Saturday, December 2, 2023

ஆங்கிலேயர் களின் ஆட்சியில் தமிழில் பேசிய முதல் தமிழன் ஒரு பிராமணர் .

 மிண்டோ மார்லி கமிஷனின் சிபாரிசு படி இந்தியாவுக்கு உள்ளாட்சி அதிகாரம் கொடுத்த பின் முதல் சென்னை மாகாண மேல் சபை கூட்டம் 1919ல் சென்னை கோட்டையில் நடந்தது

அப்பொழுது நரசிம்ம ஐயர் எனும் பிராமண உறுப்பினர் தமிழில் பேச தொடங்கினார், அப்பொழுது கவர்ணர் பெட்லாண்ட் இடைமறித்து ஆங்கிலத்திலத்தில் பேச சொன்னார்
இது எங்கள் தமிழகம் , தமிழில்தான் பேசுவோம் என மகா உறுதியாக தொடர்ந்து பேசினார் நரசிம்ம ஐயர், ஆம் ஆங்கிலேயர் களின் ஆட்சியில் தமிழில் பேசிய முதல் தமிழன் ஒரு பிராமணர்
1957ல் டெல்லியில் நாடாளுமன்ற உறுப்பினராக பேச தொடங்கினார் ஈ.வி.கே சம்பத், சம்பத் மிகப்பெரும் பேச்சாளர் ஆங்கிலமும் தமிழும் அவருக்கு அழகாய் வரும், டெல்லியில் அவர் ஆங்கிலத்தில் பேச, சபாநாயகராக இருந்த அனந்த சயனம் அய்யங்கார் எனும் தமிழர் "நீங்கள் தமிழரல்லவா? தமிழில் பேசுங்கள்" என சொல்லி உற்சாகப்படுத்தினார்
ஆம் டெல்லியிலும் தமிழில் முழங்க வேண்டும் என உற்சாகப்படுத்தியவன் ஒரு பிராமணன்
இந்த நரசிம்ம ஐயர், அனந்த சயனம் அய்யங்கார் பற்றி தமிழனுக்கு தெரியுமா என்றால் தெரியாது. இங்கு எல்லாம் அப்படித்தான், பூராவும் திராவிட புரட்டு, அப்பட்டமான வரலாற்று மோசடி.
இப்படி ஏராளமான தமிழ் வளர்த்த பிராமணர்கள் இருந்தனர் அவர்களுக்கு முன்னோடி இந்த சாமிநாதய்யர்
உ.வே. சாமிநாதய்யர் எனும் தமிழ்தாத்தா.
தமிழகத்தில் அச்சுக்கலையினை கொண்டு வந்து பேப்பரில் அச்சிட்டவன் சீசன் பால்கு எனும் ஜெர்மானியன் அவன் தரங்கம்பாடியில் அதை செய்தான்
காகித அச்சில் அவன் பைபிளை தமிழ்படுத்தி கொடுத்தான், தொடர்ந்து கிறிஸ்தவ விவகாரங்கள் வந்து கொண்டே இருந்தன, தமிழுக்கும் சைவத்துக்கும் எதிரான கருத்துக்களை தாங்கிய விஷயங்கள் வந்து கொண்டே இருந்தன‌
உண்மையான தமிழன் வரலாறும் சைவமும் பக்தியும் ஓலை சுவடியில் தூங்கி கொண்டிருந்தன, அதை அச்சில் ஏற்றுவார் இலர், ஏற்ற முயன்றாலும் வெள்ளை அரசும் அவர்களின் ரகசிய ஏஜென்டுகளும் விடுவதாக இல்லை
அதை உ.வே. சாமிநாதய்யர் உணர்ந்தார், இனி ஓலைசுவடியில் இருக்கும் தமிழனின் சைவ இலக்கியமும் நூல்களும் அச்சுக்கு வராவிட்டால் தீர்ந்தது விஷயம்
ஆம் அந்த அளவு விஷ கருத்துக்கள் பரப்பப்பட்டன திருகுறள் இஷ்டபடி வைக்கப்பட்டது, இன்னும் பல வரலாறுகளும் பாடல்களும் திருத்தபட்டன‌... திருடப்பட்டன.
அந்த இக்கட்டான நிலையில்தான் தன் போராட்ட , தியாகமான வாழ்வினை தொடங்கினார் சாமிநாதய்யர்
இந்த ஈரோட்டு ரோமசாமி, நீதிகட்சி , அண்ணாதுரை எல்லாம் பொங்கி கொண்டிருந்தபொழுது , தமிழை வாழவைப்போம், பிராமணனை ஒழிப்போம், பிராமணன் தமிழின விரோதி துரோகி என சொல்லி கொண்டிருந்த பொழுது மிக பொறுப்பாக தன் தமிழ் கடமையினை செய்து கொண்டிருந்தார் சாமிநாதய்யர்
பிராமணன் ஒழிக, தமிழ் வாழ்க என சொல்லி கொண்டிருந்த கோஷ்டி தமிழுக்கு என்ன செய்தார்கள் என நாம் கேட்க கூடாது, கேட்டால் கல்தோன்றி...
