Sunday, June 3, 2012

BP - இரத்த அழுத்தம் என்றால் என்ன?






இந்தக் காலகட்டத்தில் இளம் வயதிலேயே, அதிலும் 20-25 வயதிலேயே நூற்றில் பத்து பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. இளைஞர்களின் உழைப்பில்லா, பரபரப்பான வாழ்க்கை முறையில் இவையெல்லாம் இயல்பாகிப் போனது. அதனால் ஏற்படும் விளைவுகளோ பயங்கரம்!

இரத்த அழுத்தம் என்றால் என்ன?

இரத்த நாளங்களில் உள்ள ரத்த அழுத்தம் தேவையை விட மிக உயர்ந்திருப்பதை 'இரத்த அழுத்த நோய்' அல்லது 'இரத்தக் கொதிப்பு' என்று கூறுகிறோம். இதைக் கண்டுபிடித்து குணப்படுத்தாவிட்டால் இது ஆபத்தான பின் விளைவுகளை ஏற்படுத்தும். பொதுவாக இந்நோய் வெளியே தெரியாது. சில வேளைகளில் மிகப் பெரிய பாதிப்பை அல்லது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திய பின் கண்டுபிடிக்கப்படும். எனவே இதனை 'சைலன்ட கில்லர்' என்றும் கூறுவர்.

இந்நோய் எப்போது கண்டு பிடிக்கப்பட்டது?

1732-ல் 'ஸ்டீபன் ஹேல்ஸ்' என்பவர் ஒரு குதிரையின் ரத்த அழுத்தத்தை சாதாரண 'மானோ மீட்டர்' என்ற கருவியை வைத்து அளந்தார். 1896-ல் 'சிவரோசி' என்பவர் நாம் இப்போது பயன்படுத்தும் 'ஸ்பிக்மோ மேனோ மீட்டரை' கண்டு பிடித்தார். 1905-ல்தான் ரத்த அழுத்த நோயினுடைய முக்கியத்துவம் தெரிய வந்தது. உயர் ரத்த அழுத்தம் அதிக அளவு நோயை ஏற்படுத்துகிறது என்றும், பலர் இறந்து போகின்றனர் என்பதையும் ஒரு ஆயுள் காப்பீட்டுக் கழகம்தான் கண்டு பிடித்தது. அதன் பின் அனைவரது கவனமும் இதன் மீது திரும்பியது.

உயர் ரத்த அழுத்தத்தை எவ்வாறு கண்டுபிடிப்பது?

மருத்துவம் பயின்ற எவரும் ரத்த அழுத்தக் கருவியின் மூலம் ரத்த அழுத்தத்தைக் கண்டு பிடித்து விடலாம். மேல் அளவு 140-க்கு மேலேயோ அல்லது கீழ் அளவு 90-க்கு மேலேயோ இருந்தால் அந்த நோயாளியை மேற்கொண்டு பரிசோதிக்க வேண்டும். ஒரே ஒரு முறை மட்டும் அதிகமாயிருந்தால் ரத்த அழுத்த நோய் உள்ளதாக எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. வேறு வேறு சமயங்களில் மூன்று முறை பரிசோதித்த பிறகு ரத்த அழுத்தம் இருந்தால் அவரை 'ரத்த அழுத்த நோயாளி' எனக் கூறலாம்.

ரத்த அழுத்த நோயை மூன்று வகையாகப் பிரிக்கலாம்:

1. கீழ் ரத்த அழுத்த அளவு 91 முதல் 105 வரை.

2. 106 முதல் 115 வரை.

3. 115-க்கு மேல் இருப்பது. இவர்களுக்கு கண்களின் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருக்கும்.

எதனால் ரத்த அழுத்தம அதிகமாகிறது?

1. காரணம் ஏதுமின்றி வரும் ரத்த அழுத்தம் 90 சதம் பேரை பாதிக்கிறது. இதற்கான காரணம் துல்லியமாகக் கண்டு பிடிக்கப்படவில்லை.

2. மீதமுள்ள 10 சதவீதம் பேர் சிறுநீரகங்களில் பாதிப்பு, நாளமில்லாச் சுரப்பிகளினாலும் மற்ற காரணங்களினாலும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு ஆளாகிறார்கள்.

இரண்டாவது வகையைச் சார்ந்த 10 சதவீதம் பேரை முழுமையாகக் குணப்படுத்த வாய்ப்புள்ளது. அதன் காரணத்தை கண்டுபிடித்து அதை அகற்ற முடிந்தால் ரத்த அழுத்தம் சாதாரண நிலையை அடையும். முழுமையான உடற் பரிசோதனை மற்றும் ரத்த சோதனைகளை செய்வதம் மூலம் இந்நோய்க்கான காரணங்களை கண்டறியலாம். இதனால் இதய வீக்கம், இதய ரத்த ஓட்டம் குறைதல், மாரடைப்பு நோய், கை, கால் இயங்காமல் போவது சிறுநீரகங்கள் பழுதடைதல் போன்றவை ஏற்படும்.

