Thursday, December 27, 2018

இறைவன் கணக்கு:

ஒரு கோவில் மண்டபத்தின் வாசலில் இரண்டு
வழிப் போக்கர்கள் அமர்ந்திருந்தனர்.
இரவு நேரம்…, பெருத்த மழை வேறு...,
அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார்.
வந்தவர் "நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார்.
அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள்.
சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா?
என்றார் வந்தவர்.
இருவரில் முன்னவர் சொன்னார்,
என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார்.
இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர்,
ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள்,
இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார்.
மூன்றாம் நபர், இதற்கு நான் ஒரு வழி சொல்கிறேன், என்றார்.
( தேவை உள்ளவன்தான் தீர்வு சொல்வான்!)
நீங்கள் உங்கள் ரொட்டிகளை,
ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள்.
இப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்!
நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார்.
இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர்…
ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள்...
பொழுது விடிந்தது, மழையும் நின்றது.
மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி,
என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து,
நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள்,
என்று சொல்லிவிட்டு விடை பெற்றார்.
மூன்று ரொட்டிகளை கொடுதவர்,
அந்த காசுகளை சமமாகப்பிரித்து,
ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார்.
மற்றவர் இதற்கு சம்மதிக்கவில்லை.
மூன்று ரொட்டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள்.
ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார்.(3:5)
மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை,
என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும்,
நான் பங்கிட சம்மதித்தேன்…
நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது.
அதனால் என் செய்கையே பாராட்டத்தக்கது,
என்றாலும் பரவாயில்லை, சமமாகவே பங்கிடுவோம் என்றார்.
சுமுகமான முடிவு எட்டாததால், விஷயம் அரச சபைக்கு சென்றது.
அரசனுக்கு யார் சொல்வது சரி, என்று புரியவில்லை.
நாளை தீர்ப்பு சொல்வதாய் அறிவித்து, அரண்மனைக்கு சென்றான்.
மன்னருக்கு இரவு முழுவதும் இதே சிந்தனை.
வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது…
மன்னருக்கு, கனவில் கடவுள் காட்சி அளித்து,
தீர்ப்பும்,விளக்கமும் தந்தார். கடவுள் சொன்ன தீர்ப்பும், விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
அடுத்த நாள் சபை கூடியது.
மன்னர் இருவரையும் அழைத்தார்.
மூன்று ரொட்டிகளை கொடுத்தவருக்கு ஒரு காசும்,
ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார்.
ஒரு காசு வழங்கப்பட்டவர், "மன்னா...! இது அநியாயம்.
அவரே எனக்கு மூன்று காசுகள் கொடுக்க ஒப்புக் கொன்டார்" என்றார்.
அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள்.
அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது.
அவன் தந்தது பதினைந்து துண்டுகள்.
அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது.
ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி.
இதற்கு இதுவே அதிகம் .
அவர் தருமம் செய்தது ஏழு துண்டுகள்.
ஒரு துண்டுக்கு ஒரு காசு வீதம் பிரித்துக் கொடுத்திருக்கிறேன்(1:7) என்றார்...
ஆம் ! கடவுளின் கணக்கு இப்படி துல்லியமாகதான் இருக்கும்…
நீங்கள் இழந்ததை எல்லாம் தருவது அல்ல, அவன் கணக்கு...
எது உங்களுக்கு தகுதியானதோ அதுதான் உங்களுக்கு.
இது கடவுளின் கணக்கு...
இது கடவுளின் ஏட்டு கணக்கு இல்லை...
தர்ம புண்ணிய கணக்கு...!
நாம் செய்யும் செயலில் இறைவன்🕉🕋✝ இருக்கிறார் என்பதை மறவாதீர்கள🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

