Thursday, June 29, 2023

அயோக்கியத்தனத்தின் உச்சம்.

 ஒரு தலைமறைவு குற்றவாளியைச் சந்திக்கத்தான் லண்டன் சென்றீர்களா என்று ஒரு நிருபர் கேட்பதெல்லாம் முட்டாள்தனம் அல்ல, விஷமத்தனத்தின் உச்சம் -

பத்துநாட்களுக்கு முன்பு தமிழகத்தையே பரபரப்பாக்கிய ஒரு வழக்கின் முக்கியக்குற்றவாளியின் தம்பியும் மற்றொரு தலைமறைவுக் குற்றவாளியுமான ஒரு திருடனைச் சந்திக்கத்தான் நீங்கள் லண்டன் சென்றீர்களா என்று இன்று நாடுமுழுவதும் ஆளக்கூடிய ஒரு கட்சியின் ஒரு மாநிலத்தலைவரைப் பார்த்துக் கேட்பதென்பது அயோக்கியத்தனத்தின் உச்சம்-
தமிழகத்தில் ஊடகங்கள் எல்லாம் காசுக்காக வேசிவேலை பார்க்கின்றன என்பது இன்னமும்கூட சாதாரண மக்களுக்குப் புரிவதேயில்லை என்பதே வேதனை, ஜனநாயகத்தின் நாண்காவது தூண் இன்று இவ்வளவு கேவலமான ஸ்திதியை அடையும் என்று எவருமே நினைத்திருக்க முடியாது, ஏனென்றால் ஒருகாலத்தில் நாம் சுதந்திரத்திரத்திற்காகப் போராடிய காலங்களில் பத்திரிக்கைகள்தான் சுதந்திரக்கணலை நாடெங்கும் பரப்பின, ஆனால் இன்று?-
ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு நேர்மையாளன் தலைமையில், ஊழலின்றி புலிப்பாய்ச்சலில் சென்று கொண்டிருக்கும் பொழுதில், இவர்கள் கேவலமாகத் திருடிச் சொத்துச் சேர்க்கும் திருட்டு திராவிடத்தின் திருடர்களைக் காப்பாற்றப் போராடி வருகின்றனர்-
இவர்கள் மட்டும் நேர்மையாகச் சரியாகச் செயல்பட்டால் நரேந்திரமோடியின் ஊழலற்ற ஆட்சியையும், அவர் செய்திருக்கும் சாதனைகளையும் பட்டிதொட்டியெங்கும் பரப்பி ஊழல்வாதிகளிடமிருந்து இந்த நாட்டை மீட்கப் போராடும் மீண்டுமொரு சுதந்திரப்போராட்டத்திலும் பெரும்பங்காற்றிப் பேர்வாங்கியிருக்கலாம், ஆனால் காசுக்கு விலைபோய் வேசிக்கலாகிவிட்டார்கள்,
நாளை இவர்களது பெண்டாட்டி பிள்ளைகள் கூட இவர்களது செய்திச் சேனல்களைப் பார்க்கமாட்டார்கள் என்பதே உண்மை -
May be an image of 1 person and text that says "வேசி மீடியா"
All reac

அக்கிரமம்_செய்தவன்_நன்றாக_இருக்கிறானே" என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள்!

 #இதோ_அதற்கு_ஓர்_உதாரணம்:

