Saturday, October 29, 2016

கெடுதல் செய்யும் திதிகளில் பருவமடைந்த பெண்களுக்கு , சாஸ்திரம் கூறும் பரிகாரங்கள்!

கெடுதல் செய்யும்  திதிகளில் பருவமடைந்த பெண்களுக்கு, சாஸ்திரம் கூறும் பரிகாரங்கள்!

கெடுதல் செய்யும் திதிகளில் பருவமடைந்த பெண்களுக்கு , சாஸ்திரம் கூறும் பரிகாரங்கள்!
ஜோதிட சாஸ்திரத்தில் ஆண்களுக்கு பிறந்த ஜாதகம் மட்டும் போதும். ஆனால் அதே ஜோதிட சாஸ்திரத்தில்
பெண்கள்,  ருதுவாகி (பருவமடைந்து) விட்டார்கள் என்று கூறப்படுகிறது. ருதுவான (பருவமடைந்த நேரம், கிழமை முதலி யவை பலன்சொல்வதற்கு முக்கியமாக தேவைப் படும்.   ஆகவே பெண்களுக்கு பிறந்த ஜாதகத்தோ டு, ருதுவான ஜாதகமும் இருந்தால் தான் பலனை முழுமையாகக் கணிக்கமுடியும். இப்படியாக பெண்களுக்கு பிறப்பு ஜாதகம், ருது (பருவமடை ந்த) ஜாதகம் என்று இரண்டு ஜாதகங்கள் உண்டு.
முற்பகல், பிற்பகல், அஸ்தமன காலம், நடுராத்திரி, பின் ராத்திரி, சந்திகளில் ருதுவானால், பரிகாரம் செய்ய வேண்டும். இறைவனுக்கு முத்துக் குடை கோவிலுக்கு தானம் கொடுத்தால், நலம் பெறலாம். இனி தனித் தனியாக பரிகாரங்களைப் பார்க்கலாம்.

1. பிரதமை திதியில் ருதுவானால்:
ருதுவான பெண்கள் ஆலயங்களில் நடக்கும் விளக்கு பூஜையில் கலந்து கொள்ள வேண்டும். விளக்கு பூஜை க்கு நெய் தானம் செய்தால் கஷ்டம் குறையும்.
.

2. சதுர்த்தி திதியில் ருதுவானால்:
விநாயகப் பெருமானுக்கு அருகம்புல் மாலை போட்டு வழிபாடு செய்ய வேண்டும். கெட்ட பெயர் நீங்கும். புத்திர பாக்கியம் உண்டாகும்.
.

3. சஷ்டி திதியில் ருதுவானால்:
முருகனுக்கு பால், பன்னீர், சந்தனம், அபிஷேகம், செய்து வர துன்பங்கள் நீங்கும். கண்டங்களும் விலகி சுக போகங்கள் உண்டாகும்.
.

4. அஷ்டமி திதியில் ருதுவானால்:
சிவபெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி அபிஷேகம் செய்ய வேண்டும். அரக்க குணம் உள்ளவர்கள் கூட மாறி, இரக்க குணம் உண்டாகும். வாழ்க்கை சிறப்புறும்.
.

5. துவாதசி திதியில் ருதுவானால்:
வெங்கடேச பெருமாளை வழிபட்டுவர வேண்டும். நற்குணவதி என்ற பெயர் கிடைக்கும்.
.

6. சதுர்த்தி திதியில் ருதுவானால்:
அமரபட்சம் சதுர்த்தி திதியில் விரதமிருந்து சிவனை வழிபாடு செய்யவும். சோதனைகள் விலகி நன்மை கிடைக்கும்.
.

7. பௌர்ணமி திதியில் ருதுவானால்:
பௌர்ணமி அன்று பௌர்ணமி விரதம் இருந்து அம்பாளுக்கு பௌர்ணமி பூஜை செய்யவேண்டும். நல்ல பழக்க வழக்கங்கள் உண்டாகும்.
.

8. அமாவாசை திதியில் ருதுவானால்:
புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தீர்த்தத்தில் நீராடி கடவுளை வழிபட தரித்திர நிலை நீங்கும்.
.

எனவே மேலே சொன்ன திதிகளில் ருதுவானவர்கள் மேலே சொல்லப் பட்ட பரிகாரங்கள், சாந்தி ஹோமங்களை செய்து பலன் பெறலாம்.

பாஸ்ட்புட் உணவுகளை சாப்பிடுவதால், குழந்தைகளை நோய் தாக்கும் …

அவரச கால இவ்வுலகில் எதிலும் உடனடியாக தீர்வு வேண்டும்என்பதால் மக்களும் இந்த அவசர பழக்க வழக்கங்களை முழு மையாக பின்பற்றி வருகின்றனர். உணவு வழ க்க வழக்கங்களில் நவீன வரவான பாஸ்புட் உணவுவகைகளை இன் றைய இளம் தலை முறையினர் பெரி தும் விரும்பி உண்ணுகி ன்றனர்.
இந்த உணவுகளை சாப்பிடுவதால் பல்வேறு நோய்கள் தாக்கும் அபா யம் உள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். இளம் தலை முறையினர் தொடர்ந்து பாஸ்புட் உணவு வகை சாப்பிட்டு வருவதால் 50 வயது வரும் போது கேன்சர் உள்ளிட்ட நோய் களால் அவர்கள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக் கின்றனர்.