*அறிவியல் பார்வை.*

_*GOLDEN AGE COMING SOON?*_
_*2035ல் என்னென்ன தொழில்கள் இருக்கும்,இருக்காது ?*_
*நிலைமை இப்படியே தொடரும்னு எதிர்பார்க்கறது தவறு, நாம நம்மள மாத்திக்கணும்...!*
*1998ல தொடங்கின kotak நிறுவனம், ஒரு லட்ஷத்தி எழுபதாயிரம் வேலை ஆட்களோட சக்கை போடு போட்டது...!*
*இன்னைக்கு அப்படி ஒரு நிறுவனமே இல்ல...!* *வெள்ளை பேப்பர்ல print எடுத்து தான் photo பார்க்கமுடியும்கறது இவ்வளவு சீக்கிரமா வழக்கொழிந்து போகும்னு அவங்க நினைக்கவே இல்ல.*
*பேப்பர் போட்டோ தொழிலுக்கு என்ன நடந்ததோ, அதுதான் பெரும்பாலான தொழில்களுக்கு அடுத்த பத்து வருஷத்துல நடக்கும்.*
*தெருவுக்கு தெரு மொளைச்ச PCO, STD பூத்தெல்லாம் இப்ப எங்க போச்சு?*
*எதனால ? ஏன் இப்படினு கேட்டா?*
*டெக்னிகலா சொல்லனும்னா Artificial Intelligence. சிம்புளா சொல்லனும்னா 'Software' என்கிற மென்பொருள். மனுஷ மூளையை விட திறமையா செயல்படும் இதுங்க தான் மேலதிகமான காரணமா இருக்கும்.!*
*உதாரணத்துக்கு சொல்லனும்னா...சொந்தமா ஒரு கல்யாண மண்டபம் கூட வெச்சிக்காம, 'Bharat Matrimony' வருஷத்துக்கு ஆயிரக்கணக்கான கல்யாணங்களை நடத்திக்கொடுக்குது.*
*கமிஷனோட...! இல்லீங்களா..?*
*"Uber"ங்கறது ஒரு சாதாரண மென்பொருள், ஒரு ஸ்கூட்டர் கூட சொந்தமா வெச்சிக்காம, இன்னைக்கு உலகத்துலயே பெரிய டாக்ஸி சேவை கம்பெனியா கொடி கட்டி பறக்குது...!*
*இந்த மாதிரி software tool எல்லாம் எப்படி நல்லா போய்ட்டு இருக்கிற தொழில்களை பாதிக்கும் ?*
*அதுக்கும் ஒரு நல்ல உதாரணத்தை சொல்லலாம்: உங்களுக்கு ஒரு சட்டச்சிக்கல் வருது...என்ன பண்றதுனு தெரியலை...! என்ன செய்வீங்க? ஒரு நல்ல வக்கீலா பார்த்து..யோசனை கேப்பீங்க...! சிக்கலோட தீவிரத்தை பொறுத்தோ அவரோட பிரபலத்தை பொறுத்தோ உங்க கிட்ட அவரு fees வாங்குவாரு..! இல்லையா...!*
*இப்ப, அதையே ஒரு கம்ப்யூட்டர் சல்லிசா செஞ்சு கொடுத்தா ? உங்களோட சிக்கல் என்னனு சின்னதா சில வரிகள் type பண்ணின உடனே, IPC Section ஓட சரியான விவரங்கள அந்த கம்ப்யூட்டர் கொடுத்தா ? நாட்ல பெரும்பாலான வக்கீல்கள் தலைல துண்ட போட்டுக்கிட்டு தானே போகணும்...!*
*IBM Watson, இப்ப அமெரிக்காவுல அதைத்தான் செஞ்சுகிட்டு இருக்கு. ஒரு லாயரால அதிகபட்சம் 70% தான் ஒரு சட்டச்சிக்கலுக்கு தீர்வு சொல்லமுடியும்னா, இந்த மென்பொருள் 90% சரியான தீர்வை சில வினாடில சொல்லுது...!*