அந்த நாட்டு அரசன் தன் மக்கள் நலப் பணிகளைச் செயல்படுத்த மூன்று அதிகாரிகளை நியமித்து, அவர்களுக்கு வானளாவிய அதிகாரங்களையும் கொடுத்தான். ஒரு அமைச்சருக்குச் சமமான ஊதியத்தையும் அந்தஸ்தையும் வழங்கினான்.
மக்கள் நலப் பணிகளில் ஊழல் நடப்பதாகப் புகார்கள் குவிந்தன. அதிகாரிகளைக் கூப்பிட்டு விசாரித்தான் மன்னன்.
""ஐயோ நாங்கள் உத்தமர்கள் மன்னா! மக்களுக்காகவே தியாக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்'' என்று சிந்து பாடினார்கள் அதிகாரிகள். "செய்யும் ஊழலை மிகவும் திறமையாகச் செய்திருக்கிறார்கள். இந்த மூவருமே ஊழல் பெருச்சாளிகளா அல்லது விதிவிலக்குகள் ஏதாவது இருக்கிறதா என்பதை அறிய வேண்டும்,'' என்று நினைத்தான் மன்னன். அவர்களை அனுப்பிவிட்டு யோசனையில் ஆழ்ந்தான்.
இரண்டு நாட்கள் கழித்து அதிகாரிகள் மீண்டும் அழைக்கப்பட்டார்கள்.
""மக்கள் பணியில் இருக்கும் உங்களுக்குக் களப்பயிற்சி தரப் போகிறேன். உங்களிடம் ஒரு பெரிய சாக்கு தரப்படும். அதை எடுத்துக்கொண்டு நம் நாட்டின் எல்லைகளில் உள்ள காட்டுப் பகுதிகளுக்குச் செல்லுங்கள்.
உங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கும் சாக்குகளை காய், கனி, கிழங்குகளால் நிரப்ப வேண்டும். அப்படி நீங்கள் நிரப்பும் பொருட்களை வைத்துக்கொண்டு ஒரு மனிதன் இரண்டு வாரம் சாப்பிட வேண்டும்.
நீங்கள் கொண்டு வரும் சாக்குகளை நாங்கள் யாரும் பரிசோதிக்க மாட்டோம். அதை அப்படியே ஒரு ஏழையிடம் கொடுத்து விடுவோம். அவன் அதை உண்டு உங்களை வாழ்த்த வேண்டும்..
இந்தப் பயிற்சி திட்டம் வெற்றி பெற்றால், மக்கள் நலப் பணியாளர்களை இந்தப் பணியில் அமர்த்தி மக்களின் பசி போக்கலாம்.''
மறுநாள் மூவரும் வெவ்வேறு காடுகளுக்கு அனுப்பப்பட்டார்கள். காடுகளில் காய் கனி கிழங்குகளுக்குப் பஞ்சமில்லைதான். ஆனால், அவற்றை அலைந்து திரிந்து சேகரிக்க வேண்டியிருந்தது. மேலும் அதை சேகரிக்கும் வரை அதிகாரிகளுக்கும் காட்டில் கிடைக்கும் காய் கனிகள்தான் உணவு. மூன்று அதிகாரிகளும் அரண்மனை போன்ற வீடுகளில் சொகுசாக வாழ்ந்து பழகியவர்கள்.
அதனால் அவர்களுக்கு அந்த வேலை மிகவும் கடினமாக இருந்தது.
முதல் அதிகாரி நல்ல பொருட்களைச் சேகரித்தார். நாம் துன்பப்பட்டாலும் இந்தத் திட்டம் வெற்றி பெற்றால் மக்கள் பசியாறுவார்களே என்ற நினைப்பே அவருக்கு உந்து சக்தியாக இருந்தது.
சாக்குப்பையை நிரப்ப அவருக்கு மூன்று, நான்கு நாட்கள் தேவைப்பட்டது. ஆனால், உள்ளே இருந்தவை எல்லாம் தரமான பொருட்கள்.
இரண்டாமவர் கொஞ்சம் குறுக்கு வழியில் யோசித்தார். பையை யாரும் சோதிக்க மாட்டார்கள் என்று மன்னரே சொல்லிவிட்டார். சோதித்தாலும் மேலோட்டமாகத்தான் பார்ப்பார்கள். மேலே நல்ல தரமான பொருட்களை வைத்துவிடலாம். கீழே அழுகிய பழங்கள், கொட்டைகள், என்று வைத்துவிட்டால் யாருக்கு என்ன தெரியப் போகிறது? என்று எண்ணி அப்படியே செய்த அந்த நபர், ஒரே நாளில் தன் பணியை முடித்துவிட்டார்.
