மங்கல காரியங்களின் அடையாளமாக மஞ்சள் கருதப் படுகிறது. எந்த ஒரு சுப காரியத்தைத் தொடங்குவதாக இருந்தாலும், அதனை மஞ்சளை உபயோகித்து ஆரம்பிப்பது தொன்றுதொட்டு இருந்து வரும் வழக்கங்களில் ஒன்றாகும். அதனால்தான் சுப காரியத்தின் தொடக்கத்தில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைக்கிறார்கள். மஞ்சள் என்பது வெறும் ஆன்மிகம் மட்டும் இல்லை. அது அறிவியல் ரீதியாக ஒரு கிருமி நாசினியும் ஆகும். மஞ்சள் இருக்கும் இடத்தில் செல்லரிக்கும் பூச்சிகள், விஷ ஜந்துக்கள் அவ்வளவு எளிதாக நெருங்காது. அதனால் தான் திருமணம் போன்ற சுப நிகழ்வுகளுக்கு அச்சடிக்கப்படும் அழைப்பிதழ்களின் நான்கு முனைகளிலும் மஞ்சளை பூசுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஒரு மனிதனின் வாழ்நாளில், அசைபோடக்கூடிய சுகமான நினைவலைகள் என்று இருக்கும். அவற்றில் நம் இல்லத்தில் நடக்கும் சுபகாரியங்கள் முதன்மையானவை. அந்த சுப காரியங்களை நடத்துவதற்கான அழைப்பிதழை, 50 ஆண்டுகளுக்குப் பிறகு எடுத்துப் பார்க்கும்போது, அந்த சுகமான காலங்கள் நம் கண்முன்பாக நிழலாடுவதை எவரும் மறுக்க முடியாது. அந்த இனிமையான நினைவலைகள் நம்மை உற்சாகம் கொள்ள வைக்கும். மஞ்சளில் இருக்கும் கிருமிநாசினி, சுபகாரிய அழைப்பிதழ்களை பூச்சரிக்க விடாது பல வருடங்களுக்கு பாதுகாக்கும்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Thursday, March 23, 2023
எனக்குப் பிடித்த ரகுவரனின் முகம்.
‘முகவரி’ திரைப்படத்தின் மொட்டை மாடி காட்சி இன்றளவும் அனேக சினிமா ரசிகர்களுக்கு விருப்பமான காட்சியாக இருக்கும். குடும்பத்தினர் வானவில்லை ரசித்துக்கொண்டிருப்பார்கள். அனைத்துத் துண்டுச் சீட்டுகளிலும் ஶ்ரீதர் என்று எழுதப்பட்டிருப்பதைப் பார்க்கும் அஜித் ரகுவரனிடம் வருவார். அஜித்திடம் ‘ஶ்ரீதர்.. நீ வானவில் பாக்கல’ என்று ரகுவரன் கேட்க ‘பாத்துட்டண்ணே’ என்று பதிலளிப்பார் அஜித். கையிலிருக்கும் சீட்டுகளை அஜித் காட்ட ரகுவரனின் முகம் புன்னகைப் பூத்திருக்கும். அப்படியே தம்பியின் தோளில் கைப்போட்டு அணைத்து ஆசுவாசமாக அழைத்துச் செல்வார் ரகுவரன். தம்பி மீதான பாசத்தின் வெளிப்பாடாக இந்தக் காட்சி அமைந்திருக்கும். ‘முகவரி’ படத்தில் இருந்த அண்ணன் கதாப்பாத்திரத்திற்கு நேரெதிர் கதாப்பாத்திரமாக ‘உயிரிலே கலந்தது’ திரைப்பட்டத்தில் சூர்யாவுக்கு அண்ணனாக நடித்திருப்பார் ரகுவரன். பொறாமையில் தம்பியையே கொலை செய்யத் துணியும் கொடூரமான அண்ணனாக மி்ரட்டியி்ருப்பார்.
முழு நலத்துக்கு முக்கனிகள் .
