Monday, April 29, 2019

ஏன் ஆண்கள் கட்டாயம் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என தெரியுமா? - தெரிந்துகொள்வோம்.

அரைஞாண் கயிறு என்றாலே இன்று பலரது முகம் சுழித்துக் கொள்ளும். மேலும், யாராவது அரைஞாண் கயிறு கட்டியிருந்தால் "நீ என்ன கிராமத்தானா?" என சற்று ஏளனமாகவும் கேட்போரும் இருக்கிறார்கள். ஆனால், அரைஞாண் கயிறு என்பது வெறும் சம்பிரதாய வழக்கம் அல்ல, இதன் பின்னணியில் மருத்துவமும் இருக்கிறது என்பது பலரும் அறியாத ஒன்று.
இது மட்டுமா? பெண்கள் கொலுசு அணிவது, திருமணத்திற்கு பிறகு மெட்டி அணிவது போன்றவற்றிலும் கூட மருத்துவ நன்மைகள் அடங்கி இருக்கின்றன. ஏனெனில், இது பெண்களின் கர்ப்பப்பை வலுவை அதிகரிக்கிறது. இது போல தான் ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவதும். இதன் பின்னணியில் ஆண்களுக்கு உண்டாகும் ஆரோக்கிய நன்மை குறித்து இனிக் காண்போம்...
நோய் தடுப்பு முறை :
ஆண்கள் அரைஞாண் கயிறு கட்டுவது என்பது ஓர் மருத்துவ முறை ஆகும். இது இன்றைய தலைமுறையில் பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. இயல்பாகவே பெண்களை விட ஆண்களுக்கு அதிகமாக குடல் இறக்க நோய் ஏற்படும்.
குடல் இறக்க நோய் :
பெண்களோடு ஒப்பிடுகையில் ஆண்களுக்கு 90% குடல் இறக்க நோய் அதிகமாக ஏற்படுகிறது. இதை தடுக்கவே ஆண்கள் அரைஞாண் கயிறு கட்ட வேண்டும் என்பது கட்டாயம் ஆக்கப்பட்டது.
உடல் எடை :
உடல் எடை அதிகரிப்பதால் உண்டாகும் அதிகப்பட்ச தீமையாக உண்டாவது குடல் இறக்க நோய் என கூறப்படுகிறது ஆங்கிலத்தில் இதை ஹெரணியா என கூறுகிறார்கள். இது ஏற்படாமல் தடுக்க தான் அரைஞாண் கயிறு கட்டும் பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வந்துள்ளது.
கருப்பு கயிறு :
ஆரம்பக் காலத்தில் அரைஞாண் கயிறு என்பது கருப்பு கயிறில் தான் கட்டப்பட்டு வந்தது. பிறகு பகட்டு மற்றும் வசதியின் காரணத்தால் வெள்ளி, தங்கள் என கட்ட துவங்கினர்
அரைஞாண் கயிறு நீக்கம் :
சிறையில் பாதுகாப்பு கருதி கைதிகளின் அரைஞாண் கயிறு நீக்கவிடுகிறார்கள். மற்றும் மனிதர் இறந்த பிறகு சடங்கின் போது அரைஞாண் கயிறு நீக்கப்படுகிறது.
அரைஞாண் பெயர் விளக்கம் :
ஞாண் என்றால் தொங்குதல் என்று பொருள். அரை என்பதற்கு இடுப்பு, அரை உடல் என்ற பொருளும் இருக்கிறது. இதனால் தான் அரைஞாண் கயிறு என இதற்கு பெயர் பொருள் வந்தது.

வயிற்று வலிக்கு அருமருந்து! வாயு தொல்லைக்கு எமன்! ட்ரை பண்ணி பாருங்க!