மூன்றாம் அதிகாரி அந்த அளவிற்குக்கூடச் சிரமப்படவில்லை. பைக்குள் என்ன இருக்கிறது என்பதை யார் பார்க்கப் போகிறார்கள் என்ற நினைப்பில் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் போட்டு பையை நிரப்பி அரண்மணையில் சேர்த்துவிட்டார். ஒரு நாழிகைப் பொழுதில் வேலையை முடித்துவிட்டுத் தன் மாளிகைக்குச் சென்று சுகமாக உண்டு உறங்கிவிட்டார்.
மன்னன் மூன்று அதிகாரிகளையும் அழைத்தான். அவர்கள் முன்னிலையில் தன் காவலர்களுக்குக் கட்டளையிட்டான்.
""இந்த மூவரையும் தனித்தனியாகப் பாதாளச் சிறையில் அடையுங்கள். அவரவருடைய சாக்குப் பைகளை அவரவரிடம் வைத்துவிடுங்கள். சிறைத்தண்டனை இரண்டு வாரங்கள் தொடரும். அந்த இரண்டு வாரங்களில் அவர்களுக்கு வேறு எந்த உணவும் வழங்க வேண்டாம். அவர்கள் சேகரித்த காய் கனி கிழங்கு வகைகள்தான் அவர்களுக்கு உணவு.''
மூன்றாம் அதிகாரியால் காய்ந்த இலைகளையும் சருகுகளையும் உண்டு உயிர் வாழ முடியவில்லை. ஐந்தே நாட்களில் அவர் பசி தாங்காமல் மாண்டுவிட்டார்.
இரண்டாமவரோ அழுகிய கனிகளையும் நல்ல கனிகளையும் கலந்து உண்டு எப்படியோ இரண்டு வாரங்கள் உயிர் வாழ்ந்துவிட்டார். ஆனால், அவர் உடல்நலம் கெட்டுவிட்டது. மன்னன் அவரைப் பதவியிலிருந்து நீக்கிவிட்டான்.
முதலாம் அதிகாரி இரண்டு வாரங்களையும் தனிமைச்சிறையில் மகிழ்ச்சியாகக் கழித்துவிட்டு வெளியே வந்தார். தான் சேகரித்த தரமான காய் கனி கிழங்குகளை உண்டு இன்னும் அதிகமான தெளிவுடன் வெளியே வந்தார்.
மன்னன் அவனுக்குப் பல பரிசுகளைக் கொடுத்து அவனை முதலமைச்சர் ஆக்கிக் கொண்டான்.
இந்தக் கதையில் உள்ள வாழ்வியல் தத்துவத்தை நச்சென்று விளக்குகிறது மகாபாரதத்தில் வரும் ஒரு ஸ்லோகம்.. அதன் உட்பொருள் இதுதான்.
ஒரு இடத்தில் ஆயிரம் பசுக்கள் இருக்கின்றன. தன் தாயைத் தேடி வரும் ஒரு கன்று அந்த ஆயிரம் பசுக்களில் தன் தாயைச் சில நொடிகளில் கண்டுபிடித்து அதனிடம் போய்ச் சேர்ந்துவிடுகிறது.
அதேபோல், ஒருவன் செய்யும் வினையின் பயனானது அவன் எங்கிருந்தாலும் அவனைக் கண்டுபிடித்து அவனைச் சென்றடைந்துவிடும்
நாம் அனைவரும் நன்மை செய்கிறோமா, தீமை செய்கிறோமா என்று இறைவன் கண்காணிப்புக் கேமரா வைத்துக் கொண்டு பார்ப்பதில்லை. நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று நமக்குப் பூரண சுதந்திரத்தைக் கொடுத்துவிட்டான். ஆனால் உங்கள் செயலின் பலனை நீங்கள்தான் அனுபவிக்க வேண்டும் என்ற நியதியையும் அழுத்தமாக வைத்துவிட்டான்.
நீங்கள் உங்கள் பையில் நல்ல பழங்களைப் போடுகிறீர்களா.. இல்லை.. சருகுகளையும் அழுகிய பழங்களையும் போடுகிறீர்களா என்று யாருமே கண்காணிப்பதில்லை.. ஆனால் நீங்கள் சேகரித்ததை நீங்கள்தான் சாப்பிட வேண்டும் என்பதை மட்டும் மறந்துவிடாதீர்கள்.
"ஐயோ அக்கிரமம் செய்தவன் நன்றாக இருக்கிறானே' என்று ஆண்டவன் மேல் நம்பிக்கை இழக்காதீர்கள். அக்கிரமம் செய்பவன் இப்போதுதான் காய்ந்த சருகுகளையும் அழுகிய பழங்களையும் தன் பைக்குள் போட்டுக் கொண்டிருக்கிறான்.
விரைவில் தனிமைச் சிறையில் அவற்றை உண்ண வேண்டிய காலம் வரும். அப்போது அவனுக்குப் பசியும் மரணமுமே பரிசாகக் கிடைக்கும்.
இது மனிதன் இயற்றிய சட்டம் இல்லை; இறைவன் வகுத்த நியதி. இதற்கு விதிவிலக்கு இல்லை.
All reactions

