மத்திய அரசு, பொதுத் துறையைச் சேர்ந்த, மேலும் சில வங்கிகளை இணைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த ஏப்., 1ல், பேங்க் ஆப் பரோடா உடன், தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இணைந்தன. இதையடுத்து, நாட்டில் மூன்றாவது மிகப் பெரிய வங்கியாக, பேங்க் ஆப் பரோடா உருவெடுத்துள்ளது.
விரைவில் அழைப்பு:
இதைப் போல, வாராக் கடன் சுமை, சொத்து மதிப்பு சரிவு போன்றவற்றால் தடுமாறும், மேலும் சில வங்கிகளை இணைப்பது குறித்து, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இது குறித்து, மத்திய நிதியமைச்சக அதிகாரி ஒருவர் கூறியதாவது: பொதுத் துறையைச் சேர்ந்த, ஒரு சில வங்கிகளுக்கு, இணைப்பு நடவடிக்கை குறித்து விவாதிக்க, மத்திய அரசு விரைவில் அழைப்பு விடுக்கும் என, தெரிகிறது. அந்த வங்கிகளில், பஞ்சாப் நேஷனல் பேங்க், யூனியன் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா ஆகியவை இடம் பெற வாய்ப்பு உள்ளது.
வங்கிகள், நிதியாதாரத்தை பெருக்கி, வாராக் கடனை குறைத்து, சொத்து மதிப்பை உயர்த்தும் நடவடிக்கைகளை முடுக்கி விட வேண்டும். அவ்வாறு செய்யாத வங்கிகளுக்காக, நிதியமைச்சகம் முடிவு எதுவும் எடுக்காமல் காத்திருக்காது.
பரிந்துரை:
பொதுத் துறை வங்கிகள், அவற்றின் நிலைப்பாட்டை தெரிவிக்காமல் இருந்தால், ‘ஏ.எம்.,’ எனப்படும் மாற்று செயல் திட்ட குழு அளிக்கும் பரிந்துரைகளின்படி, மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும். இணைப்பு நடவடிக்கை, நடப்பு, 2019-– 20ம் நிதியாண்டில், ஜூலை – செப்., அல்லது அக்., – டிசம்பர் காலாண்டு களுக்குள் நடக்கும் என, தெரிகிறது. இதற்காக, பல்வேறு செயல்திட்டங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.
அதேசமயம், இந்த இணைப்பு நடவடிக்கையில், மூன்று வங்கிகள் தான் இடம் பெறும் என, கூற முடியாது .அது, வங்கிகளின் நிதிநிலை அறிக்கைகளை பொறுத்து உள்ளது. பெரிய வங்கிகளின் நிதி நிலவரம், முதல் இரண்டு காலாண்டுகளில், மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
வங்கி இணைப்பு நடவடிக்கைக்கு இது சரியான நேரமல்ல என, மத்திய அரசு அதிகாரிகள் சிலர் தெரிவித்துள்ளனர். அவர்கள் கூறியதாவது:ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு நடவடிக்கையில் இருந்து, பேங்க் ஆப் இந்தியா, வெளியேறியுள்ளது. அதுபோல, பஞ்சாப் நேஷனல் வங்கி, யூனியன் பேங்க் ஆப் இந்தியா ஆகியவற்றின் நிதி நிலைமையிலும், நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது.
ஓரியண்டல் பேங்க் ஆப் காமர்ஸ், பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவையும், ரிசர்வ் வங்கியின் தீவிர கண்காணிப்பு பிரிவில் இருந்து, கடந்த பிப்ரவரியில் வெளியே வந்துள்ளன.அதனால், இவ்வங்கிகளின் நிதிநிலமையும் மேம்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இத்தகைய சூழலில், மீண்டும் பொதுத் துறை வங்கிகளை இணைக்கும் நடவடிக்கை அவசியமில்லை எனலாம்.
வங்கித் துறையில், வாராக் கடன் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு, இணைப்பு நடவடிக்கை ஒன்றே தீர்வு என, கருதக் கூடாது. மத்திய அரசு, மாற்று வழிகளையும் ஆராய வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:
Post a Comment