Thursday, December 25, 2014

அறிஞர் அண்ணா, பெரியாரை விட்டுப் பிரிந்துசென்றது ஏன்? வெளிவராத தகவல்கள்!

அறிஞர் அண்ணா அவர்கள், தனது கல்லூரி வாழ்க்கைக்குப் பிறகு அரசியலில் முழு நேரமாக ஈடு பட மிகவும் ஆர்வம் கொண்டவராக காணப்பட்டார். அதற்கு வழிகோலும் வகையில் 1934ஆம் ஆண்டு கோய முத்தூர் மாவட்டம் திருப்பூரில்நடந்த ஒரு இளைஞர் மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களை முதன்முறை யாக சந்தித்தார். பின் தந்தை பெரி யார் அவர்களின் கொள்கைகள் அனைத்தும் மிகவும் அண்ணா அவர் களை ஈர்த்ததன் விளைவாக பெரி யாரின் நீதி கட்சியில் சேர்ந்து அரசி யல் பணியாற்றத் தொடங்கினார். நீதி கட்சி பத்திரிகையின் உதவி ஆசிரியராக இருந்த இவர், பிறகு விடுதலை மற்றும் அதன் துணை
பத் திரிக்கையான குடியரசு பத்திரிகைக்கு ஆசிரியராக பணியாற்றினார். அது மட்டுமல்லாமல் “திரா விட நாடு” என்ற தலைப் பில் ஒரு தமிழ் இதழையும் தொடங்கினார்.
இந்திய சுதந்திர போராட்டத்தின் போது காலனி ஆதிக்கத்தை இந்திய தேசிய காங்கிரசு மிகவும் வன்மையாக கண்டித் தது. ஆனால் இந்த கட்சி பெரும்பாலும் பிராமணர்கள், வட இந்தி யர்களின் ஆதிக்கம் மிகுந்த கட்சியாக இருக்கிறது என்று பெரியாரால் விமர்சிக்கப்பட்டது. இதனால் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, 1947ஐ கறுப்புத்தினமாக அறிவிக்க தன து தொண்டர்களுக்கு அழைப் பு விடுத்தார் பெரியார். இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த அண் ணா “இந்தியாவின் சுதந்திரம்” இந்தியாவில் உள்ள அனைவரி ன் போராட்டத்தினாலும், விய ர்வையாலும் கிடைக்கப்பெற்ற ஒன்று அது ஆரிய மற்றும் வட இந்தியர்களால் மட்டும் பெறப் பட்டது அல்ல என்றார், இதனால் இருவரு க்கும் கருத்து வேறு பாடு ஏற்பட்டு 1948ல் நடந்த “திராவிட கட்சியின் கட்சி” கூட்ட த்திலிருந்து அண்ணா வெளியேறவும் நேர்ந்தது. அது மட்டு மல்லாமல் பெரியா ர் தன்னை விட 40 வயது இளையவரான மணியம்மையை மணந்ததால் அண்ணாவும் அவருடைய ஆத ரவாளர்களும் திராவிட கட்சி யை விட்டு வெளியேறி 1949ல் “திராவிட முன் னேற்ற கழகம்” (தி. மு.க) என்ற தனது சொந்த கட்சியை பெரியாரின்மருமகன் இ.வி.கே சம்பத்துடன் இனைந் து உருவாக்கினார். இக்கட்சி குறுகிய காலத்தில் மக்களிடையே பெரும் செல்வாக்கையும், ஆதரவையும் பெற்றது. அந்த சமயத்தில் நடைபெற்ற‍ தேர்த லில் பெருவாரியான வாக் குகள் பெற்று தி.மு.க. அண் ணாவின் தலைமையில் ஆட்சிப்பீடத்தில் அமர்ந்த‍து. பின் அண்ணாவின் மறைவி ற்குப் பிறகு தி.மு.க.விலிரு ந்து எம்.ஜி.ஆர். நீக்க‍ப்ப‍ட் டு, கலைஞர் கருணா நிதி தலைமையில் தி.மு.கழகம் தற்போது வரையில் செயல் பட்டு வந்தது. தி.மு.கழகத்தில் இருந்து நீக்க‍ப்பட்ட‍ எம் .ஜி. ஆர். தான் அண்ணாமீது கொண்ட பாசத்தால் அண் ணா திரா விட முன்னேற்ற‍க் கழகம் என்ற பெயரில் ஒரு தனிக்கட்சி ஆரம்பித்தார்.

நீங்கள் தனிமையில் இருக்கும்போது உங்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டால், உடனடியாக‌ நீங்கள் செய்ய வேண்டியது என்ன‍?

மாலை மணி 6: 30,வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித் து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத் தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிக வும் படபடப்பாகவும், தொய்வாக வும் உள்ளீர்கள், திடீ ரென்று உங்கள் இதயத்தில் அதிக வலி ஏற்படுவதை உணர்கிறீர்கள்,
அந்த வலியானது மேல் கை முதல் தோள்பட்டை வரை பரவுவதை உண ருகிறீர்கள், உங்கள் வீட்டில் இருந்து மருத்துவமனை ஒரு ஐந்து மைல் தூரத்தில் இருப்பதாக வைத்துக்கொள்வோம், ஆனால் உங்க ளால் அந்த ஐந்து மையில் தூரத்தை கடக்க முடியாது என உங்கள் மூளை உங்களுக்கு சொல்கிறது இந்த நேரத்தில் நம் உயிரை நாமே காக்க என்ன செய்யலாம் ??
