Saturday, June 1, 2019

அ.தி.மு.க.,விற்கு அமைச்சர் பதவி கிடைக்காதது ஏன்?

சமீபத்திய லோக்சபா தேர்தலில், பா.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று, பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை பதவி ஏற்றது. இந்நிலையில், அ.தி.மு.க., சார்பாக, துணை முதல்வர் பன்னீர் செல்வம் மகன் ரவீந்திரநாத் அல்லது சீனியர் தலைவர் வைத்தியலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கிடைக்கும் என, செய்திகள் அடிபட்டன. சில, 'டிவி' சேனல்கள், ரவீந்திரநாத் நிச்சயம் அமைச்சராவார் என, செய்தி வெளியிட்டன. 

A.D.M.K,ADMK,அ.தி.மு.க,அண்ணா, திராவிட, முன்னேற்ற, கழகம்,பா.ஜ., மோடி, அமித்ஷா


ஆனால், தமிழகத்திலிருந்து யாருக்கும் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை.இதற்கு காரணம் இருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, தேர்தல் முடிவுகள், பிரதமருக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளன. அ.தி.மு.க., அரசிற்கு, மத்திய அரசு சார்பாக, அதிக அளவில் உதவி செய்தும், பா.ஜ.,விற்கு, வெற்றி பெறக்கூடிய தொகுதி களை, அ.தி.மு.க., தரவில்லை. தமிழகத்தில், மோடியின் பிரசாரத்திற்கு வந்த கூட்டம் கூட, அ.தி.மு.க., தலைவர்களின் கூட்டத்திற்கு வரவில்லை. பா.ஜ.விற்கு வந்த இந்த கூட்டத்தை ஓட்டாக மாற்ற, அ.தி.மு.க.,வால் முடியவில்லை. இதற்கு, அ.தி.மு.க.,வின் உட்பூசலே காரணம் என்கிறது, பா.ஜ., மேலிடம். மேலும், அ.தி.மு.க., தலைவர்கள், சட்டசபை இடைத்தேர்தலில்தான் அதிக கவனம் செலுத்தினர்; பார்லிமென்ட் தேர்தலை கண்டு கொள்ளவில்லை என்றும், பா.ஜ., தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.




மேற்கு வங்கத்தில், பா.ஜ., வெற்றி பெறும் போது, தமிழகத்தில் ஏன் நம்மால் வெற்றி பெறமுடியாது என்கிறார் அமித் ஷா. இதனால் கேரளா, தமிழகத்தில் சிறப்பு கவனம் செலுத்த, மோடியும் அமித் ஷாவும் முடிவு செய்துள்ளனராம். இதற்கான வேலைகள் விரைவில் துவங்கும் என, சொல்லப்படுகிறது 





.இதையெல்லாம் விட, முக்கியமாக ஒரு விஷயம் சொல்லப்படுகிறது. அதாவது, அ.தி.மு.க.,வுக்கு அமைச்சர் பதவி கொடுத்து, அவரால் ஊழல் பிரச்னை ஏதும் வந்துவிடுமோ என்பதாலும் பதவி கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. 

மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு, ரஜினி வந்ததில் பிரதமருக்கு மகிழ்ச்சி. தமிழகத்தில், பா.ஜ., விற்கு ரஜினி மூலமாக வெற்றி கிடைக்கலாம் என்கிறது, பா.ஜ., மேலிடம். அப்படியானால், ரஜினி - - பா.,ஜ கூட்டணி அமைகிறதா என கேட்டால், 'இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது' என, பதில் வருகிறது.


தில்லு முல்லு க்கு சொந்தக்காரர்கள்..

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத கதை' - திமுக 2.0
தமிழிசை Vs நிர்மலா சீதாராமன் விவகாரத்தில் பிராமணிய சித்தாந்தம் இருக்கிறது.
வைகோ Vs முரசொலி மாறன் விவகாரத்திலுமா பிராமணியம் இருக்கிறது?!
1989 - நாடாளுமன்ற தேர்தலில் தமிழகத்தை ஆண்டுகொண்டிருந்த திமுக '0' வாங்குகிறது. ஆனாலும் திமுக அங்கம் வகித்த தேசிய முன்னனி நாடு முழுவதும் வெற்றி பெற்று வி.பி.சிங் பிரதமராகிறார்.
தமிழ்நாட்டில் தோற்றுப்போனாலும் திமுகவிற்கு ஒரு அமைச்சர் பதவியை கொடுக்க விரும்புகிறார் வி.பி.சிங். அதிலும் குறிப்பாக திமுகவின் ராஜ்யசபா எம்.பி வைகோவிற்கு அமைச்சர் பதவியை கொடுக்க விரும்புகிறார்.
ஆனால் கதையில் திடீர் திருப்பமாக திமுகவின் இன்னொரு ராஜ்யசபா எம்.பியும், ஆர்ட்டிஸ்டின் மருமகனுமான முரசொலி மாறன் மத்திய அமைச்சராகிறார்.
மாறனுக்கும் வைகோவிற்கும் என்ன வேறுபாடு? இங்கு பிராமணிய சித்தாந்தம் உள்ளதா?
ஒன்றும் கிடையாது.
வைகோவைவிட மாறனிடம் கூடுதலாக இருக்கும் தகுதி தலைவரின் சொந்தக்காரன் என்பது மட்டும்தான்.
வரலாறை மறைத்துவிட்டு நீலிக்கண்ணீர் வடிப்பதால் சமூகநீதி போராளியாகிவிட முடியாது உடன்பிறப்பே!

