Wednesday, March 25, 2015

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு. . .

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு. . .

தினமும் படுக்கைக்குச் செல்வதற்கு அரைமணி நேரம் முன்பு. . .
காலையில் எழுந்ததில் இருந்து இரவு படுக்கைக்கு செல்லும் வரை ஒரு நாளைக்கு எத்த‍னை எத்த‍னை வேலைகள் எத்த‍னை
எத்த‍னை சங்கடங்கள் எத்த‍னை எத்த‍னை மனஅழுத்த‍ ங்கள். எல்லாவற்றையும் தாண்டிஇரவுநேரம் சாப்பி ட்டு முடித்த‍தும் படுக்கை க்கு சென்று படுத்தால் அங்கே தூக்க‍ம் என்பது கேள்விக் குறியாகத்தா ன் பலருக்கு இருக்கிறது  தூக்க‍மின்மையால் உட லில்பல்வேறு ஆரோக்கியகோளாறுகளும் மனரீதியா ன பாதிப்புக்க‍ளும் அதிகரிக்கு ம் என்பது மருத்துவ உலகம் கூறும் நிதர்சனம்.
சரி இந்த தூக்கமின்மையில் இருந்துவிடுபட்டு சுகமான தூ க்க‍த்திற்கு வழிவகுக்க, எளிய வழிஒன்றுண்டு. அந்தவழி இதோ உங்கள்பார்வைக்கு. . .
தூக்க‍மின்மையால் பாதிக்க‍ப்பட்ட‍வ ர்கள் தினமும் படுக்கைக்குச் செல்வ தற்கு அரைமணி நேரம் முன்பு பசுப் பாலில் 5, 6 உலர்திராட்சையைப்போட்டு, நன்றாக கொ திக்கவைத்து, அதை அப்ப‍டி யே வடிகட்டி வரும் பாலை தினந்தோறும் அருந்தி வந் தால் சுகமான தூக்கத்திற்கு வழி ஏற்பட்டு. அவர்களின் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும் என்பது திண்ண‍ம்.
ஆனால் ஆண்டுக்கணக்கில் தூக்க‍மின்றி அவதிப்படுவோருக்கு இது ஒத்துவராது. அவர்கள் தகுந்த மருத்துவரை அணுகி அதற்கான ஆலோசனைகளையும் சிகிச் சைகளையும் எடுத்துக்கொள்வது நல்ல‍து.

உலக அதிசயப்பட்டியலில் இடம்பெறாத தமிழர்களின் கட்டிடக் கலை மற்றும் பொறியியல் அதிசயமான ” இசைத் தூண்கள் “!!.