மண்தோன்றாக் காலத்தில்...
என தொடங்கி, பாவேந்தர் பாடலில் வந்து ஈழம் சென்று முஷ்டி உயர்த்தி நிற்பார்கள். இவர்களின் தமிழ்பற்று பிராமணனை விரட்டுவது, இந்தி, சமஸ்கிருத எதிர்ப்பு, பிராமணரை பகைவனாக சித்தரிப்பது இவைகள்தான் இவர்களின் தமிழ்பற்று.
பிராமணர்கள் தமிழக எதிரிகள் என்பார்கள், தமிழர்களை அடிமைபடுத்தினர் என்பார்கள், சரி, எந்த பிரமண அரசன் தமிழர்களை ஆண்டான் என கேட்டால் சொல்ல தெரியாது. காரணம் எந்த தமிழ் அரசனும் பிராமணன் இல்லை.
ஆனால் புலவர்களில் பலர் பிராமணர்களாயிருந்து தமிழ் வளர்த்திருக்கின்றனர் என்பதை அவர்களாலும் மறுக்கமுடியாது, இப்படி எல்லாம் கேள்விகேட்டு, பின் எப்படி பிராமணர் தமிழ் எதிரியாயினர் என்றால், ஹி ஹி ..ஹி .. பிராமணன் வேறு பார்ப்பானியம் வேறு என சென்றுவிடுவார்கள்.
தமிழை மிக தீவிரமாக வளர்த்தவர்கள் யாரென்றால் தொல்காப்பியர் அகத்தியர் முதற் சங்ககாலம் என அக்காலங்கள் கடந்தபின் தமிழினை வளர்த்து தீரா அடையாளம் கொடுத்தவர்கள் பலர் உண்டு
பின்னாளில் பவுத்த துறவிகள் அதன் பின் சமணதுறவிகள். சீவகசிந்தாமணி,சிந்தாமணி எல்லாம் அதனைத்தான் சொல்கின்றன. சமணர்கள் சைவத்தை அழிக்க தமிழை வளர்த்தார்கள், தமிழ் அதிலும் வளர்ந்திருந்தது
அப்படியாக பிராமணர்களிலும் மிக உயர்ந்த தொண்டாற்றியவர்கள் உண்டு, சம்பந்தர் காலம் மாணிக்கவாசகர் காலம், பரிமேலழகர் காலம் என அக்காலங்களை விடுங்கள், அதன் பின் வந்த அருணகிரிநாதர், காளமேகபுலவர் என தமிழ்வளர்த்த பிராமணர்களின் வரிசை பெரிது.
தமிழ்சிறந்த பரிதிமாற் கலைஞரும், மகாகவி என உலகம் கொண்டாடும் பாரதியின் தமிழ்தொண்டு உலகறியும், இவர்கள் எல்லாம் அந்த பிராமணர்களே.
பள்ளிகளில்,கல்லூரிகளில் தமிழாசிரியராய் இருந்து அக்காலத்தில் தமிழ்வளர்த்தவர்களில் பெரும்பாலானோர் பிராமணர்கள் என்பதை மறுக்கமுடியுமா? அப்படியான காலத்தில் தமிழ் எப்படி உயர்ந்திருந்தது?
தமிழை காக்கவந்ததாக புறப்பட்ட கழகங்களில் ஆட்சியில் தமிழ் எப்படி சீரழிந்திருக்கின்றது என்பது ஒன்றும் ரகசியமல்ல‌.
ஓலை சுவடிகளில் அலையும் நிலையிலிருந்த பண்டைய காப்பியங்களையும், இலக்கியங்களையும் முதன் முதலில் அச்சுக்கு ஏற்றிய பெரும் தமிழ்தொண்டு செய்த இந்த உ.வே சாமிநாதய்யரும் பிராமணரே.
அவரின் உழைப்புதான், இவரின் தேடலும் அக்கறையும் தான் இன்று தமிழ்நூல்கள் அச்சுவடிவில் கிடைக்க முழுகாரணம். தொல்காப்பியம் முதல் திருக்குறள்வரை, ஐம்பெரும் காப்பியம் முதல் ஐங்குறுநூறுவரை அவர்தான் அச்சில் ஏற்றினார்.
அன்று இவை தேடுவாரற்று ஆதீனங்களில் மடங்களில் தமிழ் வித்வான் வீடுகளில் ஓலைசுவடிகளாய் கிடந்தன, பாதி அழிந்தும் விட்டது, தமிழறிந்து அதன் முக்கியத்துவமறிந்து ஒவ்வொரு ஆதீனமாய் சென்று அதனை பெற்று பின் தாளில் எழுதி, அச்சுக்கு அனுப்பி ஒரு தனிமனிதனாய் இவர் செய்த சாதனை மிக பெரிது.
500 புத்தகங்களை அச்சுக்கு ஏற்றி, 3000க்கும் மேற்பட்ட தமிழ்புத்தகங்களை வெளியிடசெய்து ஒரு தன்னிகரற்ற சேவையினை தமிழ் உலகிற்கு வழங்கிய ஒரு பெரும் கொடையாளி.
