Thursday, September 1, 2022

*கடவுளின் அவதாரங்களே மரணித்த போதும் என்றும் சிரஞ்சீவியாக வாழும் 8 பேர்*

 *#என்றும்_சீரஞ்சீவி_என்று_வரம்_பெற்றவர்கள்_எட்டு_பேர்கள்*

*1.அனுமன்*
*2.விபீஷணர்*
*3.க்ருபாசார்யார்*
*4.மகாபலி சக்கரவர்த்தி* *5.மார்க்கண்டேயர்*
*6.வேத வியாசர்*
*7.பரசுராமர்*
*8.அசுவத்தாமன்*
இராமரின் தீவிர பக்தனாக இருந்த வாயுபுத்திரன் அனுமன் இராவணனுக்கு எதிராக இராமர் நிகழ்த்திய போரில் ராவணனை கொல்ல முக்கிய காரணமாக இருந்தார். இவர் மகாபாரத போரிலும் அர்ஜுனின் தேரில் உள்ள கொடியில் இருந்தார். யுகங்கள் பல கடந்தும் இன்றும் இவர் சிரஞ்சீவியாக இவ்வுலகில் வாழ்ந்து வருவதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. அதற்கு காரணம் இராமர் ஆஞ்சனேயருக்கு அளித்த சாகா வரமும், அவர் இட்ட அன்பு கட்டளையும்தான்.
விஷ்ணுவின் ஆறாவது அவதாரம் பரசுராமர். அனைத்து போர்கலைகளுக்கும், வேதங்களுக்கும், திவ்ய அஸ்திரங்களுக்கும் இவர்தான் முன்னோடி ஆவார். கல்கி புராணத்தில் சொல்லியுள்ளபடி உலகம் அழியும் தருணத்தில் இவர் மீண்டும் வருவார். அதன்பின் தோன்ற போகும் திருமாலின் இறுதி அவதாரத்திற்கு அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து திவ்ய அஸ்திரங்கள் பெற உதவி மனிதகுலத்தை காப்பாற்றுவார் என கல்கி புராணத்தில் கூறப்பட்டுள்ளது.
அஸ்வத்தாமன் பெற்ற இந்த சாகாவரமானது அவனின் நல்ல செயலுக்காக வழங்கப்பட்டதல்ல. அவன் பெற்ற இந்த சாகா வரம் வரம் என்பது அவனுக்கு அளிக்கப்பட்ட சாபமாகும். இந்த சாபமானது பகவான் ஸ்ரீ கிருஷ்ணரால் அஸ்வத்தாமனுக்கு வழங்கப்பட்டது.
மகாபாரதத்தில் பாண்டவர்களின் ஐந்து பிள்ளைகளையும் கொன்று வெறி அடங்காத அசுவத்தாமன் அர்ஜுனனின் மகனும் அபிமன்யுவின் மனைவியுமாகிய உத்திரையின் கருவில் இருந்த குழந்தையை கொல்ல பிரம்மாஸ்திரத்தை பிரயோகித்தான். மன்னிக்க முடியாத இந்த குற்றத்தை செய்ததற்காக கிருஷ்ணர் அவனுக்கு மரணம் நேரக்கூடாது என சபித்து விட்டார். அஸ்வத்தாமன்வாழும் காலம் முழுவதும் வலியுடனும், வேதனையுடனும் சாகாமல் வாழ வேண்டுமென்று அவர் இந்த சாபத்தை கொடுத்தார்.
