Wednesday, May 1, 2019

அரசியல் உள்நோக்கம் தி.மு.க., மீது வாசன் புகார்.

''சபாநாயகர் மீது, தி.மு.க., தரப்பில், நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவது, அரசியல் உள்நோக்கம் கொண்டது,'' என, வாசன் கூறினார்.சென்னையில், தமிழ் மாநில தொழிற்சங்க காங்கிரஸ் பேரவை சார்பில், மே தின விழா நேற்று நடந்தது. 

அதன் பொதுச்செயலர், கே.ஜி.ஆர்.மூர்த்தி வரவேற்றார். தொழிற்சங்க கொடியை, த.மா.கா., தலைவர் வாசன் ஏற்றி வைத்தார்.பின், வாசன் அளித்த பேட்டி:தொழிலாளர் நலம் சார்ந்த கட்சியாக, த.மா.கா., செயல்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர்கள் நலம் சார்ந்தவையாக செயல்பட வேண்டும். தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றக் கூடிய நிலைப்பாட்டை, அரசுகள் எடுக்க வேண்டும்.அனைத்து துறைகளிலும் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும்.
தொழிலாளர் சட்டங்களையும், முறையாக செயல்படுத்த வேண்டும்.புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கி விட்டு, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். சபாநாயகர் மீது, நம்பிக்கை இல்லா தீர்மானத்தை, தி.மு.க., கொண்டு வருவது, அரசியல் உள்நோக்கம் கொண்டது. அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., தொடரும்.
உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் இணைந்து, அதிக இடங்களில் வெற்றி பெறுவோம். நான்கு சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தலில், அ.தி.மு.க., வெற்றிக்கு, த.மா.கா., பாடுபடும்.இவ்வாறு, அவர் கூறினார்.


 அரசியல் உள்நோக்கம் தி.மு.க., மீது வாசன் புகார்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...