அப்படி யூனிபார்முடன் உள்ளே சென்று என்ன செய்தனர்?

 1. 1984ல் பொற்கோவிலில் ராணுவம் புகுந்து நடவடிக்கை எடுத்தது போல, இப்பொழுது போலீசார் சிதம்பரத்தில் நுழைந்துள்ளனர்.

2. ஆனால், இங்கு ஒன்றும் அத்தகைய நிலைமை இல்லை, மாறாக அறநிலையத் துறை அதிகாரிகள் தான் பிரச்சினை உண்டாக வழி வகுத்தனர்.
3. நான்கு நாட்களுக்கு ஜூலை 24-27 2023 கனகசபை மீது ஏறி வழிபட முடியாது என்று அறிவித்ததில் எந்த பிரச்சினையும் இல்லை.
4. ஜூலை 28 முதல் அவ்வழிபாடு அனுமதிக்கப் பட்டுள்ளது. ஆனால், முன்பே போலீஸார் உள்ளே செல்வது, வருவது என்று வீடியோவில் தெரிகிறது.
5. அப்படி யூனிபார்முடன் உள்ளே சென்று என்ன செய்தனர்? இதே போன்று போலீஸ் ஸ்டேஷனில் சில தடைகள் இருந்தால், மீற முடியுமா?
6. வைத்த அறிவிப்புப் பலகையை எடுத்த அதிகாரி, எந்த சட்டத்தை மீறினார், அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும்?
7. மாறாக, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்ததாக தீட்சிதர்கள் 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
8. எதற்காக விஷேச நாட்களில் அரசு அதிகாரிகள், போலீஸார் கோவிலுக்குள் சென்று இப்பிரச்சினையை ஏற்படுத்த வேண்டும்?
9. கூட்டம் அதிகமாக இருக்கும் பொழுது, அதைக் கட்டுப்படுத்த, நடைமுறையில் கோவிலுக்குள் சில மாற்றங்களை செய்வதில், ஏன் தலையிட வேண்டும்?
10. தொடர்ந்து இவ்வாறு பலவிதங்களில் சிதம்பரம் கோவில் விசயங்களில் அதிகாரிகள்-போலீஸார், வழக்குகள் என்றெல்லாம் நடப்பது திகைப்பாகத் தான் இருக்கிறது.

சுய மரியாதைக்காக...

 நான் ஒரு பெட்ரோல் பங்கில் எனது இருசக்கர வாகனத்திற்கு நேற்று பெட்ரோல் போட்டு விட்டு டயருக்கு காற்று அடிக்க பங்கில் உள்ள காற்று அடிக்குமிடத்திற்கு சென்று வரிசையில் நின்றேன். காற்று அடித்து கொண்டிருந்த பெட்ரோல் பங்க் பணியாளர் ஒருவர் காற்றடிக்க வரும், வாடிக்கையாளர்களிடம் முகம் சுளித்தபடியே வேலை செய்து கொண்டிருந்தார். எனக்கு முன்னால் நின்ற இளைஞரிடம் வண்டியை "இப்படி நிறுத்து அப்படி நிறுத்து" என்று கூறியவர் ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலைடைந்து, ஏய்யா காத்து அடிக்கறதே ஓசி". இதுல வேற ஏன்யா இப்படி போட்டு படுத்தற" என்றார். இளைஞனுக்கு அடுத்து நானிருக்கிறேன் சுளீரென்றது மண்டையில் உடனே நான்

