இன்று எனது திமுக நண்பருக்கும் எனக்கும் கொஞ்சம் விவாதம் நடந்தது. அவன் வழக்கம் போல் மோடியை ஏக வசனத்தில் திட்டினான். நானும் பதிலுக்கு திமுகவை கிழித்தெறிந்தேன்.
அப்போது அங்கே ஒரு பெரியவர்(வயது அறுபது நெருங்குகிறது) வந்தார். அவருக்கு திமுகவையும் பிடிக்காது. பாஜகவையும் பிடிக்காது. திமுகவை சுத்தமாக பிடிக்காது.
நாங்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். திமுக நண்பன், தமிழகத்தின் வளர்ச்சிக்கு திமுக தான் காரணம் என்றான்.
அப்போது அவர் குறுக்கிட்டு, இவன் சொல்வதில் நியாயம் இருக்கிறது என்று என்னைப் பார்த்துக் கூறினார். அவர் சொல்வதில் ஏதோ சூழ்ச்சி இருக்கிறது என்பதை எனது நண்பன் புரிந்து கொண்டான்.
நான் அவரிடம், எப்படி சொல்கிறீர்கள்? என்று சீண்டினேன். அவர் உடனே பேச ஆரம்பித்து விட்டார்.
'தம்பி நல்லா பாருங்க, ஒரு இருபது அல்லது இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் சித்தாள் வேலைக்கு 35 அல்லது 50 ரூபாய்கள் தான் சம்பளம்.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு ரியல் எஸ்டேட் தொழில் படு வேகமாக வளர்ச்சி அடைந்தது. அதனால் அவர்களின் சம்பளமும் கூடியது.
ரியல் எஸ்டேட்டை பொறுத்த அளவில் பெரும்பாலும் பிளாக் மணி தான். பிளாக் மணி திமுக ஆட்சிக் காலத்தில் அதிகரித்திருக்கிறது என்பது இதில் இருந்து தெரிகிறது.
பிளாக் மணிக்கு காரணம் ஆட்சியில் இருந்த திமுகவினர் செய்த ஊழல். அந்த ஊழல் பணம் ரியல் எஸ்டேட் தொழிலில் வெள்ளமாக பாய்ந்தது.
அதனால் அந்த தொழிலும் வளர்ந்தது. சித்தாள் மற்றும் மேஸ்திரிகளின் சம்பளமும் மடமடவென உயர்ந்தது.
அதனால் இனி நீ திமுகவால் வளர்ச்சியே ஏற்படவில்லை என்று கூறாதே. ஆயிரம் கோடிக் கணக்கில் ஊழல் செய்தாலும் தமிழக வளர்ச்சியை கட்டிக் காப்பது திமுக தான்' என்று முடித்தார்.
எனக்கோ சிரிப்பு தாங்க முடியவில்லை. நண்பனின் முகமோ மெரினா கல்லறையை போன்று மாறியது.
அவர் சொன்ன இந்த லாஜிக் சூப்பரா இருக்குதுல்ல?
No comments:
Post a Comment