Monday, February 27, 2017

நெற்றிக்கண்திறப்பினும் குற்றம் குற்றமே.

 நான் மோடியின் தீவிர ஆதரவாளன் என்றாலும் சில கேள்விகள் என்னை உறுத்தி கொண்டிருக்கின்றன.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை கொண்டு வருவதற்காகவே காவிரிமேலாண்மை வாரியத்தை உச்ச நீதிமன்றம் அமைக்க சொல்லியும் எதிர்ப்பு தெரிவித்தார்களா. கர்நாடகவே தண்ணீர் தருகிறேன் என்று சொன்னாலும் பாஜக அரசு எதிர்த்திருக்கும் என நினைக்கிறேன். காரணம் தண்ணீர் வந்து விட்டால் டெல்டா மாவட்டங்கள் பாசன வசதி பெறும். விவசாயத்தை அழித்து அதனால் மக்கள் தங்கள் நிலத்தை ஹைட்ரோகார்பனுக்கு பிரச்சனை இல்லாமல் சுமூகமாக ஒத்துழைப்பர் என்று கணித்திருப்பர் என்றே நினைக்கிறேன்.
உயர்மதிப்புள்ள பணத்தை அழித்து அதைவிட உயர்மதிப்புள்ள பணத்தை அச்சிடுவதால் கருப்பு பணம் அதிகரிக்க தானே செய்யும். ஆக கருப்பு பணத்தை ஆதரிக்கிறாரோ என்ற சந்தேகமும் வலுக்கிறது. முன்கூட்டியே திட்டமிட்டு 50, 100 ரூபாய் நோட்டுக்களை மட்டும் அச்சடித்திருந்தால் கருப்பு பணத்தை பிடித்திருக்கலாம். உயிரிழப்புக்களையும் மக்களின் சிரமங்களையும் தவிர்த்திருக்கலாம்.
உயர்மதிப்பு பணத்தை செல்லாது என்று அறிவிக்கும் திட்டத்தை முன்கூட்டியே அம்பானிக்கு தாரை வார்த்திரூப்பாரோ என எண்ணத்தோன்றுகிறது. காரணம் ஜியோ சலுகைகள். அதன் மூலம் அம்பானியின் கருப்பு பணத்தை காலி செய்ய கெடுவோ சலுகையோ வழங்கபட்டிருக்கலாம் என தோன்றுகிறது.
மாட்டிறைச்சி தவிர்க்ப்படவேண்டிய ஒன்று.மாற்றுகருத்து இல்லை. மாட்டிறைச்சிக்கு எதிராக பேசும் பாஜக அதை ஏற்றுமதி செய்வதை தடுக்க என்ன செய்துள்ளது. மாறாக மாட்டிறைச்சியை ஏற்றுமதி செய்யும் 3 நிறுவனத்திடம் இருந்து கட்சிக்கு நிதி வந்துள்ளது என ஊடகங்களில் செய்தி வந்துள்ளது.
தூய்மை இந்தியா திட்டத்திற்காக நம்மிடம் இருந்து வரிவசூலிக்கும் மத்தியஅரசு வெளிநாட்டு கழிவுகளை நம்நாட்டு கடலில் கொட்ட பணம் வாங்கி முயற்சித்து நீதிமன்றத்தில் குட்டு வாங்கியுள்ளது. கங்கை நதியை சுத்தம் செய்ய 2000 கோடி ஒதுக்கி அது என்ன ஆனதென்றே தெரியாமல் நீதிபதிகளின் கேள்விக்கு விடை தெரியாமல் பேந்த பேந்த முழித்துள்ளது.
இதுவெல்லாம் நடுநிலையாளனாக கேட்ட கேள்வி.
ஹிந்து மதஆதரவாளனாக ஒரு கேள்வி.
ராமர் கோவிலை இடித்து அங்கே கட்டப்பட்ட பாபர் மசூதியை இடித்ததை வரவேற்கிறேன். ஆனால் இதுவரையிலும் ராமர் கோவிலை மீண்டும் கட்டுவதற்கு ஒரு செங்கலை கூட இடவில்லை. ஆனால் ஒவ்வொரு தேர்தலின் போதும் ராமர் கோவில் பற்றி வாக்குறுதி. ராமர் பேரை சொல்லி ஹிந்துக்களை ஏமாற்றுகிறாரோ என சந்தேகம். மேலும் 57 கரசேவகர்களை கலவரம் வருவதற்கு முன் காப்பாற்றியிருக்கலாம். ஒரு மாநில முதல்வருக்கு உளவுத்துறை அறிக்கை கொடுக்காமலா இருந்திருக்கும். இஸ்லாமியர்கள் கரசேவகர்களை கொன்ற பின் அதைக்காரணம் காட்டி வன்முறை நாடகத்தை அரங்கேற்றியிருக்கலாம் என நினைக்கிறேன். அவர்கள் குளிர்காய்வதற்கு 57 இந்துக்கள் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பலி.
ஹிந்துமத ஆதரவாளனாக ஏற்றாலும் தமிழனாகவும் நடுநிலை வாதியாகவும் ஏற்க முடியவில்லை.
நெற்றிக்கண்திறப்பினும் குற்றம் குற்றமே.
விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன.

நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன...

ஆங்கிலத்தில் D என்ற எழுத்துடன் துவங்கும் அநேக வார்த்தைகள் நமக்குத் துன்பம் தருவனவாகவே உள்ளன...
Danger -அபாயம்
Death- மரணம்
Despair -மனமுறிவு
Discourage -மனத்தளர்ச்சி அடை
Disappointment -ஏமாற்றம்
Destruction - அழிவு
Debt - கடன்
Distress-துன்பம்
Disease -நோய்
Dead-மரணம்
Dim-தெளிவற்ற
Detained -தோல்வி
Depression - சோர்வு,கலக்கம்
Drunkard -குடிகாரன்
Down- இறக்கம்
Divide -பிரிவு
Deny-மறுத்தல்
Decay-அழுகுதல்
Deceive -ஏமாற்றுதல்
Decrease -குறை
Dash-மோதுதல்
Dull-அசதி
Duel -சண்டை
Dust-மாசு
Dispute-கலகம்
Dminish-குறைவு
Disturb -தொல்லை
Doubt-சந்தேகம்
Debit -செலவு
Dormant -உறக்க நிலை
Drown-முழ்குதல்
Ditch-பள்ளம்
Dowry -வரதட்சணை
Divorce -திருமணம் முறிவு
Dissolve -கலைத்தல்
Debar-தகுதி இழப்பு...
மேற்கண்ட துன்பங்களைப் போக்குபவன்(Go-போ) தான் இறைவன் (God). எனவே இறைவனை அனுதினமும் வணங்கி நம் செயல்களைத் துவக்குவோம்....அவரே நம்ம Doctor.

தனித்தனியாக பிரித்து கணக்கு பார்க்க வேண்டும் என்ற வாதத்தையும் ஏற்க மறுத்துவிட்டது.

₹ 2,01,83,956.53 சொத்து மதிப்பு 1.7.1991 வரை. இது அம்மாவின் சொத்து என்றும் முறையாக பெறப்பட்ட சொத்து என்றும் தீர்ப்பு சான்று வழங்கியுள்ளது.
₹ 9,91,05,094.75 நிகர வருமானம் 1.7.1991 முதல் முதல்வர் பதவியிலிருந்த 30.4.1996 வரை. (இதை ₹25 கோடி என்று மதிப்பிட்டு கர்நாடக உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை விடுதலை செய்தது. உயர்நீதிமன்றம் வங்கிகளிடமிருந்து இந்த 32 கம்பெனிகள் பெற்ற கடன்களை குற்றம் சாட்டப்பட்ட தனிநபர்களின் வருமானம் என்று கணக்கில் கொண்டது தவறு என்ற வாதம் உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. ஆனால் இந்த கம்பெனிகள் A2, A3, A4 நிர்வகிக்கும் கம்பெனிகளாக இருந்தாலும் மற்றும் இவை யாவும் A1 போயஸ் தோட்ட விலாசத்தில் இயங்குவதாலும் குற்றம் சுமத்தப்பட்டவர்களின் கூட்டு சொத்து என்றே நீதிமன்றம் தீர்ப்பில் கருதுகிறது. தனித்தனியாக பிரித்து கணக்கு பார்க்க வேண்டும் என்ற வாதத்தையும் ஏற்க மறுத்துவிட்டது.
₹8,49,06,833.00 நிகர செலவினங்கள் 1.7.1991 முதல் 30.4.1996 வரை (இதில் ₹6 கோடி அளவுக்கான செலவு திருமண செலவாக தி.மு.க அரசு சமர்ப்பித்த மதிப்பீட்டின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மதிப்பீடு உம்மிடி நிறுவனத்தால்).
