Thursday, December 1, 2022

வேறு கதி...

 இன்று அதிகாலை எழுந்து

ஹைவேய்ஸ் கான்ட்ராக்டர்களின் பகாசுரக்கொள்ளையால்
பல்லிளித்துப்போன பால வேலை நடப்பதால்....
தொட்டுவிடும் தூரத்தில் இருக்கும் ஸ்ரீரங்கத்திற்கு
பத்து கிலோ மீட்டர் சுற்றிச் செல்லவேண்டியதாகிவிட்டது...
அதிலும் அதிகாலையில்
சென்னை பைபாஸ் ரோட்டில் டூ வீலரில் போவதெற்கெல்லாம் இப்போது அசாத்திய தைரியம் தேவைப்படுகிறது...
அது சரி சொர்க்கம் கிடைக்கவேண்டும் என்றால் சோதனைகளைக்
கடந்துதான் ஆகவேண்டும்
நண்பர்களே...
இன்று ஸ்ரீரங்கம் கோவிலுக்கு விஸ்வரூப தரிசனத்திற்கு வந்திருக்கிறேன்...
அவனன்றி ஓரணுவும் அசையாது...
நீண்டநாட்களுக்குப்பிறகு ஸ்ரீரங்கம் கோவில் பெரிய பெருமாள் விஸ்வரூப தரிசனத்திற்கு செல்லும் வாய்ப்பு....
ஸ்ரீரங்கத்து கோவில் யானை ஆண்டாள் மிக லாவகமாக அந்த மண்டபங்களுக்குள்
தன் உடலை குறுக்கி குணிந்து லாவகமாக நடந்து வருவதே ஒரு ஒய்யார அழகு!
காராம்பசுவும் கையாழிக் குதிரையும் ஆண்டாள்யானையும் பெரியபெருமாளை துயில்
எழச்செய்யும் அழகை காண கண்கோடி வேண்டும்....
அதிகாலை வேளையில் குளித்து சுத்தபத்தமாக சேவை சாதிக்கவரும் ஷ்ரேஸ்டர்களோடு நின்று "ரெங்க ஸ்ரீரெங்க" என்ற திவ்ய பாராயணம் கேட்பதே 'ஒரு பிறவியில் செய்த ஊழ்விணைகளை
உருத்தெரியாமல் அழிக்கும் உத்தமத்தவம்'!
சன்னதியில் அமர்ந்திருந்தபோது
மனம் ரெக்கை கட்டி அது இஷ்ட்டத்துக்கு பறந்தது....
நண்பர்களே
துன்பங்கள், துயரங்கள், துரோகங்கள் என்று நம்மை தொடர்ந்து துரத்தி வரும் போது நம்மால் ஏதும் செய்ய இயலவில்லை.
அதனால்தான் அவரவர் மார்க்கஸ்தலங்களுக்கு சென்று மண்டியிட்டு மருகுகிறோம்....
நம் இயலாமை காரணமாக ஏன் இப்படி? என நொந்து கொள்கிறோம்.
ஆனால் நமக்கு மட்டும் என்றல்ல.
மொத்த மனித குலமும் இப்படித் தான் துடித்து கொண்டு இருக்கிறது.
கொஞ்சம் மூச்சு விடுவது மாதிரி இருக்கும்.
ஆனால் கொஞ்ச நாளிலே வேறு ஏதோ ஒன்று எங்கேயோ இருந்து கிளம்பி வந்து நிம்மதியை குலைத்து விடும்.
ஏன் இப்படி?. எதனால் இப்படி என்று நாம் மனம் வெறுத்து என்ன செய்வது என்று புரியாது தவிக்கிறோம்.
எதுவுமே நிரந்தரம் இல்லை என்பது நன்றாகவே தெரிகிறது.
நம் மனம் விரும்பும் வகையில் நடைபெறுகின்ற பொழுது மகிழ்ந்து கொண்டாடும் நம்மால்
ஒரு சிறு கொசுக்கடியை கூட தாங்க முடியாத அளவிற்கு மன வலிமையை இழந்து விட்டோம்.
இந்த உலகத்துல எல்லோருக்கும் ஓரோரு மாதிரி பிரச்சினை.
ஒருவருக்கு உடல் சார்ந்த சிக்கல்கள் என்றால் இன்னொரு நபருக்கு பொருள் சார்ந்த பிரச்சினைகள்.
