Wednesday, February 11, 2015

ஓபாமா பராக்! பராக்! – யாருக்கு இலாபம்?

ஓபாமா பராக்! பராக்!

2015 பிப்ரவரி மாத நம் உரத்த‍சிந்தனை மாத இதழில் வெளிவந்த தலையங்கம்!
ஆஹா என்றெழுந்தது பார் யுகப்புரட்சி! என்று மகா கவி ஆனந்தமாய்க் கூத்தாடியது போன்று அடடா வந்துவிட்டார் அமெரிக்க
அதிபர் என்று பெருமையும் பூரிப் பும் கண்டிருக்கிறது நமது தேசம்.
இந்திய வரலாற்றிலேயே குடியரசு தினத்தில் கலந்து கொண்ட முதல் அமெரிக்க‍ அதிபர் என்ற சிறப்பும் தன் பதவிக் காலத்தில் குறுகிய இடைவெளியில் ஒரு தேசத்திற்கு இரண்டு முறை பயணம் செய்தவர் என்ற பெருமையும் பெற்றிருகுகிறார் அமெரிக்க‍ அதிபர் முபாரக் ஓபாமா!
இந்த பயணம், நாங்கள் இந்தி யாவின் பக்க‍ம் என்று சீனாவுக் கு எச்ச‍ரிக்கையும், பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதர வுக்கு மிரட்ட‍லையும், இந்தியாவிலுள்ள‍ தொழிலதிப ர்களுக்கு புத்துணர்வையும், அமெரிக்காவில் பணிபுரி யும் இந்திய ஊழியர்களுக்கு நம் பிக்கையையும் ஏற்படுத்தியி ருக்கிறது என்பதில் சந்தேக மில்லை.
யாருக்கு நுழைவு மறுக்க‍ப்பட்ட‍தோ . . . அவரே அன் பொழுக ஆரத்தழுவி அமெரிக்க அதிபரை வரவேற்ற‍து காலத்தின் கட்டாயந்தானே! இந்த பெருமைகளுக்கு இந்திய தேசம் கொடுத்திருக்கும் விலை அதிகம். ஆம்! அவரது பயணத் தையொட்டி ஏற்பாடு செய்யப் பட்ட‍ பாதுகாப்பு செலவுகள் பல இலட்சம் கோடிகளை தாண்டி யிருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருக்கும் இந்தியாவுக்கு இது தேவைதானா என் று பலரையும் புருவத்தை உயர்ந்த வைத்திருக்கிறது.
அமெரிக்க அதிபரின் இந்த அவசர பயணத்தால் யாரு க்கு லாபம் என்று அறைக்குள் உட்கார்ந்து யோசித்தா ல் மண்டை காய்ந்துவிடும். தன் வியா பாரம் இந்தியா விற்குள் விஸ்த்தரிக்க‍ வேண்டும், அணு ஆயுத பேரம் படியவேண்டும். விலை யில்லா இந்திய இளைஞர்களின்தொழில்நுட்ப உழை ப்பைப் பயன்படுத்திக் கொள் ள‍ வேண்டும் என்கிற அமெரி க்காவின் எண்ண‍ம் ஈடேறி யிருக்கிறது.
அதே சமயம் இந்தியாவின் பொருளாதாரத் தேவை பூர்த் தியாக வேண்டும். அமெரிக்காவில் பணிபுரியும் இந்தி யர்களின் பணி பாதுகாப்பு சம்பள உயர்வு குடும்பத்தி னருக்கு வேலைவாய்ப்பு விசா சலுகைகள் போன்றன உறுதி செய்ய‍ப்பட்டிருக்கிறதா என்ப து இன்னும் சரியாகத் தெரிய வில்லை. பல்வேறு திட்ட‍ங்க ளுக்கு அமெரிக்கா தரப்போகு ம் நிதிஆதாரமும் வரையறுக்க‍ப்பட வில்லை. பயங்கர வாதத் தடுப்பு குறித்தும் முடிவுகள் எட்ட‍ப்பட வில்லை.
இதற்கிடையில் இந்தி யாவில் தயாரிப்போம் என்ற கோஷத்தை ஒரு புறம் எழுப்பிக்கொண்டு லண்டனில் தயாரான 10லட்ச ரூபாய் மதிப்புள் ள ஆடையை அணிந்து கொள்கை வேறு நடை முறை வேறு என்ற சர்ச் சையை துவக்கி வைத்திருக்கிறார் நமது பிரதமர்.
இதைவிட மதச்சார்பற்ற‍ சகிப் புத் தன்மைதான் இந்தி யாவை பலமுள்ள‍தாக்கும் என்று ஒபா மா போகிற போக்கில் ஊதி விட்டு சென்றதை இங்குள்ள‍ எதிர் கட்சிகள் அரசியலாக்கி குளிர்காய்ந்து வருகின்றன•
சுருக்க‍மாக சொன்னால்.. அமெரிக்க அதிபரின் இந்திய விஜயமும், நமது அரசின் அணு குமுறையும் ஆளு ஷோக்கு ஆனா பேக்கு (அழகு ஆனா கொஞ்சம் லூசு) என்று கிராமங் களில் சொல்வார்களே அது போல் தான் அமைந்திருக்கிறது.
.
.
|/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\/\\\/\\/\\\/\\\/\\\/\\/\\/ ///\\///\\///\\///\/\//\///\\///\\///\\///\\///\\///\\///\\///\\///\///\\///\\//\/\//\\/\\//\\/\\/\\//\\//\/\\///\\//\\/\\/\\//\\///\\///\\\/\\//\\///\\///\\///\