இவரை மகாபலி என்றும் கூறுவார்கள். மூன்று உலகத்தையும் ஆண்ட இவர் அசுர குல அரசன் பிரகலாதனின் பேரன் ஆவார். ஒவ்வொரு வருடமும் ஓணத்தின் போது மகாபலி சக்கரவர்த்தி தன் மக்களை பார்ப்பதற்காக வருவார் என்று கேரளத்தில் நம்பப்படுகிறது. இவருக்கு சாகாவரத்தை கொடுத்தது திருமால் ஆவார்.
விபீஷணன் இராவணனின் சகோதரன் ஆவார். இராமாயண போர் தொடங்கும் முன்பே விபீஷணன் தன் அண்ணன் ராவணனின் செயல் பிடிக்காமல் இராமர் பக்கம் சென்று விட்டார். போரின் முடிவில் இராமர் கையால் இராவணன் கொல்லப்பட்ட பிறகு இவர் இலங்கையின் அரசனாக முடிசூட்டப்பட்டார். இவர் மகாயுகம் முடியும் வரையான நீண்ட காலம் வாழும் வரத்தை பெற்றிருந்தார்.
மிகப்பெரிய ஞானி, முனிவர் மகாபாரதம் என்னும் மாபெரும் இதிகாசத்தை கொடுத்த வியாசரும் சாகாவரம் பெற்றவராவர். ஞானம் மற்றும் அறிவாற்றலின் சின்னமான இவர் பராசர முனிவரின் மகனும், வசிஷ்ட மகரிஷியின் பேரனும் ஆவார். தீதாயுகத்தின் கடைசியில் பிறந்த இவர், துவாபர யுகம் முடிந்து, கலியுகத்திலும் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.
இவர் சந்தனு மன்னனால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டவர். போர்க்கலைகளையும், வேதங்களையும் கற்ற இவர் பின்னாளில் இளவரசர்களுக்கு குருவாக மாறினார். பாரத போரின் முடிவில் கௌரவர்கள் சார்பில் இருந்த ஒரே வீரர் இவர்தான். குரு வம்சத்தின் கடைசி வாரிசான அபிமன்யுவின் மகனான பரிக்ஷித்துக்கு எல்லா கலைகளையும் கற்றுக்கொடுத்தது இவர்தான்.
மார்க்கெண்டேயன் சிவபெருமானின் தீவிர பக்தர் ஆவார். இவருக்கு மரணமில்லா பெரு வாழ்வை சிவபெருமானும், எமதர்மனும் வழங்கினர். மரணமில்லா வாழ்வு மட்டுமின்றி என்றும் இளமையாக இருக்கும் வரத்தையும் இவர் பெற்றுள்ளார். தன் பக்தருக்காக சிவபெருமான் எந்த எல்லைக்கும் செல்வார் என்பதற்கு மார்க்கெண்டேயனின் கதை ஒரு சிறந்த உதாரணமாகும்.🙏🌹
May be an image of 1 person and text that says 'Vyasa Vibhishana Hanuman The 8 Chiranjivis Mahabali Kripacharya Parashurama Markandeya @alifeofinterest Ashwatthama'