துரதிஷ்ட வசமாக மாரடைப்பு ஏற்படும் போதெல்லாம் இறப்பவர் கள் அதிகமாக தனியாக இருந் திரு ப்பவராக உள்ளனர்! உங்க ள் இதயம் தாறுமாறாக துடிக் கிறது..நீங்கள் சுயநினைவை இழக்க வெறும் 10 நொடிகள் தான் உள்ளது. இப்போது நீங்கள் செய்ய வேண்டியது தொட ர்ச்சியாக மிக ஆக்ரோஷமாக இரும் ப வேண்டும், ஒவ்வொரு முறை இரு ம்புவதர்க்கு முன்னரும் மூச்சை இழு த்துவிட வேண்டும், இருமல் மிக ஆழமா னதாக இருக்க வேண்டும்
இருதயம் இயல்பு நிலை திரும்பும் வரையிலோ அல்லது வேறொருவர் உதவிக்கு வரும் வரையிலோ ஒவ்வொரு இரண்டு நொடிக்கும் மூச் சை இழுத்து விட்டு இருமிக் கொண் டே இருக்க வேண்டும். மூச்சை இழுத் து விடுவதினால் நுரை ஈரலுக்கு ஆச்சிஜன் சீராக செல்ல வழி வகுக் கிறது , இருமுவதால் இருதயம் நிற்ப தில் இருந்து தொடர்ச்சியாக துடித்துக் கொண்டே இருக்க உதவும், இதனால் ரத்தஓட்டம் சீரடையும்.
இருமுவதால் ஏற்படும் அதிர்வினால் இதயம் சீராக துடிக்கும். பின்னர் இரு தயம் சீரடைந்ததும் அருகில் உள்ள மருத்துவமனை க்கு செல்ல லாம். இந்த தகவலை குறைந்தது உங்களின் பத்து நண்பர்களுக் காவது பகிருங்கள்..தேவை இல்லாத விசயங்களையும், ஜோக்குக ளையும் பகிர்வோர், உயிரை காக்கும் இது போன்ற விசயங்களை யும் பகிருங்கள் !!!!

அனைவரும் அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து இன்ஷூரன்ஸ் பாலிசிகள்!

அனைவரும் அவசியம் எடுக்க வேண்டிய ஐந்து இன்ஷூரன்ஸ்பாலிசிகள்!
பரபரப்பாக இயங்கும் உலகமிது. இதில் யாருக்கு எப்போது எப்படி பிர ச்னை வரும் என்று சொல்ல முடியா து. குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடியவர்கள் எதிர்பாராதவிதமாக விபத்தில் சிக்கி மரணமடைந்தால் அந்தக் குடும்பத்தின் நிலை தலை கீழாக மாறிவிடும். அதாவது, உயிரிழப்பு அல்லது உடல்பாதிப்பி னால் குடும்பத் தலைவர் மூலம் குடும்பத்திற்கு கிடைக்கும் வரு மானம் தடை படும். குடும்பத் தலைவர் ஏற்கெனவே
கடன் வாங்கியிருந்தால் அதைத் திரும்பக் கட்டவேண்டிய கட்டா யம் அக்குடும்பத்தினரின் மேல் விழுந்து, மேலும் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உரு வாகும்.
இப்படி ஒரேசமயத்தில் பண நெருக்கடியும், மனநெருக் கடியும் ஏற்பட்டு அந்தக் கு டும்பத்தினரின் வாழ்க்கை யே நரகமாக மாறிவிடும். எனவே, இதுபோன்ற சூழ்நி லையில் பிரச்னைகளுக்கு தீர்வாக அமைவது இன்ஷூ ரன்ஸ் ஒன்றாக மட்டுமே இருக்கும் என்பது அனைவராலும் மறு க்க முடியாத உண்மை.
எனவே, ஒவ்வொரு தனி மனித னும் கட்டாயம் வைத்திருக்க வே ண்டிய இன்ஷூரன்ஸ் பாலிசிகள் என்னென்ன? இவை எந்த வகை யில் வாழ்க்கைக்கு உதவும் என்ப து குறித்து விளக்குகிறார் நிதி ஆலோசகர் வி.சங்கர்.
1. லைஃப் இன்ஷூரன்ஸ்!
திருமணமானவர்கள் அவசியம் எடுக்கவேண்டிய பாலிசி இது. இதற்காக திருமணமாகாதவர்களு க்கு இந்த பாலிசி தேவையில்லை என்பதல்ல அர்த்தம். தனி நப ரைச் சார்ந்து பெற்றோர் மற்றும் சகோதர, சகோதரி கள் இருந்தா ல் கட்டாயம் லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுத்துக்கொள்வது அவசியம்.
லைஃப் இன்ஷூரன்ஸ் பா லிசியில் டேர்ம் பாலிசி, முழு ஆயுள் பாலிசி, எண்டோவ்மென்ட் பாலிசி, யூலிப் பாலிசி, சைல்டு ப்ளான் பாலிசி என பலவகைகள் உள்ளன. இதில் டேர்ம் இன்ஷூர ன்ஸ் தான், குறைவான பிரீமிய த்தில் அதிக கவரேஜ் தரும் பாலி சியாக இருக்கும். இந்த டேர்ம் இன்ஷூரன்ஸைப் பொறுத்தவ ரை, அசம் பாவிதம் ஏற்பட்டால் ம ட்டும்தான் இழப்பீடு கிடைக்கும். பாலிசி முடிவில் எந்த முதிர்வுத் தொகையும் பாலிசிதாரருக்குக் கிடைக் காது.