தமிழ் உலகம் கொண்டாட வேண்டிய ஒப்பற்ற உழைப்பாளி.
வள்ளுவன், கம்பன்,அவ்வை, சங்கால புலவர்கள் என எல்லோரையும் ஏட்டில் அவர்தான் காட்டினார்
இந்த‌ ஐம்பெரும் காவியம் சிறுங்காவியம் சங்கநூல்கள் பத்துபாட்டு எட்டுதொகை பதினென்கீழ் கணக்கு , பதினென்மேல் கணக்கு என எல்லா நூல்களும் அவராலேதான் அச்சுக்கு வந்தன‌
காலம் மிக சரியான நேரத்தில் கொடுத்த தமிழ் கொடை அவர்.
இன்று அவரின் நினைவுநாள், பிராமணனாய் பிறந்துவிட்டதால் தமிழகத்திலிருந்து மறைக்கபட்ட பெரும் தமிழறிவு களஞ்சியத்தில் அவரும் ஒருவர்.
ஆனால் நன்றியுள்ள தமிழர்கள், தமிழினை நேசிப்பவர்கள் அவரை மறக்கமாட்டார்கள். அந்த தமிழனுக்கு, தமிழை நேசித்து இறுதிவரை தமிழுக்காய் வாழ்ந்த அந்த பெருமகனின் நினைவு நாளில் அவரை நினைவு கூர்வோம்.
சுற்றி இருக்கும் இனத்தை எல்லாம் பகைத்துகொள்வதோ, அந்நிய மொழிகளை விரட்டுவதோ மட்டும் தமிழ் உணர்வு ஆகாது. தமிழை நேசிக்க வேண்டும், தமிழுக்காய் உழைத்த தமிழர்களை நன்றியோடு நினைவு கூறவும் வேண்டும்.
அவ்வகையில் தமிழ்தாத்தா என்றழைக்கபடும் இந்த தமிழ் முப்பாட்டனார் நிச்சயம் மறக்கமுடியாதவர்.
அக்காலத்தில் அப்படி தனிமனிதனாக அவர் அந்த ஏட்டுசுவடிகளை காப்பாற்றாமல் விட்டிருந்தால் இன்று நமக்கு திருக்குறளுமில்லை, கம்பனுமில்லை, இளங்கோவுமில்லை, கணியன் பூங்குன்றனுமில்லை.
எல்லா அரும் காவியங்களும் கரையானுக்கு இரையாகி முடிந்திருக்கும். அப்படி தமிழ்கடவுளின் தூதனாக வந்து தமிழ் அறிவு அடையாளங்களை காப்பாற்றிய பெருமகனார் அவர்.
மிக சரியான காலத்தில் வந்து கிறிஸ்தவ திராவிட கும்பல் தமிழ் ஓலைசுவடிகளை கைபற்றி பல விஷயங்களை மறைக்கும் முன், அவற்றின் உண்மை பொருளை மறைத்து தமிழனுக்கு மதமில்லை, சைவ மதம் என எதுவுமில்லை என மிக பெரும் புரட்டை ஏற்படுத்திய காலத்தில் சரியாக வந்தார் பழம் சங்க இலக்கியம் முதல் எல்லாவற்றையும் ஓலைசுவடியில் இருந்து மீட்டு நம் கைகளுக்கு தந்துவிட்டு சென்றுவிட்டார்
இல்லையேல் மிகபெரும் குழப்பமும் சிக்கலும் இங்கு வந்திருக்கும், தமிழனின் சைவ அடையாளம் மறைக்கபட்டு மாபெரும் அடையாளம் மறைக்கபட்டு அவன் மொட்டை அடிக்கபட்டிருப்பான்.
சாமியாதய்யர் தன் நெடும் போராட்டத்தை நடத்தியபொழுது ஒவ்வொரு ஓலையாய் மீட்டு அச்சில் ஏற்றிய பொழுது சைவ சித்தாந்த கழகம், ஆதீனம், மடங்கள், ஆலயங்கள் அவருக்கு உதவின‌
இந்த நீதிகட்சி, திராவிட கழகமெல்லாம் அய்யரை ஒரு மனிதனாகவே நோக்கவில்லை, தமிழை தேடுகின்றாரே, தமிழர் அடையாளத்தை அச்சில் ஏற்றுகின்றாரே என கொஞ்சமும் உதவவில்லை
தமிழை வாழவைப்போம் என சொல்லிகொண்டே தமிழை உண்மையில் வாழவைத்த அந்த பெருமகானை சாதியால் ஒதுக்கி, மதத்தால் விரட்டி அடித்தார்கள்
இதுதான் அவர்கள் தமிழுக்கு உழைத்த லட்சணம்,
காலத்தால் வந்த அந்த பிராமண கிழவன், தமிழை காத்து தமிழ் அடையாளத்தை காத்து தந்த தெய்வம், இன்றும் என்றும் அவரை நினைவில் கொள்ளுவோம்...