குழந்தைகளுக்கும் இரண்டாம் தர ரீதியி லான நீரளிவு நோய் ஏற்பட லாம் என்றும் பெண்களுக்கு எழு ப்புறுக்கி நோய், இரத்த சோகை ஏற்பட லாம் என்றும் மருத்துவ குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு பிரிட்ட னில் நடந்த சர்வேயில் பாஸ்புட் கலாச்சாத்தால் அங்கு மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்க ப்பட்டுள்ள மக்களின் எண் ணிக்கை 75 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

மேலும் குந்தைகளிடம் நட த்தப்பட்ட 60க்கும் மேற் பட்ட மருத்துவ ஆராய்ச்சி முடிவுகளிலும் இதய நோய் கேன்சர் இளம் வயதிலேயே தாக்குவதற்கு வாய்ப்பு இருப்பதாக உணவியில் மற்றும் உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
ஐந்தில் ஒரு குழந்தை பழம் மற்றும் காய்கறிகளை உண வு உண் பதில்லை. என்றும் வெஜிடபிள் உணவு வகை களை தவிர்பதால் இரண் டாம் தர நீரளவு தாக்கும் ஆபாயம் உள்ளதாக நியூட்ரீ சியன் டாக்டர். கேர்ரீ ருக்ஷ் டன் தெரிவித்துள்ளார்.

மருத்துவர்கள் பாஸ்புட் (ஜங்புட்) உணவு வகைகளை தவிர்த்து விட்டு இயற்கையான காய்கறி வகைகளை உண்ண வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளனர்.
( நாளேடு ஒன்றில் வெளிவந்த செய்தி )

இளம்பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து

இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களுக்கும் தீர்வு தரும் ஒரே மாமருந்து
இளம் பெண்களுக்கு வரும் எல்லா நோய்களையும் இது குணப்படுத்து வதால்… பெண்களுக்கு
தானாக கிடைத்த‍ வரம் என்றே சொல்ல‍லாம். அந்த வரம் அல்ல‍து மாமருந்து என்னவென்றால், அது சோற்றுக் கற்றாழைதான். இந்த‌ சோற்றுக் கற்றாழைக்கு குமரி கற்றாழை என வேறு பெயரும் உண்டு. சோற்றுக் கற்றாழையை வெட்டி பச்சை நிறத்தோலை நீக்கி விட்டு, 7 முதல் 8 முறை தண்ணீர் விட்டு நன்கு கழுவி சுத்தம் செய்து, அடுப்பில் ஏற்றி 1 கிலோ கற்றாழைக்கு 1கிலோ கருப்பட்டியைத் தட்டிப் போட்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். கருப்பட்டிதூள் கரைந் து பாகு பதத்திற்கு வந்ததும் அதனுடன் 1/4 கிலோ தோல் உரிக்கப்பட்ட பூண்டினை போட்டு மீண்டும் கிளற வேண்டும். பூண்டு வெந்த பதத்திற்கு வந்தவுடன் இறக்கிவிட்டு தயிர்கடையும் மத்தினால் கடைய வேண்டும். அல்வாபதத்திற்கு வந்தவுடன் அதை தனியே எடுத்து வைத்துக்கொள்ளவேண்டும். காலை, மதியம் மற்றும் இரவு ஆகிய 3 வேளைகளும் உணவிற்குப்பின் 1 ஸ்பூன் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு வெள்ளைப்படுதல், நீர்க்கட்டிகள் , நீர் எரிச்சல், மாதவிடாய் கோளாறுகள், பெண் மலடு ஆகியவை உடனே சரியாகும். பெண்கள் மட்டுமின்றி, ஆண் களும் சாப்பிட்டால் உடல் சூடு தணிந்து உடல் வலுவாகும்.
மருத்துவரை அணுகி, சோற்றுக் கற்றாழை உங்களது உடல் ஏற்றுக் கொள்ளுமா? என்பதை அறிந்த பிறகே உட்கொள்வதா அல்ல‍து வேண்டாமா என்பது தீர்மானிக்க‍வும்.


தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும் பதிவு!

தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும்  பதிவு!