இந்த இசைத்தூண்களானது ஒரு நீளமான பாறையை வெட்டி எடுத்து, அதிலிருந் து ஏழு தனித்தனி சிறிய தூண்களாக வடித்துள்ளனர், இந்த ஒவ்வொரு சிறிய தூ ண்களை தட்டினால் ” சப்த ஸ்வர ங்கலான ” ” ச, ரி, க, ம, ப, த, நி ” என்ற தனித் தனி ராகங்களை அது இசைக்கி ன்றது ! . சில பெரிய தூண்களை சுற்றி இடம் பெற்றுள்ள சிறிய தூ ண்களில் ஐம்பத்தி மூன்று தனித்தனி ராகங்களை இசைக்கி ன்றது !! .இதில் பெரிய தூணில் கர்நாட சங்கீதமும்., அதை சுற்றியுள்ள சிறிய தூண்களில் ” மிருதங்கம், கடம், சலங்கை, வீணை, மணி ” போன்ற இசைக் கருவி களின், இசையை தருகின்றது !! அப்படி என் றால் ஒவ்வொ ரு கல்லையும் ஒவ்வொரு பதத்திற்கு இழைத்திருந்தால் தான் இப்படி இது வேறுவே று ஒலிகளில் இசைக்கும்! இதை தட்டுவதால் நம் விரல்களுக்கு எந்த வலியும் ஏற்படு வதில்லை, உண் மையான இசை ஞானம் உள்ளவர்கள் இதை தட்டி னால் இசைக் கருவியில் இருந்து வரும் இசையை விட மிக துல்லி யமாக இது இசைக்கின்றது !.சரி இது எதற்காக பயன்பட்டது ? அந்த க்காலத்தில் இருந்த இசைக் கலை ஞ்சர்கள் இதை கோயில் விழாக்களின் போது, ஒரு இசைக்கருவி யைகூட பயன்படுத்தாமல், இந்த தூண்களை வைத்தே இசைத்து ள்ளனர்! .இது போன்ற வை உலகில் எந்த இடத்திலும் இல்லை என் பது நமக்கு இன்னும் சிறப்பை சேர்க்கின்றது !.இந்த இசைத் தூண்களை “மிடறு” என்று அழைத்தார்கள்.
இது எப்படி வேலை செய்கின்றது ? ஒவ்வொரு தூண்களில் இருந்து வரும் சப்தமும், ஒவ்வெரு விதமான ” அலைகற்றையை ” உருவாக்குகின்றது !.எந்த தொழில் நுட்பமும் இல்லாத அந்த காலத்தில் இது எப்படி சாத்தியமானது ? இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி விஞ்ஞானி ( கல்பாக்கம் ) திரு.”அனிஷ் குமார் ” என்பவரும் அவ ருடன் பணிபுரியும் சிலரும் இதில் ஒளி ந்துள்ள ” இயற்பியல்” அதிசயத்தை முதன்முதலாக தூண் வாரியாக ஆராய் ந்தனர், தூண்களின் வடிவமைப்பு மற்று ம் இந்த தூண்களில் இருந்து எழும் ஒலியை பதிவுசெய்து அளவிடுவது.
“In situ metallography ” (used to find out in-service degradation of critical components of process plants operating under high temperature/ high pressure/ corrosive atmosphere) ( ஒரு பொருளின் நுண்ணிய வடிவமைப்பு மற்றும் நுண்ணிய ஓசையை அளக்கும் முறை ) என்ற புதிய தொழில் நுட்பத்தைக்கொண்டு ஆராய்ந்ததில் இந்த தூண்களானது ” தன்மைக்கேற்ப மாறும் ஒரு நிலையான அதிசய திடப்பொருள் ” என தெரிய வந் த து !!. ” spectral analysis “என்ற ஆராய்ச்சிப்படி இந்த தூண்களி ல் வரும் இசையானது” தன் மைக் கேற்ப இசைந்து கொடுக் கும் அலைக்கற்றயினால் ” சப் தம் உருவாவதாக தெரிவிக்கி ன்றது !.சப்தம் உருவாவதே ஒரு அதிச யாமான விஷயம் என்பது ஒரு புறம் இருக்க, இது எப்படி ஒரு விரலால் தட்டினா லே இசை எழுகின்றது ? .நினைவில் கொள்ளுங்கள் நாம் சுத்திய லை கொண்டு அடிக்கப்போவதில்லை, இதற்கு தேவை வெறும் ஒரே ஒரு விரல்! .இசை என்பது காற்றை உள் வாங்கி ஒலியாய் வெளிப்படும் ஒரு முறை, ஆனால் இந்த தூண்களுக்குள் காற்று உள்ளே நுழைந்து இசையை உருவாக்குவதற்கென ஒரு சிறு துவா ரதைக்கூட உருவாக்கவில் லை !
இதைப்பற்றின ஆராய்ச்சிக்கு இந்த “இசைத்தூண்கள் ” ஆயிர ம் ஆண்டுகளுக்கு மேல் வெறு ம் ஆச்சர்யத்தை மட்டுமே பதி லாய் தந்து கொண்டிருக்கின்ற து! அடுத்த ஜென்மம் என்ற ஒ ன்று இருக்கின்றதா என தெரிய வில்லை ! அப்படியே இருந்தா லும் மனிதர்களாக பிறப்போமா என தெரியவில்லை ? அதுவும் குறிப்பாக இப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த தமிழ்நாட்டில் பிறப்போ மா என்பது தெரியாதது ! ஆகையால் தாமதப்படுத்தாமல் இது போன்ற இடங்களுக்கு சென்று நம் முன் னோர் செய்த அதிசயங்களை கண்டு களியுங்கள் , இது போன்ற நம் பெருமைகளை உலகறிய செய்யுங்கள் இப்படிப்பட்டவர்கள் வழி யில் வந்த நாம் புதிதாக எது வும் உருவாகவில்லை என்றாலும் அவர்கள் தந்த மொழியையும், கலாச்சாரத்தயுமாவது கட்டிக் காப்போம்!

