Tuesday, December 3, 2019

நகராட்சி, மாநகராட்சிகளுக்கு உள்ளாட்சி தேர்தல்.. பிப்ரவரியில்!

நகராட்சி, பேரூராட்சி, மாநகராட்சிகளுக்கு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஒரே கட்டமாக உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகளின் நெருக்கடி அதிகமாவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தமிழகத்தில் ஊரகம், நகர்புறம் என இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. ஊரக உள்ளாட்சிகளில் மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் உள்ளிட்ட பதவிகள் உள்ளன. நகர்புற உள்ளாட்சிகளில் மேயர், மாநகராட்சி கவுன்சிலர், நகராட்சி தலைவர், நகராட்சி கவுன்சிலர், பேரூராட்சி தலைவர்,பேரூராட்சி கவுன்சிலர் பதவிகள் உள்ளன. இதில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் முறை சமீபத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதனால் நகர்புற உள்ளாட்சிகளில் உள்ள வார்டுகளுக்கு மட்டுமே கவுன்சிலர் தேர்தல் நடத்த வேண்டியுள்ளது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சிகளில் உள்ள 1.18 லட்சம் பதவிகளுக்கு டிச. 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடத்தப்பட உள்ளது. இதற்கான மனு தாக்கல் நாளை மறுநாள் துவங்கும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேநேரத்தில் மாநகராட்சி உள்ளிட்ட நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் அறிவிக்கப்படவில்லை. 'விரைவில் தேர்தல் அறிவிக்கப்படும்' என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி உறுதியளித்துள்ளார்.

இடஒதுக்கீடு அடிப்படையில் மேயர் பதவிகளை பிரிப்பதில் நீடிக்கும் குழப்பமே தேர்தல் அறிவிக்காததற்கு காரணம் என கூறப்படுகிறது. மொத்தம் 15 மேயர் பதவிகள் உள்ளதால் 50 சதவீத இடஒதுக்கீடு அடிப்படையில் அவற்றை பெண்கள் எஸ்.சி. - எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்குவதில் சிக்கல் நீடித்து வருகிறது. சமீபத்தில் நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்க இருப்பதாக உறுதியளித்தனர்.

'அடுத்த ஆண்டு பிப்ரவரியில் ஜெ. பிறந்த நாளுக்கு முன் அ.தி.மு.க.வினரை மேயர்களாகவும், நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி தலைவர்களாகவும் பார்க்க வேண்டும்' என்றும் கூறினர். அதனால் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலரும் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். ஆனால் நகர்புற உள்ளாட்சி களுக்கு தேர்தல் அறிவிக்காததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆட்சி, அதிகாரம் கையில் இருக்கும்போதே தேர்தலை சந்திக்க வேண்டும் என அ.தி.மு.க.வினர் விரும்புகின்றனர். இதை அமைச்சர்கள், மாவட்ட செயலர்கள், எம்.எல்.ஏ.க்கள் வாயிலாக அ.தி.மு.க. தலைமையின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனவே ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின் நகர்புற உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. தலைமை முன்வந்துள்ளது. இதற்காக மேயர் இடஒதுக்கீடு பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்பட உள்ளது. பெண்களுக்கு 7 மேயர் பதவிகளும் மற்றவர்களுக்கு 8 பதவிகளும் ஒதுக்கப்பட உள்ளன.

இதுகுறித்து அரசு அதிகாரபூர்வமாக அறிவித்த பின் தேர்தல் நடத்தும் பணிகளை மாநில தேர்தல் ஆணையம் துவங்கவுள்ளது. எனவே ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகைக்கு பின் நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதிகள் முறைப்படி அறிவிக்கப்படலாம். ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பயன்படுத்தி பிப்ரவரியில் ஒரே கட்டமாக அனைத்து நகர்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் ஓட்டுப்பதிவு நடத்தி முடிக்கப்பட உள்ளது.

