Wednesday, July 10, 2019


குழைந்தைகளுக்கு ஆரோக்கியம் தரும் #சத்துமாவுக்கஞ்சிசெய்வது எப்படி? இதை படியுங்கள்:
* ராகி - 1/4 கிலோ
* இட்லி அரிசி அல்லது சிவப்பரிசி, பொட்டுக்கடலை, கம்பு, வெள்ளைச் சோளம், பச்சைப் பயறு - தலா 100 கிராம்
* மஞ்சள் சோளம், கோதுமை, ஜவ்வரிசி, பாதாம், முந்திரி - தலா 50 கிராம்
* ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
* பால் - 1 டம்ளர்
பால் தவிர கொடுக்கப்பட்டுள்ள அனைத்துப் பொருள்களையும் தனித்தனியே வறுத்துக் கொள்ளவும். ஆறிய பின்னர், அனைத்தையும் மிக்ஸியில் நன்றாகப் பொடித்து வைத்துக்கொள்ளலாம். தேவையான போது சிறிதளவு மாவை ஒரு டம்ளர் தண்ணீரில் கரைத்து, ஒரு டம்ளர் பால் விட்டுக் காய்ச்சவும். அதனுடன் சர்க்கரை சேர்த்து புகட்டலாம்.
புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின் ஏ, பி, சி, இ, கால்சியம், மக்னீசியம், தாமிரம், இரும்புச்சத்து போன்ற அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்துள்ளன. வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. தினமும் காலை அல்லது மாலையில் அருந்தக் கொடுக்கலாம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...