அட்சய திருதியை பற்றி தங்கத்தை தவிர நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அற்புதமான 60 விஷயங்கள். அட்சய திருதியை அன்று தங்கம் வாங்குவார்கள் என்ற தகவலைத் தவிர பெரியளவில் இதுகுறித்து பலருக்கும் தெரியாது. அட்சய திருதியை எனும் அற்புதம் குறித்த அபூர்வ 60 விஷயங்களை இங்கு காண்போம்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Sunday, May 1, 2022
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் .
அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர - புராணம்‘ விவரிக்கிறது.
அட்சய திருதியை எனும் அற்புத நாள் தமிழ் மாதமான சித்திரையில் வளர்பிறையில் அமாவாசை நாளை அடுத்த மூன்றாம் நாளில் கொண்டாடப்படுவதாகும். ரோகிணி நட்சத்திரமும் திருதியை திதியும் சேர்ந்து வரக்கூடிய நாளில் உன்னதநாள் அட்சய திருதியை. இந்தாண்டு மே 3ம் தேதி கொண்டாடப்படுகிறது.
1. அட்சய திருதியை தினத்தன்று தான் கிருதயுகம் பிறந்தது.
2. கங்கை, பூமியை முதல் முதலில் அட்சய திருதியை தினத்தன்று தான் தொட்டது.
3. வனவாச காலத்தில் பாண்டவர்கள் அட்சய பாத்திரம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
4. அட்சய திருதியை நாளில் தான் மணிமேகலை அட்சய பாத்திரம் பெற்றாள்.
5. அட்சய திருதியையின் முக்கியத்துவத்தையும், பெருமைகளையும் `பவிஷ்யோத்தர-புராணம்‘ விரிவாக விவரிக்கிறது.
ஐஸ்வர்யங்களை அள்ளி தரும் அட்சய திருதியை திருநாள்!
6. அட்சய திருதியை தினத்தன்று தான் ஐஸ்வர்ய லட்சுமி, தான்ய லட்சுமி அவதாரங்கள் நிகழ்ந்தன.
7. அட்சய திருதியை தினத்தன்றுதான் குபேரன் நிதி கலசங்களை பெற்றார்.
8. சிவபெருமான் அன்னபூரணியிடம் பிட்சாடனராக வந்து யாசகம் பெற்றது அட்சய திருதியை தினத்தன்றுதான்.
9. பராசக்தியின் ஒரு அம்சமான சாகம்பரிதேவி இந்த உலகில் காய்கறிகளையும், மூலிகைச் செடிகளையும் உருவாக்கியவர் என்று புராணம் சொல்கிறது. அட்சய திருதியை தினத்தன்றுதான் அவர் காய்கறி, மூலிகைகளை உருவாக்கினார்.
10. அட்சய திருதியை தினத்தன்றுதான் விஷ்ணுவின் 6-வது அவதாரமான பரசுராமர் அவதரித்தார்.
11. ரோகிணி நட்சத்திர நாளில் வரும் அட்சய திருதியை மிக, மிக சிறப்பு வாய்ந்ததாகும்.
12. அட்சய திருதியை நாளில் தான் விநாயகருக்கு மகாபாரதத்தை வியாசர் போதித்தார்.
13. வடமாநிலங்களில் அட்சய திருதியை தினத்தன்று திருமணம் நடத்துவதை புனிதமாக கருதுகிறார்கள்.
14. அரியானா, பஞ்சாபில் அதிகமாக உள்ள ஜாட்இனத்தவர்கள் அட்சய திருதியை தினத்தன்று மறக்காமல் மண் வெட்டி எடுத்துக் கொண்டு வயலுக்கு செல்வார்கள்.
15. ஜெயின் இனத்தவர்களுக்கு அட்சய திருதியை புனித நாளாகும்.
16. வடஇந்தியர்கள் நீண்டதூர புனித பயணங்களை அட்சய திருதியை நாளில் தான் தொடங்குவார்கள்.
17. ஒரிசாவில் வீடு கட்ட, கிணறு தோண்ட சிறந்த நாளாக அட்சய திருதியை தினம் கருதப்படுகிறது.
18. பீகார், உத்தரபிரதேசத்தில் நெல் விதைப்பை அட்சய திருதியை தினத்தன்று தொடங்குவார்கள்.
19. அட்சய திருதியை நன்னாளில் தான் உணவு கடவுளான அன்னபூரணி அவதரித்தாள்.
