்ஞவல்கியரின் மாமாதான் அரசனுக்குப் புரோகிதர். அதனால், அரசர், இவரை கூப்பிட்டு, 'உங்களுக்குத் தான் மந்திர சாஸ்திரங்கள் தெரியுமே! நீங்கள் இந்த நோய்க்கு ஏதாவது பரிகாரம் செய்யுங்கள்' என்றார்.
இவரும் தினமும் பரிகாரம் செய்து, ஜலத்தை மந்திரித்து ஒரு சீடனிடம் கொடுத்து அனுப்புவார். இப்படி, 364 சீடர்கள் மூலம் தினமும் தீர்த்தம் அனுப்பி னார்; அரசனும் அதைச் சாப்பிட் டான். ஆனாலும் நோய் தீரவில்லை. அரசனுக்கு இவர் மீது மதிப்பும், மந்திர தீர்த்தத்தின் மீது நம்பிக்கையும் குறைந்தது.
கடைசி நாள் யக்ஞவல்கியரை வைத்து மந்திர ஜெபம் செய்து, அந்த தீர்த்தத்தை அவரிடமே கொடுத்து, அரசனுக்கு அளிக்கும்படி சொன்னார்.
யக்ஞவல்கியரும் அதை அரசனிடம் கொடுக்கப் போனார். இதைக் கண்ட அரசனுக்கு கோபம் வந்தது. 'என்ன... தீர்த்தமா? இது வரை, 364 பேர் சாந்தி செய்து, கொடுத்த தீர்த்தத்தால் ஒரு பயனுமில்லை. நீங்கள் கொண்டு வந்து கொடுத்த தீர்த்தத்தால் மட்டும் என்ன பயன் ஏற்படும்? இதைக் கொண்டு போய் குதிரை லாயத்தில் கொட்டி விட்டு, வீட்டுக்குப் போம்...' என்றார்.
யக்ஞவல்கியருக்கு அவமானமாகி விட்டது. அப்படியே அந்த தீர்த்தத்தை குதிரை லாயத்தில் கொட்டி விட்டு, வீடு வந்து சேர்ந்தார்.இதைக் கேட்டதும், அரசன், தான் யக்ஞவல்கியரையும், தீர்த்தத்தையும் அவமதித்து விட்டதற்காக வருந்தினான். யக்ஞவல்கியரிடம் மந்திரிகளை அனுப்பி, மறுபடியும் சாந்தி தீர்த்தம் கொண்டு வரும்படி செய்தி அனுப்பினான்.
மந்திரிகளும், மாமா (குரு) விடம் விஷயத்தைக் கூறினர். மாமா, யக்ஞவல்கியரை கூப்பிட்டு, அரசனுடைய விருப்பத்தைத் தெரிவித்தார்.
'சாந்தி என்பது ஒரு முறை தான் செய்ய வேண்டும். அதே சாந்தியை மறுபடியும் செய்தால் பயன் தராது. அரசன், முதலில் கொடுத்த தீர்த்தத்தை உதாசீனம் செய்து விட்டான். அவனுக்கு அதிர்ஷ்டமில்லை. நோயால் அவதிப்பட வேண்டும் என்பது அவன் தலை எழுத்து. அதனால், நான் மீண்டும் சாந்தி செய்ய மாட்டேன்' என்றார் யக்ஞவல்கியர்.
இதைக் கேட்ட குருவுக்கு கோபம் வந்தது. 'நமக்குப் பணமும், பொருளும் கொடுத்து ஆதரிக்கும் அரசனுக்கு நீ உதவ மாட்டேன் என்கிறாய். அப்படியானால், என்னிடம் கற்ற வேதத்தைத் திருப்பி கொடுத்து விடு...' என்றார். யக்ஞவல்கியரும் இவரிடம் கற்ற வேதத்தை கக்கி விட்டார். அது தீப்பிழம்பாக வெளிவந்தது. வியாசருடைய ஆக்ஞையால் அதை சில பட்சிகள் சாப்பிட்டு விட்டன.
