Saturday, January 28, 2017

திருப்பதி, யாருக்குச் சொந்தம்? தமிழர்களுக்கா, ஆந்திரர்களுக்கா?

`தமிழ்நாடு’ உருவாவதற்குமுன், தமிழகத்தின் எல்லைகளை மீட்பதற்காகச் சிலம்புச் செல்வர் ம.பொ.சிவஞானம் நடத்திய போராட்டங்கள் வரலாற்று முக்கியம் வாய்ந்தவை. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, தமிழ் நாடும், ஆந்திரமும் ஒன்றாக இணைந்த `சென்னை மாகாணம்’ இருந்தது. தமிழ் நாட்டின் சில பகுதிகள், திரு வாங்கூர் கொச்சி சமஸ்தானத்தில் அடங்கியிருந் தன.
சங்க கால இலக்கியங்களில், தமிழ்நாட்டின் வட எல்லை திரு வேங்கடம் (திருப்பதி) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வெள்ளையர் ஆட்சியில் கூட, 1911 ஏப்ரல் வரை, திருப்பதி மலை வட ஆற்காடு மாவட்டத்தில்தான் இருந்து வந்தது.
ஆனால், தமிழகத்திற்கும், ஆந்திரத்திற்கும் எல்லைச் சிக்கலைத் தோற் றுவிக்கும் எண்ணத்துடன், வட ஆற் காடு மாவட்டத்தில் இருந்து சித்தூர், கங் குந்திக்குப்பம், திருத் தணி, புத்தூர், பல்லவ னேரி, காளத்தி, சந்திரகிரி (திருப்பதி) ஆகிய தாலு காக்களையும், தெலு ங்கு பேசப்படும் கர்நூல் மாவ ட்டத்தில் இருந்து மதனப்பள்ளி, வாயல்பாடி ஆகிய இரண்டு தாலுகாக்களை யும் பிரித்து சித்தூர் மாவட்டம் என்றபெயரில் இருமொழி மாவட்டத்தை உருவாக்கினார் கள்.
சித்தூர் மாவட்டம் அமைக்கப்பட்ட பிறகும், பல ஆண்டுக்காலம் வேலூர்தான் அதன் தலைநகரமாக இருந்தது. திருப்பதி வைணவ த்திருத்தலமாக இருந்ததாலும், ஆந்திரர்களுக்கு அதுவே பிரதான க்கோவிலாக விளங்கியதாலும், மெல்ல மெல்ல ஆந்திரர்களின் ஆதிக்கத்திற்குச் சென்று விட்டது.
இதையெல்லாம் உணர்ந்திருந்த ம.பொ.சி., இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு மறுநாள் (16-8-1947) திருப்பதிக்குத் தொண்டர் படையுட ன் சென்று, “திருப்பதி தமிழர்களு க்கே உரியது” என்று ஆர்ப்பாட்டம் நடத்தினார். “கிராமணியே, திரும்பிப்போ” என்று ஆந்திரர்கள் எதிர்ப் போராட்டம் நடத்தினார் கள். இதைத்தொடர்ந்து, “திருப்பதி யாருக்குச் சொந்தம்? தமிழர்க ளுக்கா, ஆந்திரர்களு க்கா?” என்ற விவாதம் எழுந்தது.
“திருப்பதி தமிழ்நாட்டுக்கே சொந்தம்” என்று ம.பொ.சி. தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். “தமிழர்களுக்கு திருப்பதி கிடைக்காது. தமிழர்களிட மிருந்து சென்னையையும் பறிப் போம்” என்றார், ஆந்திரத் தலைவர், என்.ஜி.ரங்கா. அவர் சொன்னது உண் மையாயிற்று. சென்னை மாகாணத் திலிருந்து ஆந்திராவைப்பிரித்து, தனி ஆந்திர மாநிலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தபோது, சென்னை நகரம் தங்களுக்கு வேண் டும் என்று ஆந்திரர்கள் கோரினர்.
இதற்கு எதிராகத் தமிழகமே பொங்கி எழுந்தது. “தலையைக் கொடுத்தேனும் தலைநகரைக் காப்போம்” என்று முழங்கினார், ம.பொ.சி. “சென்னை நகரம், தமிழ்நாட்டுக்கே சொந்தம்” என்று சென்னை மாநகராட்சியும் தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை நகரம் தங்களுக்குக் கிடைக்காது என்பதைத் தெரிந்து கொண்ட ஆந்திரர்கள், சில காலத்திற்கு தற்காலிகமாக சென்னையைத் தங்கள் தலைநகராக வைத்துக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.
அந்தக் கோரிக்கையும் ஏற்கப்பட வில்லை. இந்த நிலையில், சித் தூர் மாவட்டம் முழுவதும் ஆந்திராவுக்கு போய்விடக்கூடிய நிலைமை உருவாயிற்று. அதை எதிர்த்து 1953 மே மாதத்தில் திருத்தணியில் ம.பொ.சி. மறியல் போராட்டம் நடத்தினார். மறியல் செய்தவர்களைக் கலைக்க போலீசார் தடியடி நடத்தினர்.
எல்லையை மீட்கும் வரை போ ராட்டம் நீடிக்கும் என்று, ம.பொ. சி. அறிவித்திருந்தார். ராஜாஜி விடுத்த வேண்டுகோளின்படி, போரா ட்டம் தற்காலிகமாக நிறுத் தி வைக்கப்பட்டது. திடீரெ ன்று திருத் தணியில் வாழும் தமிழ் இளைஞர்கள், ஆந்திரர்களைக் கண்டித்து வன்முறையில் இறங் கினர். ஊராட்சி மன்ற கட்டிடத்துக்குள் புகுந்து வானொலிப் பெட்டி யை உடைத்தனர்.
ரெயில் நிறுத்தப் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அதனால் போலீ சார் தடியடி நடத்தினர். வன் முறையில் ஈடுபட வேண்டா ம் என்று ம.பொ.சி. வேண் டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து அமைதி திரும் பியது. வடஎல்லைப் பிரச்சி னைக்குத் தீர்வு காண்பதற்கு மத்திய அரசு முன்வராததால், ஜுலை 2-ந்தேதி திருத்தணி க்கு ம.பொ.சி. சென்றார். தடை உத்தரவை மீறி, மறுநாள் மறியல் செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.
கோர்ட்டில் அவருக்கு 6 வார ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது . சுதந்திரப்போரில் 6 முறை சிறை சென்ற ம.பொ.சி., இப்போது 7- வது முறையாக சிறை சென்றார். இதற்கிடையே, பிரதமர் நேருவு டன் அன்றைய முதல்- அமை ச்சர் ராஜாஜி பேச்சு வார்த் தை நடத்தியதன் பேரில், “சித்தூர் மாவட்டத்தில் தமிழர் கோரும் தாலுகாக்க ள் பற்றி விசாரிக்க, விரைவி ல் எல்லைக் கமிஷன் அமைக்கப் படும்.
இதற்காகப் போராட்டம் அவ சியம் இல்லை” என்று நேரு அறிக்கை விடுத்தார். அதைத் தொட ர்ந்து 5 நாள் சிறைவாசத்துக்குப்பின் ம.பொ.சி. விடுதலையானார். திருவாங்கூர் – கொச்சி சமஸ்தான த்தில் இணைந்திருந்த தமிழ்ப் பகுதிகளை மீட்க, 1954 ஜுன் மாதத் தில் காங்கிரஸ் தலைவரும், பாரா ளுமன்ற உறுப்பினருமான நேச மணி தலைமையில் போராட்டம் நடந்து வந்தது.
இந்தப் போராட்டத்தில் நேச மணி சிறை சென்றார். சிறையிலிருந் த நேச மணி, ம.பொ.சிக்கு தந்தி அனு ப்பினார். மூணாறு விரைந்தார், ம.பொ.சி. அவர் முன்னிலையில் சத்தியாக்கிரகப் போராட்டம் தொடர்ந்து நடந்தது. ஆகஸ்ட் 11-ந்தேதி, தென் திருவாங்கூரில் உள்ள கல்குளம் தாலு காவில், நேசமணி கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மாபெரும் ஊர்வலம் நடந்தது. 