20. அட்சய திருதியை அன்று தங்கம் வாங்க இயலாதவர்கள் உப்பு வாங்கினால் கூட போதும். தங்கம் வாங்குவதற்குரிய பலன்கள் கிடைக்கும்.
21. அட்சய திருதியை தினத்தன்று தான் பிரம்மா, உலகை படைத்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
22. அட்சய திருதியை நாளில் தான் மதுரை மீனாட்சியை சுந்தரேஸ்வரர் மணந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
வேலை கிடைக்க அருள் தரும் தேவியின் மந்திரம்!
23. அமாவாசைக்கு 3-வது நாள் அட்சய திருதியை 3-ம் எண்ணுக்கு அதிபதி குரு, இந்த குரு உலோகத்தில் தங்கத்தை பிரதிபலிக்கிறார். எனவே குருவுக்கு `பொன்னன்’ என்ற பெயரும் உண்டு. இதனால் தான் அட்சய திருதியை நாளில் பொன் வாங்குவது சிறப்பு பெறுகிறது.
24. ஒரு தடவை சாபம் பெற்றதால் சந்திரன் தேய்ந்து தேய்ந்து அமாவாசை ஆகி விட்டார். மனம் திருந்திய சந்திரன் அட்சய திருதியை தினத்தன்று அட்சயவரம் பெற்றார். மீண்டும் அட்சய தினத்தில் இருந்து வளரத் தொடங்கினார்.
25. அரிதான வேலையை சந்திப்பதை `அலப்ய யோகம்‘ என்கிறது சாஸ்திரம். அட்சய திருதியை, அலப்ய யோகத்தில் சேரும், ஆகவே அரிதான அட்சய திருதியை தவறவிட்டால் பிறகு ஒரு வருடம் காத்திருக்க வேண்டும்.
26. அட்சய திருதியைக்கு இன்னொரு காரணமும் சொல்வர். அதாவது அடிபடாத இரண்டாக உடையாத முழு அரிசிக்கு `அட்சதை’ என்று பெயர். சதம் என்றால் அடிப்பட்டு ஊனமாகாதது என்ஞறும் அர்த்தம் உண்டு. அட்சதையால் அட்சயனை மதுசூதனை வணங்குவதால் அந்த திதிக்கு `அட்சய திருதியை’ எனும் பெயர் அமைந்ததாகச் சொல்கிறது புராணம்.
இந்த அக்சய திருதியை தங்கம் வாங்க சிறந்தது அல்ல... ஜோதிடர்கள் கூறும் முக்கிய காரணம்
27. அட்சய திருதியை தினத்தை சமணர்கள் “அட்சய தீஜ்’’ என்றழைக்கிறார்கள்.
28. ரிஷபதேவர் எனும் தீர்த்தங்கரரின் நினைவு நாளாக அட்சய திருதியை தினத்தை சமணர்கள் அனுசரிக்கிறார்கள்.
29. அட்சய திருதியை விரதத்தை முதன் முதலில் கடைபிடித்தவர் மகாதயன் என்ற வியாபாரி ஆவார்.
30. மகாலட்சுமியின் பரிபூரண அருளை ஒவ்வொருவரும் பெற வேண்டும் என்பதே அட்சய திருதியை பண்டிகையின் முக்கிய நோக்கமாகும்.
31. அட்சய திருதியை அன்று அதிகாலையில் நீராடி ஸ்ரீமந்த் நாராயணனின் நாமங்களை சொல்லி புதிய செயல்களை தொடங்க வேண்டும்.
32. குழந்தைகளுக்கு கல்வி கொடுக்கும் அட்சராயப் பியாசம் செய்யும் சடங்கு `அட்சய திருதியை’ நாளில் செய்யப்படுகிறது.
33. மகாலட்சுமி திருமாள் மார்பில் நீங்காமல் இருப்பதற்காக அட்சய திருதியை தினத்தன்றுதான் சிறப்பு வரம் பெற்றாள்.