இதெல்லாம் நடக்கணும்.

 மணல் குவாரி கொள்ளை விஸ்வரூபம் எடுத்துவரும் நிலையில் திண்டுக்கல்லில் வைத்து திட்டம் தீட்டி ஒரு ED அதிகாரியை மாட்ட வைத்து மிகப்பெரிய தவறைச் செய்திருக்கிறது விடியல் அரசு -

இதற்குக் கதை, திரைக்கதை, வசனம் யார் அமைத்துக்கொடுத்திருப்பார்கள் என்று தெரியாது ஆனாலும், மிகப்பெரிய தத்திதான் இந்தத் திட்டத்தைத் தீட்டிக் கொடுத்திருப்பான் -
திண்டுக்கல் என்றாலே, அங்கேதான் மணல் மாஃபியாக்களின் தலைவன் சர்வேயர் ரத்தினம் இருக்கிறார், சாதாரண சர்வேயராக வாழ்க்கையை ஆரம்பித்த இந்தத் தியாகிக்கு இன்று இருப்பது பல ஆயிரம் கோடி சொத்துக்கள், கல்வி நிறுவனங்கள், கல்வித் தந்தை என்ற பட்டம் வேறு -
இவர் இன்று மிகப்பெரிய இக்கட்டில் இருக்கிறார், ED எந்த நிமிடமும் இவரைக் கைது செய்ய வாய்ப்பிருக்கிறது பல ஆயிரம் கோடி சொத்துக்களை முடக்க வாய்ப்பிருக்கிறது, இவர் மாட்டினால் மணல் மாஃபியாவின் பெரும் கும்பலே மாட்ட வாய்ப்பிருக்கிறது எனும் பொழுதுதான் வழக்கமான ஒரு சுமாரான டைரக்டரை வைத்து ஒரு படம் எடுத்து தேவையில்லாமல் ED-யை அதாவது மத்திய அரசைச் சுரண்டியிருக்கிறது -
முதலில் அந்த டாக்டர் சுரேஷ்பாபு யாரென்றால் அக்மார்க் தி.மு.கக்காரர், இவர்மீது என்ன வழக்கு எதற்காக லஞ்சம் கொடுத்தார் ஏற்கனவே 20 லட்சம் கொடுத்துவிட்டு, பிறகு திடீரென ஞானனோதயம் வந்து எதற்காக இந்த அதிகாரியைக் கையும் களவுமாகப் பிடித்துக் கொடுத்தார் என்பதற்கெல்லாம் ஒரே பதில் -
இது மிகத் திறமையாக எடுக்கப்பட்ட ஒரு சுமாரான திரைப்படம், அட்டர் ப்ளாஃப் ஆவது உறுதி -
அந்த அதிகாரி உண்மையாகவே லஞ்சம் வாங்கியிருந்திருந்தாலும் கூட இந்த விவகாரத்தில் அடுத்த நடக்கவிருக்கும் CBI விசாரணையில் தப்பிப்பதற்குப் போதுமான வாய்ப்புகள் இருக்கின்றன ( இருக்கின்றனவா?, கொடுக்கப்பட்டதா? என்பது மில்லியன் டாலர் கேள்வி) -
பொதுவாக லஞ்ச ஒழிப்புத்துறையைப் பொருத்தவரை, இரசாயணம் தடவிய நோட்டுக்களைக் கொடுத்து ஒருவரை கையும் களவுமாகப் பிடிக்கத்திட்டமிட்டால சம்பந்தப்பட்ட இடத்திலேயே மட்டும்தான் பிடிப்பார்கள் அதுதான் வழக்கிற்கு வலுச்சேர்க்கும், இதுநாள் வரை நடந்தது இதுதான் -