இதுக் கோடைகாலம் என்பதால் சிறியவர் முதல் பெரியவர் வரைக்கும் அதிக வெப்பம் காரணமாக வயிற்றுவலி வருவது சர்வசாதாரணம். மேலும் சிலர் வாயு தொல்லையால் அவதிப்படுவர்களுக்கும் பூண்டு கஞ்சியை குடித்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். இந்த பூண்டு கஞ்சியை அடிக்கடி செய்து குடித்தால் உடலுக்கும் நல்லது.
இந்த பூண்டு கஞ்சியை நம் வீட்டிலேயே செய்யலாம், கீழே செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது அதன்படி செய்து வயிற்று வலி, வாயு பிரச்னையில் இருந்து குணமடையுங்கள்.
தேவையான பொருட்கள்:-
பச்சரிசி .................. 1 கப்
பூண்டு .................... 150 கிராம்
மிளகு ..................... 1 டீஸ்பூன்
சீரகம் ...................... 2 டீஸ்பூன்
வெந்தயம் ............. 1 டீஸ்பூன்
நல்லெண்ணெய்... சிறிதளவு
தண்ணீர் ................. தேவையான அளவு
உப்பு ........................ தேவைக்கு
காய்ச்சிய பால் ..... 1 கப்
செய்முறை:-
* அரிசியை நன்றாக கழுவி சிறிது நேரம் ஊறவைத்து நீரை வடித்து கொள்ளவும்.
* பூண்டை தோல் உரித்து வைக்கவும்
* குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அது சூடானதும் மிளகு, வெந்தயம், சீரகம் ஆகியவற்றை கொட்டி கிளறவும்.அத்துடன் பூண்டு பற்களை கொட்டி வதக்க வேண்டும்.
* பூண்டு நன்றாக வதங்கியதும் உப்பு மற்றும் அரிசியை கொட்டி தேவையான அளவு தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி வேக விட வேண்டும்.
* சாதம் நன்றாக வெந்ததும் அதனை மசித்து விட்டு பால் கலந்து பருகவும்.

Shocking to read this......

முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களுக்காக வரும் மே 01ம் தேதி 1008 ஶ்ரீவைணவர்கள் பிரபந்தம் சேவிக்கப் போகிறார்கள்...
என்ன செய்ய வேத விற்பனர்கள் 
வேத விற்பனையாலர்களாக மாறி விட்டனர்
கலியில் பணம் தான் பிரதானம் பிற தானமெல்லாம் விதானம் தான் என்று கூறாமல் கூறுகின்றனர்
இனி என்ன வேத விற்பனர்கள் பிரபந்த முடிவில் சாற்றுமுறை என ஒன்று சேவிப்பது உண்டு
பணத்துக்கு ஆசைபட்டு திருக்குவளை ஆசாரியன் இந்து தெய்வங்களை இகழ்ந்த உத்தமனுக்கு ஒரு வாழி திருநாமமும் பாடினால் ஆச்சரியமில்லை
உள்ளொன்று வைத்து புறமொன்று பேசியோன் வாழியே
விஞ்ஞான ஊழலில் வருமானம் கண்டோன் வாழியே
எத்திக்கும் இசைந்தோடி சொத்து சேர்த்தோன் வாழியே
தனக்கு பின் தலைமை ஏற்க தனயனை அளித்து தொண்டர்களை பித்துகுளிகளாக்கிய பெருந்தகையோன் வாழியே
பூதனையை பெண்ணாய் பெற்றெடுத்து பேயாய் அலைய விட்டோன் வாழியே
வீரமணியை வேடிக்கை மணியாக்கி பகுத்தறிவை பல்லிளிக்க வைத்தோன் வாழியே
திருக்குவளை அவதரித்த திராவிட ஆழ்வார் வாழியே
என்ன ஶ்ரீவைணவ பிராமண சமுதாயமே
உய்ய ஒரே வழி (பணம்)உடையவர் திருவடியே என கூறிவிடலாம்
வாழ்க ஶ்ரீவைணவம்
அரங்கன் மேல் பற்றும் பாசமும் கொண்ட மானமுள்ள எந்த ஶ்ரீவைணவனும் அந்த விழாவிற்க்கு போகமாட்டான்
போகவும் கூடாது
போனால் அவன் ஶ்ரீவைணவனே அல்லன்...

From to today on wards call him VANDHERI.