34. கும்பகோணம் பட்டீஸ்வரர் அருகில் உள்ள முழைநர் ஸ்ரீபரசுநாதர் கோவிலில் அட்சய திருதியை தினத்தன்று சிவபெருமானுக்கு காசு மாலை அணிவித்து குபேர பூஜை நடத்துவார்கள். அப்போது சிவனை தரிசித்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
35. தமிழ்நாட்டில் அட்சய திருதியை விழா திருப்பரங்குன்றம், திருச்சோற்றுத்துறை விளங்குளம் கோவில்களில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
36. அட்ச திருதியை தினத்தில் செய்யப்படும் பித்ரு தர்ப்பணம் பல தலைமுறைக்கு முந்தைய நமது மூதாதையர்களுக்கும் போய் சேரும் என்பது ஐதீகம். எனவே அட்சய திருயை தினத்தன்று செய்யப்படும் பித்ருகடன் மிகமுக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
37. வாசுதேவரை வணங்கி அன்னதானம் செய்வதும், கங்கையில் குளிப்பதும் அட்சய திருதியை நாளில் கூடுதல் பலன்களை தரும்.
38. மேற்கு வங்காளத்தில் அட்சய திருதியை தினத்தன்று தான் விநாயகரையும், லட்சுமியையும் வணங்கி புது கணக்கு தொடங்குகிறார்கள்.
மகாபாரதத்தில் நீங்கள் அறியாத பல அற்புதமான கதாபாத்திரங்களின் கதைகள்.
39. ஏழுமலையான் தன் திருமணத்துக்கு குபேரனிடம் கடன் வாங்கியதாக புராணம் சொல்கிறது. அவ்வளவு பெரிய பணக்காரனான குபேரன் அட்சய திருதியை தினத்தன்று மகாலட்சுமியை மனம் உருகி வணங்கி செல்வத்தை பெருக்குவதாக ஐதீகம். எனவே அட்சய திருதியை தினத்தன்று குபேர லட்சுமி பூஜை செய்வது செல்வம் தரும்.
40. அட்சய திருதியை தினத்தன்று அதிகாலை விஷ்ணு பூஜை செய்வது அளவிடற்கரிய பலன்களைத்தரும்.
41. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் தானங்களில் அன்னதானம் மிக உயர்வாக கருதப்படுகிறது.
42. அட்சய திருதியை அன்று லட்சுமி படத்துக்கு ஒரு முழம் பூ வாங்கிப்போட்டு, மனதார பிரார்த்தனை செய்தாலே போதும், “கனகதாரை’’ நிச்சயம் உங்கள் வீட்டிலும் செல்வம் பெருக செய்வாள்.
43. அட்சய திருதியை தினத்தன்று மிருத்யுஞ்ஜய மந்திரத்தை எழுதி குழந்தைகளின் தலையணை அடியில் வைத்தால் கண் திருஷ்டி கழியும்.
44. அட்சய திருதியை அன்று வீட்டின் நான்கு மூலைகளிலும் சோழிகளை போட்டு வைப்பது மரபு. இது செல்வத்தை கொண்டு வரும் அம்சமாகும்.
45. அட்சய திருதியை தினம் சத்ருசாந்தி பூஜைக்கு ஏற்ற தினமாகும். இதனால் எதிரிகளின் தொல்லை ஒழியும்.
46. அட்சய திருதியையன்று மிருத சஞ்ஜீவினி மந்திரம் ஜெபித்தால் நோய்களின் வீரியம் குறையும்.
47. அட்சய திருதியை தினத்தன்று சிவனே, அன்ன பூரணியிடம் உணவு பெற்றதால் நமசிவாய மந்திரம் அன்று முதல் சொல்லத்தொடங்கலாம். பிறகு தினமும் 108 தடவை ஓம் நமச்சிவாய சொல்லி வந்தால் பார்வதி-பரமேஸ்வரரின் அருள் கிடைக்கும்.
48. அட்சய திருதியை தினத்தன்று பவானி சங்கமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள முக்கூடல் புண்ணியத் தீர்த்தத்தில் நீராடினால் நமது எல்லா பாவங்களும் விலகிவிடும் என்பது ஐதீகம்.
49. கர்நாடக மாநிலத்தில் அட்சய திருதியை தினத்தன்று பெண்கள் ஒரு மண்டபத்தில் கலசம் வைத்து அதில் கவுரியை எழுந்தருளச் செய்து சொர்ணகவுரி விரதம் கடைபிடிப்பார்கள். இதன் மூலம் பார்வதிதேவி தங்கள் வீட்டுக்கு வருவதாக நம்புகிறார்கள்.
