Friday, December 30, 2016

அடுத்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுங்கள்.....

பெரிய ஹாலில் செமினார்
நடந்து கொண்டிருந்தது.
அப்போது
பேச்சாளர் எல்லார் கையிலும் 
ஒரு 🎈🎈
பலூனை கொடுத்து தங்கள் பெயரை
எழுத சொன்னார்.
எல்லோரும் தங்கள் பெயரை 🎈பலூனில்
எழுதி முடித்தவுடன் ,
அதை இன்னொரு
அறையில் நிரப்ப
சொன்னார்.
இப்பொழுது
அந்த பேச்சாளர்,
உங்கள் பெயர் எழுதிய
பலூனை 🎈அந்த அறைக்குள் இருந்து எடுத்து
வாருங்கள் என்று அறிவித்தார்.
உடனடியாக அனைவரும் விழுந்து அடித்து
அந்த
அறைக்குள் ஓடிச் சென்று
ஒவ்வொரு 🎈பலூனாக எடுத்து
தேடினர் .
ஒருவருக்கொருவர்
நெக்கி தள்ளிக்கொண்டு கீழே
விழுந்து
தங்கள் பெயருக்குரிய 🎈பலூன்
கிடைக்கிறதா என்று பரபரப்பாக தேடினர்.
5 நிமிடம் கடந்த போதிலும்
ஒருவராலும்
தங்களுக்குறிய பலூனை 🎈தேடி கண்டு பிடிக்க
முடியவில்லை.
இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,
’ஒவ்வொருவரும் ஒரு பலூன் 🎈மட்டும்
எடுங்கள்,
அந்த பலூனில் 🎈யார்
பெயர் இருக்கிறதோ அதை அந்த பெயர்
உடைய நபரிடம் கொடுங்கள்’
என்றார்.
அடுத்த ஒரே நிமடத்தில் தங்கள் பெயர்
எழுதப்பட்ட 🎈பலூன் எல்லோருக்கும்
கிடைத்துவிட்டது.
இப்பொழுது அந்த பேச்சாளர்
சொன்னார்,
’இது தான்
வாழ்க்கை.
எல்லோரும்
மகிழ்ச்சியை தேடுகிறோம்,
ஆனால்
அது எங்கே,எப்படி,எதில் கிடைக்கும்
என்று நினைப்பது இல்லை’.
’நம்ம சந்தோஷம் அடுத்தவர்களுக்கு உதவுவதில்
தான் இருக்கிறது.
அடுத்தவர்களுக்கு
மகிழ்ச்சியை கொடுங்கள்,
உங்கள்
மகிழ்ச்சி உங்களை தேடி வரும்’.
இந்த  ஆண்டு (2017) அனைவருக்கும் சந்தோஷமாய்
மலரட்டும் ..!!
😄😄😃😃😃😃

உங்களைப் பற்றி நீங்களே அறிந்து கொள்ள, சில சுவாரஸ்யமான கேள்விகளும் பதில்களும் …

நீங்களே தெரிந்து கொள்ளலாம்… ஒவ்வொருவரும் தன்னைப் பற்றி சுய ஆய்வு செய்து… குற்றங் குறைகளை நிறையாக்கிக் கொண் டால், அவர்களுக்கு வெற்றி என் பது எளிதாக கிடைக்கும். உங்க ளுக்கும் அந்த ஆசை இருக்கலாம்.
உங்களுக்காகவே இதோ… பத்து கேள்விகள் கொடுக்கப் பட்டுள் ளன. அதற்கு மூன்று பதில்களும் வழங்கியுள்ளோம். அதில் உங்களுக்கான… உங்களைப் பற்றியபதில்களை டிக் செய்யுங்கள். இறுதி யில் அதற்கான மதிப் பெண் களை கூட்டி… அதற்கான முடிவை… அதா வது உங்களைப் பற்றிய பலம், பலகீன ங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
1. தினமும் நல்ல நேரமாக நீங்கள் எதை நினைக்கிறீர்கள்? 
அ) காலை 
ஆ) மதியம், மாலை 
இ) இரவு.
2. உங்களுடைய நடை எந்த மாதிரி இருக்கும்?
அ) மெதுவாக… தலைகுனிந்தபடி… 
ஆ) வேகமாக… 
இ) தலையை உயர்த்தியவாறு விரைவாக…

3. நீங்கள் பேசும்போது உங்களுடைய செயல் எப்படி இருக்கும்? 

