பேராசை கொண்ட மனமும் வேண்டாம்,
பேசும் வார்த்தையில் கோபம் வேண்டாம்,
ஆணவம் கொண்ட செயல்கள் வேண்டாம் ,
அகம்பாவம் கொண்டு ஆடவும் வேண்டாம்,
அடுத்தவரைக் கெடுக்கும் எண்ணம் வேண்டாம் ,
ஆயுளை குறைக்கும் பழக்கங்கள் வேண்டாம்,
உண்மை இல்லாத நண்பர்கள் வேண்டாம்,
உணர்ச்சி வசப்படும் உள்ளம் வேண்டாம் ,
ஊறு செய்யும் உணவும் வேண்டாம் ,
உடலைக் கெடுக்கும் உழைப்பும் வேண்டாம்.
உரிமை இல்லாத எதுவும் வேண்டாம்,
உலகைக் கெடுக்கும் உரிமைகள் வேண்டாம்,
வீட்டைக் கெடுக்கும் எதுவும் வேண்டாம்,
வீணாகிப் போன எதுவும் வேண்டாம்,
வீனர்களின் பேச்சைக் கேட்கவும் வேண்டாம்,
நன்றி மறக்க வேண்டாம்,
வம்பு செய்யும் வாழ்க்கையும் வேண்டாம்,
உயிர் உள்ள வரை சிலவற்றையும், சிலரையும் மறக்கவும் வேண்டாம்,
இன்று இதற்கு மேலே
நான் எழுதவும் வேண்டாம்,
நான் எழுதவும் வேண்டாம்,
இதை நீங்கள் படிக்காமல் இருக்கவும் வேண்டாம்,
இயற்கையை அழிக்கும்
மனிதம் வேண்டாம்,
மனிதம் வேண்டாம்,
பெண்களுக்கு தீங்கு செய்ய ஒருபோதும் எண்ண வேண்டாம்,
பெண்களை காக்க ஒருநாளும்
மறக்க வேண்டாம்.
மறக்க வேண்டாம்.
No comments:
Post a Comment