மிரட்டும் வழக்கு; ஆணையம் ஆலோசனை:
உள்ளாட்சி தேர்தல் இடஒதுக்கீடு தொடர்பாக தி.மு.க. தொடர்ந்த வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நாளை விசாரணைக்கு வருகிறது. இவ்வழக்கை எதிர்கொள்வது குறித்து மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி, செயலர் சுப்பிரமணியன் சட்ட ஆலோசகர் பாலமணிகண்டன் ஆகியோர் நேற்று வழக்கறிஞர்களுடன் ஆலோசனை நடத்தினர். இரண்டு மணி நேரத்திற்கு மேலாக இந்த ஆலோசனை நீடித்தது. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தாததால் ஏதாவது சட்ட சிக்கல் வருமா என்பது குறித்து இதில் விரிவாக விவாதிக்கப் பட்டுள்ளது. ஆலோசனைக்கு பின் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய ஆவணங்களை தயார் செய்தனர்.
நகராட்சி, மாநகராட்சி, உள்ளாட்சி தேர்தல்,ஆவணங்கள்,மாநில தேர்தல் ஆணையம்



Monday, December 2, 2019

*யார் காரணி*

ஒரு துறவி இருந்தார், அவர் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றை அவர் வைத்திருந்தார் .
எங்கே சென்றாலும் அதை எடுத்து செல்ல மறக்க மாட்டார்.அவ்வப்போது அதை எடுத்து தன் முகத்தை பார்த்துக் கொள்வார்.
அவருடைய சீடர்களுக்கு அது வேடிக்கையாக இருந்தது.
இவர் எல்லா ஆசைகளும் துறந்தவர் ஆயிற்றே, பிறகு எதற்காக இப்படி அடிக்கடி தன் முகத்தை கண்ணாடியில் பார்த்துக் கொள்கிறார் என்று குழப்பம் எழுந்தது.
துறவிக்கு தெரியாமல் தங்களுக்குள் அது பற்றி அடிக்கடி பேசிக் கொண்டார்கள்.
ஒரு கட்டத்தில் தங்கள் குருவான அவரை கிண்டல் செய்யவும் ஆரம்பித்தார்கள்.
மேலும் நம் குருநாதருக்கு, தான் ரொம்ப அழகு என்று நினைப்பு! அதனால்தான் அடிக்கடி கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்து ரசித்துக்
கொண்டிருக்கிறார் என்று பேசிக் கொண்டனர்.
சில நேரங்களில் அவர்கள் அப்படி பேசியது துறவியின் காதுகளில் விழுந்தது, ஆனாலும் அவர் தன் இயல்பை மாற்றிக் கொள்ளவில்லை .
இவ்வாறு இருக்க,
ஒருநாள் அந்நாட்டு மன்னன் அந்தத் துறவியைப் பார்க்க வந்திருந்தான்.
அவன் பணிவுடன் ஆசிரமத்திற்குள் நுழைந்து துறவியை வணங்கிய போது அவர் வழக்கம் போல கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
இப்பொழுது மன்னனுக்கு அதிர்ச்சி!
" சுவாமி நீங்கள் எல்லாவற்றையும் துறந்தவர் ஆனால் இப்படி அடிக்கடி கண்ணாடியில் முகம் பார்க்கும் ஆசையை மட்டும் துறக்க முடியவில்லையா என்ன? என்று அவரிடம் கேட்டான் மன்னன் .
துறவி சிரித்தார்.
" இதே சந்தேகம் என் சீடர்கள் பலருக்கு இருக்கிறது, அவர்கள் கேட்கவில்லை நீங்கள் கேட்டுவிட்டீர்கள் என்றவர், தான் கண்ணாடியை பார்ப்பதற்கான காரணத்தை மன்னனிடம் சொன்னார் .
மேலும் எனக்கு ஏதாவது பெருமை கிடைத்தால் அதற்கு காரணம் யார் என்று தெரிந்து கொள்ள இந்த கண்ணாடியை பார்ப்பேன் .அதில் என் உருவம் தெரியும்.
எனக்கு பெருமை கிடைக்க நானே முதல் காரணம் என்பதை உணர்ந்து கொள்வேன்.
'
இந்த பெருமையை மண்டைக்கு ஏற்றி தலைகனம் கொண்டால் வீழ்ச்சி அடைய போவது யார் என்று கேட்டுக் கொண்டு கண்ணாடியை பார்ப்பேன் .அதில் நான் தெரிவேன் .இந்த உண்மையை புரிந்து கொண்டு என்னுடைய இயல்பு நிலையை பெறுவேன் .
கூடவே எனக்கு ஏதாவது பிரச்சினை வந்தால், பிரச்சனைக்கு யார் காரணம் என்று தெரிந்து கொள்ள கண்ணாடியை பார்ப்பேன் .
அங்கே அந்தக் கண்ணாடியில் என் உருவம் தோன்றும் எனவே என் பிரச்சனைக்கு நானே முதல் காரணம் என்று புரிந்து கொள்வேன்.
சரி, பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டாமா அதற்கு பொருத்தமான நபர் யாரென்று தேடுவதற்காக மறுபடியும் கண்ணாடியை பார்ப்பேன், அங்கே நான் மீண்டும் தெரிவேன் .
எனவே, என் பிரச்சினையை யாரோ வந்து தீர்ப்பார்கள் என்று காத்திருக்காமல், நானே தான் என் பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று புரிந்து கொள்வேன் .
எப்போதும் இந்தக் கண்ணாடி என்னிடம் இருப்பதால் எனக்கு நேரும் நன்மைக்கும் தீமைக்கும் யார் காரணம் என்பதை தெரிந்து கொள்ள முடிகிறது .
என் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் யார் காரணமாக இருக்க முடியும் என்பதையும் புரிந்து கொள்ள முடிகிறது என்றார் துறவி .
*அன்பிற்கினிய உறவுகளே நம் வளர்ச்சிக்கும் நம் வீழ்ச்சிக்கும் நாம்தான் முதல் காரணமாக இருக்க முடியும் .*
*வாழ்க்கை நாம் நினைப்பது போல மிக கடினமானது அல்ல*
மிகவும் *எளிமையானது.*
அதை கடினமாக்குவதும், அல்லது அதை எளிமையாக கையாளுவதும் நம் கையில் உள்ளது.