ஆம் சரி.............

 ஒரு அதிகாலைப்பொழுது

கணவன் மனைவியை
எழுப்பி கேட்டான்.
"டியர்... யோகா பண்ணப்போறேன்... நீயும் வர்றியா?"
கணவனை வித்தியாசமாக பார்த்த அந்த மனைவி, "ஓ...
அப்படின்னா நான் குண்டா இருக்கேன்! உடம்பை குறைன்னு சொல்றீங்க..அப்படி தானே?"
கணவன்:
"அதுக்கில்லைம்மா
யோகா பண்றது
ஹெல்த்துக்கு நல்லது!"
மனைவி: "அப்போ என்னை நோயாளின்னு சொல்றீங்களா?"
கணவன்: "இல்லை இல்லை! நீ வரவேணாம். விடு!"
மனைவி: "அப்ப என்னை சோம்பேறின்னு நினைக்கிறீங்க!"
கணவன்: "ஐயோ இல்லை! ஏன் எல்லாத்தையும் தப்பாவே புரிஞ்சுக்கிற?"
மனைவி: "இவ்வளவு நாளா புரிஞ்சுக்காம தான் இருந்தேனா?"
கணவன்: "மறுபடி பாரு..
நான் அப்படி சொல்லலை!"
மனைவி: அப்படிதான் சொன்னீங்க! அப்ப என்ன நான் பொய் சொல்றேனா?"
கணவன்: "தயவு செஞ்சு விடு! காலங்காத்தால ஏன் சண்டை?"
மனைவி: "ஆமாங்க... நான் சண்டைக்காரிதான்!"
கணவன்: "ஓகே! நானும் போகலை. போதுமா?"
மனைவி:
"உங்களுக்கு போக அலுப்பு!
அதுக்கு என்னை குத்தம் சொல்றீங்க”
கணவன்: "சரி, நீ தூங்கு! நான் தனியா போய்க்கிறேன்! சந்தோஷமா?"
மனைவி: "அதானே... உங்களுக்கு எங்க போனாலும் தனியா போய் என்ஜாய் பண்ணணும்! அதுக்குதானே இவ்வளவும் பேசுனீங்க?"
கணவன்: வேணா.. நான் அழுதுருவேன்
மனைவி அப்ப நான் தான் உங்களை அழ வைக்கிறேனா..
கணவன்:?????????
😒🥲😂😅😭🤣🤔
திருமணமான ஆண்களுக்கு இப்பதிவு சமர்ப்பணம்!