இந்த கதையிலிருந்து என்ன தெரிகிறது என்றால்... குரு, பொதுநலம், பிறர் நலம் கருதி தர்மத்தின்படி எதை செய்யச் சொல்கிறாரோ, அதை சீடன் செய்ய வேண்டும். அதே குரு, சுயநலத்துக்காகவும், பணம், பொருளுக்கு ஆசைப்பட்டு, தர்மத்துக்கு விரோதமாக ஒரு காரியத்தைச் செய்யச் சொன்னால், அது சாஸ்திர விரோதமாக இருந்தால், சீடன் அதை செய்ய வேண்டியதில்லை. சாஸ்திர சம்பந்தமில்லாத காரியத்தை சுயநலத்துக்காக குரு செய்யவோ, செய்யச் சொல்லவோ கூடாது; சீடன் அதை மறுக்கலாம்.
சரி விஷயத்திற்க்கு வருவோம். மக்கள் தங்கள் கஷ்டங்கள் நீங்க ஜோதிடர்களின் அறிவுரையின் பேரில் பரிகாரங்கள் செய்கின்றனர். அவையெல்லாம் சிலருக்கு பலனளிக்காமல் போகின்றதே? அது எதனால்?
1. வேதியர்கள், அந்தனர்கள், ஜோதிடர்கள் ஆகியவர்கள் குருவின் ஆதிக்கம் நிறைந்தவர்கள் ஆவர். அவர்கள் கூறும் பரிகாரங்களை அசிரத்தையுடன் செய்வோர்க்கு பலனளிப்பது இல்லை.
2. வேதியர்களும் அந்தனர்களும் ஜோதிடர்களும் சுயநலம் கருதி பொருள் சேர்க்கையை குறிக்கோளாக கொண்டு கூறும் பரிகாரங்கள் பலனளிப்பது இல்லை
இந்த இரண்டு நிலைகளையும் கடந்து ஒருவருக்கு பரிகாரங்கள், ப்ரார்த்தனைகள் பலனளிக்க ஜாதக அமைப்பு எப்படி இருக்கவேண்டும்?
1. ஜாதகத்தில் குரு அசுப தொடர்புகள் மற்றும் 6/8/12 தொடர்புகள் இன்றி திரிகோணஸ்தானங்களில் நிற்க வேண்டும். ஆட்சி உச்சம் பெறுவது சிறப்பு.
2. குரு நவாம்சத்தில் சுய நவாம்சத்தில் பலம்பெற்று நிற்பது.
3. குரு லக்னம், பூர்வ புண்ய ஸ்தானம், பாக்கியஸ்தானம் ஆகிய மூன்றில் இரண்டை பார்ப்பது.
4. குரு அதிக பாகைகள் பெற்று ஆதுமகாரகனாய் நிற்பது.
5. லக்னம், சந்திரன்,குரு, லக்னாதிபதி, பூர்வ புண்யாதிபதி,பாக்யாதிபதி ஆகியோர் குருவின் புசர்பூசம், விசாகம், பூரட்டாதி நக்ஷத்திர சாரத்தில் கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய நீர் ராசி மற்றும் மோக்ஷ திரிகோணங்களில் நிற்பது
6. முக்கியமாக ஜாதகருடைய லக்னாதிபதியும் குருவும் 1/1, 5/9, 3/11, ஆகிய சுபதொடர்பில் நிற்க வேண்டும்.
7. பிரச்சனை தரும் பாவங்களுக்கு கோசார குருவின் பார்வை பெறுவது.
இத்தகைய கோள்கள் அமைப்பை கொண்டிருந்தால்தான் பரிகாரத்தின் பலன் உங்களுக்கு கிடைக்கும்
அப்படி இல்லையேல் உங்களுக்கு பரிகாரம். சொன்ன ஜோதிடரின் நலனுக்காக அது அமையும்...
நம்பி ஏமாந்து விடாதீர்கள்.
வாழ்க வளமுடன்...!!!
வாழ்க வையகம்...!!!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...