Image may contain: jewelry

ஜனநாயகத்தை சீர்குலைக்க,சதி வேலையில் ஈடுபட்டது; இது, வெட்கக்கேடான விஷயம்,''

காங்கிரஸ் தலைவர் சோனியா.
ஜனநாயகம் என்றால் என்ன என்று தெரியுமா உங்க காங்கிரஸுக்கு ? உங்கள் பேச்சை எல்லாம் கேக்க வேண்டும் என்று விதி,,
உங்களுக்கு இந்த தேசத்தில் இடமளித்தது முதல் தவறு. உங்களை MP ஆக்கியது எங்களின் இரண்டாவது தவறு. இந்தியா தவிர மற்ற எந்த நாடுகளிலும் இதுபோல் அந்நிய நாட்டினரை பதவியில் அமர்த்த மாட்டார்கள்
இதுல வேற அன்னை சோனியா என்று சில அல்லக்கைகள் சொல்லும் போது வரும் வேதனை இருக்கிறதே சொல்ல முடியாது
இந்த நாட்டில் உங்கள் உண்மையான பெயரை சொல்ல உங்களுக்கு தைரியம் இருக்கிறதா ? அல்லது இத்தாலியில் எனக்கு குடியுரிமை இல்லை என்று சொல்ல முடியுமா ?
சிறுபான்மை என்கிற ஓட்டை வைத்து கொண்டு நீங்கள் ஆடும் ஆட்டம் தாங்க முடியவில்லை

ஏர்டெல், வோடபோன், ஜியோ தனியார் செல்போன் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்தது - நள்ளிரவு முதல் அமல்.

ஏர்டெல், வோடபோன், ஜியோ தனியார் செல்போன் கட்டணம் 50 சதவீதம் வரை உயர்ந்தது - நள்ளிரவு முதல் அமல்
டெலிகாம்

















இந்தியாவில் இயங்கி வரும் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய 3 நிறுவனங்களும் முன்னணியில் இருக்கின்றன. இந்தியாவின் மொத்த செல்போன் வாடிக்கையாளர்களில் பெரும்பகுதியினர் இந்த நிறுவனங்களின் வாடிக்கையாளர்களாகவே உள்ளனர்.