*அதனால, அமெரிக்க பார் கவுன்சிலோட கணக்கு படி, இன்னும் 10 வருஷத்துல அமெரிக்காவுல 90% வக்கீல்கள் காணாம போய்டுவாங்க..! அட யாருமே வராத கடையில இவங்க யாருக்கு டீ போடுவாங்க ?*
*ஆடிட்டர்கள், டாக்டர்கள்ள இருந்து ப்ரோக்கர்கள் வரை நிலைமை அதே தான்...! 80% மேலான சின்ன சின்ன விஷயங்களுக்கெல்லாம் இனி ஆளுங்க தேவை இல்லை..கம்ப்யூட்டரே பாத்துக்கும். 'Subject Matter Experts'னு சொல்லப்படற விற்பன்னர்கள் தான் இனி பொழைக்க முடியும்...!*
*2018ல Satellite மூலமா இயக்கப்படும் தானியங்கி கார்கள் ரோட்டுக்கு வந்துடும்.(நம்ம ஊர்ல இல்லீங்க..பணக்கார நாடுகளோட சில நகரங்களில் மட்டும்) அதோட result மட்டும் சக்ஸஸ் ஆயிடுச்சுன்னா...ஒட்டுமொத்த ஆட்டோமோட்டிவ் சம்பத்தப்பட்ட எல்லா நேரடியான, மறைமுகமான தொழில்கள் நிச்சயம் பாதிக்கப்படும்.*
*அடுத்த 10 வருஷத்துல நிலைமை இதுதான்: யாருக்கும் கார் ஓட்ட வேண்டிய / வாங்கவேண்டிய தேவை இருக்காது,. 'Driving License' என்ற ஒன்று காணாமல் போயிருக்கும். பார்க்கிங் பிரச்சனை என்பதே இருக்காது. ஒரு எடத்துக்கு போகணும்னா..உங்க செல்லில் இருந்து..ஒரு மிஸ் கால்..இல்ல..SMS...! அடுத்த ரெண்டு நிமிஷத்துல உங்க முன்னாடி தானா ஒரு கார் வந்து நிக்கும். நீங்க போகவேண்டிய எடத்துக்கு சமர்த்தா கொண்டுபோய் விட்டுடும். கிலோமீட்டருக்கு இவ்வளோனு நீங்க காசு கொடுத்தா போதும். பொருட்கள் அனுப்புறது முன்னை விட சீக்கிரமாவும் பத்திரமாவும் இருக்கும்.*
*இதனால என்னவாகும்ன்னா...அடிக்கடி தேவைப்படாம பார்கிங்க்ல தூங்கற 37% வாகனங்கள் இருக்காது. சொந்தமா ஒரு டிரைவர், இல்ல டாக்ஸி டிரைவர்னு ஒருத்தனும் இருக்கமாட்டான். சிக்னல், ட்ராபிக்ஜாம் பத்தி எல்லாம் யோசிக்கவே மாட்டோம். 'Accident' ரொம்ப கொறஞ்சு போய்டும். சிட்டில 'கார் பார்க்கிங்'காக மட்டுமே ஆக்ரமிக்கப்பட்டிருக்கிற 17% நிலங்கள் காலியாயிடும். உலக அளவுல மோட்டார் வாகனங்களின் விற்பனை 90% கும் கீழ போய்டும். 10 கோடி பேர் வரைக்கும் வேலை போகும்.*
*Tesla, Apple, Microsoft, google இவங்க கட்டுபாட்ல தான் இந்த டிரைவர்கள் இல்லாத தானியங்கி கார்கள் இருக்கும். எல்லாமே மின்சாரத்துல தான் ஓடும். முப்பதே வருஷத்துல 7% உலகளாவிய மின் உற்பத்தியை கொடுக்கும் சூரிய மின்தொழில்நுட்பம், இன்னும் 10-15 வருஷத்துல 25% மேல் மின்சார தேவையை பூர்த்தி செய்யும்.*