பொதுவாக, இந்த லைஃப் பாலி சியின் கவரேஜ் தொகையானது ஒருவரது ஆண்டு வருமானத் தைப்போல் 10-லிருந்து 12 மடங் கு இருக்குமாறு எடுத்துக்கொள் வது நல்லது. உங்களது ஆண்டு வருமானம் சுமார் 4 லட்சம் ரூபா ய் எனில், நீங்கள் குறைந்தது 40 லட்சம் ரூபாய் கவரேஜுக்கு பாலிசி எடுப்பது நல்லது.
டேர்ம் இன்ஷூரன்ஸ் பாலிசியை முடிந்தவரை இளம் வயதிலே யே எடுத்துக்கொள்வது நல்லது. ஏ னெனில், வயது அதிகமாக அதிகமாக உடல் பிரச்னைகள் அதிகமாகும். உட லில் பிரச்னை இருக்கும் சமயத்தில் இன்ஷூரன்ஸ் பாலிசி கிடைப்பது கடி னம்.
உதாரணத்துக்கு, இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட நிலையில் உங்கள் வாழ்க்கை அதிக ரிஸ்க் கொண்டதாக மாறி விடும். அப்போது லைஃப் இன்ஷூரன்ஸ் பாலிசி எடுக்க நினை த்தால், அது கிடைக்காமலே போக வாய்ப்பு அதி கம். அப்படியே கிடைத்தாலும் பிரீமி யம் மிக மிக அதிகமாக இருக்கும்.
எனவே, இளம்வயதில் ஆரோக்கியமாக இருக்கும்போதே இன் ஷூரன்ஸ் பாலிசி எடுப்பதே புத்திசாலித்தனம். மேலும், டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுக்கு ம்போது விபத்துக் காப்பீட்டுட ன் கூடிய பாலிசிகள் கிடைக் கின்றன. இதைத் தேர்ந்தெடுப் பது நல்லது. ஏனெனில், விபத் தினால் மரணம் ஏற்படும்போ து இரு மடங்காக கவரேஜ் தொகை கிடைக்கும்.
இன்ஷூரன்ஸ் பாலிசி என்பது உங்கள் குடும்பத்தின் பாதுகாப்புக்காகத்தான் என்பதை ஞாபகத் தில் வைத்துக்கொள்ளுங்கள். சில இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள்பாலிசியோடு, சேமிப்பு மற்றும் முதலீடு என்று உங்களை திசை திருப்பு வதற்கான வாய்ப்புகளு ம் உள்ளன. இந்தவகை பாலிசிகளில் ஆண்டுக் கு சுமார் 5-6 சதவிகிதம் தான் வருமானம் கிடை க்கவே வாய்ப்புண்டு. எனவே, முடிந்தவரை இந்த வகையான பாலிசிகளைத் தவிர்ப்பது நல்லது.
2. கடனுக்கான இன்ஷூரன்ஸ்!
இன்றைய நிலையில் கடன் வாங்காமல் யாருமே இருக்க முடியா து. அடிப்படை தேவைகளில் ஒன்றாக கடன் மாறிவிட்டது. வீடு, கார் போன்றவற்றை நாம் கடன் வாங்கித்தான் வாங்குகி றோம். இதில் வீட்டுக்கடன் என் பது நீண்ட கால கடனாக இருக் கும் என்பதால் மாதாமாதம் இ. எம்.ஐ. மூலம் கடனை திரும்பக் கட்டுவோம். இச்சூழ்நிலையில் எதிர்பாராத விபத்து, மரணம் ஏற்படும்போது குடும்பத்தினர் நிதிச் சிக்கலில் மாட்டிக்கொள்வார்கள். இதுபோன்ற சிக்கலில் இருந்து தப்பிக்க ஒருவர் கடனாக வாங்கியத் தொ கைக்கு ஈடாக ஆயுள் காப்பீடு பாலிசியை எடுப் பது அவசியம்.
அதாவது, எதிர்பாராதவிதமாக கடன் வாங்கியவருக்கு மரணம் ஏற்பட்டால் அந்தக் கடன் சுமை யிலிருந்து குடும்ப உறுப்பினர்க ள் விடுபட முடியும். கடன் வாங் கியவர் மரணமடையும் நிலையில், அப்போது நிலுவையில் உள்ள கடன் தொகையை இன்ஷூர ன்ஸ் நிறுவனம் வங்கிக்கு தந்துவிடு ம். கடன்தொகை குறைய குறைய க வரேஜும் குறைகிற மாதிரி பாலிசிக ள் உள்ளன. இதில் பிரீமியம் குறைவா க இருக்கும். இந்த பாலிசி கல்விக் கடன், கார் கடன் , வீட்டுக் கடன் என நீண்டகால கடன்களுக்கு கிடைக்கு ம்.
3. ஹெல்த் இன்ஷூரன்ஸ்!