அந்த ஊர்வலத்தைக் கலைக்க மலபார் ரிசர்வ் போலீஸ் துப்பாக் கி சூடு நடத்தியதில் 11 தமிழர்கள் உயிரிழந்தனர். இத னால் திரு வாங்கூர் – கொச்சி மாநிலத்தில் பல்வேறு இடங்களில் கலவரங் கள் நடந்தன. அதைத் தொடர்ந்து 1955 பிப் ரவரி இரண்டாவது வாரத்தில் பட்டம் தாணுப்பிள்ளை யை முதல்வராகக் கொண்ட பிரஜா சோசலிஸ்டுக் கட்சி மந்திரி சபை கவிழ்ந்தது.
எல்லைகளைத் திருத்தி அமைக்க மத்திய அரசு அமைத்த பசல் அலி கமிஷன் 1955 இறுதியில் தனது தீர்ப்பை மத்திய அரசிடம் வழங்கியது. திருவாங்கூர் கொச்சியில் உள்ள தமிழ் வழங்கும் தாலுகாக்களான செங்கோட் டை, கல்குளம், விளவங்கோடு, தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய ஐந்து தாலுகாக்களை தமிழ் நாட்டுக்கு வழங்க வேண்டும் என்று கமிஷன் தீர்ப்புக் கூறியது.
75 சதவீதம் தமிழர்கள் வாழும் தேவி குளம் – பீர்மேடு தாலுகாக் களை தமிழகத்துடன் சேர்க்க கமிஷன் மறுத்து விட்டபோதிலும், இந்தியாவின் தென் எல்லையான குமரிமுனை தமிழகத்திற்கு கிடைத்தது. தமிழக – ஆந்திர எல்லை ப் பிரச்சினையைச் சமரசப் பேச்சு நடத்தித் தீர்த்துக் கொள்வதாக இரு மாநில அரசுகளும் கூறிவிட்டதால், அதுபற்றிப் பசல் அலி கமிஷன் முடிவு எதையும் கூறவில்லை.
தமிழக – ஆந்திர அரசுகளின் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற் படா விட்டால் மீண்டும் எல்லைக் கமிஷ ன் அமைக்கவேண்டும் என்று நீதிபதி பசல் அலி குறிப்பிட்டிருந்தார். எல் லைப் பிரச்சி னையில் தமிழக – ஆந்திர அரசுகள் இடையே உடன் பாடு ஏற்படாத தால் படாஸ்கர் தலைமையில் மீண்டும் கமிஷன் அமைக்கப்ப ட்டது.
1-4-1960-ல் படாஸ்கர் வழங்கிய தீர்ப்பின்படி, திருத்தணி தாலுகா முழுவதும் தமிழ்நாட்டுக்குக் கிடைத்தது. புத்தூர், சித்தூர் தாலுகா க்களில் இருந்து சில கிராமங்கள் தமிழ்நாட்டுக்கு மாற்றப்பட்டன.