தனியார் பள்ளிகளும்! பதறும் பெற்றோர்களும்! – தி இந்து நாளிதழில் வெளிவந்த பதறவைக்கும்  பதிவு!
தனியார் பள்ளிகளில் மதிப்பெண்கள் பெறும் இயந்திரங்கள் தயாரிக்கப் படுகின்றன. நடுத்தர வயதைச் சேர்ந்த அவர்
பதற்றத்தோடு காத்திருந்தார். அவருடைய உடையையும் தோரணையை யும் பார்த்தாலே ஏதோ ஒரு பெரு நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் உள்ள அதிகாரி என்பதைச் சொன்னது. பக்கத்தில் அவர் மனைவி. இருவ ரும் பொறுமை இல்லாமல் அரை மணிநேரம் காத்திருந்த பிறகு அவர்கள் அந்த அறைக்குள் அழைக்கப்பட்டார்கள். வெளியே வர 15 நிமிடங்கள் ஆயின.
இது தனியார்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியரைப் பெற்றோர்கள் சந்தி க்கும் காட்சி. இந்தச் சந்திப்பு எப்போது நடக்க வேண்டும் என்று முடிவு செய்வது பள்ளி நிர்வாகம். தேர்வுக்குப் பிந்தைய சந்திப்பு என்றால் முன் கூட்டியே தகவல் கொடுப்பார்கள். புகார் அல்லது அதுபோன்ற பிரச்சினை என்றால் திடீர் அழைப்புவரும். இப்போது வரஇயலாது என்னும் பதிலைப் பள்ளி நிர்வாகங்கள் பெரும்பாலும் ஏற்பதில்லை. குழந்தையின் கல்வி அல்லது மனநிலை தொடர்பான பிரச்சினை என்பதால் பெற்றோர் எல்லா வேலைகளையும் விட்டுவிட்டு விழுந்தடித்துக்கொண்டு ஓடுவார்கள். பள்ளியின் முதல்வர் விடுக்கும் அழைப்பு கிட்டத்தட்ட நீதிமன்ற அழைப்பு போலத்தான்.
பள்ளி முதல்வரைப் பெற்றோர் எதிர்த்துப் பேச முடியாது. தங்கள் தரப்பை எடுத்துச் சொல்வதாக இருந்தாலும் மிகவும் கவனமாகத்தான் பேச வேண் டும். நிர்வாகத்துக்கு எதிராக இவர்கள் எழுப்பும் ஒவ்வொரு குரலும் ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் குழந்தை மீது திரும்புவதற்கான சாத்தியம் அதிகம். குழந்தையை நடத்தும் விதத்திலிருந்து, மதிப்பெண், விளையா ட்டு, கலை முதலான துறைகளில் கிடைக்கும் வாய்ப்புகள் எனப் பல வித ங்களிலும் பாதிப்பு இருக்கலாம். எனவே பெற்றோர் எவ்வளவு பெரிய ஆட்களாக இருந்தாலும்கூட கூடியவரை பள்ளி நிர்வாகத்தை எதிர்த்துப் பேச மாட்டார்கள்.
தனியார் பள்ளிகளைப் பற்றிபேசும்போது அவற்றின் ‘கட்டணக்கொள்ளை ‘ பற்றிப் பேசப்படும் அளவுக்கு அவை தரும் கல்வியின் தரம் பற்றிப் பேசப் படுவதில்லை. பல தனியார் பள்ளிகளில் ஆண்டொறுக்குச் சராசரியாக ஒரு மாணவருக்கு 20,000 முதல் 70,000 வரை கட்டணம் வசூலிக்கும் நிலையில் அதுபற்றி பேசாமல் இருக்க முடியாது. ஆனால், கல்வித்தரம்?
தனியார் பள்ளிகளின் பெருவாரியான மாணவர்கள் வாங்கும் மதிப்பெண் கள், பொதறிவு, ஆங்கில மொழி அறிவு, போட்டித் தேர்வுகளிலும் நுழை வுத் தேர்வுகளிலும் செயலாற்றும் விதம், தன்னம்பிக்கையின் அளவு ஆகி யவை அரசுப் பள்ளிகளில் படிப்பவர்களைவிடவும் அதிகமாக இருப்பதை ப் பொதுவாகக் காண முடிகிறது. ஆனால், இவற்றை வைத்துக்கொண்டு மட்டும் இந்தப் பள்ளிகள் தரமான கல்வியை வழங்குவதாகச் சொல்லி விட முடியுமா?
தனியார் பள்ளிகளில் பெரும்பாலும் ஆங்கில வழிப்பாடம் இருப்பதாலும் ஆங்கிலத்துக்குக் கொடுக்கும் முக்கியத் துவத்தாலும் ஆங்கில அறிவு ஓர ளவு நன்றாகக் கிடைத்துவிடுகிறது. ஆனால், மற்ற பாடங்களைப் பொறு த்தவரை மாணவர்களின் குடும்ப, சமூகப் பின்புலங்களில் இருக்கும் வலு வான ஆதாரங்கள்தாம் அவர்களை நன்றாகப் படிக்க வைக்கின்றன. வீட் டிலும் தாங்கள் சார்ந்த நடுத்தர வர்க்கச் சூழலிலும் இருக்கும் நெருக் கடிகள், பள்ளியில் கொடுக்கப்படும் நெருக்கடி, அடுக்கடுக்காக வைக்கப் படும் தேர்வுகள், தேர்வுகளுக்கான பயிற்சிகள் ஆகியவற்றால் இந்த மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் வாங்குகிறார்கள்.
சொல்லித்தருவதன் மூலம் அதிக மதிப்பெண்கள் என்பது ஒரு சில பள்ளி களுக்கு வேண்டுமானால் பொருந்தலாம். பெரும்பாலான பள்ளிகள் நிர்ப் பந்தத்தை ஏற்படுத்தியே மாணவர்களை படிக்கவைக்கின்றன. கற்பித்தல் (Teaching) என்பதைவிடப் பயிற்றுவித்தல் (coaching) என்பதுதான் இந்தப் பள்ளிகளில் அதிகம். அதாவது, மதிப்பெண் பெறும் இயந்திரங்கள் இங்கே தயாரிக்கப்படுகின்றன. இந்த மதிப்பெண்ணையே அளவீடாக பெற்றோரு ம் எண்ணுவதாலேயே தாங்கள் எல்லா விதத்திலும் சரி எனும் முடிவுக்கு வந்துவிடுகின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள்.