*இதெல்லாம் நம்ம ஊருக்கு லேசுல வராதுங்கனு நீங்க நெனைச்சா..? உங்க நினைப்பை மாத்திக்குங்க...இன்னைக்கு பெரும்பாலான உலக நிறுவனங்களோட எதிர்கால பொருட்களை (Future Products) விற்பனைக்கு வெக்கப்போற முக்கிய சந்தை ஆசிய மார்க்கெட் தான்..குறிப்பா சீனா & இந்தியா. ஒரு காலத்துல இவங்களால கொஞ்சம் லேட்டா கண்டுக்க படற நிலைமையை செல்போன்கள் மாத்திடுச்சு. 15 வருஷ அமெரிக்க லாபத்தை செல்போன் கம்பெனிகள் 5 வருஷத்துல இந்தியால சம்பாரிச்சிட்டாங்க. இனிமே விடுவாங்களா ?*
*சரி, மேற்கொண்டு என்னென்ன தொழில்கள் பாதிப்புக்கு உள்ளாகும் ?*
*முக்கியமா 'Banking' எனப்படும் வங்கி சேவைகள். 'BitCoin' னு ஒண்ணை பத்தி கேள்விப்பட்டு இருக்கீங்களா? இல்லனா கூகுளை கேளுங்க...! அடிச்சு சொல்லும் அடுத்த 10 வருஷத்துல உலக கரன்ஸி இப்படி ஏதாவது ஒண்ணு தான்னு.*
*அப்புறம், 'Insurance' எனப்படும் காப்பீட்டு திட்டங்கள். மொத்தமா செம்மஅடி வாங்கும்.*
*ரியல்-எஸ்டேட் (வீட்டுமனை) சுத்தமாக மாறிப்போகும். சிட்டிக்குள்ள குவியும் கலாச்சாரம் மாறிப்போய் பரவி வாழும் நிலை உருவாகும். வீட்டு பக்கத்திலியே Green House வெச்சு காய்கறி உணவு பொருள்கள் தயாராகும்.*
*விவசாயம்: இன்னைக்கு பணக்கார நாட்டு விவசாயிகள், மெஷின்களை மேய்க்கும் மேனஜர்களாக தான் இருக்கிறார்கள். நம்ம ஊருக்கு சீக்கிரமே இந்த நெலமை வந்துடும்.*
*காத்துல இருக்கிற ஈரப்பதத்தை உறிஞ்சி தண்ணீர் குடிச்சுக்கலாம் தாகம் எடுக்கறப்போ.*
*"Moodies" ங்கற ஒரு App, இப்பவே உங்க முகத்தை scan செஞ்சு உங்க மூடு என்னனு சொல்லுது...2020ல நீங்க பொய் சொல்றீங்களா இல்ல உண்மைய சொல்றீங்களானு அச்சு பிசகாம சொல்லிடும். யாராலயும் ஏமாத்த முடியாது.*
*இப்பவே மனுஷங்களோட சராசரி ஆயுட்காலம் வருஷத்துக்கு 3 மாசம் கூடிகிட்டே போகுது (2012ல 79ஆ இருந்த சராசரி ஆயுட்காலம் இப்ப 80 ஆயிடுச்சு). 2036ல மனுஷனுங்க நிச்சயம் 100 வருஷத்துக்கு மேல வாழ்வாங்க.*
*Tricoder X னு ஒண்ணு அடுத்த வருஷம் மார்கெட்க்கு வருது. உங்க செல் போன்ல உட்கார்ந்துகிட்டு வேலை செய்யும் இது, உங்க கண்ணை ஸ்கேன் பண்ணும். உங்க ரத்த மாதிரியை ஆராயும். உங்க மூச்சு காத்தை அலசும். உங்க உடம்புல என்ன வியாதி, எந்த மூலைல எந்த நிலைல இருந்தாலும் சொல்லிப்புடும். அப்புறம் என்ன 2035ல 100 வருஷம் வாழறதெலாம் ஜுஜுபி. டாக்டர்கள் Clinic_ வைக்கத் தேவையில்லாம, online-ல யே ஒரு op - ய Treat பண்ண முடியும். In-patient-க்குத்தான் Hospital*
*So, THE ONLY PERMANENT THING IS CHANGE...let us change ourselves to fit for Future.*
_*GOLDEN AGE COMING SOON.*_