₹Rs.53,60,49,954.00 என்பது 30.4.1996 அளவில் இவர்களது 32 கம்பெனிகள் வாங்கிய சொத்தின் மதிப்பு அரசு மதிப்பீடு அடிப்படையில். (இதிலும் குற்றம் சாட்டப்பட்டவர் ஆவணங்களுடன் சமர்பித்த மதிப்பீடு ஏற்கப்படவில்லை. உதாரணமாக நீதிமன்றத்தில் சாட்சி சொன்ன சன்சிங்கர் இசை நிகழ்ச்சி நடத்தும் கங்கை அமரன் பேட்டியில் கூறியது - யார் வாங்குகிறார்கள் என்று கூட குறிப்பிடாமல் அடிமாட்டு விலைக்கு பதிவாளர்களை வீட்டிற்கே வரச்செய்து நிர்பந்தித்து வாங்கினார்கள் - என்பது. ஆனால் அந்த அடிமாட்டு விலையை ஏற்காமல் மார்பிள், கிரானைட் வைத்து இழைக்கப்பட்டுள்ளது என்பதால் அதிக மதிப்பு என்று அரசு மதிப்பீட்டாளர் சொன்னதுதான் சொத்தின் மதிப்பாக ஏற்கப்பட்டுள்ளது. கங்கை அமரனின் வாக்குமூலம் - பதிவாளரையே வீட்டிற்கு அனுப்பி வாங்குபவர் பெயரைக்கூட குறிப்பிடாமல் பதிந்து - என்ற வரை ஏற்கப்பட்டுள்ளது.
இதனால் வருமானத்திற்கு அதிகமான சொத்து என்பது தீர்ப்பு.
தீர்ப்பு முழுவதும் எல்லா பரிவர்தனைகளும் சசிகலா அவர்கள் கட்டுப்பாட்டிலும் வழிகாட்டுதலிலும்தான் நடைபெற்றுள்ளன என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இது அனைத்தும் அவர்கள் கூட்டாக வசித்துவந்த போயஸ் தோட்ட விலாசத்தில் நடந்துள்ளது என்பதாலும், பல பரிவர்தனைகளில் A1 அவர்களின் வங்கி கணக்கிலிருந்தம் நடந்துள்ளன என்பதாலும், A1 ஒரு அரசாங்க பதவியில் உள்ளவர் என்பதாலும் இது அவர் பினாமிகளை வைத்து கூட்டாக செய்யும் சதி என்பது மறுக்கமுடியாத ஒன்றாக உள்ளது என்று தீர்ப்பு கூறுகிறது.
உள்ளபடி சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பு மற்றும் அதையே வழிமொழிந்த உச்சநீதிமன்ற தீர்ப்பு என்பது எவ்வளவு நியாயமானதோ அதே அளவு உயர்நீதிமன்ற நீதிபதி குமாரசுவாமி தீர்ப்பும் நியாயமானதுதான். கணக்கில் தவறு செய்துவிட்டார் குமாரசுவாமி என்பது என்று உச்சநீதிமன்றமும் ஏற்கவில்லை. குற்றம் பல நடந்திருப்பதால் நீதிபதி குமாரசுவாமி கணக்கில் கருத்தில் கொண்டவற்றை குற்றவாளிகளுக்கு தண்டனை வேண்டும் என்ற அடிப்படையில் வேறு கண்ணோட்டத்தில் மாற்றி பார்த்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
புரட்சித்தலைவி அம்மா இருந்தவரை தீர்ப்பு எழுத நீதிபதிகளுக்கு மனசாட்சி உறுத்தியிருக்க வேண்டும். அவர் இறந்த பின் அந்த நிரடல் இல்லாமல் தீரப்பில் ஒரு முடிவுக்கு வந்திருக்க வேண்டும்.
ஏனோ இன்றுவரை உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பில் உள்ள தவறுகளை யாரும் சுட்டிக்காட்ட முனையவில்லை. ஏதாவது செய்யப்போய் சசிகலா + குடும்பத்தார் குற்றமற்றவர் என்று தீர்ப்பாகிவிடலாம் என்ற அச்சமும் காரணம். வைத்தால் குடுமி...சரைத்தால் மொட்டை என்றுதான் இதுவரை வந்த தீர்ப்புகள். உச்ச நீதிமன்றமே வீட்டிற்கே நிர்பந்த்த்தால் வந்த பதிவாளரை கண்டிக்கவில்லை என்று தீர்ப்பில் ஏராளமான ஓட்டைகள் உள்ளது என்பது மட்டும் உறுதி்.