கணிதம், அறிவியல் முதலானவற்றில் கோட்பாடுகளைப் புரியவைக்கும் கற்பித்தல் முறை கடைப்பிடிக்கப் படுவதில்லை. தனியார் பள்ளிகளில் படிக்கும் பல மாணவர்களிடம் அவர்கள் கல்வி பற்றி உரையாடியிருக்கி றேன். அந்த உரையாடல்களில் ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அவர்கள் படிப்பதெல்லாம் சொற்களைத்தான். கோட்பாடுகளையோ அடி ப்படைகளையோ புரிந்துகொண்டு படிப்பதில்லை. கேட்டால், அதையெ ல்லாம் யாரும்சொல்லித்தருவதில்லை என்றே சொல்லியிருக்கிறார்கள்.
ஆங்கிலத்தில்கூட, சரளமாகப் படிக்கவும் பேசவும் பயிற்றுவிக்கும் அளவு க்கு இலக்கணம் சொல்லித் தரப் படுவதில்லை. ஆங்கிலத்திலேயே புழங் குவதால் மாணவர்கள் அம்மொழியை இயல்பாகக் கற்றுக்கொள்கிறார் கள் என்றுதான் சொல்ல வேண்டும். தமிழில் தடுமாறுவதையும் இதோடு சேர்த்துப் பார்க்க வேண்டும்.
மாணவர்களில் பலர் பொது அறிவு, அறிவியல், தொழில்நுட்பம் முதலா னவற்றைப் புரிந்துகொள்ளும் திறன் அதிகம் பெற்றிருப்பதன் காரணம் பெரும்பாலும் அவர்களுடைய இயல்பான ஆர்வமும், குடும்பச் சூழலும், சொந்த முயற்சியும்தான். பள்ளி முதல்வரும் ஆசிரியர்களும் தங்கள் பள்ளியைப் பற்றியும் தங்க ளது அலாதியான அணுகுமுறைகள் பற்றியும் பேசும் பகட்டுப் பேச்சுகளே பெற்றோர்–ஆசிரியர் கூட்டங்களை ஆக்கிரமி த்திருக்கும். இதையெல்லாம் கேட்கும் பெற்றோர்கள், கல்வி, குழந்தைக ளை நடத்தும் விதம் என்று தங்களுக்குத் தெரிந்த எதையாவது பகிர்ந்து கொண்டாலோ, அதை வைத்துக் கேள்வி எழுப்பினாலோ, எல்லாமே தங்களுக்குத் தெரியும் என்ற ரீதியில் பதில்வரும். அதோடு, இக்கேள்வி யின் தாக்கம் குழந்தையின் மீது எதிரொலிக்கும்.
நண்பர் ஒருவர், தன் பையன் படிக்கும் பள்ளியில், மாணவர்கள் தூக்கும் பையின் எடை பற்றி பேசியிருக்கிறார். செய்தித்தாளில் வந்திருந்த தகவ லை ஆதாரமாகக் காட்டி, இவ்வளவு எடையை ஒரு குழந்தை தூக்கக் கூடாது என்றிருக்கிறார். முகம் சிவந்துபோன முதல்வர், நாங்கள் அப்படி த் தூக்கச் சொல்வதில்லையே என்று சொல்லி அந்த விவாதத்தை முடித் துக்கொண்டுவிட்டார். ஆனால், மறுநாள் வகுப்பில் அக்குழந்தையிடம் இது பற்றி ஆசிரியைகள் குத்தலாகப் பேசியிருக்கிறார்கள். கடும் மன உளைச்சலுக்கு ஆளான அக்குழந்தை, “நீங்க ஏன் எங்க டீச்சர் கிட்ட என் பையைப் பத்தி கேட்டீங்க?” என்று நண்பரிடம் கேட்டு அழுதிருக்கிறது. கேள்வி எழுப்பினால், அது மீண்டும் தன் குழந்தையின் தலையில்தான் வந்து விடியும் என்பதையே நம்முடைய பள்ளிகள் நமக்கு சொல்கின்றன.
மாணவர் சரியாகப் படிக்கவில்லை என்றால் பெற்றோர் அழைக்கப்பட்டு க்கிட்டத்தட்ட எச்சரிக்கப்படுகிறார்கள். பதறிப் போகும் பெற்றோர் மேலும் பணம் செலவுசெய்து தனிப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள். போதாக்குறை க்குத் தாங்களும் சொல்லிக்கொடுக்கிறார்கள். மிகவும் புகழ்பெற்ற தனி யார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களும் கணிதம் முதலான பாடங்க ளுக்குத் தனிப் பயிற்சி வகுப்புக்குச் செல்கிறார்கள் என்றால் இந்தப் பள்ளிகளின் கல்வித் தரத்தைப் பற்றி என்ன சொல்ல?
பொதுவாக, எங்கே நாம் அதிகமாக விலை கொடுக்கிறோமோ அங்கே கேள்வி கேட்கும் உரிமை நமக்கு அதிகமாகக் கிடைக்கிறது. பெரிய உண வகங்களிலும் கடைகளிலும் வாடிக்கையாளருக்கு ஒப்பீட்டளவில் அதிக மரியாதை கொடுக்கப்படுவதைப் பார்த்திருப்போம். ஆனால், கல்வி விஷ யத்தில் இதற்கு நேர்மாறாக நடக்கிறது. அதிகமாகப் பணத்தைக் கொட்டி க்கொடுக்கும் பெற்றோர்கள் நிர்வாகத்தைக் கேள்வி கேட்க முடியாத நிலையில் இருக்கிறார்கள்.
இது அதிகாரப் போக்கு மட்டும் அல்ல; நுண்ணுணர்வற்ற தடித்தனமும் கூட. அதிகார போதை ஏறிய இந்தப் பூனைக்கு யார் மணி கட்டுவது?