Wednesday, December 26, 2018

" காதல் "

ஒரு கிராமத்தில் ஒரு ஆணும் பெண்ணும் 2 வருடமாக காதலிக்கின்றனர். ஒருநாள் காதலன் எனக்கு டவுனில் வேலை கிடைத்துவிட்டதுநான் உடனே செல்ல வேண்டும் நீ என்ன சொல்கிறாய்? என்று கேட்கிறான். நாம் வாழ காதல் மட்டும் போதாது பணம் வேண்டும் என்று விளங்கிக்கொண்டவள் சரி நீ சென்று வா! ஆனால் உன் குழந்தையை நான் சுமக்கிறேன் என்னை மறந்துவிடாதே என்கிறாள்.பதறிப் போன காதலன் என்ன சொல்கிறாய்!!! எப்படி... என்று கேட்க ஒருநாள் அவன் தனிமையில் செய்த தவறை சொல்லி அழுகிறாள். உடனே காதலன் தன் நன்பனின் உதவியால் அவளை அங்கேயே ரகசிய திருமணம் செய்துக் கொள்கிறான்.தன் தாயாரிடம் நான் இவளை காதலித்து திருமணம் செய்துக்கொண்டேன் இப்போது இவள் மாசமாக இருக்கிறாள்பார்த்துக்கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு டவுன்க்கு சென்றுவிடுகிறான். மாதங்கள் பல ஓட அவள் வயிறு வளர ஆரம்பித்தது. கனவனின் தாயார் படுத்த படுக்கையில் இறந்துவிடுகிறார்.அதற்குள் அவள் பெற்றோர்களுக்குவிசயம் தெரிந்துவிடுகிறது. அவளை அடித்து துன்புரித்தி குடும்ப கௌரவத்திற்காக வீட்டை வீட்டு விரட்டினர். நடந்த சண்டையில் அவள் ஒரு கை உடைந்து போனது. கை வலியோடு தன் கனவனை தேடி டவுக்கு செல்கிறாள்.டவுனில் விலாசம் தெரியாமல் பச்சை உடம்புக்காரி சோறுதண்ணீர் இல்லாமல் நடுரோட்டில் மயங்கி கீழே விழுகிறாள். அதே நேரத்தில் கனவனுக்கு எதோ கெட்டது நடப்பது போல் உணர்கிறான். ஆமாம்! இதற்கு பெயர் தான் காதல்.உடனே கிராமத்தில் இருக்கும் தன் நன்பனுக்கு Phone செய்து எல்லாவற்றையும் அறிந்துக்கொண்டுoffice என்று கூட பார்க்காமல் ஆஆஆ... கதறி அழுகிறான். நடுரோட்டில் விழுந்தவளை ஒரு தொண்டு நிறுவனம் பாதுகாத்து பிரசவம் பார்த்து எல்லா Tv. News Papr...தகவல் கொடுக்கப்படுகிறது.மறுபக்கம் கனவனும் அவனது நன்பர்களும் அவளை தேடுகின்றனர். 2 நாட்களுக்கு பிறகு இரவு 12 மணி போல்இரயில் நிலையத்தில் ஒரு பிச்சைக்காரிப் போல் அழுக்கு சேலையில் கை குழந்தையுடன் தன் கனவனிடம் அய்யா!!! என் புருசனை பார்த்தீர்களா! என்கிறாள்.சடார் என்று திரும்பி பார்த்தவன் அய்யயோ!!! என்று அலறி அவளை கட்டிப்பிடித்துஎன்னை மண்ணித்துவிடுமா!!! என்று கதறி அழுகிறான். அப்போதுதான் அவளுக்கு தெரிந்தது அவன் தன்னுடைய கனவன் என்று. அவனை இருக்கி அனைத்து எங்கடா போன!!! என்று சொல்லி அழுகிறாள்.சிறிது நேரத்திற்கு பிறகு தன் குழந்தையிடம் இதோ பார்! உன் அப்பா!!! உன் தந்தை வந்துவிட்டாரடா!!! என்று குழந்தையிடம் சொல்ல. மறுபடியும் குழந்தையும் மனைவியும் அனைத்து கொண்டு என்னை மண்ணித்துவிடு செல்வங்களை!!! என்று அழுகிறான்.அந்த பெண்ணின் உண்மையான காதலை பார்த்த நன்பர்கள் அத்தனை பேர் கண்களிளும் கண்ணீர் வந்தது.((காதலித்த பெண்ணிற்கு குழந்தை கொடுப்பதில்லை ஆண்மைஅவள் சாகும் வரை நம் காதல் அழியாமல் இருப்பதே ஆண்மை. காதலிக்கும் பெண்ணிடம் இவனையா நாம் காதலித்தோம் என்று அவள் நினைத்துவிட்டால் நம் காதல் ஒரு போதும் வெற்றி பெறாது .