Image may contain: 1 person, smiling, text

Sunday, April 28, 2019

10 ம் வகுப்பு ரிசல்ட் : முதலிடம் திருப்பூர்.

இன்று வெளியிடப்பட்டுள்ள 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகளில் திருப்பூர் மாவட்டம் 98.53 சததவீதம் தேர்ச்சி விகிதத்துடன் முதலிடம் பிடித்துள்ளது.

மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம் :

திருப்பூர் - 98.53 %
ராமநாதபுரம் - 98.48 %
நாமக்கல் - 98.45%
ஈரோடு - 98.41 %
கன்னியாகுமரி - 98.08%
விருதுநகர் - 96.29%
திருநெல்வேலி - 92.99%
தூத்துக்குடி - 95.52 %
சிவகங்கை - 95.68%



தேனி - 89.91%
மதுரை - 94.45%
திண்டுக்கல் - 86.46%
ஊட்டி - 92.12%
கோவை - 93.65%
சேலம் - 93.91%
கிருஷ்ணகிரி - 91.80 %
தர்மபுரி - 94.53%
புதுக்கோட்டை - 95.57%
கரூர் - 92.87%
அரியலூர் - 95.03%
பெரம்பலூர் - 95.16%
திருச்சி - 95.08%
நாகை - 86.98%
திருவாரூர் - 89.39%
தஞ்சாவூர் - 89.39%
விழுப்புரம் - 92.33%
கடலூர் - 89.65%
திருவண்ணாமலை - 94.28%
வேலூர் - 86.85%
காஞ்சிபுரம் - 86.67%
திருவள்ளூர் - 86.10%
சென்னை - 90.21%
காரைக்கால் - 91.90 %
புதுச்சேரி - 95.62%

மயக்கம் #முதலுதவி #என்ன?

நமது மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் தடைபடும் நேரத்தில் நமக்கு மயக்கமானது ஏற்படுகிறது.
ஒரு நபருக்கு மயக்கம் ஏற்பட போகிறது என்பதை நாம் முன்னதாகவே அறிந்திருக்கும் பட்சத்தில், அவரை உடனடியாக கீழே விழுந்துவிடாதவாறு பிடித்து கொள்ளும் பட்சத்தில், அவருக்கு ஏற்படும் காயத்தில் இருந்து தப்பிக்கொள்ள இயலும்.
அவ்வாறு நபர் மயக்கமடைந்து விடும் பட்சத்தில், அவரை கீழே படுக்கவைத்து கால்களை சிறிது உயரத்தில் இருக்கும் படி வைத்து, தேவையான காற்றோட்டத்தை வழங்கி, அவரது முகத்தில் நீரை அடித்து துடைக்க வேண்டும்.
மேலும், அவருக்கு சோடாவை வழங்க கூடாது. முதலில் தேவையான காற்றை அவர் சுவாசிக்க செய்ய வேண்டும்.
பின்னர் அவரை எழுப்பி அமர வைத்து, பதற்றம் இல்லாமல் சிறிது நேரம் மெதுவாக மூச்சு விட செய்ய வேண்டும். பின்னர் அவருடன் சிறிது பேச்சு கொடுத்து, அவரை அமைதிப்படுத்தி ஒன்றும் இல்லை என்று தன்னம்பிக்கை வழங்க வேண்டும்.
அவருக்கு பதில் ஏதும் தெரிவிக்க முடியாத பட்சத்தில், அவரால் நாம் கூறுவதை அறிந்து கொள்ள இயலும்.
அவரது உடல் வெப்பநிலையானது அதிகமாக இருக்கும் பட்சத்தில்., ஈரத்துணியில் மூலமாக அவரது முகம் மற்றும் கைகளை துடைப்பதன் மூலமாக அவரது உடல் வெப்ப நிலையானது குறைக்கப்படும்.
மேலும், மயக்கமடைந்ததில் 4 வயதிற்கும் கீழ் இருக்கும் குழந்தைகள் இருக்கும் பட்சத்தில், அவர்களின் நெற்றி மற்றும் கக்கத்தில் ஈரத்துணியை சிறிது வைத்து துடைத்து கொடுக்க வேண்டும்.
பின்னர் மருத்துவமனையில் மருத்துவர்கள் கவனித்து கொள்வார்கள். அவ்வாறு நாம் செய்யாமல் இருக்கும் பட்சத்தில்., இந்த பதட்டத்தின் விளைவாக வலிப்பு அல்லது ஜன்னி ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், சர்க்கரை நோய் இருக்கும் நபர்களுக்கு ஏற்படும் திடீர் கோபம் போன்ற காரணத்தால் அவர்கள் அதிக அழுத்தத்திற்கு உள்ளானால் அவர்களின் சர்க்கரை அளவானது குறைந்துள்ளது என்பதை அறிய வேண்டும்.
அவர்களுக்கு உடனடியாக சிறிதளவு சர்க்கரை அல்லது இனிப்பு சுவை கொண்ட சாக்லெட்டை வழங்குவதன் மூலமாக அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்புவார்கள். இந்த அனைத்தையும் சுயநினைவுடன் இருக்கும் நபர்களுக்கு மேற்கொள்ளலாம்.
அவ்வாறு மயக்கம் அடையும் பட்சத்தில் உடனடியாக அவர்களுக்கு முதலுதவி செய்து மருத்துவமனைக்கு அழைத்து செல்வது நல்லது.

