Thursday, May 30, 2019

நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவை.

பிரதமர் நரேந்திர மோடியின் புதிய அமைச்சரவையில், 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள் 9 தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள் என மொத்தம் 58 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். தமிழகத்தைச் சேர்ந்த ஜெய்சங்கர், நிர்மலா சீதாராமன் ஆகிய 2 பேர் அமைச்சராகி பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள 58 அமைச்சர்களின் விவரங்கள்.....
கேபினட் அமைச்சர்கள்
1. நரேந்திர மோடி - பிரதமர்
2. அமித் ஷா
3. ராஜ்நாத் சிங்
4. நிதின் கட்காரி
5. சதானந்த கவுடா
6. நிர்மலா சீதாராமன்
7. ராம் விலாஸ் பஸ்வான்
8. நரேந்திர சிங் தாமோர்
9. ரவி ஷங்கர் பிரசாத்
10. ஹர்ஷிம்ராத் கௌர் படேல்
11. எஸ். ஜெய்சங்கர்
12. ரமேஷ் நிஷாங் போக்ரியால்
13. தவார் சந்த் கெலாட்
14. அர்ஜுன் முண்டா
15. ஸ்மிருதி இராணி
16. டாக்டர் ஹர்ஷ் வர்தன்
17. பிரகாஷ் ஜவடேகர்
18. பியூஸ் கோயல்
19. தர்மேந்திர பிரதான்
20. முக்தார் அபாஸ் நக்வி
21. பிரல்காத் ஜோஷி
22. மகேந்திர நாத் பாண்டே
23. அரவிந்த் ஸாவந்த்
24. கிரிராஜ் சிங்
25. கஜேந்திரா சிங் ஷெகாவத்
தனிபொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள்
26. சந்தோஷ் கங்க்வார்
27. ராவ் இந்திரஜித் சிங்
28. ஸ்ரீபாத் நாயக்
29. ஜிதேந்திர சிங்
30. கிரண் ரிஜு
31. பிக்லாத் சிங் படேல்
32. ஆர்கே சிங்
33. ஹர்தீப் சிங் பூரி
34. மன்சுக் மாண்டாவியா
இணையமைச்சர்கள்
35. பஹான் சிங் குலசேத்
36. அஸ்வினி சௌபே
37. முன்னாள் ராணுவ தளபதி விகே சிங்
38. கிஷான் பால் குஜார்
39. தன்வே ராவ்ஹாகேப் தாதாராவ்
40. ஜி. கிஷான் ரெட்டி
41. பர்ஷோத்தம் ரூபலா
42. ராம்தாஸ் அத்வாலே
43. சாத்வி நிரஞ்சன் ஜோதி
44. பபுல் சுப்ரியா
45. சஞ்சீவ் குமார் பல்யான்
46. தோட்ரே சஞ்சய் ஷாம்ரோ
47. அனுராக் சிங் தாகூர்
48. அன்காடி சுரேஷ் சன்னபாசப்பா
49. நித்யாத் ராஜ்
50. வி. முரளீதரன்
51. ரேணுகா சிங் சருதா
52. சோம் பிரகாஷ்
53. ரமேஷ்வர் தெலி
54. பிரதாப் சந்த்ரா சாரங்கி
55. கைலாஷ் சௌத்ரி
56. தபேஸ்ரீ சௌத்ரி
57. அர்ஜுன்ராம் மேக்வால்
58. ரத்தன் லால் கட்டாரியா
மேல உள்ள பட்டியல் வியாழக்கிழமை இரவு வரை மத்திய அமைச்சராக பதவியேற்றோர் பட்டியல் ஆகும். அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துறைகள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பிறகு வெளியாகும்.

கர்மா..

தேசிய அந்தஸ்தை இழக்கும் #இடதுசாரிகள்…
நான்கு மாநிலங்களில் 6% வாக்குகளை கூட பெற முடியாததால் தேசிய அந்தஸ்து பறிபோனது...
#சபரிமலை விவகாரத்தில் கொஞ்சநஞ்ச ஆட்டமாடா போட்டீங்க..
எண்ணம் போல வாழ்க்கை...
இந்துக்களையும் அவர்களின் நம்பிக்கைகளையும் கேலிசெய்து சிரித்ததன் விளைவு இப்போது நாடே உங்களை பார்த்து சிரிக்கின்றது..

No photo description available.

Tuesday, May 28, 2019

அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் பதவியேற்பு.