உங்கள் ஸ்மார்ட்போன்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும் ஆப்கள் (Apps)! – எச்ச‍ரிக்கும் தொழில்நுட்பர்கள்

உங்கள் ஸ்மார்ட்போன்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும் ஆப்கள் (Apps)! – எச்ச‍ரிக்கும் தொழில்நுட்பர்கள்

உங்கள் ஸ்மார்ட் போன்களின் செயல்பாட்டை சீர்குலைக்கும் ஆப்கள்! – எச்ச‍ரிக்கும் தொழில்நுட்பர்கள்
என்ன‍தான் அதிக விலை கொடுத்து கம்பெனி ஸ்மார்ட்போன்களையே வாங்கினாலும்,
சில ஆப்கள் (APPS) எனப்படும் அப்ளிகேஷன்களால் நமது ஸ்மார்ட் போன்களின் செயல்பாட்டை சீர் குலைந்து போய்விடுகின்றன•  “ஸ்மார்ட் மொபைல் போன்களில், “சூப்பர் கிளீன்’ அல்லது “டிராய்டு கிளீனர்’ என்ற பெயர்களில், அப்ளிகேஷன்களை Download செய்தால், மொபைல்போன் தாறுமாறாக வேலை பார்க்க துவங்கி விடும்.
அதனால், வீண் குழப்பங்கள் ஏற்படும்’ என, மொபைல் போன் பாதுகாப்பு அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. ஆண்ட்ராய்டு தொழில் நுட்பத்தில் செயல்படும் ஸ்மார்ட்போன்களில், ஊடுருவும் அல்லது, “டவுன்லோடு’ செய்யப்படும் Super clean அல்லது DroidCleaner அப்ளிகேஷன், மொபைல் போனின் நினைவகங்களில்ள்ள எண்களுக்கு, தானாக S.M.S.செய்திகளை அனுப்புதல், முக்கிய தகவல்களை, பிற கம்ப்யூட்டர் அல்லது இணையதளங்களுக்கு வெளிப்படுத்துதல் போன்ற தவறுகளை செய்யும் .

இந்தஅப்ளிகேஷன்கள், இணையதளத்தில் எளிதாக கிடைப்பதாலும், அவற்றின்பெயர் சிறப்பான பொருளை கொண்டுள்ளதாலும், தவறுதலாக Download செய்ய வாய்ப்புள்ள து. அவ்வாறு, Download செய்தால், அது மொபைல்போனின் செயல்பாட்டையே சீர் குலைத்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ள து. இந்த தகவலை நாட்டின் முதல், கம்ப்யூட்டர் பாதுகாப்பு அமைப்பான, “செர்ட் – இன்’ தெரிவித்துள்ளது.

Wednesday, October 26, 2016

ஐம்பது வகையான வீட்டுக்குறிப்புகள் - தெரிந்துகொள்வோம்

50 Domestic Tips - Let us know them.
Very useful to our better half  and to us too, when we are married batchelor
at times.