முடி கொட்டுகிறதா? தோலில் பிரச்னைகளா? மூட்டு வலியா? முடக்குவாதமா?

முடி கொட்டுகிறதா? தோலில் பிரச்னைகளா? மூட்டு வலியா? முடக்கு வாதமா? இப்படி எந்தப் பிரச்னையானாலு ம் மணக்க மணக்க மருத்துவம் செய்கிறார் கீதா அசோக். ஊசி போட்டு, மாத்திரை கொ டுத்து மருத்துவம் செய்வார்கள். அது என்ன “மணக்க மணக்க மருத்துவம்’ என்கி றீர்களா? சென்னை வடபழனியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் அரோமா தெரபி ஸ்ட்டான கீதா அசோக்கைச் சந்தித்து இதுபற்றிக் கேட்டோம். அவர் அரோமா தெரபி கற்றுக் கொள்ள ஆஸ்திரேலியாவி ல் உள்ள கல்வி நிறுவனம் உட்பட, 7 கல்வி நிறுவனங்களில் பயிற்சி பெற்றிருக் கிறார்.
எந்தவொரு கோயிலுக்கும் போகும்போது மனம் சட்டென அமைதி யாகிவிடுகிறதே… அது ஏன்? கோயிலின் கற்பூர வாசனை, ஊதுபத்தி வாசனை, சாம்பிரா ணி வாசனை, மலர்களின் வாசனை நம் மனதைச் சட்டென்று அமைதி ப்படுத்திவிடுகிறது. எவ்வளவு பிரச் னைகளோடு நாம் கோயிலுக்குப் போ னாலும் மன அமைதியோடு திரும்புகி றோம்.
வாசனையை நாம் நுகரும்போது அது மூளையில் லிம்பிக் சிஸ்டத்தை அடைகிறது. நமது உடலின் அனைத் துச் செயல்களையும் கட்டுப்படுத்தும், ஒழுங்குபடுத்தும் லிம்பிக் சிஸ்ட ம், அந்த வாசனைக்கேற்ற தூண் டல்களை அளிக்கிறது. அந்தத் தூண்ட ல்களினால் உடலில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. நோய்கள் குணமா கின்றன.
தலைவலி வந்தால் தைலத்தை யோ, யூகலிப்டஸ் ஆயிலையோ தடவுகிறோம். காபி, டீ குடிக்கிறோ ம், தலைவலி போய்விடுகிறது. தலைவலி தைலத்தில், காபியில், டீயில் உள்ள வாசனை தலைவலி யைக் குணமாக்க உதவுகிறது. தலை வலி தைலத்தில் மெந்தால், கேம்ஃபர், பைன், யூகலிப்டஸ் போ ன்ற வாசனைப் பொருட்கள் உள்ள ன.
இந்த வாசனை திரவிய மருத்துவம் என்பது உலகுக்குப் புதியதல்ல. பைபிளில் பரிமள தைலம் என்ற ஒன்று குறிப்பிடப்படுகிறது.
எகிப்தில் பிரமிடுகளின் உள்ளே இறந்தவர்களின் உடலைப் பல்லா யிரக் கணக்கான ஆண்டுகளாகக் கெட்டுப் போகாமல் பதப்படுத்தி வைத்திரு ந்தார்கள் என்று கேள்வி ப்பட்டிருப்பீர்கள். அப்படிப் பதப் படுத்த உதவிய வை சிடர்வுட், மிர் போன்ற வாசனை திரவியங்கள். சிடர்வுட் எண்ணெய் உடலின் தசைகளை உறுதியாக்கும். மிர் தைலம் பாக்டீரியாக்களின் தாக்குதலி லிருந்து காக்கும். இவ்விரண்டும் பயன்படுத்தப்பட்டதால்தான் 4 ஆயி ரம் ஆண்டுகள் ஆனாலும் இறந்தவரி ன் உடல்கள் கெட்டுப்போகாமல் இருந் தன.
எல்லா மருந்துப் பொருட்களு ம் தாவ ரங்களில் இருந்துதான் தயாரிக்கப்படு கின்றன. தாவர ங்களின் வேர், பட்டை, பூ, இலை, பழத்தோல், பழம், பிசின் எல்லாவற்றிலும் இருந் து அரோமா தெரபிக்கான எண் ணெய்களை தயாரிக்கிறார்கள் .
பாம்பு கடித்துவிட்டால் பலர் பயத்தி லேயே இறந்துவிடுவார்கள். பாம்பு கடித்த இடத்தில் லாவண்டர் எண் ணெய்யைத் தடவினால் உடலில் விஷம் பரவாது.
அரோமா தெரபியில் நோய்களைக் குணப்படுத்த நான் வாசனை எண் ணெய்களைப் பயன்படுத்துகிறேன். அவற்றின் வாசனைகளை நுகர்வ தால் உடலில் மாற்றங்கள் ஏற்படுகி ன்றன. அதுமட்டுமல்ல, வழக்கமாக நாம் பயன்படுத்தும் எண்ணெய்க ளை உடலில் தடவும்போது அவை உடலுக்குள் போகாது. ஆனால் அரோமா எண்ணெய்கள் மிகவும் நுண்ணியவை. எனவே, அவற்றை தோலின் மேல் பகுதியில் தடவி னால், தோலுக்குள் புகுந்து, உடலுக்குள் – எலும்பு மஜ்ஜை வரை – ஊடுரு விச் சென்று நோயைக் குணப்படுத்து கின்றன.
