Tuesday, April 25, 2017

இல்லற இன்பம்.

ஒரு முறை கபீர்தாசரிடம் அவருடைய பக்தர் அறிவுரை கேட்க வந்திருந்தார். அவர் தயங்கித் தயங்கி கபீர்தாசரிடம், “எனக்கு இல்லற வாழ்க்கை இன்பமாக இல்லை! என்னுடைய மனைவியும் நானும் இன்பமாக குடும்பம் நடத்தவில்லை! எப்பொழுதும் சண்டைதான்! நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை! எதிர்த்துப் பேசறா… எரிஞ்சு விழறா… கோபப்படறா… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை என்றார்”.
கபீர்தாசர் பார்த்தார். “சரி இன்னும் கொஞ்ச நேரம் இங்கேயே இருங்கள்?”, யோசனை செய்து பதில் சொல்கிறேன்! என்று சொல்லிவிட்டு, ஒரு பெரிய நூல் கண்டை எடுத்து கொண்டுவந்து வீட்டிற்கு வெளியே வெளிச்சத்தில் உட்கார்ந்தார். அந்த பெரிய நூல்கண்டு சிக்கலாயிருந்தது. அதனாலே கபீர்தாசர் அதில் உள்ள சிக்கல்களை ஒவ்வொன்றாக பிரித்தெடுத்தார். நல்ல வெளிச்சமாகத்தான் இருந்தது. மனைவியிடம் விளக்கை எடுத்துக் கொண்டுவா என்றார். அந்த அம்மாவும் ஒரு விளக்கை எடுத்துக் கொண்டுவந்து அவர் பக்கத்திலே வைத்துவிட்டு உள்ளே போய்விட்டார்கள். “இவ்வளவு வெளிச்சத்தில் விளக்கு எதற்கு என்று எதுவும் கேட்கவில்லை”.
சிறிது நேரம் கழித்து அந்த அம்மா இரண்டு டம்ளர் பாலைக் கொண்டுவந்து அவர்கள் முன்னால் வைத்தார்கள். இரண்டு பேரும் அதை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தார்கள். வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்தது… பாலை அவரால் குடிக்க முடியவில்லை. ஏனெனில், அந்த அம்மா பாலில் சர்க்கரைக்குப் பதிலாக, உப்பைப் போட்டு இருந்தார்கள். வந்தவர், சரின்னு கபீர்தாசர் முகத்தைக் கவனித்தார். அவர் முகத்திலே எந்த வித்தியாசமும் இல்லை. அவர் அதை அப்படியே குடித்துவிட்டார். அந்த அம்மா, “பாலுக்குச் சர்க்கரை போதுமா?” என்று கேட்கிறார்கள்! அதற்கு கபீர்தாசர், “போதும்! இனிப்புச் சரியாக இருக்கு!” என்கிறார்.
இதையெல்லாம் பார்த்துக் கொண்டு எதிரில் இருந்தவர்,
“இன்னும் என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லவில்லையே!” என்று கபீர்தாசரைப் பார்த்து விளவினார். அதற்கு கபீர்தாசர், “நான் இப்பொழுது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில் என்றார்”. யஜீர் வேதம் என்ன சொல்கிறது தெரியுமா? “எந்தக் குடும்பத்திலே கணவனும் மனைவியும் ஒருத்தர் குற்றத்தை இன்னொருத்தர் பார்க்காமல் இருக்கிறார்களோ அந்தக் குடும்பம் பூலோக கைலாசம்” என்றார்.
இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால், கபீர் வெளிச்சத்தில் உட்கார்ந்து கொண்டு விளக்கை கேட்டபோது, அவர் மனைவி ஏதும் கேட்காமல் விளக்கை கொண்டு வந்து வைத்தார். கபீரின் மனைவி பாலில் சர்க்கரைக்குப் பதிலாக உப்பை போட்டிருந்த போது, கபீர் ஏதும் கூறாமல் அதைக் குடித்தார். இதுவே இல்லற இன்பம்.
கபிலர்… நானும் என் மனைவியும் குடும்பத்திலே ஒருவரை ஒருவர் ரொம்ப “விட்டுக் கொடுத்து” நடந்து கொள்வோம். அதனால் எங்களுக்குள் மனஸ்தாபம் வருவதே இல்லை.
“இதுவே இல்லறம் இன்பம்”

மாணவன் எப்படி இருக்க வேண்டும் என சாக்ரடீஸ் சொல்வதை கேளுங்கள் !