சட்டசபை இடைத்தேர்தலில் வெற்றி அ.தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் 9 பேர் பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

தமிழகத்தில், லோக்சபா தேர்தலுடன், காலியாக இருந்த, 22 சட்டசபை தொகுதிகளுக்கு, இடைத்தேர்தல் நடந்தது. இதில், தி.மு.க., 13 இடங்களில் வெற்றி பெற்றது. ஒன்பது இடங்களில், ஆளும் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. 
அ.தி.மு.க., அதிமுக, Admk, a.d.m.k., MLA, எம்.எல்.ஏ.,

அதிமுகவை சேர்ந்த விளாத்திகுளம் -சின்னப்பன்
சாத்தூர் - ராஜவர்மன்
அரூர் - சம்பத்குமார்
நிலக்கோட்டை - தேன்மொழி
மானாமதுரை - நாகராஜன்
பாப்பிரெட்டிபட்டி - கோவிந்தசாமி
பரமக்குடி - சதன் பிரபாகரன்
சோளிங்கர் - சம்பத்
சூலூர் - கந்தசாமி ஆகியோர் வெற்றி பெற்றனர்.


இவர்கள்,செயலகத்தில் உள்ள, சபாநாயகர் அறையில் பதவியேற்று கொண்டனர். சபாநாயகர் தனபால், ஒவ்வொருவருக்கும் தனித்தனியே பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் இ.பி.எஸ்., துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

கோவிலுக்கு செல்வதால் ஏற்படும் நன்மைகள்.

கோவிலுக்கு செல்வதால் ஏற்படும் நன்மைகள்

















ஆலயம் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டும் இல்லை. அது உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும், மனிதனை கட்டுக்குள் வைக்கும் ஒரு ஆரோக்கியத்தின் பிறப்பிடம். அத்தகைய இடத்திற்குச் சென்று விக்கிரகங்களையும், தீபத்தையும் மட்டும் தரிசித்து விட்டு வராமல், அங்கு குறைந்தது ஒரு மணி நேரமாவது அமர்ந்து மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்வது நல்லது.

சாஸ்திரப்படி அமைக்கப்படும் ஆலயங்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும் இடத்தில் அமைகின்றன. ஊர்புறத்திலோ, ஊர் நடுவிலோ, மலை உச்சியிலோதான் அந்த காலத்தில் ஆலயங்கள் அமைக்கப்பட்டன. சமதளமான இடத்தைவிட மலை உச்சியில் அமைந்துள்ள கோவில்களுக்கு சக்தி அதிகமாகும்.

கோவிலின் மையப் பகுதியில் கர்ப்பக்கிரகம் அமைக்கப்படுகிறது. கர்ப்பக்கிரகத்தில் இருக்கும் மூலவர் விக்கிரகத்தின் அடியில் யந்திரங்களை பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத் தகடுகளே யந்திரங்களாக கருதப்படுகின்றன. பூமியின் காந்த அலைகளை, இந்தச் செப்புத் தகடுகள் உள்வாங்கி, ஆலயத்தின் சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. கர்ப்பக்கிரகத்தை வலம் வரும் பக்தர்களின் உடலில் இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. இது பக்தர்களுக்கு நன்மை செய்வதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கோவில் பிரகாரத்தை 11 முறை, 108 முறை என்று வலம் வரும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக குறைந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோவிலுக்குச் சென்று வலம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத் துணர்ச்சி பெறுகிறது.

உறையூர் நாச்சியார் கோவிலில் கோடை விழா இன்று தொடங்குகிறது.

உறையூர் நாச்சியார் கோவிலில் கோடை விழா இன்று தொடங்குகிறது

















ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உபகோவிலான உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் கோடை விழா எனப்படும் பூச்சாற்று உற்சவம் இன்று (புதன்கிழமை) தொடங்கி ஜூன் மாதம் 7-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இன்று முதல் ஜூன் மாதம் 2-ந்தேதி வரை வெளிக்கோடை திருநாள் ஆகும்.