"ஐயா எங்க வண்டிகளுக்கு நீங்க ஓசியில எல்லாம் காத்து அடிக்கல ஒவ்வொரு லிட்டர் பெட்ரோலுக்கும், டீசலுக்கும், பெட்ரோலிய நிறுவனம்.., ஐம்பது பைசாவை கழிவறையை சுத்தம் செய்யவும் வருகிற வாகனத்திற்கு காற்று அடிக்கவும் தருகிறது". எங்கள் பணத்திலிருந்து...,
"இனி யாரிடமும் ஓசி என வார்த்தையை விடவேண்டாம் முதலில் புரிந்து கொள்ளுங்கள் இல்லாவிட்டால் உங்கள் நிறுவன மேலாளரிடம் கேட்டுத்தெரிந்து தெளிந்து, வரும் வாகன ஓட்டிகளிடம் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்". என்று, விவரம் கூறியது மட்டுமின்றி
பங்க் மேலாளரை அழைத்து புகார் கூறிவிடுவேன் எனவும் கூறினேன்.
நண்பர்களே! நாம் நம் வாகனத்திற்கு அடிக்கு பெட்ரோல் மற்றும் டீசலுக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் ₹ 2.50 ரூபாய் கமிஷனாகவும் மேலும் ஐம்பது பைசா கழிவறையை பராமரிக்கவும் காற்று அடித்துக்கொள்ளவும் பங்க் நடத்தும் ஏஜென்ஸிக்கு பெட்ரோலிய நிறுவனம் தருகிறது.
இந்த வசதியை வாடிக்கையாளருக்கு செய்து தர மறுக்கும் பங்க் மீது ஒருவாடிக்கையாளர் மெயில் மூலம் புகார் தரும்பட்சத்தில் அந்த பங்க் தற்காலிகமாக பெட்ரோலிய பொருட்கள் சப்ளை செய்வதை எண்ணெய் நிறுவனம் நிறுத்திவிடும்.! பிறகு உங்கள் சமாதான பதில் மெயிலுக்கு, பிறகே பங்க் விற்பனையை தொடங்கும், ஆகவே நண்பர்களே கார் பயணமோ இருசக்கர வாகன பயணமோ ஒரு வாடிக்கையாளருக்கு கழிவறையை மற்றும் காற்று அடிக்கவும் மறுக்கும் பங்க் மீது அங்கே பெயர் பலகையில் குறிப்பிட்டுருக்கும் மெயில் ஐடிக்கு புகாரளியுங்கள் .... உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.
உங்கள் நலனில்..!

இதுதான் உண்மையான நிலவரம் ..

 ஜெயலலிதா .

1.5 கோடி உறுப்பினர்களை சேர்த்தார். ..
இபிஎஸ் பொதுச் செயலாளரான பிறகு உறுப்பினர் சேர்க்கை மேலும் அதிகமாகி இருக்கிறது. ..
ஜெயகுமார் மட்டுமல்ல ..
இநதியாவின் மூன்றாவது பெரிய கட்சி அதிமுக என்று சமீபத்தில் ஒரு செய்தி கூட வெளியானது ..
இது மிகவும் தவறான மோசடி செய்தி ...
ஒரு கட்சியின் உறுப்பிணராக இருப்பவர்
கட்டாயம் அந்த கட்சிக்கு வாக்களிப்பார் ..
ஆனால் 2019 தேர்தலில் .
அதிமுக கூட்டனியே .
83 இலட்சம் வாக்குகளைதான் பெற்றுள்ளது ..
இதில் பாமக பாஜக தேமுதிக .
வாக்குகளை கழித்து விட்டால் .
50 இலட்சம் வாக்குகள்தான் அதிமுகவுக்கு கிடைத்துள்ளது ..
2019 ல் அமமுக .
25 இலட்சம் வாக்குகளை பெற்றது ...
இப்போது ஓபிஎஸ்சும் பிரிந்து விட்டார் .
அதிமுக உறுப்பிணர்களின் உண்மையான என்னிக்கை ..
30-40 இலட்சம் என்ற அளவில் இருக்கலாம் ..
இதுதான் உண்மையான நிலவரம் ..
இதை விடுத்து .
ஒன்னரை கோடி .
ரெண்டு கோடி என்று .
ஜெயகுமார் போன்றவர்கள் புருடா விட்டு திரிகிறார்கள் .
வாக்காளர் பட்டியலை பார்த்து ..
உறுப்பினர் பாரத்தை எழுதினால் .
எல்லா கட்சிகளாலும்
தலா ஒரு கோடி உறுப்பினர்களை சேர்க்க முடியும் ..
May be an image of 2 people and text that says 'Leader M. Κ. Stalin Edappadi K. Palaniswami Party DMK Alliance AIADMK DMK+ Last election NDA 0 Seats won 39 38 1 Seat change 38 38 Popular vote 14,363,332 Percentage 8,307,345 53.53% Swing 26.39% 27.4% 18.4%'
All reaction

Wednesday, June 28, 2023

முறையற்ற கேள்வி கேட்ட நிருபருக்கு சரியான பதிலடி தந்த அண்ணாமலை..

 காமெடியன் மாதிரி பதில் சொல்லவா வந்திருக்கேன்? லண்டனில் இருந்து வந்து இறங்கியதும் அண்ணாமலை ஏர்ப்போர்ட்டில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது நிருபர் ஒருவர் கேட்ட முறையற்ற கேள்விக்கு பதில் சொன்ன அண்ணாமலை..