சாக்ரடீஸிடம் ஒரு மாணவன் வந்தான்.
”ஐயா, மாணவன் என்பவன் எப்படி இருக்க வேண்டும்?” என்று கேட்டான்.
அதற்கு சாக்ரடீஸ், ”மாணவன் என்பவன், கொக்கைப்போல இருக்க வேண்டும்.

கோழியைப் போல இருக்க
வேண்டும்.
உப்பைப் போல இருக்க வேண்டும்.
உன்னைப்போல இருக்க வேண்டும்” என்றார்.
மாணவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
”கொஞ்சம் விளக்கமாகச் சொல்லுங்கள்” என்றான்.
”கொக்கு, ஒற்றைக் காலில் நீண்டநேரம் பொறுமையாக நிற்கும்.
மீன்கள் வந்தவுடன் விரைந்து செயல்பட்டுப் பிடித்துவிடும்.
அதுபோல, ஒரு மாணவன் சரியான வாய்ப்புக் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி, அரிய செயல்களைச் செய்ய வேண்டும்” என்றார்.
”கோழியைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான் மாணவன்.
”கோழி என்ன செய்யும்?
குப்பையைக் கிளறும்.
ஆனால், அந்தக் குப்பைகளை விட்டுவிட்டு தனக்குத் தேவையான உணவை மட்டும் எடுத்துக்கொள்ளும்.
அதுபோல, மாணவர்கள் தாம் சந்திக்கும் தீமைகளைத் தூரம் தள்ளி, நன்மைகளை மட்டும் எடுத்துக்கொள்ள வேண்டும்” என்றார் சாக்ரடீஸ்.
”அடுத்தது, உப்பைப்போல இருக்க வேண்டும் என்றீர்களே…”
”ஆமாம்.
உப்பை எந்த உணவோடு கலக்கினாலும், அது இருக்கிறது என்று கூற முடியும்.
ஆனால், கலக்கிய உணவில் உப்பு கண்ணுக்குத் தெரியாது.
அதன் சுவையை மட்டுமே உணர முடியும்.
அதுபோல, மாணவர்கள் எந்தத் துறையில் இறங்கினாலும் அதில் சிறப்பான தனித்தன்மையை வெளிப்படுத்தி, தனது மறைவுக்குப் பின்னும் அதை இவர்தான் செய்தார் என்று கூறும்படி விளங்க வேண்டும்” என்றார்.
”எல்லாம் சரி, உன்னைப் போல இருக்க வேண்டும் என்றீர்களே… அதற்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.
”மாணவன் என்பவன் தனக்குள் எழக்கூடிய சந்தேகங்களை, எந்தவிதத் தயக்கமும் இல்லாமல் ஆசிரியரிடம் கேட்டுத் தெளிவு பெற வேண்டும்.
அதற்காகத்தான் உன்னைப்போல இருக்க வேண்டும் எனச் சொன்னேன்” என்று புன்னகைத்தார் சாக்ரடீஸ்.

தமிழக அரசு ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் - செய்தி.