ஆனால், சம்பந்தப்பட்ட வழக்கில் அங்கிட் திவாரி அந்த டாக்டர் சுரேஷ்பாபுவை சந்திந்தித்துப் பேசிய அந்த ஹோட்டலிலேயே கைது செய்திருந்தால் அது வலுவான சாட்சியங்களுடன் கூடிய கைதாக இருந்திருக்கும், CCTV - Footage களுடன் எளிதாக நிருபிக்கவும் முடியும், மேலும் லஞ்ச ஒழிப்புத்துறையின் வழக்கமான ஸ்டைலும் அதுதான் -
எனும் பொழுது எதற்காக, அவரது காரின் டிக்கியில் பணத்தை வைத்து அவரை அங்கிருந்து கிளம்ப அனுமதித்து பிறகு சேஸிங் செய்து கைது செய்யவேண்டும் -
இவர் கேட்டபடியே, யாரோ ஒருவர் காரின் டிக்கியில் பணம் வைக்கும் CCTV ஆதாரங்களைக் காண்பித்தால் கூட, நாளை நீதிமன்றத்தில் இவர் தனக்குத் தெரியாது யாரோ என்னை மாட்டிவிடச் செய்த சதி என்று தப்பிவிடத்தான் வாய்ப்புகள் அதிகம் -
ஆக, சரியாக எழுதப்படாத திரைக்கதையில் யார், யார் நடிகர்கள் என்று தெரியவில்லை -
ஆனால், இதன் விளைவுகள் படுமோசமாக இருக்கும், ஒட்டுமொத்த ED - யும் தவறானது, தங்களது அமைச்சர்கள் மீது போடப்பட்டதெல்லாம் உள்நோக்கம் கொண்ட வழக்குகள், அமைச்சர்கள் அப்பாவிகள் என்று பொதுமக்களை நம்ப வைக்க விடியல் அரசு செய்த வழக்கமான டிராமாவாக இது இருந்தாலும் கூட விளைவுகள் மோசமாக இருக்கும் -
இனி ED உக்கிரத்துடன் களமிறங்கும் அடுத்தடுத்து பல செந்தில்பாலாஜிக்களுக்குத் தொடர்ந்து அடைப்பெடுக்கப்படும், விசாரணைக்கு அழைக்கும் ஒவ்வொருத்தரையும் இனி கைது செய்தே விசாரணை நடக்கும் -
கொள்ளிக்கட்டையை எடுத்து தலையில் சொறிந்து கொண்டீர்களே த்தாலின் -

மாற்றல் மட்டுமா? நிரந்தர பணிநீக்கம் இல்லையா?

 மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியுடன் மற்ற அதிகாரிகளும் கூட்டுக் களவாணிகள் என்றால்....

மத்திய அரசு அனைவரையும் ஒட்டுமொத்தமாக மாற்றல் செய்யும்.
புதிய அதிகாரிகள் வருவார்கள். அமலாக்கத்துறைக்கு தற்போது நேரிட்டுள்ள கெட்ட பெயரின் காரணமாக புதிதாக வரும் அதிகாரிகள் சிறப்பாகவும் நேர்மையாகவும் செயல்படுவார்கள்.
இப்படியானால் இது தமிழக அரசுக்கே கஷ்டமாக முடியும்.

.திமுக தன்னை காப்பாற்ற எதையும் செய்யும் ஆனால் ED யிடம் போதுமான ஆதாரம் உள்ளது. அரசை டிஸ்மிஸ் செய்யாமல், குற்றவாளிகளை கைது செய்யாமல், சிறையில் அடைக்காமல், மத்திய அரசால் பிரச்னையை சமாளிக்க முடியாது.
மோடிஜி இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் அவர் எதற்காக காத்திருக்கிறார் என்று தெரியவில்லை? அது ஒரு பெரிய தவறாக இருக்கும்.