இந்த நிறுவனங்கள் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டில் செல்போன் கட்டணங்களை உயர்த்தி இருந்தன. இந்த நிறுவனங்கள் தங்களுக்கு இடையேயான போட்டியை சமாளிக்க ஏராளமான சலுகைகளை வழங்கி வருகின்றன. குறிப்பாக செல்போன் இணையதள கட்டணங்கள் மிகவும் மலிவாக்கப்பட்டு உள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு ஒரு ஜி.பி. டேட்டாவின் விலை ரூ.269 ஆக இருந்தது. ஆனால் 4ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்ட பின் இந்த விலை மிகவும் மலிவாக்கப்பட்டது. அந்தவகையில் கடந்த ஆண்டில் ஒரு ஜி.பி. டேட்டாவின் விலை ரூ.11.78 என்ற அளவிலேயே இருந்தது.

இத்தகைய சலுகைகளால் தனியார் செல்போன் நிறுவனங்களுக்கு பெருத்த வருவாய் இழப்பு ஏற்பட்டு உள்ளன. மேலும் இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (டிராய்) கட்டுப்பாடுகள் மற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகள் காரணமாக பெரும் கடன் சுமையும் ஏற்பட்டு உள்ளன.

எனவே இவற்றை சமாளிக்க செல்போன் சேவை (அழைப்பு மற்றும் டேட்டா) கட்டணத்தை 50 சதவீதம் வரை மேற்படி நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன. இது தொடர்பாக பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கு வரம்பில்லா (அன்லிமிடெட்) பிரிவில் புதிய கட்டண அட்டவணையை இந்த நிறுவனங்கள் வெளியிட்டு உள்ளன.

இதில் வோடபோனை பொறுத்தவரை நாள்தோறும் 1½ ஜி.பி. டேட்டா, 365 நாள் (செல்லுபடியாகும் காலம்) திட்டத்துக்கான கட்டணம் ரூ.1699-ல் இருந்து ரூ.2,399 ஆக உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த அடிப்படையில் குறுகிய கால திட்டங்களுக்கான கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளன.

பார்தி ஏர்டெல்லை பொறுத்தவரை 1½ ஜி.பி. தினசரி டேட்டாவுடன் 365 நாள் காலத்துக்கான திட்டத்துக்கு ரூ.1,699 ஆக நிர்ணயிக்கப்பட்டு இருந்த கட்டணம் ரூ.2,398 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதைப்போல குறுகிய கால திட்டங்களின் கட்டணமும் அதிகரித்து உள்ளன.

வரம்பில்லா இலவச அழைப்புகளை வழங்கி வந்த நிறுவனங்கள், தற்போது இலவச அழைப்புகளுக்கு உச்சபட்ச வரையறை நிர்ணயித்து உள்ளன. அதன்படி 28 நாட்கள் திட்டத்துக்கு 1000 நிமிடங்களும், 84 நாட்கள் திட்டத்துக்கு 3 ஆயிரம் நிமிடங்களும், 365 நாட்கள் திட்டத்துக்கு 12 ஆயிரம் நிமிடங்களும் அளிக்கப்பட்டு உள்ளன. இந்த எல்லையை கடந்து அழைக்கப்படும் குரல் அழைப்புகளுக்கு நிமிடத்துக்கு 6 காசு வீதம் வசூலிக்கப்படும்.

இவற்றை தவிர வோடபோன் மற்றும் ஏர்டெல் பிரீபெய்டு வாடிக்கையாளர்கள் அழைப்பு மற்றும் இணையதள பயன்பாட்டுக்கு குறைந்தபட்ச ரீசார்ஜும் செய்ய வேண்டும். அந்தவகையில் குறைந்தபட்சம் ரூ.49-க்கு (4 வாரங்கள் செல்லுபடியாகும்) ரீசார்ஜ் செய்திருந்தால் மட்டுமே அழைப்பு மற்றும் டேட்டாவை பயன்படுத்த முடியும்.

இந்த கட்டண உயர்வு மற்றும் சேவைகள் அனைத்தும் நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

இதைப்போல ரிலையன்ஸ் ஜியோவும் பிரீபெய்டு வாடிக்கையாளர்களுக்கான கட்டணங்களை உயர்த்துகிறது. குறிப்பாக ஆல்-இன்-ஒன் திட்டத்தின் கட்டணத்தை 40 சதவீதம் வரை உயர்த்த ஜியோ முடிவு செய்து உள்ளது. இந்த கட்டண உயர்வு வருகிற 6-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது.