மா, பலா, வாழை முக்கனிகளாகும். இதில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் குறித்து பார்ப்போம். மாம்பழம்: முக்கனிகள் என்று போற்றக்கூடிய பழங்களுள் முதல் கனி மா. மாம்பழத்தில் 15% சர்க்கரை, 1% புரதம், பெருமளவு உயிர்ச்சத்துக்கள் ஏ, பி, சி ஆகியவை உள்ளன. கண் பார்வை, மாலைக்கண் நோயை எதிர்க்கிறது. வைட்டமின் சி அதிகம் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தி தருகிறது. நோஞ்சான் பிள்ளைகள் உடல் தெம்பும் எடையும் பெறுகின்றனர். இருதயம் வலிமை பெறும். பசி தூண்டும். உடல் தோல், நிறம் வளமை பெறுகிறது. முகத்தில் பொலிவு உண்டாகும். கல்லீரல் குறைபாடுகள் விலகும். புது இரத்த அணுக்கள் உற்பத்தியாகும். உடல் வளர்ச்சி பெறுகிறது. பலாப்பழம்: பலாச்சுளைகள் பொட்டாசியம், கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய உப்பு சத்துக்களும் உயிர்ச்சத்து ஏ மற்றும் சி-யும் அதிக அளவில் கொண்டுள்ளன. கொட்டைகள் உயிர்ச்சத்து பி1, பி2 ஆகியவை கொண்டுள்ளன. பழுத்த பலாச்சுளைகள் மலமிளக்கியாக செயல்படுகின்றன. நார்ச்சத்து அதிகமுள்ள பலாப்பழம் செரிமானத்துக்கு நல்லது. வைட்டமின் ஏ, பி, சி கால்சியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்த இப்பழம் முதுமையை தடுக்க வல்லது. கார்போஹைட்ரேட், பொட்டாசியம், கால்சியம் சத்து, புரதச்சத்து ஆகிய சத்துக்கள் உள்ள இந்த பலாப்பழம், புற்றுநோய் வராமல் தடுக்கும். பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய் வராமல் தடுகிறது. பலாப்பழத்தில் இரும்புச்சத்து இருப்பதால் அனிமியா வராமல் தடுப்பதோடு, உடலில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது வயது ஆவதால் ஏற்படும் தோல் சுருக்கத்தைத் தடுக்கிறது. வாழைப்பழம்: உடலில் நீர்ச்சத்தையும் அதிகரிக்கச் செய்யும். மிக ஆரோக்கியமான, ஒரு கெடுதலும் தராத பழவகை இது. இதில் அதிகமான பொட்டாசியம் இருப்பதால் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவும். சோடியம் உப்பு குறைவாக இருப்பதால் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் சாப்பிடலாம். குழந்தைகளின் ஊட்டத்துக்குச் சிறந்தது. தொடர்ந்து இருமல் இருந்து வந்தால் கருமிளகு கால் தேக்கரண்டி எடுத்து பொடி செய்து கொள்ளுங்கள். அதில் பழுத்த நேந்திரம் பழத்தை கலந்து இரண்டு மூன்று வேளை சாப்பிட்டு வர இருமல் சரியாகும். சின்னம்மை, டைபாய்டு, மஞ்சள் காமாலை ஆகியவற்றுக்கு தேனில் வாழைப்பழத்தைப் பிசைந்து நாள்தோறும் இரு வேளை சாப்பிட வேண்டும். பசும்பாலுடன் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வர அஜீரணம் சரியாகும். தொடர்ந்து நாள்தோறும் 2-3 வேளை இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மூலநோய் தீரும்.
ராகுல் காந்தியை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்- சபாநாயகரிடம் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் மனு.
மோடி பெயர் குறித்து அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு குஜராத் மாநிலம் சூரத் நீதிமன்றம் 2 ஆண்டு சிறைத்தண்டனை விதித்தது. மேலும் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு வசதியாக ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியது. 30 நாட்கள் தண்டனை நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டப்படி ராகுல் காந்தியை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் வினித் ஜிண்டால் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் மனு அளித்துள்ளார். எம்.பி.க்கள்/எம்.எல்.ஏ.க்கள் ஏதாவது ஒரு குற்றச்சாட்டில் 2 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 8(3)-ன்படி தீர்ப்பு வழங்கிய நாளில் இருந்து தகுதி நீக்கம் செய்ய முடியும். எனவே இந்த சட்ட விதிகளின்படி, ராகுல் காந்தியை எம்.பி. பொறுப்பில் இருந்து தகுதி நீக்கம் செய்வது தொடர்பாக இன்றே அறிவிக்க முடியும் என்று அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியே போனா எப்படித்தான்???
1960
சில விஷயங்கள் லேட்டாகத்தான் புரிகிறது.
இப்போதுதான் என்றில்லை எப்போதுமே இந்த ஊடகங்கள் திமுகவின் பிடியில் தான் சிக்கி கிடந்திருக்கிறது.
உத்திரகோசமங்கை ஸ்ரீ மங்களநாதார், மங்களநாயகி திருக்கோவில்.
1. ![]()
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
கேட்டவர் இளையராஜா- கேட்டது பாலு மகேந்திராவிடம்..! அமைதியாக அமர்ந்திருந்த பாலு மகேந்திராவிடம் மீண்டும் கேட்டார் இளையராஜா. “சொல்லுங்கள். ஒரு...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...