1. தேங்காய் தண்ணீரை வீணாக்காமல் ரசத்தில் சேர்த்தால் ரசம் மிகவும் ருசியாக இருக்கும்
2. எந்த கறை ஆடையில் பட்டாலும் சிறிது வினிகர் போட்டு துவைத்தால் கறை இருந்த இடம் தெரியாது.
3. ஆப்ப சட்டி பணியார சட்டிகளி்ல் எப்பொழுதும் எண்ணெய் தடவியே வைத்திருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஆப்பம் பணியாரம் செய்யும்போது எளிதாக செய்யலாம்.
4. கொதிக்கவைத்து ஆறிய நீரில் சீரகப் பொடியை போட்டு 12 மணி நேரம்ஆகி குடித்தால் இரத்த கொதிப்பு சீராகும்.
5. மண்பாத்திரம் புதிதாக வாங்கினால் அதில் சிறிது எண்ணெய் தடவி அடுப்பில் சற்று நேரம் சூடேற்றி பின் கழுவினால் மண்வாசனையும் வராது விரிசலும் விடாது.
6. தக்காளி சட்னி செய்யும் போது அதில் சிறிது எள்ளை வறுத்து பொடி செய்து போட்டால் ருசி அதிகமாக இருக்கும். தயாரிக்கும் போது அதில் சிறிது எலுமிச்சை சாற்றை கலந்து குடித்தால் ருசி அதிகமாக இருக்கும்.
7. பொரித்த அப்பளம் மீதமாகிவிட்டால் அதை பாலிதீன் பையில் நன்றாக சுற்றி ஃபிரிஜ்ஜில் வைத்துவிட்டால் ஒரு வாரம் ஆனாலும் மொறு மொறுப்பு மாறாமல் இருக்கும்.
8. வாஷ் பேசினில் இரண்டு அல்லது மூன்று ரசகற்பூரம் போட்டு வைத்தால் எந்தவித துர்நாற்றமும் வராது.
9. அடைக்க அரைக்கும் போது அரிசி பருப்புடன் இரண்டு வேக வைத்த உருளை கிழங்கு போட்டு அரைத்தால் ருசியாக இருக்கும்.
10. இளம் காலை வெயிலிலும் மாலை வெயிலிலும் பிறந்தகுழந்தையை சிறிது நேரம் படுக்க வைத்தால் அந்த குழந்தைக்கு வைட்டமீன் ''D'' யும் கோடை காலத்தில் தாகம் எடுத்தாலும் எடுக்காவிட்டாலும் அவ்வப்போது தண்ணீர் குடிக்க வேண்டும் இது சரும வறட்சியை நீக்குவதோடு சிறுநீரகம் மலக்குடல் சிறப்பாக செயல்பட உதவும்.
11. பழய டூத்பிரஷ்களை தூக்கி எறிந்து விடாதீர்கள் மரக்கதவு கிரீல் கேட் பொன்றவற்றின் இடுக்குகளில் உள்ள தூசிகளை அகற்ற இதைவிட சிறந்த பொருள் வேறு எதுவும் கிடையாது.
12. மீன்தொட்டியில் உள்ள பழைய தண்ணீரை மாற்றும்போது அதை கீழே கொட்டி விடாமல் செடிகளுக்கு ஊற்றினால் செடிகள் செழித்து வளரும்.
13. சாப்பாட்டு மேஜையை துடைக்கும் துணியில் சிறிதளவு உப்போ கற்பூரமோ வைத்து துடைத்தால் ஈ மற்றும் பூச்சிகள் உட்காராது.
14. பழைய சென்ட் பாட்டில்களில் சிறிது தண்ணீர் விட்டு நன்கு குலுக்கி வைத்து கொண்டால் கைக்குட்டைகளை மணக்க செய்யலாம்.
15. உங்கள் வீட்டு .ஃப்ரிஜ்ஜிலிருந்து துர்வாடை வந்தால் ஏதாவது ஒரு எசன்ஸை ஒரு துண்டு பஞ்சில் தோய்த்து ஃப்ரீஸருக்குள்ளும் ஃப்ரிஜ்ஜின் உள் மூலையிலும் போட்டு விடுங்கள். இனி ஃப்ரிஜ்ஜை திறந்தால் ஒரே கமகமதான்.
16. ஊதுவத்தி பாக்கெட்டுகள் காலியானதும் அவற்றை துணிவைக்கும் பீரோவில் போட்டுவைத்தால் பீரோவை திறக்கும் போது கமகமக்கும்.
17. துணிகளை துவைத்து முடித்தபின் கடைசியாக அலசும்போது அந்த தண்ணீரில் சில சொட்டு கிளிசரின் கலந்து விட்டால் துணிகள் சுருக்கம் இல்லாமல் இருக்கும்.
18. நைலான் கயிரை வாங்கியவுடன்சோப்புநீரில் நனைத்து உபயோகித்தால் நீண்ட நாள் உழைக்கும்.
19. தரையில் எண்ணெய் கொட்டி விட்டால் அதன்மிது கோலப்பொடியை தூவிவிட்டு துடைத்தால் எண்ணெய் பசை நீங்கி விடும்.
20. ஏலக்காயை பொடித்து அதன்விதைகளை உபயோகத்திற்கு எடுத்தபிறகு தோலை எறிந்து விடாமல் குடிக்கும் நீரில் போட்டு வைத்தால் தண்ணீர் மிகுந்த ருசியாக இருக்கும்.
21. நிறம் மங்கிய வெள்ளை துணிகளை வினிகர் கலந்த நீரில் ஊற வைத்து துவைத்தால் துணி பளிச்சென்று இருக்கும்.
22. மிக்சியை கழுவும்போது டூத்பிரஸ்ஸில் சிறிது டூத் பேஸ்ட் வைத்து தேய்த்துக் கழுவினால் பளீரென்று இருக்கும்.
23. பூண்டு உரிப்பதற்கு முன் தண்ணீரில் ஜந்து நிமிடம் போட்டு விட்டு உரித்தால் தோல் கைகளில் ஒட்டாது.
24. நெய் காய்ச்சிய பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அதை சாம்பாரில் கலந்து விடுங்கள். நெய் மணம் கமழும் சாம்பார் ரெடி.
25. தேங்காயை ஃபிரிஜில் வைத்து ஜில்லென்று எடுத்து உடைத்தால் சுலபமாக உடைத்து விடலாம்.
26. மெழுகு வர்த்திகளை ஃபிரிட்ஜில் வைத்து தேவைப்படும் போது உபயோகப்படுத்தினால் சீக்கிரத்தில் உருகாது அதிக நேரம் எரியும்.
27. பாகற்காயை அப்படியே வைத்தால் ஒன்றிரண்டு நாட்களில் பழுத்து விடும் இதைத் தவிர்க்க காய்களை மேற்புறமும் அடிப்புறமும் வெட்டி விட்டு இரண்டாக பிளந்து வைத்து விடவும். பாகற்காய் பல நாட்கள் வரை பழுக்காமல் இருக்கும்.
28. மிக்ஸியில் சட்னி மசாலா போன்ற வற்றை அரைத்து வழித்து எடுத்ததும் மீண்டும் ஜாரில் தண்ணீர் விடடு மிக்ஸியை ஓட விடவும். அதனுள்ளே கெட்டியாக ஒட்டிக்கொண்டிருக்கும் சட்னி மசாலா போன்றவை தண்ணீரோடு கரைந்து வந்து விடுவதால் ஜாரை சுத்தம் செய்வது மிகவும் சுலபம்.
29. நாலு இன்ச் பெயிண்ட் பிரஷ்ஷினால் வீட்டு ஜன்னல், டிவி, கீபோர்டு போன்றவற்றை சுத்தப்படுத்தினால் துணியால் துடைப்பதைவிட நன்றாக துடைக்க முடியும்.