ரத்த அழுத்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு என்னென்ன பரிசோதனைகள் செய்யப்படும்?

முதலில் சிறுநீர் பரிசோதனை செய்யப்படும். இதில் சிறுநீரகங்கள் பழுதடைந்துள்ளனவா என்பதை ஓரளவு அறியலாம். இரண்டாவதாக ரத்தத்தில் சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் சேர்ந்து இருந்தால் மாரடைப்பும், மேற்சொன்ன நோய்களும் வரும் வாய்ப்புகள் அதிகம். 'ஈ.சி.ஜி.' என்பது இதயம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய உதவும் பரிசோதனையாகும். இதயம் வீக்கமாகி உள்ளதா என அறிய 'எக்ஸ்ரே' பரிசோதனை உதவும். 'எக்கோ', 'ஆஞ்சியோகிராம்' போன்ற பரிசோதனைகளைக்கூட செய்து பார்க்கலாம்.

கர்ப்பிணிகளுக்கும் மற்றவர்களுக்கும் வரும் ரத்த அழுத்தத்திற்கு இடையே உள்ள வேறுபாடு என்ன?

கர்ப்பிணிப் பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய ஒரு வகை ரத்த அழுத்த நோய் 'பிரி-எக்லாம்சியா' என்பதாகும். இது முதன் முறையாக கர்ப்பமடைபவருக்கே 95 சதவீதம் வரும். பல குழந்தைகள் பெற்றவர்களை விட குழந்தையே பெறாமல் முதல் முறையாக கர்ப்பமடைந்த பெண்களுக்கு 6 முதல் 8 மடங்கு இந்நோய் வர வாய்ப்பு அதிகம் இருக்கிறது. பல குழந்தைகளை வயிற்றில் சுமந்தவர்களுக்கும் சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கும் இந்நோய் வரும் வாய்ப்பு அதிகம். இந்நோயின் மற்ற அறிகுறிகளாக-கால்வீக்கம், ரத்தக்கொதிப்பு, சிறுநீரில் புரதசத்து வெளியேறுதல் ஆகியவை உண்டாகும். இதை மருந்துவத்தின் மூலம் சரி செய்யாவிடில் வலிப்பு நோய் மற்றும் உணர்விழந்து போகுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படும். பெண்களின் கர்ப்ப காலம் முடிந்தவுடன் இந்நோய் உடனடியாக மறைந்து விடும். இதனை கர்ப்பகால ரத்த அழுத்தம் என்கிறார்கள்.

ரத்த அழுத்த நோய் உள்ளவர்களுக்கு அறிவுரை:

நீங்கள் ரத்த அழுத்த நோயாளி எனில், இந்நோய் பற்றி விரிவாக அறிந்து கொள்ளுங்கள். இந்நோயை கட்டுப்படுத்தாவிடில் இது மாரடைப்பு, மூளை பாதிப்பு போன்ற நோய்களை ஏற்படுத்தும். மருத்துவரின் ஆலோசனைப்படி செயலாற்றுங்கள். உப்பு அதிகமுள்ள ஊறுகாய், கருவாடு, அப்பளம், சிப்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். உப்பு, உடலில் நீரை தங்கச் செய்து இதயத்தை பலமிழக்கச் செய்யும். கால், கைகள் வீங்க வைக்கும். ரத்த அழுத்தத்தை அதிகரிக்கச் செய்யும். வெண்ணெய், நெய், எண்ணெய் போன்ற கொழுப்புச் சத்து மிகுந்த உணவுப் பொருட்களை சாப்பிடாதீர்கள். கொழுப்பு சத்து ரத்தக் குழாய்களை அடைத்துக் கொண்டு மேற்சொன்ன வியாதிகளை உண்டு பண்ணக் கூடும். தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்யுங்கள். ஒரு நாளைக்கு 1 மணி நேரமாவது வேகமாக நடைப்பயிற்சியை மேற்கொள்ளுங்கள். இது உடலில் கொழுப்புச் சத்து சேர்வதைத் தவிர்த்து விடுவதுடன் அழுத்தத்தையும் குறைக்கும்.


புகை பிடிப்பவராக இருந்தால் உடனேயே அதை நிறுத்துங்கள். புகை பிடிப்பவர்கள் ரத்த அழுத்த நோயினால் அவதிப்படுவதோடு அல்லாமல் மாரடைப்பு நோயினாலும் உயிரிழக்க நேரிடும்! மருத்துவரின் ஆலோசனையின்றி அவர் சிபாரிச் செய்யும் மருந்துகளின் அளவை நீங்களாகவே குறைக்கவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது. உடல் எடையை குறையுங்கள். உங்களுடைய ரத்த அழுத்தத்தின் அளவை முறையாக பரிசோதித்துக் கொள்ளுங்கள். முக்கியமாக ஒரு முறை எழுதிக் கொடுத்த மருந்தை வாழ்நாள் முழுவதும் உபயோகிக்கக் கூடாது. அடிக்கடி மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெற்று தேவைக்கு ஏற்ப மருந்துகளை அதிகரிக்கவோ, குறைக்கவோ செய்ய வேண்டும்.