உங்கள் கையில் உள்ள‍ கைப்பேசி (செல்) பற்றிய நீங்கள் அறியாத அரிய தகவல்கள்

நாம் பயன்படுதிதும் மொபைல் போனில் 0 மற்றும் 1 ஆகிய கீகளில் எழுத்துக்கள் எதுவும் இணைக்கப்படவில்லை. 0 மற்று ம் 1 எண்கள் Flag எண்கள் என அழைக்கப்படுகின்றன.
இவற்றைப்பயன்படுத்தித்தான் பல நாடுகளில் அவசர எண்கள் அமை க்கப்பட்டுள்ளன. அவசர அழைப்பி ற்கு 100 எண் பயன்படுவது இதில் ஒன்று.
ஒவ்வொரு மொபைல் வாங்கி இ யக்கத் தொடங்கியவுடன் *#06# என்ற எண்ணை அழுத்தி அதன் தனி அடையாள எண்ணை த் (Inter national Mobile Equipment Identity) தெரிந்து வைத்
துக் கொள்ளுங்கள்.
உங்கள் மொபைல் போனுக்கான வார ண்டி இதனைச் சார்ந்ததாகும். மேலும் உங்கள் மொபைல் தொலைந்துபோனா ல் இந்த எண்ணைக்கொண்டு தேடிக் கண்டுபிடிக்கலா ம்.
ஸ்மார்ட் போன் கேலரிக்கு
உங்கள் நெட்வொர்க்கினைத் தாண்டி விட்டீர்களா? மொபை ல் போனை ஆப் செய்வது நல்லது. அல்லது பேட்டரி பவர் வீணாகும்.
திரையில் உள்ள லிக்விட் கிறி ஸ்ட ல் டிஸ்பிளே(LCD)மீது அழுத்தத்தை ப்பிரயோகித்தால் திரை கெட்டுவிட வாய்ப்பு உள்ளது.
எனவே பாக்கெட்டில் போனை வைத் திடுகையில் ஏதேனும் கூர்மையா ன அல்லது பாதிப்பு ஏற்படுத்தக் கூடிய பொருள் மொபைல் போனு டன் உரசிக் கொண்டிரு க்கிறதா என்பதைக் கவனித்துச் செயல் படவும். போம் கவர்கள் அல்லது பிளாஸ் டிக் கவர்கள் இந்த வகை யில் பாதுகாப்பு தரலாம்.
போனில் சிக்னல்கள் எந்த அளவில் பெறப்படுகின்றன என்ப தைக் காட்டும் இன்டிகேட்டர் அனைத்து போன்களிலும் இரு க்கும். இது குறைவாக இருக்கு ம்போது ரேடியேஷன் என்னும் கதிர்வீச்சு அதிகமாக இருக்கும்.
சரியாக இருக்கும்போது மிதமா க இருக்கும். மேலும் குறைவா க இருக்கையில் மின் சக்தியும் அதிகம் செலவழிக்கப்படும். என வே சிக்னல் ரிசப்ஷன் குறைவாக இருக்கும் இடத்தில் இருந் து பேசுவதனைத் தடுக்கவும்.

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க!