தனியார் செல்போன் நிறுவனங்களின் இந்த கட்டண உயர்வு அறிவிப்பு வாடிக்கையாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?

தயிருக்கும் யோகர்ட்டுக்கும் என்ன வித்தியாசம்?
தயிர் யோகர்ட்டு


















தயிர், யோகர்ட் இரண்டும் இடையில் என்ன வித்தியாசம்? என்பது பரவலாக உள்ள கேள்வி. அதுவும் 'டயட்' என்னும் உணவு கட்டுப்பாட்டை பின்பற்றுவோர் நடுவில் 'யோகர்ட்' என்பது பிரபலமான வார்த்தை.

சிலர், இந்தியாவில் தயிர் என்று கூறுவதைதான், மேற்குலக நாடுகளில் 'யோகர்ட்' என்று அழைக்கின்றனர் என்று நம்புகின்றனர். தயிருக்கும் யோகர்ட்டுக்கும் இடையே என்ன வித்தியாசம் என்றால், தயார் செய்யப்படும் முறைகள், பாக்டீரியாக்களின் அளவுகள், பாலின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது.

சமீப காலங்களில் எடை குறைப்பது, உடல் பருமனுக்காக சிகிச்சை போன்றவற்றில் யோகர்ட் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. மார்க்கெட்டுகளில் மிக எளிதாகவும் கிடைக்க ஆரம்பித்துவிட்டன. அதிலும் பல்வேறு வகையான யோகார்ட்டுகள் கிடைக்கின்றன. அதில் மிகவும் பிரபலமானதும் எல்லோராலும் விரும்பப்படுவது எதுவெனில் கிரேக் யோகார்ட் தான். பெரும்பாலாக டயட்டீஷியன்கள் இந்த கிரேக்க யோகர்ட்டையே பரிந்துரையும் செய்கிறார்கள்.

உடற்பயிற்சியின் போது பொதுவாக தசைகள் அயற்சி அடையும். அதுபோன்ற தசை இறுக்கம் மற்றும் அழுத்தங்களைக் குறைக்கும் பணியை யோகர்ட் செய்யும். பயிற்சியின்போது தசையில் ஏற்படும் அயற்சியை குறைக்கும் பண்பும் யோகர்ட்டுக்கு உண்டு. உடற்பயிற்சியின்போது ஏற்படும் களைப்பிலிருந்து உடல் சீக்கிரமாக மீள்வதற்கும் இது உதவும்.

சிறிய கிண்ணத்திலுள்ள தயிரில் 3 முதல் 4 கிராம் புரதம் (புரோட்டீன்) இருக்கும். அதே அளவான கிரீக் யோகர்ட்டில் 8 முதல் 10 கிராம் புரதம் இருக்கும்.

உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் பராமரிக்கப்படுவதற்கு டி-செல்களே பொறுப்பு. தினமும் யோகர்ட் சாப்பிட்டு வந்தால் டி-செல்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும். பாலிலுள்ள லாக்டோஸ் ஒத்துக்கொள்ளாதவர்கள்கூட யோகர்ட்டை சேர்த்துக்கொள்ளலாம். பாலிலுள்ள லாக்டோஸ் யோகர்ட்டில் லாக்டிக் அமிலமாக மாற்றப்படுகிறது. இது எளிதில் செரிக்கக்கூடியதாகும்.

வீட்டில் யோகர்ட் தயாரிக்கும் முறை

தேவைப்படும் அளவு பால் எடுத்து அதை கொதிக்கும் வரைக்கும் சூடாக்கவும். கொதித்த பாலை கண்ணாடி பாத்திரம் ஒன்றில் ஊற்றவும். தானாக வெதுவெதுப்பாக (100 - 105 டிகிரி பாரன்ஹீட்) நிலையை அடையும் வரை ஆற விடவேண்டும். அப்போது பாலின்மேல் ஆடை படரும். முன்பு வீட்டில் தயாரித்த அல்லது கடையில் வாங்கிய யோகர்ட்டில் இரண்டு மேசைக்கரண்டி அளவு எடுத்து ஆறிய பாலுடன் சேர்க்கவும். முடிந்த அளவு பால்மேல் படர்ந்த ஆடை சிதைவுறாமல் கலக்கவும்.

