1954-ம் ஆண்டு பெருந்தலைவர் காமராஜர் முதல்வராக பதவி ஏற்கிறார். ஆனால் அவர் சட்டமன்ற உறுப்பினராகவில்லை. அதானல் ஆறு மாதத்திற்குள் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட்டு வேற்றி பெற்றாக வேண்டும். போட்டியிட வேண்டியதில்லை. எம்.எல்.சி.யாக பொறுப்பேற்றுக்கொள்ளலாம் என்று பலரும் கூறினார்கள். அதை ஏற்கவில்லை. மக்களிடம் வாக்குகளை பெற்றே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்கிறார். பட்டென்று என் தொகுதியில் போட்டியிடுங்கள், நான் பதவி விலகுகிறேன் என்கிறார் அருணாச்சலம். இடைத்தேர்தல் நடந்தது. அதன்படி அவருக்கு தொடர்பே இல்லாதா குடியாத்தம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கோதண்டராமன் என்ற தோழர் போட்டியிடுகிறார். கடுமையான பிரச்சாரம் நடக்கிறது. அப்போது ஒரு இடத்தில் ‘மேம்பாலம்’ கட்டித் தரவேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் வைக்கிறார்கள். காமராஜர் முதல்வர். பதவியில் இருக்கிறார். சரி என்று கூறியிருந்தால் மொத்த வாக்காளர்களும் ஓட்டு போட்டிருப்பார்கள்.. ஆனால் அப்படி செய்யவில்லை. அப்படியெல்லாம் செய்ய முடியாது என்று மறுத்துவிட்டு வருகிறார். உடனிருந்தவர்கள்‘என்ன ஐயா. கோரிக்கையை நிறைவேற்றுகிறேன் என்று ஒரு வார்த்தை கூறியிருக்க கூடாதா. கோரிக்கை நியாயமானதும்கூட. எல்லோரும் ஓட்டு போட்டிருப்பார்களே’ என்று குறைபட்டுக்கொண்ட போது,....“ அது தப்பு. மக்கள் வைத்த கோரிக்கை நியாயமானதுதான்.அதை தேர்தலுக்கு பிறகு செய்துகொடுத்துடவேண்டியதுதான். ஆனால் அதை சொல்லி ஓட்டு கேட்ககூடாது. நான் அப்படி கேட்டால் எதிர்கட்சி வேட்பாளர் கோதண்டம் என்ன சொல்லி ஓட்டு கேட்பார். அவரிடம் அதிகாரமில்லையே.நான் அதிகாரத்தை துஷபிரயோகம் செய்வதாகதானே அமையும். இது எப்படி ஜனநாயகமாகும்.” என்று கூறி மறுத்தே விட்டார். இன்றைய அரசியல் அப்படி இருக்கிறதா. எத்தனை அறிவிப்புகள். எத்தனை இலவசங்கள். தாங்கள் சேர்த்த சொத்துக்களை பாதுகாத்துக்கொள்ள அதிகாரம் என்ற பூதம் வேண்டும். மக்கள் நிராகரித்தால்...? என்ன செய்வது. தோற்றுவிட்டால் என்ன செய்வது? என்ற அச்சம். அந்த அச்சம் இலவச அறிவிப்புகளை, திட்டங்களை அறிவிக்கச் சொல்கிறது.
I want to create at least a minimum awareness among people to understand our politicians and religion. This will help our nation to weed-out corruption at all levelவிட்டுக்கொடுங்கள் உறவுகள் ப(பா)லமாகும் ! தட்டிக்கொடுங்கள் தவறுகள் குறையும் !! மனம்விட்டு பேசுங்கள் அன்பு பெருகும் !!! அன்பு செலுத்துங்கள் வாழ்க்கையே சொர்க்கமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*
போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...
-
தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள்தமிழக சட்டபேரவை தேர்தல் முடிவுகள்: அ.தி.மு.க கூட்டணி - 204 தொகுதிகள், தி.மு.க கூட்டணி - 30 தொகுதிகள் இதுவரை நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் ...
-
பர்சனாலிட்டி (ஆளுமை)யை வளர்த்துக் கொள்வது எப்படி? – பயனுள்ள குறிப்புக்கள் மனிதர்களின் தனித்தன்மையைப் புரிந்துகொண்டால் அவர்களைச் சமாளி...
-
இளநீரில் அதிக அளவு பொட்டாசியம் இருப்பதால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் வாதம் சம்பந்தமான நோய்களுக்கும் நல்ல மருந்தாக அமைகிறது. பொட்டாசியம் ம...
No comments:
Post a Comment