உடலுக்குள் புகுந்து 2 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை செயல்பட்டு உடலி ன் உட்புறத்தில் உள்ள நச்சுப் பொரு ட்களை முதலில் வெளியேற்றுகின்ற ன. நச்சுப் பொருட்கள் வெளியேறிய வுடன் உடல் நலமாகத் தொடங்குகி றது.
அனைத்து முடி பிரச்னைகளுக்கும், தோல் சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக் கும் நல்ல தீர்வாக அரோமா தெரபி உள்ளது.
இந்தக் காலத்தில் இளம் வயதிலேயே முடி கொட்டுதல், நரைத்துப் போ தல், பொடுகு பிரச்னை அதிகமாக உள் ளது. இதற்குக் காரணம் நமது வாழ்க் கைமுறை மாறியதுதான். அதிகமான படிப்புச் சுமை மன அழுத் தத்துக்கு முக் கியமான காரணம். அதற்கடுத்து நமது சுற்றுப்புறச் சூழல் கெட்டுவிட்டது. காற்றில் புகை அதிகளவில் உள்ளது. அந்தக்காற்றையே நாம் சுவாசிக்கிறோ ம். குடிக்கும் தண்ணீரில் கூட ரசாயனப் பொருட் கள் உள்ளன. இதனால் இளம் வயதிலேயே அதிக அளவில் முடி கொட் டுகிறது.
தைராய்டு சுரப்பியின் செயல் குறைபாட்டாலும் கூட அதிக அளவில் முடி கொட்டுகிறது. முகத்தில், கழுத்தில் திட்டுத்திட்டாக கறுப்பு நிறத்தி ல் மங்கு வருகிறது. இவற் றை அரோமா தெரபி மூலம் சரி செய்ய முடி யும். அது போன்று மூட்டுவலி, முடக் குவாதம் போன்றவற்றுக்கு ம் அரோமா தெரபி நல்ல மாற்று மருத்துவம் ஆகும்.
ஆட்டிசம் பாதிப்புள்ள குழந் தைகளின் திறன்களை மேம் படுத்த அரோ மா தெரபி மிகவும் உதவுகிறது. லாவண்டர், ஸ்பைக் கினார்டு, நெரோலி போன்ற வாசனை திரவியங்களின் சில துளிகளைத் தண்ணீரில் கலந்து ஆட்டிசம் பாதிப்புள்ள குழந்தைகளின் அறையில் ஸ்பிரே செய் தால் அவர்களுடைய மனம் அமைதியாகி விடும். அவர்களும் அமைதியாகி விடுவா ர்கள். மனம், புத்தி இரண்டுக்கும் ஒருங்கி ணைப்பு இல்லாததே ஆட்டிசம் குழந்தைக ளின் பிரச்னைக்குக் காரணம். இதில் மன தை அமைதிப்படுத்த அரோமோ தெரபி உத வும்.
பொதுவாக அரோமா தெரபி என்றால் சில வாசனை திரவியங்களைத் தடவுவது என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார் கள். பல அழகு நிலையங்களில் கூட எந்த வித அடிப்படையும் இன்றி வாசனை திர விய ங்களைப் பயன்படுத்துகிறார்கள். உண்மையில் ஒரு நோயின் மூல காரணம் எது என்று தெரிந்து கொண்டு, பொருத்தமான வாசனை திரவியங்களை உரிய முறையில் பயன்படுத்துவதுதான் அரோமா தெரபி.
முடி கொட்டும் பிரச்னைக்காகவோ, இளம் நரை பிரச்னைக்காகவோ, மூட்டு வலிக்காக வோ என்னிடம் வருபவர்களின் உடல் நிலையை முழுவதுமாக ஆராய்ந்து பார்த்து த்தான் மருத்துவம் செய்வேன். உதார ண மாக, ஹார்மோன் குறைபாடுகளினால் முடி கொட்டுகிறது எனில், ஹார்மோன் பிரச்னை களைச் சரி செய்யும் மருத்துவத்துக்குப் பரிந்துரைப்பேன். உடலுக்குத் தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை எடுத்துச் சொல்வேன். அதற்குப் பிறகுதான் வாசனை திரவியங்களைப் பயன்படுத்தி மருத்துவம் செய்வேன்.
சிலருக்கு வாசனைத் திரவியங்களை நுகர்வதே அலர்ஜியாக இருக்கும். அவர்களுக்கு அரோமா தெர பி செய்ய முடியாது. இதய நோய்கள் உள்ளவர்களு க்கு அரோமா தெரபி செய்யமாட்டேன். மூச்சுத் திணறல் உள்ள வர்கள், ஹைபர் டென்சன் உள்ளவ ர்களுக்கு அரோமா தெரபி ஒத்து வராது” என்கிறார் கீதா அசோக்.