மருத்துவமனையிலும் மதப் பிரசாரம்! - உமாசங்கர் ஐஏஎஸ்-ஸை பணியிலிருந்து விடுவித்த ம.பி.

இந்தியாவில் ஏழு கட்டங்களாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றுவருகிறது. மூன்றாவது கட்டமாக இன்று, 13 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வாக்குப்பதிவு நடைபெற்றுவருகிறது. மத்தியப்பிரதேசத்தில், நான்கு கட்டங்களாக ஏப்ரல் 29, மே 6, மே 12, மே 19 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில், மத்தியப்பிரதேசம் சித்தி மக்களவைத் தொகுதியில் தேர்தல் கண்காணிப்பாளராக தமிழகத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
உமாசங்கர், தலைவலிக்காக சித்தி மாவட்ட அரசு மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கு இருந்த நோயாளிகளிடம் அவர் மதப் பிரசாரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதை அறிந்த மருத்துவர்கள் அவரிடம் வந்து, ‘ உங்களுக்கே உடல்நிலை சரியில்லை, இந்நிலையில் நீங்கள் இவ்வாறு செய்ய வேண்டாம். ஓய்வெடுங்கள்’ எனக் கூறியுள்ளனர். அதை ஏற்காத அதிகாரி, மீண்டும் மதப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதுமட்டுமல்லாது, தான் தங்கியுள்ள இடத்தில் இருப்பவர்களிடமும் மதப் பிரசாரம் செய்ததாக எழுந்த புகாரை அடுத்து, மத்தியப்பிரதேச தலைமை தேர்தல் அதிகாரி காந்தா ராவ், ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கரை தேர்தல் கண்காணிப்பாளர் பணியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘ தேர்தல் பணிகளில் ஈடுபடும் அதிகாரிகள், மதப் பிரசாரம் போன்றவற்றைச் செய்யக் கூடாது. ஆனால் உமாசங்கர், தான் தங்கியிருந்த இடத்தில் மதப் பிரசாரம் செய்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்திய பிறகு, அந்த அறிக்கை இந்தியத் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், சித்தி தொகுதியில் புதிய தேர்தல் கண்காணிப்பாளராக ஹிமாச்சலப்பிரதேசத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி, சந்தராகர் பாரதி நியமிக்கப்பட்டுள்ளார்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஐஏஎஸ் அதிகாரி உமாசங்கர், மதப் பிரசாரம் செய்வது இது முதல்முறையல்ல. 2015-ம் ஆண்டு, அவர் இதேபோன்ற செயலில் ஈடுபட்டு வந்ததால், தமிழக அரசு அவரைக் கடுமையாகக் கண்டித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...