இந்த கண்ணாடி பாத்திரத்தை வெதுவெதுப்பான தண்ணீருக்குள் குறைந்தது எட்டு மணி நேரம் அல்லது இரவு முழுவதும் வைக்கவும். 8 முதல் 12 மணி நேரம் விரும்பத்தக்கது. எவ்வளவு நேரம் யோகர்ட் உறைகிறதோ அவ்வளவு புளிப்புச் சுவை கிட்டும்.

எஞ்சிய நீர்மத்தை கவனமாக வடித்தெடுக்கவும். குளிர்சாதன பெட்டியில் நான்கு மணி நேரம் வைத்திருந்து பின்னர் பயன்படுத்தவும். தயாரித்து 4 முதல் 5 நாள்களுக்குள் பயன்படுத்தவும்.

இந்த மார்ச்சுக்குள் எங்கே இருக்கிறார் என்று பார்போம்.

"அறிவியலுக்கு முரணாக இருப்பதால் இந்து பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை−ஆ.ராசா.
கருணாநிதி சமாதியில
முரசொலி வக்கிறதால
தினமும் படிச்சுட்டு,
நாளைக்கு எப்படி காத்தடிக்கும்
எங்க மழை பெய்யும் ன்னு
கலைஞர் டி.வி க்கும்
சன் டிவி விக்கும் தகவல் சொல்வாரு?
தயிர் வடையும்
சாம்பார் சாதமும் வக்கிறதாலே
பசு மாட்டுக்கு
என்ன தீவனம் வச்சா
எவ்வளவு பால் கறக்கும்,
வெவசாயத்துக்கு என்ன பண்ணலாம் ன்னு
எல்லா அறிவுரையும்
அசரீரியா சொல்றாரே?
சரிதான்.

பராசக்தி - படம், கருணாநிதியின் சொந்த கதை இல்லை! இதோ அதன் மூலப்பத்திர ஆதாரம்!