சட்டம்- தீர்ப்புரைகள்.

செத்து தொலை"* _என்று கணவன் கூறியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டால், கணவன் மனைவியை தற்கொலை செய்ய தூண்டினார் என்று குறிப்பிட்டு கணவனுக்கு தண்டனை அளிக்க முடியுமா?_
முக்கிய தீர்ப்பு நகல் கீழே 👇👇👇சட்டரீதியான தேனவகளுக்கு மட்டும் படித்து பயன் பெறுங்கள் நண்பர்களே
🙏
கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு சண்டைகள் வருவது சாதாரண விஷயமாகும். ஒரு சாதாரண சண்டையில் "செத்து தொலை" என்கிற வார்த்தையை கோபத்தில் கணவன் கூறியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டால் அந்த கணவருக்கு மனைவி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற உள் நோக்கம் இருந்தது என்று கருத முடியாது.
உச்சநீதிமன்றம் "சுவாமி பிரகலதாஸ் Vs மத்திய பிரதேசம் (1995-SCC-CRL-943)" என்ற வழக்கில், கணவன் கோபத்தில் செத்து தொலை என்று கூறும் வார்த்தையை மனைவி தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு கூறிய வார்த்தையாக கருத முடியாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.
அதேபோல் சென்னை உயர்நீதிமன்றம் " ருக்மணி Vs தமிழ்நாடு அரசு (2008-2-LW-CRL-1776)" என்ற வழக்கில், ஒரு சாதாரண சண்டையில் கூறிய "செத்து தொலை" என்கிற வார்த்தையைக் கொண்டு ஒருவர் தற்கொலைக்கு உடந்தையாக இருந்தார் என அனுமானிக்க முடியாது என தீர்ப்பு கூறியுள்ளது.
(🙏)
அதேபோல் உச்சநீதிமன்றம் "சந்துல் ராமகிருஷ்ணர் Vs சோந்தி சாந்தி மற்றும் பலர் (AIR-2009-SC-923)" என்ற வழக்கில், "செத்து தொலை" என்கிற வார்த்தையைக் ஒருவர் கூறியதால் மட்டுமே தற்கொலை செய்து கொள்ள உடந்தையாக இருந்தார் என்று எடுத்துக் கொள்ள முடியாது. எதிரிக்கு ஒருவரை தற்கொலைக்கு தூண்டும் உள்நோக்கம் இருந்தது என்பதை வழக்கின் சூழ்நிலைகளை வைத்து தீர்மானிக்க வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.
எனவே சாதாரணமாக ஒரு குடும்பச் சண்டையில் கோபத்தில் செத்து தொலை என்று கணவர் திட்டியதால் மனைவி தற்கொலை செய்து கொண்டால் அதற்கு கணவர் தான் காரணம் என்று கூறி, அவர் தற்கொலைக்கு உடந்தையாக இருந்தார் என்று கருதி தண்டனை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.
CRL. A. NO - 1055/2004
சேகர் Vs மாநில அரசுக்காக, ஆய்வாளர், திருச்செங்கோடு காவல் நிலையம்.