அ) விரல்களை இணைத்துக் கொண்டு… அல்லது கையை பிசைந்தபடி… 
ஆ) கைகளை இடுப்பில் வைத்த படி பேசுவேன். 
இ) எதிரில் இருப்பவரை தொட்டு தொட்டு பேசுவேன் அல்லது அவரது விரல்களைப் பிடித்தபடி… பேசுவேன்.

4. நீங்கள் தரையில் அமர்ந்தி ருக்கும்போது… எப்படி? 
அ) கால்களை நீட்டிக் கொ ண்டு… 
ஆ) இரண்டு கால்களையும் ஒரே திசையில் மடக்கி வைத் திருப்பேன். 
இ) சம்மணம் போட்டு உட்கா ர்ந்திருப்பேன்.
5. உங்களுடைய மகிழ்ச்சியை எப்படி வெளிப்படுத்துவீர்கள்? 
அ) லேசான புன்னகை 
ஆ) நன்றாக சிரித்து வெளிப்படுத்துவேன்.
இ) விழுந்து விழுந்து சிரிப்பேன்.
6. கேளிக்கையில் இருக்கும்போது… எப்படி?
அ) யாருடனும் பேசாமல்… சேராமல் மூலையில் தனித்து இருப்பேன். 

ஆ) அறிமுகமானவர்களிடம் நானே போய் பேசுவேன். 
இ) அங்கிருக்கும் அனைவரது பார்வையும் என்னை நோக்கி திரும்புகிற மாதிரி நடப்பேன்.
7. மிகவும் அவசர வேலையாக சென்று கொண்டிருக்கிறீர்கள்? அப்போது யாராவது உதவி கேட்டால்..? 
அ) அப்புறம் பார்க்கலாம்… நிறைய வேலை இருக்கிறது என்று சொல்லுவேன். 
ஆ) அவருக்கு என்ன உதவியோ… அதையும் நிறைவேற்றாமல்… என்னுடைய வேலையையும் சரிவர செய்ய முடியாமல் திண்டாடு வேன். 
இ) கட்டாயம் உதவி செய் வேன் என்று உறுதி கூறு வேன்.
8. உங்களுக்கு பிடித்த நிறம் எது? 
அ) வெள்ளை, பிரவுன் மற் றும் காபி கலர். 
ஆ) மஞ்சள், நீலம் மற்றும் பச் சை. 
இ) கருப்பு
9. படுக்கையில் படுத்திரு க்கும் போது எப்படி படுத் திருப்பீர்கள்? 
அ) ஒரு பக்கமாக சரிந்து, வளைந்த நிலையில் படுத்தி ருப்பேன். 
ஆ) கால்களை நீட்டியபடி… கவிழ்ந்து படுத்திருப்பேன். 
இ) மல்லாந்த நிலையில் படுத் திருப்பேன்.
10. உங்களுக்கு அடிக்கடி வரும் கனவு? 
அ) சந்தோஷமான கனவு… 
ஆ) அடிக்கடி கீழே விழுவது போல் கனவு வரும். 
இ) கனவு காணும் பழக்கம் கிடையாது.

என்னங்க… எல்லாத்தையும் படிச்சு… உங்களுக்கான பதிலை `டிக்’ அடிச்சிட்டீங்களா…? 