இதை வளரவிட்டால் தமிழகத்திற்கும் பேராபத்து!

கர்நாடக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளில் காங் கூட்டணி அதிக இடங்கள் பெற்றதை வைத்து அங்கு ஈவிஎம் மோசடியால் பாஜக வென்றது என பல பதிவுகள் வருகின்றது.
* கர்நாடகாவில் மத்திய ஆட்சிக்கு மோடி என்பதில் மக்கள் தெளிவாகவே இருந்தனர். நான் அங்கு இருப்பதால் இதை கண்கூடாக பார்த்துவிட்டு கூறுகிறேன்.
* 1980 ல் பாராளுமன்ற தேர்தலில் திமுக காங் கூட்டணி வென்றது. உடனே அதிமுக ஆட்சி கலைக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்ட போது அதிமுகவே வென்றது. மத்திய ஆட்சிக்கு இந்திரா மாநிலத்திற்கு எம்ஜிஆர் என்பதில் தமிழக மக்கள் தெளிவாக இருந்தனர்.
* எம்ஜிஆர் காலத்தில் அதிமுக சட்டமன்ற தேர்தலில் வென்ற போதும் உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவே வென்றது. அதன்காரணமாக தேர்தல் நிறுத்தப்படது என்பதும் வரலாறு
* 1989ல் திமுக ஆட்சிக்கு வந்தது. அதன்பிறகு வந்த நாடாளுமன்றதேர்தலில் ராஜீவ் ஜெயா கூட்டணி 39 தொகுதியையும் கைபற்றியது. மாநிலத்திற்கு கலைஞர் மத்திய ஆட்சிக்கு ராஜீவ் என மக்கள் அப்போதே தெளிவாக வாக்களித்திருந்தனர்.
கடந்த இருபது வருடமாக மாற்றி மாற்றி ஒரே போல முடிவுகளை தமிழகம் பார்த்துவருதால்தான் இது போன்ற குழப்பம் வருகிறது. 80களில் தமிழகத்தில் நடந்தது தான் இப்போது மற்றமாநிலங்களில் நடக்கிறது.
ராகுல் மற்றும் காங்கிரஸ் தலைவர்களே தோல்வியை ஒப்புகொண்டுள்ள போது இதுபோன்ற கருத்துருவாக்கம் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை குலைத்துவிடும்.
இங்கே ஆதாரம் இல்லாமல் பேசுவதை விடுத்து தலைவர்கள் மூலம் வழக்கு தொடுப்பது நிருபிப்பது போன்ற ஆக்கபூர்வமான பணிகளில் ஈடுபடுவது நலம்...

தரமான சம்பவம்...நல்லகாலம் பொறக்கபோகுது......

ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் ஓய்வு பெறும் நாளில் பணியிடை நீக்கம்-தமிழக அரசு அதிரடி உத்தரவு.
Image may contain: text

வேலம்மாள் மருத்துவமனை - மதுரை.

5 ஸ்டார் ஹோட்டல் போல ஒரு மருத்துவமனை மதுரையில் உள்ளது. அது வேலம்மாள் மருத்துவமனை .
ஓர் உடல் பிரச்சனை காரணமாக சக வழக்கறிஞர் ஒருவரை இங்கு அழைத்து வந்தோம். உள்ளே நுழைந்த உடனே அட்மிஷன் முதல் இதற்கான சிறப்பு டாக்டர் வரை அழைத்து செல்ல ஒரு நர்ஸ் இருந்தார்.
ஒரு ஒரு பிரிவுக்கும் குறைந்தது 4 
டாக்டர்கள். முதல் தர treatment என்றால் என்ன என்று இங்கு தான் முதலில் கண்டேன்.
எனக்கு மிகவும் ஆச்சர்யம் என்னவென்றால்..
1. டாக்டர் பீஸ் கிடையாது.
2.அட்மிஷன் பணம் கிடையாது .
3.அட்மிஷன் செய்த பின்னர் வீடு செல்லும் வரை நோயாளிக்கு உணவு இலவசம். ஏனோ தானோ உணவு இல்லை ருசியான உணவு.
4.ஒரு x-ray 50 ரூபாய்,ஒரு Digital ECG 65 ரூபாய்,வீடியோ எண்டோஸ்கோப்பி 2000ரூபாய்.
5.ஆபரேஷன் கட்டணம் கிடையாது.
நமக்கான ஒரேயொரு செலவு இதற்கான மருந்துகளை வாங்கி கொடுப்பது தான். அதிலும் 8% தள்ளுபடி.
மிகவும் சுத்தமான மருத்துவமனை. அருமையான கவனிப்பு.
என் நண்பருக்கு ஒரு சிறிய அறுவை சிகிச்சை தேவை என்று சொன்னார்கள். 4 நாட்கள் இருக்க வேண்டும். Appoloவில் ஒன்றரை லட்சம். போரூர் ராமச்சந்திராவில் 84,000 மற்றொரு சிறிய மருத்துவமனையில் 45,000. ஆனால் இங்கு ஆன செலவு 13,500 மட்டுமே.அதுவும் Scan,ECG ,மருந்துகள் என சகலமும் சேர்த்து.
பலருக்கும் தெரியப்படுத்துங்கள்.
வேலம்மாள் மருத்துவமனை - மதுரை.
*படித்தவை பகிர்ந்தவை குழு நிறுவனர்* Velammal Medical College Hospital & Research Institute
Velammal Village, Anuppanadi, Near Chinthamani Toll Gate, Madurai, Tamil Nadu 625009
0452 711 3333