இந்த நாட்களில் தினமும் மாலை 6.30 மணிக்கு தாயார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி இரவு 6.45 மணி முதல் இரவு 7 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை தீர்த்த கோஷ்டியும், இரவு 7.15 மணி முதல் 8.15 மணி வரை பொதுஜன சேவையும் நடைபெறும். இரவு 8.15 மணிக்கு தாயார் புறப்பாடாகி 8.30 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

ஜூன் மாதம் 3-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை உள்கோடை திருநாள் ஆகும். இந்த நாட்களில் தாயார் மாலை 5.30 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி 5.45 மணி முதல் 6 மணி வரை புஷ்பம் சாத்துப்படி கண்டருளுவார். இரவு 6.30 மணிக்கு தாயார் உள்கோடை மண்டபத்தில் எழுந்தருளுவார். இரவு 6.45 மணிக்கு அலங்காரம் அமுது செய்யப்படும். இரவு 7.30 மணி முதல் 8.30 மணி வரை பொது ஜன சேவைக்கான நேரம் ஆகும். இரவு 8.45 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி வீணை வாத்தியத்துடன் இரவு 9.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார்.

ஜூன் மாதம் 8-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை வசந்த உற்சவம் ஆகும். இந்த கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் தாயார் மாலை 6 மணிக்கு மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி மாலை 6.30 மணிக்கு வசந்த மண்டபத்தை அடைவார். இரவு 7.30 மணி முதல் 8.15 மணி வரை பொது ஜனசேவைக்கு அனுமதிக்கப்படுவார்கள். இரவு 8.30 மணிக்கு தாயார் மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 8.45 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைவார்.

விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணை ஆணையர் ஜெயராமன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகிறார்கள். 

அற்புதக் கலைஞர்-மனோரமா .