வேறொரு நபருக்கு உறவுகள் மூலம் தொந்தரவுகள்.
ஆளாளுக்கு ஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டு துன்பப் பட்டு கொண்டு இருக்கிறோம்.
இங்கு எந்த விதமான சிக்கல்களும் இல்லாத மனிதர்களே இல்லை.
நல்லவர் கெட்டவர் என்று எந்த பேதமும் இன்றி அனைத்து மனிதர்களும் இதில் சிக்கித் தான் ஆக வேண்டி இருக்கிறது.
துன்பம் அனைவருக்கும் பொதுவானது.
ஊருக்கே வைத்தியம் செய்யும் பிரபல மருத்துவரே மருத்துவமனையில் சிகிச்சை எடுக்க வேண்டிய அவசியம் வரலாம்.
அதுவே இயற்கை.
நம் எல்லோருக்கும் எல்லாமுமே சிறப்பாகவே உள்ளது.
ஆனால் அதற்காக நாம் எப்போதும் சந்தோசப் பட்டுக் கொண்டதே இல்லை.
ஆனால் எதோ சில குறைகளுக்காக வாழ்க்கையையே நொந்து கொள்கிறோம்.
சென்ற வருடம் நீட் தேர்வில் பெயில் ஆகி விடுவோமோ என்கின்ற பயத்தில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
உடனே என்ன அநியாயம் என்று அரசியல் வாதிகள் பொங்கி எழுந்து நீட்டை ஒழிக்க வேண்டும் என்று கொஞ்ச நாள் கூப்பாடு போட்டார்கள்.
அப்புறம் வழக்கம் போல் அவரவர் வேலையே பார்க்க போய் விட்டார்கள்.
நீட்டை ஒழிப்பதே என் வாழ்நாள் வேலை என்று நீட்டி முழக்கும் திமுகவின் நவீன அபஸ்வரம் வைகோவின் அரசியல் வாரிசான மல்லை சத்யா
இந்த வருடம் அதே தேர்வில் வெற்றி பெற்றிருக்கிறாள் என்று
தன் மகள் கண்ணகியை
வைகோவிடம் அழைத்துச்சென்று வாழ்த்துப்பெருவதை வலைத்தளத்தில் பகிர்கிறார்...
அவர்களின் மகள்கள் நீட்டாக நீட் எழுதி டாக்டர்களாகவும் ஆகிவிடுவார்கள்
சுப்பன் மகளும் குப்பன் மகளும் சுள்ளி பொறுக்கவும் சுருக்கில் தொங்கவும் சொல்லிக் கொடுப்பார்கள்...
அறுபது ஆண்டுகளாக
அடிக்கும் திராவிஷ காய்ச்சலுக்கு மருந்தே இல்லை போல இருக்கிறது....
நீட் எழுத எல்லோராலும் எல்லாமும் முடியும்.அது தான் உண்மை.
சிக்கல் எதுவானாலும் அதை எதிர் கொள்ள வேண்டும்.
ஓடி ஒழிந்தாலோ உயிரை மாய்த்துக் கொண்டாலோ அது தீர்ந்து விடாது.
எல்லா மனிதர்களுக்கும் எதாவது பிரச்சினை இருந்து கொண்டே தான் இருக்கும்.
எனக்கு மட்டும் ஏன் இப்படி என்று மூலையில் உட்கார்ந்து அழுவதால் எந்த பலனும் கிடையாது.
எனக்கு மட்டும் எதற்காக இப்படி நடக்கிறது என்று நாலு பேரிடம் கேட்டால் ஆளாளுக்கு ஒன்று சொல்வார்கள்.
ஒருவன் வாஸ்து சரியில்லை.வீட்டை இடி என்பான். இன்னொருத்தன் ஒனக்கு கட்டம் சரியில்லை. பரிகாரம் பண்ணு என்று காசை பிடுங்குவான்.
அவன் சொன்னான் இவன் சொன்னான் என்று ஊரில் உள்ள கோவில்களுக்கு எல்லாம் காணிக்கைகள் வழங்கினாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லை.