30. குக்கர் காஸ்கட் தொளதொளவென்றாகிப் போனால் புது காஸ்க்ட் வாங்கும் வரை இந்த காஸ்கட்டை ஃபிரிஜின் ஃபிரிஸரில் வைத்து எடுத்துப் பயன்படுத்தினால் நான்கைந்து நாட்கள் வரை பயன்படும்.
31. நான்கு பாதாம் பருப்புகளை எடுத்து இரவில் ஊறவைத்து காலையில் நன்றாக அரைத்து பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் குழந்தைகள் புத்திசாலியாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.
32. தினமும் சிறிது துளசி இலைகளை மென்று தின்றால் சுவாசப்பகுதி நோய்கள் வராது.
33. எலுமிச்சம் பழ சர்பத் தயாரிக்கும் போது கொஞம் இஞ்சிச் சாறைக் கலந்தால் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
34. வெண்டைக்காய் சமைக்கும்போது ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்க, சமைப்பதற்கு முன் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறை தெளிக்கவும்.
35. அரிசி உப்புமா செய்யும்போது அதில் கொஞ்சம் வேகவைத்த காராமணியை கலந்து அடையாக தட்டி, இட்லி தட்டில் வேக வைத்தும் சாப்பிடலாம். காரடையான் நோன்பு அடை போலச் சூப்பராக இருக்கும்.
36. கீரையை வேகவிடும்போது சிறிது எண்ணெயை அதனுடன் சேர்த்து வேக வைத்தால் கீரை பசுமையாக ருசியாக இருக்கும்.
37. தேங்காய் வறுத்து அரைக்கும் குழம்பு வகைகளில் அதிகமான எண்ணெய் சத்து இருக்கும். அதை நீக்க வேண்டுமானால், குழம்பை சிறிது நேரம் ·பிரிட்ஜில் வையுங்கள். மேல் பகுதியில் எண்ணெய் படியும். அதனை நீக்கிவிட்டு, குழம்பை சூடாக்கி பயன்படுத்துங்கள்.
38. வெங்காய அடை செய்யும் போது, சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி, ஒரு ஸ்பூன் எண்ணெய்விட்டு, வதக்கி, மாவில் கலந்து அடை வார்த்தால், கம்மென்று மணம் மூக்கைத் துளைக்கும். சுவையும், ருசியும் நாவில் நீருற வைக்கும்.
39. பூரிக்கு மாவு பிசையும்போது கொஞ்சம் சர்க்கரை சேர்த்துப் பிசைந்தால் பொரித்த பூரி அதிக நேரம் நமத்துப் போகாமல் இருக்கும்.
40. அடை செய்யும்போது கையால் தட்டி வட்டமாக்கிய பிறகு வட்டமான மூடி அல்லது பிஸ்கெட் கட்டரில் வெட்டிப் பொரித்தால் வாய்க்கு ருசியோடு கண்ணுக்கும் ரம்யமாக இருக்கும்.
41. இட்லிக்கு ஊற்றிக் கொள்ள நல்லெண்ணெயை இலேசாகக் காய்ச்சி சிறிது கடுகு, பெருங்காயம் தாளித்து உபயோகப்படுத்தினால் இன்னும் இரண்டு சாப்பிடத் தோன்றும்.
42. பாகற்காயை சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, முற்றியதாக இருந்தால் அகற்றி - தேவையான அளவு எலுமிச்சை ரசத்தில் கொட்டி வெளியில் வைத்து ஊற வைக்கவும். ஒரு வாரத்தில் நன்றாக ஊறிப் பக்குவப்படும். தினமும் நன்கு குலுக்கி வெயிலில் வைக்க வேண்டும். கசப்பு துளியும் இராது. நீண்ட நாள் கெடாமல் இருக்கும்.
43. மைதாவை நீர் விட்டுப் பிசையாது அப்படியே ஒரு பாத்திரத்தில் கொட்டி நீராவியில் சிறிது நேரம் வேகவைத்து எடுத்து, சுவைக்கேற்ப உப்பும், நெய்யும் கூட்டிப் பிசைந்து முறுக்குப் பிழியலாம். கரகரப்பாகவும், சுவையாகவும் இருக்கும்.
44. எண்ணெய் வைத்துப் பலகாரங்கள் தயாரிக்கும்போது காய்ந்த எண்ணெயில் கோலியளவு புளியைப் போட்டு அது கருகிய பின் எடுத்து எறிந்து விடவும். எண்ணெய்க் காறலை இது போக்கும்.
45. ஜவ்வரிசி அல்லது அரிசிக்கூழ் கிளரும்போது கசகசாவையும் ஒன்றிரண்டாகப் பொடி செய்து போட்டுக் கிளறி வடாம் அல்லது வற்றல் தயாரித்தால் பொரிக்கும்போது தனி மணமும், ருசியும் காணலாம்.
46. பெருங்காயம் கல்போல் இருந்தால் உடைப்பது கஷ்டம். இரும்புச் சட்டியை அடுப்பில் வைத்துக் காய்ந்தவுடன் பெருங்காயத்தை அதில் போட்டால் இளகும். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பிய்த்து தனித்தனியாகப் போட்டுவிட்டால் ஆறியவுடன் டப்பியில் போட்டுக் கொள்ளலாம்.
47. கிரேவி வகையறாக்கள் செய்யும்போது பிடி வேர்க்கடலையை எடுத்து தோல் நீக்கி, அரைமணி நேரம் நீரில் ஊறவைத்து நைஸாக அரைத்து சேர்த்தால் கிரேவி ரிச்சாக, டேஸ்ட் அபாரமாக இருக்கும்.
48. காய்கறிகள் எதுவாக இருந்தாலும் அவற்றை நறுக்கத் தொடங்குமுன் கைவிரல்களில் லேசாக எண்ணெய் தடவிக் கொண்டு நறுக்குவது நல்லது. வேலை முடிந்ததும் சிகைக்காய் போட்டுக் கழுவி விடவும். விரல்கள் கறுத்துப் போகாமல் இருக்க இது உதவும்.
49. மோர் மிளகாய் தயாரிக்கும்போது அத்துடன் பாகற்காய்களையும் வில்லைகளாக அரிந்து போட்டு வற்றலாக்கலாம். பாகல் வற்றல் காரமுடனும், மிளகாய் சிறு கசப்புடன் சுவை மாறி ருசியாக இருக்கும்.
50. அரிசி குருணையில் உப்புமா செய்தால், குருணை பாதி வெந்து கொண்டிருக்கும்போது, சம அளவு வறுத்த சேமியாவைக் கொட்டி வெந்ததும் இறக்கி வைத்து, அரைமூடி எலுமிச்சம்பழம் பிழியவும். இந்த டூ-இன்-ஒன் உப்புமா, புதுமையான சுவையோடு இருக்கும்.