50. அட்சய திருதியை தினத்தன்று கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள 16 பெருமாள் கோவில்களில் இருந்து 16 பெருமாள்கள் கருடவாகனத்தில் புறப்பட்டு வருவார்கள். கும்பகோணம் பெரிய தெருவில் 16 பெருமாள்களும் ஒரு சேர அணிவகுத்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். இந்த அற்புத தரிசனம் ஆண்டுக்கு ஒரு தடவையே நடைபெறும். அன்று 16 பெருமாள்களையும் வழிபட்டால் வாழ்வில் வளம் பெருகும் என்பது நம்பிக்கை.
51. அட்சய திருதியை தினத்தன்று நெல், அரிசி, கோதுமை, தங்கம், பசுமாடு, பானகம், நீர்மோர், விசிறி, குடை போன்றவற்றை தானம் தரச் சொல்கிறது பவிஷ்ய புராணம். அன்றைக்குக் கொடுக்கப்படும் பொருட்கள், அளிப்பவருக்கு நிறைவாக பெருகும்.
52. அட்சய திருதியை நாளில் முன்னோரை நினைத்து, எள்ளும் தண்ணீரும் அளித்து வணங்க வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். தண்ணீர் நிரம்பிய குடத்தை தானமாகத்தருவது சிறப்பு என்கிறார்கள். இதனை `தர்மகடம்‘ எனப்போற்றுவர்.
53. அட்சய திருதியை நாளில், காலையில் எழுந்து நீராடி உணவு எதுவும் உட்கொள்ளாமல், கடவுளை வழிபட்டு, தானம் அளித்து, பிறருக்கு அன்னம் அளித்த பிறகே உணவை ஏற்க வேண்டும். இது மனத்தூய்மையையும் ஆரோக்கியத்தையும் ஏற்படுத்துகிறது. இதில் அறநெறியும் சேர்ந்திருப்பதால், பிறவிப்பயனும் கிடைக்கிறது.
54. அட்சய திருதியை நாளில் `வசந்த் மாதவாய நம’ என்று சொல்லி, 16 வகை உபசாரங்களால் வசந்த மாதவனை வழிபடுங்கள். முக்கியமான ஒன்று… தானம் செய்ய உகந்த நாளில் தங்கம், வெள்ளி வாங்கி சேமிப்பில் இறங்குவது சாஸ் திரத்துக்கு உடன் பாடில்லை.
55. அட்சய திருதியை தினத்தன்று ஆலம் இலையில் மிருத்யுஞ்சய மந்திரத்தை ஜெபித்து வியாபாரம் நடக்கும் கடையில் வைத்தால் வியாபாரம் பெருகும். எதிரிகள் தொல்லை நீங்கும்.
56. அட்சய திருதியை தினத்தன்று செய்யப்படும் பித்ரு பூஜை மூவாயிரம் மடங்கு நல்ல பலன்களைத் தரும்.
57. புதன்கிழமை வரும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால், அது பல கோடி மடங்கு கூடுதல் பலன்களைத் தரும்.
58. ஏழ்மையாக இருந்தாலும் அட்சய திருதியை தினத்தன்று தானம் செய்தால் செல்வம் கிடைக்கும் என்கிடைக்கும் என்று பவிஷ்ய புராணம் சொல்கிறது.
59. ஒவ்வொரு அட்சய திருதியைக்கும் தவறாமல் தானம் செய்தால் மறுபிறவியில் அரசனுக்கு இணையான செல்வந்தர்களாக பிறப்பார்கள் என்பது ஐதீகம்.
60. மகாலட்சுமியின் அருள் பெற வேண்டுமானால், அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து, பூஜை அறையில் விளக்கு ஏற்றி வணங்கி, மகாலட்சுமி பெயரை உச்சரித்தாலே போதும். செல்வம் தானாக தேடி வரும்.
சிந்தித்து பார்த்தால் உண்மை புரியும்!
ஞானி ஒருவர் ஒரு ஊருக்கு சென்றார். பலர் வந்து அவரை தரிசித்து ஆசி பெற்று சென்றனர்.
இளைஞன் ஒருவன் வந்தான் ” சாமி எனக்கு ஒரு சந்தேகம் ” உங்களைப் போன்று பல ஞானிகளும் பெரியோர்களும் வந்து மனித குலத்திற்கு பல அறிவுரைகள் சொல்லியுள்ளனர்.
