Friday, April 28, 2023

மூடு டாஸ்மாக மூடு.. என்கிற பாடலை மாற்றி ஓப்பன் வெண்டிங் மிஷின் ஓப்பன் என்ன பாட கம்மினாடிஸ்ட் கோவன் அழைக்கப்படுகிறார்..

 சென்னை, கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை மையத்தை தொடங்கிய டாஸ்மாக் நிர்வாகம்.....

இயந்திரத்தில் பணம் செலுத்தி மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு...
ஏடிஎம் இயந்திரம் போல் மது மற்றும் பீர் வகைகளை விற்பனை செய்யும் மையம்....

மிக அற்புதமான மாடல்! வளர்ச்சி ! மால் க்கு வந்தாலும் வாசம் விடாது போல !
துபாயில் முதன்முதலில் முக்கியமான இடத்தில் தங்கத்தை இப்படி பணம் செலுத்தி ப்பெறலாம் என்ற வசதி வந்த போது அதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்தோம்..
இது எந்த நாட்டிலும் பார்க்கக்கிடைக்காத மாடல் ! நல்லா இருப்பீங்க அமைச்சரே !!
Thank u sir 🙏
May be an image of text that says 'தந்தி FASMAR TAMILNADUSTATEMARKCTNGCOPORATO.T THANTHITV சென்னை, கோயம்பேட்டில் உள்ள வணிக வளாகத்தில் தானியங்கி மது விற்பனை மையத்தை தொடங்கிய டாஸ்மாக் நிர்வாகம் இயந்திரத்தில் பணம் செலுத்தி மதுபானம் பெறும் வகையில் ஏற்பாடு ThanthiTV 28 APR 023'
All reaction

ஆண்கள் ?????

❤️பெண்_என்பவள்👑👉
❤️ தன் தம்பிக்காக விட்டு கொடுக்கிறாள்
❤️ அண்ணனுக்கு பயந்து வளர்கிறாள்
❤️திருமணத்திற்கு_பின்👑👉
❤️ தனது பெயரை மாற்றுகிறாள்
❤️ அவளது வீட்டை மாற்றுகிறாள்
❤️ தன் குடும்பத்தை விட்டு செல்கிறாள்
❤️ ஒரு ஆண்னை நம்பி வருகிறாள்
❤️ஒரு குடும்பத்தை உருவாக்குகிறாள்
❤️ அவள் கர்ப்பம் பெறுகிறாள்
❤️அவள் உடல் எடை அதிகரிக்கிறது
❤️இதை பிரசவ அறை வரை தாங்குகிறாள்
❤️ குழந்தை பிறப்பு , தாங்க முடியாத வலி அதையும் சமாளிக்கிறாள்
❤️ குழந்தைக்கு பெயர் வைக்கும் உரிமையும் ஆண்களுக்கு விட்டு கொடுக்கிறாள்
❤️சமையல் , உங்கள் வீட்டை சுத்தம் கவனித்து கொள்கிறாள்
❤️உங்கள் பெற்றோர்களையும், குழந்தைகளை வளர்ப்பதில் நேரம் செலவு செய்கிறாள்,
❤️ஆண்கள் சம்பாதித்து, உறுதியுடன் பராமரிக்கவும், நிம்மதியான குடும்ப வாழ்க்கையும் வாழ துனையிருக்கிறாள்..
❤️குடும்ப உறவுகள் , எல்லாம் உங்களுக்கு நன்மை என்று
துன்பங்களைகளையும் தன்னுள் புதைத்து கொள்கிறாள்..
❤️ எனவே யார் உண்மையில் உங்களுக்கு உதவி செய்கிறார் என்பதை சிந்தியுங்கள் ஆண்களை..
❤️ அன்பானஆண்களே, உங்கள் வாழ்வில் பெண் என்பவள் பாராட்டபட வேண்டியவள்
❤️ எப்போதும், ஒரு பெண்ணாக இருப்பது எளிதானது அல்ல, ஏனெனில் .
❤️ஒரு பெண் விலைமதிப்பில்லாதவள் சேவை மணம் உடையவள் பொருமைசாலி.
தைரியசாலி.
பெண்மையை போற்றுவோம்...!🤗
!🤗
May be an image of 1 person

💢💢💢வெற்றிலை ரகசியம்*!