அ – 2 மதிப்பெண் 
ஆ – 4 மதிப்பெண் 
இ – 6 மதிப்பெண் 
இப்போது அதற்கான மதிப்பெ ண்களை கூட்டுங்கள்.
50-க்கும் அதிகமான மதிப்பெண்: 
நீங்கள் எந்த வேலையாக இருந்தாலும் அதை ஈஸியாக முடித்து விடுவீர்கள். உங்களுடைய நண்பர்கள் கொடுத்து வைத்தவர்கள். உங்களிடம் எப்போது வந்து கேட்டாலும், மறுக்காமல் உதவி செய்வீர்கள் என்பதால் உங்களுக்கு நண்பர்கள் வட்டாரம் ஜாஸ்தி. அதே மாதிரி, நண்பர்களிடம் காரியம் சாதிப்பதிலும் நீங்கள் கில்லாடி!
41-லிருந்து 50- மதிப்பெண் : 
உங்களுடன் பழகுவது எளிது. எப்போதும் சிரித்து சிரித்து பேசி யே மற்றவர்களை உங்களுடைய நட்பு வட்டாரத்துக்குள் இழுத்துக் கொள்வீர்கள். மற்றவர்களின் சிக் கல்களுக்கு தெளிவாக ஆலோ சனை சொல்லுவீர்கள். ஆனால் அதே சிக்கல் உங்களுக்கு வந்தால் தெளிவான முடிவெடுக்க முடியா மல் குழப்பம்… அதனால் தடு மாற்றம் என்று உங்களை நீங்களே நொந்து கொள்வீர்கள்!
31 -லிருந்து 40-மதிப்பெண்:
நட்புக்கு மரியாதை கொடுக்கும் குணமுள்ளவர்கள் நீங்கள். அத னால் பல விஷயங்களை இழந்தாலும், நண்பர்களை விட்டுக் கொ டுக்க மாட்டீர்கள். சின்ன சின்ன விஷயத்தைக் கூட சீரியஸாக பார்க்கும் உங்களுக்கு மனக் குழப்பம் அதிகமாக இருக் கும்.
21-லிருந்து 30-மதிப்பெண்: 
நீங்கள் சரியான கறார் பேர்வழி… `வெட்டு ஒண்ணு… துண்டு ரெண்டு’ என்று பேசுவதால் உங்களுக்கு நட்பு வட்டாரம் மிகவும் கம்மியாக இருக்கும். அப்படியே யாராவது நெருங்கி வந்தால்கூட அவர்களை நீங்கள் தவிர்த்து விடுவீர்கள். எப்போதும் காரி யத்திலேயே கண்ணாக இருக்கும் உங்களுக்கு பண ஆசையும் அதிகமாக இருக்கும். உங்களுடன் இருப்பவர்களும் சீரியஸாக இரு க்க வேண்டும் என்று நினைப்பீர்கள்.

21-க்கும் கீழான மதிப்பெண்:
நீங்கள் ஒரு தனிமை விரும்பி. எல்லாரும் கூடி கும்மாளமிட்டாலும் உங்களிடமிருந்து ஒரு சத்தமும் வராது. காடு, மலை என்று சுற்றித் திரியத்தான் உங்களுக்கு ஆசை வரும். பெரும்பாலும் வீட்டுக்குள்ளேயே ரவுண்ட்ஸ் வரும் உங்களுக்கு விசேஷ நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆசை வராது. மேலும் நண்பர்கள் மத்தியிலும் செல்வாக்கு இருக்காது. உங்களுக்கு எப்போதும் மகிழ்ச்சி என்பது கம்மிதான்!

Thursday, December 29, 2016

கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . .

கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . .

கொட்டை பாக்(கு)கை வாயில் போட்டு மென்று அதன் சாற்றினை விழுங்கினால் . . .
ப‌ழங்காலத் தமிழர்கள், கொட்டைப் பாக்கில் கூட மருத்துவம் இருப்ப‍தை அறிந்து, அதனை முறைப்படி பயன்படுத்தி
பக்க‍விளைவுகளும் பின்விளைவுகளும் இல்லா த மருந்தாக பயன்படுத்தி வந்திருப்ப‍து ஆச்ச‍ரிய ப்படவே ண்டிய விஷயம்.
அந்த வரிசையில் உயர்ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் இவற்றுடன்கூடவரும் கொலஸ்ட்ரால் குறைய இதோ ஒரு வீட்டுவைத்தியம்; வாசனை சேர்க்காத கொட்டைப் பாக்கை சிறுசிறு துண்டுக ளாக்கி ஒவ்வொரு சாப்பாட்டிற்கு பிறகு 20-40 நிமிடங்கள் வாயில் போட்டு மெல்லவும். ஆனால் கடித்து அதனை துண்டாக்க‍க் கூடாது; நன்றாக மென்றவுடன் பாக்கை வெளியே துப்பிவிடுங்கள். பாக்கிலிருந்து வரும் ஜூஸ் உமிழ்நீருடன் கலந்து இரத்தத்தின் கொழுப்பை குறைக்கிறது. இரத்த ஓட்டம் சீராகிறது; இரத்த அழுத்தமும் குறைகிறது.

ஜெட் வேகத்தில் உங்க Wi-Fi வேலை செய்ய நீங்களே செய்யக்கூடிய சிற்சில ட்ரிக்ஸ்கள்.

JET வேகத்தில் உங்க Wi-Fi வேலை செய்ய நீங்களே செய்யக்கூடிய சிற்சில ட்ரிக்ஸ்கள்

ஜெட் வேகத்தில் உங்க Wi-Fi வேலை செய்ய நீங்களே செய்யக்கூடிய சிற்சில ட்ரிக்ஸ்கள்
இன்றை நவீன தொழில்நுட்பம் இல்லாமல் ஒரு மனிதனால் வாழவே முடியாது என்ற இக்க‍ட்டான
சூழ்நிலை உருவாகி வருகிறது. அந்த வகையில் ஒரு வருடத்தில் 350 நாட்கள் BSNL Broad Band சொதப்பும். மற்ற நாட்களில் ஆச்சர்யப்படுத்தும். ஆனால், அந்த 5 நச் நாட்கள் வர்தா புயல் சமயத்தில் வந்ததுதான் அதிசயம். மற்ற “ஸ்பீடு” Broad Band இன்னும் ’I am Back’ முழுமையாக சொல்ல முடியாமல் தவிக்கின்றன. எந்த சூழல் என்றாலும் Wi-Fi சிக்னல் கிடைக்கவே மாட்டேங்குது என்பதுதான் இளசு களின் எவர்க்ரீன் பிரச்னை. இந்த ட்ரிக் ஸைஎல்லாம் ஃபாலோபண்ணா, உங்க Wi-Fi ஜெட்லீ வேகத்துல வேலை பார்க்கும்.
*அலுமினியம் சிக்னலை சூப்பராக கடத்தும். எனவே அலுமினியம் ஃபாயி லை (அதான் ஜி பீர் டின் கவர்) உங்கள் ஆன்டெனா விற்குபின்னால் நிறுத்திவையுங்கள். சூப்பர்சிக்னல் கேரண்டி. அதேபோல் ரெளட்டரின் 2 ஆன்டெனாக்க ளையும் செங்குத்தாக வையுங்கள்.
*ரெளட்டர் வாங்கும்போதே பார்த்து நல்ல ரெளட்ட ராக வாங்குங்கள். அதை முடிந்த வரை வீட்டின் நடுவில் உயரமான இட மாக பார்த்து வைத்தால் நலம். காரணம், நடுவில் நிறைய பொருட்கள் இருந்தால் சிக்னல் தடைபடும். எங்கிருந்து பார்த்தா லும், உங்கள் பார்வையில் ரெளட்டர் படும்படி இரு ந்தால் இன்னும் விசேஷம்.
*ரெளட்டருக்கு அருகில் மைக்ரோவேவ், கார்ட்லெஸ் மொபைல் போன்ற கருவிகள் இருந்தால் சிக்னல் தடைபடும். காரணம் உலோக பொருட்கள் சிக்னலை வெகுவாக பாதிக்கு ம். பக்கத்துவீட்டு ரெளட்டரிடம்இருந்து உங்கள் ரெளட்டரை முடிந்தவரை தள்ளி வையுங்கள். இரண்டு சிக்னல்களும் க்ராஸ் செய்தாலும் சிக்னல் பாதிக்கப்படும்.
*சில இணையதளங்கள் மற்றும் மொபைல் ஆப்ஸ் நீங்கள் உபயோகிக்காத சமயங்களிலும் இணையத்தை பயன்படுத் திக்கொண்டிருக்கும். அதையெல்லாம்முறையாக மூடவேண்டியது அவ சியம். இல்லையேல், கணிசமான பேண்ட்விட்த்தை அவை எடுத்துக் கொண்டு வேகத்தை குறை த்து விடும்
* அவ்வபோது மோடமை ரீசெட் செய்யுங்கள். கேட்க சிம்பிளான வேலையாக இருந்தாலும் அதிக பயன்தர க்கூடிய ட்ரிக் இது. ரீசெட் செய்யும்போது சில பிரச்ச னைகள் தன்னா லேயே சரியாகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. அதேபோல் அவ்வபோது சாஃப்ட்வேர் அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.