பல நாட்கள் கஷ்டப்பட்டு சேர்த்து வைத்த சேமிப்பு அனைத்தும் ஒரு வியாதி வந்தாலே கரைந் துவிடும். விபத்து ஏற்பட்டு அத னால் மருத்துவச் செலவுகள் ஏற்படுவது, திடீரென ஏற்படும் உடல் நலக் குறைவு போன்ற சமயங்களில் ஹெல்த் இன்ஷூ ரன்ஸ் பாலிசி அவசியம்.
இந்த இன்ஷூரன்ஸில் மருத்து வச் செலவு களுக்கு இழப்பீடு பெற முடியும். அதுவும் மருத்து வமனையில் அனுமதிக்கப்பட்டு குறைந் தபட்சம் 24 மணி நேரம் சிகிச்சை எடுத்துக்கொள்ளும் சமய த்திலும், அறுவை சிகிச்சை சமயத் திலும் இழப்பீடு கிடைக்கும். இதை தனிநபர், ஒட்டுமொத் தக் குடும்பம், மூத்தக் குடிமக்கள் என அனைவரும் எடுத்துக்கொள்ளும் வசதி இருக்கிற து. இந்த பாலிசியையும் ஒருவர் வேலைக்குச் சேர்ந்தவுடனேயே எடு த்துக் கொள்வது நல்லது.
பெரிய நிறுவனங்களில் குரூப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் இருக்கும் .இந்தவகை இன்ஷூரன்ஸ் பாலிசி மூலம் ஒரு நிறுவனத்தி ல் வேலை பார்க்கும் வரை தான் கவரேஜ் கிடைக்கும். அ ந்த வேலையை விட்டுவிட்டு அ டுத்த வேலைக்கு மாறும்போது அந்த நிறுவ னத்தில் குரூப் இன்ஷூரன்ஸ் இருந்தால்தான் அதில் நீங்கள் சேரமுடியும்.
உதாரணமாக, நீங்கள் 40 வயதில் வேலை மாறுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அந்த நிறுவனத்தில் குரூப் இன்ஷூரன் ஸ் இல்லையென்றால், நீங்கள் தனியாகத்தான் இன்ஷூரன்ஸ் எடுக்கவேண்டியிருக்கும். அந்த சமயத்தில் ஏற்கெனவே உள்ள நோய்களுக்கு கவரேஜ் குறிப்பி ட்ட காலத்திற்கு கிடைக்காது. இச்சூழ்நிலையில் இன்ஷூரன் ஸ் எடுத்தும் அது உங்களுக்கு முழுமையாகப் பயன்படாது. எ னவே, நிறுவனங்களின் குரூப் இன்ஷூரன்ஸ் இருந்தாலும் நீங் கள் தனியாக சில லட்சம் ரூபாய் க்கு ஹெல்த் பாலிசி எடுத்து வைப்பது நல்லது. கூடுதல் கவரேஜ் தேவைப்பட்டால் டாப்அப் செய்துகொள்ளலாம்.
இந்த பாலிசியை எடுத்தால் மட் டும் போதாது. உங்களின் மருத்து வத் தேவை என்ன? நீங்கள் எடுத் து வைத்திருக்கும் பாலிசியின் கவரேஜ் தொகை எவ்வளவு, குரூ ப் இன்ஷூரன்ஸ் எனில் அதனு டைய கவரேஜ் தொகை எவ்வள வு, எந்தெந்த சிகிச்சைகளுக்கு க்ளைம் கிடைக்கும், கேஷ்லெஸ் வசதி உள்ளதா என்பதை எல்லா ம் முன்கூட்டியே தெரிந்து வைத் துக் கொள்வது அவசியம். எப்போ தும் இன்ஷூரன்ஸ் ஆவணங்க ளைப் பாதுகாப்பாக வைத்திருப்ப து அவசியம். மேலும், அந்தத் தக வலை குடும்ப உறுப்பினர்களிடம் தெரிவிப்பதும் முக்கியம். இப்படி செய்யும்போது எந்த சூழ்நிலையி லும் உங்கள் குடும்பம் பாதுகாப் பாக இருக்கும்.
4. வீட்டு உரிமையாளர் பாலிசி!
வீட்டு உரிமையாளர் பாலிசி (ஹவுஸ் ஹோல்டர் பாலிசி) என்ப து, வீட்டில் உள்ள பொருட்கள் மற்றும் கட்டடத்திற்கு சேர்த்து கவரேஜ் கிடைக்கும். இதில் தங் கம், வெள்ளி, விலை உயர்ந்த எலெக்ட்ரானிக் பொருட்கள், ஃபர்னிச்சர் போன்ற அனைத்திற் கும் கவரேஜ் கிடைக்கும். இந்த பாலிசிக்கு, நீங்கள் இன்ஷூர ன்ஸ் எடுக்கும் பொருட்களின் மதிப்புக்கு ஏற்ப பிரீமியம் இருக் கும்.
வாடகை வீட்டில் இருப்பவர்கள் வீட்டில் உள்ள பொருட்களுக்குமட்டும்தான் இன்ஷூரன்ஸ் எடுக்க முடியும். கட்டடத்துக் கு எடுக்க முடியாது. சொந்த வீடு என்கிறபோது, கட்டடத்து க்கு எடுக்கும் கவரேஜுக்கு நிலநடுக்கம், நிலச்சரிவு, தீவி ரவாதிகள் தாக்குதல், மழை வெள்ளத்தால் பாதிப்பு, திருட் டு போன்ற சமயத்தில் இதில் க்ளைம் பெற முடியும்.