அப்படியானால் என்ன தான் செய்வது என்று மண்டையை பிய்த்து ஆகப் போவது ஒன்றும் இல்லை.
எல்லாவற்றிக்கும் தீர்வு உண்டு என்று பிடிவாதமாய் மனிதன் நம்பிக் கொண்டு இருக்கிறான்.
நமக்கு தெரியாத பல விஷயங்கள் இங்கு உண்டு.
நமக்கு தெரியாத விஷயங்களை எண்ணி பயப்பட தேவையில்லை.
நம் இலக்கியம்,புராணம் மற்றும் நம் முன்னோர்கள் இதை ஒரே வரியில் சொல்லி விட்டு போயிருக்கிறார்கள்
அது தான் "ஊழ்".
வள்ளுவர் ஊழ் பற்றி ஒரு அதிகாரமே எழுதி இருக்கிறார்.
ஊழிற் பெருவலி யாவுள....என்று அதன் வலிமையை நம்மால் வெல்ல முடியாது என்று கூறுகிறார்.
ஊழ் என்பதை விதி என்கிறார்கள்.சிலர் கர்மா என்கிறார்கள்
எது வேண்டுமானாலும் இருக்கட்டும். அதை நம்புவதும் நம்பாததும் அவரவர் முடிவு.
ஆனால் நம்மை மீறிய ஏதோ ஒரு ஆற்றல் இயங்குகிறது. அதுவே இந்த உலகை இயக்குகிறது.
அதை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது.அதை ஏற்றுக் கொள்வதை தவிர வேறு வழியில்லை.
எல்லாம் அது இஷ்டப்படி தான் நடக்கும் என்றால் நான் ஏன் செயல் செய்ய வேண்டும் என்று உடனே செயலை கைவிடுதல் சரியன்று.
நம்மை செயல் செய்ய தூண்டுவதே அந்த ஆற்றல் தான்.
சில செயலை செய்கையில் நமக்கு மிகவும் நிறைவாய் இருக்கும்.
அதுவே நமக்கான செயல் என்று கண்டு கொள்ள வேண்டும்.
நாம் அத்தனை செயலையும் பலனை கருதி மட்டுமே செய்கிறோம்.
அது தான் நாம் செய்யும் தவறு. செயல் செய்வது மட்டுமே நம் கடமை.
நாம் இந்த உலகியல் சார்ந்த சில பலன்களுக்காகவே செயல் செய்கிறோம்.
இயற்கை அது தர விரும்புகிற பலன்களுக்காகவே நம்மை செயல் செய்ய வைக்கிறது.
நாம் நம் வாழ்க்கையை நன்கு ஆராய்ந்து பார்த்தால் நமக்கே பல விஷயங்கள் புரிபடும்.
ஒரு காலத்தில் நாம் மிகவும் வெறுத்த நிகழ்வுகள்,
இன்று நினைத்து பார்க்கையில் சரியான நேரத்தில் சரியாக நடந்துள்ளது என்பது புரிகிறது.
இன்று சில நல்ல விஷயங்கள் நடப்பதற்கு அன்று நிகழ்ந்த அந்த மோசமான நிகழ்வு தான் காரணம் என்பது புரிகிறது.
அன்று நம்மை பிடித்து தள்ளும் போது நாம் அழுது புலம்பினோம். இன்று, நல்லவேளை!
அன்று அங்கிருந்து வெளியேறினோம் என்று பெருமகிழ்வு கொள்கிறோம்.
நடக்கும் எல்லா நிகழ்வுகளுக்கும் காரணம் உண்டு.காரணம் இன்றி இங்கு ஏதும் நிகழ் வதில்லை.
காரணம் தெரியாத காரணத்தினால் நாம் பயந்து துடிக்கிறோம்.
எல்லாம் அவன் செயல். எனக்கு என்ன செய்ய வேண்டும் என்பது அவனுக்கு தெரியும் என்று
சரணாகதி மனோபாவம் வந்து விட்டால் மனதில் எந்த துயரமும் அண்டாது.
கட்சியில் தலைவரிடமும்!
அகத்தில் மனைவியிடமும்!
கடைசியில் கடவுளிடமும்!