*உங்கள் வைஃபை செட்டிங் WEP-ல் இருந்தால் அதை WPA அல்லது WPA2 என்ற செட்டிங்கிற்கு மாற்றுங்கள். காரணம் WEP நெட் வொர்க்கை எளிதாக ஹேக்செய்ய இயலும். யாருக்கு தெரியும்? பார்க்க பால்வாடி பையன் போல இருக்கும் உங்கள் பக்கத்துவீட்டுக்காரரே பெரிய ஹேக்கராக இருக்கலாம்
* இது ஏற்கெனவே தெரிந்த சங்கதிதான். அவ்வ ப்போது உங்கள் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி க்கொண்டே இருங்கள். மொக்கையாக உங்கள் பெயரையே பாஸ்வேர்டாக வைத்தால் பக்கத்து வீட்டுக்காரர் பொங்கல் கொண்டாடிவிடுவார்.

*இது எதுவுமே வேலைக்கு ஆகாவிட்டால் பேசா மல் ஒரு ரிப்பீட்டர் வாங்கி மாட்டி விடுங்கள். ரெளட்டரின் ரேஞ்ச் 150மீட்டர்கள். ரிப்பீட்டர் அந் த ரேஞ்சை அதிகரித்து சிக்னலை பல மடங்கு பூஸ்ட்செய்யும். நம்பி வாங்குங்க. கொடுத்த காசுக்கு நல்ல எஃபெக்ட் இருக்கும்.

பணிந்தார் பன்னீர்செல்வம்; சாதித்தார் சசிகலா! – ஜெயலலிதா இடத்தில் இனி சசிகலாதான் . . .

பணிந்தார் பன்னீர்செல்வம்; சாதித்தார் சசிகலா!- ஜெயலலிதா இடத்தில் இனி சசிகலாதான் . . .