*'உங்கள் வாழ்வு செழிக்கச் சில அறிவுரைகள்'*

*அவசியம் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய குறிப்புகள்!!*
1. பசிக்கும்போது மட்டும் சாப்பிடுங்கள். தாகமெடுத்தால் தண்ணீர் குடியுங்கள். குளிர் பானங்களை தவிர்த்து விடுங்கள்.
2. பசிக்கும் போது பயமில்லாமல் பிடித்த உணவை போதுமான அளவு சாப்பிடுங்கள். பசிக்கும் போது எந்த உணவு சாப்பிட்டாலும் அது இலகுவாக ஜீரணமாகிவிடும். உணவை நிதானமாக மென்று சாப்பிடுங்கள். டிவி பார்த்துக் கொண்டு சாப்பிடாதீர்கள்.
3. தரையில் அமர்ந்து சாப்பிடுங்கள். உங்கள் கை விரல்களால் சாப்பிடுங்கள். கை இல்லாதவர்களுக்குத் தான் ஸ்பூன் தேவை. உங்கள் ஜீரணத்திற்கும் விரல்களுக்கும் தொடர்பு உள்ளது.
4. இயற்கை உணவு மற்றும் பழங்களை தேவையான அளவு எடுத்துக் கொள்ளுங்கள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகளையும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்த உணவுகளையும் தவிர்த்து விடுங்கள். விளம்பரம் செய்யப்படுவதை ஒருபோதும் வாங்காதீர்கள்.
5. பசிக்கும்போது மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு உடற்பயிற்சி தேவையில்ல.
6. தினமும் முடிந்த அளவு விளையாடுங்கள். விளையாட்டு சிறுவர்களுக்கு மட்டுமல்ல.
7. ஒரு நாளைக்கு 10 நிமிடமாவது தனிமையில் அமைதியாக இருந்து சிந்தியுங்கள். உங்கள் ஆற்றல் வெளிப்படும். அவ்வப்போது மனதுக்குள் சிறிது நேரம் பிரார்த்தனை செய்யங்கள் .
8. டிவி பார்ப்பதை குறைத்துக் கொண்டு நிறைய நல்ல புத்தகங்களைப் படியுங்கள். பிள்ளைகளுக்கு நல்ல நிஷயங்களை சொல்லிக் கொடுங்கள்.
9. குழந்தைகளிடம் Smart Phone களை கொடுக்காதீர்கள். தேவயற்ற விஷயங்களுக்காக Whatsup, Facebook போன்ற சமூக வலைதளங்களில் உங்கள் நேரத்தை வீனடிக்காதீர்கள்.
10. குறைந்தது 7 மணி நேரம் தூங்குங்கள். இரவு 10 மணிக்கு முன் தூங்கிவிடுங்கள். காலை 5 மணிக்குமேல் தூங்காதீர்கள்.
11. தினம் 20 நிமிடங்கள் ரிலாக்ஸாக நடைப் பயிற்சி மேற்கொள்ளுங்கள். (உடற்பயிற்சிக்காக அல்ல மன அமைதிக்காக)
12. உங்களை ஒருபொழுதும் மற்றவருடன் ஒப்பிடாதீர்கள். அவர்கள் பயணிக்கும் பாதை வேறு. உங்கள் பாதை வேறு. அடுத்தவரைப் பார்த்து பொறாமை கொள்வது நேர விரையம். உங்களுக்கு தேவையானது உங்களிடமே உள்ளது.
13. எப்போதும் மனதில் நேர்மறையான எண்ணங்களை மேற்கொள்ளுங்கள்.
14. கடுமையாக உழைக்காதீர்கள். உங்களால் முடிந்த அளவு வேலை செய்யுங்கள். அளவுக்கு மீறி எதையும் செய்யாதீர்கள்.
15. மற்றவர்களைப் பற்றிப் புறம் பேசுவதில் உங்கள் சக்தியை வீனாக்காதீர்கள். உங்களைப் பற்றி புறம் பேசப்படுவதை பொருட்படுத்தாதீர்கள்.
16. நீங்கள் விழித்திருக்கும் பொழுது உங்கள் தேவைகளைப் பற்றி நிறைய கணவு காணுங்கள். அதை செயல்படுத்தவும் முயற்சி செய்யுங்கள்.
17. உங்கள் வருமானத்தில் ஒரு பகுதியை தானமாக கொடுத்து விடுங்கள். தேவை உள்ளவர்களுக்கு உதவி செய்யுங்கள்.
18. கடந்த காலத்தை மறந்து விடுங்கள். முடிந்தது முடிந்தவையாக இருக்கட்டும். நிகழ் காலத்தில் வாழுங்கள். மகிழ்ச்சியும் மன அமைதியும் தானாக வரும்.
19. குறுகிய கால இந்த வாழ்க்கையில் யாரையும் வெறுக்காதீர்கள். வெறுப்பு உங்களை தான் பாதிக்கும்.
20. வாழ்க்கை ஒரு பள்ளிக்கூடம். நீங்கள் கற்றுக் கொள்ள வந்திருக்கிறீர்கள் சிக்கல்களும், பிரச்சனைகளும் இங்கு பாடங்கள்.
21. முடியாது என்று சொல்லவேண்டிய இடங்களில் தயவு செய்து முடியாது என்று சொல்லிவிடுங்கள். இது பல பிரச்சனைகளை ஆரம்பத்திலேயே தீர்த்துவிடும்.
22. வெளிநாட்டிலோ வெளியூரிலோ இருந்தால் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும், நண்பர்களுக்கும், வேண்டியவர்களுக்கும் அடிக்கடி தொலைபேசியிலோ, SMS மூலமாகவோ தொடர்பு கொண்டிருங்கள். இது உங்களுக்கும் அவர்களுக்கும் மன அமைதியையும், பரஸ்பர அன்பையும் மேம்படுத்தும்.
23. மன்னிக்கப் பழகுங்கள். தேவையான நேரத்தில் தயங்காமல் மன்னிப்பும் கேளுங்கள். உங்கள் மனபாரம் நீங்கும்.
24. 60 வயதிற்கு மேலிருப்பவர்களையும், 6 வயதிற்கு கீழிருப்பவர்களையும் கவனிக்க நேரம் ஒதுக்குங்கள். அவர்களுக்கு உங்கள் அன்பு தான் முக்கியம். பணம் முக்கியமல்ல.
25. அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்பதைப் பற்றி ஒருபொழுதும் கவலை கொள்ளாதீர்கள். எப்பொழுதும் உங்களைப் பற்றி நினைப்பது மாற்றவர்களின் வேலையல்ல.
26. உங்கள் நண்பர்களை மதிக்கப் பழகுங்கள். உங்கள் மனதிற்கு எது சரியென்று படுகிறதோ அதை உடனே செய்யுங்கள்.
27. உங்களின் நிறைவேறிய தேவைக்கு இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள். நிறைவேறாத தேவைக்கு பிரார்த்தனை செய்யுங்கள்.
28. உங்கள் ஆழ்மனதில் இருப்பது சந்தோஷம் மட்டும்தான். அதை தேடி அனுபவித்துக் கொண்டே இருங்கள். அவ்வப்போது உங்களிடம் உள்ள நல்லவைகளை நினைத்து பெருமிதம் கொள்ளுங்கள்.
29. உங்களுக்கு எது சந்தோஷத்தை கொடுக்காதோ, அன்பை கொடுக்காதோ, நிம்மதியைக் கொடுக்காதோ அதை ஒதுக்கி விடுங்கள்.
30. வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமல்ல. கவலைகளும், நோய்களும் கூட...
எந்த சூழ்நிலையும் ஒரு நாள் கண்டிப்பாக மாறும்.
மலச்சிக்கல் இல்லாமல் எழுவதும், மனச் சிக்கல் இல்லாமல் தூங்குவதும் தான் ஆரோக்கியம்.
இதை கடைபிடியுங்கள் உங்கள் வாழ்கை ஆரோக்கியமாக இருக்கும். நன்றி!
மற்றவர்களுக்கும் இதை பகிருங்கள்..