ஹோமியோ மருந்துகள்:

RAUWOLFIA Q, CRATAE-GUS Q, ADONISVER Q போன்ற சொட்டு மருந்துகளை ரத்த அழுத்த அடிப்படையில், அதாவது ரத்த அழுத்தமிகுதி அல்லது குறைவின் அடிப்படையில், நீரில் கலந்து குடிக்கலாம். DIGITALIS, CACTUS BERBERIS VULGARIS போன்ற மாத்திரைகளையும் தேவைக்கேற்ப பயன்படுத்தலாம். பக்க -பின் விளைவுகள் ஏற்பட்டால் ஹோமியோபதி நிபுணரை நேரில் அணுகி அவரது பரிந்துரையின்படி மருந்துகளை சாப்பிட வேண்டும். பயோகெமிக் மருந்துகளும், கூட்டுக்கலவை மருந்துகளும், சில வகை தாய்திரவங்களின் (MOTHER TINCTURES) கலவைகளும் இதற்க மிகவும் உதவும். இவை எல்லாம் வாழ்க்கை முறை நோய்களாகிப் போனதால் உடற்பயிற்சி, உணவு, உறக்கம் ஆகியவற்றிலும் அன்றாடம் கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டு பொருட்கள் வாங்குகிறீர்களா? அதிக எச்சரிக்கை தேவை

 வெளிநாட்டுப் பொருட்களை வாங்குவதற்கு அதிக ஆர்வம் பலரிடம் உண்டு. ஆனால், அவற்றை வாங்கும்போது, நுகர்வோர் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, நுகர்வோர் பாதுகாப்புத்துறை விளக்கமளித்துள்ளது. 
இந்தியாவைச் சேர்ந்தவர்கள் பணி நிமித்தமாகவும், சுற்றுலாவுக்காகவும், பல்வேறு நாடுகளுக்கு சென்று வருகின்றனர். அப்போது, அங்கிருந்து எலக்ட்ரானிக் மற்றும் வேறு சில பொருட்கள் வாங்கி வருகின்றனர். சில பொருட்கள், வாங்கிய சில மாதங்களிலேயே பழுதடைந்து விடுகின்றன. இதனால், நுகர்வோருக்கு பல ஆயிரங்கள் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது. 
இந்நிலையில், வெளிநாட்டுப் பொருட்களை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அளித்த விளக்கம்:

* எலக்ட்ரானிக் பொருட்கள், நம் நாட்டில் வேலை செய்யுமா என்பதை முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு நாட்டிலும் அவர்களது மின் சப்ளைக்கு ஏற்ப பொருட்கள் தயாரிக்கப் படுகின்றன.

* பொருட்கள் வாங்கும் கடையின் கிளைகள் நம் நாட்டில் இருக்கிறதா? சேவையாளர்கள் இருக்கின்றனரா? என்பதை, பொருள் வாங்கும் முன் கடைக்காரரிடம் விவரமாக கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.

* ஒரு நாட்டில் ஒரு பொருளுக்கு கொடுக்கப்படும் உத்திரவாதம், மற்றொரு நாட்டில் செல்லுபடியாகுமா என்பதை கவனித்து வாங்க வேண்டும். பொதுவாக, அயல்நாட்டில் வாங்கும் எலக்ட்ரானிக் பொருட்களுக்கு உத்திரவாதம் அளிப்பதில்லை.

தவறு நடந்தால்?பொருள் வாங்கிய கடை நிர்வாகத்தை பேக்ஸ் அல்லது இ-மெயில் மூலமாக தொடர்பு கொள்ள வேண்டும். கடை நிர்வாகத்திடம் இருந்து சரியான பதில் வராவிட்டால், இலவச ஆலோசனை கூறும் நுகர்வோர் மன்றங்களை நாடலாம்.அயல்நாட்டில் வழக்கு தொடுப்பது எளிதான காரியம் அல்ல. அதிக செலவும், காலதாமதமும் ஏற்படும்.

எந்த சட்டம் செல்லும்?இண்டர்நெட் மூலம் சிங்கப்பூரில் இருந்து பொருட்கள் வாங்கும் போது, இந்திய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் செல்லுபடியாகுமா அல்லது சிங்கப்பூர் சட்டமா என்பதை, பொருட்கள் வாங்குவதற்கு முன்பே வெப்சைட் மூலமாக தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். அதன்பிறகே பொருட்களை வாங்க வேண்டும்.
இவ்வாறு, நுகர்வோர் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது.

Friday, June 1, 2012

கருணாநிதியின் கசப்பு!