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அங்குள்ள முருகன் கோவிலில் தரிசனம் செய்த அண்ணாமலை, லண்டனில் வாழும் தமிழர்களைச் சந்தித்துப் பேசினார்.
மேலும், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் உள்ள ஹவுஸ் ஆப் லார்ட்ஸ் அரங்கத்தில் பிரிட்டன் தமிழ்ச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு ஒன்றில் அண்ணாமலை பங்கேற்றார். இந்நிலையில், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை இங்கிலாந்து பயணத்தை முடித்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு திரும்பினார்.
லண்டனில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்திறங்கிய அண்ணாமலையை பாஜகவின் முக்கிய நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகமாக வரவேற்றனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார் பேசினார் அண்ணாமலை.
அப்போது செய்தியாளர் ஒருவர், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குடன் நீங்கள் லண்டனில் ரகசிய சந்திப்பு நடத்தியதாக தகவல் வருகிறதே உண்மையா எனக் கேள்வி எழுப்பினார்.
இந்தக் கேள்வியால் டென்ஷனான அண்ணாமலை, சற்று கோபமாகப் பேசலானார்...
செய்தியாளரிடம் பேசிய அண்ணாமலை, "தகவலை உங்களுக்கு யார் சொன்னது? திமுக வட்டாரத்தில் இருந்து ஸ்டாலின் சொன்னாரா? உதயநிதி ஸ்டாலின் சொன்னாரா? யார் உங்களுக்கு தகவல் கொடுத்தது என யார்னு முதலில் சொல்லுங்க...
உங்களுக்கு சோர்ஸ் எங்க இருந்து வந்துச்சு? ரோட்டுல டீ குடிக்கிற ஆள் மாதிரி கேள்வி கேட்கக்கூடாது. மேலும் முட்டாள்தனமா கேள்வி கேட்கக்கூடாது. உங்க கேள்விக்கு ஏதாவது லாஜிக் இருக்கா? நான் என்ன நீங்க கேட்குற கேள்விக்கெல்லாம் கை கட்டி பதில் சொல்ல வந்திருக்கேனா? நீங்க என்ன வேணாலும் கேட்பீங்க.. நான் காமெடியன் மாதிரி பதில் சொல்லி, மக்கள் கை தட்டி சிரிப்பதற்கா நான் பிரஸ் மீட் நடத்துகிறேன்?
16 மணி நேரம் விமானத்தில் பயணித்து வந்து இங்கு வேலையில்லாமல் பேசிக்கொண்டிருக்கிறேனா? நீங்க இந்த மாதிரி கேள்வி கேட்டால் எனது பதிலும் அநாகரீகமாகத்தான் இருக்கும்." என சூடாகப் பேசினார் அண்ணாமலை. இதனால், அங்கு சற்று பரபரப்பு ஏற்பட்டது.... இதனால் முறையற்ற கேள்விக்கு வாங்கிக் கட்டிக் கொண்டார் அந்த செய்தியாளர்...
May be an image of one or more people and text

All reactions

அத்தைக்கு_மீசை_முளைக்குமா?