தக்காளியை விதையுடன் சேர்த்து பசைபோல் அரைத்து 30 நிமிடங்கள் கழித்து. . . அதை எடுத்து…

தக்காளியை விதையுடன் சேர்த்து பசைபோல் அரைத்து 30நிமிடங்கள் கழித்து…  அதை எடுத்து…

தக்காளியை விதையுடன் சேர்த்து பசைபோல் அரைத்து 30 நிமிடங்கள் கழித்து. . .  அதை எடுத்து…
தக்காளி, பார்ப்ப‍தற்கு சிவந்த நிறத்துடன் அழகாகஇருக்கும்.  வெங்காயத் தை சேர்க்காமல்கூட
உணவு சமைப்ப‍வர்கள் உண்டு. ஆனால் இந்த தக்காளியை சேர்க்காமல் உணவு சமைப்ப‍வர்கள் யாரும் இல்லை. இந்த தக்காளியை அப்ப‍டியே சாப் பிட்டாலோ அல்ல‍து சமையலிலே கலந்து சாப்பி ட்டாலோ நமக்கு அளப்பறிய நன்மை கிட்டும் என்ப து தெரியும். ஆனால் இந்த தக்காளியைகொண்டு உங்கள் சரும‌த்தின் அழ கை மெருகூட்ட‍ முடியுமா? என்றால் அது முடியும்.
நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் நன்றாக பழுத்த தக் காளியை அதன் விதையுடன் சேர்த்து நன்றாக பசைபோ ல அரைத்து வைத்துக் கொண்டு, இதனை மாஸ்க் போன் று உங்கள் சரும‌த்தில் தடவி சுமார் 30 நிமிடங்கள் வரை அப்ப‍டியே விட வேண்டும். அதன்பின் 31 ஆவது நிமிடத்தில் சுத்த‍மான தண்ணீர் கொண்டு நன்றாக உங்கள் சருமத்தை கழுவ வேண்டும். இதே போன்று ஒரு நாளுக்கு 2 (அல்) 3முறை செய்துவந்தாலே உங்க ள் முகம்  சருமத்தில் உள்ள எண்ணெய் பசை, கருமை நிறம் மறைந்து உங் கள் சருமம் மிகுந்த பொலிவுடன் அழகு மிளிரும்.

தற்போது புழக்க‍த்தில் உள்ள‍ ரூபாய் நோட்டுக்கள் எதுவும் செல்லாது – இந்திய ரிசர்வ் வங்கி பகீர் அறிவிப்பு