தி.மு.க-வின் பத்திரிகையான முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்ற உண்மை இப்போதுதான் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதற்கான விசாரணை தேசிய பட்டியலின ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த இடம் பஞ்சமி நிலம்தான் என்பதற்கான ஆதாரங்களை மூத்த தலித் தலைவரும், பா.ஜ.க செயற்குழு உறுப்பினருமான தடா பெரியசாமி வெளியிட்டுள்ளார். அது தொடர்பான பல ஆதாரங்களையும் அவர் தமிழக அரசுக்கு வழங்கியுள்ளார்.
ஆனால் முரசொலி நில மூலப்பத்திரத்தை வெளியிடுமாறு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், தமிழக மக்களும் தொடர்ந்து வலியுறுத்தி வந்தபோதிலும் அவரால் முரசொலி மூலப்பத்திரத்தை வெளியிட முடியவில்லை. அவரிடம் அதற்கான மூலப்பத்திரம் இல்லை என்ற உண்மை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனால்தான் தி.மு.க சார்பில் தேசிய பட்டியல் இன ஆணையத்தில் ஆஜரான ஆர்.எஸ்.பாரதி, இதனை விசாரிக்க தேசிய பட்டியலின ஆணையத்திற்கு உரிமை இல்லை என்றும், அந்த ஆணையத்தையே மிரட்டும் வேலையிலும் ஈடுபட்டார். முரசொலி மூலப்பத்திர பிரச்சனையை கிளப்பிய பா.ம.க தலைவர் டாக்டர் ராமதாஸ், பா.ஜ.க பொதுச் செயலாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் தடா பெரியசாமி ஆகியோர்களை, 48 மணி நேரத்திற்குள்ளாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று விரட்டினார்கள். ஆனால், பல 48 மணிநேரங்கள் கடந்த பிறகும், இதுவரை கோர்ட்டில் தி.மு.க வழக்கு தொடரவில்லை.
முரசொலி மூலபத்திரத்தை கேட்ட தலைவர்கள் மீது கோர்ட்டில் ஸ்டாலின் வழக்கு தொடர்ந்தால், பின்னர் கோர்ட்டிலும் மூலப்பத்திரத்தை கேட்ப்பார்கள் என்ற பயத்தில், அவர்கள் மீது வழக்கு போடுவதில் இருந்து தி.மு.க ஓட்டம் பிடித்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, தி.மு.க தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ள இடமும், பஞ்சமி நிலம்தான் என்று திருமாவளவன் பேசியது வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதுபோன்று தி.மு.க-வினர் மீது பல்வேறு அபகரிப்பு புகார்கள் அடுக்கடுக்காக வந்த வண்ணம் உள்ளன.
தி.மு.க-வின் நில அபகரிப்பு ஒருபுறம் இருக்க, அடுத்தவர்களின் கதைக்கு தனது பெயரை கருணாநிதி போட்டுக்கொண்ட உண்மை இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஆமாம், பராசக்தி படத்தின் கதையே கருணாநிதிக்கு சொந்தமானது அல்ல. அது கருணாநிதியின் கதை என்று சொல்வதே அப்பட்டமான பொய் என்ற உண்மை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பராசக்தி நாடகமாக பல்வேறு மேடைகளில் நடத்தப்பட்டது என்றும், அதை ஏ.வி.எம் அதிபர் மெய்யப்பச் செட்டியார் உரிமம் வாங்கி திரைப்படமாக தயாரித்தார் என்ற உண்மையை நடிகர் சிவாஜி கணேசன் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். அப்போது அது தமிழர்கள் மத்தியில் பரவாமல் பார்த்துக்கொள்ளப்பட்டாலும், இப்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் நடிகர் சிவாஜி கணேசன் கூறியிருப்பதாவது:-
அந்த காலத்தில் ரத்திரனம், தேவி நாடக சபாவை நடத்தி வந்தார். அவர்கள் பாவலர் பாலசுப்ரன் எழுதிய பராசக்தி என்ற நாடகத்தை நடத்தி வந்தார்கள். அந்த நாடகத்தை என்னுடைய தெய்வம் பி.ஏ.பெருமாள் அவர்களும், ஏ.வி.எம் அவர்களும், மற்றவர்களும் போய் பார்த்து இருக்கிறார்கள்.
பார்த்துவிட்டு சினிமா எடுப்பதற்காக அதனுடைய ரைட்சை வாங்கிவிட்டார்கள். வாங்கிவிட்டு வந்த பிறகு இதில் யாரை ஹீரோவாக போடலாம் என்ற பிரச்சனை வந்தது. அப்போது பெருமாள் முதலியார் என்னுடைய பெயரையும் அதில் சொல்லி இருக்கிறார். காரணம் பெருமாள் முதலியார், அவர் சின்ன பிள்ளையாக இருந்ததில் இருந்தே நாடகத்தில் என்னை பார்த்துக் கொண்டே வந்துள்ளார். அவர் பெரிய நாடக ரசிகர். இவ்வாறு நடிகர் சிவாஜி கணேசன் கூறியுள்ளார்.
இதன்மூலம் பராசக்தி, கருணாநிதியின் கதை என்று 67 ஆண்டுகளுக்கு மேலாக தமிழர்களை ஏமாற்றியது அம்பலமாகியுள்ளது. தி.மு.க-வின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் பராசக்தி படத்திற்கு கதை எழுதியவர் கருணாநிதி என்றுதான் குறிப்பிடப்பட்டுள்ளது.
“1952-ல், கலைஞர் கதை, வசனம் எழுதி வெளியான ‘பராசக்தி’ திரைப்படம், தமிழ் திரையுலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இன்னும் என்னென்ன கதை - வசனங்கள் எல்லாம் மற்றவர்களுடையதோ தெரியவில்லை. கருணாநிதி எழுதியதாக வெளியான புத்தகங்களில் எவையெல்லாம் பிறருடையதோ? அதுவும் தெரியவில்லை.
தி.மு.க-விற்கு சொந்தமானவை என்று சொல்லப்படுகின்ற சொத்துக்களும், கருணாநிதி குடும்பத்திற்கு உள்ள சொத்துக்களும் நேர்மையான வழியில் சம்பாதிக்கப்பட்டவையா? அல்லது அபகரிக்கப்பட்டவையா? என்ற கேள்வி தமிழர்கள் மத்தியில் நீண்ட காலமாகவே உள்ளது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...