ஆனால் இன்றும்
மனிதன் தீய வழியில் தான் செல்கிறான் , உங்களைப் போன்றவர்களின் அறிவுரைகளால் என்ன பயன்? என்று கேட்டான்.
ஞானி அவனிடம் சொன்னார். தம்பி நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கி இருப்பேன், நான் இந்த ஊரை விட்டு செல்லும் பொழுது நீ கேட்ட கேள்விக்கு பதில் சொல்கிறேன் , அதற்கு முன் ஒரு வேலை செய் ” ஒரு கழுதையை கொண்டு வந்து இந்த கோயில் மண்டபத்தில் கட்டி வை நான் ஊரைவிட்டு செல்லும் வரை கழுதை அங்கே கட்டி இருக்கட்டும்,
தினமும் இரவு அதற்கு உணவு வைத்து விடு ” என்று சொல்லி விட்டு அருகில் உள்ள சத்திரத்துக்கு சென்றார் .
மறுநாள் காலை ஞானி அந்த கோயில் மண்டபத்திற்கு வந்தார். அப்பொழுது அந்த இளைஞன் அந்த கழுதையை சுத்தி இருந்த சாணத்தையும் , அது மிச்சம் வைத்த உணவு குப்பைகளையும் சுத்தப்படுத்திக் கொண்டு இருந்தான் .
இவ்வாறு நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தன. அடுத்த நாள் காலை சுத்தப்படுத்திக் கொண்டிருந்த இளைஞர் கிட்டே வந்தார் ஞானி.
தம்பி நீ தினமும் இந்த இடத்தை சுத்தப் படுத்தினாலும் கழுதை மீண்டும் மீண்டும் அசுத்தம் செய்து விடுகின்றதே ,பிறகு ஏன் தேவை இல்லாமல் இந்த இடத்தை மீண்டும் மீண்டும் சுத்தம் செய்கிறாய்? என்று கேட்டார்.
அதற்கு அவன் என்ன சாமி எல்லாம் தெரிஞ்ச நீங்க இப்படி கேட்கறீங்க? திரும்ப திரும்ப அசுத்தம் ஆவுதுங்கிறதுக்காக இந்த இடத்தை சுத்தப்படுத்தாம இருக்க முடியுமா?என்றான்
இதை கேட்ட ஞானி அப்போது சொன்னார் ” தம்பி அன்று நீ என்னிடம் கேட்ட கேள்விக்கு இதுதான் பதில்.
நீ இப்போது செய்யும் வேலையைத் தான் நானும் செய்து வருகின்றேன்.
அசுத்தமான இடத்தை நீ மீண்டும் மீண்டும் சுத்தம் செய்வது போல் , மனிதனை நல்வழி படுதும் செயலை எங்களைப் போன்ற பெரியோர்கள் இடைவிடாமல் செய்து வருகிறோம்.
இளைஞன் ” சாமி இதற்கு நிரந்தர தீர்வதான் என்ன ?என்று கேட்டான்.
அவர் உடனே அங்கு கட்டி இருந்த கழுதையை அவிழ்த்து விட்டு விரட்டினார்.
பின்பு அந்த இளைஞனைப் பார்த்துக் கேட்டார்
“இனி இந்த இடம் அசுத்தம் ஆகுமா? என்றார்
ஆகாது சாமி. என்றான்.
ஞானி கூறினார் ” உன் கேள்விக்கு இதான் பதில் .
நீ செய்த வேலையைப் போல் நாங்கள் மீண்டும் மீண்டும் சுத்தப்படுத்திக் கொண்டு இருக்கிறோம் .
இப்பொழுது நான் செய்த வேலையைப் போல் என்று மனிதன் தன்னிடம் இருக்கும் தீய எண்ணம் என்ற கழுதையை வாழ்வில் இருந்து விரட்டி விடுகிறானோ,அப்பொழுதே எங்களின் சுத்தம் படுத்தும் கடமை முடிந்து விடும்,அதுவரை மனிதனை நன்னெறி படுத்துவது ஆன்மிகத்தின் கடமை என்றார் .
எனவே தீய வழியில் செல்லும் கடைசி மனிதன் திருந்தும் வரை நாமும் இந்த மாதிரி ஆன்மீக கதைகளை பகிர்வோம்.
நல்லதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்.