 வெற்றிலையின் காம்பை யார் தின்றாலும் அவர்களுக்கு ஞானம் வராது ,

மூதேவி என்னும் தேவியால் வறுமையே உண்டாகும்.
ஏனெனில் காம்பு பகுதி மூதேவிக்கு உரிய பாகமாகும்.
யாரிடம் என்ன இருக்கிறதோ அதைத்தான் கொடுப்பார்கள் அல்லவா.
எனவே வெற்றிலை உண்ண வேண்டுமாகின் காம்பை அடியோடு கிள்ளி எறிந்து விட்டு சாப்பிடவும்.
மேலும் முனை ஒடிந்த வெற்றிலை சாப்பிட்டாலும் பலன் இல்லை ,
காரணம் வெற்றிலை முனையில் ஸ்ரீதேவி குடிகொண்டிருப்பார்,
அவரை நீக்கி சாப்பிட்டால் செல்வ வளம் சேராது .
பூஜைக்கு வெற்றிலை வைக்கும் போது முனை ஒடியாத ,அழுகல் சொத்தை இல்லாத ,ஓட்டை இல்லாத வெற்றிலையே படையலுக்கு சிறந்தது .
வெற்றிலை கிழிந்தோ. காய்ந்தோ இருந்தால் கூட படையலுக்கு உதவாது .
வெற்றிலையின் ஒவ்வொரு பகுதியிலும் ஒரு தேவதை வாழ்கிறார்கள்.
எனவே வெற்றிலையின் எந்த பகுதி பாதிக்கப்பட்டிருந்தாலும் அந்த பாக தேவதை பாதிக்கப்படும்,
பின்பு அருள் கிடைக்காது, சாபம் தான் கிட்டும், கவனம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வெற்றிலை என்று ஏன் பெயர் வந்தது..?
தாவரவியல் மாணவனுக்கு மகா சுவாமிகள் விளக்கம்..
""எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை
ஒரு சமயம் காஞ்சிமடத்தில் மகா சுவாமிகளைச் சந்திக்க ஒரு மாணவன் வந்திருந்தான். அவனிடம் சுவாமிகள்,""என்ன படிக்கிறாய்?'' என்று கேட்டார். மாணவன் தாவரவியல் படிப்பதாகக் கூறினான்.
சுவாமிகள் தன் முன் வைத்திருந்த பழம், பாக்கு, வெற்றிலைத் தட்டில் இருந்த வெற்றிலையைக் காட்டி,""இதன் பெயர் என்ன?'' என்று கேட்டார். மாணவனும் "வெற்றிலை' என்றான்.
""அதற்கு ஏன் வெற்றிலை என்று பெயர் வந்தது?'' என்று கேட்டார். மாணவன் திகைத்தான், மற்றவர்களும் விழித்தார்கள்.
மகா சுவாமிகள் கூறினார்,""எல்லாக் கொடிகளும் பூ விடும், காய் காய்க்கும், ஆனால் வெற்றிலைக் கொடி பூக்காது, காய்க்காது, உட்கொள்ளக்கூடிய வெறும் இலை மட்டும்தான் விடும். அதனால் அது வெற்று இலை ஆயிற்று'' என்று கூறினார்
இறந்தபிறகும் ஒருவர் பேசப்படுவதை வைத்தே அவரது வாழ்நாள் காலம் நிர்ணயிக்கப்படுகிறது. நற்பவி 🙏🏾
May be an image of fruit and text that says "வெற்றிலையின் நுனி, எப்போதும் கிழக்கு திசையை நோக்கியோ அல்லது வடக்கு திசையை நோக்கியோ இருக்கும்படி கொடுத்தால் அது சுபம் ஆகும். வடக்கு மேற்கு கிழக்கு தெற்கு சொர்ணம் ணம் பாக்கு தச்சனை பூக்கள் வெற்றிலை வாழைப்பழம் இத்துடன் பணம் (தட்சணை), பழம், பூ, பொன் வைத்துக் கொடுப்பது உத்தமம்."

குருபகவானுக்கும், ஞான குரு தட்சிணாமூர்த்திக்கும் உள்ள வேறுபாட்டை புரிந்துகொள்ளுங்கள்...

 வியாழக்கிழமை மற்றும் குருபெயர்ச்சி காலத்தில் யாரைப் பூஜிப்பது அல்லது வணங்குவது?

