ஒரு நாடு, தான் மற்ற நாடுகளிடமோ, அல்லது உலக வங்கியிடமோ பெற்ற கடன்களை திருப்பி அடைக்க முடியாமல் போகும் போது திவாலாகும் நிலைமைக்கு வரும்.
கடந்த காலங்களில் ஜெர்மன் இரண்டு முறையும், ரஷ்யா, அர்ஜென்டினா, கிரீஸ் மற்றும் ஐஸ்லாந்து போன்ற நாடுகளும் திவால் நிலைமைக்கு உள்ளாயின.
அப்படி அந்த நாடுகள் திவாலாகும் போது, தங்கள் நாட்டின் சார்பாக பத்திரங்களை வெளியிட்டு வெளிநாட்டு முதலீட்டை பெற முயற்சிக்கும். அது கிட்டத்தட்ட நாட்டையே அடமானம் வைப்பது போல தான்.
இப்போது பாகிஸ்தானை எடுத்துக் கொள்வோம். அந்த நாடு திவாலானதற்கு முக்கிய காரணம்..
உள்நாட்டு உற்பத்தி மிகவும் குறைந்து மக்கள் தொகை பெருகி அரசின் செலவினங்கள் அதிகரித்ததும், ஆட்சியாளர்கள் எல்லாம் ஊழல்வாதிகளாக மாறி நாட்டின் வருமானத்தை வெளிநாடுகளில் பதுக்கியதுமே. மேலும் நாட்டை முன்னேற்றாமல் அதிகளவில் இராணுவத்தில் முதலீடு செய்ததும், தீவிரவாத கும்பல்களுக்கு அதிகளவில் பண உதவி செய்ததும் அது திவாலானதற்கு அடுத்த காரணங்கள்.
மேலும் பாகிஸ்தானிற்கு அமெரிக்காவும், மற்ற உலக நாடுகளும் தாங்கள் அளித்து வந்த நிதியுதவி மோடிஜியின் தொடர் நடவடிக்கைகளால் நிறுத்தப்பட்டு விட்டது. அதனால் அவர்களால் சீனாவை தவிர வேறு எந்த நாட்டிடமும் கடன் பெற முடியவில்லை.
தொடர்ந்து கடன் கொடுத்து வந்த சீனா தற்போதுகடன் தருவதை நிறுத்திவிட்டது. மேலும் கடனுக்கு பதில் பாகிஸ்தானின் ஒவ்வொரு பகுதியாக லீசுக்கு எடுத்து விட்டது. பாகிஸ்தான் தனது கடன்களை அடைக்கும் வரை அந்த நிலங்களை சீனா ஆக்கிரமித்திருக்கும். தனது தேவைக்கு ஏற்ப அவ்விடங்களில் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இது கிட்டத்தட்ட ஆங்கிலேயர்கள் தங்களது கிழக்கிந்திய கம்பெனியை இந்தியாவில் நிறுவி, இந்தியாவை அடிமைப்படுத்தியதைப் போல தான்.
சரி..
இனி பாகிஸ்தான் என்னவாகும்?
பாகிஸ்தானில் பணப்புழக்கம் குறையும். விலைகள் தாறுமாறாக ஏறும். வங்கிகளில் பணம் இல்லாமல் இழுத்து மூடும் நிலை ஏற்படும். உற்பத்தி அடியோடு குறைந்து மக்கள் கொலை, கொள்ளைகளில் ஈடுபடுவர். விபச்சாரம் அதிகரித்து, கலாச்சார சீரழிவு ஏற்படும். உள்நாட்டு சண்டைகள் கூட நடந்து நாடு சிதறலாம்.
நீங்கள் இப்போது ஒன்று கேட்கலாம். மோடிஜியின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தாலும் பணப்புழக்கம் குறையுமே. அதனால் பிரச்சினைகள் ஏற்படாதா என்று..
ஒரு நாட்டில் பஞ்சத்தால், பதுக்கலால் பணப்புழக்கம் குறைவதற்கும், தேவைக்கு அதிகமான பணம் புழங்குவதை கட்டுப்படுத்துவதற்கும் வித்தியாசம் உண்டு. இரண்டாவதால் பணத்தை பதுக்குவது குறைந்து கருப்பு பணம் ஒழிக்கப்படும். அரசுக்கு வருமானம் அதிகரிக்கும்.
இப்போது பாகிஸ்தானுக்கு உள்ள ஒரே வழி..
நிதியுதவி பெற இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளிடம் மண்டியிடுவது தான். நிதியுதவியை தரும் நாடுகள் பல கட்டுப்பாடுகளை விதிக்கும். அவற்றை ஏற்றால் தான் நிதியுதவி கிடைக்கும். இல்லையென்றால் நாட்டை பத்திரங்களாக மாற்றி விற்று அதன் மூலம் நிதியை திரட்டுவது. ஆனால் பாகிஸ்தானை நம்பி பத்திரங்களை வாங்க முதலீட்டாளர்கள் முன்வர வேண்டும்.
முற்காலங்களில் இது போன்ற நிலைமை ஏற்பட்டால் அந்நாட்டு மன்னர்கள் வளமான பக்கத்து நாடுகளின் மீது போர் தொடுத்து உணவு பொருட்கள் மற்றும் செல்வங்களை கொள்ளையிடுவர். இப்போது பாகிஸ்தானால் அதுவும் முடியாது.
இனி பாகிஸ்தானை அந்த இறைவனால் கூட காப்பாற்ற முடியாது
இறைவனால் காப்பாற்ற முடியாத நேரத்தில் ஒரு யுக புருஷர் தோன்றுவார்
இந்த யுகத்தில் திரு நரேந்திர மோடி ஒரு யுக புருஷர்
பாகிஸ்தானை காப்பாற்றுவார்
பாவம் அவர்களும் நம் சகோதரர்கள் தானே
தொடர்ந்து அவர்கள் அரசுகள் செய்த தவறுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்.
இந்த யுகத்தில் திரு நரேந்திர மோடி ஒரு யுக புருஷர்
பாகிஸ்தானை காப்பாற்றுவார்
பாவம் அவர்களும் நம் சகோதரர்கள் தானே
தொடர்ந்து அவர்கள் அரசுகள் செய்த தவறுக்கு அவர்கள் என்ன செய்வார்கள்.
No comments:
Post a Comment