வருமான வரிச் சோதனையைத் தவிர்க்க‍ நீங்கள் எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள்

வருமான வரிச் சோதனையைத் தவிர்க்க‍ நீங்கள் எடுக்க வேண்டிய அதிரடி நடவடிக்கைகள்
* ஒருவரது வங்கி சேமிப்பு கணக்கில் பத்து லட்சம் ரூபாய்க்கு மேல் சேமிப்புத் தொகை இருந்தால்
வங்கியானது வருமான வரித்துறைக்கு அந்த வாடிக் கையாளர் வரி கட்ட தகுதியுடையவர் என்பதை தெரி வித்து விடும்.
* கிரெடிட் கார்டு பயன் ப டுத்துபவர்கள் கவனிக்க வேண்டியது என்னவெ னில், கிரெடிட்கார்டை பயன்படுத்தி வருடத்திற்கு இரண்டு லட்சம் ரூபாய் செலவு செய்திருந்தால் அவர்களும் வரி செலுத்த தகு தியுடையவராவார்கள். அவர்களின் விவரமும் வங்கி யின் மூலமாக வருமான வரித்துறையினருக்கு தெரிவிக்கப்படும்.
* ஒரு வருடத்திற்கு இரண் டு லட்சம் ரூபாய்க்கு மேல் மியூச்சுவல் ஃபண்டில் முத லீடு செய்தால் அந்நபரி ன் விவரங்கள் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தாரால் வருமான வரித்துறைக்கு போய்ச் சேரும்.
* பாண்டுகளிலோ அல்லது ஃபிக்ஸட் டெபாஸிட்களி லோ வருடத்திற்கு ஐந்து லட்சம் ரூபாய்க்கு மேல் முத லீடு செய்தால் அவர்களின் விவரங்களும் வருமான வரித் துறையினரிடம் ஒப்படைக்கப்படும்.
* வருடத்திற்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பங்குகளி ல் அல்லது இ.டி.எஃப்.களில் முத லீடு செய்தால் அவர்களின் விவரம் வருமான வரித்து றைக்கு தெரிவிக்க ப்படும்.
* 30 லட்ச ரூபாய் மதிப்பிலான வீடோ, நிலமோ வாங் கினால், அதன் விவரம் பத்திரப் பதிவு துறை மூலமாக வருமான வரித் துறைக்கு தெரிவிக்கப்படும்.
அந்த வகையில் மேலே கண் ட முறையில் ஏதாவது பரிவ ர்த்தனை செய்திருந்தால் அதை குறிப்பிட்டு வரு மான வரி கணக்கை தாக்கல் செய் துவிடுங்கள்… இல் லை என்றால் வருமான வரித் துறை யின் அதிரடி ரெய்டை சந்திக்க வேண்டி வரும்…

ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய நவீன ஒன்று கார்! – ஆச்சரிய உண்மை!

ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய நவீன ஒன்று கார்! – ஆச்சரிய உண்மை!
துபாயில் ஒரு லிட்டர் பெட்ரோலில் ஆயிரம் கிலோ மீட்டர் ஓடக்கூடிய நவீன ஒன்று கார் கண்டுபிடிக்கப் பட்டு உள்ளது.

‘ஈகோ துபாய் ஒன்’ என பெயரிடப்பட்டுள்ள இந்த காரி ன் மொத்த எடை வெறும்
25 கிலோ மட்டும்தான். இரண்டு மீட்டர் நீளம், அரை மீட்டர் அகலம், அரை மீட்டர் உயரத்தில் இந்த நவீனகாரை வடிவமைத்துள்ளனர். 

துபாய் நாட்டிலுள்ள ஆண்கள் தொழில்நுட்பக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் இந்த அதி நவீன காரை கண்டுபிடித்துள் ளனர்.  கோலாலம்பூரில் வரும் ஜுலை மாதம் நடைபெறும் அரியவகை கண்டுபிடிப்புகளுக் கான கண்காட்சியில் இந்த நவீன ‘ஈகோ துபாய் ஒன்’ காரின் சோதனை ஓட் டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய இத்திட்டத்தின் தலைமை மாணவர் அஹ்மத் கமிஸ் அல் சுவைதி, ”பெட்ரோல் நீண்ட நாட்களுக்கு நிலைத்து கி டைக்கப்போவதில்லை. எனவே சுற்றுச்சூழலுக்கு மாசுவிளைவி க்காத நவீன போக்குவரத்துக்கு இத்தகைய கண்டுபிடிப்புகள் மிக வும் அவசியமானது” என்றார்.