லஞ்சம் கொடுக்க முனைந்தவர் பின் புலம் அறிய வேண்டும். வேண்டும் என்றே அமலாக்கத் துறையை இழிவு படுத்தி அதன் செயல் பாட்டை தடுக்க முயல்வர்.செந்தில் பாலாஜிக்கு பல வியாதி என கூறி தப்பிக்க நினைத்தது போல் அமலாக்க துறையை முடக்க ஏற்பாடு செய்த சதியோ? உளவுத்துறை ஆய்க. நிச்சயமாக திசை திருப்ப,ஊழலை மறைக்க நடக்கும் நாடகமே?

Friday, December 1, 2023

மனித பண்புகளையும், உறவுகளையும் மதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும்.

 ரேமன்ட் கம்பனி நிறுவனர் விஜய் சிங்கானியா.

பார்மல் ஆடை என்றால் ரேமண்ட் என பெயர் வாங்கியவர். ஒரு காலத்தில் அம்பானியுடன் போட்டியிட்டு தொழில் செய்தவர்.
இவருக்கு இரு மகன்கள். மூத்தமகன் பல ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்துடன் சண்டை போட்டுக்கொண்டு "நீங்க யாரும் வேண்டாம்" என சொல்லிவிட்டு சிங்கப்பூருக்கு போய் செட்டில் ஆகிவிட்டான்.
2015ல் இளையமகன் கவுதம் சிங்கானியாவுக்கு நிறுவனத்தை மாற்றி, நிர்வாக இயக்குநராக நியமித்தார். எல்லா சொத்துக்களையும் மகன் கவுதம் சிங்கானியாவின் பெயரில் மாற்றி எழுதினார். அப்பாவின் ஒரே எதிர்பார்ப்பு, மகன் வசிக்கும் "ஜேகே இல்லத்தில் தானும் தங்கலாம்" என்பதாக இருந்தது.
ஜேகே ஹவுஸ் இந்தியாவின் மிக விலை உயர்ந்த இரண்டாவது வீடு. அம்பானி வீட்டிற்கு அடுத்ததாக விலைமதிப்பு வாய்ந்தது.
அதில் விஜய் சிங்கானியா கேட்டது ஒரு அறை. அதை கொடுக்க மகன் மறுத்துவிட்டார். அதன்பின் அப்பா மகனைத் திட்ட, நிறுவனத்தின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் அப்பா விலக்கப்பட்டு, விரட்டி அடிக்கப்பட்டுவிட்டார்.
இப்போது தன் 85வது வயதில் மும்பையில் ஒரு அபார்ட்மெண்டை வாடகைக்கு எடுத்து வசித்து வருகிறார் விஜய் சிங்கானியா. "செலவுகளைச் சந்திக்க பணம் போதவில்லை. வறுமையில் இருக்கிறேன்" என்று கூறுகிறார்.
#பிசினஸ்_பிஸ்தாக்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மனித பண்புகளையும், உறவுகளையும் மதிக்க கற்றுக்கொடுக்கவேண்டும். சும்மா பணம் சம்பாதிக்க கற்றுக்கொடுத்தால் மட்டும் போதாது. இல்லையெனில் அது நமக்கே வினையாக வந்துமுடியும்.
~ நியாண்டர் செல்வன்
May be an image of 3 people, phone and street

திமுக கொஞ்சம் அதிர்ஷ்டம் செய்திருக்கிறது!

 கடந்த 6 மாதமாக தங்களின் கண்ணில் விரல் விட்டு ஆட்டிக் கொண்டிருந்த ED ஐ எப்படி மடக்குவது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்த வேளையில்

வசமா வந்து தாங்களே மாட்டிக் கொண்டிருக்கிறது ED.
மற்ற மாநிலங்கள் போல் மத்திய அரசு ஏஜென்சி என்றவுடன் பம்மிக் கொண்டிருந்த மாநிலம் தான் தமிழ்நாடும்.
ஆனால் முதலில் CBI என்ன வானத்திலிருந்து குதித்து வந்தவர்களா என்று துவங்கியவர் நம்ம கருணாநிதி தான். அதுக்கும் முன் பிரதமர் மீதே கல்லெறி நடத்தியவர்கள் தான் இவர்கள்.
இதெல்லாம் தாண்டி கருரில் செ.பா வீட்டில் சோதனை செய்த போதே வருமான வரித்துறையினரை தாக்கியவர்கள் இவர்கள்.
இப்படி இருக்கும் டகால்டி கூட்டத்தை கையாளும் போது உஷாராக இருக்க வேண்டாமா? டெல்லி இங்கு வரும் அதிகாரிகளுக்கு சரியான டிரைனிங் கொடுத்து எச்சரித்து அனுப்ப வேண்டாமா?
அங்கித் திவாரி இது என்னவோ மத்திய பிரதேசம் என்று நினைத்து விட்டார் போலிருக்கு?
வசமா வந்து மாட்டிகிட்டயே பங்கு!
எவனாயிருந்தாலும் உப்பை தின்னவன் தண்ணி குடித்தே ஆகவேண்டும்.
இந்த நிகழ்வு மத்திய மாநில அதிகார. மரியாதை விஷயத்தில் பெரும் பின் விளைவுகளை எற்படுத்த போவது உறுதி!
திமுக சும்மாவே ஆடும். இப்ப சரக்கு வேற கிடைச்சுட்டது.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி...கதை கண்டு
செ.பா மற்றும் துரைமுருகன் போன்றோர் மகிழ்ச்சி அண்ணாச்சி!
Bad setback for Team for Change.😟