கடந்த 2005ம் ஆண்டுக்கு முன் வெளியிடப்பட்டதும் தற்போ து புழக்க‍த்தில் உள்ள‍ ரூபாய் நோட்டுகள் எதுவும் செல்லாது என ரிசர்வ் வங்கி அதிரடியாக நேற்று அறிவித்துள்ளது. மார்ச் 31 ம் தேதி வரை இந்த நோட்டுக்களை பயன் படுத்த முடியும். அதன் பின் இவை செல்லாது. இந்த நோட்டுக்களை மாற்றிக்கொள்ள ஏப்ரல் 1ம் தேதியி ல் இருந்து 3 மாதம் அவகாசம் அளி க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ரிசர் வ் வங்கி வெளியிட்ட அறிக்கையி ல் கூறியிருப்பதாவது:கடந்த 2005 ம் ஆண்டுக்கு முந்தைய ரூபாய் நோட்டுக்களை திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது. தற்போது புழக்கத்தில் உள்ள இந்த
நோட்டுக்கள் வரும் மார்ச் 31ம் தேதிக்கு பிறகு திரும்ப பெறப்படும்.
2005ம் ஆண்டுக்குமுன்பு வெளியிடப்பட்ட ரூபாய் நோட்டுக்களின் பின்புறம், அந்த நோட்டு எந்த ஆண் டு அச்சிடப்பட்டது என்ற விவரம் இருக்காது. இதை வைத்து பொதுமக்கள் எளிதாக அதை அடையா ளம் கண்டு கொள்ளலாம். இவ்வாறு ஆண்டு குறிப்பிடப்ப டாத ரூபாய் நோட்டுக்கள் வைத்திருக்கும் பொதுமக்கள், ஏப் ரல் 1ம் தேதி முதல் ஜூன் இ றுதிவரை வங்கிகளுக்கு செ ன்று மாற்றிக்கொள்ளலாம். இந்த காலகட்டத்தில் நோட் டுக்களை மாற்ற எந்த ஆவ ணமும் தேவையி ல்லை.
வங்கி வாடிக்கையாளர்களு ம், வாடிக்கையாளர் அல்லாதவர்களும் இவ்வாறு ரூபாய் நோட்டுக்களை மாற்றிக் கொள்ளலாம். வரும் ஜூலை 1ம் தே திக்கு பிறகு 10க்கும் அதிக மான ரூ.500 மற்றும் ரூ. 1000 நோ ட்டுக்களை மாற் றுபவர்கள், தங்களது அ டையாள சான்று, இருப்பி டச்சான்றுடன், உரிய ஆவ ணங்கள் சமர்ப்பித்து மாற் றிக் கொள்ளலாம். இந்த அறிவிப்பு குறித்து மக்கள் பீதியடைய வேண்டாம். ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்கு அவர்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு ரிசர்வ்வங்கி வெளியிட்ட அறிக்கை யில் கூறப்பட் டுள்ளது.
ரிசர்வ் வங்கி இவ்வாறு புழக்கத்தில் உள்ளபணத் தை மாற்றுவதும், வடிவ த்தை மாற்றி அமைப்பது ம் புதிதல்ல. 2011ம் ஆண் டு 25 பைசா நாணயங்க ள் செல்லாது என ரிசர்வ் அறிவித்தது. பண வீக்கம், விலைவாசி உயர்வு காரணமாக சில்லரை நாணயங்களின் புழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. அதிலும் குறைப் பாக 25 பைசா நாணயங்க ளுக்கு கடந்த சில ஆண்டு களாக மதிப்பின்றி போய் விட்டது.சில கடைக்காரர்க ளும் அதை வாங்க மறுத்து விட்டனர்.
அதுமட்டுமின்றி, 25 பைசா மதிப்புக்கு எந்த பொருளு மே கிடைக்காது என்ற நிலை உருவானது. இதனால் இந்த நாணயங்களின் தயாரிப்பையே ரிசர்வ் வங்கி நிறுத்தி விட்ட து. இந்த அறிவிப்பை தொடர்ந்து மக்கள் மூட்டை மூட்டை யாக நாணயங்களை கொண்டு வந்து மாற்றிக்கொண்டனர் என்பது கு றிப்பிடத்தக்கது.
* 2005க்கு முன்பு வெளியிட்ட எல் லா ரூபாய் நோட்டுகளும் 2014 மார்ச் 31க்கு பிறகு வாபஸ்.
* கருப்பு பணம், கள்ளநோட்டுகள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை.
* ஏப்ரல் 1ம் தேதி முதல் வங்கிக ளில் இந்த ரூபாய் நோட்டுக ளை மாற்றிக் கொள்ளலாம்.
* பொதுமக்கள் பீதி அடைய வே ண்டாம். மாற்றத்துக்கு ஒத்துழை ப்பு தர வேண்டும்.
* ஜூலை 1ம் தேதி முதல் ரூ.500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றும்போது, 10 நோட்டுகளுக்கு மேல் இருந்தால் அடை யாளம், முகவரி ஆதாரம் தர வேண்டும்.
* புதிய ரூபாய் நோட்டுகளி ல் கூடுதல் பாதுகாப்பு அம் சங்கள் உள்ளதால், போலி நோட்டுகளை புழக்கத்தில் விடமுடியாது.
* இப்போது, 5, 10, 20, 50, 100, 500, 1000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன.

