Wednesday, May 1, 2019

தயக்கம் ஏன்?*திட்ட அனுமதி அளிக்க சி.எம்.டி.ஏ., அதிகாரிகள்...* கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் வருமா?

வண்டலுார், கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலைய கட்டுமான பணிக்கான, திட்ட அனுமதி வழங்க, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தயங்குவதாக புகார் எழுந்துள்ளது.


சென்னை, கோயம்பேடில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில், புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்ட, தமிழக அரசு, 2013ல் அறிவிப்பு வெளியிட்டது.அடிக்கல்இதற்கான நிலம் கையகப்படுத்துவதில், சிக்கல் ஏற்பட்டது. 2016ல், கிளாம்பாக்கத்தில் இத்திட்டத்துக்கு, 86 ஏக்கர் நிலத்தை, வருவாய்த் துறை, சி.எம்.டி.ஏ.,வுக்கு வழங்கியது.



இந்த நிலத்தில், தொல்லியல் தடை உள்ள பகுதிகளை தவிர்த்து, 40 ஏக்கரில், புதிய பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.இத்திட்டத்துக்கு, இந்திய தொல்லியல் துறையில், தேசிய பாரம்பரிய சின்னங்கள் ஆணைய அனுமதி, ஜன., 3ல் பெறப்பட்டது.இதற்கு முன், புதிய பேருந்து நிலையத்துக்கான, கட்டுமான ஒப்பந்ததாரர் இறுதி செய்யப்பட்டார்.



அதன் பின், லோக்சபா தேர்தல் அறிவிப்பு வெளியாக இருந்த சூழலில், பிப்., 22ல், இத்திட்டத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.டெண்டர் முடிந்து, அடிக்கல் நாட்டும் பணி முடிந்த நிலையில், இத்திட்டத்துக்கு இதுவரை, திட்ட அனுமதி கிடைக்கவில்லை.



இது குறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:கிளாம்பாக்கம் பேருந்து நிலைய விஷயத்தில், ஆரம்பத்தில் இருந்தே, சி.எம்.டி.ஏ., கட்டுமான பிரிவு அதிகாரிகள், தன்னிச்சையாக செயல்படுகின்றனர்.இத்திட்டத்தில், பயனாளிகளான போக்குவரத்து கழகங்களின் ஆலோசனைகளை, சி.எம்.டி.ஏ., அவமதித்து வருகிறது.



தீர்வு



பொதுவாக, இதுபோன்ற திட்டங்களை செயல்படுத்தும் போது, சி.எம்.டி.ஏ.,வின் கட்டுமான திட்ட அனுமதியையும், சம்பந்தப்பட்ட உள்ளாட்சியின் அனுமதியையும் பெற வேண்டும்.ஆனால், இத்திட்டத்தில், இது போன்ற அனுமதி எதையும், அதிகாரிகள் பெறவில்லை.ஆனால், சி.எம்.டி.ஏ.,வின் கட்டுமான பிரிவு, இதில் ஆதிக்கம் செலுத்தும் நிலையில், முழுமை திட்ட பிரிவு, திட்ட அனுமதி வழங்கும் பிரிவு அதிகாரிகள், அடக்கி வாசிப்பதாக தெரியவந்துள்ளது. 



இதனால், கட்டுமான திட்ட அனுமதி தாமதமாவதாக கூறப்படுகிறது.மாதவரம் திட்டத்தில் செய்த குளறுபடிகளையே, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள், கிளாம்பாக்கத்திலும் செய்கின்றனர். உயர் அதிகாரிகள் தலையிட்டால் மட்டுமே, இதில் தீர்வு ஏற்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...