Tuesday, March 24, 2015

உங்க இதயத்தைக் காக்கும் இதமான எளிய உணவு:

உங்க இதயத்தைக் காக்கும் இதமான எளிய உணவு:

உங்க இதயத்தைக் காக்கும் இதமான
எளிய உணவு:
வேர்க்கடலை என்னும் நிலக்கட லையைச் சாப்பிடுபவர்களுக்கு எடைகூடும் என்ற தவறான கரு த்து இங்கே மக்க‍ள் மத்தியில் பரவியுள்ள‍து.
உண்மைஎன்ன‍வென்றால், உடல்எடை அதிகமாகால் இருப்பதற்கு இந்தநிலக் கடலை சாப்பிடலாம். இந்த நிலக் கடலை யில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறை ந்துள்ளதால் நமது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. மே லும் இதய நோய்கள் வருவதையு ம் தடுக்கிறது. இதுவே மிகச்சிறந்த ஆண்டி ஆக்சி டென்டாக திகழ்கிறது.

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் – தவறவிடாதீர்!

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் – தவறவிடாதீர்!

மாத‌ சம்பளதாரர்கள் அறிய வேண்டிய மிக முக்கிய தகவல் – தவறவிடாதீர்!
ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அந்நிறுவனத்திலிருந்து தமக்கு கிடைக்க‍க் கூடிய அதி அற்புத பயன்களைத் தெரிந்து கொள்வதில் அவ்வ‍ளவாக ஆர்வம் காட்டுவதில்லை. இதனால்
நட்ட‍ம் அந்த நிறுவனத்திற்கு அல்ல. இவர்களுக்குத்தான். ஒரு நிறுவனத் திலிருந்து அந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியருக்கு நியாயமாக கிடைக்க‍க் கூடிய சலுகைகள் பயன்க‍ளில் குறிப்பிடத்தக்க‍தாக இருக்கும் எல்.டி.ஏ. (L.T.A.) அதைப்பற்றி இப்போது பார்ப்போம்.

விடுமுறை சுற்றுலா படி (Leave Travel Allowance) என்பது ஒரு நிறுவனத் தால், அந்நிறுவனத்தின் சம்பளதாரர்களுக்கு வழங்கக்கூடிய தொகை யாகும். இந்தப் பணத்துக்கும் ஊழியர்கள் வரிச் சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும். எல்டிஏவினால் என்ன பயன், இதற்கான வரிச் சலுகை கள் என்னென்ன என்பதைப் பற்றி ஆடிட்டர் சதீஷ்குமாரிடம் கேட்டோம். அவர் கொடுத்த விவரங்கள் இங்கே உங்களுக்காக…

 “எல்டிஏ விதிமுறைகளின்படி, ஒரு எல்டிஏ பிளாக்கில் (ஒரு பிளாக் எ ன்பது மொத்தம் நான்கு ஆண்டுகள்) இரண்டு முறை எல்டிஏ தொகையை ஒரு நிறுவனத்தின் ஊழியர்கள், அந்த நிறுவனத்திடமிருந்து க்ளெய்ம் செய்து கொள்ளலாம். இதன்மூலம் ஒரு குடும்பத் தில் கணவன், மனைவி, இரண்டு குழந்தைகள் மற்றும் உடனிருக்கும் பெற்றோர்கள், உடன்பிறந்த வர்கள் அனைவரையும் சுற்றுலாவுக்கு அழைத்துச் செல்ல முடியும்.  குழந்தைகள் என்கிறபோது, எல்டிஏ விதிமுறைகளின்படி இரண் டு குழந் தைகள் மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதே சம யம், முத லில் ஒரு குழந்தைப் பிறந்து, அதற்கு அடுத்து பிறக்கும் குழந்தை இரட்டை யராக இருந்தால் மொத்தம் மூன்று குழந்தைகளுக்கும் எல்டிஏ செலவுகள் வரிச் சலுகையில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

எல்டிஏ விடுப்பு!
சுற்றுலா என்கிறபோது, அலுவலகத்தில் எடுக்கும் விடுப்பானது எல்டிஏ விடுப்பாக இருக்க வேண்டுமே தவிர, மருத்துவ விடுப்பைப் பயன்படுத்தி யோ அல்லது இருப்பில் இருக்கும் இதர விடுப்புகளைப் பயன்படுத்தி சுற் றுலாவுக்குச் சென்றுவந்து எல்டிஏ தொகையை க்ளெய்ம் செய்துகொள்ள முடியாது.