ஒரு உண்மைச் சம்பவம் -

 தனது ஒன்பதாவது வயதில் தன் உடன் படித்த நண்பர்களோடு அந்தச் சிறுவன் _

தனது திருநகர் வீட்டிலிருந்து தினந்தோறும் திருப்பரங்குன்றம் சென்று முருகனை வழிபடுவது வழக்கம் -
அன்றும் அவன் வீதியில் சென்று கொண்டிருந்த பொழுது -
கிறிஸ்த்துவப் பாதிரியார் ஒருவர் மெகா போனை வைத்துக் கொண்டு மதப் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார் -
அந்தப் பிரசங்கத்தில் இந்து மதக் கடவுள் வழிபாட்டைக் குறை சொல்வதற்காக -
"ஏ.,.மானிடர்களே, நீங்கள் நடக்கின்ற சாலைகளிலே போடப்பட்டிருப்பது கல், உங்கள் வீட்டு வாயிற்படியில் போடப்பட்டிருப்பதும் கல், குளக்கரையில் துணி துவைக்க பயன்படுவதும் கல், நீங்கள் வணங்கும் கடவுள் அதுவும் கல்," -
"ஒரு காலத்தில் உங்கள் கால் பட்ட கல்லைத்தான் இப்பொழுது கோவிலில் வைத்துக் கடவுள் என்று சொல்கிறார்கள் " -
அதற்கு சக்தியுமில்லை, வணங்குகிற உங்களுக்குப் புத்தியும் இல்லை -
என்று பாதிரியார் பேசிக் கொண்டே போகிறார் -
இடையில புகுந்த அந்தச் சிறுவன் அவரது பேச்சைத் தடுத்து நிறுத்தி _
"எனக்கொரு சந்தேகம், கொஞ்சம் விளக்க முடியுமா?" என்று கேட்க -
அந்தச் சிறுவனை ஏற இறங்கப் பார்த்து கூடியிருந்த கூட்டத்தை நோக்கி "மகாகனம் மிக்க மக்களே, இதோ இந்தச் சிறுவன் என்னிடம் கேள்வி கேட்கப் போகிறான், நான் இப்பொழுது அவன் கேள்விகளுக்கு விளக்கமளிக்கப் போகிறேன். உங்கள் கவனத்தை என்பால் திருப்புங்கள்" என்றார் -
சிறுவன் கேட்டான் -
நமக்குப் பின்னால் பிறந்த ஒரு பெண்ணை என்னவென்று சொல்வோம்? -
" தங்கை என்போம், தமக்கை என்போம், சகோதரி என்போம் - என்றார் பாதிரியார்_
"நம்மைப் பெற்றவளை எப்படிச் சொல்வோம்?" _
"தாய் என்போம், அன்னை என்போம், அம்மா என்போம்" -
"நாம் மணந்து கொள்ளும் ஒரு பெண்ணை?" -
"மனைவி என்போம், துணைவி என்போம், இல்லத்தரசி என்போம்" -
இந்த மூன்று உறவும் உங்களுக்கு இருககிறதா?--
"தெரிந்துதான் கேட்கிறாயா? சிறுவனே _
தாயில்லாமல் யாரும் பிறக்க முடியாது -
என்ககுத் தாயும், இருக்கிறார் மனைவியும், இருக்கிறார் என்று ஏளனமாக பாதிரியார் பதிலளித்தார் -
"உடலால், உணர்வால், உறுப்புகளால் மூவரும் ஒரே தன்மை கொண்டவர்கள் தான் இல்லையா?" என்று அந்தச் சிறுவன் கேட்டான் -
பாதிரியார் "ஆமாம்" என்றதும் -
"உங்கள் மனைவியிடம் நீங்கள் நடந்து கொள்ளும் முறைக்கும், உங்கள் தாய் தங்கையிடமும் நடந்து கொள்ளும் முறைக்கும் வேறுபாடுகளும் வித்தியாசமும் இருக்கிறதா? இல்லை மூவரையும் ஒரே நோக்கோடுதான் பார்க்கிறீர்களா?" என்றதும் -
மெகா போன் கீழே விழுகிறது,
பாதிரியாரின் வாய் வார்த்தையின்றி திறந்தபடியே இருக்கிறது -
கூடியிருந்த கூட்டத்தார் பிரமிப்பும் பெருமிதமும் கொண்டு அந்தச் சிறுவனின் தோற்றத்தையும், வயதை மீறிய அறிவையும் போற்றிப் பாராட்டினர் -
பாதிரியார் தான் செய்த தவறுக்காக தன்னைக் குறுக்கிக் கொண்டு அந்தச் சிறுவன் முன் வந்து -
"தம்பி, இப்போது என் முதுகு மட்டும் உன் முன்னால் வளைந்திருக்கவில்லை, என் அறிவும் ஆணவமும் வளைந்து தான் இருக்கிறது", -
"எங்கள் மதத்தின் பால் கொண்ட ஈடுபாட்டால் சொல்லின் ஆழம் புரியாமல் பேசிவிட்டேன், மன்னித்து விடப்பா" என்று சொல்ல -
"பிற மதத்தைக் குறை சொல்லி உங்கள் மதத்தை வளர்க்கப் பார்க்காதீர்கள்" -
உங்கள் மதத்தின் மேன்மையைப் பிறருக்குப் புரிய வையுங்கள் -
பிடித்திருந்தால் அவர்கள் உங்களைத் தொடரட்டும் அதற்குத் தடையாக இங்கே எவரும் இருக்க மாட்டார்கள் -
மேலும், எல்லா மதத்திலும் மையப் பொருளாக இறைவன் தான் இருக்கிறான் என்பதையும் மறந்து விடாதீர்கள் என்றான் அந்தச் சிறுவன் -
ஒன்பது வயதில் இந்து மதத்தின் காவலராக நின்று பேசும் சாமர்த்தியம் எந்தப் பாடத்தில் அவர் படித்தது?-
இயற்கையின் வெளிப்பாடுகள் எப்படி கற்றுக் கொள்ளாமல் நடைபெறுகிறதோ, அப்படித்தான் அதுவும் -
அந்த ஞானச் சிறுவன் வேறு யாருமல்ல -
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தான் -