நவக்கிரக குருவையா அல்லது ஞான குருவையா(தட்சிணாமூர்த்தி)?
சமீப காலமாக கோயில்களில், வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்தி சந்நதியில் பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. மகிழ்ச்சி தான் இருந்தாலும்
இவர்களில் 99 சதவீதம் பேர் குருவுக்குப் பரிகாரம் செய்வதற்காக வருபவர்கள்.
அதே நேரத்தில் நவகிரகங்களில் ஒருவரான குரு பகவானை வழிபடுவோரின் எண்ணிக்கை மிகக் குறைவு.
குரு பகவானுக்கு செய்ய வேண்டிய பரிகாரத்தை தட்சிணாமூர்த்திக்கு செய்வது சரிதானா?
இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் என்ன?
தட்சிணாமூர்த்தி என்பவர் சிவவடிவம் குருபகவான் என்பவர் கிரக வடிவம்
இவர் சிவன்,
அவர் பிரகஸ்பதி
தட்சிணாமூர்த்தி கல்லாலின் கீழ் அமர்ந்து நான்மறைகளோடு ஆறு அங்கங்களையும் சனகர், சனந்தனர், சனாதனர், சனற்குமாரர் என்ற நான்கு பிரம்மரிஷிகளுக்கு போதிப்பவர்.
குரு பகவான் நவகோள்களில் குரு என்ற வியாழனாக இருந்து உயிர்களுக்கு அவை முன்ஜென்மங்களில் செய்த நல்வினை தீவினைகளுக்கான பலாபலன்களை இடமறிந்து காலமறிந்து கொண்டு சேர்ப்பவர்.
தட்சிணாமூர்த்தி 64 சிவவடிவங்களில் ஒருவர், குரு ஒன்பது கோள் தேவதைகளில் 5 ஆம் இடத்தில் அங்கம் வகிப்பவர்.
சிவன் தோன்றுதல் மறைதல் என்ற தன்மைகள் இல்லாதவர்,
குருவோ உதயம்-அஸ்தமனம் என்ற தன்மைகள் உடையவர்.
இத்தனை தத்துவ வேற்றுமைகளைக் கொண்டுள்ள இந்த இருதேவர்களையும் குரு என்ற ஒற்றைச் சொல்லை மட்டும் வைத்துக்கொண்டு அவர்தான் இவர் இவர்தான் அவர் என்று வாதிடுவது சரியல்ல…
மேலும்,
தட்சிணாமூர்த்தி என்பவர் தென்முகக் கடவுள் என்று பொருள். அதாவது, தெற்கு நோக்கி வீற்றிருப்பவர்.
நவகிரகங்களில் ஒருவரான வியாழ (குரு) பகவானின் திசை வடக்கு.
திசையின் அடிப்படையிலேயே இருவரும் வேறுபடுகின்றனர்.
அதே போல வியாழன் எனும் பிரகஸ்பதி பகவானுக்கு உரிய நிறம், மஞ்சள். இவருக்கு உரிய தானியம், கறுப்பு கொண்டைக் கடலை.
தட்சிணாமூர்த்தியோ வெண்ணிற ஆடையை உடுத்தியிருப்பவர்.
‘ஸ்வேதாம்பரதரம் ஸ்வேதம்…’ என்று உரைக்கிறது வேதம்.
ஸ்வேதம் என்றால் வெள்ளை நிறம் என்று பொருள்.
உண்மை நிலை இவ்வாறு இருக்க வியாழனுக்கு பரிகாரம் செய்ய நினைப்பவர்கள்,
ஞான குருவாய் அருள்பாலிக்கும் தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் நிற வஸ்திரமும், கொண்டைக்கடலை மாலைகளும் சாற்றுகிறார்கள்.
இது, தியானத்தில் ஆழ்ந்திருக்கும் தட்சிணாமூர்த்திக்கு தொல்லை கொடுப்பது போல் அமைகிறது.
ஞானம் வேண்டி தட்சிணாமூர்த்தியை வழிபடுபவர்களுக்கு கிழமை முக்கியமில்லை.
வியாழன் அன்றுதான் வழிபட வேண்டும் என்ற அவசியமும் இல்லை.
தெளிவாகச் சொல்வதானால், வியாழக் கிழமைக்கும் தட்சிணாமூர்த்திக்கும் எந்த சம்பந்தமும் இல்லை