நீங்க 30 வயதிற்கு மேற்பட்ட‍வரா? அப்ப நீங்க உண்ண‍ வேண்டிய உணவுகள் இவைதானுங்க!
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு . . .
தற்போது மக்கள் சுவையான உணவுகளை சாப்பிடுகி றேன் என்ற பெயரில் கலோரிகள் மற்றும் கொலஸ்ட் ரால் வளமாக
நிறைந்துள்ள உணவுகளை அதிகம் உட்கொண்டு வரு கின்றனர். இப்படி கொலட்ஸ்ரால் அதிகம் நிறைந்த உணவுகளை உட் கொண்டால், உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும் நோய்களுக்கு உள் ளாகக் கூடும் என்பது தெரியுமா? அதிலும் கொ லட்ஸ்ரால் உடலில் அதிகம் இரு ந்தால், உயர் இரத்த அழுத்தம், இதயநோய், பக்கவாதம் போன்ற பிரச்ச னைகள் உடலி ல் சீக்கிரம் வந்து விடும்.
பொதுவாக கொலட்ஸ்ராலானது செல் மென்படலங்க ளின் சீரான செயல்பாடுகளுக் கு மிகவும் இன்றியமையாதது. ஆனால் சாதாரணமாக நமது உடலிலேயே செல் மென்படல ங்களின் செயல்பாடுகளுக்கு வேண்டிய கொலஸ்ட்ராலான து உற்பத்தி செய்யப்படும் என் று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே கொலஸ்ட்ரால் நிறைந்த உணவுகளை அவசியம் உட்கொள்ள வேண் டும் என்பதில்லை.
அதிலும் வயதாக ஆக, உண்ணும் உணவுகளில் அதிகம் கவனம் செ லுத்தவேண்டும். இல்லாவிட்டால், பல்வேறு பிரச்சனைகளை விரை வில் சந்தித்து, சீக்கிரம் மரணத்தை தழுவ வேண்டியி ருக்கும். எனவே ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ 30 வயதிற்குமேல் கொலஸ்ட்ரா ல் குறைவாக நிறைந்த உணவுக ளை தேர்ந்தெடுத்து உட் கொண்டு வர வேண்டும்.
இங்குகொலஸ்ட்ரால் குறைவாக உள்ள சிலஉணவுகள் பட்டியலிட ப்பட்டுள்ளன. அவற்றைப்படித்து அதனை உணவில்சேர்த்து ஆரோக்கியமான வாழ்க் கையை வாழத்தொடங்குங்கள்.
அரிசி தவிடு மற்றும் கைக்குத்தல் அரிசி
இந்த இரண்டிலும் கொலஸ்ட்ரால் மிகவும் குறைவாக இருப்பதால், இவற்றை உட் கொண்டு வந்தால், உடலில் கொலஸ்ட் ரால் அதிகமாவதைத் தடுக்கலாம்.
ஆளி விதை
உடலில்உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலைக் கரைக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்ற னர். மேலும் இதனை வைரஸ் காய்ச்சலின்போது சிறிது வாயில் போட்டு மென்றால், வைரஸ் காய்ச்சலானது விரை வில் குணமாகும்.
பூண்டு
மிகவும் பிரபலமான உணவின் சுவையை யும், மணத் தையும் அதிகரிக்கும் பூண்டில் கூட கொலஸ்ட்ரால் இல்லை. அதுமட்டு மின்றி, இவை உடலில் உள்ள அதிகப் படியான கொலஸ்ட்ராலை கரைக்கவும் செய்யும்.
பாதாம்

மற்ற நட்ஸ்களைவிட பாதாமில் மட்டுமே கொலஸ்ட்ரால் குறை வு. மேலும் இதனை எந்த நேரம் வேண்டுமானாலும் பசியெடுக் கும் போது ஸ்நாக்ஸாக எடுத்து க் கொள்ளலாம்.
தக்காளி

தக்காளில் கொலஸ்ட்ராலைக் கரைக் கும் லைகோபை ன் என்னும் பொருள் அதிகம் இருக்கிறது. அத்துடன் தக்கா ளியிலும் புரோட்டீன் நிறைந்துள்ளது.
பார்லி

ஆம், பார்லிகூட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். எனவே பார்லி மாவைக்கொண்டு சப்பாத்தி, பூரி போன்று செய்து சாப்பிட்டால், மிகவு ம் நல்லது.
சாக்லெட்