வீட்டு உரிமையாளர் பாலிசி யில் கவரேஜ் செய்துள்ள பொருட்கள் வாங்கியதற் கான ரசீதுகளைப் பாதுகாப் பாக வைத்திருப்பது அவசிய ம். ஏனெனில், ஏதாவது பாதி ப்பு ஏற்பட்டு க்ளைம் செய்யும் போது அந்தப் பொருளின் உ ண்மையான மதிப்பைத் தெரி ந்துகொள்ள இன்ஷூரன்ஸ் நிறுவனம் அந்த ரசீதை கேட் க வாய்ப்பு உள்ளது. அதாவது, அதிக மின் அழுத்தத்தால் உங்களி ன் டி.வி. பழுதடை யும்போது, உங்கள் டி.வி.க்கான மதிப்பைத் தெரிந்துகொள்ள அதை வாங்கி யதற்கான ரசீதைக்கேட்பார்கள். எனவே, க்ளைம் கேட்கும் போ துதான் சிக்கல் வரும்.
5. வாகன இன்ஷூரன்ஸ்!
இன்று வாகனம் இல்லாத வீடுகளே இல்லை. இந்திய வாகனச் சட்டப்படி, மூன்றாம் நபர் இன்ஷூ ரன்ஸ் என்கிற தேர்டு பார்டி இன் ஷூன்ஸ் எடுப்பது கட்டாயம். இந் த இன்ஷூரன்ஸ் இல்லாமல் வா கனம் ஒட்டக் கூடாது. மேலும், பி ரீமியத்தைக் குறைக்க வாகனத் தின் மதிப்பைப் பலரும் குறைத்து இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்கிறார்கள். இந்நிலையில் க்ளைம் -க்குப் போகும்போது வாகனத்தின் உண்மையான மதிப்பு இழப்பீடுகிடைக்காது. எனவே, பிரீமியத் தில் 100, 200 ரூபாய் மிச்சப்படுத் துவதற்காக பல ஆயிரங்களை இழக்க நேரிடும்.
இந்த இன்ஷூரன்ஸ் அனைத்து ம் கட்டாயம் வாழ்க்கைக்கு அவ சியமான ஒன்றாகும். எனவே, இ ந்த பாலிசிகள் எல்லாம் உள்ள தா என்பதை சரிபார்த்துக்கொள்ளவும்” என்று முடித்தார்.

மாரடைப்பு ஏற்படாமல் நம்மை காக்கும் கவசமே கல்லீரல் என்கிற உள்ளுருப்பு

கல்லீரல்தான் மனித உடலில் மிகப்பெரிய சுரப்பியாகும். சுமார் 1 கிலோ எடை கொண்டது. இது மிகவும் மென்மையான உறுப்பா கும். செம்பழுப்பு நிறத்து டன் காணப்படும். கல்லீ ரல் வயிற்றின் மேல் பகு தியில் வலது பக்கத்தில் அமைந்துள்ளது. நாம் உண்ணும் கொழுப்பு சத் துள்ள உணவுபொருட்க ள் செரிப்பதற்கு பித்தநீர் மிகவும் அவசியமாகும். இந்த பித்த நீரை
உற்பத்தி செய்வது கல்லீரல்தான்.
பொதுவாக கொழுப்புச் சத்துள்ள உணவுகளை செரிக்காமல்ஆங்காங்கே படிந்து ரத்தத்தி ன் மூலம் எல்லா உறுப்புகளு க்கும் சென்றடைந்து விடும். இதில் முக்கியமாக கொழுப்பு இதயத்திற்கு செல்லும் ரத்தக் குழாய்களில் படிந்து அடைப் பை ஏற்படுத்தி விடுகிறது. இத னால் இதயத்திற்கு தேவையா ன ரத்தம் செல்வதில்லை.
இதனால் மாரடைப்பு ஏற்படுகிறது. இந்த கொழுப்பை கல்லீ ரலில் சுரக்கும் பித்த நீரான து கரைத்து விடுகிறது. இத னால் மாரடைப்பு ஏற்படாம ல் இருக்க கல்லீரல் முக்கிய பங்கு வகிக்கிறது. கல்லீர லில் கொழுப்பு தேங்குவதா ல், இன்சுலின் எதிர்ப்பை ஏற் படுத்துவதாகவும், அதிகளவு கொழுப்பு காணப்படுவதால் சர்க்கரைநோய் மற்றும் இதயநோய்களை உருவாக்குகிறது.
ஈரலில் மிக அதிக அளவுக் கு கொழுப்பு சேர்வதால், ஆ ல்கஹால் அல்லாத கொழு ப்பு தொடர்பான நோய்கள் ஏற்படுகிறது. உடல் பருமன் என்பது பரவலாகிவிட்ட இ ந்தக் காலக் கட்டத்தில், குழ ந்தைகள் முதல் பெரியவர் கள் வரை கல்லீரல் கொழு ப்பு என்பதும் அதிகரித்து வருவதாகவும், அவை தொடர்பான நோய்களும் உயர்ந்து வருவதாகவும் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது  என் கிறார் பிரபல கல்லீரல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன். அவர் கூறியதாவது:-
பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் சிப்ஸ், பீஸா மற்றும் குளிர்பா னங்கள் போன்றவற்றில் உணவுப் பொருள் கெ டாமல் இருக்க சில ரசா யனங்கள் சேர்க்கப்படு கின்றன. அவை 100 சத வீதம் கல்லீரலை குறி வைத்து தாக்குகிறது. இந்த நொறுக்குத் தீனிகளை அதிகம் விரும்பி சாப்பிடுவது குழந்தைகள்தான். இவை ருசியாக இருப்பதால் குழந்தைகள் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு விடுகிறார்கள்.