பணிந்தார் பன்னீர்செல்வம் சாதித்தார் சசிகலா – ஜெயலலிதா இடத்தில் இனி சசிகலாதான் . . .
மறைந்த முன்னாள் முதலமைச்ச‍ர் ஜெ.ஜெயலலிதா அவர்கள், செப்டம்பர் 22இல் அப்போலோ மருத்துவமனையில்
அனுமதிக்க‍ப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 5ஆம்தேதி இரவு 11.20 மணிக்கு இறந்ததாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்ட‍து.
அப்போதிருந்த அதிமுகவின் அடுத்த‍ பொதுச்செயலாளராக யாரை நிய மிப்ப‍து என்பது குறித்த‍ குழப்பங்களும் அதிரடி நடவடிக்கைகளும் தொட ர்ந்து வெளிவந்துகொண்டே இருந்தது. ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து காலியாக உள்ள கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு,ஜெயலலிதாவின்தோழி சசிகலாவை தேர்ந்தெடுக்க கட்சியின் முன்னணி தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகி றார்கள்.
அவற்றுல் பாய்ந்தார் பன்னீர்செல்வம், சரிவில் சசிகலா, தீபாவுடன் கை கோர்க்கும் பன்னீர் செல்வம்  என்பன போன்ற பல தலைப்புக்களில் சசி கலாவுக்கு எதிரான செய்திகள்  சமூக ஊடகங்களிலும் யூடியூப் காணொ லிகளிலும் தொடர்ந்து வெளிவந்து கொண்டே இருந்தது. அவற்றில்ஒன்றி ரண்டு செய்திகளையும் நாமும் வெளியிட்டு வந்தோம்.
அதிமுக. செயற்குழு, மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9.30 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. இதில் முதலமைச்ச‍ர் ஓ. பன்னீர்செல்வம் உட்பட பல கட்சியின் தலைமை கழக நிர்வாகிகள்,img-20161229-wa0048மாவட்டச் செயலாளர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அணிகளின் செயலா ளர்கள், நகர, ஒன்றிய செய லாளர்கள் ஆகியோர் மட்டுமே பொதுக் குழு கூட்டத்தில் பங்கேற்றனர்

அதிமுகவில் பொதுச்செயலாளரை தேர்ந்தெடுக்க வேண்டுமானால் கட்சி யின் செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றி அதற்கு பொதுக்குழுவில்img-20161229-wa0044ஒப்புதல் பெற வேண்டும். இதையொட்டி  முதலில் ஜெயலலிதா மறைவுக் கு எழுந்து நின்று இரங்கல் தெரிவித்தனர். இதையடுத்து பல தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன.
அதில் ஒரு தீர்மானம் முக்கியமானது. சின்னம்மா வி.கே.சசிகலா தலை மையில் அதிமுக செயல்படும் என அந்த தீர்மானம் சொல்கிறது. ஆனால்img-20161229-wa0055பொதுச்செயலாளராக அவரை நியமிக்க தீர்மானத்தில் அம்சம் இடம் பெற வில்லை.
5 ஆண்டுகள் தொடர்ச்சியாக அதிமுகவில் உறுப்பினராக இருந்தால்தான், அவர் பொதுச்செயலாளராக முடியும் என்பது விதிமுறை. எனவே சட்டimg-20161229-wa0047விதிகளை திருத்தும்வரை சசிகலா தலைமையிலேயே அதிமுக இயங்கு ம் என்று மட்டும் குறிப்பிட பொதுக்குழு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.img-20161229-wa0050சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த‍தை முதலமைச்ச‍ர் பன்னீர்செல்வம் அவர்களே செய்தியாளர்களுக்கு படித்து காட்டினார்.
சமூக வலைதளங்களில் வெளியான பன்னீர்செல்வம் பற்றிய தகவல்களு க்கும் இன்று முதலமைச்ச‍ர் பன்னீர்செல்வம் வெளியிட்ட‍ தகவல்களுக்கு ம் அதிக முரண்பாடு இருக்கிறது.
பன்னீர்செல்வம் எதற்காக பனிந்தார், யாருக்காக பணிந்தார்? அல்ல‍து சமூக வலைதளங்களில் வலம் வந்த செய்திகள் பொய்யானவையா? என்பன போன்ற கேள்விகளுக்கான விடைகள் ஜெயலலிதா அவர்களின் மரணத்தை போலவே மர்ம்மாகவே இருக்கிறது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...