*நான் குழம்பவும் இல்ல... குழப்பவும் இல்ல...* *முடிஞ்சா நீங்க தெளிவா இருங்க...!*
*கல்யாணிக்கு கல்யாணம் பண்ண*
*கல்யாணியோட அப்பா கல்யாணசுந்தரம்*
*கல்யாணிக்கு* *கல்யாணம் என்கிற மாப்பிள்ளைய*
*கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணார்.*
*கல்யாணிக்கு கல்யாணம் புடிக்காம கல்யாணத்த வேணான்னு சொல்ல...*
*கல்யாணி கல்யாணத்த புடிக்காமதான் கல்யாணமே வேணான்னு சொல்றதா நினைத்து,*
*கல்யாணியோட அப்பா கல்யாணசுந்தரம்,* *கல்யாணியின் கல்யாணத்துக்கு*
*கல்யாணம் வேணான்னு கல்யாணராமன் என்கிற மாப்பிள்ளைய பாக்க,*
*கல்யாணி கல்யாணமே வேணான்னு கல்யாணராமன் கிட்ட சொல்ல...*
*கல்யாணியோட அப்பா, கல்யாணி கல்யாணத்த எப்படி நடத்துவார்?..* *நல்லா யோசிங்க...*
கல்யணம் வேணாமுனனு கல்யாணி சொன்னாலும்
கல்யாணிய கல்யாணத்துக்கு பிடிச்சுப் போக
கல்யாணிய கல்யாணம் பண்ணியேத் தீரனும்னு கல்யாணம் தீவிரமா கல்யாண ஏற்பாட்டை செய்ய
கல்யாணத்த கல்யாணம் பன்றது பிடிக்காத கல்யாணியோ கல்யாணத்த நிறுத்த கல்யாணத்துக்கிட்ட எவ்வளவோ கெஞ்ச ..
எந்த கெஞ்சலும் காதில் வாங்காம கல்யாணத்துக்கு ஏற்பாடு பண்ணான் கல்யாணம் .. அந்த கல்யாணத்த நிறுத்த போராடிய கல்யாணி இந்த கல்யாணத்த நிறுத்த ஒரே வழி கல்யாணத்தன்னிக்கு ஓடிப்போறதுதான் வழினு நினைக்க .. கல்யாணம் தடபுடலா செஞ்சு கல்யாணத்துக்கே கல்யாணியும் ஓடிப்போக .. கல்யாணத்தோட கல்யாணம் கல்யாணம் ஆகாமலே நின்றுப் போச்சாம்
சிறுவாபுரி முருகனை நினைத்தாலே வேண்டியது கிடைக்கும்.
சென்னைக்கு வடமேற்கே சென்னை கொல்கத்தா நெடுஞ்சாலையில் மேற்கே பிரியும் 33வது கிலோ மீட்டரில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமி ஆலயத்தின் தோரண வாயில் அமைந்துள்ளது.
இங்கிருந்து 3 கி.மீ தொலைவில் சின்னம்பேடு என்று தற்போது அழைக்கும் இடத்தில் இந்த ஆலயம் அமைந்துள்ளது.
செங்குன்றத்திலிருந்து 15 கி.மீ. தொலைவில் தச்சூர் கூட்டு சாலை சந்திப்பு உள்ளது. அங்கிருந்து 3 கி.மீ தொலைவு சென்றால் ஆலயத்திற் குச் செல்லும் வழியை அடையலாம்.
செங்குன்றத்திலிருந்து செல்ல வாகன வசதிகள் உண்டு. நுழைவு வாயிலைக் கடந்து ஆலயத்தை நோக்கிச் செல்லும்போது இரண்டு பக்கமும் பசுமையான நிலங்களும் வாழைத் தோப்புகளும் காணும்போது கண்களுக்குக் குளிர்ச்சியாக இருக்கும்.
செல்லும் வழியில் சப்தமாதா ஆலயம், அகத்தீஸ்வரர் ஆலயம், பெருமாள் ஆலயம், விஷ்ணு துர்க்கை ஆலயம் என எண்ணற்ற ஆலயங்கள் இருக்கும் இடத்தில் வடக்குவாயு மூலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணியர் கம்பீரமாக எழுந்தருளியுள்ளார்.
சிறுவாபுரி முருகன் அபிஷேகத்தின் போது பார்க்க, அவர் மாமன் பெருமாளைப் போல இருக்கிறார்.