Sunday, October 23, 2016

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித காரணம் உறக்கம் பாதித்ததற்கு...

நல்ல ஆழ்ந்த நிம்மதியான உறக்கம் நம்மை மிக சுறுசுறுப்பாகவும் உற்சாகமாகவும் தெளிவாகவும் செயல்படவைக்கும்....
ஒருநாள் உறக்கம் பாதித்தாலும்..சரிவர உறங்காமல் போனாலும்உடலும் மனமும் சோர்வடைந்து போகும்.. அதுமட்டுமல்ல அன்றைய தினம் செய்யவேண்டிய கடமைகள் அனைத்தும் பாதிக்கப்படும்... கோபம்..எரிச்சல் உணர்வு.. பிறர் மீது எரிந்து விழுதல்..ஒருவித மயக்க நிலை ஏற்பட்டு நிம்மதி இழக்கச்செய்யும்...

காரணம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வித காரணம் உறக்கம் பாதித்ததற்கு...
சிலருக்கோ எந்தவித காரணமுமே இல்லை ஆனா உறங்க முடியவில்லை என்று கருத்து இருக்கும்...அது அப்படி அல்ல.. கட்டாயம் காரணமிருக்கும் ஆழ்மனதில் பதிந்த சில காரணங்கள் உங்களை உறங்கவிடாமல் செய்யும்...
சில சமயங்களில் சரிவர உணவு உட்கொள்ளாமை... ஒவ்வாமையான உணவுகள்... அதிகபடியான ஓய்வு... எந்த வேலையும் செய்யாமல் சோம்பி இருத்தல்.. சில சமயங்களில் உடலை பாதித்திருக்கும் சிலவகையான நோய்கள்...
பெரும்பாலும் உறக்கத்தை தொலைப்பவர்கள்.. நிகழ்காலத்த்தில் அவர்கள் அறிந்த பாதிப்புகள்.. ஏமாற்றங்கள்.. குற்றம் ..குறைகள் பய உணர்வு... எதிர்காலம் குடும்பம் பற்றிய பயம்... அதிகபடியான மனஉளைச்சல் இவைகள்தாம்...
இங்கே பிரச்சனைகள் இன்றி இருப்பவர் என்று எவரையும் கைகாட்டிவிடமுடியாது.. யாருமே எதாவது ஒரு பிரச்சனையோடுதான் இருக்கின்றனர்
காரணம் எதுவாக இருப்பினும்.... நிம்மதியான உறக்கம் கொண்டுவிட்டால்போதும்... கொஞ்சம் புத்துணர்வோடு எதனையும் எதிர்கொள்ளமுடியும்.... சமாளிக்கமுடியும்.. சிறந்த சிந்தனைகள் தோன்றும்...
அந்த உறக்கம் நம் கையிலேயேதான் இருக்கின்றது... சில பராமரிப்பு முறைகள்... மனதை ஒருமுகபடுத்துதல்... உடலையும் மனதையும் புத்துணர்வாக்கிகொள்ளல் மூலம் நன்றாக உறங்கிவிட்டோமானால்..போதும்
வாழ்வில் எல்லாவற்றையுமே சமாளித்து வெற்றியடையலாம்
முயற்சித்து பாருங்களேன்....

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...