வெயிலால் முகத்தில் ஏற்பட்ட கருமையை நீக்க :

எலுமிச்சை சாறு மற்றும் தேன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாற்றில் 2 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் வெயிலால் ஏற்பட்ட கருமை மறையும்.
எலுமிச்சை சாறு மற்றும் உப்பு எலுமிச்சை ஓரு சிறப்பான ப்ளீச்சிங் தன்மை வாய்ந்த பொருள். அந்த எலுமிச்சையின் சாற்றில் சிறிது உப்பு சேர்த்து கலந்து, குளிக்கும் போது இந்த கலவையைக் கொண்டு சருமத்தை மென்மையாக ஸ்கரப் செய்து, குளிர்ந்த நீரில் கழுவினால், சருமத்தில் உள்ள கருமைகள் அகலும்.

கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இந்த ஃபேஸ் பேக், வெயிலால் ஏற்பட்ட கருமையை குறைப்பதோடு, பொலிவை அதிகரிக்கும். அதற்கு 4 டீஸ்பூன் கடலை மாவுடன், 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிது பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, முகம் மற்றும் கழுத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பேக்கிங் சோடா இந்த முறை கூட முகத்தில் உள்ள கருமையைப் போக்கும். அதற்கு பேக்கிங் சோடாவை ரோஸ் வாட்டரில் கலந்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும்.
ஓட்ஸ் இது ஒரு நேச்சுரல் ஸ்கரப்பர். இந்த ஸ்கரப் செய்வதற்கு சிறிது ஓட்ஸ் உடன், பால் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி மென்மையாக ஸ்கரப் செய்ய வேண்டும். பின் முகத்தைக் கழுவிய பிறகு, வைட்டமின் ஈ ஆயிலை முகத்தில் தடவி மசாஜ் செய்து விட வேண்டும்.
வெள்ளரிக்காய் வெள்ளரிக்காய் கூட சரும கருமையை நீக்க உதவும். அதற்கு வெள்ளரிக்காயை பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் அலச வேண்டும். இதனால் சருமத்தில் இருக்கும் கருமை மட்டுமின்றி, கரும்புள்ளிகள், பருக்கள் போன்றவையும் நீங்கும்.
கற்றாழை ஜெல் கற்றாழை ஜெல்லை சருமத்தில் பயன்படுத்தினால், சருமத்தில் ஏதேனும் தொற்றுகள் இருந்தால் நீங்குவதோடு, சருமமும் ஈரப்பசையுடன் இருக்கும். அதற்கு கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவி மென்மையாக சிறிது நேரம் மசாஜ் செய்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

செவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகாரம்.

செவ்வாய் தோஷத்திற்கு சிறந்த பரிகாரம்

















நரசிம்மர், செவ்வாய் கிரக தாக்கத்தை நமக்கு நன்மை பயப்பதாக மாற்றுவதால், செவ்வாய் கிரகத்தை வழிபட வேண்டியவர்கள் நரசிம்மரை, குறிப்பாக, செவ்வாய் கிழமைகளிலும். அன்றாடம், செவ்வாய் ஹோரையிலும் வணங்குவது சிறப்பாக கருதப்படுகிறது.

தினமும் பகலில் செவ்வாய் ஹோரை நேரம்

செவ்வாய் 6 மணி முதல் 7 மணி வரை, 1 மணி முதல் 2 மணி வரை
புதன் 10 மணி முதல் 11 மணி வரை, 5 மணி முதல் 6 மணி வரை
வியாழன் 7 மணி முதல் 8 மணி வரை, 2 மணி முதல் 3 மணி வரை
வெள்ளி 11 மணி முதல் 12 மணி வரை
சனி 8 மணி முதல் 9 மணி வரை, 3 மணி முதல் 4 மணி வரை
ஞாயிறு 1 மணி முதல் 2 மணி வரை
திங்கள் 9 மணி முதல் 10 மணி வரை, 4 மணி முதல் 5 மணி வரை.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...