பணத்துக்கு எவ்வளவு *பெயர்கள்*.

 *பணத்தை*கையில பிடிச்சி கொஞ்சம் தள்ளி வெச்சி யோசிச்சு பாத்தா.

அடேங்கப்பா இந்த பணத்துக்கு எவ்வளவு *பெயர்கள்*
கோவில் உண்டியலுக்கு செலுத்தினால்*காணிக்கை*
யாசிப்பவருக்கு கொடுத்தால்*பிச்சை*
அர்ச்சகருக்குக் கொடுத்தால் *தட்சணை*
கல்விக் கூடங்களில் *கட்டணம்*
திருமணத்தில் *ஸ்ரீதனம்*
திருமண விலக்கில் *ஜீவனாம்சம்*
விபத்துகளில் இறந்தால் *நஷ்டஈடு*
இன்சூரன்ஸ்க்காக செலுத்தினால் *காப்பீடு*
வங்கிகளில் வைத்தால் *வைப்புந்தொகை*
ஏழைகள் கேட்டுக் கொடுத்தால்
*தர்மம்*
நாமாக விரும்பி ஏழைகளுக்குக் கொடுத்தால் *தானம்*
திருமண வீடுகளில் பரிசாக *மொய்*
திருப்பித் தர வேண்டும் என யாருக்காவது கொடுத்தால் அது*கடன்*
திருப்பித் தர வேண்டாம் என இலவசமாகக் கொடுத்தால் அது*அன்பளிப்பு*
விரும்பிக் கொடுத்தால் *நன்கொடை*
நீதிமன்றத்தில் செலுத்தினால் *அபராதம்*
மத்திய அரசுக்குச் செலுத்தினால்*வரி*
அரசு மற்றும் பிற தர்ம ஸ்பானங்களுக்கு
கொடுத்தால் அது *நிதி*
செய்த வேலைக்கு மாதந்தோறும் கிடைப்பது *சம்பளம்*
தினமும் கிடைப்பது *கூலி*
பணி ஓய்வுப் பெற்றால் கிடைப்பது *ஓய்வூதியம்*
சட்டத்திற்கு விரோதமாக கையூட்டு வாங்குவதும் கொடுப்பதும் *லஞ்சம்*
கடன் வாங்கினால் அத்தொகைக்கு
*அசல்*
வாங்கியக் கடனுடன்
கொடுக்கும் போது *வட்டி*
தொழில் தொடங்கும் போது *முதலீடு*
தொழிலில் கிடைக்கும் வருமானத்துக்கு *இலாபம்*
குருவிற்குக் கொடுக்கும் போது *குருதட்சணை*
ஹோட்டலில் நல்குவது *டிப்ஸ்*
இவ்வாறு பல பெயர்களில் கைமாறும் இந்தப் *பணத்திற்கு* மாற்றாக வேறொன்றும் இப்புவியில் இல்லை...
இந்தப் *பணம்* என்ற காகிதத்தைப் பெற...
*சிலர் அன்பை இழக்கின்றனர்...*
*சிலர் பண்பை இழக்கின்றனர்...*
*சிலர் நட்புகளை இழக்கின்றனர்...*
*சிலர் உறவுகளை இழக்கின்றனர்...*
*சிலர் கற்பை இழக்கின்றனர்...*
*சிலர் கண்ணியத்தை இழக்கின்றனர்...*
*சிலர் மனித நேயத்தை இழக்கின்றனர்...*
*சிலர் வாலிபத்தை இழக்கின்றனர்...*
*பலர் வாழ்க்கையையே🙏🏻 இழக்கின்றனர்*...
May be an image of 1 person and money

ஏண்டா இது கூட தெரியாம ஒரு டீம் தூ / யார் சேதா என்ன பயணம் கிடைக்கும் ???

 ஒ௫ தனியார் ஆஸ்பித்திரியில் ஐ.சி.யு வார்டில் இருக்கும் ஒரு குறிப்பிட்ட படுக்கையில் மட்டும் ஒவ்வொரு ஞாயிற்று கிழமையிலும் சரியாக 11மணிக்கு அந்த படுக்கையில் படுத்திருக்கும் நோயாளிகள் இறந்து போகிறார்கள்.