தமிழக அரசின் வருவாயின் மிகப்பெரும் பங்கு இவர்களின் நலனுக்காகவே செலவாகும் நிலையில் வேலைநிறுத்தம் என்பது அயோக்கியத்தனம் மட்டுமல்ல, ஒருவகை மிரட்டல் சர்வாதிகாரமே. பொதுமக்களை பாதிப்புக்குள்ளாக்கும், அவர்கள் மேல் இன்னல்களை திணிக்கும் எந்தவொரு செயலும் மிகத் தீவிரமாக எதிர்கொண்டு ஒடுக்கப்பட வேண்டியதே.
2003 ல் வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பு அப்படியே தான் உள்ளது. தயவு தாட்சண்யம் பாராமல் டெஸ்மா சட்டத்தை பயன்படுத்தி வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அப்படிச் செய்தால் மட்டுமே எடப்பாடி அரசு அம்மா வழி செயல்படும் அரசு.
In T.K. Rangarajan v. Government of Tamilnadu and Others (i), Justice M. B. Shah, speaking for a Bench of the Supreme Court consisting of himself and Justice A. R. Lakshmanan, said, "Now coming to the question of right to strike - in our view no such right exists with the government employee.". அரசு ஊழியருக்கு போராட்டத்தில் ஈடுபட எந்தவித உரிமையும் இல்லை என பொட்டில் அடித்து சொல்லியிருக்கிறது உச்ச நீதிமன்றம்.
இது ஒருவகையில் உச்சநீதிமன்ற அவமதிப்பும் கூட. நிச்சயமாக யாராவது நீதிமன்றத்தை அணுகினால் உறுதியாக மிக அருமையான தீர்வு கிடைக்கும்.

உங்களை எதிர்த்து போராட்டம் நடத்தனும்.....

அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தம்... 
அடேய், சொத்து வரிகட்ட போனால் லஞ்சம், வாகன வரி கட்ட போனால் லஞ்சம், சொத்து பத்திரப்பதிவுக்கு போனால் லஞ்சம், செத்தாலும் லஞ்சம், பிறந்தாலும் லஞ்சம், வாகனப் பதிவுக்கு லஞ்சம், மின்சார இனைப்புக்கு லஞ்சம், கூட்டுறவு கடனுக்கு லஞ்சம், சாதி சான்றுக்கு லஞ்சம், கோவில் சொத்துல கொள்ளை, டெண்டர் விடுவதில் கொள்ளை, பள்ளியில் கொள்ளை, கல்லூரியில் கொள்ளை.. எங்கடா நீங்கள் லஞ்சம் மற்றும் கொள்ளை அடிக்கவில்லை???
இதில் நாங்கள் தான்டா, உங்களை எதிர்த்து போராட்டம் நடத்தனும்.....
#அரசுஊழியர்போராட்டம்ஒழிக..........................

Monday, April 24, 2017

இளநீர்☘*

ஒரு டம்ளர் இளநீரில் ஒரு சிட்டிகை உப்பு போட்டு குடிக்க வேண்டும்.
உடல் வெப்பத்தைத் தணித்து குளிர்ச்சி அளிக்கும். இரத்தக் குழாயில் தேங்கி இருக்கும் அடைப்புகளை நீக்கும். இன்சுலின் சரியான அளவில் சுரக்க வைக்கும். வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும். விந்துவை அதிகரிக்கும். குடல் புழுக்களை அழிக்கிறது. பொட்டாஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. ஜீரண சக்தியை அதிகரிக்கும். மாத விலக்கின் போது ஏற்படும் அடிவயிற்று வலிக்கும், சிறுநீரகக் கல் கோளாறுக்கும் இளநீரே நல்ல மருந்து. சிறுநீரகத்தை சுத்திகரிக்கும்.
_வாழ்க தமிழ், வளர்க தமிழ்... வெல்க சித்தர்கள் நுண்ணறிவு!!!_
*குறிப்பு:* நீங்கள் தெரிந்து கொண்ட விஷயத்தை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
_“யாம் பெற்ற இன்பம், பெருக இவ்வையகம்”.

மூட்டு வலிக்கு 5 ரூபாயில் ஓரு சிறந்த மருந்து .!