சாக்லெட்டுகளில் டார்க் சாக்லெட்டி ல் தான் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது. மேலும் டார்க் சாக்லெட் இதயத்திற்கு நல்லது மட்டுமின்றி, நோயெதிர்ப்பு சக்தி யை அதிகரிக்கும்.
க்ரீன் டீ

தினமும் இரண்டுமுறை க்ரீன் டீ குடித்து வந்தால், கொலஸ்ட்ரா லானது குறையும். அதிலும் இதில் சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த் து குடிப்பது இன்னும் சிறந் தது.
ஓட்ஸ்
கொலஸ்ட்ரால் குறைவாக உள்ள இந்திய உணவுப் பொருட்களில் ஒன்றுதான் ஓட்ஸ். தற்போது பல மில்லி யன் மக்கள் தங்களது காலை உண வாக ஓட்ஸைதான் எடுத்து வரு கிறார்கள். மேலும் ஓட்ஸில் நார் ச்சத்து அதிகம் இருப்பதுடன், உடலில் அதிகளவு கொ லஸ்ட்ரால் இரு ந்தால், அதனை குறைக்கும்.
சோயா
சோயாவிலும் கொலஸ்ட்ரால் குறைவாகத்தான்உள்ளது. அத்துட ன் அதில் புரோட்டீனும் அதிகம் நி றைந்துள்ளது. மேலும் இது முட்டை யின் வெள்ளைக்கருவிற்குசிறந்த மாற்றாக இருக்கும்.
கோதுமை

கோதுமையில் நார்ச்சத்து அதிகம் இருப்ப துடன், கொலஸ்ட்ரால் சுத்தமாக இல்லை. எனவே இதனை எப்போதுவேண்டுமானா லும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஸ்மார்ட்டான உணவுகள்
தென்ன ஸ்மார்ட் உணவுகள் என் று கேட்கிறீர்களா? அது வேறொன் றும் இல்லை, சிட்ரஸ் பழங்கள், ப்ளூ பெர்ரி, பச்சை இலைக் காய்க றி, பசலைக்கீரை, ஆலிவ் ஆயில் போன்றவற்றில் கொலஸ்ட்ரால் ம ற்றும் கலோரிகள் குறைவாகவும், புரோட்டீன் அதிகமாகவும் நிறைந் துள்ளது.

Friday, February 6, 2015

த‌னது தாயாருக்கு கூடுதலாக பணம் கொடுக்க‍ மறுத்த‍ பெருந்தலைவர் காமராஜர்

முதலமைச்சர் காமராஜரின் தாயார் சிவகாமி அம்மாள் விருது நக ரில் வசித்து வந்தார். அவருடைய செலவுகளுக்கு காமராஜர் மாதம் 120 ரூபாய் அனுப்பிவந்தார். காமரா ஜரின் நண்பரும், காங்கிரஸ் பிரமுக ருமான முருக.தனுஷ்கோடி, விருது நகருக்கு சென்றபோது சிவகாமி அம்மாளைப் போய்ப் பார்த்தார்.
தனுஷ்கோடியுடன் சிவகாமி அம்மா ள் பேசிக்கொண்டிருந்தபோது, “அய் யா (காமராஜர்) மந்திரியாக இருப்ப தால், என்னைப் பார்க்க யார் யாரோ வருகிறார்கள். அவர்களுக்கு ஒரு சோடா, கலர்கூட வாங்கிக்கொ டுக்காமல் இருந்தால் நன்றாக இரு க்குமா? ஆகையால்அய்யாவிடம் சொல்லி, மாதம் 150 ரூபாயாவது கிடைக்க ஏற்பாடு செய்தால் நல்லது” என்றார்.
சென்னை திரும்பியதும், இதுபற்றி காமராஜரிடம் தனுஷ் கோடி சொ ன்னார்.  “யார் யாரோ பார்க்க வருவார்கள் என்பது உண்மை தான். வருகிறவர்கள் சோடா, கலர் கேட்கிறார்களா ? அவர் களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம். இப்போது கொடு த்து வரும் 120 ரூபாயே போது ம்” என்று கூறி த‌னது தாயாரு க்கு கூடுதலாக பணம் கொடு க்க‍  மறுத்துவிட்டார் காமராஜ ர்.
காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகன் ஜவகருக்கு திருமண ஏற் பாடு நடந்தபோது, சிவகாமி அம்மாளை தனுஷ்கோடி சந்தித்தார்.வீட்டில் பாத்ரூம் (கழிப்பிடம்) கட்டவேண்டும் என்றும், வீட்டை ஒட்டிய இடம் விலைக்கு வருவ தாகவும், அதற்கு ரூ.3 ஆயிரம் செலவாகும் என்று ம், இதை காமராஜரிடம் தெரிவிக்குமாறும் சிவ காமி அம்மாள் கூறினார்.
இதன் பிறகு நடந்தது பற்றி, தனுஷ்கோடி கூறுகி றார்:
“ஒரு முதலமைச்சர் வீட்டில் இந்த வசதிக்கூட இல்லா விட்டால் எப்படி?” என்று எண்ணிக்கொ ண்டு, சென்னை வந்ததும், தாயார் சொன்னதை தலைவரிடம் (காமராஜர்) கூறினேன். உடனே தலைவர், “நீ கக்கூசுக்கு இடம் வாங்க வேண்டும் என்று சொல்கிறாய்.
ஊரில் உள்ளவன் நான் பங்களா வாங்கி விட்டதா க சொல்லுவான். சிலர் பத்திரிகையில்கூட எழுது வார்கள். அதெல்லாம் வேண்டாம். நீ போ!” என்று என்னை விரட்டி விட்டார். சந்தர்ப்பம் சரியில்லை என்று நான் உடனே திரும்பி விட்டேன்.
மறுநாள் போனேன். “ஊரான் சொல்வான் என்பதற்காக வயதான தாயார் கஷ்டப்பட வேண்டுமா? உங்கள் பெயரால் வாங்க வேண்டும்

