தமிழக முதல்வராக பொறுப்பேற்றது முதல், எடப்பாடி பழனிசாமி விபூதி மற்றும் குங்குமத்தை தமது நெற்றி நிறைய அணிந்து மங்களகரமாக இருப்பதை பார்த்திருப்போம்.
அது அவரது குலதெய்வ கோவிலில் இருந்து பூஜித்து கொண்டு வரப்பட்ட பிரசாதமாகும்.
ஆனால், நேற்று முன்தினம், காஞ்சிபுரம் மாவட்டம் மணிமங்கலத்தில் குடிமராமத்து பணிகளை அவர் தொடங்கி வைத்தபோது, நெற்றி வெறிச்சோடி கிடந்ததாகக் கூறுகிறார்கள்.
ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோதே, எடப்பாடியை முதல்வராக்க முயற்சித்தார் சசிகலா. ஆனால், மத்திய அரசின் நெருக்கடி காரணமாக பன்னீர்செல்வம் முதல்வர் ஆனதாக தகவல்.
பன்னீர்செல்வம் அகற்றப்பட்ட பிறகு, முதல்வரான எடப்பாடிக்கு, அவர் குலதெய்வ கோயிலில் பூஜித்த விபூதி மற்றும் குங்குமத்தை அனுப்பிவைத்தார் அவரது மனைவி.
முதல்வரானால், குலதெய்வ கோயிலுக்கு நேர்த்திக்கடன் செய்வதாக எடப்பாடி ஏற்கனவே வேண்டியிருக்கிறார்.
சசிகலா சிறையில் உள்ள நிலையில், அவர் கோவிலுக்குப் போனால், வேறு மாதிரி போட்டுக் கொடுத்துவிடுவார்கள் என்ற அச்சத்தில், அவர் குலதெய்வ வழிபாட்டையே ஒத்தி வைத்துவிட்டார்.
இந்நிலையில், எடப்பாடி முதல்வர் பதவியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்பதற்காக, குல தெய்வ பிரசாதத்தை நெற்றியில் தினமும் பூசிவருவதாக அவருக்கு எதிரானவர்கள் தினகரனிடம் கூறியுள்ளனர்.
அதனால் தினகரன் கோபப்பட்டு, நெற்றியில் விபூதி, குங்குமம் வைக்கக் கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு போட்டுவிட்டாராம்.
அதன் காரணமாக, கடந்த சில நாட்களாக, எடப்பாடி நெற்றியில் விபூதி, குங்குமம் இல்லாமல் இருப்பதாக தகவல்.
பதவியை காப்பாற்றிக்கொள்ள, எந்தெந்த விஷயத்தில் எல்லாம் சமரசம் செய்ய வேண்டியுள்ளது என்று, தமக்கு நெருக்கமானவர்களிடம் அவர் வருத்தப்பட்டதாக அதிமுகவினர் கூறுகின்றனர்.
முதல்வராக இருந்தும், தமது குலதெய்வத்தை கூட வழிபட முடியவில்லை என்றால்.. அவர் அந்த பதவியில் இருந்தால் என்ன இல்லாவிட்டால் என்ன?

No comments:
Post a Comment