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)

26 நோய்களுக்கும் தீர்வளிக்கும் ஒரே மூலிகை காய்! – தினசரி ஒரு ஸ்பூன் போதுங்க.. (நம்புங்க சார்)
சித்த‍ மருத்துவம் குறிப்பிடும் எந்த ஒரு மூலிகையிலும் நீங்கள் எடுத்துக் கொண்டாலும் அதில் 
பக்க‍விளைவுகளோ அல்ல‍து பின் விளைவுகளோ கிடை யாது. அந்த வரிசையில் 26 (இருபத்தி ஆறு) விதமான நோய்களுக்கும் ஒரே  மருந்தாக தீர்வளிக்கும் வல்ல‍மை கொண்ட ஓர் அதிசய மூலிகைத்தான் இங்கு நாம் பார்க்க‍ விருக்கிறோம்.
இம்மூலிகை காயால் குணமாகும் நோய்களை முதலில் பார்ப்போம்.
1. கண் பார்வைக் கோளாறுகள்
2. காது கேளாமை
3. சுவையின்மை
4. பித்த நோய்கள்
5. வாய்ப்புண்
6. நாக்குப்புண்
7. மூக்குப்புண்
8. தொண்டைப்புண்
9. இரைப்பைப்புண்
10. குடற்புண்
11. ஆசனப்புண்
12. அக்கி, தேமல், படை
13. பிற தோல் நோய்கள்
14. உடல் உஷ்ணம்
15. வெள்ளைப்படுதல்
16. மூத்திரக் குழாய்களில் உண்டாகும் புண்
17. மூத்திர எரிச்சல், கல்லடைப்பு
18. சதையடைப்பு, நீரடைப்பு
19. பாத எரிச்சல், மூல எரிச்சல்
20. உள்மூலம், சீழ்மூலம், ரத்தமூலம், பௌத்திரக் கட்டி
21. ரத்தபேதி
22. சர்க்கரை நோய், இதய நோய்
23. மூட்டு வலி, உடல் பலவீனம்
24. உடல் பருமன்
25. ரத்தக் கோளாறுகள்
26. ஆண்களின் உயிரணுக் குறைபாடுகள்
மேற்கண்ட 26 வகையான நோய்களுக்கும் ஒரே மருந்து சித்த‍ மருத்துவ த்தில் மட்டுமே உண்டு. இது ரொம்ப எளிமைதானுங்க  
நாட்டு மருந்து கடைகளில் கடுக்காயை வாங்கி அதனுள் இருக்கும் பருப்பை நீக்கிவிட்டு, அதன்பிறகு அதனை நன் றாக தூள் தூளாக அரைத்து வைத்துக் கொண்டு, தினமும் ஒரு ஸ்பூன் அளவு வீதம் இரவு உணவுக்குப்பின் சாப்பிட்டு வர, மேற்கண்ட 26நோய்களில் இருந்துமுற்றிலும் விடுபட் டு, நோயில்லா பெரு வாழ்வுடன் இளமையாகவும் வாழ்ந்து வாழ்க்கையை சுகமாக அனுபவியுங்கள்

தற்போதுள்ள‍ உங்களது உடல்நிலை சித்த மருத்துவரிடம் காட்டி, மேற்சொன்ன‍ மூலிகை கா(ய்)யினை சாப்பிடலாமா என்பதை கலந்தாலோசித்த பிறகு உட்கொள்ள‍வும்.

சிறுநீரக நோய்கள் நீங்க மூலிகை மருத்துவம்:-

*இசங்கு இலையுடன் சீரகம் சேர்த்து அரைத்து ஐந்து கிராம் அளவுக்கு காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து 21 நாட்களுக்கு சாப்பிட்டால் ரத்தம் சுத்தம் ஆகும்.
*உளுந்தை முதல் நாள் இரவு தண்ணீ ரில் ஊற வைக்கவும். அந்தத் தண்ணீ ரை மறுநாள் காலையில் குடித்தால் சிறு நீரகம் தொடர்பான நோய்களில் இருந்து விடுபடலாம்.
*எலுமிச்சன் துளசி, பெருஞ்சீரகம் இரண்டையும் சம அளவில் சேர்த்து பொடி செய்து சாப்பிட்டால் சிறுநீரக கல் கரையும்.
*கடுக்காய், அதிமதுரம், வெள்ளரி விதை மூன்றையும் சம அளவில் எடு த்து பொடிசெய்து தினமும் சாப்பிட்டு வந்தால் சிறுநீரக நோய்கள் குணமா கும்.
*கருவேப்பிலையை பொடிசெய்து தினமும் சாப்பிட்டால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சிறுநீரகம் பழுதடைவதும் தடுக்கப்படும்.
*காசினி கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால் சிறுநீரக கல் கரையும்.
*கீழாநெல்லி இலைச்சாற்றுடன் கற் கண்டு சேர்த்து சாப்பிட் டால் சிறுநீரக பாதிப்பு சரியாகும்.
*சாணாக்கி கீரையை கஷாயம் வைத்துக் குடித்தால் சிறுநீரக கோளாறுகள் குணமாகும்.
*சோம்பு, பார்லி, மஞ்சள் மூன் றையும் ஒன்றாக சேர்த்து கஷாய ம் காய்ச்சி குடித்தால் நல்லது.
*டர்னிப் கீரையுடன் சீரகம், சோ ம்பு, சதகுப்பைக் கீரை, மஞ்சள் ஆகியவற்றை சேர்த்து கஷாயமா க்கி குடித்தால் சிறுநீரக நோய்த் தொற்று குணமாகும்.