ஏதாவது பெட்டி கேஸ் ஜாமீனாவது கிடைக்குமா, பத்திருபது தேற்ற முடியுமா என்றெல்லாம் அன்றாடம் புலம்பியவாறு அழுக்குக் கோட்டோடு நீதிமன்றம் செல்லும் பரிதாபத்திற்குரிய வழக்கறிஞர்களைப் பார்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் கருணாநிதியை பார்த்துக் கொள்ளுங்கள், கிட்டத்தட்ட, இல்லையில்லை அச்சு அசலேதான். என்ன பல நூறு கோடிகள் இருந்தும் இவரை வக்கீலாக யாரும் மதிக்கவில்லை என்பதுதான்  ஒற்றுமையில் ஒரு வேற்றுமை.
பெட்ரோல் விலை உயர்வை எதிர்ப்பதின் பெயரில் எதிர்ப்பே இல்லாமல் ஒரு சடங்கு ஆர்ப்பாட்டத்தை தி.மு.க நேற்று – 30.5.2012 – நடத்தியது. அதில் காங்கிரசு கூட்டணி அரசிலிருந்து தி.மு.க விலகுமென கருணாநிதி பேசியதாக சில தொலைக்காட்சிகள் வேண்டுமென்றே கிளப்பிவிட்டிருக்கின்றன. அதிர்ச்சியடைந்த கருணாநிதி செய்தியாளர்களிடம் விளக்கமளித்திருக்கிறார்.
“பெட்ரோல் விலையைக் குறைக்காவிட்டால் கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று எங்களால் நிபந்தனை விதிக்க முடியாது. குறைக்காவிட்டால் கூட்டணியை விட்டு வெளியேறிவிடுவோம் என்றும் கூற முடியாது. ஏனென்றால் திடீரென்று கூட்டணியை விட்டு வெளியே வந்தால் மத்தியில் வரவிருக்கும் ஆட்சி பிற்போக்கான மதவாத சார்புடைய ஆட்சியாக வரலாம். எனக்கு இப்போது வந்துள்ள தகவல்களின்படி பெட்ரோல் விலை உயர்வு தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசித்து வருவதாகக் கேள்விப்படுகிறேன். மத்திய அரசிடமிருந்து நல்ல தகவல் வரும் என்று எதிர்பார்க்கிறேன். விரைவில் குடியரசுத் தலைவர் தேர்தல் வர உள்ளது. இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நெருக்கடியை மத்திய அரசுக்குக் கொடுக்கக்கூடிய காரியங்களை நாங்கள் உருவாக்க மாட்டோம். திமுக கசப்போடு அந்தக் கூட்டணியில் நீடிக்கும்.” இதுதான் கருணாநிதியின் விளக்கம்.
இந்தப் போராட்டத்தை மத்திய அரசுக்கு எதிரான போராட்டமாகக் கொள்ளலாமா என்று கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு, “இது மத்திய அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டம் இல்லை. பெட்ரோல் விலை உயர்வுக்கு எதிரான ஆர்ப்பாட்டம்’ என்று சொல்லியிருக்கிறார். ஆலமரத்து பஞ்சாயத்துக்குப் போன நாட்டாமை தன்னையே குற்றவாளி என்று தண்டித்துக் கொண்ட கதையை விட கருணாநிதியின் நாடகம் மோசம்.
கருணாநிதி-கார்டூன்இந்தக் கருமத்திற்கு ஒரு அறிக்கையோடு மட்டும் இந்த விலை உயர்வு அத்தியாயத்தை முடித்திருக்கலாம். ஊர் முழுக்க ஆர்ப்பாட்டம் என்று சொந்த செலவில் சூனியம் வைத்திருக்கத் தேவையில்லை. தமிழகம் தழுவிய ஆர்ப்பாட்டம் என்று அறிவித்ததினாலேயே ஊடகங்கள் கூட்டணி விலகல் திரியை கொளுத்திப் போட்டன. இல்லையெனில் தினத்தந்தியின் மூன்றாவது பக்கத்து செய்தியோடு அந்த அறிக்கையோ அக்கப் போரோ முடிந்திருக்கும்.
7.50 ரூபாய் விலை உயர்வு என்பது நாடு முழுக்க பெரிய அதிர்ச்சியையும், கோபத்தையும் மக்களிடம் கிளப்பி விட்ட பிறகு இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே ஆக வேண்டிய கடமை எல்லா கட்சிகளுக்கும் வந்தது போன்று தி.மு.கவிற்கு வந்ததில் ஆச்சரியமில்லை. ஆனால் அந்த கடமை நாடகம் நடிப்பே இல்லாமல் இவ்வளவு அவலச் சுவையுடனா நடக்க வேண்டும்?
சோனியாவே அடித்துத் துரத்தினாலும் போகமாட்டேன் என்று அடம்பிடிக்கும் அடிமைத்தனத்தை வைத்துக் கொண்டே வருவோர், போவோர் அடிப்பதை தாங்கிக் கொண்டே, “நான் ரொம்ப நல்லவன்னு சொன்னான்னு”  ஏன் எல்லோரின் சிரிப்புக்கு ஆளாக வேண்டும்?
பெட்ரோல் விலையை உயர்த்திய மத்திய அரசுக்கு எதிர்ப்பில்லையாம், இந்த ஆர்ப்பாட்டம் பெட்ரோல் விலை உயர்விற்கு மட்டுமென அஃறிணைப் பொருளான பெட்ரொலை ஒரு அரசியல் தலைவர் போல ஆளாக்கி சண்டையிடும் துர்ப்பாக்கிய நிலைமைக்கு கருணாநிதி வந்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி பெட்ரோல் விலையை தீர்மானிக்கும் பொறுப்பு பெட்ரோலுக்கே இருக்கிறதென ஒரு அரிய தத்துவத்தை வேறு கண்டுபிடித்திருக்கிறார் அவர். மக்கள் மீது என்ன ஒரு மரியாதை!
இதில் மதவாத கட்சிகள் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது என்ற கடமையை மக்களுக்கு வரலாறு தெரியாது என்று துணிந்து நம்பிக்கையோடு விடுகிறார். வாஜ்பாயியின் மடியில் அமைச்சர் பதவிகளை ருசித்துக் கொண்டே, குஜராத் படுகொலையின் போது கண்ணை மூடிக் கொண்டதெல்லாம் தி.மு.கவின் மதச்சார்பின்மைக்கு மகுடம் சூட்டிய நிகழ்வுகள் போலும்.
போதாக்குறைக்கு குடியரசுத் தலைவர் தேர்தல் வரும்போது கூட்டணியை விட்டு நீங்குவது போன்ற பொறுப்பற்ற செயல்களை செய்ய மாட்டாராம். இதைக் கேட்டால் அந்த ரப்பர் ஸ்டாம்ப் பதவி கூட ஆனந்தத்தில் கண்ணீர் விட்டு அழும், இந்த ஊரில் தன்னையும் மதிக்க தெரிந்த ஒருவர் இருக்கிறார் என.
தரகு முதலாளிகளின் கட்சியாக உப்பிவிட்ட தி.மு.கவின் அரசியல், என்ன செய்தாவது அதிகாரத்தில் ஒட்டிக் கொண்டு சேர்த்து வைத்த சொத்துக்களை காப்பாற்றுவதும், விரிவாக்குவதும் என்றான பிறகு இங்கே ஒட்டுப் பொறுக்கிக் கட்சிக்களிக்குரிய வெத்து வேட்டு சவுடால் கூட இல்லை என்றால் கருணாநிதியின் வீழ்ச்சியை புரிந்து கொள்ளலாம்.
தி.மு.க கசப்போடு காங்கிரசுக் கூட்டணியில் நீடிக்கும் என்று சொல்வதிலிருந்தே அவரது ஏனைய நவரசங்கள் போட்டி போடும் அழகினை தரிசிக்கலாம். வாரிசுச் சண்டைகளினால் அலுப்பு, கனிமொழி சிறையினால் வெறுப்பு, தி.மு.க அமைச்சர்களின் கைதால் வரும் நடுக்கம், இடையில் பேரன்களின் படத்தை பார்க்க வேண்டிய கடமை, ஜெயலலிதாவுக்காக எழுத வேண்டிய அறிக்கையின் நிர்ப்பந்தம், இதில் பெட்ரோல் விலை உயர்வு என்றால் அவர் என்னதான் செய்வார்?

