ஜாதகத்தில் ராசி கட்டத்தில் 2வது வீடு நமது கையிருப்பு பணத்தை குறிக்கும்,
இந்த வீடு எந்தெந்த வீட்டுடன் தொடர்புகொள்கிறதோ அந்த வீடு குறிக்கும் இடங்களுக்கு பணம் செல்லும்.அதாவது ஜாதகர் தனது சொந்த பணத்தை எப்படி செலவு செய்கிறார் என்பதை ராசி கட்டத்தில் 2வது வீடு தெரிவிக்கும்.
2வது வீடு லக்னத்திற்கு சாதகமான 1,5,9 ம் வீட்டு தொடர்பினை பெற்றால் ஜாதகர் தனது பணத்தை தனக்கு மட்டும் சுகங்களை தரும் விதத்தில் செலவு செய்வார்.ஊதாரித்தனமாக அல்லது பொறுப்பின்றி ஆடம்பரமான செலவுகளை செய்வார்.
2வது வீடு 3,7.11ம் வீட்டை தொடர்பை பெற்றால் ஓரளவு கவனமாக அல்லது பொறுப்பாக தனது பணத்தை செலவுசெய்வார்.ஆனால் தனது பணத்தை பெருக்கும் வழியில் பணத்தை செலவுசெய்யமாட்டார்.
2ம் வீடு 2,4,6,10ம் வீட்டு தொடர்பை பெற்றால் மேற்கண்ட வீடுகள் 2ம் வீட்டிற்கு சாதகமான வீடுகளளாகவும்,லக்னம் என்ற ஜாதகருக்கு பாதகமற்ற வீடுகளாகவும் அமைவதால் பணத்தை மேலும் மேலும் பெருக்கும் வழிகளில் செலவு செய்து தன்னுடைய தனநிலையை உயர்த்திக்கொள்வார்.
2வது வீடு 8,12ம் வீட்டுத்தொடர்பை பெற்றால் மேற்கண்ட வீடுகள் லக்னத்திற்கு சாதகமற்ற வீடுகள் என்பதால் ஜாதகர் தனது பணத்தை சிறிது கூட அனுபவிக்கமுடியாமல் வெட்டி செலவுகளாகவும, வீண் செலவுகளாகவும்,அசுப செலவுகளாகவும் செல்லும்.
இது பாவகாரகத்துவம் மட்டுமே.
கையிருப்பு பணத்திற்கு சுக்கிரனையும்,
பெரும் தனத்திற்கு குருவையும் கிரக காரகமாக கொண்டு அவர்களின் கிரகத்தொடர்பையும் பார்த்து பலனை முடிவுசெய்யவேண்டும்.
இதுவரை 2ம் வீட்டிலுள்ள கையிருப்பு பணம் என்ற காரகத்தை பார்த்தோம்.
இது பாவகாரகத்துவம் மட்டுமே.
கையிருப்பு பணத்திற்கு சுக்கிரனையும்,
பெரும் தனத்திற்கு குருவையும் கிரக காரகமாக கொண்டு அவர்களின் கிரகத்தொடர்பையும் பார்த்து பலனை முடிவுசெய்யவேண்டும்.
இதுவரை 2ம் வீட்டிலுள்ள கையிருப்பு பணம் என்ற காரகத்தை பார்த்தோம்.

No comments:
Post a Comment