Sunday, February 26, 2017

தமிழக பாஜகவை உள்ளிருந்தே கொல்லும் வியாதிகள்...

ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டும் என்றால் ஒரு மாநிலத்தை தியாகம் செய்யலாம்...
ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து பத்திரிக்கையாளர்களிடம் இல.கணேசன்...
உன் பொண்டாட்டி உனக்கு மட்டுமா பொண்டாட்டியா இருந்தா ? எனக்கும்தான் பொண்டாட்டியா இருந்தா... ஏன் , இந்த ஊருக்கே பொண்டாட்டியா இருந்தா... வடிவேலுவிடம் செந்தில்...
பழ மொழி சொல்ல வேண்டியதுதான் ,.. அதை எங்கே , எப்போ , யார்கிட்ட சொல்றோம்... அவர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள்... என்ன பதில் சொல்வார்கள் என்ற சிந்தனை எல்லாம் சிறிதுமற்ற ஆட்கள்தான் தமிழக பாஜகவை உள்ளிருந்தே கொல்லும் வியாதிகள்...
Image may contain: 3 people, people sitting and indoor

"ஆன்மா"

👉 "ஆன்மா" விளக்கம் சொல்லுங்கள் என்ற சீடனுக்கு குரு விளக்குகிறார்..
"பால்"பயனுள்ளதுதான்...
ஆனால் அதை அப்படியே விட்டால் கெட்டுப்போகும்..
அதில் ஒரு துளி உறை மோர் விட்டால் பால் தயிராகி விடும் கெடாது...
தயிரான பால் இன்னும் ஒரு நாள் தான் தாங்கும்....
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்...
அதைக் கடைய வேண்டும்....
கடைந்தால் வெண்ணெய்ஆகி விடும் கெடாது...
வெண்ணெய் ஆன பால் பல நாள் தாங்காது....
அப்படியே விட்டால் கெட்டுப் போகும்....
அதை உருக்க வேண்டும்...
சரியாக உருக்கினால் சுத்தமான நெய் ஆகிவிடும்...
அந்தப் பரிசுத்தமான நெய் கெடவே கெடாது......
கெட்டுப் போகும் பாலுக்குள் கெடாத நெய் இல்லையா??
அதுபோலத்தான்...
👉 அழிந்து போகும் உடலுக்குள் அழியாத ஆன்மா உண்டு...

சசிகலா குடும்பத்துக்குள் குத்துச்சண்டை! - தீபக் திடீர் புரட்சியின் பின்னணி.

“பன்னீர்செல்வம் திரும்பி வரவேண்டும்; அவர் வந்தால் ஏற்றுக் கொள்வோம்; அவர், தலைமைப் பொறுப்பைக் கேட்டால் விட்டுக்கொடுப்போம்; கட்சி உடையக்கூடாது என்பதற்காக எதையும் செய்வோம்; அதே நேரத்தில், அ.தி.மு.க-வின் துணைப்பொதுச்செயலாளராக இருப்பதற்கு டி.டி.வி.தினகரனுக்குத் தகுதி இல்லை” என்று ஸ்டேட்மென்ட்களை அடுக்கி அ.தி.மு.க-வை அதிர வைத்துள்ளார், ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். இன்றைய தேதிக்கு சசிகலா குடும்பத்துக்கு பரம எதிரிகளாகப் பார்க்கப்படும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தீபா அணிகளே சற்று அடங்கி இருக்கும் நிலையில், இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த தீபக் திடீரென வாய் திறந்திருப்பது டி.டி.வி.தினகரனையும் அவர் தலைமையில் இயங்கும் அ.தி.மு.க-வினரையும்அதிரவைத்துள்ளது. தீபக், திடீரென வெடித்துக் கிளம்ப என்ன காரணம்?
“அத்தை வழியே என் வழி!”