Wednesday, May 16, 2012

இத்துப் போன திமுக! இந்த ஜென்மத்தில உருப்படுமா?

சுய சிந்தனையற்ற தொண்டர்களாலும், சுய நல தலைவராலும் சிதறிப் போகும் உதிரி கட்சியாக இப்போது திமுக! 

ஒரு காலத்தில் திமுக என்றால் தமிழ் செழுமைக்கும், மக்கள் நலனுக்கும் பேர் போன கட்சி என்று சிறப்பான பேர் இருந்திச்சு. ஆனால் இன்றளவில் ஆட்சியினை தக்க வைக்கும் நோக்கிலும், மந்திரிப் பதவியினை மக்களை ஏமாற்றி கைப்பற்றி சொகுசு அரசியல் நடாத்தும் நோக்கிலும் திமுக கட்சி செயற்படுவதால் தமிழ் நாட்டில் மூன்றாவது அணியாக கூட இருக்க லாயக்கு இல்லா நிலமைக்கு திமுக கட்சி ஆளாகி விட்டது. அப்பாவி மக்களுக்கு இலவசத்தை கொடுத்து தம் ஆட்சி வெறியினை இன்பமாக மாற்றலாம் என நினைத்த கட்சி தலமைகளுக்கு இலவசத்தை வாங்கி விட்டு ஓட்டுப் போடாம ஏமாற்றும் நல்ல செயலுக்கு மக்கள் ஆளாகி உள்ளதன் மூலம் கடந்த தேர்தலில் பாடம் கற்பித்தாங்க.