தொழில் தர்மம்........

*நீதிபதி ஷைனி*
கனிமொழி ராசா ஆகியோரை 2G வழக்குகளில் இருந்து விடுவித்தார்.
*நீதிபதி ஷைனி*
மாறன் சகோதரர்களை 2G வழக்கில் இருந்து விடுவித்தார்.
*நீதிபதி ஷைனி*
ப சிதம்பரத்தை 2G வழக்கில் இருந்து விடுவித்தார்.
*நீதிபதி ஷைனி*
தொடர்ந்து 8வது முறையாக ப. சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை Aircel Maxis வழக்கில் கைது செய்ய தடை வழங்கி இருக்கிறார்.
*நீதிபதி ஷைனி க்கு , Y+ க்ரேட் பாதுகாப்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தில் வழங்கப் பட்டது.*
*நீதிபதி ஷைனி மகன் பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரசின் சட்டமன்ற உறுப்பினர்*.
வேற சொல்ல ஒண்ணும் இல்லீங்கோ!

நலமான வாழ்விற்கு கடைபிடிக்க வேண்டியவை 30 தகவல்கள் !!

1. இனிப்பை முதலில் சாப்பிட வேண்டும் .
2. உணவு, தண்ணீர் எதுவானாலும் ரசித்து, சுவைத்துச் சாப்பிட வேண்டும்.
3. ஆறு சுவைகளையும் உணவில் முடிந்தவரை சேர்த்துக் கொள்ளவேண்டும்.
4. உணவை மென்று கூழாக்கி எச்சில் நன்றாகக் கலந்து சாப்பிடவேண்டும். (நொறுங்கத் தின்றால் நூறு வயது வரை வாழலாம். உமிழ்நீர், வெள்ளை அணுக்களுக்கு இணையாகப் பணியாற்றக் கூடிய உமிழ் நீர் கலந்த உணவு நன்கு செரிமானமாகும்).
சாப்பிடும் போது சாப்பாட்டில் கவனத்தை வைக்க வேண்டும். நம் பார்வையும் கவனமும் வேறு எங்கும் இல்லாமல் உணவை உற்று நோக்கி சாப்பிடவேண்டும்.
உணவை கையால் எடுத்து சாப்பிடவேண்டும். நம் கை உணவில் படுவது மிகவும் நல்லது.
சாப்பிடும்முன் 30 நிமிடமும், சாப்பிடும்போதும், சாப்பிட்டபின் 30 நிமிடமும் தண்ணீர் குடிக்கக் கூடாது. (தேவைப்பட்டால், தொண்டையை நனைக்கும்படி சிறிது குடிக்கலாம். தண்ணீர் குடிப்பது செரிமானத்திற்காக உற்பத்தியாகும் அமிலத்தை நீர்த்து தீங்கை ஏற்படுத்தும்).
தொலைக்காட்சி பார்த்துக்கொண்டு, புத்தகம் வாசித்துக்கொண்டு, யாருடனாவது பேசிக்கொண்டே சாப்பிடக்கூடாது.
சம்மணமிட்டு சாப்பிட வேண்டும் .இது உடலில் பரவும் சக்தியை வயிற்றுப் பகுதியில் தடுத்து, தேக்கி செரிமானத்திற்கு உதவும். காலைத்தொங்கவிட்டு நாற்காலியில் அமர்ந்து உண்பது நல்லதல்ல.
கை கால் முகம் கழுவிச் சாப்பிட வேண்டும் .
அளவு சாப்பாட்டைத் தவிர்த்து பசிக்குச் சாப்பிடுங்கள். ஏப்பம் வந்தால் அத்துடன் நிறுத்தலாம். எப்படி சாப்பிடுவது என்று அறிந்து சாப்பிட்டால் உணவுக் கட்டுப்பாடின்றி எதையும் சாப்பிடலாம்.
தண்ணீர் சுத்தமாக இருந்தால், தண்ணீரைக் கொதிக்க வைத்தோ, வடிகட்டியோ குடிக்கக் கூடாது. தண்ணீரை மண் பானையில் ஊற்றி வைத்துக் குடிக்கலாம் .
பசி வந்து சாப்பிட வேண்டும், தாகம் வந்து தண்ணீர் அருந்த வேண்டும், சோர்வு வந்து ஓய்வு எடுக்க வேண்டும், தூக்கம் வந்து தூங்க வேண்டும்.
காலையில் பல் துலக்குவதை விட இரவில் கட்டாயம் பல் துலக்கி படுக்கைக்கு செல்லவேண்டும்.
இரவு படுக்கைக்கு நேரத்தில் சென்று விடியற்காலை எழுந்து குளிக்கும் பழக்கத்தை வைத்துக்கொள்ள வேண்டும். காலை நேரத்தில்தான் பித்தம் உடலில் பரவும், அப்போது குளிப்பது உடம்பிற்கு நல்லது.
தூங்கத் தயாராவதற்கு முன் மனதைப் பாதிக்கும் பேச்சு, அதிர்ந்த சிந்தனைகள், செயல்பாடுகள் போன்றவை இல்லாமல அமைதியான சூழ்நிலையில் இருந்து படுக்கைக்கு சென்றால் தூக்கம் நன்றாக வரும்.
படுக்கையில், தலைமாட்டில் செல்போன் போன்ற கதிர்வீச்சுக்கள் உள்ளவற்றை வைத்துக்கொள்ளாமல், வேறு அறையில் அல்லது தூரத்தில் வைத்துவிட வேண்டும்.
காலையில் வெறும் வயிற்றில் தண்ணீர் அருந்தி ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்கவும், தண்ணீர் குடித்து நாளை முடிக்கவும்.
நாற்பது வயதிற்கு மேல் சைவ உணவை உண்டு, அசைவ உணவை குறைத்துக்கொள்வது நல்லது.
கோபம், எதிர்ப்பார்ப்பு, துக்கம், ஏமாற்றம், தோல்வி, அவமானம் போன்ற உணர்ச்சிகள் உடல் நலத்தை மிகவும் பாதிக்க வல்லது. இவைகளை போக்கும் வழிமுறைகளை அறிந்து, நல்ல நூல்கள் , நண்பர்கள், மருத்துவர்கள் உதவியுடன் உணர்ச்சிகளை குறைத்து அதில் மூழ்கிவிடாமல் வாழ்வது நலம்.
எதிர்காலத்தை நோக்கி திட்டமிட்ட நிகழ் காலத்தை இழந்து விடாமல், ஒவ்வொருநொடியும் ரசித்து வாழ்தல், சிரித்த முகத்துடன் இருத்தல், நேர்மையான சிந்தனையை கொண்டிருத்தல், உள்ளொன்று வைத்து புறம் பேசாமல் இருத்தல், குழந்தைத் தன்மையை கடைபிடித்தல், இறுக்கமாக இல்லாமல் வெளிப்படையாக இலகுவாக இருத்தல், எண்ணம்-சொல்-செயல்-எழுத்து-வாழ்க்கை ஆகியவற்றில் முரண்பாடு இல்லாமல் இருத்தல் போன்றவை நலம்.
ஆண்டிற்கு சிலமுறை தினம் செய்யும் வேளைகளில் இருந்து விடுபட்டு பிடித்த இடத்திற்கு, பிடித்த நண்பர்களுடன், குடும்பத்துடன், உறவினர்களுடன் சுற்றுலா செல்லுதல் மனதை மகிழ்ச்சிப் படுத்தும்.

இந்த ஒரு சூப் குடிச்சால் எந்த நோயும் உங்களை நெருங்காது!!