நொறுக்குத் தீனிகளால் 10 வகையா ன கல்லீரல் நோய்கள் ஏற்படுகின்ற ன. 1. ஹெப்பாடிட்டீஸ் ஏ 2. ஹெப்பா டிட்டீஸ் பி 3. ஹெப்பாடிட்டீஸ் சி 4. ஹெப்பாடிட்டீஸ் டி 5. ஹெப்பாடி ட்டீஸ் இ 6. சைரோசிஸ் 7. கலோலி திசிஸ் 8. கலேசிஸ்டி டிஸ் 9. கார்சி னோமோ 10. ஹெபடோமெகலி. நொறுக்குத் தீனிகளில் உள்ள நச்சுப் பொருட்களை முதலில் கல்லீரல் சுத்திகரிக்கிறது. எஞ்சிய வற்றை சிறு நீரகம் சுத்திகரிக்கிறது.
நொறுக்குத் தீனிகளை ஒரு குழந்தை அடிக்கடி சாப்பிட்டா ல் கல்லீரல், சிறுநீரகம் ஆகிய வை கடுமையாகப் பாதிக்கப்படு ம். நொறுக்குத்தீனியை  அளவு க்கு அதிகமாக சாப்பிட்டால், அவை உடனுக்குடன் ஜீரனமா காமல் குடலில் தேங்குகிறது. இவைதான் விஷமாக மாறுகி றது. கல்லீரல் பாதிக்கப்பட்டால் அஜீரணக் கோளாறு, பசியி ன்மை, குமட்டல், வாந்தி, அடிக்கடி காய்ச்சல் போன்றவை ஏற்படும்.
ஜீரண மண்டல பாதிப்பு ………
கல்லீரலில் கொழுப்பு அதிகரித்தால் முதலில் பாதிப்படைவ து ஜீரணம் தான். வயிற்றில்ஜீரணம் சரிவர நடைபெற, கல்லீரல், பித்தநீரை தயாரிக்கிறது. பித்த நீர் தவிர, கல்லீரல் ரத்த புரதம் மற்றும் நூற்றுக் கணக்கான என்ஜைம்களை தயாரிக்கிறது. இவற்றால் ஜீரணமும், இதரஉடலின் வேலைப்பாடுகள் சரிவர நடக்கும். உணவிலிரு ந்துகிடைக்கும் சர்க்கரையை லிவர் `கிளைக்கோஜென்’ ஆ க மாற்றி அதை சேமித்து வைக்கிறது. தேவைப்படும் போது தருகிறது.
உடலிலிருந்து நச்சுப்பொருட் களை நீக்குவதையும் கல்லீ ரல் செய்கிறது. குளூகோஸ், விட்டமின்கள் ஏ, பி12, டி, இரு ம்பு, காப்பர் முதலியவற்றை கல்லீரல் சேமித்து வைக்கிறது. கார்போ ஹைடிரேட்களையும், புரதத்தையும் கொழுப்பாக மா ற்றி கல்லீரல், பிற்கால தேவை க்காக சேமித்து வைக்கிறது. கல் லீரலில் அதிக கொழுப்பு சேர்ந் தால் கல்லீரல் வீங்கிவிடும். நீரி ழிவு மற்றும் அதீத பருமன் உள் ளவர்களுக்கு இது ஏற்படும்.  
80% குழந்தைகள் பாதிப்பு…….
குழந்தைகள் அடிக்கடி நொறுக்குத் தீனிகளை விரும்பி சாப்பிடுகின்றன. நொறுக்கு தீனிகளில்உள்ள கொழுப் பு குழந்தைகளின் கல்லீர லின் மேல் பகுதியில் படி ந்து பருமனாக மாறி விடு கிறது. தற்போது நம் நாட் டில் உள்ள 80 சதவீதம் கு ழந்தைகள் இதுபோன்ற கொழுப்பு மிகுந்த ஈரலை உடையவர்களாக உள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன்பு குழந்தைகளிடம் இது போன்ற கோ ளாறுகள் வெறும் 20 சத வீதம் மட்டும்தான் இருந் தது.
இதற்கு காரணம் ரசாய ணம் கலக்காத உணவுக ள்தான். ஆனால் தற்போ து ரசாயணம் கலக்காத உணவைப் பார்ப்பதே அரிதாக உள்ளது. சில உணவுகளில் ருசிக்காக சில ரசாய ணங்கள் சேர்க்கப்படுகின்றன. இவற்றை நம்மூர் கடைகளி ல் சாஷே பாக்கெட்டுகளில் வைத்து விற்கிறார்கள். அதை தவிர்க்க வேண்டும்.
தடுக்க வழிகள்…….
உடல்பருமனைக்குறைக்கு ம்போது, கல்லீரலில் உள் ள கொழுப்பானது தானாக வே கரைந்துவிடும். கலோ ரி கட்டுப்பாடு காரணமாக கல்லீரலில் உள்ள கொழுப் புகுறையும். எனவே உடல் பருமனைத் தவிர்ப்போம். கொழு ப்புச் சத்தினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விடுபடுவோம். பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் நொறுக்குத் தீனி களை குழந்தைகளு க்கு கொ டுக்கக் கூடாது.
