வேலுார் வணிக குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர் வீட்டில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து ஆவணங்களை, லஞ்ச ஒழிப்பு பிரிவு போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
வேலுார், வணிக குற்றப் புலனாய்வு பிரிவு இன்ஸ்பெக்டர், ரமேஷ்ராஜ், 50. இவர், 2010 முதல், 2013 வரை அதிகளவு சொத்துகள் வாங்கி குவித்ததாக, உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன. விசாரணைக்கு பின், அளவுக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, அவர் மீது, ஜூன், 28ல், லஞ்ச ஒழிப்பு போலீசார், வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், ஊசூர் அடுத்த தெள்ளூர்பாளையம் மற்றும் இடையன்சாத்தில் உள்ள ரமேஷ்ராஜ் வீடுகளில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று முன்தினம், 10 மணி நேரத்துக்கும் மேலாக சோதனை நடத்தினர். இதில், 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்து பத்திரங்கள், ஆவணங்களை கைப்பற்றினர். தொடர்ந்து, விசாரணை நடக்கிறது.

No comments:
Post a Comment