பயணச் செலவுக்கு மட்டுமே!
எல்டிஏவின்படி சுற்றுலாச் சென்றிருக்கும்  இடத்தில் தங்குவதற்கான செலவு, உணவுச் செலவு மற்றும் இதர செலவுகள் என அனைத் தையும் க்ளெய்ம் செய்துகொள்ள முடியும் எனப் பலரும் தவறாகவே புரிந்து வைத் திருக் கிறார்கள். எல்டிஏ விதிமுறைகளின்படி, சுற்றுலாச்செல்வதற் கான போக்குவரத்து செலவு களை மட்டும்தான் க்ளெய்ம் செய்துகொள்ள முடி யுமே தவிர, இதர செலவு களுக்கு க்ளெய்ம் கிடைக்காது. ரயில் (முதல் ஏசி வகுப்பு உள்பட), விமானம் (எக்கனாமிக் வகுப்பு உள்பட), கார் பேருந் து எதுவாக இருந்தாலும், அதற் குரிய கட்டண ரசீதை சமர்ப்பிப்பது மிகவு ம் அவசியம்.

வெளிநாட்டுச் சுற்றுலாவுக்கு எல்டிஏ க்ளெய்ம் பெற்றுக்கொள்ள முடியும் என்கிற மற்றுமொரு தவறான புரிதல் பலபேரிடம் இருக்கிறது. இந்தியா வுக்குள் செல்லும் சுற்றுலாக் களுக்கு மட்டுமே  எல்டிஏ வரிச்  சலுகை பெற முடியும். தவிர, அயல்நாட்டு சுற்றுலாக்களுக்கு வரிச் சலுகை கிடை க்காது. அதேபோல, இன்றைய நிலையில் சுற்றுலா பேக்கேஜ்கள் மூலம் பெரும்பாலானவர்கள் சுற்றுலாச் சென்றுவருகிறார்கள். சுற்றுலா பேக்கே ஜ்களில் அனைத்து விதமான செலவுகளும் அடங்கி இருக்கும் என்பதால், அதை எல்டிஏவுக் காக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. ஆனால், டூர் பேக்கேஜ்களில் டிராவல் கட்டணங்களுக்கான டிக்கெட்களை சுற்று லாவுக்கு அழைத்துச் செல்லும் நிறுவனத்தாரிட மிருந்து தனியாக வாங்கித் தரும்பட்சத்தில் க்ளெய்ம் பெற முடியும்.

எல்டிஏ க்ளெய்ம் தொகை மற்றும் வரிச் சலுகை!
ஒரு நிறுவனமானது ஊழியர் களுக்காகச் செய்யும் செலவினங்களின் ஒருபகுதியாகவே எல்டிஏ இருக்கிறது. அதனால், எல்டிஏ விதிமுறைக ளின்படி, ஒரு நிறுவனமானது அவர்களது பணியாளரின் சம்பளம் மற்றும் பணிக் காலத்தைப் பொறுத்து அவர்களுக்கு எல்டிஏ தொகையை வழங்கு ம். அந்தக் குறிப்பிட்ட தொகைக்கு மட்டுமே Section 10(5) கீழ் வரிச் சலுகை பெற முடியும்.