ஒயின்_பிஸ்கெட்ஸ்

 சில ஊர்களில் முட்டை பிஸ்கெட்ஸ் என்றழைக்கும் இந்த பீன்ஸ் பிஸ்கெட்டுகளை நான் சிறுவயதில் சாப்பிட்டதை இன்றும் மறக்கவே முடியாது! எனது பால்யத்தில் சேலத்தில் குடியிருந்த போது இந்த பிஸ்கெட் இல்லாத பேக்கரிகளையோ, பெட்டிக் கடைகளையோ காண்பது அரிது! அப்படி என்ன தான்யா இருக்கு அந்த பிஸ்கெட்டில் என்பவர்களுக்கும் இதுவரை அதை ருசித்ததேயில்லை என்று..

சொல்பவர்களுக்கும் நான் சொல்லிக் கொள்வது.. ருசிகரமான சம்பவம் என்னும் சொல்லுக்கு உதாரணமே இந்த பிஸ்கெட்டை சாப்பிடுவது தான் என்பேன்.! இதை எனக்கு அறிமுகப்படுத்தியது எங்கள் பெரியப்பா இராஜகோபால் தான்!என் தந்தை ஸ்வீட்ஸ், மற்றும் ஓட்டல் வைத்திருந்ததால் எங்கள் வீட்டுக்கு வரும் விருந்தினர்கள் பழங்கள் அல்லது எங்கள் கடையில் கிடைக்காத..
தின்பண்டங்களை வாங்கி வருவது வழக்கம்! எங்கள் அசோகன் அண்ணன் தேங்காய் பன்னை எங்களுக்கு அறிமுகப் படுத்தியது போல எங்கள் பெரியப்பா அறிமுகப் படுத்தியது இந்த பிஸ்கெட்! கமகமன்னு பேக்கரிக்கான பிரத்யேக பிஸ்கெட் வாசனையில் ஓரத்தில் பிரவுனாகவும் நடுவில் மஞ்சளாகவும் குட்டி நாலணா சைசில் இருக்கும் கர கர மொறுன்னு வாயில் கரையும்! அளவான இனிப்பு..
அப்புறம் அந்த ஒயின் கலப்பால் மைதாவில் ஏற்பட்ட அந்த க்ரிஸ்ப்பி தான் இந்த பிஸ்கெட்டின் தனிச்சிறப்பு! அதுவம் ஹென்றி உல்சி பேக்கரி ஒயின் பிஸ்கெட் என்றால் கேட்கவே வேணாம்.! இயேசுநாதர் காலத்தில் இந்த பிஸ்கெட் இருந்திருந்தால் அவர் அப்பமும் ஒயினும் இரண்டும் தந்து நிகழ்த்திய அற்புதத்தை டூ இன் ஒன்னாக இதையே தந்து நிகழ்த்தியிருப்பார் என இந்த பிஸ்கெட்டின் மீது சத்தியம்..
செய்து சொல்லலாம்! மேலும் ஹென்றி உல்சியில் இந்த பிஸ்கெட் சிறிது சூடாகவே கிடைக்கும்! பிரவுன் நிற கவரில் எடை போட்டு தருவதற்குள் என் நாவு நடை போட்டு சென்று.. அண்ணா கொஞ்சம் அள்ளி கையில் கொடுங்கன்னு கேட்க வைக்கும். அதிலும் கண்ணாடி பாட்டிலில் கொட்டி வைத்திருக்கும் இந்த மொறு மொறு பிஸ்கெட்டுகள் உதிர்வதால் பாட்டிலின் அடியில் தூளாக..
குவிந்து இருக்கும், தூள் பக்கோடா போல தூள் பிஸ்கெட்! அதன் சுவையும் படு தூளாக இருக்கும்! ஹென்றி உல்சி ஒயின் பிஸ்கெட் மட்டும் பார்த்தவுடனே தெரிந்துவிடும் ஏனெனில் அந்த பிஸ்கெட் முழுவதுமே பிரவுன் கலரில் இருக்கும்.. மஞ்சளாக இருப்பது செகண்ட் குவாலிட்டி! இதெல்லாம் பிற்காலத்தில் தான் அறிந்து கொண்டேன்! குகை பகுதியில் வசிக்கும் போது அடிக்கடி..