தமிழில் பேச வெட்கப்படும் தமிழரா நீங்கள்: இதைக் கொஞ்சம் பாருங்கள்!!!!

தமிழ்…இது எங்களுக்கு மொழிமட்டுமல்ல, எங்கள் வாழ்க்கை, எங்கள் உயிர், இதனால்த்தான் பாவேந்தன் பாரதிதாசன் அன்றே பாடினான் ”தமிழுக்கு அமுதென்று பெயர் அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்(நிகர்)” என்று, ஆனால் இண்றைய சமுதாயம் ஆங்கிலமோகத்தில் சிக்கித்திளைப்பதால் அதற்குத் தமிழின் பெருமை சரிவரத்தெரிவதில்லை,
சிரட்டையின் மூலம் நாங்கள் உங்களுக்கு கணிதரீதியாக தமிழின் பெருமையை உணர்த்த விளைகின்றோம், உங்களுக்குத் தெரிந்த ஆங்கல இலக்கங்களின் அதிகூடிய இலக்கத்தின் பெயர் என்ன என்று சொல்லமுடியுமா உங்களால், அதற்குப் பெயர் ஸில்லியன் என்பார்கள் அதாவது,
1000000000000000 = ஒரு ஸில்லியன்
அதற்கு அடுத்த பத்தின் மடங்கை உங்களால் ஆங்கிலத்தில் சொல்ல முடியுமா? 100 ஸ்ல்லியன் என்பீர்கள், அதற்கும் அடுத்த மடங்கு??? சொல்லுங்கள் பார்க்கலாம் உங்கள் ஆங்கிலத்தில்….நிச்சயமாக முடியாது உங்களால், ஆனால் எங்கள் தமிழில் தேடிப்பாருங்கள் அதற்கு அடுத்தது மட்டுமல்ல அடுத்ததுக்கு அடுத்த மடங்குக்கும் பெயர் வைத்திருக்கிறான் எங்கள் மூதாதைத் தமிழன், கீழே உள்ள அட்டவணை உங்களுக்கு நிச்சயமாக தமிழின் பெருமையை உணர்த்தும் என நம்புகின்றோம்,
இனியாவது தமிழன் என்று சொல்வதில் தலை நிமிரப் பாருங்கள்….

எச்சரிக்கையாக இருங்கள் ராசா!! நீங்கள் கொல்லப்படலாம்.......

ராசா ஜாமீனில் ஓடிய டீல் என்ன ?



ஆ.ராசா தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இது நாள் வரையும் கடந்த 15 மாதங்களாக சிறையில் ஜாமீனே கோராமல் ராசா இருந்து வந்ததன் காரணம் தினமும் மணக்க மணக்க பரிமாறப்பட்ட இட்லி-சாம்பார் தான் என நீங்கள் நினைத்தால் உங்களைப் பாராட்டத்தான் வேண்டும்.( ஏன்னா நீங்க ரொம்ப நல்லவங்க! )