காமராஜரின் தாயார் இறந்தபோது எடுத்த‍ படம்
என்பதற்காகவே, உங்களிடம் கேட்க வந்தேன். நீங்கள் இப் போது ரூபாய் ஒன்றும் கொடு க்க வேண்டாம்.
இப்போது எனக்கு வேண்டியது உங்கள் அனுமதி மட்டுமே” என் று உறுதியுடனும் பணிவு டனும் கூறினேன். “சரி, எப்படி யோ செய் போ” என்று மனம் மாறி அனுமதி தந்தார் எனக்கு வேண்டிய அனும தி கிடைத்துவிட்டது. தாயாரின் ஆசைப் படி அந்த இடமும் வாங்கப் பட்டது.”
இவ்வாறு முருக.தனுஷ் கோடி கூறியுள்ளார்.
காமராஜர், சென்னை தியாகராயநகர் திருமலைப்பிள்ளை ரோட்டில்வாடகை வீட்டில் வசித்து வந்தார். முத ல் அமைச்சர் பதவி ஏற்ற பிறகும் கூட, அரசு பங்களாவுக்கு குடிபோகாமல் அதே வாடகை வீட்டில்தான் வசித்தா ர். வீட்டின் எண் 8. பொதுவாக, எட்டாம் எண்ணை அதிர்ஷ்ட மற்ற எண்ணாக நினைப்பார்கள்.
ஆனால் காமராஜர் அது பற்றி எல்லாம் கவலைப்படுவது இல்லை. காமராஜர் எந்தப் பண்டிகையையும் கொண்டாடு வது இல்லை. தீபாவளியின்போதுகூட, புது வேட்டி, புது சட்டை அணிய மாட்டா ர். ஆனால் அவருடைய உதவியாளராக இருந்த வைரவனுக்கு தீபா வளிக்கு புது துணிமணிகள் வழங்குவார்.
பொதுவாக காலை6 மணிக்கு எழுவார். காலையில் எங்காவது அவ சரமாகப் போகவேண்டியி ருந்தால், முன்னதாகவே எழுப்பி விடும்படி வைரவ னிடம் கூறுவார். காலையி ல் காபி சாப்பிட்டதும், பத்தி ரிகைகளைப் படிப்பார். பிற கு, தன்னைப் பார்க்க வந்த வர்களுக்கு பேட்டி அளிப் பார்.
வந்தவர்களின் கோரிக்கைக்கு தக்கவாறு பதில் அளிப்பார். தனக்கு த் தெரிந்தவர்கள், நிறைவேற்ற முடியாத கோரிக்கைகளைக் கொ  ண்டு வந்தால், “முடியாது, போ” என்று கண்டிப்புடன் கூறிவிடுவார். மற்றவர்கள் இத்தகைய கோரிக் கைகளைத் தெரிவித்தால், அவர்க ள் மனதைப் புண்படுத்தாமல், “ஆக ட்டும் பார்க்கலாம்” என்பார்.
அவசியமான உதவியைச் செய்யும்போது, அவர்களின் சாதி, மதம், தெரிந்தவன், தெரியாதவன், கட்சிக்காரர், எதிர்க்கட்சிக்காரர் என்றெல்லாம் பார்ப்பதே இல்லை. நியாயமும், தகுதி யும் இருந்தால் நிச்சய மாக உதவுவார். காலை யில் முகச்சவரம் செய்து கொண்டு குளிப்பார்.
இரவில் எவ்வளவு நேரமானாலும் குளித்துவி ட்டுத்தான் சாப்பிடு வார். இரவில் தூங்குவதற்கு முன் புத்தகங்களையும், பத்திரிகைகளையும் படிப்பது வழக்கம். சில நாட்களில் இரவு 2 மணி வரை கூட படித்துக்கொண்டு இருப்பார்.
சிக்கலான அரசியல் பிரச்சினைகள் பற்றி முக் கிய பிரமுகர்களுடன் கலந்து ஆலோசிக்கும் சமயங்களில், காலை 5 மணி வரைகூட பேசிக்கொண்டு இருப்பார். அதன்பின், ஒரு மணி நேரம்தான் தூக்கம்! பிறகுவழக்க ம்போல் எழுந்து, தன் அலுவல்க ளை கவனிப்பார்.
மதியச்சாப்பாடு, சைவம்தான். என் றாவது ஒருநாள் முட்டை வாங்கி வரச்சொல்லி சாப்பிடுவார். அதுதா ன் விசேஷ சாப்பாடு. மாலையில்  ஒரு கப் காபி. இரவில் இட்லியும், பாலும்தான் அவர் உணவு. இடை யில் காலையிலோ, மாலையிலோ சாப்பிடுவது இல்லை. பகல் சாப் பாட்டை முடித்தவுடன் தூங்கும் வழக்கம் அவருக்கு இருந்தது.

ஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சாத்தியமே!

ஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டுமல்ல, அழகும் சாத்தியமே!
ஆர்கானிக் அழகு!
உணவில் மட்டும் இயற்கை முறைக்கு மாறினால் போதுமா? ஆர்கானிக் சாமையும், ஆர்கானிக் மாதுளை யும் சாப்பிட்டு விட்டு
ருமத்திற்கு கெமிக்கல்களைப் பயன்படுத்தலாமா? ஆர்கானிக் முறையில் ஆரோக்கியம் மட்டு மல்ல, அழகும் சாத்தியமே!
கூந்தலை அலசும் பொடி
சிகைக்காய் அரை கிலோ பச்சைப் பயறு, வெந்தயம் தலா 100 கி., செம்பருத்தி இலை, வேப்பிலை  தலா 20 ஆகியவற் றை அரைத்து வைத்துக்கொள்ள வும். இந்தப் பொடியை கஞ்சித் தண்ணீரில் கலந்து, கூந்தலை அலசலாம்.
ஒருகப் தண்ணீரில் அரை எலுமி ச்சைப்பழத்தின் சாறைக் கலந்து, கடைசியில் அலசவும். இதுவே, கூந்தலுக்கு இயற்கையான கண் டிஷனர்.  

பலன்கள்: 
முடியின் வேர்க்கால்கள் வலுவடையும். முடி உதிர்வது நிற்கும். இயற்கையில் சுரக்கும் எண்ணெயை எந்த விதத்திலும் பாதிக்காது. முடி வளர்ச்சியைத் தூண்டு ம். கூந்தல் மென்மையாகவும் பளபளப் பாகவும் இருக்கும்
குளியல் பொடி
பச்சைப் பயறு  அரை கிலோ, ரோஜா இதழ்  10 கி. வெட்டி வேர்  50கி.இவற்றைஅரைத்து, குளியல் பொடியாகப் பயன் படுத்தலாம். சருமப் பிரச்ச னை இருப்பவர்கள், துளசி இலை, வேப்பிலைகளை சேர்த்துக் கொள்ளலாம். உட ல் வறட்சி இருப்பவர்கள், நல்லெண் ணெயை உடல் முழுவதும் தேய்த்தபிறகு, கட லை மாவு போட்டுக் குளிக்கலா ம். எண்ணெய் பசை பிரச்சனை உள்ளவர்கள், முட்டையின் வெ ள்ளைப் பகுதியை ஒருஸ்பூன் எலுமிச்சைச் சாறோ டு கலந்து முகத்தில் பூசி, அரை மணிநேரம் கழித்து பச்சைப் பயறுகொண்டு குளிக்க லா ம்.
பலன்கள்: 
சருமத்தில் உள்ள கரும்புள்ளிக ள், கருமைத் திட்டுக்களைப் போ க்கும். சருமத் தளர்ச்சியை சரி யாக்கும். அதி கப்படியான எண் ணெய் பசையை நீக்கும். நிறம் பொலி வு பெறும். சரும எரிச்சலைக் குணப்படுத்தும்.
உதட்டுச் சாயம்

