"2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் கைதாகி திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க., எம்.பி., கனிமொழி, ஜாமின் கேட்டு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளார்.
ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ஆதாயம் பெற்ற டி.பி.ரியாலிட்டி நிறுவனம் தன் துணை நிறுவனங்கள் மூலம், பிரதிபலனாக 200 கோடி ரூபாயை கலைஞர் "டிவி'க்கு வழங்கியது. இது குறித்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., இரண்டாவது குற்றப்பத்திரிகையில், கலைஞர் "டிவி' பங்குதாரர்களான தி.மு.க., எம்.பி., கனிமொழி, நிர்வாக இயக்குனர் சரத்குமார் ஆகியோரை சேர்த்தது. இதை தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த மாதம் 20ம் தேதி முதல் திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். கனிமொழியும், சரத்குமாரும் முன் ஜாமின் கோரி தாக்கல் செய்த மனு டிஸ்மிஸ் செய்யப்பட்டது. பின்னர், ஜாமின் கோரி இருவரும் டில்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதன் மீதான தீர்ப்பு கடந்த புதன்கிழமை வழங்கப்பட்டது. "அவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. ஜாமினில் விடுவித்தால் சாட்சிகளை கலைப்பதற்கு வாய்ப்பு உள்ளது' என கூறி, நீதிபதி ஜாமின் வழங்க நிராகரித்தார். இதை தொடர்ந்து கனிமொழியும், சரத்குமாரும் ஜாமின் கோரி நேற்று சுப்ரீம் கோர்ட்டை அணுகினர். இது குறித்து மூத்த வக்கீல் வி.ஜி.பிரகாசம் கூறுகையில், "கனிமொழி, சரத்குமார் சார்பாக சுப்ரீம் கோர்ட்டில் சிறப்பு மனுவை தாக்கல் செய்துள்ளோம். டில்லி ஐகோர்ட்டில் ஜாமின் மறுக்கப்பட்டதை எதிர்த்து இந்த மனுவை தாக்கல் செய்துள்ளோம்' என்றார்.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
No comments:
Post a Comment