கணவன், மனைவி இருவரும் க்ளெய்ம் செய்யலாம்!
கணவன், மனைவி ஆகிய இருவரும் ஒரே நிறுவனத்திலோ அல்லது வெ வ்வேறு நிறுவனத்திலோ வேலை பார்த்தாலும், அவர்கள் இருவரும் தாங்கள் வேலை பார்க்கும் நிறுவனத்திலிருந்து தனித்தனியாக எல்டிஏ க்ளெய்ம் பெற முடியும். அந்த இரு எல்டிஏ தொகைக்கும் வரிச் சலுகை உண்டு. ஆனால், ஒரே சுற்றுலாவுக்கான டிராவல் செலவுக்கு இருவரும் எல்டிஏ பெற முடியாது. கணவன், மனைவி இருவருக்கும் விடுப்பு இருக்கும் பட்சத்தில், ஒரே வருடத்தில் இரண்டு முறைகூட சுற்றுலா வுக்குச் சென்று, அதற்கு எல்டிஏ பெறலாம்.

எல்டிஏ பிளாக்!
முதல் எல்டிஏ பிளாக்கில் எல்டிஏ தொகைக்கான வரிச் சலுகையைப் பெறத் தவறிவிடுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். நீங்கள் அடுத்த எல்டிஏ பிளாக்கின் முதல் வருடத்தில் முந்தைய எல்டிஏ பிளாக்கினு டைய எல்டிஏ தொகைக்கான வரிச் சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியு ம்.

அதாவது, 2014, 2015, 2016, 2017 என்கிற நான்கு ஆண்டுகள், L.T.A. Claim பெற தகுதியுள்ள ஊழியரின் முதல் எல்டிஏ பிளாக் வருடங்கள் எனக் கொள்வோம். இந்த எல்டிஏ பிளாக்கில் அவர் இரண்டு முறை அவரது நிறுவனத்தாரிடமிருந்து எல்டிஏ  தொகையை க்ளெய்ம் செய்து கொள்ள லாம். அந்தந்த வருடங்களில் அதற்கான வரிச் சலுகையையும் அவர் பெற்றுக் கொள்ளலாம்.

ஆனால், வரிச் சலுகையைப் பொறுத் தவரை முதல் எல்டிஏ பிளாக்கில் வரிச் சலுகையைப் பெறத் தவறிவிட்டால், இதற்கு அடுத்த 2018, 2019, 2020, 2021 என்கிற பிளாக்கின் முதல் வருடத்துக்குள் (2018-ல்) பெற்றுக் கொள்ள முடியும்.
ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல, எல்டிஏ தொகையைக் கொண்டு சுற்றுலாவுக்கும், அதேசமயம் அதைக்கொண்டு வரிச் சலுகை யும் பெறமுடியும் என்றால், நம் எல்லோருக்கும் இரட்டைமகிழ்ச்சிதானே!

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு

இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? – சுவாரஸ்ய வரலாற்று ஆய்வு
தற்போது எங்குநோக்கினும் இட்லி கடைகளும், பெரிய உணவு விடுதி களும் வந்துவிட்டன•  அதுவும் ஒரு
இட்லி 1.50 பைசாவில் இருந்து 10 ரூபாய் மேலேயே விலை நிர்ணயிக்க‍ ப்பட்டு விற்கப்பட்டு வருகிறது. இந்த இட்லி பலரது வீட்டில் அடிக்கடி சமைக்கும் எளிய அதே நேரத்தில் ஆரோக்கியமான உணவாக வும் இருந்து வருகிறது. சரி இந்த இட்லி எங்கிருந்து வந்தது? எப்ப‍டி வந்தது? என்ற வரலாற்றை நாம் அறிவோமா?
ந‌மது பழந்தமிழ் இலக்கியங்களில் இட்லி பற்றிய குறிப்புக்கள் எதுவும் இல்லை ஆனால் 10-ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கன்னட மொழியில்எழுதப்பட்ட‍ லோகபகரா என்ற நூலில் இட்லி பற்றிய செய்தி காணப்படுவதோடு அதில் இட்லி ச மைக்கும் முறையைப் பற்றிய குறிப்புக்களும் கிடை த்துள்ள‍ன• அந்த நாட்களில், மோரில் உளுத்தம் பருப்பை நன்கு ஊற வைத்து பின் ஊற வைத்த அரிசி யுடன் கலந்து அரைத்து இட்லி சமைத்திருக்கிறார்க ள்  
பிறகு  12-ம் நூற்றாண்டுக்குப் பிறகுதான் நமது தமிழ் நாட்டுக்கு இட்லி அறிமுகமாகியிருக்கலாம் என்று யூகத்தின் அடிப்படையில் வெளியான செய்தி...

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...