சிவபெருமான் ஞானத்தை போதிக்கும் குருவாக ஸநகாதி முனிவர்களுக்கு வேத ஆகமங்களின் பொருளை உபதேசிக்கும் திருவுருவமே தட்சிணாமூர்த்தி.
கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருப்பவராக இவர் காட்சியளிக்கிறார்.
இவர் ஆதிகுரு அல்லது ஞானகுரு என்று போற்றப்படுகிறார்.
அதே நேரத்தில் தேவர்களின் சபையில் ஆச்சாரியனாக, தேவர்களுக்கு ஆசிரியராக பணி செய்பவர் வியாழன் என்று அழைக்கப்படும் ப்ருஹஸ்பதி.
ஆசிரியர் தொழில் செய்வதால் இவரை குரு என்று அழைக்கின்றனர்.
ஞானகுரு வேறு, நவகிரக குரு வேறு என்பதைப் புரிந்து கொள்வது நல்லது.
வியாழ பகவானுக்கு உரிய அதிதேவதை மருத்வந்தன் என்றும், ப்ரத்யதி தேவதை பிரம்மா என்றும் தெளிவாகச் சொல்கிறது வேதம்.
இறைவன் சிவபெருமான் இட்ட பணியைச் செய்பவர்களே நவக்கிரகங்கள்.
ஒன்பது கோள்களுக்கும் ஒவ்வொரு காரகத்துவம் உண்டு.
இவர்களில் சுபகிரகமாகவும், வேண்டுகின்ற நன்மையைச் செய்பவராகவும் விளங்குபவர் வியாழ (குரு) பகவான்.
குரு பார்க்க கோடி நன்மை என்பது பழமொழி.
ஜென்ம ராசியை குரு பார்த்தால் நினைத்த காரியம் கைகூடும்.
இந்த உலகத்தில் நாம் ஆனந்தமாய் வாழ்ந்திடத் தேவையான அனைத்து சுகங்களையும் அருள்பவர் குரு பகவான்.
குரு பலம் இருந்தால் திருமணம் நடைபெறும்.
குருவின் அனுக்ரகம் இருந்தால் பிள்ளைப்பேறு கிட்டும்.
திருமணத்தடை நீங்கவும், புத்திரபாக்கியம் கிட்டவும், உயர் கல்வியில் இடம் பிடிக்கவும் குருவின் அருள் வேண்டி பரிகாரம் செய்ய விழைகின்றனர்.
அவ்வாறு பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் இந்த குரு பெயர்ச்சி நாளிலும்,
இனி வரும் வியாழகிழமைகளிலும் நவகிரகங்களில் வடக்கு நோக்கி அருள்பாலிக்கும் வியாழ பகவானுக்கு மஞ்சள் நிற வஸ்திரம் சாற்றியும், முல்லை மலர் அர்ச்சனை செய்து,கறுப்பு கொண்டைக் கடலை சுண்டல் நெய்வேத்யம் செய்து வழிபடலாம்.
கொண்டைக் கடலை சுண்டல் நைவேத்யம் செய்து, வரும் பக்தர்களுக்கு விநியோகம் செய்யலாம், கொண்டைக்கடலை மாலை கண்டிப்பாக தவிர்க்கவும்
வியாழன்தோறும் விரதம் இருந்து வடக்கு முகமாய் சுத்தமான பசும் நெய் விளக்கு ஏற்றியும் வழிபடலாம்.
அதே நேரத்தில் ஞானமார்க்கத்தை நாடும் அன்பர்கள் தட்சிணாமூர்த்தியை வழிபடலாம்.
வியாழக்கிழமைதான் என்றில்லை, எந்த நாளிலும் அவரை வழிபடலாம்.
மனம் சஞ்சலத்திற்கு உள்ளாகும் எந்த நேரத்திலும் தட்சிணாமூர்த்தியின் சந்நதியில் அவருக்கு முன்பாக அமைதியாக அமர்ந்து தியானத்தில் ஈடுபடுங்கள்.
குழப்பங்கள் அகன்று மனம் தெளிவடையும்.
ஞான குரு வேறு நவகிரக குரு வேறு என்ற உண்மையைப் புரிந்துகொள்ளுங்கள்.
May be an image of temple and text that says 'தட்சிணாமூர்த்தி குருபகவான்'
All reactions:

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...