ராசா இதுவரை ஜாமீன் கோராமல் சிறையிலேயே இருந்ததற்குப் பல காரணங்கள் உள்ளன.அவற்றில் முதலாவது பிரதான காரணம் ராசா மூலம் 2G  லைசன்ஸ் பெற்ற நிறுவனங்கள் கொடுத்த பணத்தைத் திருப்பிக் கேட்கும் என்கிற அச்சம். இரண்டாவது காரணம் ராசா வெளியே வருவதற்கு சி.பி.ஐ. கடுமையான எதிர்ப்பைத் தெரிவிக்கும் என்பது.
இதுவரை ஜாமீன் பெற்ற எஞ்சிய 13 பேருமே மனம் தளராத விக்கிரமாதித்தன் போல மனு மேல் மனுப் போட்டுத்தான் ஜாமீன் கனியை எட்டிப் பறித்தார்கள். ஆனால் அவர்கள் அனைவரையுமே விட பிரதான குற்றவாளியான ராசாவுக்கு மட்டுமே முதல் மனுவிலேயே ஜாமீன் கிடைக்கக் காரணம் என்ன? அங்கே தான் நிற்கிறார் நம்ம ராசா.
 இதுவரையும் இருந்து வந்த தி.மு.க.- காங்கிரஸ் உறவு அவ்வளவு பிரமாதமாக இருக்கவில்லை என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இல்லை. காங்கிரஸ் தனது ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தி.மு.க. வுடன் கொஞ்சம் ஒட்டி உறவாட ஆரம்பித்துள்ளது.
இந்தச் சந்தர்ப்பத்தில் அண்மையில் ஏ.கே.அந்தோணி கருணாநிதியை என்றுமில்லாதவாறு C.I.D. காலனியில் (ராசாத்தி அம்மாள் வீடு) வைத்துச் சந்தித்ததும், பின்னர் ராசாத்தி அம்மாளுடனும் கனிமொழியுடனும் ஏ.கே.அன்டனி போட்டோவுக்குப் போஸ் கொடுத்ததும் உங்களுக்கு நினைவிருக்கலாம்.
இதோ, இதேதான் அந்த பொன்னான சந்திப்பு!!
இவர்களில் யாருக்கு நன்றி சொல்வது என்று ராசா இப்போது செம குழப்பத்தில் இருப்பார்
அங்கே தான் இந்த டீல் தொடங்கியது. தமது ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு தர வேண்டும் என ஏ.கே.அந்தோணி கேட்க; எனது மகளின் மீது வழக்கு உள்ள நிலையில் நான் எவ்வாறு ஆதரவு தர முடியும்? என்று கருணாநிதி முகத்தில் அறைந்தால்ப் போல் நேரடியாகவே கேட்டார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
பின்னர் முடிவேதுமில்லாமல் முடிந்த அந்தச் சந்திப்பின் பின்னர் கனிமொழி தன்னை 2G வழக்கிலிருந்து நிரந்தரமாகவே கழட்டி விட வேண்டும் என்று கோரிய மனு கடந்த 11 ந் தேதி (மே) விசாரணைக்கு வந்தது. எதிர்பார்த்தபடியே C.P.I. யும் கனிமொழியைக் கழட்டி விடுவதற்கு மறைமுகமாக உதவி செய்தது. 
அதாவது கனிமொழிக்கெதிரான ஆதாரங்களைச் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் C.P.I. க்கு உத்தரவிட்ட நிலையில் C.P.I. வழக்கறிஞரோ வெறுங்கையை வீசியவாறு மன்றுக்கு வந்து ஆதாரங்களைச் சமர்ப்பிக்க இன்று தாம் விரும்பவில்லை என்றார், கூலாக! இதே நிலைமை வேறு வழக்கில் இருந்தால் குற்றவாளிக்குச்(மனுதாரருக்கு) சாதகமாக தீர்ப்பு வந்திருக்கும். கனிமொழியும் அதைத்தான் எதிர்பார்த்தார், C.P.I.  யும் அதைத்தான் எதிர்பார்த்தது. அதாவது சத்தமில்லாமல் கழட்டிவிடப் பார்த்தார்கள்!! ஆனால் நம்ம நீதிபதி இது போல் எத்தனை பேரைப் பார்த்திருப்பார்? அவர் கடுப்பாகி C.P.I. க்கு எச்சரிக்கை விடுத்து விட்டு வழக்கை செப்டம்பர் 5, 6, 7-ம் தேதிகளில் வைத்துக் கொள்ளலாம் என்று உத்தரவிட்டு விட்டார். அந்தோ பரிதாபம், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும் போது ஜனாதிபதித் தேர்தல் முடிந்து விடும்!! நீதிபதியா ? கொக்கா?
இப்பொழுது இதே சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே ராசா ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.
இந்தச் சந்திப்புக்குப் பின்னர் தான் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது. அந்த நாள்... ஞாபகம்... நெஞ்சிலே... வருகிறதா ? ஹா ஹ ஹா
ராசா ஜாமீனில் வெளியே வருவதைக் கருணாநிதியும் விரும்பவில்லை. கருணாநிதியிடம் ஸ்பெக்ட்ரம் வழக்குத் தொடர்பான ஒவ்வொரு நிறுவனங்களும் தாம் கொடுத்த பணத்தில் ஒரு பகுதியைத் திருப்பித் தருமாறு கேட்ட போதெல்லாம் ராசா தானே உங்களுடன் டீல் பண்ணிய நபர், அவர் முதலில் வெளியே வரட்டும் என்று கருணாநிதி நிறுவனங்களைச் சமாளித்துக் கொண்டிருந்தார். அதனால் ராசா சிறை வாழ்க்கை கசந்து கொந்தளித்த போதெல்லாம் தனது தூதுவர்களை அனுப்பிச் சமாதானப்படுத்தி வந்தார் கருணாநிதி. ஆனால் இப்பொழுது உள்ள நிலைமையைப் பயன்படுத்தாவிட்டால் தான் 2014 நாடாளுமன்றத் தேர்தல் வரைக்கும் வெளியே வர முடியாது என்பது ஒரு வழக்கறிஞரான ராசாவுக்குத் தெரியாதா என்ன?
அதனால் தான் அவர் சரியான நேரத்தில் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி வெளியே வந்துவிட்டார். இது நிச்சயமாக கருணாநிதிக்கு மகிழ்ச்சி இல்லாத ஒரு விடயமாகவே இருக்கும். இனிமேல் நிறுவனங்களைச் சமாளிப்பது யார்? So, தற்போது ராசாவுக்குக் கிடைத்துள்ள ஜாமீன் அவரது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது என்றே தோற்றுகின்றது. சுப்பிரமணிய சுவாமியும் ஆரம்பம் முதலே ராசாவின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக கூறி வருகின்றார் என்பதையும் கவனிக்க வேண்டும். 2G ஸ்பெக்ட்ரம் பெற்ற நிறுவனங்களின் தொல்லை அதிகமானால் ராசாவின் நண்பர் சாதிக் பாட்சாவின் நிலையே ராசாவுக்கும் ஏற்படும் என்று யூகிக்கலாம்.....
ஏனென்றால் ராசாவின் உயிரின் பெறுமதி இரண்டுலட்சத்து எழுபத்தாறாயிரம் கோடியை விட ரொம்ப சின்னது !!
 
