Saturday, July 23, 2011

அழகிரி-ஸ்டாலினுக்கு இடையே போட்டியில்லை: டி.ஆர்.பாலு

மு.க.அழகிரி, மு.க.ஸ்டாலினுக்கு இடையே எவ்விதப் போட்டியும் இல்லை என்றும், அவை ஊடகங்களால்தான் உருவாக்கப்பட்டு பெரிது படுத்தப்படுகிறது என்றும் டி.ஆர்.பாலு கூ‌றியு‌‌ள்ளா‌ர்.

அழகிரி-ஸ்டாலினுக்கு இடையே போட்டியில்லை: டி.ஆர்.பாலு
கோவை‌யி‌ல் இ‌ன்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் பே‌சிய அவ‌ர், மு.க.‌ஸ்டாலின், மு.க.அழகிரிக்கு இடையே பிணக்கு என்றும் போட்டி என்றும் மீடியாக்களில்தான் இவ்வாறு செய்திகளும் கட்டுரைகளும் வருகின்றன; அவையே ஊதிப் பெரிதாக்குகின்றன என்றார்.

தி.மு.க.- காங்கிரசுக்கு இடையிலான உறவு சுமுகமாக இருப்பதாகவும், இது குறித்த விவாதம் இன்றைய செயற்குழுக் கூட்டத்தில் நடக்க இருப்பதாகவும் டி.ஆ‌ர்.பாலு கூறினார்.

தி.மு.க தரப்புக்காக மத்திய அமைச்சரவையில் இரண்டு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சரவை இடங்கள் குறித்தும் இன்றைய செயற்குழுவில் விவாதிக்கப்பட்டு முடிவு எடுக்கப்படும் என்று டி.ஆர்.பாலு கூ‌றினா‌ர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...