2016 டிசம்பர் 6-ம் தேதி ஜெயலலிதாவின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில், சசிகலாவால் கைபிடித்து அழைத்துவரப்பட்ட நபர்தான், ஜெயலலிதாவின் சொந்த அண்ணன் ஜெயக்குமாரின் மகன் தீபக். போயஸ் கார்டனுக்கும் சசிகலா குடும்பத்துக்கும் இடையில் அப்படி ஒரு கதாபாத்திரம் இருப்பதை அன்றுதான் தமிழகம் அறிந்துகொண்டது. அவரை, தேடிப்பிடித்து கடுமையான முயற்சிகளுக்குப்பிறகு ‘ஜூனியர் விகடன்’ பேட்டி கண்டது. தீபக், முதன்முதலாகக் கொடுத்த பேட்டி அதுதான். அந்தப் பேட்டியிலேயே, “சசி அத்தையை நான் மதிக்கிறேன்; அவரை நம்புகிறேன். ஏனென்றால் அவரைத்தான் என் அத்தை 30 வருடங்களாக நம்பினார்; அதனால், நானும் அவரையே நம்புகிறேன். சசிகலாவைத் தவிர அவர் குடும்பத்தில் உள்ள திவாகரன், சுதாகரன், பாஸ்கரன், தினகரன் உள்ளிட்டவர்களை நான் நம்பமாட்டேன். ஏனென்றால், அவர்களை என் அத்தை நம்பவில்லை. சசி அத்தையை கடைசிவரை கூடவே வைத்திருந்த என் அத்தை, மற்றவர்களைத் தள்ளியே வைத்திருந்தார்” என்று தீபக் தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார். 

மேலும், “கட்சியிலும், போயஸ் கார்டன் வீட்டுக்குள்ளும் சசி அத்தை இருப்பதை நான் எதிர்க்கமாட்டேன். ஆனால், மற்றவர்கள் உள்ளே வந்து சொந்தம் கொண்டாட முயன்றால், அப்போது தீபாவைப்போல் நானும் களம் இறங்குவேன்” என்றும் குறிப்பிட்டு இருந்தார். தீபக்கின் இந்தக் கோபத்துக்கு விதிவிலக்கான நபர் நடராசன் மட்டுமே. ஏனென்றால், சசிகலாவைவிட நடராசனுடன்தான் தீபக் மிகநெருக்கமாக இருந்தார். அந்த வகையில் இப்போதும் சசிகலாவின் மீது மரியாதையும், நடராசன் மீது பாசமும் வைத்துள்ளார் தீபக். ஆனால், மற்றவர்கள் மேல் உள்ள வெறுப்பு அப்படியே நீடிக்கிறது. அதனால்தான், தினகரன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக ஆனதை தீபக் எதிர்க்கிறார். 

இளைய வாரிசுகளுக்குள் முட்டல்-மோதல்!

சசிகலா குடும்பத்தை தீபக் வெறுப்பதற்கு, அந்தக் குடும்பத்தினரின் நடவடிக்கைகள், ஜெயலலிதாவுக்கும் அ.தி.மு.க என்ற கட்சிக்கும் அவர்களால் ஏற்பட்ட தொந்தரவுகள் என்று ஏகப்பட்ட காரணங்கள் இருந்தாலும், தனிப்பட்ட காரணங்களும் நிறைய உண்டு. குறிப்பாக அந்தக் குடும்பத்தில், திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த், இளவரசியின் மகன் விவேக், சசிகலாவின் அக்காள் மகன்கள் தினகரன், பாஸ்கரன், சுதாகரன் ஆகியோரோடு தீபக்குக்கு எப்போதும் ஒத்துப்போனது இல்லை. அந்த வெறுப்பு அவ்வப்போது வெளிப்பட்டுக்கொண்டே இருந்தது. குறிப்பாக, ஜெயலலிதாவின் இறுதிச்சடங்கில் தீபக் கலந்துகொண்டதை அனைத்துத் தொலைக்காட்சிகளும் காட்டின. ஆனால், ஜெயா தொலைக்காட்சியில் அந்தக் காட்சிகள் வேண்டுமென்றே வெட்டப்பட்டு இருந்தன. அதற்குக் காரணம் ஜெய் ஆனந்த், விவேக் உள்ளிட்ட இளைய வாரிசுகள்தான். அதில், தீபக் மிகவும் காயம்பட்டு இருந்தார். அதுபற்றி அப்போதே அவருக்கு  நெருக்கமானவர்களிடம் குறைபட்ட தீபக், ‘‘ஜெயா தொலைக்காட்சியின் உரிமையை நான் வாங்கியபிறகு பார்த்துக்கொள்கிறேன்’’ என்றாராம்.
ஜெ. சொத்துகள் பத்திரம்!

ஜெயலலிதா சொத்துகள் பற்றி ஏற்கெனவே பேசியிருந்த தீபக், “அத்தை பெயரில் உள்ள சொத்துகள் யாருக்குப் போய்ச்சேர வேண்டுமோ, அவர்களுக்குச் சரியாகப் போகும். தவறான ஆட்களிடம் போக நானும் விடமாட்டேன்; சசி அத்தையும் விடமாட்டார்; நடராசன் அங்கிளும் விடமாட்டார். சசி அத்தை, நடராசன் அங்கிள் தவிர, அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் யாராவது வந்து உரிமை கொண்டாட முயன்றால், அதை நானும் விடமாட்டேன்; தீபாவும் விடமாட்டார்” என்று தெளிவாகக் குறிப்பிட்டு இருந்தார். ‘ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளை, பத்திரமாக சசிகலாவும் நடராசனும் தங்களிடம் ஒப்படைத்து விடுவார்கள்’ என்று தீபா, தீபக் இருவருமே இப்போதுவரை நம்புகின்றனர். 