..........Wait and See
 2G அலைக்கற்றை ஊழலில் பிணையில் வெளிவந்துள்ள ஆ.ராசா உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று சுப்ரமணிய சாமி கூறியுள்ளார்
2G அலைக்கற்றை அலைவரிசை  ஒதுக்கீட்டு ஊழலில் பிணையில் வெளிவந்துள்ள முன்னாள் அமைச்சர் ஆ. ராசா, அந்த ஊழலில் மிகச் சிறிய பங்கே வகிக்கிறார் என்றும் பெரிய திமிங்கலங்கள் வேறு இருக்கின்றன என்றும் சுப்ரமணிய சாமி கூறியுள்ளார். ஆ.ராசாவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும்  ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி மீண்டும் கூறியுள்ளார். இந்த அலைக்கற்றை ஊழல் தொடர்பாக மத்தியப் புலனாய்வுத் துறையின் விசாரணை வளையத்தில் சிக்கியிருந்தவரும், ஆ.ராசாவின் கூட்டாளியுமான சாதிக்பாட்சா மர்மமான முறையில் இறந்தது நினைவுகூரத்தக்கது.

அலைக்கற்றை ஒதுக்கீட்டு ஊழலில் பலரும் சிறை செல்ல சுப்ரமணிய சாமியின் வழக்குப்பதிவுகள் காரணமாக அமைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஆ.ராசாவுக்கு பிணை கிடைத்துள்ளது பற்றி   சுப்ரமணிய சாமி கூறுகையில்

ராசாவுக்கு சட்டப்படிதான் பிணை கிடைத்திருக்கிறது. அவரால் இந்த வழக்கின் விசாரணையில் எந்தவித குறுக்கீட்டையும் செய்துவிட முடியாது. என்னைப் பொறுத்தவரையில் அலைக்கற்றை அலைவரிசை ஊழலில் ராசாவின் பங்கு மிகச் சிறியதுதான். இன்னும் பெரிய திமிங்கலங்கள் கண்டுபிடிக்கப்பட வேண்டியிருக்கிறன. அதனால்தான் நான் சொல்லி வருகிறேன் ராசாவின் உயிருக்கு ஆபத்து என்று. அவர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்  என்றும் சுப்ரமணிய சுவாமி கூறினார்

Tuesday, May 15, 2012

நேர்மை ஜாமீனில் வந்தது.

"இனி தர்மம் வெல்லும்."


நேர்மைக்கு ஜாமீன் கிடைத்து விட்டதால்,

"இனி தர்மம் வெல்லும்."


என எதிர்பார்க்கப் படுகிறது.

இது நேர்மைக்கு கிடைத்த வெற்றி என நாணயம் நாளை அறிக்கை வெளியிடும். 

கன்னியத்திற்கு(கனி) விரைவாக கிடைத்த ஜாமீன், நேர்மைக்கு லேட்டாக கிடைத்தாலும் லேட்டஸ்டாக கிடைத்துள்ளது என்பது திருவிழாவை போல இனிப்பு வெட்டி சந்தோசமாக கொண்டாட வேண்டிய விஷயம்.

இந்த திருவிழாவையொட்டி கடமைக்கும், கட்டுப்பாட்டுக்கும் நடந்து கொண்டிருக்கும் சகோதர யுத்தம், சிறிது நாளைக்கு நிறுத்தி வைக்கப்படும்.

கோர்ட் நேர்மைக்கு விதித்த நிபந்தனைகள்:
நேர்மை தன்னுடைய பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும்.
நேர்மை எங்கும் ஓடி விடக் கூடாது என்பதால் 20 லட்ச ரூபாயை பிணைய தொகையாக ஒப்படைக்க வேண்டும். (நேர்மையிடம் அவ்வளவு பணம் இருக்குமா?)
நேர்மை டில்லியில் தங்கியிருக்க வேண்டும்.
நேர்மை சென்னைக்கு செல்ல கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும்.

இனி நேர்மையை டில்லியில் மட்டும் தான் பார்க்க முடியும்.

ஆகவே, இன்னும் கொஞ்ச நாட்களுக்கு சென்னையில் திருடர்களிடம் கூட நேர்மையை எதிர்பார்க்காதிர்கள்!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...