நமது உடம்பில நாளுக்கு நாள் கொழுப்பு சத்து சேர்ந்து கிட்டுதான் இருக்கு. முறையா உடற்பயிற்ச்சி செய்யும் போது அது தானா குறையும் . அப்படி இல்லாமப்போகும் போது அது ரத்தத்தில சேர்ந்துகிட்டே இருக்கும் . ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமா சேரும் போதுதான் ஹார்ட் அட்டாக் வரை போகும் ..ஆனா அதுல வர மிகக் குறைந்த அளவுதான் மூட்டு வலி . ஏன் அந்த இடங்களில் சில மெல்லிய ரத்தகுழாய்களில் கொழுப்பு சேர்ந்து ரத்த ஓட்டத்தை தடை செய்திடும்... ஆரம்ப காலத்தில மறத்து போனமாதிரி தெரியும் ..சிலருக்கு கால் கை உப்பிப்போகும்...உட்கார்ந்தே இருப்பாங்க

இந்த மூட்டு வலி சிலருக்கு மாச, ஏன் சிலருக்கு வருஷ கணக்குல கூட இருக்கும் .எத்தனையோ டாக்டர் ( ஒரிஜினல் ) கிட்ட போய் காட்டினாலும் அவர் சில பல டெஸ்ட் செய்ய சொல்லி ஆட்டோமேடிக்கா நமது பர்ஸை குறைச்சி பல்ஸை அதிகமாக்கி பட்டை பட்டையா மருந்து மாத்திரையை குடுத்து அனுப்புவார் . அப்போதைக்கி சரியாகி கொஞ்ச நாள் கழிச்சி திரும்பவும் வந்துடும்.. நாமளும் பழைய டாக்டரை ( ஒரிஜினல் ) நல்லா திட்டிட்டு வேற புது டாக்டரை பார்க்க போயிடுவோம் ..இது ஒரு தொடர் கதையாகி போகும்.. இது வீட்டில் இருப்பவங்களுக்கு ..இதே வெளியே வேலைக்கு போகும் ஆண்களா இருந்தா ரொம்பவும் பாவம். சிலருக்கு அலைய முடியாமல் வேலையே போகும் பரிதாப நிலையும் வரலாம் .
இதை செலவே இல்லாமல் குணமாக்க முடியும்..அதுவும் வீட்டில் இருக்கும் பொருளைக்கொண்டே ..என்ன ஆச்சிரியமா இருக்கா... !! இதுப்போல எத்தனையோ பொருட்கள் இருக்கு ஆனா நமக்கு அதன் அருமை ,பெருமை புரிவதில்லை.. என் கூட வேலை பார்க்கும் ஒருவரின் உறவினருக்கு இந்த பிரச்சனையால் நடக்கவே சிரமப்பட்டார்.. அப்போது நான் சொன்னேன் .இது மாதிரி செய்யுங்க போதுமுன்னு..சந்தேகத்தோடவே போனார் அடுத்த நாள் பயங்கர சந்தோஷத்தோட வந்து சொன்னார்.. இது கடந்த மூனு வருஷமா இருக்கு ஆனா இன்னைக்கி காலையில எழுந்திருச்சதும் பார்த்தேன் . ரொம்ப நன்றி என் வாழ்க்கையில மூட்டு வலியே வந்ததில்லை போல உணர்ந்தேன் என்றார் நான் சொன்னேன் எப்பவாவது திரும்ப வருவது மாதிரி இருந்தா இதை திரும்பவும் செய்யுங்க போதுமுன்னேன் ...
விஷயம் இதுதான் வீட்டில் இருக்கும் வெள்ளை பூண்டு நாலு அதாவது நாலு பல் எடுத்து அதை கத்தியால் சின்ன சின்னதா நறுக்கி கொள்ளவும். அதை அரைக்கவோ நசுக்கவோ கூடாது. இரவு தூங்கப்போகும் போது அதாவது பெட்டில போய் தூங்கப்போகும் கடைசி நேரத்தில அப்படியே வாயில் போட்டு முழுங்கி தண்ணீர் குடிக்க வேண்டியதுதான் ..தட்ஸ் ஆல்..... மறு நாள் காலை எழுந்து பார்க்கும் போது வித்தியாசம் தெரியும் ..
காரணம் இது ரத்தத்தின் அடர்த்தியை கொஞ்சம் குறைப்பதால இதயம் பம்ப் செய்ய அதிக மெனக்கெடுவதில்லை சாதாரனமாகவே பம்ப் செய்வதால் . ரத்தம் உடல் முழுக்க அதன் முழு பலத்துடன் பாய்வதால் மூட்டுக்களில் தேங்கி இருக்கும் கொழுப்பு தானாக கரைந்து அந்த இடத்திலிருந்து நகர்ந்து விடுகிறது ..நான்கு பூண்டுப்பல் ஒரு விலையே இல்லை அப்படியே இருந்தாலும் அது அதிகபட்சம் ஐந்து ரூபாய் வருமா..? 
அடுத்த தடவை யாருக்காவது மூட்டு வலி மாதிரி இருந்தால் , தெரிந்தால் டக்டரிடம் போவதுக்கு முன் இதை செய்யுங்கள்.. தெரியாத வருக்கும் தெரியப்படுத்துங்கள்.!
காலத்தே தரப்படும் சில அனுபவ மருந்துகள் விலைமதிப்பில்லாதது.!