வாழ்வோம் மகிழ்ச்சியாக..

  30 வயசுக்கு அப்புறம், இரவும், பகலும் ஒண்ணு தான். (கொஞ்ச நாள் தூங்கலன்னா கூட சமாளிச்சிட்டு போக கத்துக்குவோம்).

40 வயசுக்கு அப்புறம், அதிகமா படிச்சிருந்தாலும், குறைவா படிச்சிருந்தாலும் ஒண்ணு தான் (குறைவா படிச்சவங்க பெரும்பாலும் முதலாளியா இருப்பாங்க, அதிகமாவும் சம்பாதிப்பாங்க).
50 வயசுக்கு அப்புறம், அழகா இருந்தாலும், அசிங்கமா இருந்தாலும், வெள்ளையா இருந்தாலும், கருப்பா இருந்தாலும் ஒண்ணு தான். (எவ்வளவு அழகா இருந்தாலும், இந்த வயசில், முகத்தில் சுருக்கங்கள், கரும் புள்ளிகள் வந்துரும்).
60 வயசுக்கு அப்புறம், மேலதிகாரி, கீழதிகாரி எல்லாரும் ஒண்ணு தான். (ரிட்டயர் ஆனப்புறம், எல்லார் நிலையும் ஒண்ணு தான்).
70 வயசுக்கு அப்புறம், பெரிய வீடோ, குட்டி வீடோ எல்லாம் ஒண்ணு தான் (மூட்டு வலி, தள்ளாமை, நடக்க முடியா நிலை எல்லாமே வந்துரும். கொஞ்ச இடத்தில் மட்டுமே புழங்க முடியும்).
80 வயசுக்கு அப்புறம், பணம் இருந்தாலும் பணம் இல்லன்னாலும் எல்லாமே ஒண்ணு தான். (அதிகமா செலவழிக்க முடியாது, தேவைகளும் குறைஞ்சிரும், ஆசைகளும் குறைஞ்சிருக்கும்).
90 வயசுக்கு அப்புறம், ஆணோ, பெண்ணோ எல்லாரும் ஒண்ணு தான் (ஆணுக்கு உரிய தன்மைகளும், பெண்ணுக்கு உரிய தன்மைகளும்.. எல்லாமே மங்கி போயிருக்கும்).
100 வயசுக்கு அப்புறம், படுத்து இருந்தாலும், நடந்துட்டு இருந்தாலும் எல்லாம் ஒண்ணு தான் (நடக்க முடிஞ்சா கூட, செய்யுறதுக்கு எந்த வேலையுமே இருக்காது).
அதனால வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்..
என்ன இருக்கோ, அதுக்காக சந்தோஷப்பட கத்துக்குவோம், இல்லாதத நினைச்சு வருத்தப்படுறத விட்டிடுவோம்
வாழ்வோம் மகிழ்ச்சியாக..

விபூதியை நெற்றியில் அணியும் போது செய்யக்கூடாதது என்ன?

 1.புகை நிற விபூதியும் பொன்னிற விபூதியும் கூடாது

2.தலையை கவிழ்த்தும் நடுங்கிகொண்டும் வாயை திறந்து கொண்டும் பேசிக்கொண்டும் பூசக்கூடாது
3.ஒருவிரலால் கண்டிப்பாக எடுக்கவோ தரிக்கவோ கூடாது
4.சண்டாளர் ,பாவிகள் முன்னும் அசுத்த நிலத்திலும் வழி நடையிலும் பூச கூடாது
5.விபூதி அணியாதவர் முகம் சுடுகாட்டிற்கு சமம்
6.ஒரு கையால் வாங்கிய விபூதியும் தீட்சை பெறாதவர் தந்த விபூதியும் பூசலாகாது
7.சுவாமியை பார்த்துக்கொண்டும் திருநீறு கொடுத்த ஆசாரியாரை பார்த்துக்கொண்டும் அக்கினியை பார்த்துக்கொண்டும் ஆற்றைப் பார்த்துக்கொண்டும் பூசக்கூடாது .திரும்பி எதிர் திசையில் பார்த்து பூசவேண்டும்
8.தீட்சை பெற்றவரும் சந்தியா காலம் தவிர மற்ற காலங்களில் உத்தூலனமாகவே பூச வேண்டும்
9. வலது கை பூசும்போது இடது கை இடுப்புக்கு கீழ் தொங்ககூடாது
10.விபூதி வைத்திருக்கும் கலயத்தை கவிழ்த்து எடுக்க கூடாது
11.விலைக்கு வாங்கிய விபூதியை பூச கூடாது
12.விபூதியை கீழே சிந்தக்கூடாது
13.கொடுப்பவர் கீழாகவும் வாங்குபவர் மேலாகவும் நின்று வாங்ககூடாது
14.திண்ணை ஆசனம் பலகை குதிரை சிவிகை இவற்றின் மீது அமர்ந்து வாங்ககூடாது
15.ஒருவர் திருநீறு தருகிறார் என்றால் வாங்க மறுக்க கூடாது
16.ஆலயங்களில் வாங்கிய திருநீற்றை தூண்களிலும் சிற்பங்களிலும் போட்டுவிட்டு வருவது ஆலயம் செல்லாததை விட கொடிய பாவசெயல்.
May be an image of cosmetics

உடுப்பி கிருஷ்ணர் திருக்கோவில்.