 இந்தியாவின் தற்போதைய ஆளுங்கட்சியான பாஜகவுக்கு, எதிராக 15 கட்சிகள் ஒன்று திரண்டு,

2024 ம் ஆண்டு பாராளுமன்ற பொதுத் தேர்தலை, ஒரு தலைமையில் சந்திக்க வேண்டும் என்று முடிவெடுத்தனர். மோதிஜியின் தலைமையில் பாஜக மூன்றாவது முறையும் ஆட்சியைப் பிடிக்கும் என்று ஊடகங்கள் கருத்துக் கணிப்புகளை வெளியிட்டு வரும் வேளையில்,இந்த எதிர்க் கட்சிகளின் முனைப்பு, அதைப் பொய்யாக்கி,
பாஜகவை தோற்கடிக்க வேண்டும் என்பது தான்.
.
இதை முன்னெடுத்தவர் பீகார் முதல்வர் நிதீஷ் குமார் அவர்கள். கடந்த 23/06/2023 அன்று பாட்னாவில் கூடிய , கூட்டத்திற்கு 15 முக்கிய கட்சித் தலைவர்கள் வந்தனர். பதவியில் இருக்கும் 4 மாநில முதல்வர்கள்,திருவாளர்கள் ஸ்டாலின், மமதா பேனர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால், மான்..கலந்து கொண்டனர். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி, மகாராஷ்ட்ராவிலிருந்து NCP தலைவர் ஷரத்பவார்,உத்தவ் தாக்கரே, ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா, லல்லு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், போன்றவர்கள் முக்கியமானவர்கள்.
இந்த கூட்டத்தில் தலைவர்கள் பேசியது,என்ன?
இதில் ஒத்த கருத்து எட்டப்பட்டதா? இது அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வதற்கு, இவர்களுக்குள் இருக்கும் முரண்கள், களையப்படுமா, என்பது பற்றி அதை நடத்தியவர்களே விளக்கமாகக் கூறி விட்டார்கள். மமதாவின் கருத்து, மோதி எதிர்ப்பு, தான் என்றாலும் அவர் காங்கிரஸூக்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தரத் தயாரில்லை. கம்யூனிஸ்டுகளையும் எட்டவே நிற்க வைத்து விட்டார். நான் நிற்கும் இடத்தில் நீ விட்டுக் கொடுக்க வேண்டும்.என்று
காங்கிரஸூக்கு நிபந்தனை. ஆஆபாவின் கெஜ்ரிவால், காங்கிரஸ் மத்திய அரசு , கொண்டு வந்த, டெல்லியின் அதிகாரத்தைப் பிடுங்கும் அவசர சட்டத்தை எதிர்த்து
குரல் கொடுக்காததை குறை சொல்லி, அதைப் பற்றி காங்கிரஸ் பேச வேண்டும், அப்போது தான் மேற்கொண்டு கூட்டணி பற்றி பேச முடியும் என்றார்.
.
தமிழக முதல்வரோ, ஏழு அம்ச தீர்மானத்தை விவரித்து, மாநிலங்களில் வலுவாக இருக்கும் கட்சியின் தலைமையில் கூட்டணி தேர்தலை சந்திக்க வேண்டும். இது சரிப்படவில்லை என்றால்,தொகுதிப் பங்கீடு
செய்து கொண்டு போட்டியிடலாம்..தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சரி வராது என்று பேசி இருக்கிறார்.
முக்கியமாக, இந்த கூட்டத்திற்கு சிலரை ,இவர்கள் அழைக்கவேயில்லை.
ஒடிஷாவின் நவீன் பட்நாயக், தெலுங்கானா முதல்வர் BRS கட்சி சந்திரசேகர ராவ், ஆந்திர முதல்வர் கிரண் ரெட்டி, உபியின் மாயாவதி போன்றவர்கள் , வர மாட்டார்கள் என்பதால் அழைக்கவே இல்லை.
தென்னகத்தில் தமிழகம் மட்டுமே கலந்து கொண்டது. என்றாலும், ஒரு முன்னெடுப்பு துவங்கி அதற்கான முதல் கூட்டம் நடக்கும் போதே, எல்லா முரண்பாடுகளும் தீர்ந்து, ஒன்றுபட்ட முடிவு எட்டப்பட்டு விடமுடியும் என்பது. ஒத்த கருத்துள்ள கட்சிகளுக்கிடையே கூட சாத்தியமில்லாத ஒன்று.
மாறுபட்ட கருத்துகளைக் கொண்டவர்களை முதலில் ஒரு மேடையில் கூட்டியதே ஒரு நல்ல ஆரம்பமாக அந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள் கூறுகிறார்கள். இந்த கூட்டத்தில் பங்கெடுப்பவர்களுக்கு இது, அரசியல் சதுரங்கத்தில் ஆடப் போகும் இறுதிக் கட்ட ஆட்டமாக இருக்கும் என்பதைத் தெரிந்து தான் ஆடுகிறார்கள். இப்போது