வீட்டில் தயாரித்த உண வுகளை கொடுப்பது நல் லது. உணவில் காய்கறிகள் அதிகம் சேர்க்க வேண்டும். தின மும் ஏதாவது சில பழங்களை உண்ணலாம். குழம்பு போன் றவற்றை சமைத்த அன்று மட் டும்தான் சாப்பிட வேண்டும், அதை பிரிட்ஜில் வைத்து மறுநா ள் சாப்பிடக்கூடாது. ரசாய ண குளிர்பானங்களை அருந்த கூ டாது. கல்லீரல் நோயாளி கள் அசைவ உணவுகளை சாப்பிடக் கூடாது.
சோடா உப்பு கலந்த உணவுகள் எளிதில் ஜீரணமாகாத உண வுகள் வேர்கடலை மற்றும் கிழங்கு வகைகளை தவிர்க்க வேண்டும். உணவில் அதிக அளவில் கீரைகள் சேர்த்துக் கொள்ளவேண்டும். இளநீர், கரும்புச்சாறு, தேங்காய் பால் அருந்தலாம். கல்லீரல் அழற்சி உள்ளவர்களுக்கு சைவ உணவே சிறந்தது. கல் லீரல் பாதிக்கப்பட்டவர்கள் திராட்சை ஜுஸ், கேரட் ஜு ஸ், போன்றவைகளை தினசரி சாப்பிடுவத ன் மூலம் சிறுநீர் சுலபமாக பிரியும்.
மலமிளகும். எலுமிச்சை சாறு சேர்த்த நீரை அதிகமாக எடு த்துக் கொண்டால் கல்லீர லின் செல்கள் பலமடையு ம். மஞ் சள் காமாலைக்கு நல்லது.சத்துள்ள ஆகாரத் தால் கல்லீரலை புதுப்பிக் க முடியும்.பூண்டை தின சரி சமையலில் சேர்ப் பது நல்லது. சீரகப்பொடி கலந் த மோர் ஜீரணத்தை மேம் படுத்தும்.  
கல்லீரல் கோளாறுகளை தவிர்க்க, சமையல் எண்ணெய் யை 20 லிருந்து 30 கிராம் வரை தினச ரி உபயோகிக்கவும். அதிக எண்ணெய் ஆபத்து என்கிறார் சென்னை பெரம்பூர் சென் மருத்துவமனை இயக்குனர் டாக் டர் வெங்கடேசன்.
***
மேலும் சில பாதுகாப்பு குறிப்புக்கள்
கல்லீரல் பிரச்னைகளை, குழந்தைகளுக்கு, பெரியவர்களு க்கு என இரண்டு வகைகளா கப் பிரிக்கலாம். குழந்தைக ளுக்கானப் பிரச்னைகள் பிற வியிலேயே வரக்கூடியவை. பெரியவர்களுக்கு ஆல்க ஹால் மற்றும் ஆல்கஹால் அல் லாத காரணங்களால் கல் லீரல் நோய்கள் ஏற்படுகின்றன” என்று எச்சரிக்கும் டாக்டர் நரேஷ் சண்முகம், கல்லீரல் பாதுகாப்புபற்றி அளிக்கும் குறி ப்புக்கள் இங்கே…
1. கொழுப்பை குறைப்போம்
உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருங்கள். அதிகப்படி யான கொழுப்புதான் கல்லீரல் பிரச்னைக்கு மிக முக்கியக் காரணம். கொழுப்பு கல்லீரல் திசுக்களில் சேகரித்து வைக்க ப்படும்போது, கல்லீரல் திசுக் கள் பாதிக்கப்படும். நாள் ஆக ஆக பாதிக்கப்பட்ட கல்லீரல் செல்களும் அழிந்துவிடும். பின்னர், அந்தக் கொழுப்பு ரத்தத் தில் பயணித்து உடலின் வேறு பகுதிகளுக்கும் சென்றுவிடு ம். இப்படி லட்சக் கணக்கில் கல்லீரல் செல்கள் அழியும்போ து கல்லீரல் சுருக்கம் (Liver Cirrhosis )ஏற்படும். இதைத் தவி ர்க்க உணவில் கொழுப்பு அளவைக் குறைக்க வேண் டும். நாம் சாப்பிடும் உணவி ல் உள்ள தேவைக்கு அதிகமான கலோரியைக் கொழுப்பாக மாற்றும் பணியைக் கல்லீரல் செய்கிறது. சராசரியாக பா சல் மெட்டபாலிக் ரேட் (basal meta bolic rate) என்பது ஆண்களுக்கு ஒரு நாளைக்கு 1,600 – 1,800 கலோரியாகவும் பெண்களுக்கு 1,300 முதல் 1,500 க லோரியாகவும் இருக்கவேண்டு ம். உங்கள் உடலுக்கு ஏற்ற பாச ல் மெட்டபாலிக் ரேட் எவ்வளவு என்பதைக் கண்டறிந்து, அதற் கு ஏற்ற வகையில் உங்கள் உ ணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்ளுங்கள். பாடி மாஸ் இன்டெக்ஸ் குறியீடு 17 முதல் 24.99 என்ற அளவில் இருக்கும் படி பார்த்துக்கொள்வது அவசி யம்.