ஆணாதிக்கம் மிக்க தமிழ் திரையுலகில் ஒரு சில
பெண்களே அடையாளமிட்டார்கள்,
ஆனால்
ஒரு கட்டத்தில் விலகிவிட்டார்கள்
சுந்தராம்பாள்,
கண்ணாம்பாள்,
டி.ஆர் ராஜகுமாரி என
ஒரு வரிசை உண்டு.
சாவித்திரி சரோஜா தேவி,
சவுகார் ஜானகி என அடுத்த வரிசை உண்டு ,
ஜெயலலிதா அரசியலில் வந்தார்.
ஜொலித்தார் ..
மற்றபடி எல்லா நடிகைகளும்
ஒரு கட்டத்தில் இடைவெளி எடுத்தவர்கள்... அல்லது ஓடியவர்கள்.
ஆனால்
தமிழ் சினிமாவில்
இறுதிவரை நிலைத்து நின்று பெயரிட்டுகொண்டவர் மனோரமா.
இயற்பெயர் கோபிசாந்தா,
தஞ்சாவூர் அருகே பிறந்தவர்,
குடும்பம் வறுமையில் சிக்க
பின்பு
பள்ளத்தூரில் குடியேறிய குடும்பம் அது,
12 வயதிலே நாடக கம்பெனிகளில் நடிக்க தொடங்கினார்.
இந்த காலகட்டத்தில் இவர் பெயர் பள்ளத்தூர் பாப்பா.
வைரம் நாடக சபாவில்
மனோரமா எனும் பெயரில் நடித்துகொண்டிருந்த இவர்,
நடிப்பு திறமையினால்
பெரும் நாடகங்க‌ளில் நடிக்க வைக்கபட்டார்.
பெரும் நடிகர்கள் என்றால் அண்ணாவின் நாடகங்கள்,
கலைஞரின் நாடகங்களில் எல்லாம் அவர்களோடு நடித்தார்.
அந்தகாலங்களில் அண்ணா,கலைஞர் எல்லாம் நாடகம் போடுவார்கள்,
திராவிட கருத்துக்கள் கடுமையாக எதிரொலிக்கும்.
இருவருமே
மிக சிறந்த நாடக ஆசிரியர்,வசனகர்த்தா எல்லாவற்றிற்கும் மேல் மிகசிறந்த நடிகர்கள்,
அதாவது நாடகத்தில் மட்டும்
நன்றாக நடிப்பவர்கள் என மிக அழுத்தமாக சொல்லிகொள்கிறேன்.
பின்னாளில்
கண்ணதாசனின்
மாலையிட்ட மங்கையில் அறிமுகமானார் மனோரமா, அதுதான் முதல்படம்.
அதன்பின் தமிழக படங்களிலும், தெலுங்கு படங்களிலெல்லாம் நடித்தார்,
ஒரு சிங்கள மொழிபடத்திலும் அவர் நடித்த செய்தி உண்டு,
ஆனால் படம் வரவில்லை.
ஒரு நடிகைக்கு தேவை குரலசைவு, முகபாவம் எல்லாவற்றிற்கும் மேல் உடல்மொழி,
இந்த மூன்று விஷயங்களிலும் சந்தேகமே இல்லாமல்
முதல் இடம் மனோரமாவிற்கு.
தமிழ் திரையுலகம்
மகா விசித்திரமானது,
அதுவும் ரசிகர்கள்
மிக கண்டிப்பானவர்கள்.
ஒருவர் ஒரு வேடத்தில் மிக பிரமாதமாக நடித்தால் அவர் அந்த வேடத்திற்காக ஒதுக்கிவைக்கபடுவார்.
எம்ஜிஆரின் வாள் சண்டை,
சிவாஜி கணேசனின் அழுகை,
மோகனின் மைக் ,
ராமராஜனின் பசுமாடு என அது மிக பெரிது,
அப்படியே மிக சிறந்த வில்லன் நடிகராகான ரஜினிகாந்தும் ஹீரோவாகவோ வைக்கபட்டார்.
அப்படி மனோரமாவும்
நகைச்சுவை நடிகை என குறிக்கபட்டாலும்,
எல்லா வேடங்களிலும் நடித்துத்தான் மிகசிறந்த நடிகை என்பதை நிரூபித்தார்.
அவர் இருக்கும் காட்சிகளில்
அவர் மட்டும்தான் தெரிவார்,
அப்படித்தான்
தில்லானா மோகனம்பாளில்
சில இடங்களில் சிவாஜிகணேசனையும் மிஞ்சினார்.
எம் ஆர் ராதாவிற்கு பின்
அது மனோரமாவிற்கு மட்டும் சாத்தியம்.
சோ ராமசாமி,
நாகேஷ்,
எம் ஆர் வாசு,
சுருளிராஜன் என அக்கால கட்டத்தில் அவர் கொடுத்த காமெடி காட்சிகளாகட்டும்,
பின்னாளில் சின்னதம்பி,
சின்ன கவுண்டர் போல கொடுத்த குணசித்திர வேடமாகட்டும்,
விசு படங்களின் பாத்திரமாகட்டும், பின்னாளைய பாட்டி வேடங்களாகட்டும், அவர் தனித்து நின்றார்.
உலகில் 90 சதவீத
சினிமா நட்சத்திரங்களின்
சொந்த வாழ்வு மகா சோகம் நிறைந்தது,
அதிலும் 95% தமிழக நட்சத்திரங்களின் சொந்த வாழ்வு சந்தோஷமாக அமைவதில்லை,
அதற்கு மனோரமாவும்