பசுவெண்ணெய் (அல்) பால் ஆடையை உதட்டில் தடவ லாம். நிறம் தேவை எனில், பீட்ரூட் சாறை வெண்ணெயு டன் கலந்து பூசலாம். கொத் தமல்லிச் சாறை உதட்டில் தடவி, 20 நிமிடங்கள் கழித்து கழுவலாம்.
பலன்கள்:
உதடுவறட்சி, வெடிப்புகள்நீங்கி, மென்மையாகும். கரு மை நிறம் நீங்கி, இளஞ்சிவப்பு நிறத்தைப் பெறலாம்.
எண்ணெய் குளியல்
பாதாம் எண்ணெய், நல்லெண் ணெய், ஆலிவ் எண்ணெய், மாலாத்யாதி எண்ணெய் என, ஒவ்வொரு நா ளும் ஒவ்வொரு எண்ணெயை உடலில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் குளிக்கலாம். கூந்தலில், 5 மி.லி நல்லெண்ணெயை இளஞ்சூடாக தலையில் தடவி, 1/2 மணி நேரம் கழித்து அலசலாம்.

பலன்கள்:
எண்ணெய் கீழிருந்து மேல் தடவுவ தால், ரத்த ஓட்டம் அதிகரிக்கும். சரு மத்தில் சுருக்கங்கள்ஏற்படாது. உடல் புத்துணர்ச்சிஅடையும். உடலில்உள்ள நச்சுக்கள் வெளியேறும். சருமத்தில் நிறம் அதிகரிக்கும்.
கண் மை
வெள்ளி விளக்கில் பசுநெய் ஊற்றி, நெய்யில் நனைத்தப்பஞ்சுத் திரியை க் கொண்டு விளக்கேற்றவும். அருகி ல் இரண்டு பாத்திரங்களை (பிரிட்ஜ் போல) வைக்க வும். கீழே விளக்கு எரிய பாத்திரங்களின் துணையோ டு அடிப்பகுதியில் நெய் தடவப்பட்ட வெள்ளித் தட்டை மேலே வைக்கவும்.  20நிமிடங்கள் வரை எரிய விடுங்கள். தட்டில் படியும் மையை வழித்து, குங்குமச் சிமிழில் சேமித்து, 2  3 துளிகள் நெய் சேர்த்துக் குழைத்து வைத்துக் கொள்ளவும். 2 வாரங்கள் வரை இந்த மையைப் பயன் படுத்தலாம். வெள்ளி விளக்குக்குப் பதிலாக, பித்தளை, செம்பு விளக்கு, தட்டு களையும் பயன்படுத்தலாம்.
பாதாம் கண் மை
மேலே சொன்ன முறையிலே பாதாம் பருப்புகளை குண்டூசியில் குத்தி, நெரு ப்புக்கு மேலும், தட்டுக்கு கீழுமாக வைத்து 10  20 நிமிடங்கள் வரை சுடலா ம். ஊசி முனையைத் துணி வைத்துப் பிடித்துக்கொள்ளுங்கள். இயற்கையாக வே பாதாமில் எண்ணெய் இருப்பதால், அவை எரியத் தொடங்கும். அந்தச் சாம் பலை எடுத்து, நெய் கலந்து சேமித்து வைக்கலாம். இந்த மையை இரண்டு வாரம் வரை பயன்படுத்தலாம்.

பலன்கள்: 
கண்களில் உள்ள அழுக் கை வெளியேற்றும். கண்க ளில் உள்ள வர்மப் புள்ளி யைத் தூண்டி விடுவதால், இதனை ‘அஞ்சன மிடுதல்’ என்பர். பார்வைத் திறன் அதிகரி த்து, தெளி வாகத் தெரியும். கண்களுக்குக் குளிர்ச்சி உண் டாகும். சோர்வு நீங்கும்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...