ஜல்லிக்கட்டு… இமாலய எழுச்சியுடன் வெற்றிபெற வித்திட்ட‍ மாணவர்களுக்கு நன்றி!

ஜல்லிக்கட்டு…  இமாலய எழுச்சியுடன் வெற்றி பெற வித்திட்ட‍ மாணவர்களுக்கு நன்றி!

ஜல்லிக்கட்டு…  இமாலய எழுச்சியுடன் வெற்றிபெற வித்திட்ட‍ மாணவர் களுக்கு நன்றி!
நம்பாரம்பரிய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்திருக்கும் ஜல்லிக்கட் டு (ஏறு தழுவுதல்) மீது
அந்நியர்களின் முயற்சியால் விதிக்க‍ப்பட்ட‍ தடையினை நிரந்தரமாக நீக்கி, ஜல்லிக்கட்டு தொடர்ந்து நடைபெறவும்..  சென்னை மெரினாவில் தொடங்கிய மாணவர்களின் எழுச்சிப் போராட்ட‍ம் இளைஞர்களையும், பெண்களையும், உலகமக்க‍ளையும் கவரந்தது. இதன் காரணமாக மத்திய மாநில அரசுகளுக்கு அழுத்த‍ம்தரப்பட்டு, அதன் காரணமாக நமது தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் டெல்லி சென்று பிரதமர் நரேந்திர மோடி அவர்களை சந்தித்து, மத்திய அரசின் துணையோடு  ஜல்லிக்கட்டு மீதான தடை நிரந்தரமாக நீக்க‍ப்பட்டுவிட்ட‍து, இனி தொடர்ந்து ஜல்லிக் கட்டு நடைபெறும் வழியில் அளுநரின் ஒப்புதலோடு நேற்று மாலை சட்ட‍ சபையில் அனைத்து கட்சிகளின் ஆத‌ரவோடு சட்ட‍ம் நிறைவேற்ற‍ப்பட்ட து. இந்த செய்தியை தமிழக முதல்வர் தெரிவித்தார். இதனையே  ஜல்லிக் கட்டு ஆதரவு அமைப்பினரும் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்த‍னர். இதன் காரணமாக ஜல்லிக்கட்டு வரலாற்றில் இடம்பெற வேண்டிய இளைஞர்களின் மாபெரும் எழுச்சியினால் வெற்றி பெற்ற‍து.
இந்த இமாலய வெற்றிக்கு வித்திட்டும், கலந்துகொண்ட மாணவ, இளை ஞர்களின் பெரு எழுச்சியால் உலகமே நம் தமிழகத்தை அன்னாந்து பார்த் து வியந்து பாராட்டியுள்ள‍னர். அந்த அறப்போராட்ட‍தில் பங்கெடுத்த பெண்களின் கற்புக்கும் காவலனாக, மிகுந்த கண்ணியத்தோடும், தான் கொண்ட லட்சியத்தில் உறுதியோடும், ஒற்றுமையுடனும் மிகுந்த ஒழுக்க முடனும் அறவழியில் போராடிய  அனைத்து மாணவ சமுதாயத்திற்கும், இளைஞர்களுக்கும், பெண்களுக்கும், திருநங்கைகளுக்கும், அறப்போரா ளிகளுக்கு வேண்டிய உணவு மற்றும் அடிப்படை தேவைகளுக்காக பண த்தை அள்ளித் தந்த‌ கொடைவள்ளல்களுக்கும், சேவைநோக்குடன் இருந் த மருத்துவர் களுக்கும்,  வழக்கறிஞர்களுக்கும், சிறுவர் சிறுமிகளுக்கும் பொதுமக்கள் அனைவருக்கும், சமூக வளைதளம், ஊடகம் மற்றும் பத்தி ரிகையாளர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளை அனைவரது பாதங்களையும் பணிந்து  என் தமிழினத்தின் சார்பாகவும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜல்லிக்கட்டு மீதான தடையை நிரந்தரமாக நீக்க‍ உடனடி நடவடிக்கை எடுத்த‍ தமிழக முதல்வர், பிரதமர் மற்றும் மத்திய மாநில அமைச்ச‍க அமைச்ச‍ர்களுக்கும், அதிகாரிகளுக்கும்  அரசுகளுக்கும் இந்நேரத்தில் இதய ப்பூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...