இல்லையென்றால், இனி எப்போதும் இல்லை..என்ற நிலை. பேசித் தீர்க்க முடியாத விவகாரங்கள் என்று எதுவும் இல்லை.
நமது பொது எதிரி பாஜக-மோதி..இவர்களை தோற்கடிப்பது என்பது தான் ஒற்றை இலக்கு.
.
ஆனால், சரத் பவார் பிரதமர் போட்டியில் இல்லை. தனது கட்சியைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் அவர் கவனம் செலுத்துகிறார். இப்போது புது தலைவலி, BRS சந்திரசேகரராவ் ரூபத்தில் உருவெடுத்துள்ளது. தேசிய கட்சியாக அறிவித்ததையடுத்து, அது மஹாராஷ்ராவில் களம் இறங்குகிறது. NCP யில் இருந்து பலர் BRS கட்சியில் இணைய ஆரம்பித்துள்ளனர்.
.
மாயாவதி, ஆந்திர முதல்வர் ரெட்டி, சந்திர சேகரராவ், மூவரும், காங்- பாஜக இரண்டையும் சம தூரத்தில் வைக்க முடிவு செய்துள்ளனர். ஆஆபா, பல மாதிலங்களிலும் பாஜகவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நிலையில்
காங்கிரஸோடு கூட்டு வைத்து தங்கள் கட்சியின் எதிர்காலத்திற்கு ஆப்பு வைத்துக் கொள்ள விரும்பவில்லை.
மமதாவுக்கும், காங்கிரஸூக்கு மற்ற மாநிலங்களில் நிபந்தனையோடு கூடிய ஆதரவே தர நினைக்கிறது.
.
அது ஆஆபா , தன்னைச் சீண்டாத வரை அவர்களை ஒதுக்காது. இப்படி, எல்லா கட்சிகளும் மோதியால் பாதிப்புக்குள்ளானவர்
களின் கூட்டமைப்பாக உள்ளன. இதனிடையில் அடுத்த கூட்டத்தை சிம்லாவில் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்து, அந்த கூட்டத்தில்
நடவடிக்கைகள் பரஸ்பரம்
பேசித் தீர்க்க வழிவகை செய்யக் கூடும்.
பொதுவாக பாஜக ஆதரவாளர்கள், ஆஆபா கெஜ்ரிவால், தமிழகத்தின் ஸ்டாலின் போன்றவர்கள்
பத்திரிக்கையாளர் சந்திப்பை புறக்கணித்தது, காங்- ஆஆபா கருத்து வேறுபாடுகள், மமதா_காங் முரண்பாடு, இதையெல்லாம் வைத்து
கூட்டம் படுதோல்வி என்று, எள்ளி நகையாடுகிறது.
ஆனால், இது அவர்களே எதிர்பார்த்தது தான். சிம்லா சந்திப்பில் இவர்கள் நெருங்கி வரக் கூடும்.
நேற்று, திடீரென ஆஆபா டில்லியிலுள்ள 7 நாடாளு மன்றத் தொகுதிகளில் தனியாகப் போட்டியிடும் என்று அறிவித்து விட்டது.
BRS கட்சியும் தெலுங்கானாவில் தனித்தே களம்காணக்கூடும்.
பாஜக இனி வரும் காலங்களில் எச்சரிக்கையுடன் பணியாற்ற வேண்டும்.
தனக்கு வெற்றி நிச்சயம் என்று அசுவாரஸ்யமாக இருந்து விடக் கூடாது.
பல குழப்பங்களை, சில கட்சிகள்----- உள்நாட்டு வெளிநாட்டு, TOOLKIT சதியாளர்களோடு சேர்ந்து
அரங்கேற்றக் கூடும்.
.கவனம் தேவை.
இதனிடையே, தமிழக முதல்வர் ஸ்டாலின் ராகுல் காந்தியை சென்ற முறை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தியவரை, இம் முறை, கண்டு கொள்ளவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
.
நிதீஷ்குமார் தான் கூட்டணியின் தலைவராக
பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட வாய்ப்பு உள்ளது. இதை காங். ஏற்காது.
ஆக, மோதிக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஒரே அணியில் திரண்டு நிற்கும் என்பது பகல்கனவுதான்.
.
மூன்று அணிகள் தவிர்க்க இயலாதவை.
சிம்லா சந்திப்பு என்ன முடிவெடுக்கப் போகிறது? என்பதைப் பொறுத்து, கூட்டணிகள் முடிவாகக் கூடும்.
.
இது முடிவானால் பாஜகவும் தனது வ்யூகத்தை அமைக்கக் கூடும்.
ஒரு வேளை பாட்னா கஸின்ஸ் நெருங்கி வந்து, அதிசயம் நிகழ்ந்தாலும், பிரதமர் வேட்பாளரை முதலிலேயே அறிவிக்காது என்றே தோன்றுகிறது.
அத்தைக்கு மீசை முளைக்கட்டும், பிறகு சித்தப்பா என்று அழைப்போம்.

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...