2. இயற்கை உணவு
ஆட்டிறைச்சியையும் மாட்டிறைச்சியையும் தவிர்க்க வேண் டும். மாற்றாக, மீன் சாப்பிட லாம். அதுவும் எண்ணெயில் பொரிக்காமல், குழம்பு மீன்க ளாகச் சாப்பிடலாம். காய் கறிகள், பழங்கள், பருப்பு வ கைகளை சாப்பாட்டில் அதிக ம் சேர்த் துக்கொள்ளலாம். உடல் பருமன் ஏற்படாமல் இருக்க, ஐஸ் கிரீம், நொறுக் குத் தீனிகள், சாஃப்ட் டிரிங்க்ஸ் போன்றவற்றைத் தவிர்த்து விடுங்கள். இது மாரடைப்பு, சர்க்கரை நோய், ரத்தக் கொதி ப்பு போன்றவற்றையும் தவிர்க்க உதவும்.
3. உடற்பயிற்சி
கொழுப்பைக் கரைக்கவும் உடல் எடை யைக் குறைக்கவும் உடற்பயிற்சி நல்ல வழி. நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிளி ங் , யோகா… உங்களுக்குத் தோதான உடற்பயிற்சி எதுவோ, அதைச்செய்யுங் கள். உடலைக் கட்டுக்கோப்பாக வைத் துக் கொள்ளுங்கள்.
4. மதுவுக்கு நோ நோ
மது அருந்தும்போது அது கல்லீரலைத்தான் சென்று அடை கிறது. அங்கு அது செல்களுக் கு ஆற்றலை அளிக்கக்கூடிய மைய அமைப்பான மைட்டோ கான்டீரியாவைத் தாக்குகிற து. இதனால், செல்களுக்குப் போதுமான ஆற்றல் கிடைக் காமல் பாதிக்கப்படுகின்றன. செல்கள் பாதிக்கப்படும்போது, அந்த இடத்தைக் கொழுப்பு ஆக்கிரமித்துக் கொள்ளும். இதனாலும், கல்லீரல் பெரிதா கும். பின்னர் அந்த செல் முற்றிலும் இறக்கும்போது, சுருங் குதல் என்பது நடக்கும். பாதிப்பைத் தானாகவே சரிசெய்து கொள்ளும் தன்மை உள்ளதால், கல் லீரல் புதிய செல்களை உற்பத்தி செய்யும். ஆ னால், அந்த நேரத்தில் கல்லீரல் புற் று நோய்க்கான வாய்ப்பு அதிகரிக்கி றது. இப்பிரச்னைகளைத் தவிர்க்க மது அருந்துவதை முற்றிலுமாக நிறுத்த வேண்டும்.
5. பாதுகாப்பான குடிநீர்
எலிக் காய்ச்சல், டைஃபாய்டு போன் ற வைரஸ் மூலம் பரவு ம் நோய்கள் கல்லீரலில்தான் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. கல்லீரலில்ஹெபடைடிஸ் ஏ, பி, சி என பல வைரஸ் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் உண்டு. இந்தக் கிருமி கள் அசுத்த மான தண்ணீர், ஆரோக் கியமற்ற சூழ்நிலையில்தான் பரவு கின்றன. எனவே, சுத்தமான தண்ணீ ரும் உணவும் கல்லீரல் பாதுகாப்புக் கு முக்கியமான அம்சங்கள். இதில் கவனம் செலுத்துங்கள். ஹெபடைடி ஸ் ஏ, பி-யைத் தவிர்க்க தடுப்பு ஊசியும் போடலாம்.
6. பரிசோதனை
பிறந்த குழந்தைகளுக்குச் சிறுநீர் மற்றும் ரத்தப் பரிசோத னைகள் மேற்கொள்வதன் மூலம், 101 வகை வளர்சிதை மாற்றப் பிரச்னைகளைக் கண் டறியலாம். ஆரம்ப நிலையி லேயே நோயைக் கண்டறிந் தால், அதைக் குணப்படுத்து வதற் கான வாய்ப்புகள் அதிகம்.
7. மருந்து
அதீதமான மருந்துப்பயன்பாடும் கல்லீரலை ப் பாதிக்கும். எனவே, மருத்துவர்களின் பரிந் துரை இன்றி மருந்துகள் எடுத்துக் கொள் வதைத் தவிருங்கள்.
8. ஹெல்த் செக்கப்
பொதுவாக 35 முதல் 50 வயதுக்குள் இருப்பவர்கள்தான் கல் லீரல் பாதிப்பை அதிகம் எதிர்கொள்கிறார்கள். எனவே, இந் த வயதினர் கூடுதல் எச்சரிக்கையு டன் இருப்பது நல்லது. வருடத்துக்கு ஒரு முறை கட்டாயம் ‘மாஸ்டர் ஹெல்த் செக்கப்’ செய்து கொள்வது நல்லது. வாய்ப்பு இல்லாவிட்டால், கல்லீரல் செயல்பாடு பரிசோதனை யாவது செய்து கொள்ள வேண்டும்.
எல்லாவிதத்திலும் நம் உடலுக்குக் கா வல்காரனாக இருக்கும் கல்லீரலை நா ம் எந்த அளவுக்குப் பாதுகாப்பாகப் பரா மரிக்கிறோம் என்பதைஎல்லோரும் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டி யநேரம் இது. காவல்காரனையும் காக் க வேண்டியது நம் கடமை அல்லவா!

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...