ஒரு நிமிடம் உங்கள் கண்களை மூடி எதிரே சிறுவாபுரி முருகனை காண்பித்தால் ஏதோ பெருமாள் கோவிலின் கருவறைக்கு முன்னே நின்று கொண்டிருக்கிறீர்கள் என்றே தோன்றும்.
திருமலையில் ஸ்ரீனிவாசன் எப்படி நிற்கிறாரோ அதே போல இவரும் நிற்கிறார்.
முருகப் பெருமான் வள்ளியைத் திருமணம் செய்யச் செல்லும் வழியில் சிறுவாபுரியில் இளைப்பாறிவிட்டுச் சென்றார் என்றும் இந்த ஆலயத்தில் தங்கி அமுது உண்ட இந்திரன் மற்ற தேவர்களுக்கு வீடுபேறு கிடைக்க வேலவன் அருள் புரிந்தார் என்றும் தல வரலாறு கூறுகிறது.
திரேதா யுகத்தில் இராமர் அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்டார். அப்போது யாகப் பசுவாக அனுப்ப வேண்டிய குதி ரையை ஏவிவிட்டார்.
அந்தக் குதிரை வால்மீகி முனிவர் ஆசிர மத்திற்கு வர, அங்கு வளர்ந்த இராமரின் பிள்ளைகள் லவனும் குசனும் அந்தக் குதிரையைக் கட்டிப் போட்டனர்.
இதனை அறிந்த இராமர் உடனே லட்சு மணனை அழைத்து குதிரையை மீட்டு வரச் சொன்னார்.
அது முடியாமல் போகவே, இராமரே நேரில் சென்று சிறுவர்களிடம் போரிட்டு அவர்களை வென்று குதிரையை மீட்டுச் சென்றார். இராமரிடம் லவனும் குசனும் போர் செய்த இடமே சிறுவாபுரி. இது இராமாயணச் செய்தியாகும்.
அருணகிரி நாதர் நான்கு திருப்புகழ்ப் பாடல்களால் இந்த அழகு முருகனைப்பற்றிப் பாடியுள்ளார் என்றால் இந்த ஆலயம் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பே இருந்தி ருக்கிறது என்பதை அறியலாம்.
முருகம்மையார் என்ற முருக பக்தர் சிறுவா புரியில் வாழ்ந்து வந்தார். இந்த அம்மையார் எப்போதும் முருகன் நாமத்தையே உச்சரித்து வந்தார்.
இதனைப் பொறுக்காத இவரின் கணவர் தன் மனைவி முருகம்மையாரின் கரங்களை வெட்டினார். உடனே முருகா என்று அம்மையார் முருகனை நினைத்து அழுதார்.
விரைவில் முருகன் அம்மையாருக்கு தரி சனம் தந்து வெட்டிய கரத்தை மீண்டும் பழையபடியே சேர்த்து வைத்தார். இந்த அற்புதம் இந்தத் தலத்தில்தான் நடந்தது.
இதனை தவத்திரு முருகதாச சுவாமிகள் பாடல் மூலமாக எழுதியுள்ளார். இந்த ஆலய இராஜ கோபுரம் ஐந்து நிலை களுடன் கம்பீரமாக வருக வருக என்று கூறி பக்தர்களை அழைக்கிறது.
உயரமான கொடி மரத்திற்கு முன்னால் மரகதப் பச்சை மயில் வீற்றிருக்கிறது. இதைப் போன்ற பச்சைமயில் அமைப்பு வேறெங்கும் காண முடியாது.
இந்த ஆலயத்திலிருந்து வெளியில் வரும் வழியிலிருந்து மரத்தால் படிக்கட்டுகள் அமைந்துள்ளன. அந்தப் படிக்கட்டுகள் வழியாக ஏறித்தான் மூலவரை தரிசிக்க முடியும்.
தரிசிக்கும் வழியில் தெற்கு மூலையில் மரகதக் கல்லில் சூரியன் சந்நிதியும் கிழக்கே இராஜகணபதி மரகதக் கல்லில் காட்சி அளிக்கும் சந்நிதியும் உள்ளன.
அடுத்து அண்ணாமலையார். மரகதப் பச்சையில் சந்நிதி கொண்டுள் ளார். அடுத்து முருகன் வள்ளியுடன் திருமணக் கோலத்துடன் காட்சி தருகிறார்.
நீண்ட காலம்திருமணம் நடக்காதவர்கள் இந்தச் சந் நிதியில் வந்து பூஜைகளும் வழிபாடுகளும் பரிகாரங்களும் செய்தால் விரைவில் திருமணம் கைகூடி வரும்.