விதிவிலக்கு அல்ல,
சந்தித்த சவால்கள் ஏராளம்.
ஆனாலும் அந்த கவலைகள் எல்லாம் தன் திரைவாழ்வினை பாதிக்காமல் பார்த்துகொண்டார்,
தடுமாறிய இடமென்றால்
வடிவேலு போல
அரசியல் பிரச்சாரத்தில் மாட்டியது,
ஆனாலும் சீனியர் அல்லவா?
மீண்டு வந்துவிட்டார்.
கிட்டதட்ட 1000 படங்களுக்கு மேல் நடித்தவர்,
5 முதல்வர்களோடு பணியாற்றியவர், 100 பாடல்களை சொந்தமாக பாடிய ஒரு பாடகி,
4 தலைமுறை நடிகர்களுடன் போட்டியிட்டு நடித்த
ஒரு மிக சிறந்த நடிகை என அவருக்கு பல முகங்கள் உண்டு.
பத்திரிகையாளர் சோ
மிக சிறந்த நகைச்சுவை நடிகர்,
அவரின் பல காட்சிகள் நெஞ்சைவிட்டு அகலாதவை,
அவருடன் மனோராமா சொந்த குரலில் பாடி ஆடிய “ஜாம் பஜார் ஜக்கு” , “கைபடாத ரோசாப்பூ” போன்ற பாடல்களெல்லாம்
சென்னை மொழிவழக்கினில் இருவரும் பின்னி எடுத்த படங்கள்.
ஒரு நடிகன் நல்ல நடிகன் என்றால், தங்களின் பாதிப்பைனை
அடுத்த தலைமுறையினரிடம்
பதிய வைக்கவேண்டும்,
ஒரு பாதிப்பினை ஏற்படுத்த வேண்டும்,
சிவாஜி கணேசன்,
சந்திரபாபு,
எம் ஆர்ராதா போன்றோர் அதனைத்தான் செய்தனர்,
பின் ரஜினிகாந்தும் அதனையே செய்தார்,
நடிப்பால் பாதித்தார்.
ஆனால்
தமிழக நடிகைகளில் அப்படி சாதித்த ஒரே நடிகை மனோரமா மட்டுமே,
பல நடிகைகள் தன் நடிப்பினை
பின் தொடருமாறு அவர் பாதித்திருந்தார்.
இன்றுசின்னதிரை நாடகங்களிலும், திரையியுலகிலும்
சில நடிகைகள் மனோரமாவின் இடத்தினை பிடிக்க படாதபாடு பட்டுகொண்டிருப்பது ஒன்றும்
பரம ரகசியம் அல்ல,
இதுதான் மனோரமாவின் வெற்றி, மாபெரும் வெற்றி.
இன்று அந்த அற்புத நடிகையின் நினைவு நாள்.
இன்றும் திரைபடங்களில்
பாட்டி வேடத்தில் “சாப்டியாய்யா ” என அவர் வந்து நிற்கும்பொழுது,
பலருக்கு தங்கள் பாட்டி நியாபகம் வராமல் போகாது
அவ்வளவு உருக்கமான பாசம் நிறைந்த குரல் அது.
அன்னை, அண்ணி, பாட்டி என எல்லா குடும்ப உறவுகளுக்கும் தன் நடிப்பால் தனி இடம் பெற்று கொடுத்தவர்.
மனோரமாவின் குரல் போலவே
அவரின் மனமும் இரக்கம் நிறைந்தது,
உங்களின் நிறைவேறாத ஆசை எது என கேட்டதற்கு சொன்னார்
"இந்த திருநங்கைகள் வாழ்க்கை வலி நிறைஞ்சதுங்க,
ஊனமுற்றோரை விட மிக கஷ்டமான வாழ்க்கை அது.
அவங்க கையேந்தி நிற்கும்போது கண்ணீர் வருமுங்க.
கொஞ்ச நேரம் அவங்கட்ட பேசினா மனசு கலங்கமுங்க‌
ஆண்டவன் அவங்கள‌ அப்படி படைச்சிட்டான்,
அவங்க வலியினை சொல்றமாதிரி
ஒரு படத்துல திருநங்கையா நடிக்கணும்னு நினைச்சேன்
அது நடக்காமலே போயிட்டு"
இதைவிட அவரின் மனதை சொல்ல என்ன வேண்டும்?
“மன்மத லீலை” பட வெற்றிவிழா,
மேடையில் கண்ணதாசன் சொன்னார், ” பாலசந்தர் எத்தனையோ நடிகைகளை அறிமுகபடுத்தினார்,
என்னால் மனோரமாவினை மட்டும்தான் அறிமுகபடுத்த முடிந்தது”
பாலசந்தர் சொன்னார்,
” நான் ஆயிரம் நடிகைகளை கொண்டு வந்தாலும்,
அது நீங்கள் கொண்டுவந்த
ஒரே ஒரு மனோரமாவிற்கு ஈடாகுமா?”
ஆயிரம் அர்த்தம் பொதிந்த வார்த்தைகள் பாலசந்தருடையது.
அது நிதர்சனமான உண்மையும் கூட.
தமிழகத்தை ஆண்ட ராணிகளில் மங்கம்மா மறக்க முடியாதவர் என்பது போல,
திரையுலகினை ஆண்ட பெண்களில் மனோரமா என்றுமே மகாராணி
நேற்று அவரின் பிறந்தநாள்
தமிழ் சினிமாவில் கலைஞர் போன்ற நீண்ட நெடிய வரலாறு கொண்ட
ஒரே நடிகை மனோரமா மட்டுமே..