சிகரெட் குடித்தால்..!

ஒரு தேசத்தில் சிகரெட் விற்பனை கிடையாது யாரும் குடிப்பதும் கிடையாது..
.
அங்கு உள்ள சிகரெட் கம்பனி ஒரு ஆளை வேலைக்கு சேர்த்தது..
அவன் பிரச்சார உக்தியை கையாண்டான்...
.
அதற்கு ஒரு விளம்பரம் செய்தான் ..
.
சிகரெட் குடித்தால்..!
.
1 திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்
.
2 உங்களுக்கு முதுமையே வராது
.
3 பெண் குழந்தை பிறக்காது
.
இந்த விளம்பரத்தை பார்த்து எல்லோரும் சிகரெட் குடிக்க
ஆரம்பித்து விட்டார்கள்....
அந்த தேசத்தில் இருந்த சமூக ஆர்வலர் ஒருவர் இந்த
கதை தவறு என்பதை நீருபிக்க உச்ச நீதி மன்றத்தில்
வழக்கு தொடர்ந்தார்...
நீதி மன்றத்தின் முன் வழக்கு வந்தது... சிகரெட் விற்பனை பிரதிநிதி நீதி மன்றதின் முன் ஆஜரானார்...
.
நீதிபதி அவரிடம், “ இப்படி ஒரு கருத்தை விளம்பரம்
செய்து உள்ளாய்... இது அறிவியலுக்கு ஏற்றதாய்
இல்லையே..!! “ என்று கேட்டார்
.
அதற்கு அவன் சொன்னான்,
* முதலில் நான் என்ன சொன்னேன்...?
திருடன் உங்கள் வீட்டுக்கு வரமாட்டான்..
ஆமாம் வரமாட்டான்.. காரணம் எப்பொழுது சிகரெட் குடிக்க ஆரம்பித்து விட்டார்களோ அப்பொழுதே இருமல்
வந்து விடும்.. இருமிக் கொண்டே இருப்பதால்
இவர்களுக்கு தூக்கம் வராது... முழித்து கொண்டு இருக்கிறார்கள் என்று திருடன் வரமாட்டான்...

.
* 2 வது என்ன சொன்னேன்
.
முதுமையே வராது... எப்படி வரும்...?
சிகரெட் குடித்தால் இளமையிலே செத்து விடுவான்
எப்படி முதுமை வரும்...?
.
* 3 வது என்னசொன்னேன்
.
பெண் குழந்தை பிறக்காது... எப்படி பிறக்கும்...? சிகரெட் டில் நிக்கோடின் எனும் நச்சு தன்மை இருப்பதால் மலட்டு தன்மை வந்துவிடும் பிள்ளை பேறே இருக்காது இதில் ஆண் என்ன பெண் என்ன பிள்ளையே பிறக்காது.... “
என்று சொல்லி முடித்தான்...
.
அவன் சொன்னது சரிதான் நாம் தான் யோசித்து முடிவு எடுக்க தவறிவிட்டோம் என்று வழக்கை தள்ளுபடி செய்தார் நீதிபதி...
.
இப்படி தந்திரமான பேச்சைதான் பலரும் கையாள்கிறார்கள்.... நாம்தான் விழிப்புடன் இருக்க வேண்டும்....

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...