அடுத்து உண்ணாமுலை அம்மன் சந்நிதியில் அனைவரும் பிரார் த்தனை செய்யலாம். அடுத்து ஆலயத்தைச் சுற்றி வரும் வழியில் ஸ்ரீ மரகத விநாயகர் சந்நிதியும், அருகில் மகிழம்பூ மரமும் உள்ளன.
ஆதிமூலவர் பாலசுப்பிரமணியர் சந்நிதியில் அர்ச்சனை செய்யப்படுகிறது. இந்த முருகர் மிக மிக எளிமை யானவர். எதிர்பார்ப்பு அற்றவர்.
இத்தலத்திற்கு வருபவர் கடுமையாக விரதமிருந்து பசி பட்டினியுடன் தரிசிக்க வேண்டியதில்லை. இங்கு நேரில் வரவும் வேண்டியதில்லை.
திருவண்ணாமலையை நினைத் தாலே முக்தி என்பது போல, சிறுவாபுரி முருகனை நினைத்தாலே, வேண்டியது கிடைக்கும் என்பது நம்பிக்கை.
புதிதாக வீடு கட்ட விரும்புபவர்கள் இங்கு வழிபாடு செய்வது சிறப்பு. முனீஸ்வரர் சந்நிதியும் அபி ஷேக மண்டபமும் உள்ளது. பைரவர், சண்டிகேஸ்வரர், ஸ்ரீவெங்கட்ராயர் ஆகியோர்க்கும் தனிச்சந்நிதிகளும் ஈசான்ய மூலையில் நவகிரகங்களும் அமைந்துள்ளன. ஆலயத்தின் பின்புறம் அன்னதானக்கூடமும் திருக்குளமும் உள்ளன.
துதிக்காதவர்களைக் கூட தடுத்தாட்கொள்பவன் தண்டபாணி. துதிப்பவர்களை விட்டுவிடுவானா?
செங்கேழ் அடுத்த சின வடி வேலும் திரு முகமும் பங்கே நிரைத்த நற் பன்னிரு தோளும் பதும மலர்க் கொங்கே தரளம் சொரியும் செங்கோடைக் குமரன் என எங்கே நினைப்பினும் அங்கே என்முன் வந்து எதிர் நிற்பனே வான்முகில் வழாது பெய்க மலிவளம் சுரக்க மன்னன் கோன்முறை அரசு செய்க குறைவிலா துயிர்கள் வாழ்க நான்மறை அறங்கள் ஓங்க நற்றவம் வேள்வி மல்க மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலக மெல்லாம்.
இன்றைய நாள் இனியதாக ஆனந்தமாக ஆரோக்யமாக அமைதியாயக அமோகமாக அமைய
வாழ்த்துகள்
.ஏழுமலையான் ................
தோல் நோய் உள்ளவர்கள், மன அழுத்தம் மற்றும் மன நிலை பாதிக்கப் பட்டவர்களுக்கு இத் திருக்கோயில் சிறந்த பரிகாரத் தலமாகும்.
ஸ்ரீய: காந்தாய கல்யாண நிதயே நிதயேர்த்தினாம்
ஸ்ரீவேங்கட நிவாஸாய ஸ்ரீநிவாஸாய மங்களம்”
ஸ்ரீ வேங்கடாசலாதீஸம் ஸ்ரீயாத்யாஸித,
வக்ஷஸம் ஸ்ரிதசேதன மந்தாரம் ஸ்ரீநிவாஸமஹம் பஜே ... !!!
அனைத்து மங்கலங்களையும் அளிப்பவரே,
வேண்டுபவர் வேண்டும் வரங்களை எல்லாம் வழங்குபவரே,
மதிப்பிட முடியாத பெரும் புதையல் போன்றவரே நமஸ்காரம்.
மகாலட்சுமி வசிக்கும் அழகிய மார்புடையவரே,
துதிப்போர் அனைவருக்கும் கற்பக விருட்சம்போல நன்மைகளை பொழிபவரே, ஸ்ரீநிவாஸா, நமஸ்காரம்.
ஸ்ரீவேங்கட ஸ்ரீநிவாஸா
நின் திருவடிகளே
சரணம் ! சரணம் !!
Subscribe to:
Posts (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
கேட்டவர் இளையராஜா- கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...