உண்மையா ???

முதல்வர் பழனிசாமி ஆட்சியை கவிழ்க்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேருக்கு தி.மு.க. வலை விரித்துள்ளது; 10 பேரையும் ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை சந்திக்கும் திட்டமும் தி.மு.க. தரப்பில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. லோக்சபா தேர்தல் வெற்றியை தொடர்ந்து தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க தி.மு.க. புதிய வியூகம் வகுத்துள்ளது.
லோக்சபா தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுக்கு முன் சட்டசபையில் அ.தி.மு.க.விற்கு சபாநாயகருடன் சேர்த்து 114 எம்.எல்.ஏ.க்கள் இருந்தனர். தி.மு.க.விற்கு 88 எம்.எல்.ஏ.க்கள்; அதன் கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு எட்டு; முஸ்லிம் லீக்கிற்கு ஒரு எம்.எல்.ஏ. என பலம் இருந்தது. சுயேச்சை எம்.எல்.ஏ.வாக தினகரன் உள்ளார்.
இச்சூழலில் 22 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடந்தது. அதில் தி.மு.க. 13 தொகுதிகளிலும், அ.தி.மு.க. ஒன்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. இதன் வாயிலாக ஆளும் கட்சியின் பலம் 123 ஆக உயர்ந்து ஆட்சியை காப்பாற்றி உள்ளது.
அதே நேரத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையும் 101 ஆக உயர்ந்துள்ளது. கூட்டணி கட்சிகளுடன் சேர்த்து 110 எம்.எல்.ஏ.க்கள் பலம் தி.மு.க.வுக்கு கிடைத்திருக்கிறது.இவர்களில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. வசந்தகுமார் தன் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை 109 ஆக குறையும். தி.மு.க. ஆட்சியை பிடிக்க எட்டு எம்.எல்.ஏ.க்களே தேவை. சட்டசபையில் நடக்கும் ஓட்டெடுப்பில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவித்தால் கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் அவர்களின் பதவி பறிபோகும். இதை தவிர்க்க அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேரை ராஜினாமா செய்ய வைத்து இடைத்தேர்தலை சந்திக்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.

லோக்சபா தேர்தலில் வெற்றி பெற்றது போல இந்த இடைத்தேர்தலிலும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்து விடலாம் என தி.மு.க. தரப்பு கணக்கு போடுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களுக்கு ரகசிய வலை விரிக்கப்பட்டுள்ளது. இழுக்கும் பொறுப்பு அ.தி.மு.க.வில் இருந்து தி.மு.க.விற்கு வந்த முன்னாள் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. வலையில் விழுபவர்களுக்கு தகுந்த விலை கிடைக்கும் என அவர்கள் துாது விட்டுள்ளனர்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 123 பேரில் மூன்று பேர் தினகரன் ஆதரவாளர்களாக உள்ளனர். மேலும் அ.தி.மு.க. சின்னத்தில் வெற்றி பெற்ற தமிமுன் அன்சாரி, கருணாஸ் ஆகியோர் அ.தி.மு.க.விற்கு எதிராக உள்ளனர்; அவர்களிடமும் தி.மு.க.வினர் பேச்சு நடத்தி வருகின்றனர். அதேபோல சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆளும் கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் பேசி உள்ளனர். இதை அறிந்த அ.தி.மு.க. தலைமை தங்கள் எம்.எல்.ஏ.க்களை கண்காணிக்கவும் தி.மு.க.வின் முயற்சியை முறியடிக்கவும் தனி கவனம் செலுத்துவதாக தெரிகிறது.
இது குறித்து தி.மு.க. நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை வளைக்க முயற்சிகள் துவக்கப்பட்டுள்ளன. கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3ல் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சிலரை மரியாதை நிமித்தமாக ஸ்டாலினை சந்திக்க வைக்க முயற்சி மேற்கொண்டுள்ளோம்.எங்கள் பக்கம் வர சம்மதம் தெரிவிக்கும் அ.தி.மு.க. - எம்.எல்.ஏ.க்களை ராஜினாமா செய்ய வைப்பதா அல்லது அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து அரசை கவிழ்ப்பதா என்று ஆலோசித்து வருகிறோம். சட்டசபை எப்போது கூட்டப்பட்டாலும் அப்போது அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துவோம்.
ஏற்கனவே சபாநாயகர் தனபாலுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கடிதம் கொடுத்துள்ளோம். சட்டசபை கூடும் போது அதன் மீது ஓட்டெடுப்பு நடத்தப்படும். இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்தும் திட்டமும் இருக்கிறது. இந்த சிக்கலில் இருந்து தப்பிக்க சபாநாயகரை ராஜினாமா செய்ய வைக்கவும், வேறு ஒருவரை அப்பொறுப்பில் நியமிக்கவும் அ.தி.மு.க. முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வந்துள்ளது; அது உண்மையா என்று தெரியவில்லை.
சபாநாயகர் ராஜினாமா செய்தால் நாங்கள் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர அவசியம் ஏற்படாது. ஆனால் புதிய சபாநாயகரை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்கப்படும் போது தி.மு.க. சார்பில் ஒருவரை நிறுத்துவோம். அதற்கு அ.தி.மு.க. துணியாது என்றே கருதுகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...