வீட்டில் இருக்கும் அனைவருக்கும் ஒருவர் பின் ஒருவராக காய்ச்சல் வருவதை நாம் தவிர்க்க முடிவதில்லை. காய்ச்சல் என்பது உடல் சூட்டை மட்டும் கொடுக்காது தலைவலி மற்றும் சளி போன்ற பிரச்சனைகளையும் கொடுக்கிறது. இதை தடுக்க நாம் பல மருந்துகளை உபயோகித்தாலும், உணவே மருந்து என நமது தமிழ் மக்களின் கொள்கைப் படி இப்போது நாம் காய்ச்சல், தலைவலி, சளி போன்றவற்றை சரி செய்ய ஒரு உணவை தயாரிப்பது எப்படி என இங்கே காண்போம். இது ஒரு திரவ உணவு, சூடான சூப் வகையை சேர்ந்தது. இத சூப் உடல் சூடு மற்றும் நுண்ணுயிர்கள் எதிர்ப்பில் மிக சிறந்த பலன்களை கொடுக்க வல்லது.

தேவையான பொருட்கள்:
சீரகம் – 1/2 டீஸ்பூன்
இஞ்சி – 1 துண்டு
பட்டை – சிறிதளவு
வெள்ளை பூண்டு – 10 பற்கள்
மஞ்சள் தூள் – 1 டீஸ்பூன்
தனியா – சிறிதளவு
கிராம்பு – 7
தண்ணீர் – 750 ml
உப்பு – தேவையான அளவு
சூப் செய்முறை : ஒரு பிரஷர் குக்கரை எடுத்து அடுப்பில் வைக்கவும். குக்கரில் நாம் எடுத்து வைத்திருக்கும் 1/2 ஸ்பூன் சீரகத்தையும், மிளகையும், 1 டீஸ்பூன் மஞ்சள் தூளையும், தனியாவையும் போட வேண்டும். இந்த கலவையை நன்கு கிளறவும். பிறகு ஒரு 15 நொடிகளில் இருந்து 20 நொடிகளுக்கு பிறகு சிறிதளவு பட்டையையும், கிராம்புகளையும், இஞ்சி துண்டையும், தேவைக்கேற்ப உப்பையும் போட்டு அந்த கலவையை நன்கு கிளறவும்.
10 நிமிடங்கள் : ஒரு 10 நொடிகளுக்கு பிறகு நாம் எடுத்து வைத்திருந்த 750 ml தண்ணீரை அதனுள் ஊற்றி நன்கு கலக்கவும். பிறகு அந்த பிரஷர் குக்கரை அடுப்பின் மிதமான சூட்டில் ஒரு 10 நிமிடங்கள் வைக்கவும். (குறிப்பு:- பிரஷர் குக்கர் உபயோகிக்க வில்லை எனில் வேறு ஒரு பாத்திரத்தில் நாம் சமைக்கலாம். ஆனால் தண்ணீர் 750 ml க்கு பதில் 1250 ml தண்ணீர் அதனில் கலக்க வேண்டும். மேலும் 10 நிமிடங்களுக்கு பதில் 45 நிமிடங்கள் அடுப்பின் மிதமான சூட்டில் வைக்க வேண்டும்.)
சூப் ரெடி : பிறகு அந்த திரவத்தை தனியே எடுத்து, அதனுள் இருக்கும் இஞ்சி முதலான பொருட்களை நன்கு மசிய வைக்க வேண்டும். பிறகு அந்த திரவைத்தை ஒரு வடிகட்டி மூலம் வடித்து ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும். இப்போது அந்த திரவத்துடன், சிறிதளவு தேன் கலந்தால் நம் உடலைக் காக்கும் சூப் ரெடி.
இந்த சூப்பில் உள்ள ஊட்டச்சத்துக்களின் விவரங்கள்:
மொத்த கலோரிகள்: 36 கலோரிகள்
மொத்த கொழுப்பு: 0.5 கிராம்
சாச்சுரேட்டட் கொழுப்பு: 01. கிராம்
சோடியம்: 603 mg
மொத்த கார்போ ஹைடிரேட்: 3%
சளித் தொல்லை : இந்த சூப்பை காலை மாலை மற்றும் இரவு வேளைகளில் 3 நாட்களுக்கு பருகுவதால், உடல் வலி பறந்து போய் விடும். மிளகு, இஞ்சி போன்றவை சளி தொல்லைக்கு சிறந்தது என்பதால், சளி மூக்கின் வழியாக நீராக வந்து விடும். இந்த சூப்பை குழந்தைகளுக்கு கூட கொடுக்கலாம்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...