வசப்பட்ட இந்த ஹென்றி உல்சி பிஸ்கெட் கிச்சிப்பாளையத்தில் குடியேறிய பின்பு மாதமொரு முறையே கிடைத்தது ஆனால் இதே பிஸ்கெட்டை நல்ல சுவையில் திவான் பீடி கம்பெனி அருகேV போல பிரியும் இரு சாலைகளில் Vயின் கீழ்ப்புறம் இருக்கும் அம்பின் முனை போன்ற பகுதியில் இருக்கும் பெட்டிக் கடையில் அனுமன் கண்டேன் சீதையை என்றது போல கண்டறிந்தேன்!பிறகு அடிக்கடி..
அங்கே தான் சாப்பிடுவேன் நாலணாவுக்கே 50 கிராம் அளவில் நியூஸ் பேப்பரில் பொட்டலம் கட்டித் தருவார்கள். எங்கள் சிந்தி இந்து பள்ளியில் எப்போதும் பேன்ட் சட்டையில் பார்த்தே பழகிய அஞ்சாவது ஏ சார் என்று நாங்கள் அழைக்கும் அர்த்தநாரி சாரை அவ்வப்போது இந்தக் கடையில் கைலியில் பார்த்து வியந்து மாலை நேரத்திலும் குட்மார்னிங் சார் சொல்லிவிட்டு பிஸ்கெட்டை..
வாங்கிக் கொண்டு திரும்புவோம்! ஒரு நாள் அவரிடம் அவசரத்தில் பிஸ்கெட் பொட்டலம் வாங்கிய கையை குட்மார்னிங் சொல்ல தூக்க பொட்டலம் பிரிந்து வாங்கிய பிஸ்கெட்டுகள் எல்லாம் ரோட்டில் கொட்டிவிட அது தரையில் தாறுமாறாக வரைந்த பிஸ்கெட் கோலம் போல.. இல்லையில்லை அலங்கோலமாய் கிடக்க.. சிரித்துக் கொண்டே அர்த்தநாரி சார் “பரவாயில்லை விடுப்பா நான்..
வாங்கித்தர்றேன்" என அதே பிஸ்கெட்டை அந்தக் கடையில் வாங்கிக் கொடுத்தது எந்நாளும் என்னால் மறக்க இயலாது! அந்த பழம் நினைவுகளையும் ஒயின் பிஸ்கெட்டின் அந்த அலாதியான ருசியும் எந்தக் காலத்திலும் மறக்க இயலாது! இன்றும் நினைத்தாலே இனிக்கும்! ஆம் பழைய ஒயின் என்றும் மதிப்பு வாய்ந்தது தானே!
May be an image of crackers, cake and coconut macaroon

வாய்ப்பே இல்லை.... இவர்கள் விஞ்ஞானத்தில் மிகவும் கெட்டிக்காரர்கள்.

 பிரபல மணல் வியாபாரி கரிகாலன் என்பவர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் அவர்களுக்கு லண்டனில் 60 ஏக்கர் பரப்பளவில் உள்ள ஒரு பெரிய ஹோட்டலை வாங்கி கொடுத்திருக்கிறாராம்...

அந்த இடத்தில் ஒரு ஏக்கர் நிலத்தின் விலை சுமார் 4 கோடி யூரோ. அதாவது சுமார் 350 கோடி அப்படி என்றால் அந்த ஹோட்டலில் மொத்த விலை இந்திய மதிப்பில் 21,000 கோடி என்கிறார் கள்...
ஓ இதுக்குத்தான் கரிகாலன் மற்றும் கதிர் ஆனந்த் ஆகியோர் லண்டனில் சுற்றினார்களா ?
இந்த செய்தி மட்டும் உண்மை என நிரூபிக்கப்பட்டால்...
துரைமுருகன் கதிர் ஆனந்த் மற்றும் கரிகாலன் உள்ளிட்ட மணல் மாஃபியாக்கள் ஒட்டுமொத்த கோஸ்ட்களின் சாப்டர் க்ளோஸ் .
May be an image of 2 people, car and text that says '&S SNI3 CXB'

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...