ஆனால், தற்போது உள்ள சூழ்நிலையில் சசிகலா சிறையில் இருக்கிறார்; நடராசன் உடல்நலம் இல்லாமல்  இருக்கிறார். இந்த நேரத்தில், போயஸ் கார்டன் வீட்டுக்குச் சொந்தம் கொண்டாடவும் அதை அனுபவிக்கவும் சிலர் முயற்சிப்பதாக தீபக் காதுகளைத் தகவல்கள் எட்டி உள்ளன. அதுபோல, ஜெயலலிதா பெயரில் உள்ள சொத்துகளைப் பெறுவதிலும் ஏதேனும் சிக்கலை சசிகலா குடும்பம் ஏற்படுத்தும் என்ற அச்சம் தீபக்குக்கு இருக்கிறது. அதனால்தான் அவர், “என் அத்தைக்கு விதிக்கப்பட்ட அபராதத்தை நானே கட்டுவேன்; போயஸ் கார்டன் வீடு எனக்கும், தீபாவுக்கும் சொந்தமானதே” என்று தெளிவுபடுத்தி உள்ளார்.

நடராசன், திவாகரன் Vs தினகரன், வெங்கடேஷ்!

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு சசிகலாவின் குடும்பத்தினர், சசிகலாவை முன்னிலைப்படுத்தினர். ஆனால், சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் தண்டனை விதித்த பிறகு, ஜெயிலுக்குப் போவதற்குமுன்பே சசிகலா ஒரு சூழ்நிலைக் கைதியாக ஆகியிருந்தார். “தினகரனும், டாக்டர் வெங்கடேஷும் பன்னீர்செல்வத்தை மட்டும் மிரட்டி கையெழுத்து வாங்கவில்லை; சசிகலாவையும் மிரட்டிக் கையெழுத்து போடச் சொல்லித்தான் அவர்கள் கட்சியில் சேர்ந்தார்கள்” என்கிறார்கள், விவரம் அறிந்தவர்கள். 

சசிகலாவின் உறவு வட்டாரத்துக்கு உள்ளேயும், கட்சிக்கு உள்ளேயும் தினகரன் மற்றும்  வெங்கடேஷின் ஆதிக்கம் ஓங்கியுள்ளது. இவர்கள், சசிகலாவின் சகோதரர் திவாகரனின் குடும்பத்தையே ஒதுக்கிவிட்டனர். நடராசன் எதிலும் கலந்துகொள்வதில்லை. ‘போயஸ் கார்டன் பக்கமே வரக்கூடாது’ என்று சசிகலாவின் அண்ணன் மகன் மகாதேவனுக்குத் தடைவிதித்துவிட்டனர். இளவரசியின் குடும்பத்தையும் ஓரம்கட்டிவிட்டனர். தினகரன், வெங்கடேஷின் இந்தச் செயல்பாடுகள் திவாகரனுக்கும் பிடிக்கவில்லை. அதனால்தான் அவர் தனியாக தன் மகன் ஜெய் ஆனந்தை அழைத்துக் கொண்டுபோய் கவர்னர் வித்யாசாகர் ராவைப் பார்த்தார். அதுபோல, நடராசனுக்கும் தினகரன் மற்றும் வெங்கடேஷின் போக்குப் பிடிக்கவில்லை. அதை யொட்டித்தான் தீபக், மீடியாக்களில் பேட்டி கொடுத்துள்ளார். நடராசன் சொல்லாமல் எதையும் மனம் திறந்து பேசும் ஆள் அல்ல தீபக்.

சசிகலாவுக்கு நடராசன் கடிதம்!

பிப்ரவரி 20-ம் தேதி பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவை தீபக் சந்தித்தார். அப்போது, சசிகலாவுக்கு தீபக் மூலம் நடராசன் ஒரு கடிதம் கொடுத்து அனுப்பி இருந்தார். அதில், ‘தற்போது இருக்கும் சூழல் சரியில்லை; இந்த நேரத்தில் நம் குடும்பம் மீது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி நிலவுகிறது. தீபா-தீபக் இருவர் மீதும் அனுதாபமும் நல்ல பெயரும் இருக்கிறது. அதனால் தீபக்குக்கு கட்சியில் ஒரு நல்ல பொறுப்பைக் கொடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அந்தக் கடிதத்தைப் படித்த சசிகலா, தீபக்கிடமும் அதுபற்றிப் பேசியிருக்கிறார். ஆனால், இப்போது எந்தப் பொறுப்பையும் ஏற்க தீபக் சம்மதிக்கவில்லை. ‘‘தினகரன், துணைப் பொதுச் செயலாளராக இருக்கும் வரை, நான் சாதாரணப் பொறுப்பில்கூட இருக்கமாட்டேன். எனக்கு எந்தப் பொறுப்பும் தேவையில்லை” என்று சொல்லிவிட்டு வந்தாராம் தீபக். அதேநாளில் தினகரனும் பெங்களூரு சிறைக்கு வந்திருந்தார். அவருடன் ஒரு வார்த்தைகூட தீபக் பேசிக்கொள்ளவில்லை. தினகரனுடன் ஏன் பேசவில்லை என்று தீபக்கிடம் கேட்டபோது... ‘‘அவரிடம் நான் பேசுவதற்கு என்ன இருக்கிறது?’’ என்று அவர் திருப்பிக்கேட்டாராம்.