உடுப்பி கிருஷ்ணர் கோவில் கர்நாடக மாநிலம் உடுப்பி எனும் நகரில் அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் கிருஷ்ணர். இக்கோயிலில் மத்வ புஷ்கரிணி எனும் தீர்த்தமுள்ளது. சந்திரக் கடவுள் தனது மனைவிகளான இருபத்து ஏழு நட்சத்திரங்களுடன் கிருஷ்ணரை வழிபட்ட தலம். இங்கு நாள்தோறும் அன்னதானம் அளிக்கின்றனர்.விஸ்வகர்மாவால் செய்யப்பட்டு துவாரகையில் ருக்மிணி தேவியால் வழிபடப்பட்டு துவாரகை கடலில் மூழ்கிய போது மூழ்கி பல ஆயிரம் ஆண்டுகள் கழித்து மத்வருக்குக் கிடைத்து, மத்வராலேயே பிரதிஷ்டை செய்யப்பட்ட பாலகி ருஷ்ணரின் திருவுருவமே உடுப்பி கிருஷ்ணரின் கோயிலில் உள்ளது.தட்சனின் சாபத்தால் தனது ஒளியையும் அழகையும் இழந்து வருந்திய சந்திரன், சிவபெருமானை நோக்கி உடுப்பியில் கடும் தவம் செய்து இழந்த ஒளியையும் அழகையும் திரும்பப் பெற்றார். அப்போது சந்திரன் நிர்மாணித்த திருக்குளம் 'சந்திர புஷ்கரணி'. நட்சத்திரங்களின் அதிபதியான சந்திரன் தவம் புரிந்ததால் (உடு=சந்திரன்;பா=அதிபதி) உடுபா என்றும் பின்னர் அது மருவி உடுப்பி என்றும் ஆனது.உடுப்பி கிருஷ்ணனுக்கு வழிபாடு செய்வதற்காக எட்டு சீடர்களைத் தேர்ந்தெடுத்து கணியூர் மடம், சோதே மடம், புதிகே மடம், அத்மார் மடம், பேஜாவர் மடம், பாலிமார் மடம், கிருஷ்ணாபுரம் மடம், சிரூர் மடம் என எட்டு மடங்களையும் நிர்மாணித்து ஒவ்வொரு மடமும் இரண்டு மாதங்கள் நிர்வகிக்க வேண்டும் என்ற நடைமுறையை மத்வர் ஏற்படுத்தினார். புதிய சுவாமி மடத் தின் பொறுப்பை ஏற்கும் விழா பர்யாய வைபவம் என்று கொண்டாடப்படுகின்றது. உடுப்பியில் மிகச் சிறப்பாகக்கொண்டாடப்படும் விழாவாக இது அமைகிறது. இவ்விழாவின் போது விறகுத்தேர் அமைக்கப்படுகின்றது. இத்தேர் விறகுதான் கோயில் சமையலுக்குப் பயன்படுகின்றது. முன்பு கனகதாசர் என்ற மகான் தாழ்த்தப்பட்டிருந்த குலத்தில் பிறந்திருந்ததால் உடுப்பி கோவிலில் நுழைய அனுமதிக்கப்படவில்லை. அவர் தினமும் உடுப்பி கிருஷ்ணனின் கருவறைக்குப் பின்னால் நின்று ஏகதாரி வீணை எனும் ஒரு கம்பி மட்டும் கொண்ட வாத்தியக் கருவியை மீட்டி வழிபட்டுவந்தார். ஒருநாள் கருவறையின் பின்பக்கச் சுவரின் கற்கள் தாமாகவே விழுந்து உடுப்பி கிருஷ்ணரும் பின்புறச்சுவர் நோக்கித் திரும்பி கனகதாசருக்கு காட்சியளித்தார். கனகதாசர் கண்ணனை வழிபட வழிவகுத்த ஒன்பது துவாரங்கள் கொண்ட பலகணி கனகதண்டி என அழைக்கப்படுகிறது. பக்தர்கள் அனைவரும் கனகதாசர் கிருஷ்ணரை தரிசித்த பலகணி வழியாகவே மூலவரை தரிசனம் செய்யும் வழக்கமும் இந்நிகழ்வுக்குப் பின்னர் ஏற்பட்டது. தற்போது அதுவே நடைமுறையில் உள்ளது.
No photo description available.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...