இது அந்த ஆஸ்பித்திரியில் இருக்கும் அனைவருக்கும் மிகுந்த அதிர்ச்சியையும், அச்சத்தையும் அளித்தது. பல நாடுகளிலிருந்து மிக சிறந்த மருத்துவர்களும் வந்து பார்த்துவிட்டு இறப்புகளுக்கு காரணம் தெரியாமல் குழம்பினர்.
மீண்டும் ஒரு ஞாயிற்று கிழமையில் என்ன தான் நடக்கிறது என்று பார்க்க மிக பெரிய மருத்துவ குழு ஒன்று 11மணிக்கு முன்னால் அந்த குறிப்பிட்ட படுக்கையை சுற்றி நின்று கொண்டிருந்தார்கள். என்ண ஆக போகிறதோ என்று அன்னைவரும் எதிர்பார்த்து கொண்டிருக்க.....
திடிரென உள்ளே நுழைந்தாள் ஞாயிற்று கிழமையில் மட்டும் பகுதி நேராமாக கூட்டி, பெருக்கும் வேலை செய்யும் முணியம்மா... வந்தவுடனையே நோயாளியின் ஆக்சிஜன் சப்ளை இயந்திரத்தின் PLUGகை பிடுங்கிவிட்டு தனது செல் போணை சார்ஜில் போட்டுவிட்டு கடமையே கண்ணாக அந்த அறையை பெருக்க ஆரம்பித்தாள்...
😯😳😲😀😆😲😳
May be an image of 3 people, body of water and indoor

மானத்தை காத்த தமிழச்சி எங்கே.

 என் மான தமிழ் பெண்னே அறிவாயா லெக்கீண்ஸ் என்பது உடை அல்ல அது உள்ளாடை அதிலும் வெண்மை நிற லெக்கீன்ஸ் சற்று யோசித்துபார் .

உள்ளாடை அதன் மேல் உள்பாவாடை அதன்மேல் வெளிபாவாடை மேல் உல்லாடை (மறைவு) லையனிங் துனி வைத்த மேல்சட்டை தாவனி அணிந்து மானத்தை காத்த தமிழச்சி எங்கே.
அறிவாயோ என் குல பெண்ணே இன்றைய பெண்களுக்கு ஏற்படும் கர்பப்பை நீர் கட்டி மலட்டுத்தன்மை ஏற்பட முக்கியமாக காரணம் இந்த லெக்கீன்ஸ் மற்றும் ஜீன்ஸ்பேண்டு என்பதை.
பெண்கள் உடல் இயற்கையாகவே உஸ்னம் படைத்தது நமது முன்னோர்கள் அதன் காரணமாகவே வாரம் 3 நாள் கட்டி மஞ்சள் தேய்த்து குளிபார்கள் உடல் உறுப்புக்கள் வெப்பம் தனிய பாவாடை அணிந்தனர் இன்று நீங்கள் அணியும் இறுக்கமாக உடைகளே உங்கள் குழந்தை மற்றும் தமிழர்கள் வரலாற்றை கொள்ளும் மறவாதே.
May be an image of 3 people, people standing and text that says "லெகின்ஸ் ன் ஸ் ஆபாசம்? எல்லை மீறும் இளசுகள்"

விளைவித்தவன் ஏன் பிச்சைக்காரன்.

 இரண்டு கோடிகள் கொடுத்து

ஒரு ஜோடி நாய்கள் வாங்கும்
எங்கள் தேசத்தில்...!!
இருபது கோடிகள் கொடுத்து
ஒருவர் மட்டுமே பயணிக்க
கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!!
இருநூறு கோடிகள் கொடுத்து
கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!!
இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய்த் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!!
இருபதாயிரம் கோடிகளை
பொழுதுபோக்க ஒதுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
இரண்டு இலட்சம் கோடிகளுக்கு
அலைக்கற்றை ஏலமெடுக்கும்
எங்கள் தேசத்தில்...!!
எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத் தான்
எவருமில்லை.!!
விலை வைத்தவன் இலட்சக்காரன்.. ஆகும்போது.!!
விளைவித்தவன்
ஏன் பிச்சைக்காரன்.. ஆகவேண்டும்..??
May be an image of 1 person and outdoors

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...