ஓ.பி.எஸ் - தீபா அணிக்கு செக்!

தீபக்கின் இந்த அதிரடிக்குப் பின்னால் நடராசனின் ஒரு திட்டம் இருப்பதாகவும் தினகரன் தரப்பு சொல்கிறது. ஜெயலலிதா பிறந்தநாளில் அறிவிப்பு செய்துவிட்டு, ஓ.பி.எஸ்-தீபா அணி தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் கிளம்பத் திட்டம் போட்டிருந்தனர். இதையொட்டி 23-ம் தேதி காலையில் பத்திரிகையாளர்களை தினகரன் சந்தித்தார். அப்போது அவர், “போனவர்கள் திரும்பி வருவார்கள்” என்று பேட்டியளித்தார். இதையடுத்து, அன்று மாலையே தீபக்கும், “ஓ.பி.எஸ் திரும்ப வரவேண்டும்” என்று பேட்டி அளித்தார். அதோடு, ‘‘அவர் வந்து தலைமைப் பொறுப்பைக் கேட்டால்கூட தர வேண்டும்’’ என்று கூடுதலாக ஒன்றைச் சொன்னார். இதன்மூலம் ஓ.பி.எஸ்., தீபா பக்கம் உள்ள சீனியர்களைக் குழப்பி அவர்களை இந்தப் பக்கம் இழுப்பதற்கு நடராசன் கொடுத்த ஐடியாதான் இது என்று தினகரன் தரப்பினர் பேசிக்கொள்கிறார்கள். 

இவற்றின் அடிப்படையில் தீபக்கைத் தொடர்பு கொண்டு பேசினோம். அவர் அளித்த விளக்கம்...

“என்னைப் பொறுத்தவரை அ.தி.மு.க என்ற கட்சி உடையக்கூடாது. அந்தப் பிளவைத் தடுக்க யார் வேண்டுமானாலும்... எதை வேண்டுமானாலும் விட்டுத்தரலாம். இந்தக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் திரும்பி வரவேண்டும். அவர் வந்து ‘கட்சிக்குத் தலைமை ஏற்கிறேன்’ என்று சொன்னால், அந்தப் பொறுப்பையும் அவருக்குக் கொடுக்கலாம். அவருக்கு முழுத் தகுதியும் இருக்கிறது. இரண்டு முறை என் அத்தையே அவருக்கு முதல்வர் பொறுப்பைக் கொடுத்துள்ளார். இந்த முறை அவர் அவரசப்பட்டு, யாரோ சிலரின் பேச்சைக் கேட்டு, எங்கள் அத்தையை அவமானப்படுத்தும் வகையில் சில நடவடிக்கைகளில் ஈடுபட்டுவிட்டார். குறிப்பாக, சொத்துக் குவிப்பு வழக்கில் தீர்ப்பு வந்த அன்று,  ஓ.பி.எஸ் வீட்டில் அது கொண்டாடப்பட்டது மிகப் பெரிய தவறு. ஆனால், கட்சியின் நலனைக் கருத்தில்கொண்டு அதை மன்னிக்கலாம். மன்னித்து அவரையும், அவருடன் சென்றவர்களையும் திரும்ப ஏற்றுக்கொள்ளலாம். 

தினகரன், துணைப் பொதுச்செயலாளர் ஆனதை நான் ஏற்கவில்லை. எந்தத் தொண்டனும் ஏற்கவில்லை. அதனால் அவர் அந்தப் பதவியில் நீடிப்பது அழகல்ல. நீதிமன்றம் சொன்னதுபோல் 100 கோடி ரூபாய் அபராதத்தை நானே கட்டுவேன். போயஸ் கார்டன் வீடு இப்போதும் எனக்குச் சொந்தமானதுதான். அபராதத்தை நான் கட்டினாலும் சரி... வேறு யார் கட்டினாலும் சரி... போயஸ் கார்டன் வீட்டின் உரிமை, நியாயமாக எனக்குத்தான் உள்ளது. அதை யாராலும் மாற்ற முடியாது. சசி அத்தையை பெங்களூரில் சந்தித்தபோது, அவர் எனக்கு கட்சிப் பதவி தருகிறேன் என்று சொன்னது உண்மைதான். ஆனால், இப்போதைக்கு அதை ஏற்க எனக்கு மனமில்லை. அதற்கு இன்னும் நாள் இருக்கிறது. தினகரன் துணைப்பொதுச் செயலாளராக இருப்பதில் நடராசன் அங்கிளுக்கு அதிருப்தியா என்பதை நீங்கள் அவரிடம்தான் கேட்கவேண்டும். அதற்கு நான் பதில் சொல்லமுடியாது” என்றார்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...